Saturday, August 30, 2014

இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!

Posted by பால கணேஷ் Saturday, August 30, 2014
தமிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்... கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே...

Monday, August 11, 2014

ராமலக்ஷ்மியின் ‘அடைமழை’

Posted by பால கணேஷ் Monday, August 11, 2014
‘முத்துச் சரம்’ நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில்...

Thursday, August 7, 2014

மொறு மொறு மிக்ஸர் - 26

Posted by பால கணேஷ் Thursday, August 07, 2014
நண்பர்கள் தினத்தன்று சென்னைக்கு வந்திருந்த, விமர்சன உலகம் என்ற தளத்தில் எழுதிவரும் மாக்னேஷ்-ஐ நான், சீனு, ஸ்.பை. மூவரும் சந்திக்க நடேசன் பார்க் சென்றோம். பார்க் வாசலை நாங்கள் அடைந்த நேரம் சிவப்பாக ‘மொபைல் போலீஸ் ஸ்டேஷன்’ என்று பெயர் பொறித்த பெரிய வேன் ஒன்று பார்க் வாசலில் வந்து நின்றது. ‘மொபைல் கோர்ட்’ பாத்திருக்கிறோம்... இதென்ன மொபைல் போலீஸ் ஸ்டேஷன் என்கிற வியப்புடன் பார்த்தோம்.  “சரிதான்... ரோட்ல பிடிக்கறவங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக்...

Monday, August 4, 2014

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
என்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube