Saturday, June 7, 2014

சரிதா டார்லிங் அட் டார்ஜிலிங்!

Posted by பால கணேஷ் Saturday, June 07, 2014
னிமையான ஒரு மாலை நேரத்தில் நான் ஒரு காபிஷாப்பில் அமர்ந்திருந்த வேளை சட்டைப் பையிலிருந்த செல்பேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன்... என் தலைவலி... ஸாரி, தலைவி சரிதா தான் அழைக்கிறாள். “சொல்லும்மா...?”

“என்னங்க.... நீங்க இப்ப எங்க இருக்கீங்க...?”

“சைதாப்பேட்டையில கீதா ஜூவல்லரி இருககில்ல....?”

“கீதா ஜூவல்லரியா....?”

“உனக்கு நினைவில்லையா..? மெயின் ரோட்ல இருக்கே... போன மாசம் நீகூட அங்க ஒரு கல்வெச்ச நெக்லஸ் பார்த்துட்டு நல்லாருக்குன்னு சொல்லி வாங்கித்தரச் சொன்னியே... நான்கூட வருமானம் வர்றப்ப வாங்கிட்டு வர்றேன்னு சொன்னேனே...”

“ஆஹா... ஞாபகம் வந்திருச்சு. அங்கயா இருக்கீங்க...? பர்ச்சேஸ் பண்ணிட்டீங்களா...?” சரிதாவின் குரலில் குதூகலம் கும்மியடித்தது.

“அங்க இல்லம்மா... அந்த ஜூவ்ல்லரிக்குப் பக்கத்துல இருக்கற காபிஷாப்ல இருக்கேன்...”

“அடத்தூ...! லேண்ட்மார்க் சொல்ற அழகப்பாரு... வீட்டுக்கு வாங்க, இன்னிக்கு இருக்கு...” மறுமுனையில் அவள் பல்லைக் கடிக்கும் சப்தம் இங்கே கேட்டது. “அங்க என்ன பண்றீங்க...?”

“காபிஷாப்ல சாராயமா குடிக்க முடியும்..? என் ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டோட உக்காந்து காபி குடிச்சுட்டிருக்கேன்...”

“என்னது...? ஒண்ணுவிட்ட ஃப்ரெண்டா..?”

“என் ஃப்ரெண்ட் சிவா இருக்கான்ல... அவனோட நண்பர்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வெச்சான் இவரை. அதனால நண்பனோட நண்பனை ஒண்ணுவிட்ட நண்பன்னுதானே சொல்லணும்..? அதுசரி... நீ எதுக்குக் கூப்ட்டே...?”

“உங்க கோப்ரோ நம்ம வீட்டுக்கு வந்து உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு. உடனே வீட்டுக்கு வாங்கன்னு சொல்லத்தான்...”

“என்னது...? கோப்ரோவா..? அப்படின்னா...?”

“அதாங்க... ப்ரதர்ங்கறதை இப்ப சுருக்கமா ப்ரோன்னு சொல்றாங்கல்ல... கோ-பிரதரை நான் சுருக்கமா கோப்ரோன்னு சொன்னேன். எங்கக்கா வீட்டுக்காரர் கைலாச அத்திம்பேர் வந்திருக்காரு...”

“அவரை நீ கோப்ரான்னே சொல்லிருக்கலாம். மனுஷன் உடம்பெல்லாம் விஷமாச்சே... அவரைப் பார்த்தாலே எனக்கு வந்துருமேடி காப்ரா...”

“எங்க சைட்ல யாராயிருந்தாலும் உங்களுக்கு இளப்பம்தானே...? அந்த சமாச்சாரத்தை அப்பறம் டீல் பண்ணிக்கறேன். இன்னும் அரை மணிக்குள்ள நீங்க வீட்ல இருந்தாகணும். இல்லே....”

‘சரீ... சரீ... வால்யூமைக் கூட்டாத... இப்ப வந்துடறேன்....” என்றுவிட்டு போனை கட் பண்ணினேன். என் சகலை கைலாஷ் எப்போது வந்தாலும் எனக்கு கேஷ் லாஸ் என்பது என் கடந்தகால அனுபவங்கள் தந்த பாடம். இப்போது என்ன மாதிரியான விஷயத்துடன் வந்திருக்கிறாரோ தெரியலையே... என்ற பயத்துடனேயே கிளம்பினேன் நான்.

வீட்டின் வாசலில் என் வாகனத்தை நிறுத்தத்துக்குக் கொண்டு வரும்போதே கிட்டத்தட்ட பி.எஸ்.வீரப்பா பாணியிலான என் சகலையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. “வாங்கோ மாப்ளே... வாங்கோ...” என்று பல்லெல்லாம் வாயாக வரவேற்றார் என் வீட்டின் உள்ளே நுழைந்த என்னை! ஆறடி உயரம், ஒரு ஏரியாவின் ரோட் மேப்பையே வரையலாம் போல அகன்ற நெற்றி, (ஆரம்பகால) விஜயகாந்த்துக்கு இருந்தது போல பெரிய கண்கள், சின்ன்ன்ன சைஸ் மூக்கு (பிற்பாடு தன் பிள்ளை எப்படி மூக்கால் அழும் என்று அவர் அம்மா கவலைப்பட்டிருப்பாள்), தடிமனான, பட்டையான உதடுகள் - இவை கைலாஷின் முகலட்சணங்கள்.

“நமஸ்காரம். நல்லா இருக்கேளா...?” என்று வலிந்து புன்னகையை வரவழைத்தபடி கை கூப்பினேன் நான். “சரி... அண்ணாக்கு காபி, டிபன் ஏதாச்சும்....” என்று நான் இழுக்க... “அதெல்லாம் பேஷா ஆச்சு மாப்ளே... நான் வந்த விஷயத்தை சொல்லிட்டு உடனே கிளம்ப வேண்டிருக்கு. உங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிண்டிருந்தேன். அது என்னன்னாக்கே... போன தடவை நான் சென்னை வந்திருந்தப்ப என்னை ............. மாலுக்கு சினிமா பாக்க கூட்டிண்டு போனேளே... ஞாபகம் இருக்கோ...?”

மறக்கக்கூடிய அனுபவமா அது..? ஹும்...! பெருமூச்சுடன், “நல்லாவே நினைவிருக்கு. சொல்லுங்கோ...” என்றேன். “அங்க க்யூவில நின்னப்ப நம்மளை ஒரு ஃபாரம் ஃபில்லப் பண்ணித்தரச் சொல்லி சொன்னானோல்லியோ... அந்த கம்பெனிலருந்து போன் பண்ணினான். என் கூப்பனை ப்ரைஸ்க்கு செலக்ட் பண்ணிருக்காளாம் மாப்ளே... டார்ஜிலிங்ல நாலு நாள் தங்கறதுக்கு காட்டேஜ் ப்ரீயாத் தராளாம். சமைக்கறதுக்கு குக்லாம்கூட அரேஞ்ஜ் பண்ணிடறாளாம். போய்ட்டு வர செலவும், சாப்பாட்டுக்கான செலவும் மட்டும்தான் நாம பண்ணிக்கணுமாம்...” என்றார் பியானோ கட்டைகள் போன்று அகலமாயிருந்த தன் பற்களைக் காட்டி, அதே பி.எஸ்.வீ.யின் ஸ்டைல் சிரிப்பை உதிர்த்தார்.

“கங்காரு... ச்சே... கங்க்ராஜுலேஷன்ஸ்! சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ...” என்று கை குலுக்க கை நீட்டினேன். “இல்லை மாப்ளே... நான் போக முடியாது. அந்த ஆஃபரை இன்னும் பத்து நாளைக்குள்ள யூஸ் பண்ணிக்கணுமாம். இந்த நேரம் பார்த்து என் பையனுக்கு அம்மை போட்டுடுத்து... ஸோ... நீங்களும் சரிதாவும் போய்ட்டு வாங்கோ... அந்தக் கம்பெனில போய் நாம ஒரு ஃபாரம் பில்லப் பண்ணிக் கொடுத்தா போதும், மாத்திக்கலாமாம். பேசிட்டேன்....” என்றார்.

திகைத்தேன். ’ழே’ என்று விழித்தேன். “இப்படி திடீர்னு முடிவெடுக்கறது கஷ்டம்ணா... இந்த மாசம் பட்ஜெட் டைட்...” என்று நான் ஆரம்பிக்கும் முன்னாலேயே இடைவெட்டினார். “நம்மளை மாதிரி மிடில்க்ளாஸ்க்கெல்லாம் எப்பத்தான் ஓய் டைட் இல்லாம இருநதது? நாமளா பிளான் பண்ணி எப்பவாவது போக முடியற இடமா அது? சான்ஸை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்குங்கோ...” என்றார். 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா ப்ளைட் டிக்கெட், சாப்பாட்டு செலவு, அங்க சுத்திப் பாக்கற செலவுன்னு எப்படிப் பார்த்தாலும் பெரிய தொகையாயிடுமே...” என்று நான் இழுக்க... “அவருக்கு எப்பவும் நம்ம பக்கத்து மனுஷா எந்த ஐடியா சொன்னாலும் பட்ஜெட் முன்னால வந்துரும், இல்லாட்டி ஹெல்த் கெட்டுப் போயிடும், அதுவும் இல்லாட்டி அவரோட அம்மாவோ, தங்கச்சியோ வீட்டுக்கு வர்றதா கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி லெட்டர் போட்டுடுவாங்க... இத்தனை வருஷமா இவரோட குப்பை கொட்டறேனே (இப்பத்தான் சரியா தான் செய்றதை சொல்றா மகராசி) இது மாதிரி எத்தனை வெளியூர் ட்ரிப் ப்ளான் பண்ணி கேன்சலாயிருக்கு தெரியுமா... எதுக்கும் குடுப்பினை வேணும் அத்திம்பேர்.... இவரோட அம்மா இருக்காளே....” என்று நான்ஸ்டாப்பாக சரிதா ஆரம்பிக்க... “சரி... சரி.... இநதப் ப்ளானுக்கும் சரிதான் சரி... நாம போலாம்...” என்றேன் அவசரமாக. (வேறு வழி? அப்படி அவள் வாயை மூடாவிட்டால் என் முப்பாட்டன் என்ன... அறுபாட்டன் எழுபாட்டன் பரம்பரை வரை சொல்லிக் காட்டுவாள். ஹி... ஹி..)

“குட்... இப்பத்தான் சரியாப் பேசறேன் மாப்ளே...” என்றபடி எழுந்தார் கைலாஷ். “நீங்க பட்ஜெட்லாம் போட்டு சிரமப்பட வேணாமேன்னுதான் உங்களுக்காக வெயிட் பண்ண நேரத்துல நான் அப்ராக்ஸிமேட்டா எல்லாச் செலவும் எவ்வளவு ஆகும்னு நான் கணக்கு போட்டுப் பார்த்தே வெச்சிருக்கேன். இதோ பாருங்கோ....” என்று ஒரு சீட்டைக் கையில் எடுத்து நீட்டினார். அசால்ட்டாக அதைக் கையில் வாங்கிப் பார்த்த எனக்கு ‘மொத்தம்’ என்ற தலைப்பிற்கு நேரே அவர் போட்டிருந்த தொகையைப் பார்த்ததும் த...லை...யை...ச்... சு...ற்...ற.....

‘டொம்ம்ம்ம்!‘

ஜுரத்தால வீட்ல ரெஸ்ட்ல இருக்கறதால
ஜுர வேகத்துல திடீர்னு தோணினதை 
மனசுக்கு வந்தபடி கிறுக்க ஆரம்பிச்சதுல
இதுவரை வந்துருச்சு. இதுக்கு மேல
எப்படி தொடர்கிறதுன்னு தெரியல... ஸோ...
தொடரலாம்...?!!

56 comments:

 1. ஒண்ணு விட்ட ஃப்ரெண்ட் பதம் சூப்பர்! இனி இப்படியே சொல்லலாம் போல!

  கோப்ரோ!!! :))))))))

  இங்கேயே இந்த அதகளம்னா டார்ஜிலிங்க்ல என்ன ஆகுமோ... ஆவலாக் காத்திருக்கேன் கணேஷ்!

  ReplyDelete
  Replies
  1. அப்போ... தொடரலாம்ங்கறீங்களா ஸ்ரீ? ரைட்டு. ரசிச்சுச் சிரிச்ச உஙகளுக்கு என் மகிழ்வான நன்றி.

   Delete
  2. கண்டிப்பா தொடரணும்... சூப்பர் :)

   Delete
  3. எனர்ஜி டானிக் தந்த சுபத்ராவுக்கு மகிழ்வான நன்றி.

   Delete
 2. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்
  அடுத்த பகுதிக்காக
  தம 3

  ReplyDelete
  Replies
  1. ஹை! நீங்களும் அடுத்த பகுதியை எதிர்பார்க்கறீங்களா...? எனக்குத்தான் எப்படி கொண்டு போறதுன்னு தெர்ல. பாக்கலாம். ரசித்துக் கருத்திடட உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

   Delete
 3. waiting for next part sir. eppavum pola intha pakuthi rasikkumpadi irukkirathu sir. muka varanai super.

  ReplyDelete
 4. aa solla maranthitten pathivin thalaippu super sir.

  ReplyDelete
  Replies
  1. தலைப்பை ரசித்து அடுத்த பகிர்வுக்காக காத்திருக்கும் மகேஷுக்கு என் மகிழ்வான நன்றி.

   Delete
 5. ஹஹஹா.. அந்த படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருந்தேன்.. (சரிதாக்காட்ட நான் சிரிச்சத சொல்லிடாதீங்க..கோச்சுக்க போறாங்க..) :) :)

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி. (நான் சொல்லுவனா...? ஹி... ஹி... ஹி...)

   Delete
 6. ஆகையினால் அடுத்த எபிசோட் டார்ஜிலிங்ல பார்க்கப் போறோமா.நடக்கட்டும்.இந்த மாதிரி கோப்ரொ நான் பார்த்ததில்லை. மிகச் சுவை கணேஷ்> }}}

  ReplyDelete
  Replies
  1. சுவையை ரசித்த வல்லிம்மாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 7. கைலாஷ் - கேஷ் லாஸ்... (சிரிப்பு) பயணம் தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. சிரிப்புப் பயணம் தொடர வாழ்த்திய டிடிக்கு மகிழ்வான நன்றி.

   Delete
 8. சரிதாயணம் -2 ம் பாகத்தின் சிக்சர்

  ReplyDelete
  Replies
  1. எத்தனை கச்சிதமான உற்சாகம் தரும் கருத்து... நன்றிம்மா தங்கச்சி.

   Delete
 9. ஜுரத்தால வீட்ல ரெஸ்ட்ல இருக்கறதால/////
  ஜுர வேகத்துல திடீர்னு தோணினதை
  மனசுக்கு வந்தபடி கிறுக்க ஆரம்பிச்சதுல
  இதுவரை வந்துருச்சு. இதுக்கு மேல
  எப்படி தொடர்கிறதுன்னு தெரியல... ஸோ...////ஜுர வேகத்தால,திடீர்னு தோணினதால,மனசுக்குள்ள வந்ததால,கிறுக்க ஆரம்பிச்சதால,இதுவரை வந்துட்டதால,இதுக்கு மேல எப்புடித் தொடருறதுன்னு தெரியாததால ..........!ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 10. Today morning only I discussed with my wife regarding a trip to Darjeeling during Diwali vacation. After discussing this, I opened up your site and read this hilarious post. Tell Saritha madam to prepare a plan to visit Darjeeling during Diwali vacation and we will meet you there. OK.
  What is there to laugh at the picture? Mr.Balaganesh is on top only.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... செலவு வைக்கும் பயணத்துக்குப் பரிந்துரைக்கும் நீரும் சரிதா கட்சியில் சேர்ந்து விட்டீரா தோழா. பரிந்துரைத்த அக்கறைக்கும் சிரித்து ரசித்தமைக்கும் மன்ம் நிறைய நன்றி.

   Delete
 11. சூப்பர் சூப்பர் கணேஷ் தூங்கி எழுந்திரிச்சிட்டுத் தொடருங்கள். :)

  ReplyDelete
  Replies
  1. வரும் வாரமே தொடர்ந்திடுறேன்க்கா... உற்சாகம் தந்த கருத்துக்கு உளம் நிறைந்த நன்றி.

   Delete
 12. ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்து மாளவில்லை! அவ்ளோ சூப்பர்! தொடரலாம் என்ற சந்தேகம் வேண்டாம்! கண்டிப்பாக தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அடிச்சு சொல்றீங்களே சிரிச்சேன்ங்கறதை... அவசியம் தொடரலாம் சுரேஷ்... (எப்படிங்கறதை யோசிக்கறேன்) மிகமிக மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 13. ஹைய்யோ!!!

  ஜுர வேகத்துலே கதை சூப்பரா ஓடுது:-))))

  ReplyDelete
  Replies
  1. இப்ப உங்களுக்கு நன்றி சொல்ற இந்த வேளையில் ஜுரம் இறங்கிடுச்சு. கதையும் சூப்பர் வேகத்துல ஓடுதுன்னு பாராட்டி தெம்புதந்த ரீச்சருக்கு மனம் நிறைய நன்றி.

   Delete
 14. அடடா இந்தக் கதையையாவது முழுசாப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதே கிண்டலும்
  கேலியுமாக என்ன அழகாய் ஒரு தொடர் !புதுசா இப்படி எல்லாம் பெயர் வைத்து
  அழைக்க எப்படித் தோன்றியது சகோதரா ?...:)) ஒண்ணுவிட்ட சகோதரம், ஒண்ணுவிட்ட நண்பன் இனி மீதம் உள்ள உறவுகளையும் இப்படி சோட்டா எப்படி அழைப்பது என்றும் சொல்லி விடுங்கள் :)) பெண்கள் அவசர புத்தியும் ஆர்வக் கோளாறும் நிறைந்தவர்கள் என்று மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் :)) இது காச்சலில் இருக்கும் போது வந்த தொடராகத் தெரியவில்லை அத்தனை தத்துரூபமாக மனங்களைப் படம் பிடித்து வாசிக்கும் போது ஆவல் மேலெழும் வண்ணம் படைக்கப்பட்ட பகிர்வாகும் எனவே வெகு விரைவில் மிகுதியைத் தொடரும்படி கேட்டுக்கொள்கின்றேன்.ஏழாவது ஓட்டைப் போட்டு அரங்கில் ஏற்றிய பாக்கியம் இன்று என்னதாகும் :)) வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான இத் தொடர் சிறந்து விளங்கட்டும் .

  ReplyDelete
  Replies
  1. சட்டென்று தோன்றியதை நான் எழுத, அதனுள் பொதிந்திருக்கும் அழகை நீங்கள் காட்டியதும்தான் நானும் காண்கிறேன். அதற்கும் அரங்கேற்றிய வாக்களித்தமைக்கும் மிகமிக மகிழ்வுடன் என் நன்றி சிஸ்டர்.

   Delete
 15. தொடரட்டும் நகைச் சுவை அட்டாக்....!

  ReplyDelete
  Replies
  1. தொடர்கிறேன் ஐயா... மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 16. எம்.பி ஆகிற ஆசைதான் நிறைவேறல. டார்ஜிலிங் ட்ரிப்பையாவது சக்சஸா ஆக்கி சரிதா அக்காவை கூல் பண்ணுங்க.

  ReplyDelete
  Replies
  1. முடிந்தவரை ட்ரை பண்றேன் முரளி... மிக்க நன்றி.

   Delete
 17. கோப்ரோ, கங்காரு.... வார்த்தையால விளையாடுறீங்க வாத்தியாரே... அடுத்த பாகம் வருமா?

  ReplyDelete
  Replies
  1. ரசிக்கப்படற பட்சத்துல வராம போகுமா ஸ்.பை..? முயல்கிறேன். மிக்க நன்றி.

   Delete
 18. ஜுர வேகத்தில் எழுதிய கதை சூடு வைத்த ஆட்டோ மீட்டராக படுஸ்பீடாக ஓடி ஜில் என்று டார்ஜிலிங்கில் மையம் கொண்டுள்ளது.. அருமை ..
  படம் ரசிக்கவைத்தது.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. சூடு வைத்த ஆட்டோ மீட்டராக.... மிகரசித்தேன் உங்கள் வார்த்தையை. மிகமிகமிக மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 19. 'நகை'யும்
  'சுவை'யும்
  கலந்து
  இருக்கின்றது.  தமிழ்மணம் 10.

  ReplyDelete
 20. கோப்ரோ கோப்ரா காப்ரா - உங்களுடைய வார்த்தை விளையாட்டு ரசனை கணேஷ். ஜூரமானாலும் ஓய்வு எடுக்காமல் வலைப்பணியாற்றும் உங்கள் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா? உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். குணமானதும் தொடர்ந்து எழுதுங்கள். ரசிக்க நாங்கள் தயார்.

  ReplyDelete
 21. சிரிச்சி சிரிச்சு மாளலை சார்! ஐயோ என்ன ஒரு நகைச்சுவை! சகலைக்கு ஒரு பெயர் வைச்சீங்க பாருங்க....கோப்ரா.......சூப்பர்......!!!!!

  ரசித்தோம்!

  ReplyDelete
 22. ”தொடரலாம்” ஆ?தொடரத்தான் வேண்டும்.
  ஒண்ணுவிட்ட ஃப்ரெண்ட்!! சூப்பர்

  ReplyDelete
 23. //த...லை...யை...ச்... சு...ற்...ற.....//

  சுற்றும் தலை நின்னுட்டதா??? நிக்கலைன்னா சொல்லுங்க சரிதா கிட்ட சொல்லி நிப்பாட்டிடலாம். அப்பதான் அடுத்த பதிவை படிக்க முடியும்

  ReplyDelete
 24. //த...லை...யை...ச்... சு...ற்...ற.....//

  சுற்றும் தலை நின்னுட்டதா??? நிக்கலைன்னா சொல்லுங்க சரிதா கிட்ட சொல்லி நிப்பாட்டிடலாம். அப்பதான் அடுத்த பதிவை படிக்க முடியும்

  ReplyDelete
 25. அவ்வ்வவ்வ் superb

  ReplyDelete
 26. ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்போ சிரிப்பு !

  அந்த " கோப்ரோ " அதகளம் !!

  தொடருங்கள் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவினை வாசித்து உங்கள் கருத்துகளை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete
 27. கடைசிவரை நகை(ச்சுவை)யின் விலை குறையாமல் போய்க்கொண்டே.. இருந்தது அருமை.
  www.Killergee.blogspot.com

  ReplyDelete
 28. topic ல ஆரம்பிச்சி எண்டு வரை வார்த்தை விளையாடியிருக்குது....
  நீங்க காபி தானே குடிச்சீங்க பின்ன எதுக்கு லேண்ட்மார்க் சொல்ல எப்டி நீடிமுழக்கி குட்டு படுறீங்க:))
  டார்ஜிலிங் ட்ரிப் இப்பவே களைகட்டுது அண்ணா!!

  ReplyDelete
 29. இதை அப்படியே விட்டுடுங்கோ. இல்லேன்னா ஆத்துக்காரி வெளுத்து வாங்கிடுவா!

  ReplyDelete
 30. அருமையா போய்கிட்டு இருந்தது, இப்படி தொடரும் போட்டுடீங்களே, இது நியாமா ????

  ReplyDelete
 31. ஹிஹிஹிஹிஹிஹிஹி..
  ஜுரம் சரியாயிடுச்சா?

  ReplyDelete
 32. ஆஹா... சரிதாவுடன் டார்ஜிலிங் ட்ரிப்.... எஞ்சாய் கணேஷ்! :)

  ரசித்தேன். அடுத்த பகுதிக்கான ஆவல் கூடிய காத்திருப்புடன் நானும்.

  ReplyDelete

 33. “அவரை நீ கோப்ரான்னே சொல்லிருக்கலாம். மனுஷன் உடம்பெல்லாம் விஷமாச்சே... அவரைப் பார்த்தாலே எனக்கு வந்துருமேடி காப்ரா...//

  ஹா சரியான காமடி பதிவு

  ReplyDelete
 34. ஆஹா, என்ன சூப்பரான நகைச்சுவை.. இப்பதான் முதல் முறையா உஙகபக்கம் வந்தேன். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார். இனி அடிக்கடி வருவேன்

  ReplyDelete
 35. கணேஷ், தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
  http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

  ReplyDelete
 36. நல்ல நகைச்சுவை..மீண்டும் எழுந்துங்க அண்ணா..

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube