
கூகிள், வலைத்தளம் என்கிற ஒரு வசதியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் உரிமையாளர்கள் அவரவர் படைப்புகளை அதில் வெளியிடுகிறார்கள். வாரப்பத்திரிகைகளைப் போல இதற்கும் ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டம் உண்டு. - இந்த அளவுக்கு மட்டுமே எனக்கு வலையுலகைப் பற்றித் தெரிந்த சமயம் அது. அப்போது திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடம் உதவியாளராகவும், அவர் பொறுப்பாசியராக இருந்த ‘ஊஞ்சல்’ இதழின் உ.ஆ. + வடிவமைப்பாளராகவும் இருந்த காலகட்டம். “வலையுலகில் சிறப்பாக எழுதுபவர்களைப்...