
ஒரு காதல் கதை திரைப்படமாகிறது என்றால் என்னவெல்லாம் நடக்கும்...? காதல் ஜோடியின் காதலுக்கு எதிர்ப்பு வரும். ‘எதை நம்பிடா உனக்கு பொண்ணு குடுக்கறது?’ என்ற கேள்வி வரும். . காதலி தன் வீட்டில் சத்யாக்கிரகம் செய்து காதலுக்காக போராடுவார். கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைத்து (பலசமயம் ஒரே பாடலில்) பணம் சம்பாதித்து விடுவார். அதைத் தந்து காதலில் வெல்வார். அல்லது அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைத்து விட்டு காதலியுடன் ஊரைவிட்டு ஓடுவார் அல்லது காதல் ஜோடி...