Wednesday, December 4, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 3

Posted by பால கணேஷ் Wednesday, December 04, 2013
ரொம்ப நாழியா காத்துண்டிருக்கேளா? ஸாரி.... தோ வந்துட்டேன்...! 

ரிதாகிட்ட அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வ்ந்த டைரக்டர், ‘‘இவங்க பேரு சரிதா"ன்னு அறிமுகப்படுத்திட்டு, சரிதாட்ட, ‘‘இவங்க பேரு ப்ரீத்தி. இவங்களோடதான் சீரியல்ல நீங்க மோதப் போறீங்க"ன்னுட்டு நகர்ந்துடறாரு. அந்தப் பொண்ணு சரிதாவைப் பார்த்து கும்பிட்டு, ‘‘நீங்க அழகா இருககீங்க ஆன்ட்டி!"ங்கறா. அவ்வளவுதான்... ஏற்கனவே கோபத்துல சிவப்பாயிட்டிருந்த சரிதாவோட முகம் நெருப்பாட்டம் சிவந்துடறது.

‘‘என்னது....? ஆன்ட்டியா? விட்டா பாட்டின்னுவ போலருக்கே...! தோ பாரும்மா... ஒண்ணு அக்கான்னு கூப்பிடு, இல்லன்னா ஸே மேடம்...!"ன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு கோபமா சொல்றா. அவளானா கொஞ்சமும் அலட்டிக்காம, ‘‘போங்க ஆன்ட்டி! ரொம்ப தமாஷ் நீங்க... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு..."ன்னு உரிமையா சரிதாவோட கன்னத்துல ஒரு தட்டு தட்டிட்டு நகர்றா. அதே கோபத்தோட சரிதா, நம்மாளு பக்கம் திரும்ப... அவன் மெதுவா எஸ்கேப்பாயிடறான். இது மாதிரி சமயங்கள்ல எப்படித் தப்பிக்கறதுன்னு பிள்ளையாண்டானுக்கு அத்துபடியில்லியோ... ஹா... ஹா...!

ஷாட் ரெடின்னுட்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் கூப்பிடவும் சரிதா போறா. நம்மாளு ஹாயா, ஒரு சேர்ல உக்காந்துண்டு ஷுட்டிங்கை வேடிக்கை பாக்கறான். டைரக்டர், ‘‘ப்ரீத்தி, நீங்க சரிதா மேடத்தப் பாத்து, ‘யாரு ஜெயிக்கறாங்கன்னு பாத்துடலாம்னு" சொல்லி சிரிக்கறீங்க. சரிதா மேடம், நீங்க ப்ரீத்திகிட்ட, ‘யார்கிட்டடி கொக்க
ரிக்கறே?"ன்னு கேட்டு பளார்ன்னு கன்னத்துல அறையறீங்க. புரிஞ்சுதா...?" அப்படின்னு சொல்லிட்டு, ‘‘ரெடி டேக்..."குங்கறார். ப்ரீத்தி அவளோட டயலாக்கைப் பேசி முடிக்கவும், சரிதா ‘‘யாருகிட்டடி கொக்கரைக்கறே?"ன்னு கேட்டுட்டு அவ கன்னத்துல பளார்னு அறையறா.

‘‘கட்... கட்...'ன்னு கத்திட்டு டைரக்டர் வேகமா பக்கத்துல வர்றாரு. ‘‘மேடம்... கொக்கரைக்கறே இல்ல... கொக்கரிக்கறன்னு கேக்கணும். பாத்துப் பண்ணுங்க... ஒன் மோர் ஷாட்" அப்படிங்கறாரு. ‘‘ஸார்..."ன்னு பரிதாபமா குரல் கொடுக்கறா ப்ரீத்தி. ‘‘என்னம்மா?"ன்னு கேக்கற டைரக்டர் கிட்ட, ‘‘இந்த ஆன்ட்டி நடிக்கற இன்ட்ரஸ்ட்ல நிஜமாவே கன்னத்துல அறைஞ்சுட்டாங்க ஸார்..."ன்னு பாவமாச் சொல்றா. ‘‘மேடம்... பாத்துப் பண்ணுங்க..."ன்னு மறுபடி சொல்லிட்டு டைரக்டர் கேமரா பின்னால போய் நின்னுண்டு ‘‘ஸ்டார்ட் கேமரா"ங்கறார்.

இப்போ... மறுபடி அதே மாதிரி ‘‘யார்கிட்டடி கொக்கரைக்கறே?'ன்னு கரெக்டா தப்பாப் பேசிட்டு, திரும்ப அந்தப் பொண்ணை ஒரு ‘பளார்' விடறா சரிதா. ‘‘கட்... கட்..."ன்னு கோவமா கத்தின டைரக்டர் சரிதாட்ட வந்து, ‘‘அரைக்கறது இல்லம்மா... அரிக்குது... அரிக்குது..."ன்னு பலமா கத்தறாரு. ‘‘போங்க ஸார்... அரிக்குதுன்னா சொரிஞ்சுக்கறத விட்டுட்டு என்கிட்ட வந்து சொல்றீங்க?"ன்னு சரிதாவானா வெக்கப்படறா.

அதப் பாத்ததுமே டைரக்டரோட பி.பி. கன்னாபின்னான்னு எகிறிப் போய்டறது போங்கோ... ‘‘அரிக்கறதுன்னு சொல்லலைம்மா. நீங்க பேசவேண்டியது கொக்கரிக்கறதுன்னு. திரும்பத் திரும்ப கொக்கரைக்கறதுன்னே பேசறீங்க. கொக்கைல்லாம் யாரும் அரைக்க முடியாதும்மா... இதான் லாஸ்ட். இந்தத் தடவை நீங்க சரியாப் பேசலைன்னா... நாளைக்கு எடுத்துக்கலாம் இந்த சீனை"ன்னு எரிஞ்சு விழுந்துட்டு, அந்தப் பக்கம் நகர்றாரு.

வேடிக்கை பாத்துண்டு இருககற நம்ம கதாநாயகனுக்கு அந்தப் பொண்ணு ப்ரீத்தியப் பாக்கவே பாவமா இருக்கு. சரிதாட்ட அறை வாங்கினா எப்படி வலிக்கும்னு அனுபவபூர்வமா நேக்கும், உங்களுக்குமா தெரியும்...? அவனுக்கில்ல தெரியும்! அந்தப் பொண்ணை இப்ப ரொம்ப பரிதாபமாப் பாக்கறான். அதைப் பாத்ததுமே சரிதாவோட முகத்துல கோபத்தோட வால்யூம் ஜாஸ்தியாறது. மறுபடி டைரக்டர் டேக் எடுக்க... அவரோட பொறுமையையும், ப்ரீத்தயோட கன்னத்தையும் ரொம்பவே சரிதா சோதிக்க, ஏழாவது டேக்ல சரியாப் பேசிடறா. ‘‘கட்... கட்..."ன்னு குரல் கொடுத்த டைரக்டர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில அட் எ டைம் ஆறு காளைய அடக்கினவர் மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு வந்து நம்ம கதாநாயகன் பக்கத்துல இருக்கற சேர்ல சரியறாரு.

சரிதா பவ்யமா அவர் பக்கத்துல வந்து நின்னுண்டு, ‘‘நாளைக்கு எப்ப, எங்க வரணும் ஸார்?"ன்னு கேக்கறா. அவரானா அவசர அவசரமா, ‘‘அப்புறமா ஃபோன் பண்ணிச் சொல்றேம்மா... இப்ப நீங்க கிளம்புங்கோ"ங்கறார். கார்ல திரும்பி வரும்போது நம்மாளு சரிதாட்ட கேக்கறான்: ‘‘ஏம்மா... சொல்றதை திருப்பிச் சொல்லத் தெரியாத அளவுக்கு நீ மோசமில்லன்னு நேக்கு நன்னாவே தெரியும். அப்புறம் ஏன் அப்படி ஏகப்பட்ட டேக் வாங்கி இழுத்தடிச்சே.?"ன்னு கேக்கவும், சரிதா கோவமா அவனோட கொமட்டுலயே குத்தறா. ‘‘தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு... அவகிட்ட நீங்க வழிஞ்சதே என்னால தாங்க முடியல. பத்தாததுக்கு அவ வேற ஆன்ட்டி ஆன்ட்டின்னு கூப்பிட்டு ரொம்பத்தான் எரிச்சல் பண்ணிட்டா. இதான் சாக்குன்னு ஷாட்டுல நடிக்கற சாக்குல நல்லா மொத்திட்டேன்..."ன்னுட்டு ஹா... ஹா...ன்னு பலமாச் சிரிக்கறா.

‘‘நல்ல காரியம் பண்ணினே போ... எனக்கென்னவோ அந்த டைரக்டர் மறுபடி உன்னை நடிக்கக் கூப்பிடுவாருன்னு தோணலம்மா..."ன்னு நம்ம கதாநாயகன் சொல்றதுக்கு, ‘‘கூப்பிட்டாம இருக்க முடியாதே... சீரியல் எபிஸோட் உடனே குடுத்தாகணுமாம், டைமில்லைன்னு டைரக்டர் அவர் அசிஸ்டண்ட் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேனே..." அப்படின்னு குதூகலமாத்தானே சொல்றா. நம்மாளு அதுக்கு மேல ஆர்க்யூ பண்ணினா வம்புதானே வந்து சேரும்னுட்டு காருக்கு வெளில பராக்குப் பாக்கற மாதிரி திரும்பிக்கறான். ஆனா... விதியோட விளையாட்டப் பாத்தேளோ... அவன் சொன்ன மாதிரியே நடந்துடுத்து.

அந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்ல தான் நடிச்சதை எல்லார்ட்டயும் போன் பண்ணிச் சொல்லிப பீத்திக்கறா சரிதா. அதோட நிக்காம... அந்த எபிஸோட் ப்ராட்காஸ்ட் ஆனப்ப அதை ரிகார்டும் பண்ணி திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கறா. அதை பாக்க வெச்சு நம்ம ஹீரோவையும் சோதிக்கறா. ஆச்சு... ஒரு வாரம் முடிஞ்சுடுச்சு. சீரியல் கம்பெனிலருந்து போனக் காணலை. அடுத்த வாரம் வரை வெய்ட் பணணிப் பாத்துட்டு சரிதா அந்த டைரக்டருக்கு போன் பண்ணினா... ‘‘ஸார்... மறுபடி எப்ப நடிக்க வரணும்னு சொல்றேன்னேளே..."ன்னு இழுக்க, ‘‘அம்மா தாயி, ஆள விடுஙக... இந்த வாரம் சீரியல்ல வேற ஒரு நடிகைய நடிக்க வெச்சுட்டு அவருக்குப் பதில் இவர்ன்னு உங்க படத்தையும் அவ படத்தையும் காட்டி கதைய நகர்த்திட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல நடிச்சதுக்கு செக் வந்துரும். ரொம்ப தாங்க்ஸ்ம்மா"ங்கறார்.

சொத்தைக் கடலைய மென்னுட்ட மாதிரி ஆயிடறது சரிதாவோட மூஞ்சி! செல்போனைத்தானே அவ கட் பண்ணிட்டு நம்மாளைப் பாக்கவும், எதிர் முனைல என்ன சொல்லியிருப்பாங்கன்னு ஊகிச்சுட்ட அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறான். அதப் பாத்ததும் சரிதா கோவமாயி, முகவாயத் தோள்ல இடிச்சுட்டு உள்ள போறா. இதனால லோகத்துல உள்ளவா எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்துல உள்ளவாள்ளாம் சீரியலைப் பாத்து (அழுது) ரசிக்கணுமே தவிர, நடிககணும்னு ஆசைப்படப் படாதுங்கறதுதான். இம்புட்டு நேரம் என்னோட காலட்சேபத்தை பொறுமையாக் கேட்டவாளும், அடுத்த கச்சேரிக்கு அழைப்புக் குடுக்கலாமா இவருக்குன்னு யோசிக்கறவாளும் எந்தக் குறையும் இல்லாம குடும்பம், பிள்ளை குட்டிகளோட க்ஷேமமா இருக்கணும்! இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன். வரட்டுமா....


இனறு வலைச்சரத்தில் உங்களின் மேய்ச்சல் மைதானம் படிக்க இங்கே க்ளிக்கவும்!

22 comments:

  1. சரிதாக்காவ கிண்டல் பண்ணலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதே.. ( நாங்க அக்கா கட்சில சேர்ந்துட்டோம்.. ஹஹஹா.. ஜெயிக்கிற கட்சில தானே இருக்கணும்.. அதுதானே புத்திசாலித்தனம்)

    ReplyDelete
  2. பேஷ் பேஷ் ரொம்ப நான்னாயிருந்துச்சு

    ReplyDelete
  3. மெகா சீரியல் மாதிரி போகும்னு நினைச்சா சட்டுன்னு முடிஞ்சி போச்சே . கணேச பகவதரோட அடுத்த காலட்சேபம் எப்போ?

    ReplyDelete
  4. கலகல்ப்பான காலட்சேபம் ...!

    ReplyDelete
  5. சரிதா தப்புத் தப்பா ரொம்பச் சரியாச்
    சொல்லும்போது உள்குட்டு எனக்குப் புரிஞ்சுடுச்சு
    வெல்டன் சரிதா மேடம்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சரிதா மேடம் செய்தது சரி தான்...

    ReplyDelete
  8. Saritha Madam : What are you doing sitting idle at home?

    Your reply : KATHA KALATSHEBAM

    ReplyDelete
  9. வேறே பாணியில் கதை சொல்லி இருந்தால் இலக்கியம் ஆகியிருக்குமோ?

    ReplyDelete
  10. ரொம்ப நன்னாருந்திச்சு,'எபிசோட்' டு!சட்டுன்னு எனக்குப் புரிஞ்சுண்டுது,எதுக்கு தப்பு தப்பா மேடம் பேசுறாள் ன்னு!சபாஷ்,சரியான பழிவாங்கல்!!!மறுபடி எப்போ வரேள்?

    ReplyDelete
  11. வழக்கம் போல் கலகலப்புக்கு குறைச்சல் இல்லாமல் சரிதாயணம் வெகு ஜோர்.

    ReplyDelete
  12. அருமை...வெகுவே ரசித்தேன்....

    ReplyDelete
  13. சரிதா மேடம் கிட்ட அடி வாங்கிய பெண்ணை நினைத்தால் பரிதாபம் - நீங்க அடி வாங்குவது தான் சகஜமாச்சே! :)

    ReplyDelete
  14. கச்சேரி களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு..அருமையா போயிட்டு இருக்கு..

    ReplyDelete
  15. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் கற்பனையின் பின்னே சில மானசீக ஆசைகள் தென்படுகிறதோ ? I WISH I am wrong...!

    ReplyDelete
  16. சரிதா மேடம் ரொம்பவே கில்லாடிதான் வாத்தியாரே, ப்ரீத்தியை ஏழு தடவை அறையறதுக்காகவே இத்தனை டேக் வாங்கியிருக்காங்க... உங்க கிட்ட எப்படி? ஹிஹி....

    ReplyDelete
  17. இப்படி 'அறை'குறையா இவ்வளவு சீக்கிரம் கதையை முடிச்சுட்டீங்களே!

    ReplyDelete
  18. கச்சேரியோட மூணு தொடரையும் படிச்சுட்டேன்.... ரசித்து சிரிக்க வைத்தது..

    ReplyDelete
  19. ஹஹா... சூப்பர், ஆனா பட்டுன்னு முடிஞ்சுடுச்சு

    ReplyDelete
  20. //bganesh55@mail.com க்கு மெயில் அனுப்பியோ//

    மெயில் ஐடி சரியா சார்?

    ReplyDelete
  21. நல்லவேளையாக இவருக்கு பதில் இவர்னு போட்டாங்க. சில நேரங்களில் மாலை போட்டு புகைப்படத்தைக் காட்டி கேரக்டரை முடிச்சிடறாங்க. அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை. கதாகாலட்சேபம் சட்டென்று முடிந்துவிட்டாற்போன்றுள்ளது. ஆனாலும் சுவை குறையவில்லை. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube