
பதிவர் திருவிழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாய் நடந்தேறி வருகின்றன. உணவுப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மேடை அலங்காரம், பதிவர்களுக்கான பாட்ஜ் அச்சிடுதல் என பணிகள் முடுக்கி விடப்பட்டு, வரும் ஞாயிற்றுக் கிழமை சந்திப்பிற்கான படபடப்பு பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.
சென்ற ஆண்டு பதிவர் திருவிழா நடந்த பொழுது ‘தென்றல்’ சசிகலா எழுதிய ‘தென்றலின் கனவு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதை நான் வடிவமைத்திருந்தேன் என்றபோதிலும்...