Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞனே, நீ வாழி!

Posted by பால கணேஷ் Thursday, July 18, 2013

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டது அவனது கவிதையுலா
திரைத்தமிழ் தழைக்க அவன் பாடிவந்த முழுநிலா!

சென்னை வந்தவன் பட்டான் பல துயரம்! - அவனை
முன்னிறுத்தியது அவையில் வாத்யாரின் அன்புக்கரம்!

எதிர்ப்பட்டோர் பலம்பாதி கொள்ளும் வாலியெனும்
பெயர்சூடிய அந்நல்லோனின் திருநாமம் ரங்கராஜன்
பழகினோர் பகன்றிடுவார் மாண்பில் அவனோர் தங்கராஜன்!

அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!

ஜாலியான பாடல்களும் புனைந்தவனை உலகம் செய்தது கேலி
கோலமிகு தீந்தமிழ்ப் பாக்களால் வாயடைக்க வைத்தானந்த வாலி!

அவன்றன் கவிதையை அளவிட உலகிலிலை ஓர்அலகு
அம்முதியவனை வாலிபக் கவிஞனெனக் கொண்டாடியது இவ்வுலகு!

தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!


=====================================================
என்னுடன் ‌இணைந்து இங்கு வாலிபக் கவிஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!
=====================================================

44 comments:

  1. வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்...!
    அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்...!
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா...?
    அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியமா...?

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  2. வாலி எனும் ஜாலிக் கவிஞர் மறைவு திரை உலகுக்கும் ரசிகர்களுக்கும் இழப்புதான்.

    ReplyDelete
  3. / தமிழரங்கில் மணிப்பிரவாளமாய் அவன்பாடாத சரணமில்லை
    தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை! /

    கவிஞர் வாலிக்கு தங்களின் கவிதாஞ்சலி! நானும் உங்கள் அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்! அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்!

    ReplyDelete
  4. வாலிக்கு நிகர் வாலி தான்
    தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்து விட்டது

    ReplyDelete
  5. ஒரு கவிதைய அருவியை இழந்துவிட்டது இலக்கிய தேசம்....

    ReplyDelete
  6. தீந்தமிழோடு விளையாடிய தேன் தமிழ் கவிஞன்! வாலி! ஆழ்ந்த இரங்கல்கள்! ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  7. வாழும் கலைஞன்! வாலியெனும் கவிஞன்!!

    கவிஞரின் ஆன்ம சாந்திக்காக வேண்டுகிறேன்.
    உங்களுடன் ஆழ்ந்த அஞ்சலியில் நானும்.....

    ReplyDelete
  8. அவதார புருஷனுக்கு உங்கள் அஞ்சலி உருக்குகிறது.

    ReplyDelete
  9. 'ஊக்குவிப்போர் இருந்தால்
    ஊக்கு விற்பவன் கூட
    தேக்கு விற்பான்'
    என்று தனது தமிழால் பலர் உள்ளம் கொள்ளை கொண்ட
    வாலிக்கு அஞ்சலிகள்.
    ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை!

    ReplyDelete
  10. அந்த கால மக்கள் திலகம் முதல் இக்கால சிம்பு வரை பாட வைத்தவர். இன்று அவர் பற்றி பாட வைத்து விட்டு பறந்து விட்டார், பறந்தாலும், கருத்தாழமிக்க பாட்ல்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்துக்கிட்டுதான் இருப்பார்.

    ReplyDelete
  11. அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  12. RIP வாலி ஸார்

    ReplyDelete
  13. கவிஞர் வாலியின் மறைவு வருத்தமாகத்தான் உள்ளது. கண்ணீர் அஞ்சலிகள்.

    திரையுலகில் வாலி ஒரு ஜாலிக்கவிஞர் தான்.

    ReplyDelete
  14. அருமையான அஞ்சலி -மிக அழகான படம்

    ReplyDelete
  15. கொடுமையான ஆண்டு... எனக்கு பிடித்த சுஜாதா, TMS வரிசையில் இன்று வாலி :(

    ReplyDelete
  16. வாலிபக் கவிஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  17. வாலிக்கு எனது அஞ்சலி.

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

    ReplyDelete
  18. சென்ற ஜூலையில் என்தந்தை இந்த ஜூலையில் வாலி ம்ம் ..மனசே சரி இல்லை...

    கவிதாஞ்சலி நன்று கணேஷ்

    ReplyDelete
  19. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  20. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

    ReplyDelete
  21. அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்
    நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!
    தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!

    ReplyDelete
  22. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  23. அவரின் உடல் மட்டுமே உலகை பிரிந்து செல்கிறது அவரின் ஆன்மாவும் அதில் உதித்த ஆயிரமாயிரம் வார்த்தைகளும் நாம் இருக்கும் வரை நம்மோடு உறவாடும் ..........அவரின் வார்த்தைக்கு நிகரான வார்த்தைஅவர் தான்.

    நான் ரசித்த கவிஞன்

    அவனின் வார்த்தைகளை உள்வாங்கும் போதெல்லாம் பிரமித்து நின்று இருக்கிறேன் அவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

    ReplyDelete
  24. நேற்று செய்தி பார்த்ததிலிருந்து மனசு வருத்தமா இருக்கு. குமுதத்தில் இப்போதுதான் ஏதோ தொடர் எழுத ஆரம்பித்திருந்தார். அந்த விளம்பரத்தின் போது குமுதம் அவரை இளைஞர் என்றே சொல்லியிருந்தது. :(

    ReplyDelete
  25. திருவரங்கம் ரங்கராஜன் விடைபெற்றார்! கவிஞர் வாலி என்றும் நம்முடனே இருப்பார்! அன்னாரின் ஆன்மா ரங்கனின் திருவடியில் இளைப்பாறட்டும்.

    ReplyDelete
  26. இலக்கிய உலகத்திற்கு மாபெரும் இழப்பு...

    ReplyDelete
  27. வாலியைப் பற்றிய கவிதை என்று படித்துக் கொண்டு வந்த எனக்கு கடைசியில் எழுதியிருந்தது அதிர்ச்சியை அளித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  28. வெற்றிலை மென்று
    சங்கக் கவி படைத்த
    கொற்றவனே...உன்
    விரல் மொழிந்த
    வார்த்தைகள் எல்லாம்
    மேவின என் உயிரெல்லாம்
    காவியக் கவிஞனே ..
    படைக்கப்பட்ட காவியங்கள் எல்லாம்
    கூடிநின்று உனக்கு
    முகாரி பாடட்டும்...
    இனியொரு கவிஞன்
    உனைப்போல
    வருவானோ என
    ஒப்பாரி முழங்கட்டும்...
    நெஞ்சம் குமுறுகிறது அய்யனே..
    உன் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலாது...

    ReplyDelete
  29. தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!

    நேற்றிலிருந்தே மனம் சரியில்லை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  30. Good Tribute. Will take time to digest his death but his words will live for ever.

    ReplyDelete
  31. இவரும் போய்விட்டாரா...?
    காலன் மிக மிக கொடியவன் தான்.

    ReplyDelete
  32. மனதை மிகவும் வருத்திய நிகழ்வு.

    ReplyDelete
  33. இளைஞராக இருந்து, இளைஞராகவே வாழ்ந்தவர்

    ReplyDelete
  34. அஞ்ஜலியை அழகிய பாமாலையாகவே கோர்த்த பாங்கு சிறப்பு. இந்த கடைசி வருஷங்களில் வெண் தாடியுடனும், வெள்ளாடையுடனும், விபூதி, குங்குமத்துடனும் அவர் வலம் வந்தது ஒரு மஹா புருஷனாகவே எனக்குத் தோன்றியது. யதுகை மோனை கவிஞராக மட்டும் இல்லாமல், இதிஹாசங்களிலும், புராணங்களிலும் காவியங்கள் எழுதியும், தன் வாழ்வில் பங்கு பெற்ற அனைவரையும் ஞாபகத்தில் இருத்தி தன் நன்றி அறிதலை கூச்சம் இன்றி வெளிப்படையாக எழுதிய மா மனிதர் தான் அவர். அவருடன் நட்பாக இருந்தவர்களுக்கு இது ஒரு பேரிழப்பு. கடந்த ஜனவரியில் புத்தக சந்தையில் அவரை தரிசிக்கும் வய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசாவில்லை, ஆனால் அவருக்கு வலது கரமாக இருந்த பழனிபாரதி அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டேன். அனைவருக்கும் மனமார்ந்த அனுதாபங்கள். - ஜெ.

    ReplyDelete
  35. இரங்கல் பா இன்னும் புகழ்பாடுகின்றது நாம் இழந்துவிட்ட இந்தயுகத்தில் இப்படி ஒரு வாலியின் இடத்தினை தமிழில் இனியொருவர் படைக்க முடியாத பா அமுதம்! வாலிக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்!!!

    ReplyDelete
  36. அவர் கவிதைகளில் கூடுதல்
    சிறப்பு இயைபுத் தொடைதான்
    அதைக் கொண்டே இரங்கற்பா படைத்தது
    மனம் கவர்ந்தது
    அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

    ReplyDelete
  37. வாலி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்... எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  38. ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  39. எனது அஞ்சலிகளும்....

    கவிதை மூலமா சிறப்பான அஞ்சலி.....

    ReplyDelete
  40. அன்பின் பால கணேஷ் - என்றும் இளைஞன் வாலிக்கு அருமையான சமர்ப்பணம் - இரங்கல் கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  41. பின்தொடர்வதற்காக

    ReplyDelete
  42. அன்பின் கணேஷ் - இதற்கு முந்தைய மறுமொழி மட்டுறுத்தலுக்காக நிற்கிறதா ? தெரிய வில்லை. சற்றே பார்க்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  43. "பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்
    அவர் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்."

    கடவுள் இருக்கிறார் என்பதை இதை விட மிக எளிதாக உங்களை
    தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.

    அதே ஆண்டவனிடம் சென்ற உங்களை அவன் கண்டிப்பாக பத்திரமாக
    பார்த்துக் கொள்வான்.

    உங்கள் எழுத்துக்களுக்கும் உங்களுக்கும் ரசிகனாக இருக்கும் பல கோடி
    ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.



    ஆனந்த் சுப்ரமணியம்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube