Monday, May 6, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 7

Posted by பால கணேஷ் Monday, May 06, 2013
போட்டிங் போக முடியாத ஏமாற்றத்தை மறைத்து, அரட்டையடித்தபடி ஏரியைச் சுற்றி நடந்தோம். இருபது ரூபாய் வாடகையில் சைக்கிள் கொடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல குளிர் காற்றில் சைக்கிள் மிதித்தபடி ஏரியைச் சுற்றி வ்ந்தது (ஐந்தரை கிலோமீட்டர் தூரம்) மிக ஆனந்தமாக இருந்தது. இரவு காட்டேஜுக்குத் திரும்பியதும், காட்டேஜுக்கு முன்பு இருந்த புல்வெளியில் விறகுக் கட்டைகளை அடுக்கி, வைத்திருந்தனர். அவற்றைக் கொளுத்தி குளிர்காய்ந்தபடி இரவு உணவும், அதன்பின் பாட்டும், கவிதைகளுமாக சுவாரஸ்யமாக இரண்டாம் தினம் முடிந்தது.

ஏரியைச் சுற்றிய வாலிபன்(?)
மூன்றாம் தினம் காலையில் அனைவரும் தயாராகி வேன் புறப்பட்டதும்தான் தலைவர் விஷயத்தைச் சொன்னார். ‘‘நாம இப்ப பெரியகுளத்துக்குப் போறோம். அங்க டிபன் முடிச்சுட்டு, பக்கத்துல சோத்துப்பாறைங்கற மலையில ஏர்றோம். அங்க பரதேசி படத்தோட ஷுட்டிங் ஸ்பாட்டைப் பாத்துட்டு, மலை அருவில குளிக்கறதுதான் இன்னிக்கு ப்ளான்’’.பெரியகுளத்தில் சில சமையல் பாத்திரங்களையும், சமையல் நபர் ஒருவரையும், மற்றொருவரையும் ஏற்றிக் கொண்டதும்,  கொஞ்ச தூரம் சென்றதும் ஏறிய அந்த மலைப்பாதை மிகக் குறுகலான பாதையாக இருந்தது. இங்கேயும் வனத்துறையின் அனுமதி பெற்றால்தான் பயணிகள் உள்ளே செல்ல முடியும். தலைவருடன் புதிதாய் சேர்ந்திருந்த நபர் அனுமதி வாங்கி வைத்திருந்ததால் (அவர் பெரியகுளம் கவுன்சிலர் என்பது பின்னால்தான் தெரிந்தது) எளிதாக இருந்தது.

‘சூடான’ பாட்டும், கவிதைகளும்1
மலைச்சரிவின் பாதியில் வேன் நிறுத்தப்பட்ட இடம் பரதேசி படத்துக்காகப் போடப்பட்ட குடிசைகளின் செட். இன்னும் அப்படியே கலைக்காமல் இருந்தது. அந்த இடம் இயக்குனர் பாலா அவர்களின் சொந்த இடம் என்பதாகச் ‌சொன்னார்கள். நாங்களனைவரும் அங்கே சுற்றிவந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். அதன்பின் அந்த மலைச்சரிவில் இன்னும் கொஞ்ச தூரம் பயணித்துச் சென்றதும் ‘ஹோ’வென்ற நீரின் இரைச்சல் காதில் விழுந்தது. அங்கே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். சரிவிலிருந்து இறங்கி உள்ளே சென்றால் வனம் தனக்குள் ஒரு அபூர்வப் பொக்கிஷத்தை ஒளித்து வைத்திருந்தது.

‘பரதேசி’க் குடிசைகள்
வனத்துறையினரின் அனுமதி பெற்று வரவேண்டிய இடமாதலால் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவது குறைவே என்பதால் அருவியும் சுற்றுப்புறங்களும் அதிகம் மாசடையாமல் இருந்தன. நீர் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் அத்தனை தெள்ளியதாக இருந்தது. பாறைகள் சூழ்ந்த பகுதியில் மெல்லிய ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. அங்கேயிருந்து கொஞச தூரம் பாறைகளைத் தாவி ஏறி மேலேறிச் சென்றால் குற்றாலம் போல அருவியாக வீழ்ந்து கொண்டிருந்தது. பாறைகளில் ஏறிச் செல்வதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தது. காரணம்... நாங்கள் அங்கே சென்றடைந்த நேரம் நடுமதியம் என்பதால் வெயில் தகித்ததும், பூச்சிகள் சில தென்பட்டதும்தான்.

பின்னே பரதேசி குடிசைகள்! முன்னே இந்தப்..!
இவை தவிர நமக்கு முன்னே வந்த நல்லவர்கள் குடித்து விட்டு வீசியெறிந்திருந்த பீர் பாட்டில்களிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததால் மிக கவனமாகச் செல்லும்படி ஆயிற்று. மற்றவரைப் பற்றித் துளியளவும் கவலைப்படாமல் தன் சந்தோஷத்தையே பெரிதாக நினைக்கும் தமிழினத்தின் அருங்குணத்தை வாழ்த்திய(?)படி உஷ்ணமாக அருவியை அடைந்த எங்களை குளிர்வித்தது அருவி நீர். நீண்ட நேரம் அருவியில் ஆடிவிட்டு கரைக்கு வந்தால், சாப்பாடு தயாராக சிறிது நேரமாகும், அதுவரை இதை டேஸ்ட் பாருங்கள் என்று பொரித்த மீனை பல தட்டுகளில் அள்ளித் தந்தார் சமையற் கலைஞர். நேற்று கொடையில் சாப்பிட்ட மீனின் சுவையை‌ எல்லாம் சாதாரணமப்பா என்று ‌சொல்ல வைத்தது இன்று இந்த அருவிக் கரையில் இவர் தந்தது. பிறகென்ன... மீண்டும் அருவிக் குளியல், வெயிட்டான மதிய உணவு. சிலுசிலுவென்ற காற்றினை ரசித்தபடியே சற்று நேரம் அரட்டை + சிலர் குட்டித் தூக்கம். மீண்டும் அருவிக் குளியல் என்று பொழுது போனதே தெரியவி்‌ல்லை.

அருவி ஓடையான இடத்தில்....!
மாலை ஆறு மணி சுமாருக்கு அங்கிருந்து புறப்பட்டு, பெரியகுளம் வந்த உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு எங்கள் வாகனம் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது. திண்டுக்கல் மற்றும் மதுரையில் கொஞ்சம் கேப் கிடைத்தால் நண்பர்களைச் சந்தித்து வரலாம் என்று நினைத்திருந்த என் திட்டம் நடைபெறவில்லை என்றாலும், மூன்று முழு தினங்கள் கணிப் பொறியையும், புத்தக வடிவமைப்பையும், வலைத்தளங்கள், முகப்புத்தகம், இமெயில் என யாவற்றையும் நினைக்காமல், முக்கியமாக... அலுவலக விஷயங்களை பயணத்தின் போது பேசாமல் மகிழ்வுடன் சுற்றி வந்தது டோட்டலாக பேட்டரி ரீசார்ஜ் செய்தது மாதிரி எங்களை ரெஃப்ரெஷ் ஆக்கியிருந்தது. இனி வருடம் ஒரு முறையேனும் இப்படி குழுவாக ஊர் சுற்ற வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்தேன். நிறைவேறமா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

பொரித்த மீன் - நாங்க சாப்பிடும் முன்!
இவ்வளவு சுருக்கமாக(!) நான் விவரித்தும் ஏழு பகுதிகள் நீண்டுவிட்ட இந்த கொடைக்கானல் பயணத்தை ரசித்தும், ரசிக்காமலும் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கு்ம் என் இதயம் நிறைந்த நன்றி! பயணக் கட்டுரை என்கிற புதிய க(கு)ளத்துக்குள் நாமெல்லாம் எழுதினால் சரியாக வருமா என்று தயங்கிய என்னை பிடித்துத் தள்ளி விட்ட தி.கொ.போ. சீனுவுக்கும், வி.ஓ. சுடர்விழிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்! (இந்த ‘நல்ல’ காரியத்தப் பண்ணினது இவங்கதானான்னு யாரோ பல்லை நறநறக்கறது இங்க கேக்குது!)

55 comments:

  1. அடேயப்பா..ஏழு பகுதிகள் முடிந்துவிட்டனவா? கொடைக்கானலை உங்களது கண்கள் மூலம் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வு.... அடுத்த பயணக்கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் அடுத்த பயணத்தையும் கட்டுரையையும் எதிர்பார்க்கும் ஸ்கூல் பையனுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  2. //‘சூடான’ பாட்டும், கவிதைகளும்1// இந்தப் படத்தில் கைதட்டி உற்சாகமாக இருக்கும் உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது வாத்தியரே

    // தன் சந்தோஷத்தையே பெரிதாக நினைக்கும் தமிழினத்தின் அருங்குணத்தை // சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது

    ஸ்கூல்பையன் (அவர்கள்!) சொல்வது போல் அதற்குள் முடிந்து விட்டது போல் உள்ளது. மிக சுவாரசியமான பயணக் கட்டுரைகள் அறியாத பல புதிய இடங்கள் பற்றி அறிந்து கொண்டேன்டோம்.

    பயணக் காதலர்களால் மட்டுமே அந்த உணர்வை அனுபவிக்க முடியும். உற்சாகமான மனிதர்கள் பயணங்கள். ஒரு ட்ரிப் முடியும் அடுத்த கணமே அடுத்த ட்ரிப் பற்றி யோசிக்கும்.

    //நாமெல்லாம் எழுதினால் சரியாக வருமா என்று தயங்கிய என்னை பிடித்துத் தள்ளி விட்ட தி.கொ.போ. சீனுவுக்கும்// அட !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சீனு. பயணங்களிலும் நாடகங்களிலும் சமீபகாலமாக நாட்டம் கூடிவிட்டது எனக்கு. மிக சுவாரஸ்யமாக இருந்தது என்று கூறி எனக்கு எனர்ஜி டானிக் தந்த உனக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. சுவையான பயணக் கட்டுரை - கடைசியில் போட்டிருக்கும் படமும் சுவை! :(

    சைக்கிள் ஓட்டிய அனுபவம்... நிச்சயம் நன்றாக இருந்திருக்கும்.

    பயணக் கட்டுரை மிக நன்றாகவே அமைந்திருந்தது.... அதற்குள் முடிந்துவிட்டதே என்ற வருத்தம். விரைவில் அடுத்த பயணம் செல்லவும், அதைப் பற்றி எழுதவும் வாய்ப்பு அமைய வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டாமல் குளிரை அனுபவித்து ஓட்டியது மிக நிறைவாக இருந்தது வெங்கட். நன்றாக அமைந்திருந்தது என்றதுடன் எனக்கு வாழ்த்தும் சொன்ன உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  4. சைக்கிளில் ஏரியை சுற்றிய வலையுலக வாலிபனே உங்கள் பயணக் கட்டுரை மிக நன்றாகவே வந்திருந்தது என்ன. அதற்குள் முடிந்துவிட்டதே என்ற வருத்தம்தான் . விரைவில் அடுத்த பயணம் செல்லவும், அதைப் பற்றி எழுதவும் வாய்ப்பு அமைய வாழ்த்துகள்

    கடைசியில் போட்டிருக்கும் படம் அருமை...நல்லவேளை பொரித்த மீன் - நாங்க சாப்பிடும் முன்! என்று போட்டதோடு கேமிராவை வைத்துவீட்டீர்கள் இல்லையென்றால் சாப்பிட்ட பின் என்று ஏதாவது படம் போட்டு ஒட வைத்திருப்பீர்களோ என்னவோ ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சாப்பிட்டபின் படம் எடுத்திரு்நதால் என்ற உங்கள் கற்பனை சூப்பரப்பு! மிக நன்றாக வந்திருந்தது என்றதுடன் பயணம் (கட்டுரை) முழுவதும் என்னுடன் வந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  5. பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

    ஆதலினால் பயணம் செய்வீர்!

    இதுதான் நம்ம கொள்கை:-)))

    ReplyDelete
    Replies
    1. ஆதலினால் பயணம் செய்வீர்! சூப்பர் டீச்சர்! இதே கொள்கைய இனி நானும் ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன். மிக்க நன்றி!

      Delete
  6. கொடைக்கானல் பயணக் கட்டுரை எங்கள் ஆவலை தூண்டி விட்டது. அடுத்த வாரம் போக இருக்கிறேன்.ஒரு சந்தோஷமான விஷயம் பயணக் கட்டுரை எழுதப் போறதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சென்று, ரசித்து வாருங்கள் முரளி. ஏன், அவரவர் பார்வை வெவ்வேறு விதமாக இருக்கும். நீங்கள் எழுதினால் இன்னும் அதிகம் ரசிக்கப்படும் என்பதே நிஜம்! தொடரும் உங்கள் ஆதரவிற்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  7. உங்களோடு நாங்களும் கோடைக்கானல் சென்று வந்தது போன்ற உணர்வு தங்கள் பதிவைப் படிக்கும்போது ஏற்பட்டது. பயணக்கட்டுரை போல் தெரியவில்லை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்த உணர்வைப பெற்று என்னை வாழ்த்திய உங்களின் அன்புக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. Very nice serial. Did not feel boring anywhere while reading it. Purpose of such picnic is to sink the differences which might have happened during the course of office duty and also to expose our other side i.e. jovial side of our personality. This helps in team building which ultimately helps everyone to have cool atmosphere in office.

    ReplyDelete
    Replies
    1. எங்கும் போரடிக்காமல சென்றது என்ற உங்கள் வார்த்தை மகிழ்வு தந்தது. உண்மையில் இந்த டூருக்குப் பின் புரிதலும், வேலை செய்யும் வேகமும் அதிகரித்திருப்பதே நிஜம். (அதை எதிர்பார்த்துத்தான் அனுப்பியிருப்பாங்க போல) மிக்க நன்றி நண்பரே!

      Delete
  9. ரசிக்க வைக்கும் பயணக் கட்டுரை... ஏரியைச் சுற்றிய வாலிபர் பாடம் சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பயணக் கட்டுரையுடன் ஏரி சுற்றிய வாலிபனையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  10. ஏரியைச் சுற்றிய வாலிபன் படம் சூப்பர். பின்னே பரதேசிக் குடிசைகளும் முன்னே இந்தப் பாலகணேஷூம்! கோடிட்ட இடத்தை அழகாக நிரப்பிவிட்டேன். பயண அனுபவத்தை மிகவும் அனுபவித்து சுவாரசியமாக சொன்னது அருமை. இரவு குளிர்காயும்போது எல்லோரும் சால்வையும் குல்லாவுமாக இருக்க நீங்க மட்டும் அதே டீசர்ட்டோட இருக்கீங்களே... குளிர் விட்டுப்போயிடுச்சோ? அட, தப்பா நினைக்காதீங்க கணேஷ்.. குளிரவில்லையோன்னு கேட்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரண்டுன்னா உங்கள மாதிரித்தான் இருக்கணும் கீதா! நான் என்னைத் தாழ்த்தி எழுதினாலும் கோடிட்ட இடத்தை மிக அழகாக நிரப்பிய உங்களின் அன்புக்கு மனம் நிறைய நன்றி! ரெண்டு விளக்கம்: 1) நான் அணிந்திருப்பது டிஷர்ட் வடிவிலான ஸ்வெட்டர். 2) நான் அந்தக் குளிரை ரசித்து அனுபவிக்க விரும்பியதால் கவசம் எதுவும் அணியவில்லை!

      Delete
  11. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அருமையான பயணம். ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்லும் திட்டம் நிறைவேறட்டும். நல்ல தொடர். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் திட்டம் நிறைவேற வாழ்த்தி, நல்ல தொடர் என்று பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  12. உலகம் சுற்றும் வாலிபனுக்கு போட்டியாக ஏரியை சுற்றிய வாலிபன் என்று எடுத்து கொள்ளலாமா

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ! அவரோடல்லாம் போட்டி போட இந்த வாலிபனா‌ல நிச்சயம் முடியாது சரவணன். அப்டில்லாம் எடுத்துக்காதீங்க. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  13. அந்த அருவியைப் பார்க்க நாங்கள் கொடைக்கானல் போய்த்தான் ஆகவேண்டுமா - இங்கு ஒரு படம் போட்டிருக்கக் கூடாதா!

    சாதாரணமாக வெளியூர் போனாலேயெ சந்தோஷம், அதுவும் நண்பர்களுடன் போவது, தங்குமிடம், சாப்பாடு, போக்குவரத்து என்று எந்த பொறுப்பும் இல்லாமல் போவது இரட்டிப்பு சந்தோஷம். சரி, சரி - வீட்டில் எதிர்பார்ப்பு கூடியிருக்குமே, எப்போது அடுத்த விசிட் - குடும்பத்துடன்? - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. சில பாறைகள் மேல ஏறி (ஒண்ணு ரெண்டு செங்குத்துப் பாறைகள்) அருவிக்குப் போக வேண்டியிருந்ததால யாரும் கேமரா எடுத்துட்டு் போக முடியலை ஜெ. தவிர, ஜட்டியுடன் நாங்க குளிப்பதை வெளியிட்டா, பெண்கள் திட்டுவாங்க, ஆண்கள் ஹார்ட் அட்டாக்குக்கு உள்ளாவாங்க. அதான் படம் வரலை. அதெப்படி வீட்ல டூர் கூட்டிட்டுப் போக வற்புறுத்தறதை அவ்வளவு கரெக்டா ஸ்மெல் பண்ணீங்க? (வீ. வீ.வா.படி?) என்ன... நாம ஃபேமிலி டூர் போனா கையவிட்டு பணம் செலவு பண்ணனும். இதுல அது இல்லாததால நீங்க ‌சொன்னாப்பல டபுள் என்ஜாய்! பயணத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
    2. // தவிர, ஜட்டியுடன் நாங்க குளிப்பதை வெளியிட்டா, பெண்கள் திட்டுவாங்க, // அதுக்காக அது இல்லாம குளிக்கமுடியுமா! - ஜெ.

      Delete
  14. Replies
    1. சீனி! நலம்தானே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் வருகையும், கருத்தும் மிக மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. நாங்களும் சைக்கிளில் சுத்திய அனுபவம் கண்முன் வந்து சென்றது. :)

    நல்லாத்தான் எஞ்சாய் செஞ்சிருக்கீங்க. அதெல்லாம் யாரையும் திட்டலை. பயணப்பதிவு நல்லாவே வந்திருக்கு. இந்த மாதிரி நிறைய்ய பதிவுகள் வரும்னு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லாவே வந்திருக்குன்ற உங்க வார்த்தை தெம்பூட்டுது தென்றல் மேடம்! இதுபோல இன்னும் வரவேண்டும் என்கிற உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயன்ற அளவு முயல்வேன். உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. அருமையான பயணக்கட்டுரை! இந்த குடிமகன்கள் குடிச்சுபுட்டு பாட்டிலை ஏன் தான் உடைக்கறாங்களோ? புரியவே மாட்டேங்குது!!

    ReplyDelete
    Replies
    1. போதையின் உச்சம் திமிராக மாறி விடுகிறதோ சுரேஷ்? எனக்கும் புரியலை. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. அருமையான முடிவு. (சே,சே! முடிச்சதுக்காகச் சொல்லலிங்க)

    எண்ணையில் குளித்த மீன் பார்த்தாலே கொழுப்பு ஏறுது சார்.

    இனி உங்களுக்கு ஒரு கிவிச்சு:
    கொடைக்கானல் டெம்பரெசர் எத்தனை இருந்திருக்கும் உங்க பயணத்தின் போது? கொடைகானல்ல் நீங்க சுத்தின தெருக்கள் பெயர் இரண்டு சொல்லுங்க. ஏரியை சுத்த உபயோகிச்ச சைக்கிள் என்ன மேக்? பரதேசி படப்பிடிப்பு லொகேஷனில் மொத்தம் எத்தனை குடிசைகள்? மகாலட்சுமி ஆலயம் பூம்பாறை ஆலயத்தைச் சுற்றி வந்த வேனில் எத்தனை இருக்கைகள்? ரதசாரதிக்கு எத்தனை குழந்தைகள்? கோகர்ஸ் வாக் வழியில் கண்ணில் பட்ட கடைகள் நாலு சொல்லுங்க? படம் பார்த்த தியேடர் பெயர் என்ன?

    ReplyDelete
    Replies
    1. கொடைக்கானல் டெம்பரேச்சர் எங்க பயணத்தின்போது 18 ஆக இருந்திருக்கும். தெருக்களின் பெயரெல்லாம் கவனிக்கலையே ஸார். ஏரியைச் சுத்த உபயோகிச்ச சைக்கிள் ஹெர்குலிஸ் மேக். குடிசைகளை எண்ணலை? வேனில் மூன்று பேர் அமரும்படியான இருக்கைகள் நான்கும், சைடில் ஒருவர் அமரும்படியாக மூன்றும் ஆக 15 பேருக்கான இருக்கைகள் இருந்தன. ரதசாரதிக்கு இரண்டு குழந்தைகள் என்றார். கண்ணில் பட்ட கடைகள மனசுல பதிச்சுக்கலை. படம் பார்த்த தியேட்டரின் பேர் வாயிலயே நுழையல. அப்புறம்ல மனசுல நிக்க?
      -ஒரு அப்பாவிப்புள்ள ஊரச் சுத்திட்டு வந்தா இப்படியா கேள்வி கேட்டுக் குடாயறது அப்பா ஸார்! அவ்வ்வ்வ்! ஏதோ பத்துக்கு நாலு பழுதில்லாம பதில் சொல்லிட்டேன். மீனப் பாத்தாலே உங்களுக்கு கொழுப்பு ஏறுதுன்னா... சாப்பிட்ட எங்களுக்கு? ஹி.. ஹி...!

      Delete
    2. ஓகே.. பாஸ் பண்ணிட்டீங்க போங்க.

      Delete
  18. //தன் சந்தோஷத்தையே பெரிதாக நினைக்கும் தமிழினத்தின் அருங்குணத்தை//

    தமிளன் வால்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. வந்த கோபத்துல இப்படித்தான் கத்தத் தோணிச்சு எனக்கும். தலைவர் வேற ‘போனதடவை நான் வந்தப்ப இன்னும் அதிகமா இருந்திச்சு. இப்பப் பரவால்ல, கொஞ்‌சம் கம்மியாயிருக்கு’ என்று சொல்லி அதிரவெச்சார். என்னத்தச் சொல்ல...! மிக்க நன்றி ஸார்!

      Delete
  19. சோத்துப்பாறை பரதேசி செட், அருவி என களை கட்டிய பகிர்வு மகிழ்சியாக பயணித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்‌ச்சியாக உடன் பயணித்த மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  20. பரதேசி குடிசைகள் செட்- இயற்கை அழகோடு பங்களாவை விட அழகா இருக்கு! கொடைக்கானல் முடிஞ்சிட்டதா.. பயணக்கட்டுரை சூப்பர். சுவாரஸ்யமாக பயணிக்க வைத்தீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமாக பயணிக்க வைத்தேன் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி!

      Delete
  21. நானும் இந்த கோடைக்கு, கொடைக்கானல் போயிட்டு வந்துட்டேன் உங்க மூலமா...

    சுவாரஸ்யமான தொடர்.....

    இன்னும் ஒரு பாகம் தேத்துற மாதிரி ஏதாவது விஷயம் இருக்கா? ஹி..ஹி...

    ReplyDelete
    Replies
    1. விஷயம் எதும் இல்லை நண்பா. ஆனா தொடர்ல சேக்காத சில கொடைக்கானல்ல எடுத்த படங்களும், சென்žஸார் செய்யப்பட்ட சில படங்களும் இருக்கு. அத வெச்சே ஒரு பதிவத் தேத்தலாமான்னு யோசனை. சுவாரஸ்யமான தொடர் எனக்கூறி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  22. பயணக்கட்டுரை நன்றாக இருக்கின்றது.ஆனால் ஏரியை சுற்றிய இளைஞன்(??) பொரித்த மீனின் படத்தைப் போட்டு நடுராத்திரயில் வாயூற வைத்துவிட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. அடாடா... மீன் உங்களுக்குப் பிடித்த உணவா? குட்! பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. அச்சச்சோ, இந்தப் பதிவுக்கும் லேட். அதுக்குள்ள முடிஞ்சிருச்சா? இதுவரை கொடைக்கானல் போகாதவர்களுக்கு போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருக்கும். போனவர்களுக்கு உங்கள் விமர்சனம் மனத்திரையில் மீண்டும் கொடையை படம் பிடித்து காட்டியிருக்கும். எல்லாவற்றையும் விட உங்க அபூர்வ புகைப்படங்கள் (ஏரியை சுற்றிய வாலிபன்) அருமை..

    ReplyDelete
  24. ஆனாலும் இவ்வளவு குடுகுடுனு ஓடி இருக்க வேணாமோனு தோனுது சார்! கொஞ்சம் மெதுவா நடந்து வந்து அடுத்த பகுதியில முடிச்சு இருக்கலாமே! மூனாவது நாள் ரொம்ப சீக்கிறமா முடிஞ்சது போல ஒரு ஃபீல்! ஆனாலும் இதுவும் ஒரு மாதிரி ஸ்வாரஸ்யமாத்தான் இருந்துச்சு! சீக்கிறம் பாண்டிச்சேரி பயனக்கட்டுறையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்! அப்பறம், இந்த கடைசியில குடுத்து இருக்க மேட்டர் இருக்கே, அதுதான் சார், பிடித்துத் தள்ளி விட்ட தி.கொ.போ. சீனுவுக்கும், வி.ஓ. சுடர்விழிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்! /// சீனு சார் ஓகே. நிஜமாலுமே அவர் உங்கள தள்லிவிட்டாரா இருக்கும்! ஆனா நான் எதுவும் சொன்னது போல தெரியலையே! எதுக்கும் அந்த சுடர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்கங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. குடிமகன்கள் உடைத்துப்போடும் பாட்டில்களால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் காட்டில் வாழும் மற்ற உயிர்களுக்கும்தான் எவ்வளவு தொல்லை...
    இன்றுதான் நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் 7 எபிசோட்களையும் படித்துவிட்டேன். சுவாரஸ்யமான பயணக்கட்டுரை! நன்றி!

    ReplyDelete
  26. இனிய வணக்கம் நண்பரே...
    அந்தக் குளிரில்..
    மிதிவண்டியில் சுற்றி வருவது
    எவ்வளவு சுகம்...
    நானும் உங்ககூட டபுள்ஸ் வந்தது போலவே இருந்தது..

    ReplyDelete
  27. ஆஹா..மிதிவண்டி கூட மிதிக்கிறீங்களா?

    ReplyDelete
  28. கணேஷ்,

    நீங்கள் எப்போதிலிருந்து மீன் சாப்பிட ஆரம்பித்தீர்கள் :-(

    ReplyDelete
  29. அது கடல் வாழைக்காய் இல்லையோ!!!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடுங்க அருவாள துளசி டீச்சர் :-)

      Delete
  30. அடடா.. கொ.கா போயும் போட்டிங் போற நல்ல ஜாலியான ச்சான்ஸை விட்டுட்டீங்களே.

    சைக்கிளிங் கூடவே குதிரை ரைடும் இருந்திருக்குமே.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube