Wednesday, May 22, 2013

கமல் மாறி விட்டா(ரா)னா?

Posted by பால கணேஷ் Wednesday, May 22, 2013
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்குக் குளறியது. கமலஹாசனுக்கும் தூக்கம் வந்துவிட்டதா அல்லது நாள் முழுவதும் ஷுட்டிங் செய்த அலுப்பா என்று தெரியவி்‌ல்லை... சலிப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். குழந்தைக்கு வசனம் சரியாக வந்தவுடன் கூப்பிடுமாறு சொல்லிவிட்டு ஒரு சோபாவில் சாய்ந்து கொண்டான்.

டைரக்டர் ஜெமினி சற்றும் சலிப்பில்லாமல், கோபம் கொள்ளாமல் குழந்தைக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்- குழந்தைக்குச் சமமாக மண்டியிட்டுக் கொண்டு! இந்தக் காட்சியை சலிப்புடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த கமலின் முகம் திடீரென்று மலர்ந்தது. சட்டென்று எழுந்துவந்து குழந்தையை உற்சாகப்படுத்தி, அதற்கு வசனம் பேச வரும்வரை பொறுமையுடன் இருந்து காட்சியை முடித்துக் கொடுத்தான். ‘‘ஏன் இந்தப் புத்துணர்ச்சி?’’ என்று கமல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

பதில்: புத்துணர்ச்சி அல்ல, குற்ற உணர்ச்சி! குழந்தை நட்சத்திரத்தைப் பார்த்து முகம் சுளித்த கமல், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நட்த்திரமாக இதேபோல் பல இரவுகளில் ஷுட்டிங்கில் வசனங்களைக் குழறியிருக்கிறான். சக நடிகர்கள் யாரும் முகம் சுளித்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. மாறாக இன்முகத்துடன் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர். இதே ஜெமினிகணேசன் ‘அங்கிள்’ இதே கனிவுடன் இதேபோல் முகம் சுளிக்காமல் வசனம் சொல்லிக் கொடுத்த ஞாபகம் கமலுக்கு வந்துவிட்டது. அன்று இனிமையாகப் பேசி கொஞ்சிக் கொஞ்சி நடிக்க வைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரம் கமல் இன்று பெரியோரின் ஆசியால் வளர்ந்துவிட்டான்.

அவனை வளர்த்தவர்கள் அதே அன்புடனும் குணத்துடனும் இருக்கிறார்கள். கமல் மாறிவிட்டானா? கர்வமா? எதுவாக இருந்தாலும் திருத்தப்பட வேண்டிய, திருத்தப்படக் கூடிய தவறுகள்தான். அவன் வந்த வழியை அவன் திரும்பிப் பார்த்தால் அவன் தவற மாட்டான். அது நிச்சயம். ஆனால் அதையும் மீறி அவன் கர்வம் கொண்டால் திருத்த வேண்டியது அவனை உருவாக்கிய பெரியோரின் பொறுப்பு.
அன்றைய கமலஹாசன்கள்! (கல்லூரி நாட்களில் என் ஃபேவரைட்)
கரம் முழுவதும் "Enter the Dragon" வியாதி பரவியிரு்கிறது. என் வயதுள்ள முக்கால்வாசிப் பேர் கராத்தே கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் முஷ்டி கறத்து, காய்த்துப் போய் விடுகிறது. இதுதான் அவர்கள் கராத்தே வீரர் என்பதற்கு அடையாளம். மற்றபடி எல்லாரையம் போலத்தான் இருக்கிறார்கள். ஒரு கராத்தேக்காரர் அடிப்பதற்கு முன்னால் ‘கீயா’ (kiah) என்ற ‌போடும் ச்த்தமே போதும் எதிரியைப் பயமுறுத்த.

கராத்தே வகுப்புக்கு என் நண்பருடன் சென்றிருந்தேன் வேடிக்கை பார்க்க. நண்பர் மெலிந்தவர். சாமானியர். சென்னை டாக்சி/ஆட்டோ டிரைவர்களிடம்கூட அவருக்குக் கோபம் வராது. அவ்வளவு சாது. கராத்தே வகுப்பில் மாணவர்கள் செய்யும் சத்தத்தைக் கேட்டு மிரண்டு விட்டார். ‘‘ஏன் தம்பி, இதுக்குப் பேரு கராத்தேயா, இல்ல, கத்தறேயா? இப்படிக் கத்தறாங்களே?’’ என்றார். ‘‘என்ன, கேலி பண்றீங்க? முடிஞ்சா அவங்க செய்யற மாதிரி செய்யுங்களேன் பார்ப்போம்’’ என்றேன். ‘‘செய்யறது பெரிய கஷ்டமில்‌லே, செஞ்சிடுவேன். ஆனா இப்ப வேணாம். என்னால இவங்க மாதிரி கத்த முடியாது. தொண்டை சரியில்லை’’ என்று மழுப்பிவிட்டார்.

சினிமா ஸ்டண்ட்காரர் ஒருவர், ‘‘இந்தக் கராத்தே எல்லாம் நம்ம தஞ்சாவூர் குத்துவரிசையும், கேரளத்துக் களரியும் ஒண்ணாச் சேர்ந்ததுதான். இந்தியாவிலிருந்து சைனா போன ஒரு புத்தபிட்சு இங்கேருந்து கொண்டுபோன வித்தைதான் கராத்தே’’ என்று சம்பந்தமில்லாமல் பழம்பெருமை பாடுகிறார். எனக்குத் தெரிந்த உண்மை: பதினேழாம் நூற்றாண்டில் ‘ரூ க்யூ’ (Ryu Kyu) என்ற ஒரு தீவுவாசிகள் ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்தார்கள். அந்தத் தீவின் மக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜப்பானிய அரசாங்கம் சட்டம் போட்டிருந்தது. ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஆயுதுமில்லாத தற்காப்புக் கலைக்காகவும் இத்தீவு மக்கள் கண்டுபிடித்த போர் முறை கராத்தே. ‘கரா’ என்றால் வெறுமை. ‘தே’ என்றால் கை. வெறுங்கை - கராத்தே.

ஏழெட்டுச் செங்கல்களை ஒன்றாக அடுக்கி, தலையாலும் கையாலும் உடைக்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன். ஐந்தில் வளையாததைக்கூட வளைக்கிறார்கள் கராத்தே ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!

*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

- மேலே கொடுக்கப்பட்டிருப்பவைகள் இன்றைய கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் (அன்றைய வளரும் நடிகன்) கமல் 1975ம் ஆண்டு ‘குமுதம்’ இதழில் எழுதி வந்த ஒருபக்கக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

58 comments:

  1. ///நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன்///

    வீட்டுல டார்ச்சர் ஜாஸ்தியா என்ன?

    ReplyDelete
    Replies
    1. கமலைத்தான் கேக்கணும். ஹி... ஹி...!

      Delete
  2. கமல்ஹாசன் என்றைக்குமே சுத்த... போலிருக்கிறது. கராத்தே ஜப்பானில் முளைக்கவில்லை. சைனாவில் முளைத்தது. அதுவும் இங்கிருந்து போன போதிவர்மர் கொண்டு போன விதைகளிலிருந்து.. அவருடைய ஸ்டன்ட்காரர் சம்பந்தமில்லாமல் பழம்பெருமை பாடவில்லை, வரலாற்றைச் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அப்பா ஸார். தவறான தகவலை அப்போதே எழுதியிருக்கிறார் என்பதுதான் இதை நான் பகிர விரும்பியதன் உள்நோக்கம். (மற்றொன்றும் இருக்கிறது... அது பின்னே).

      Delete
  3. சுவையான விருந்து !

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  4. வெறுங்கை விளக்கம் சூப்பர்...

    அவருக்கு ஏகப்பட்ட நல்ல வாத்தியார்கள் கிடைத்தது அதிர்ஷ்டம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே. மிக்க நன்றி!

      Delete
  5. நிறைய தவறுகள் செய்து அதில் இருந்து கற்றுக்கொண்டவர் கமல்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் பாலா. கமல் மட்டுமென்ன.. நாமனைவருமே அப்படித்தானே! மிக்க நன்றி!

      Delete
  6. கராத்தே யா...கத்தறேயா....சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. // கராத்தே தெரியாதவர்களிடம்!// ஹா ஹா ஹா மொத்த பதிவிலும் இந்த ஹாஸ்யத்தை வெகுவாய் ரசித்தேன்...

    ஆமா இது கமல் எழுதினதா, இல்ல அவர பத்தி வேற யாரும் எழுதினதா

    ReplyDelete
    Replies
    1. கமலே தான் சில வாரங்கள் குமுதத்துல எழுதி வந்தார் சீனு. ரசித்தமைக்கு நன்றி!

      Delete
  8. ஏழெட்டுச் செங்கல்களை ஒன்றாக அடுக்கி, தலையாலும் கையாலும் உடைக்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன். ஐந்தில் வளையாததைக்கூட வளைக்கிறார்கள் கராத்தே ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!

    ஐயோ அம்மா காப்பாற்றுங்கள் அடிக்க முன்பே கத்துவோமில்ல :) சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஐடியா உங்களோடது. ரசித்துப் படித்தமைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  9. பழையை கட்டுரையை இன்றையை நிலையில் இருந்து படிப்பது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. I am unable to make it out the reason behind the post on Kamalhassan. May be I do not know what went wrong with Sri Kamalhassan of late.
    You are learning karate at this age. It is great. Of course, there is no age limit for leaning anything new. Keep it up. Nice post.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ... பதிவுல ரெண்டு மேட்டருமே கமல் எழுதினதுதான். கராத்தே கத்துக்கிட்டது அவர்தாங்க. நானில்ல... மிக்க நன்றி!

      Delete
  11. கராத்தே பற்றிய வரலாறு சுவாரஸ்யம். எனக்கு இதுவரை தெரியாது.
    கராத்தே கற்றுக் கொளவதற்கு வாழ்த்துக்கள்.....
    கராத்தேயின் advantages படித்தேன் . ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்களும் நான் கத்துக்கறதா நினைச்சுட்டீங்களா? ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  12. கமல் பற்றிய பதிவு அருமை! தவறு செய்யாதவர் யார்??? ஆனால் அதை உணர்ந்து திருந்தும் திருத்திக்கொள்ளும் மனமே சிறந்ததுதானே...

    கராத்தே கற்க வயதொண்ணும் பிரச்சனை இல்லை. மனமுண்டானால் மார்கமுண்டு... இங்கு பெண்களும் கற்கிறார்கள். என் வீட்டுக்கருகில் கராத்தே கற்றுக்கொடுக்கும் பள்ளி உண்டு. மாலை நேரங்களில் அந்தப்பக்கமே போக பயமாக இருக்கும். கூச்சலால்தான்...:))).

    நல்ல பதிவும் பகிர்வும். நன்றியும் வாழ்த்துக்களும்!...

    த ம. 7

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. // இன்றைய கலகநாயகன்.//

    என்ன பால கணேஷ் சாரே.... என்னா ந்யூஸ் விசயம் கேட்டுகிட்டு அவர கலக நாயகன் அப்படின்னு ??

    கலகத்துக்கு காரணம் ஆன நாயகன் என்னும் அர்த்தத்தில் இருக்குமோ ? புரியல்லையே...

    கராத்தேன்னு வேற சொல்றீக.... யாரோட கராத்தே ? சஸ்பென்ஸ் கூடுதே...

    இந்த ஒரு கோடி நிகழ்ச்சி வந்தப்பறமே ஒரே சஸ்பென்சா இருக்குதுல்ல...


    போதாக்குறைக்கு அப்பாதுரை சார் வேர வந்து இன்னொரு சஸ்பென்ஸ்.

    // கமல்ஹாசன் என்றைக்குமே சுத்த... போலிருக்கிறது.//

    சுத்த .... என்னா ?

    எதுனாச்சும் நடக்கட்டும்.
    கமலுக்கு த்ருஷ்டி சுத்தி போடணும்.
    ஆளுக்கு ஆள் கரிச்சுக் கொட்டறாக...

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. கமலுக்கு நல்லா சுத்தி போடணும்.. கரெக்டு.

      Delete
    2. எவ்ளவ் பெரிய சுத்திய அவர் தாங்குவார்ன்னு தெரியலியே... ஹி.. ஹி... சமீபத்துல விஸ்வரூபம் கலாட்டாவுனால தான் அவரை ‘கலகநாயகன்’னு அழைச்சேன் சூரித்தாத்தா! மிக்க நன்றி!

      Delete
    3. சுத்திக்கு என்னாவும்னு கொஞ்சமாவது கரிசனமிருந்தா  இப்படி சொல்வீங்களா? சுத்தி தானேன்னு இளப்பமா போச்சு இல்லே?

      Delete
  14. Cut, Copy , Paste ....! What happened naaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa! என்ன நடக்குதுங்குறேன் ....?

    ReplyDelete
    Replies
    1. தம்பீ... 1975ல வந்த பத்திரிகைலருந்து கட் காப்பி பேஸ்ட் பண்ண முடியுமா? அந்த வேலைய நான் பண்ண மாட்டேன்ப்பா. நானே டைப் பண்ணினதுதான். பத்துககு ஒரு பதிவுல பழமையை நான் வெளியிடறது வழக்கம்தான்ப்பா. மிக்க நன்றி!

      Delete
  15. I also want to know the entire sentence of Appadurai. Mr.Appadurai will you please complete the sentence without leaving any blank space in between so that I can understand why this post by Shri Balaganesh

    ReplyDelete
    Replies
    1. சுத்த அரைவேக்காடுனு சொல்ல வந்தேன்.. மத்தபடி இந்தப் பதிவுக்கு ஏதாவது பின்புலம் இருக்குதானு உண்மையிலேயே தெரியாது.. நம்ம கணேஷ் சாருக்கு விஷயம் எதுவும் கிடைச்சிருக்காது... பாத்தீங்களா மோகன் சார்.. மறுபடி என் வாயைக் கிண்டுறீங்களே.. நியாயமா?

      Delete
    2. Thanks for your reply. If Ganesh sir is not having any information, why can't you share with us in case you know about the background of this post

      Delete
    3. பொட்டுல அடிச்ச மாதிரி விஷயத்தை உடைச்சுட்டீங்களே அப்பா ஸார்...! ரெண்டு சிறுகதைகள் எழுதி பாதியில நிக்கிது. அதான் அவசரத்துக்கு இந்த பழைய மேட்டரைப் போட்டேன். அதான் நான் சொன்ன 2வது உள்நோக்கம்! மிக்க நன்றி!

      Delete
    4. ஹிஹிஹி.. சும்மா டமாசு.. உங்க கிட்டே இல்லாத விசயமா? வ்வ்வ்.
      கதையைக் கொணாங்க படிக்கிறோம்.
      (சரி.. நாட்டுல கமலுக்கு இத்தனை விசிறிங்களா...!)

      Delete
  16. சுவாரஸ்யமான விஷயங்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பழமையை சுவாரஸ்யம் என்று ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  17. பழையது ஆனாலும் சுவைதான்

    ReplyDelete
    Replies
    1. சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. ஒன்றிரண்டு பேர் கராத்தே நீங்கதான் கத்துக்கிறீங்கன்னு நினைச்சிட்டாங்க போல..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க உஷா! அதான் எனக்கும் வியப்பாயிருக்கு. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  19. சுவாரஸ்யம்.

    கராத்தே அடிவாங்க நாங்கள் தயாரில்லை:))))))

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  20. கமலஹாசன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. இல்ல... பல சமயம் தப்பாவும் இருக்கும் ஸ்ரீராம். அப்பா ஸார் கரெக்டா உடைச்சிருக்காரே பாக்கலையா? மி்க்க நன்றி!

      Delete
  21. கராத்தே பற்றிய விளக்கம் அருமை..

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  22. அது என்ன இன்றைய கலகநாயகன் ஓ விஸ்வரூபம்!ம்ம் பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. அதே... அதே... ரசித்த உங்களுக்கு நன்றி தம்பி! (அதென்ன புதுசா ஸார்? நான் உங்க பேட்டைக்கு வரலைன்னு கோபமா?)

      Delete
  23. Arumai Jok...என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம நிறை நன்றி!

      Delete
  24. அவர் பேசறது பாதி புரியாது..... எழுதியதாவது புரிஞ்சதே!

    ReplyDelete
    Replies
    1. அவரோட வழவழா கொழகொழா பேச்சு எனக்கும் தொ.‌கா.வுல பாக்கறப்ப எரிச்சல் தரும். எழுதியதை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  25. அந்தக் கால சஞ்சிகைகள் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் போல இருக்கே.கமலின் எழுத்துக்கள் நன்றாக தான் இருக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஆம்... நிறைய ஸ்டாக் இருக்கு பிரதர்! ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  26. அவரோட வழவழா கொழகொழா பேச்சு எனக்கும் தொ.‌கா.வுல பாக்கறப்ப எரிச்சல் தரும். எழுதியதை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
    ஹா ஹா//ரசித்தேன்.என் மனசிலிருந்து எடுத்த வார்த்தைகள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube