Tuesday, April 30, 2013

கொ(கோ)டைக் கா(ண)ல் - 6

Posted by பால கணேஷ் Tuesday, April 30, 2013
வேனிலிருந்து இறங்கியதும் எதிரே பசும் புல்வெளி சூழ்ந்த ஒரு மேடான பிரதேசமும், அங்கே ஒரு கோயிலும தெரிந்தது. ‘‘இதான் பூம்பாறையா பாஸு’’ என்று நண்பரிடம் நான் கேட்டதற்கு, வேனிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த ஓட்டுனரிடமிருந்து பதில் வந்தது. ‘‘இல்ல ஸார். பூம்பாறைக்கு பாதி தூரம்தான் வந்திருக்கோம். இங்க நீங்க பாக்கறது மகாலக்ஷ்மி கோயில். அழகா இருக்கும், எல்லாரும் போய்ப் பாத்துட்டு வரட்டுமேன்னுதான் நிறுத்தினேன்’’ என்றார். ‘‘ரைட்டுங்க. பூம்பாறைல...

Saturday, April 27, 2013

மொறுமொறு மிக்ஸர் - 17

Posted by பால கணேஷ் Saturday, April 27, 2013
பார்த்தது : ‘‘ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துல ஒரு காட்சி வரும். வில்லன் ஒரு சர்வாதிகாரியான மன்னன். அவரோட அரசவையில வைத்தியரான எம்.ஜி.ஆரை கைது செஞ்சு கொண்டு வருவாங்க. சர்வாதிகாரி, தைரியமாப் பேசற எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘என்னோட அதிகாரம் என்னன்னு உனக்குத் தெரியுமா/’ என்பான். அதற்கு அவர், ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? - அது காலத்தை வென்று நிற்பதற்கு!’ என்று பதிலளிப்பார். என்னைய மாதிரி வாத்தியாருங்க பசங்களுக்கு மணிக்கணக்கா பாடம் சொல்லி சிலப்பதிகாரத்தோட...

Thursday, April 25, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 5

Posted by பால கணேஷ் Thursday, April 25, 2013
சென்னையில் தினம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால், இரவு தாமதமாகப் படுத்தபோதிலும், நல்ல அசதி இருந்தபோதிலும் காலை 6 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. மற்ற ரூம்மேட்கள் எழாத வண்ணம் கதவு திறந்து சோம்பல் முறித்தவாறு ஸிட்டவுட்டில் வந்து பார்த்தால்... ஸர்ப்ரைஸ் விசிட்டாக நேற்றெல்லாம் காணாமல் போயிருந்த மிஸ்டர் சூரியபகவான் தரிசனம் தந்தார்! உற்சாகமாய் அறையினுள் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியே வர, பக்கத்து அறை நண்பர்கள்...

Saturday, April 20, 2013

திருமதி தமிழ்! - சுடச்சுட விமர்சனம்!

Posted by பால கணேஷ் Saturday, April 20, 2013
‘மின்னல் வரிகள்’ல சினிமா விமர்சனம்... அதுவும் புதுசா வந்த படத்துக்கு சுடச்சுட விமர்சனமான்னு ஆச்சரியப்படறீங்களா? அதுக்கு்க் காரணகர்த்தா நம்ம ‘மெட்ராஸ்பவன்’ சிவகுமார் தாங்க! போன வாரமம் நம்ம சீனு போன் செஞ்சு, ‘‘சனிக்கிழமை மதியம் நீங்க ஃப்ரீயா? நீங்க, நான், ‘கரைசேரா அலை’ அரசன், ‘அஞ்சாசிங்கம்’ செல்வின், ஸ்கூல் பையன், ஆரூர் மூனா செந்தில் எல்லாருமா சேர்ந்து படம் பாக்கலாம்னு ‘மெட்ராஸ் பவன்’ சிவா சொல்றாரு. வர்றீங்களா? டிக்கெட் வாங்கிரட்டுமா?’’ என்றார்....

Thursday, April 18, 2013

‘கொசு’வநாத புராணம்!

Posted by பால கணேஷ் Thursday, April 18, 2013
மிஸ்டர் ‘கொசு’வை உங்களுக்குத் தெரியுமா? தினம் இரவில் உங்கள் கைகளிலோ அல்லது பிற பாகங்களிலோ தன் ஆன்டெனாவால் இன்ஜெக்ஷன் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிற அற்ப ஜந்துவைச் சொல்லவில்லை நான்! விஸ்வநாதன் என்று பெயரிடப்பட்டு, விசு என்று சுருக்கி அழைக்கப்பட்டு, பிறகு நண்பர்களால் ‘கொசு’வநாதன் என்று நாமகரணம் சூட்டப்பட்டு, அதுவும் சுருங்கி இப்போது விசுவுக்குப் பதில் கொசு என்று அழைக்கப்படும் மே.மாம்பலம் விஸ்வநாதனைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். அவர் ஏன் அப்படி...

Monday, April 15, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 4

Posted by பால கணேஷ் Monday, April 15, 2013
எங்கள் குழுவில் ஒருவர் பார்ட்டைமாக இசைக் குழுவில் வாசிப்பவர்/பாடுபவர் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆசாமி இரண்டு சிறிய டிரம்ஸையும் குச்சிகளையும் கொண்டு வந்திருந்தார். தலைவர் அவரைப் பார்த்து, ‘‘டேனியல்! நீங்க பீட் அடிங்க. நம்ம ஆளுங்க ஒவ்வொருத்தரா டான்ஸ் பண்ணுவாங்க இப்ப...’’ என்றார். என்னது...? டான்ஸா, நாமளா? பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு. தலைவரிடம் ‘அப்ஜெக்ஷன் மை லார்ட்’ என்று கை உயர்த்தி மறுக்க நான் முயல்வதற்குமுன் நண்பர் ட்ரம்ஸை அடிக்க...

Friday, April 12, 2013

சரிதா, லட்டு தின்ன ஆசையா?

Posted by பால கணேஷ் Friday, April 12, 2013
புதிய வீட்டிற்குக் குடி வந்த ஒருமாத காலமாக வீட்டை ரசித்து, அதன் புகழ் பாடிக் கொண்டிருந்தாள் சரிதா. ‘‘அடடா... என்னமா காத்து வருது இங்க ஜன்னலத் திறந்தா...! அந்த வீட்ல ஜன்னலத் திறந்தாலும் காத்து வருவேனாங்கும்! அங்க இங்க அலையத் தேவையில்லாம எல்லாக் கடைகளும் பக்கத்துலயே அமைஞ்சிருக்கு...  இதல்லவா வீடு’’ என்றாள். அவளின் சந்தோஷத்துககு உலை வைககும் விதமாக வந்து சேர்ந்தது அந்தக் கடிதம்! ‘‘அடேய் கணேஷ்...! நீ செய்த பாவத்துக்கு விலை கொடுக்கத் தயாராக இரு...!...

Wednesday, April 10, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 3

Posted by பால கணேஷ் Wednesday, April 10, 2013
வேன் சற்று தூரம் வந்ததும் தூண்பாறைக்கு 8 கிலோமீட்டர் இருப்பதாகச் சொல்லியது போர்டு. வழக்கம் போல பாட்டுக் கச்சேரியுடன் வேன் செல்ல, சற்று நேரத்திலேயே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். ‘‘இந்த இடத்துக்கு பைன் மரக் காடுகள்னு பேரு ஸார்! இறங்கிப் பாத்துட்டு வாங்க’’ என்றார். ‘‘இந்த ஊசியிலைக் காட்டை 1906ம் ஆணடில் பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலைப் பசுமையாக்கும் முயற்சியில் மலைப் பகுதியில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்‌த்தார். இது இப்போது ஒரு...

Monday, April 8, 2013

என் முதல் நாடக அனுபவம்

Posted by பால கணேஷ் Monday, April 08, 2013
இந்தத் தலைப்பைப் படிச்சதும், நான் முதன்முதலா நாடக மேடையில நடிச்ச அனுபவத்தைச் சொல்லப் போறேன்னு நீங்க நினைச்சிருந்தீங்கன்னா... ஸாரி, உங்களுக்கு பாஸ் மார்க் கிடையாது! இது நான் முதன்முதலா நாடகம் பார்த்த அனுபவம்! ஹி... ஹி... அதப்பத்திச் சொல்றதுக்கு முன்னாடி... ஆதியும் அந்தமுமில்லாத கால வெள்ளத்திலே சற்றுப் பின்னோக்கிப் பயணிக்கும் ஓடத்தில் என்னுடன் வரும்படி நேயர்களை அழைக்கிறேன். (மீண்டும் பொ.செ. படிக்க ஆரம்பிச்சதோட பாதிப்பு.) நான் பள்ளி மாணவனா இருந்த...

Friday, April 5, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 2

Posted by பால கணேஷ் Friday, April 05, 2013
மு.கு.1 : சென்ற பகுதியில் இரவில் ஒரு அதிர்ச்சி என்று நான் குறிப்பிட்டதை மாலையில் என்று திருத்தி வாசிக்கவும். மு.கு.2 : இது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.மு.கு.3 : அப்படி அவர்கள் சந்தேகப்பட்டதால் கொடைக்கானல் படங்களை மட்டும் போடலாம்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube