
தொலைக்காட்சிகளை ‘தொல்லைக்காட்சிகள்’ என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபணையிராது. ஆனால் என் விஷயத்தில் ‘கொலைக்காட்சி’ என்றே சொல்லலாம் போல எனக்குள் ‘கொலவெறி’யைக் கிளப்பி விட்டது சமீபத்தில். எங்கள் தெருவிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவி ஜுபிடர் டிவி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கி வந்து விட்டாள். அவ்வளவுதான்... தானும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பரிசு வாங்கி விட வேண்டுமென்று தீர்மானமே (லேடீஸ் சைகாலஜி!) செய்து விட்டாள் சரிதா....