Sunday, January 29, 2012

மொறுமொறு மிக்ஸர் - 2

Posted by பால கணேஷ் Sunday, January 29, 2012
முன்குறிப்பு : இந்தப் பதிவின் நடுவில் பெண்கள் படிக்கக் கூடாத ஒரு ஜோக்கை வெளியிட்டிருக்கிறேன். தங்கைகள், அக்காக்கள், தோழிகள் எல்லாருக்கும் அதைப் படித்தால் கோபம் வரும் என்பதால் தாண்டிச் சென்றுவிடும்படி வேண்டுகிறேன். ================================================ ராஜுவும் லதாவும் விரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தித்தாளின் இரு முனைகளில் நிற்கிறார்கள். ராஜு கை நீட்டினால் லதாவைத் தொட முடியவில்லை. லதா தன் கையை நீட்டி ராஜுவைத் தொட முடியவில்லை. இது எப்படி...

Wednesday, January 25, 2012

என் கிறுக்கல்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, January 25, 2012
அன்று வெறிகொண்ட கூட்டம் ஒன்று     குரல் உயர்த்திக் கூச்சலிட்டது! நெறிதவறி நடக்கிறது அரசாட்சி     மன்னர் இறந்தால் அவர்மகன் பிறவியினால் தகுதி வருமோ?     ஒழித்திட வேண்டும் இம்முறையை பிறையென வளர்ந்து வாழ்ந்திட     வேண்டும் ‌எமக்கு மக்களாட்சி! இன்று வெறிகொண்ட கூட்டம் ஒன்று     குரல் உயர்த்திக் கூச்சலிடுகிறது! நற்குணமிக்க தலைவா! வாழிநீயென்று     அருகினில் தலைவரின்...

Sunday, January 22, 2012

ஞாபக நதிக் கரையினிலே...

Posted by பால கணேஷ் Sunday, January 22, 2012
நேரத்தின் மதிப்பை உணராத பெரும்பாலனவர்களை நான் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை என்னுடைய நேரத்திற்குக் கொடுக்கும் மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்புக் கொடுப்பேன்.  ‘‘இதோ அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’ என்று போன் செய்யும் என் நண்பன் கால் மணி நேரம் கழிந்து வந்து சேர்கிறான். தாமதமாய் வந்துவிட்டோமே, அடுத்தவனின் நேரத்தை வீணடித்து விட்டோமே என்று எந்த உணர்வுமின்றி இருக்கிறான். ’அஞ்சு நிமிஷம்’ என்பது பலரின் அகராதியில் ‘கால் மணி நேரம்’ அல்லது ‘அரை மணி நேரம்’ என்று அர்த்தமாகிறது....

Friday, January 20, 2012

நடை வண்டிகள்: முன்னுரை

Posted by பால கணேஷ் Friday, January 20, 2012
என் தளத்தில் தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் அனைவரும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். நிறையப் புத்தகங்கள் படிப்பவன் நான் என்பதுதான் அது. நாவல்கள், கட்டுரைகள், சிறு சிறு துணுக்குகள், நகைச்சுவை என்று எந்த வடிவமாக இருந்தாலும் படிப்பதை நேசிப்பவன் நான். தீவிரமான இந்த வாசிப்புப் பழக்கம் எப்போதிலிருந்து என்னைப் பற்றிக் கொண்டது என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன். பள்ளி நாட்களில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. கொஞ்சம்...

Tuesday, January 17, 2012

மொறுமொறு மிக்ஸர்!

Posted by பால கணேஷ் Tuesday, January 17, 2012
‘சின்னச் சின்னப் பூக்கள்’ என்ற தலைப்பில் நான் கொடுத்திருந்த பதிவைப் படித்துவிட்டு, ‘‘மொறுமொறுவென்று மிக்ஸர் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. வாரம் ஒன்று இதுமாதிரி கொடுங்கள்’’ என்றார் நான் மதிக்கும் எழுத்தாளர் (நண்பர்) கடுகு அவர்கள். அவர் விருப்பப்படி  இந்த வார மசாலா மிக்ஸர்: =============================================== முதல்ல ஒரு புதிரோட ஆரம்பிக்கலாம். கீழே நான் கொடுத்திருக்கற ஒன்பது கோடுகளை... | | |  | | |  | | | அப்படியே...

Saturday, January 14, 2012

கேப்ஸ்யூல் நாவல்-4

Posted by பால கணேஷ் Saturday, January 14, 2012
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தில் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக: கொலையுதிர்...

Thursday, January 12, 2012

சின்னச் சின்னப் பூக்கள்!

Posted by பால கணேஷ் Thursday, January 12, 2012
ஒரு சமயம் மகாவிஷ்ணு கைலாயம் சென்றிருந்தபோது கணேசரிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தை கணேசர் சட்டென்று தன் துதிக்கையை நீட்டி விஷ்ணுவின் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் அடக்கிக் கொண்டார். விஷ்ணு எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் வினாயகர். விஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது. உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில்...

Monday, January 9, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-3

Posted by பால கணேஷ் Monday, January 09, 2012
‘‘இன்னொரு கொலைக்காகத்தான் என்னை போலீஸ் தேடுது’’ என்று அவன் சொன்னதும் என் தொண்டை உலர்ந்து போக, பயத்துடன் அவனை ஏறிட்டேன். ‘‘உங்க மனசுல இப்ப என்ன ஓடிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்! எங்க இவன் நம்மளையும் போட்டுத் தள்ளிடுவானோன்னு நினைக்கறீங்க... சரியா?’’ என்று சிரித்தான் அவன். ‘ஙே’ என்று விழித்தபடி தலையசைத்தேன். ‘‘சேச்சே... இங்கருந்து நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் சரணடையற முடிவோடதான் வந்திருக்கேன் பயப்படாதீங்க ஸார்...’’ என்றான் சிரித்தபடியே. ‘‘சரி!...

Friday, January 6, 2012

நான் + ஒரு கொலைகாரன்-2

Posted by பால கணேஷ் Friday, January 06, 2012
அதிர்ச்சியில் சற்று நேரம் எனக்குப் பேச்சு வரவில்லை. பின் சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டேன். ‘‘ஏன் அண்ணனைக் கொலை பண்ணீங்க?’’ ‘‘சின்ன வயசுலருந்தே ஏற்பட்ட பிளவு ஸார் அது. நான் படிப்புல கொஞ்சம் சுமார். ராமன் படிப்புல கெட்டி. நான் அப்பா தர்ற பாக்கெட் மணியெல்லாம் செலவழிச்சு காலி பண்ணிடுவேன். ஆனா ராமன் அதுல பாதியச் செலவு பண்ணிட்டு பாதியச் சேத்து வெப்பான். இப்படி எல்லா விஷயத்துலயும் எதிரெதிர் பர்ஸனாலிட்டிகளா இருந்தோம். எங்கப்பாவுக்கு என்னைவிட ராமன்...

Wednesday, January 4, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-1

Posted by பால கணேஷ் Wednesday, January 04, 2012
ஒரு மனுஷனுக்கு நேரம் சரியில்லைன்னா அது எப்படியெல்லாம் சோதனைகளைக் கொண்டு வருது? சனிப் பெயர்ச்சில என்னோட கிரக நிலை சரியில்லைன்னு போட்டிருந்துச்சுன்னு சரிதா சொன்னப்ப, ஜோசியத்தை நம்பற அவளைக் கிண்டலடிச்சேன். ஆனா... எனக்கு வந்த சோதனை இருக்கே... அப்படி என்னய்யா நடந்துச்சுன்னு கேக்கறீஙகதானே... சொல்றேன்: காலை நேரம். அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த நேரம்... காலிங் பெல் ஒலித்தது. சென்று கதவைத் திறந்தேன். வெளியே... கண்ணியமான, விலையுயர்ந்த...

Monday, January 2, 2012

‘‘மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்’’ என்றான் இறைவன். ‘‘மாதங்களில் அவர் மார்கழி’’ என்று காதலியை வர்ணித்தார் கண்ணதாசன். இத்தனை சிறப்பு மிக்க மார்கழி மாதம் பிறந்தபோதே மார்கழிச் சிறப்பையும், ஆண்டாள் கவிதையையும் வைத்து ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சற்றே தாமதமானதில் மார்கழிச் சிறப்பைப் பற்றி பலரும் பதிவிட்டிருந்ததைப் படிததேன் மகிழ்ந்தேன். மார்கழி 17ம் நாளான இன்று நான் மிக ரசித்த ஆண்டாளின் திருப்பாவையில் 17, 18ம் பாடல்களையும், அதன்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube