Sunday, October 23, 2011

‌விக்ரம் நடிக்காத விக்ரம்!

Posted by பால கணேஷ் Sunday, October 23, 2011
ந்தப் பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமான முக்கிய அறிவிப்பு ஒன்று இருக்கிறது. அதைப் பதிவின் கடைசியில் உங்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போது நாம் பேசலாம்:

===================================================================

போன வாரம் சன் மியூசிக்கில் ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலை ஒளிபரப்பினார்கள். மதுரையில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் பார்த்திருந்த ‘விக்ரம்’ படத்தை இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பணிகள் பிஸியாக இருந்ததால் அதை மறந்து விட்டேன்.

இரண்டு நாள் முன்பு நான் வழக்கமாக டிவிடிக்கள் வாங்கும் (பாரிஸ் கார்னரில் இருக்கும்) பாய் கடைக்கு டிவிடி வாங்கப் போயிருந்தேன். நான் செலக்ட் செய்து வைத்திருந்த சில ஆங்கிலப் படங்களின் பெயர்களைச் சொல்லி இருக்கிறதா என்று கேட்டேன். எடுத்துக் கொடுத்தார். அதன்பின்...

பாய்: என்ன சார், இந்த தடவை தமிழ்ப்படம் எதுவும் வேணாமா?

நான்: வேணும் பாய். விக்ரம் படம் கொடு.

பாய்: எந்தப் படம் சார்? சீக்கிரம் சொல்லுங்க. நிறைய கஸ்டமர் வெயிட்டிங்...

நான்: அதான் சொன்னேனேப்பா... விக்ரம் படம் கொடுன்னு.

பாய்: என்ன சார், அவர் நிறையப் படம் நடிச்சிருக்கார். எதன்னு கொடுக்கறது? படம் பேரச் சொல்லுங்க சார்...

நான்: ஐயோ பாய்! படம் பேருதான் பாய் ‘விக்ரம்’. கமல் கூட அதுல...

பாய்: அவ்வ்வ்வ்வ்வ்வ் (டிவிடியைக் கொடுத்து) புண்ணியமாப் போவும். கிளம்புங்க சார்...

எனக்குப் புரியவில்லை நண்பர்களே... நீங்களே சொல்லுங்கள்... பல்பு வாங்கியது நானா, இல்லை பாயா?
 
===================================================================

நான் தினமும் ஆபீசுக்குப் போகும் போதும், வரும் போதும் பஸ்சில் அந்தப் பெண்களைப் பார்ப்பதுண்டு. (பஸ்ஸில் ஏகப்பட்ட பேர் பயணிக்க, நீ பெண்களை ஏன்யா பார்க்கிறாய் என்று யாருங்க அங்க குரல் கொடுக்கறது... வயசுக் கோளாறுதான் ஐயா!) இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கிடைப்பட்ட ஐந்து பெண்கள். அதில் இரண்டு பெண்கள் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டு, அருகருகில் அமர்ந்து கொண்டு, சாக்லேட், பிஸ்கட் பரிமாறிக் கொண்டு நகமும் சதையும் போல இருப்பார்கள். 

இப்போது நான்கைந்து தினங்களாகப் பார்த்தால்... நகமும், சதையும் தனித்தனியாக பஸ்சில் அமர்கின்றன. இவளுடன் ஒருத்தியும், அவளுடன் இரண்டு பேர்களுமாக இருக்கிறார்கள். ஒரு குரூப் முன்புறம் ஏறினால் மற்றொன்று பின்புறம் ஏறுகிறது. சின்ன புன்னகைப் பரிமாற்றம்கூட இல்லை. என் அலுவலகம் இருப்பது ஒரு காம்ப்ளக்சின் இரண்டாம் மாடியில், அவர்களது அலுவலகம் முதல் மாடியில். பஸ்சிலிருந்து இறங்கி ஆபீஸ் போகும் போது மட்டும் மற்றவர்களுக்காக எல்லாமும் சேர்ந்து போகின்றன.

அப்படி என்னதான் நடந்திருக்கும்? பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்? பெண்களுடன் பழகியிராத காரணத்தினால் லேடீஸ் சைக்காலஜி எனக்குப் புரியவில்லை. உங்களில் யாருக்கேனும் புரிந்தால் விளக்குங்களேன்...


===================================================================

ரு மனிதனின் உடலில் இருபத்து நான்கு மணி நேரத்தில் நடக்கும் செயல்கள் என்னென்ன தெரியுமா? ‌சராசரியாக...

* ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 688 தடவை இதயம் துடிக்கிறது!

* ரத்தம் உடலில் பயணம் செய்யும் தூரம் 16 கோடியே 80 லட்சம் மைல்!

* 25 ஆயிரத்து 40 தடவை சுவாசிக்கிறீர்கள். சுவாசிக்கும் காற்றின் அளவு 4.36 கன அடி!

* உடலில் 750 நரம்புகள் இயக்கப்படுகிறது!

* 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது!

* 0.01714 அங்குலம் தலைமுடி வளர்கிறது!

* 70 லட்சம் மூளை செல்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள்!

* 6 பவுண்டு கழிவு வெளியேறுகிறது!

ஒரு மருத்துவ இதழில் இந்தத் தகவலைப் படித்தேன். நாம் நடப்பது, பேசுவது, ஓடுவது, பாடுவது எல்லாச் செயல்களையும் செய்தாலும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் நம் உடலில் இவ்வளவா நடக்கிறது என்பது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறதல்லவா... தானியங்கியாக இத்தனை செயல்கள் செய்யும் நம் உடல் இயந்திரத்தை நாம் சரியானபடி பராமரிக்கிறோமா?


===================================================================

ப்போது உங்களுக்கான அந்த முக்கிய அறிவிப்பு:
அடுத்த பதிவு தீபாவளிக்கு அடுத்த தினம்தான். ஆகவே...

                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||
                                                                   ||

                                                                   ||
                                                                   ||
                                                                   ||


20 comments:

 1. கமல் நடிச்ச ’விக்ரம்’ படம் ஞாபகமிருக்கு. ஓரளவு லாஜிக்கோட போயிட்டிருக்கிற படத்துலே கடைசியிலே சொதப்பியிருப்பாங்க! அதுவும் சத்யராஜோட பாரசூட்டை கமல் அந்தரத்துலே பிடுங்குற சீன் இருக்கே! :-)))))))))))))))

  ReplyDelete
 2. //பஸ்ஸில் ஏகப்பட்ட பேர் பயணிக்க, நீ பெண்களை ஏன்யா பார்க்கிறாய் என்று யாருங்க அங்க குரல் கொடுக்கறது...//

  நான் தானுங்க!

  //வயசுக் கோளாறுதான் ஐயா!//

  முதல்லே புரோபைல்லே இருக்கிற போட்டோவை மாத்துங்க! :-)

  //பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்?//

  இன்னும் ஒரு வாரத்துலே சேர்ந்துக்குவாங்க! :-)

  ReplyDelete
 3. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. //பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்//
  நீங்க வீசுன வலையில ஏதாவது ஒரு குரூப்புல உள்ள மீனு மாட்டிருச்சோ?

  ReplyDelete
 5. சேட்டைக்காரன் said...

  கமல் நடிச்ச ’விக்ரம்’ படம் ஞாபகமிருக்கு. ஓரளவு லாஜிக்கோட போயிட்டிருக்கிற படத்துலே கடைசியிலே சொதப்பியிருப்பாங்க! அதுவும் சத்யராஜோட பாரசூட்டை கமல் அந்தரத்துலே பிடுங்குற சீன் இருக்கே! :-)))))))))))))))

  -கமல் பெரிய ‘பிடுங்கி’யான்னு யாரும் கேட்டிட முடியாது. ஹி.. ஹி...


  //பஸ்ஸில் ஏகப்பட்ட பேர் பயணிக்க, நீ பெண்களை ஏன்யா பார்க்கிறாய் என்று யாருங்க அங்க குரல் கொடுக்கறது...//
  நான் தானுங்க!
  //வயசுக் கோளாறுதான் ஐயா!//
  முதல்லே புரோபைல்லே இருக்கிற போட்டோவை மாத்துங்க! :-)
  //பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்?//
  இன்னும் ஒரு வாரத்துலே சேர்ந்துக்குவாங்க! :-)

  -அடாடா... அதை மறந்துட்டனா? உடனே போட்டோவை இளமையா மாத்திரலாம்ணே...
  -ஒரு வாரம் கழிச்சுப் பாத்துட்டு உங்களுக்குச் சொல்றேன்... நன்றி.

  ReplyDelete
 6. சேக்காளி said...

  //பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்//
  நீங்க வீசுன வலையில ஏதாவது ஒரு குரூப்புல உள்ள மீனு மாட்டிருச்சோ?

  -ஹீக்கும்... வலை வீசுற சாமர்த்தியம் இருந்தாத்தான் லவ் மேரேஜே பண்ணிருப்பனே... நீங்க வேற சேக்காளி... தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 7. அப்படி என்னதான் நடந்திருக்கும்? பல மாதங்களாக ஒட்டிப் பழகிய தோழிகளுக்குள் புன்னகைகூட இன்றி இப்படி முறைத்துக் கொள்ளும் அளவு பிரிவு வரக் காரணம் யாதாக இருக்கும்? பெண்களுடன் பழகியிராத காரணத்தினால் லேடீஸ் சைக்காலஜி எனக்குப் புரியவில்லை. உங்களில் யாருக்கேனும் புரிந்தால் விளக்குங்களேன்...

  பொண்ணுங்க சேர்வதற்கும் காரணம் விளங்காது .பிரிவதற்கும்
  காரணம் விளங்காதையா.அதுதான் அழுத்தமாகச் சொல்லி உள்ளார்களே .
  பெண்கள் மனம் ஆழமோ ஆழம் என்று .நன்றி பகிர்வுக்கு அத்துடன்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களும் ஐயா ..

  ReplyDelete
 8. அத்தனையும் அசத்தல்...

  தொடருட்டும்...

  ReplyDelete
 9. கடைசியாக மிகவும் அவசியமான பகிர்வு.தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 10. அம்பாளடியாள் said...
  பொண்ணுங்க சேர்வதற்கும் காரணம் விளங்காது .பிரிவதற்கும் காரணம் விளங்காதையா.அதுதான் அழுத்தமாகச் சொல்லி உள்ளார்களே. பெண்கள் மனம் ஆழமோ ஆழம் என்று. நன்றி பகிர்வுக்கு அத்துடன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களும் ஐயா ..

  -பெண் மனம் ஆழம் காண முடியாத கடல் என்பது உண்மைதான். உங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  கவிதை வீதி... // சௌந்தர் // said...
  அத்தனையும் அசத்தல்... தொடருட்டும்..

  -நன்றி சௌந்தர் சார்...

  ஸாதிகா said...
  கடைசியாக மிகவும் அவசியமான பகிர்வு.தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.

  -அப்ப, மத்த ரெண்டும் பிளேடுங்கறீங்க... தொடர்ந்து உபயோகமான விஷயமாவே தர முயல்கிறேன். ஸாதிகா சிஸ்டருக்கு என் நன்றியும், தீபாவளி வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 11. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  ReplyDelete
 13. அடேயப்பா! அசத்தலா இருக்கு போங்கோ!

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. சூப்பர்.. சேட்டை சொல்லவும் இங்கே வந்தேன்.. தீபாவளி நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. suryajeeva said...
  super

  -முதல் முறை ‌என் தளத்திற்கு ‌வருகை தந்‌திருக்கும் தங்களுக்கு நல்வ‌ரவும் நன்றியும் சூர்யஜீவா சார்... உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  Chitra said...

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  -‌வெல்கம் சிஸ்டர். உங்களுக்கும் உங்கள் குடு்ம்ப்த்தினரு்க்கு்ம் மனமார்ந்த தீபாவ‌ளி ந்ல்வாழ்த்து்க்க்ள்.

  யானைக்குட்டி@ ஞானேந்திரன் said...
  அருமையான படைப்பு. என் இனிய அன்பின் நண்பனுக்கு. இனிய பாவளி நல்வாழ்த்துக்கள் .
  அன்பின். "யானைக்குட்டி" ஞானேந்திரன்

  -மி்க்க ந்ன்றி ந்ண்பரே... உங்களு்க்கு்ம் என் இதய்ம் நிறைந்த தீபாவ‌ளி ந்ல்வாழ்த்து்க்க்ள்,

  சத்ரியன் said...
  அடேயப்பா! அசத்தலா இருக்கு போங்கோ! தீபாவளி வாழ்த்துக்கள்.

  -முதல் முறையாக வந்திரு்க்கு்ம் ச‌த்ரிய்ன் சாரு்க்கு ந்ல்வரவு. பாராட்‌டு்க்கு ந்ன்றிக்ள் பல. உங்களு்க்கு்ம் என் மனமார்ந்த தீபாவ‌ளி நல்வாழ்த்து்க்கள்.

  ரிஷபன் said...
  சூப்பர்.. சேட்டை சொல்லவும் இங்கே வந்தேன்.. தீபாவளி நல் வாழ்த்துகள்.

  -நன்றி ரிஷபன் சார். இன்னும் பல ந்ல்ல விஷய்ங்களை சுவாரஸ்யமாக்த் தர முய்ல்கிறேன். சேட்டை அண்ணன் மற்று்ம் உங்க்ள் நம்பி்க்கையைக் காப்பாறு்ம் பொறுப்பு என்க்கு கூடியிரு்க்கிறது. உங்களு்க்கு இனிய தீபாவ‌ளி ந்ல்வாழ்த்து்க்க்ள்!

  ReplyDelete
 16. suryajeeva said...
  super

  -முதல் முறை ‌என் தளத்திற்கு ‌வருகை தந்‌திருக்கும் தங்களுக்கு நல்வ‌ரவும் நன்றியும் சூர்யஜீவா சார்... உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  Chitra said...

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  -‌வெல்கம் சிஸ்டர். உங்களுக்கும் உங்கள் குடு்ம்ப்த்தினரு்க்கு்ம் மனமார்ந்த தீபாவ‌ளி ந்ல்வாழ்த்து்க்க்ள்.

  யானைக்குட்டி@ ஞானேந்திரன் said...
  அருமையான படைப்பு. என் இனிய அன்பின் நண்பனுக்கு. இனிய பாவளி நல்வாழ்த்துக்கள் .
  அன்பின். "யானைக்குட்டி" ஞானேந்திரன்

  -மி்க்க ந்ன்றி ந்ண்பரே... உங்களு்க்கு்ம் என் இதய்ம் நிறைந்த தீபாவ‌ளி ந்ல்வாழ்த்து்க்க்ள்,

  சத்ரியன் said...
  அடேயப்பா! அசத்தலா இருக்கு போங்கோ! தீபாவளி வாழ்த்துக்கள்.

  -முதல் முறையாக வந்திரு்க்கு்ம் ச‌த்ரிய்ன் சாரு்க்கு ந்ல்வரவு. பாராட்‌டு்க்கு ந்ன்றிக்ள் பல. உங்களு்க்கு்ம் என் மனமார்ந்த தீபாவ‌ளி நல்வாழ்த்து்க்கள்.

  ரிஷபன் said...
  சூப்பர்.. சேட்டை சொல்லவும் இங்கே வந்தேன்.. தீபாவளி நல் வாழ்த்துகள்.

  -நன்றி ரிஷபன் சார். இன்னும் பல ந்ல்ல விஷய்ங்களை சுவாரஸ்யமாக்த் தர முய்ல்கிறேன். சேட்டை அண்ணன் மற்று்ம் உங்க்ள் நம்பி்க்கையைக் காப்பாறு்ம் பொறுப்பு என்க்கு கூடியிரு்க்கிறது. உங்களு்க்கு இனிய தீபாவ‌ளி ந்ல்வாழ்த்து்க்க்ள்!

  ReplyDelete
 17. முதல் வருகை.

  தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பொண்ணுங்க மேட்டர் தெரிலையே. பொண்ணுங்களுக்கே அது தெரியாது ஹி ஹி ஹி

  ReplyDelete
 18. Prabu Krishna said...

  முதல் வருகை. தீபாவளி நல்வாழ்த்துகள். பொண்ணுங்க மேட்டர் தெரிலையே. பொண்ணுங்களுக்கே அது தெரியாது ஹி ஹி ஹி

  -பிரபுகிருஷ்ணா சாருக்கு நல்வரவு. உங்களுக்கும் உங்கள் குடு்ம்ப்த்தினரு்க்கு்ம் என் மனமார்ந்த தீபாவளி ந்ல்வாழ்த்துக்கள். பெண்கள் மனம் ஒரு கடல்ன்னு பல பெரியவ்ங்க சொல்லி நானு்ம் தெரி்ஞ்சு்க்கி்ட்டேன்...

  ReplyDelete
 19. தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube