Monday, October 31, 2011

மேலும் சில வர்ணனைகள்!

Posted by பால கணேஷ் Monday, October 31, 2011
தமிழ் நாவல்களில் நான் படித்த, மின்னலெனப் பளிச்சிடும் ‘மின்னல் வரி’களை முன்பு உங்களுக்கு வழங்கியிருந்தேன். இப்போது மீண்டும் ஒருமுறை தமிழின் பிரபல நாவலாசிரியர்களின் வரிகள் உங்கள் முன் மின்னுகின்றன. தமிழில் புதிய புதிய வார்த்தைகள் கண்டறியப்பட்டு தமிழ் மேன்மேலும் மேம்பட வேண்டும் என்றார் பாரதியார். அப்படி ‌மாறிவரும் தமிழின் புதிய வகைகளில் இது அறிவியல் தமிழ் : நாம் எல்லோரும் மெல்ல எரிந்து கொண்டி ருக்கிறோம் ஒரு தீ போல. நம் உடலின் பெரும்பாலன மாலிக்யுல்...

Saturday, October 29, 2011

முன்குறிப்பு : இந்த விஷயத்தை நகைச்சுவை(என்று நினைத்துக்கொண்டு)யாக எழுதியிருக்கிறேன். ஆகவே, வந்தாலும் வராவிட்டாலும் வரிகளுக்கு இடையில் அவ்வப்போது சிரித்துக் கொள்க! எந்த வேளையில் என் மனைவி சரிதாவுக்கு அந்த யோசனை தோன்றியதோ தெரியவில்லை. (வேறென்ன... என் போதாத வேளையாகத்தான் இருக்க வேண்டும்.) அன்று மாலை நான் வீடு திரும்பியபோதே கையில் சூடான காபியுடனும், முகத்தில் புன்னகையுடனும் வரவேற்றாள். இப்படி புன்னகை + சூடான காபியுடன் அவள் வரவேற்றாள் என்றால் பின்னால்...

Thursday, October 27, 2011

போன தபா சினிமா விமர்சனம் எழுதச் சொல்லோ, நாலு பெரீவங்க ‘ஷோக்காக் கீதுப்பா’ன்னு சொல்லிக்கினாங்க. அத்தொட்டு, தெகிரியமா மறுக்கா ஒரு மலியாள சினிமா விமர்சனத்த இங்க குட்த்துருக்கேன். ஒருநாள் வரும் : மலையாளம் சினிமா என்றால் பொதுவாக கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகள், அவன் குடும்பம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித்தான் கதை செய்வார்கள். கதாநாயகன் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வில்லனை வெற்றி கொள்வான். ஆனால் வில்லன் புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு...

Sunday, October 23, 2011

‌விக்ரம் நடிக்காத விக்ரம்!

Posted by பால கணேஷ் Sunday, October 23, 2011
இந்தப் பதிவைப் படிப்பவர்கள் அனைவருக்குமான முக்கிய அறிவிப்பு ஒன்று இருக்கிறது. அதைப் பதிவின் கடைசியில் உங்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போது நாம் பேசலாம்: =================================================================== போன வாரம் சன் மியூசிக்கில் ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலை ஒளிபரப்பினார்கள். மதுரையில் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் பார்த்திருந்த ‘விக்ரம்’ படத்தை இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பணிகள் பிஸியாக...

Thursday, October 20, 2011

பழைய சோறு + ஊறுகாய் - 2

Posted by பால கணேஷ் Thursday, October 20, 2011
ஒரே விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டிருக்கும். நகைச்சுவை என்கிற விஷயத்தை எல்லோரும் ஒரே விதமாகத் தான் அணுக முடியும். தங்களின் நகைச்சுவை அனுபவங்களைச் சொல்லும்படி கேட்கப்பட்ட போது பழைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை மேதைகளான இந்த மூவரின் பார்வையும் எப்படி மாறுபட்டிருக்கிறது பாருங்களேன்... =================================================================== ஜே.பி.சந்திரபாபு : ‘அன்னை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மாலை 6 மணி சுமாருக்கு...

Monday, October 17, 2011

திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதில் நான் அவ்வளவு சமர்த்தன் அல்ல. வலைத்தளங்களில் பல வித்தகர்கள் தாங்கள் ரசித்த பலமொழிப் படங்களைப் பற்றி அழகாக விமர்சனம் எழுதுவதைப் படித்து ரசித்திருக்கிறேன். அவ்வளவே. நான் பார்த்த பிறமொழிப் படங்களில் எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த சில படங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் பிறந்தது சற்றே நீளமான இந்தப் பதிவு. போர் நிகழும் சமயத்தில் பாழடைந்த ஒரு பங்களாவில் பதுங்கியிருக்கிறான் பியானோ இசைக் கலைஞன் விளாடெக். ...

Friday, October 14, 2011

காந்தியின் பார்வையில் தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, October 14, 2011
தீபாவளிப் பண்டிகை பற்றிய என் பதிவைப் படித்துவிட்டு, ‘பட்டாசு‌கள் வெடிக்காமல் இருக்கலாம் என்பது சரிதான். ஆனால் குழந்தைகள் ஏங்கிப் போய் விடுமே... அதற்கு என்ன செய்வது’ என்ற கேள்வியை நண்பர் திரு.சென்னைப் பித்தனும், திரு.அன்புமணியும் எழுப்பியிருந்தார்கள். இதைப் பற்றி நான் யோசித்த வேளையில் பழைய புத்தகம் ஒன்றில் இந்தத் துணுக்கைப் பார்க்க நேர்ந்தது. மகாத்மாவின் இந்தக் கருத்து அந்தக் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக அமைந்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்!...

Wednesday, October 12, 2011

அழகன் அருகிருக்கும் பட்டிணம்!

Posted by பால கணேஷ் Wednesday, October 12, 2011
உலகிலுள்ள நகரங்களில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத சிறப்பு மதுரை என்று இன்று அழைக்கப்படுகிற ஆலவாய் நகருக்கு உண்டு. மற்ற நகரங்கள் எல்லாம் காலத்தால் உதயமானவை. முதலில் சிற்றூராக இருந்து, பின் பேரூர் ஆகி, அதன்பின் நகரமானவை. ஆனால் மதுரை நகரம் எடுத்த எடுப்பிலேயே நான்கு மாட வீதிகள், நான்கு ஆடி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் என்று தாமரை மலரின் இதழ் அடுக்கு போல திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அது மட்டுமல்ல... இந்த நகரை முதலில் உருவாக்கியவன் இந்திரன்....

Monday, October 10, 2011

வந்தாச்சு தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, October 10, 2011
தீபாவளிப் பண்டிகை மிக அண்மையில் இருக்கிறது. புதிய உடைகளுக்குச் செலவிட்டும், வருடம்தோறும் விலை ஏறும் பட்டாசு‌களை குழந்தைகளுக்கு வாங்கித் தந்தும் பட்ஜெட் எகிறும் மாதம் இது. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஒரு ஐந்து பாராக்களில் சம்பிரதாயமாக தீபாவளியைப் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்: தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. தீபம் என்பது ஒளி தருவது. ஆவளி என்பது வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளிப்...

Tuesday, October 4, 2011

கேப்ஸ்யூல் நாவல்-1

Posted by பால கணேஷ் Tuesday, October 04, 2011
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் (என்னைப் போன்ற) இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அப்படி சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக உங்களுக்குத் தரவிருக்கிறேன்.  முதலில் அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது...

Saturday, October 1, 2011

பழைய சோறு + ஊறுகாய்..!

Posted by பால கணேஷ் Saturday, October 01, 2011
அடுத்து பதிவைப் படிப்பவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நம் சக பதிவர்களின் ஸ்டால்களைக் கவனித்தேன். படிப்பவர்களுக்காக ஒருவர் கொத்து பரோட்டா போட்டுத் தருகிறார். இன்னொருவர் சுடச்சுட சாண்ட்விச்சும் நான்வெஜ்ஜீம் கொடுக்கிறார். வேறொருவர் பேல்பூரியைப் பரிமாறுகிறார். சரி,   நாமும் அப்படி ஏதாவது தரலாமே என்று யோசித்தேன். ஒரு முடிவுக்கும் வர முடியாமல் இருந்த வேளையில் என் அப்பா வாங்கிச் சேர்த்து வைத்து விட்டுப் போன...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube