
ஆடி மாதத்து அம்மன் கோவில் ஒலிபெருக்கி போல அலறினாள் சாந்தி. “என்னது..? உன்னோட தம்பி பிரசவிச்சுட்டானா..?”
கண்களில் சலிப்புக்காட்டிப் பார்த்தான் உதயமூர்த்தி. அருகில் நெருங்கி, அவள் காதுகளிலிருந்து இயர்போன்களைப் பிடுங்கிக் கீழே போட்டான். “என் தம்பி ஊர்ல அவன் நடத்திட்டிருந்த ப்ரஸ்ஸை வித்துட்டான்னு சொன்னேன்மா. நெக்ஸ்ட் வீக் இங்க வந்து தங்கி, வேலை தேடப் போறானாம். போன் பண்ணான்”
“நோ வே. உங்க தம்பிக்கும் சேத்து வடிச்சுக் கொட்ட என்னால முடியாது. எங்கனாச்சும்...