
நாய் படாத பாடு படுகிறேன்’ என்ற வார்த்தையை என்னிடம் யாராவது சொன்னீர்களோ... நாயில்லை, நான் கடித்துக் குதறி விடுவேன். என் வீட்டில் நாயானது மனுஷப்பாடு பட்டு சொகுசாக இருக்க, நான்தான் அதனால் ‘நாய் படாத பாடு’ பட்டுக் கொண்டிருக்கிறேன். இருங்கள்... இருங்கள்... நாய் என்றா சொன்னேன்..? இந்த வார்த்தை என் சகதர்மிணியின் காதில் விழுந்தால் அது இருக்கும், நான் இருக்க மாட்டேன். ஹி... ஹி.. ஹி... நியாயமாக நான் ராஜேந்திரன் என்று சொல்லியிருக்க வேண்டும். அவள் சூட்டிய...