Saturday, December 30, 2017

காம - தேனுவின் முத்தம்

Posted by பால கணேஷ் Saturday, December 30, 2017
சரித்திரம், பேன்டஸி, ஆன்மீகம் என்று ஏதாவது ஒரு பின்புலத்தில் மர்மத்தைக் கலந்து காக்டெய்ல் நாவல்களைத் தந்துவரும் இனிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மாவின் 8வது நாவலாக ‘காமதேனுவின் முத்தம்’ இப்போது வெளியாகி உள்ளது. இது காதல் + பேன்டஸி + மெலிதான மர்மம் கலந்த காக்டெய்லாக வந்திருக்கிறது.  நியாயமாகப் பார்த்தால் ‘காமதேனுவுக்கு முத்தம்’ என்றுதான் அவர் டைட்டில் வைத்திருக்க வேண்டும். ஹி... ஹி... காமதேனு முத்ததைப் பெறுகிறாளே அன்றி அவள் தரவில்லை. சரி, அதை...

Tuesday, September 5, 2017

இன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைவரும் அவரவர் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நிறையப் பதிவுகள் இட்டிருந்ததைக் காண நேர்ந்தது. நான் என் ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர்ந்தால் என்ன என்று மனதில் பின்னோக்கி பள்ளிக் காலத்திலிருந்து எண்ணிப் பார்த்ததில் ஒவ்வொருவராக மனத்தில் ஸ்லைடு ஸ்லைடாக வந்து போனார்கள். யாரைப் பற்றிச் சொல்லலாம்..? ரிடையர்மெண்டுக்குச் சில ஆண்டுகளே பாக்கி வைத்திருந்த, வழுக்கைத் தலையும் கைத்தடியுமாக யுத்தக் கப்பல் ஒன்று அசைவதைப் போல ஆடிஆடி...

Friday, August 11, 2017

என் முதல் நாவல்

Posted by பால கணேஷ் Friday, August 11, 2017
ஏப்ரல் மாதத்தில் ஓர் நாள்... தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டில் இருந்து என் முகநூல் நண்பராக இருக்கும் உதவி ஆசிரியர் ஒருவர் என்னை வந்து சந்திக்கச் சொன்னார். போய்ப் பார்த்தேன். தாங்கள் மாத நாவல்கள் வெளியிட உள்ளதாகவும், வரும் மாதத்திலேயே நான்கு நாவல்கள் வெளியிடும் உத்தேசம் இருக்கிறது என்றும், நான்கில் ஒரு நாவலை நான் எழுதித் தர இயலுமா என்றும் கேட்டார். பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வரவேண்டும், அதற்காக நான் சின்ஸியராக முயல வேண்டும் என்று...

Wednesday, August 2, 2017

“அண்ணே... அவசரமாப் பேசணும்னு சொன்னீங்களே... என்ன விஷயம்ணே?” “வாய்யா... ப்ளாக் எழுதறதை விட்டுட்டு காணாமப் போய்ட்டவங்கன்னு சொல்லி நம்ம வெங்கட் நாகராஜ் ஒருபோஸ்ட் போட்ருக்காரு தெரியுமா.-? அதுல முக்கியக் குற்றவாளியா உன்னையும் சேத்திருக்காரு. அதான்... ஏன் நீ இங்கிட்டு வரலன்னு கேக்கலாம்னு கூப்ட்டேன்...” “ப்ளாக் எழுதறதுக்கு நேரம் ஒதுக்க முடியாம முக்கிட்டு இருக்கறதால முக்கியக் குற்றவாளியா சேத்திருப்பாருண்ணே... ஹி... ஹி... ஹி...” “ஏன் நேரம் ஒதுக்க...

Friday, May 12, 2017

ஒரு ‘நாய’கன் கதை..!

Posted by பால கணேஷ் Friday, May 12, 2017
நாய் படாத பாடு படுகிறேன்’ என்ற வார்த்தையை என்னிடம் யாராவது சொன்னீர்களோ... நாயில்லை, நான் கடித்துக் குதறி விடுவேன். என் வீட்டில் நாயானது மனுஷப்பாடு பட்டு சொகுசாக இருக்க, நான்தான் அதனால் ‘நாய் படாத பாடு’ பட்டுக் கொண்டிருக்கிறேன். இருங்கள்... இருங்கள்... நாய் என்றா சொன்னேன்..? இந்த வார்த்தை என் சகதர்மிணியின் காதில் விழுந்தால் அது இருக்கும், நான் இருக்க மாட்டேன். ஹி... ஹி.. ஹி... நியாயமாக நான் ராஜேந்திரன் என்று சொல்லியிருக்க வேண்டும். அவள் சூட்டிய...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube