Monday, April 28, 2014

புத்தம் புதிய புத்தகமே..!

Posted by பால கணேஷ் Monday, April 28, 2014
சமீபத்தில் விஷால் நடித்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்றொரு படம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா? அதில் ‘நார்கோலெப்சி’ என்கிற வியாதியால் பாதிக்கப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பார்கள். அதாவது கோபம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் தாக்கினால் தூங்கத் தொடங்கி விடுவார். அதுபோல ‘புததகாலெப்சி’யால் பாதிக்கப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். அதாகப்பட்டது... ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில பக்கங்களைப் படித்தால் போதும்... கண்களைச் சுழற்றிக் கொண்டு...

Wednesday, April 23, 2014

அமைதியின் பின்னே....

Posted by பால கணேஷ் Wednesday, April 23, 2014
“என்னங்க...” ஜன்னலோர சீட்டில் மெலிதாய் கண்ணயர்ந்திருந்த செல்வத்தின் தோளில் விரல்களால் கொத்தினாள் கவிதா. “பின்னாடி சீட்ல இருக்கற ஆளு தன் காலால என் காலல உரசுறான். என்னன்னு கேளுங்க...” “விடு கவி... பஸ்ல இந்த மாதிரி மேல படறதுல்லாம் சகஜம்டா!. இதைல்லாம் கேட்டா. ‘நீ ஆட்டோ புடிச்சுப் போறதுதானே... எதுக்கு பஸ்ல வர்ற?’ன்னு எடக்காதான் பதில் வரும். விட்று...” பின்னால் திரும்பி அவனை முறைத்தாள் கவிதா. பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் தோற்றமளித்த அவன் ‘ஈ’யென்று...

Monday, April 21, 2014

எம்.பி.ஆகிறாள் சரிதா!

Posted by பால கணேஷ் Monday, April 21, 2014
தலைப்பைப் படித்ததும் ஒருகணம் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யித்தீர்கள்தானே...? உங்களுக்கென்னங்க... தூரத்திலிருந்து கொண்டு ஆச்சர்யப்படலாம். நான் அடுக்கடுக்காய் அனுபவித்த அவஸ்தைகள் எனக்குத்தானே தெரியும்...? வழக்கம்போல் என் கம்ப்யூட்டரில் ஒரு புத்தக அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டிருந்த நேரம்... புயலென அருகில் வந்தாள் சரிதா. “என்னங்க... நீங்க இப்ப நடக்கப்போற எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகணும்...” திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். “அதுநடக்கற...

Monday, April 7, 2014

சரிதாவும் செல்போனும்..!

Posted by பால கணேஷ் Monday, April 07, 2014
‘லை டிடெக்டர்’ என்று ஒரு கருவி இருக்கிறதாம். அது பொய் பேசுகிறவர்களைக் கண்டுபிடித்து விடுமாம். அதென்ன பெரிய விஷயம் ஐயா....?. மனிதர்களைப் பொய் பேச வைக்கும் கருவி ஒன்றிருக்கிறது... தெரியுமா உங்களுக்கு...? அசோக் பில்லரில் இருக்கும்போதே,  ”சைதாப்பேட்டை வந்துட்டேன். இன்னும் அஞ்சே(?) நிமிஷத்துல வந்துருவேன்” என்று பல்லாவரத்தில் நின்றிருப்பவரிடம் புளுகுவதில் தொடங்கி இந்தக் கருவி வயது பாகுபாடில்லாமல் அனைவரையும் பொய் பேசவைக்கிறது. ‘செல்போன்’ என்பது அதன்...

Tuesday, April 1, 2014

ஏன் இந்த வேகம்...?

Posted by பால கணேஷ் Tuesday, April 01, 2014
சில விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்ல நேர்கையில் சற்றே அயற்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க முடிவதில்லை. நேற்று காலை ஆ.வி.அலுவலகம் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஜெமினி ப்ரிட்ஜின் மத்தியப் பகுதியை பஸ் நெருங்குகையில் எதிர் சாரியில் வாகனங்கள் தேங்கி நிற்பதைக் காண முடிந்தது. என்னவெள்று பார்த்தால்... விபத்து! மோட்டார் பைக்கில் அதிவேஏஏஏகமாக வந்த ஒரு ஆசாமி மற்றொரு வாகனத்தை முந்த முயன்று ஸ்கிட்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube