
ரெண்டு நாளா ‘சுடுதண்ணி வெக்கிறது எப்படி'ன்னும், ‘முட்டை அவிககிறது எப்படி'ன்னும், ‘டீ போடுறது எப்படி'ன்னும், ஆளாளுக்கு பதிவு போட்டுக் கலக்கிட்டிருக்காங்க. ஆனா பாருங்க... ஒரு பயபுள்ளையும் அதையெல்லாம் சாப்பிடறது எப்படின்னு சொல்லித் தரக் காணோம். அதனால... அந்த அரிய விஷயத்தை நான் ‘டச்' பண்ணலாம்னு நினைக்கிறேன். ‘டிச்' பண்ணிட்டேன்னு யாராவது கொந்தளிச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பில்ல.சமைத்தல் யார்க்கும் எளிது அரியவாம்சமைத்ததைத் தானே உண்ணல்அப்படின்னு திருவள்ளுவர்...