Saturday, July 20, 2013

பதிவுலகிற்குப் புதுமுகமாய் நுழைந்து ஒருசில நண்பர்களுக்கு மட்டுமே நான் பரிச்சயமாகியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தைகள் தினத்தன்று ஒரு பதிவிட்டு அதைத் தொடரும்படி என் நட்புகள் ஐவரை வேண்டியிருந்தேன். புதியவன் அழைச்சிருக்கானேன்னு அலட்சியப்படுத்தாம நண்பர்கள் தொடர்ந்து எழுதினாங்க. அந்தத் ‌தொடர் சங்கிலியைத் தொடரத் தொடர எனக்கு மேலும் மேலும் நிறைய நட்புகள் கிடைத்தன. நிறையப் பேருக்கு என்னோட ல்டசணமும்(!) தெரிஞ்சு, ஏதோ கிறுக்கி ஒப்பேத்துதே இந்தப் புள்ளன்னு...

Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞனே, நீ வாழி!

Posted by பால கணேஷ் Thursday, July 18, 2013
திருவரங்கத்திலிருந்து புறப்பட்டது அவனது கவிதையுலாதிரைத்தமிழ் தழைக்க அவன் பாடிவந்த முழுநிலா!சென்னை வந்தவன் பட்டான் பல துயரம்! - அவனைமுன்னிறுத்தியது அவையில் வாத்யாரின் அன்புக்கரம்!எதிர்ப்பட்டோர் பலம்பாதி கொள்ளும் வாலியெனும்பெயர்சூடிய அந்நல்லோனின் திருநாமம் ரங்கராஜன்பழகினோர் பகன்றிடுவார் மாண்பில் அவனோர் தங்கராஜன்!அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!ஜாலியான பாடல்களும் புனைந்தவனை...

Wednesday, July 17, 2013

வாத்யாரின் படகோட்டி - 2

Posted by பால கணேஷ் Wednesday, July 17, 2013
மக்கள் விரும்பிப் பார்த்து ரசித்த படங்களை அதே கதையை வைத்துக் கொண்டு புதிய ட்ரீட்மெண்ட்டில் கொடுத்து வெற்றி பெறுவது சமீப காலமாக தமிழ்சினிமாவில் வழக்கமாகி விட்டது. பில்லா, நான் அவன் இல்லை, தில்லுமுல்லு.... இப்படிப் பல படங்கள் வந்து விட்டன. எம்.ஜி.ஆர்., நம்பியார், நாகேஷ் போன்றோரை வைத்து சி.ஜி.யில் மீண்டும் படகோட்டி-2 படம் தயாரிக்க முடிவு செய்தார் எனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளர். கதையை புதிய ட்ரீட்மெண்டில் எழுதித்தர குடிகார எழுத்தாளர் கோவணாண்டியிடம்...

Monday, July 15, 2013

மொறு‌மொறு மிக்ஸர் - 19

Posted by பால கணேஷ் Monday, July 15, 2013
கடந்த ஒரு வாரமாக  இணைய இணைப்பு மூன்று நாட்கள் சொதப்பியதென்றால், கீ போர்ட் ஸ்ட்ரக்காகியதி்ல் எதையும் டைப் செய்ய முடியாமல் பேக்ஸ்பேஸாக விழுந்து இரண்டு நாட்கள் படுத்தியெடுத்ததின் விளைவாக இணையத்தின் பக்கம் வர இயலவில்லை. மொபைல் மூலம் ‌முகநூல்தான் எளிதில் படிக்க முடிகிறது; ஒன்றிரண்டு தளங்களைத்தான் படிக்க முடிந்தது. இப்பவும் இணைய இணைப்பு முழுமையா சரியாகலை. இருந்தாலும்... உங்களோட ஒரு வார நிம்மதியைப் பறிக்க இதோ வந்தூட்டேன்.... ஹா... ஹா...!=/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/==/*/=இந்த...

Monday, July 8, 2013

மீண்டும் ஞாபகநதிக் கரையினில்!

Posted by பால கணேஷ் Monday, July 08, 2013
இவனுடைய அண்ணன் முதலில் பணியமர்ந்தது கோவையிலிருக்கும் மில் ஒன்றில். எனவே போத்தனூர் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான் இவன். ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவுக்கான போட்டிகள் பல அறிவிக்கப்பட்ட சர்க்குலர் வகுப்பிற்கு வர, ஆசிரியர் ஒவ்வொன்றாக படித்தார். ‘‘நான் விரும்பும் தலைவர் - இது தலைப்பு! பேச்சுப் போட்டில யார்லாம் கலந்துக்கறீங்க? கை தூக்குங்க’’ என்றார். சற்றும் யோசிக்காமல் கை தூக்கி விட்டான் இவன். (யோசிச்சிருக்கணும்!) வீட்டுக்கு வந்ததும்தான்...

Friday, July 5, 2013

என் பழைய கணக்கு!

Posted by பால கணேஷ் Friday, July 05, 2013
விஞ்ஞான வசதிகளும், கல்வியறிவிற்கான எல்லை விஸ்தீரணங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் இன்றைய குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஒரு ஏழு வயதுப் பையன்/பெண்ணுக்கு மொபைல் ஆபரேட் பண்ணவும், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடவும், கூகிளில் தேடவும், சமயங்களில் பெற்றோருக்கே சொல்லித் தரும் அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் இத்தகைய வசதிகளுடன் பழகாத குழந்தைகள் இந்த அளவுக்கு ப்ரைட்டாக இல்லை. அதிலும் இவன் ரொம்பவே மோசம். புத்தகம்...

Wednesday, July 3, 2013

தே(வ)ன் துளிகள்!

Posted by பால கணேஷ் Wednesday, July 03, 2013
மகாதேவன் என்கிற தேவன் எழுத்துக்களில் இயல்பான ஹாஸ்ய ரசம் ததும்பும். அவரது சுவாரஸ்யமான எழுத்து நடை எனக்கு மிகப் பிடிக்கும். அதைப் பற்றி எழுத வேணுமென்று ரொம்ப நாளாக ஆசை. நான் எழுதி என்னத்த பெரிசாச் சொல்லிடப் போறேன்னு தோணிச்சு. அதனால அவர் எழுத்துலருந்து கொஞ்சம் ஸாம்பிள் இங்க உங்களுக்காக:====================================திருநெல்வேலி ஜங்ஷனுக்கும் திரு‌ச்செந்தூருக்கும் இடையேயுள்ள மைல்கள் முப்பத்தெட்டுதான் என்றாலும் மொத்தம் பத்தொன்பது ஸ்டேஷன்களையும்...

Monday, July 1, 2013

நோ குழந்தை - வீடு சுத்தம்!

Posted by பால கணேஷ் Monday, July 01, 2013
நோ... நோ... அப்படிப் பாக்காதீங்க. இப்படியொரு (அபத்தமான) கருத்தை நான் சொல்ல மாட்டேங்க. குழந்தைங்க இருக்கணும்.... வீடு கலகலப்பா இருக்கணும். எல்லாப் பொருட்களும் இறைஞ்சு கிடக்கணும். அதை ஒழுங்குபடுத்தணும். இல்லன்னா என்ன சுவாரஸ்யம் லைஃப்ல? இப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நம்ம கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் கமலஹாசன்தான். பழைய குமுதம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் பல வாரங்கள் இளைஞர் கமல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பக்கம் இங்கே...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube