Wednesday, May 29, 2013

கேப்ஸ்யூல் நாவல் -8

Posted by பால கணேஷ் Wednesday, May 29, 2013
கரையெல்லாம் செண்பகப் பூ - சுஜாதா - கல்யாணராமன் நாட்டுப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் கிராமத்திற்கு வருகிறான். அங்கே வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வெள்ளி என்ற பெண்ணும், அவள் மூலமாக அவள் முறைப் பையனான மருதமுத்துவும் அவனுக்கு உதவுகிறார்கள். கல்யாணராமன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ஜமீன் அரண்மனையில் அன்றிரவு சில வினோத சப்தங்களைக் கேட்டு பயப்படுகிறான். மறுதினம் மருதமு்த்துவின் டிராக்டரில் நகரம் சென்று ஷாப்பிங் செய்து வருகையில் லிஃப்ட் கேட்ட...

Monday, May 27, 2013

நான் ரசித்த T.M.S.!

Posted by பால கணேஷ் Monday, May 27, 2013
Thirai isai Mannar Soundarrajan! இப்படித்தான சொல்லத் தோன்றுகிறது அந்த வெண்கலக் குரலுக்கு உரியவரை! டி.எம்.எஸ். அவர்கள் பாடியது என்பதை அறியாமலேயே என் பள்ளிப் பருவத்தில் அவரது பாடல்களை ரசித்திருக்கிறேன் நான். அதிலும் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய பாடல்களை. எல்லாமே என் ஃபேவரைட். ‘கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’, ‘காற்று வாங்கப் போனேன்’, ‘நான் ஆணையிட்டால்’ ‘கடலோரம் வாங்கிய காற்று’ இவை எல்லாம் அந்தச் சிறு வயதில் திரும்பத் திரும்பப் பாட வைத்து...

Saturday, May 25, 2013

குழந்தை!

Posted by பால கணேஷ் Saturday, May 25, 2013
சரம் சரமாய் திரும்பிய பக்கமெல்லாம் கலர் பல்புகள் ஜொலித்தன. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் வரிசையாய் மேஜைகள் அமைத்து, ஏராஆஆளமான ஐட்டங்களை அடுக்கி வைத்திருக்கிற பஃபே டைப் விருந்து. இந்தப் பக்கம் ஒரு மேடை அமைத்து இசைக் கச்சேரி. ‘ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து’ பாடலை டி.எம்.எஸ். கேட்டால் தற்கொலை செய்து கொள்கிற ரேஞ்சில் ஒருவர் பாடி(?)க் கொண்டிருந்தார். மணமக்களை வாழ்த்திப் பரிசு தந்துவிட்டு இதையெல்லாம் கவனித்தபடி நடந்து கொண்டிருந்த நான், ‘‘ஜெய்ய்யாஆஆ’’...

Wednesday, May 22, 2013

கமல் மாறி விட்டா(ரா)னா?

Posted by பால கணேஷ் Wednesday, May 22, 2013
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்குக் குளறியது. கமலஹாசனுக்கும் தூக்கம் வந்துவிட்டதா அல்லது நாள் முழுவதும் ஷுட்டிங் செய்த அலுப்பா என்று தெரியவி்‌ல்லை... சலிப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். குழந்தைக்கு வசனம் சரியாக வந்தவுடன்...

Monday, May 20, 2013

மாலே, சிவகுமாரா!

Posted by பால கணேஷ் Monday, May 20, 2013
இரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலாமா?..’’ என்றார். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து மூன்று மணி நேரம் ஏ.ஸி.யி.ல் கழிக்கலாம் என்ற சபலத்தில் ‘‘ஓ.கே.’’ என்றேன் சிவாவின் பின்னணிச் சதி புரியாமல். ‘‘சரி, 12 மணிக்கு ரெடியா இருங்க’’...

Thursday, May 16, 2013

ஜாலியா கொஞ்சம் அரட்டை!

Posted by பால கணேஷ் Thursday, May 16, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த வாரம், பத்து நாளா கோவை, பெங்களூரு எனறு தொடர்ந்து பயணங்கள் அமைஞ்சதுனாலயும், எங்க ஏரியாவுல மின்சார கேபிள்கள் ஒண்ணு மாத்தி ஒண்ணா பல இடங்கள்ல பழுதுபட்டுப் போனதுனால சரியானபடி மின்சார வசதி கிடைக்காம படுத்தி எடுத்ததுனாலயும் வலைப் பக்கம் எட்டிப் பாக்கக் கூட முடியாமப் போச்சு. எதையும் படிக்கவும் எழுதவும் முடியாமப் போனதுல ரொம்ப வருத்தம் எனக்கு. ஐ மிஸ்ட் யூ ஆல்! கோயமுத்தூர்ல நான் போன...

Monday, May 6, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 7

Posted by பால கணேஷ் Monday, May 06, 2013
போட்டிங் போக முடியாத ஏமாற்றத்தை மறைத்து, அரட்டையடித்தபடி ஏரியைச் சுற்றி நடந்தோம். இருபது ரூபாய் வாடகையில் சைக்கிள் கொடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல குளிர் காற்றில் சைக்கிள் மிதித்தபடி ஏரியைச் சுற்றி வ்ந்தது (ஐந்தரை கிலோமீட்டர் தூரம்) மிக ஆனந்தமாக இருந்தது. இரவு காட்டேஜுக்குத் திரும்பியதும், காட்டேஜுக்கு முன்பு இருந்த புல்வெளியில் விறகுக் கட்டைகளை அடுக்கி, வைத்திருந்தனர். அவற்றைக் கொளுத்தி குளிர்காய்ந்தபடி இரவு உணவும், அதன்பின் பாட்டும், கவிதைகளுமாக...

Friday, May 3, 2013

‘அசத்திய’ வாக்கான சத்தியவாக்கு!

Posted by பால கணேஷ் Friday, May 03, 2013
சென்னை நாரதகானசபாவில் கோடை நாடக விழா கடந்த பத்து தினங்களாக நடந்து வருகிறது. தினமும் மாலை 7 மணிக்கு நாடங்கள்- அனைத்திற்கும் அனுமதி இலவசம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். சென்ற ஞாயிறன்று ‘ராஜமாதங்கி க்ரியேஷன்ஸ்’ அரங்கேற்றிய, மதுரை ஜடாவல்லபன் எழுதி இயக்கிய ‘சத்தியவாக்கு’ நாடகத்தைக் காண நாங்கள் சென்றிருந்தோம். ‘நாங்கள்’ என்பது நான், மெட்ராஸ்பவன் சிவகுமார், தி.கொ.போராடு சீனு, கனவு மெய்ப்பட ரூபக் ராம் மற்றும் இரு நண்பர்கள் என அறுவர் குழு. நாடகம் துவங்குவதற்கு...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube