Tuesday, April 30, 2013

கொ(கோ)டைக் கா(ண)ல் - 6

Posted by பால கணேஷ் Tuesday, April 30, 2013
வேனிலிருந்து இறங்கியதும் எதிரே பசும் புல்வெளி சூழ்ந்த ஒரு மேடான பிரதேசமும், அங்கே ஒரு கோயிலும தெரிந்தது. ‘‘இதான் பூம்பாறையா பாஸு’’ என்று நண்பரிடம் நான் கேட்டதற்கு, வேனிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த ஓட்டுனரிடமிருந்து பதில் வந்தது. ‘‘இல்ல ஸார். பூம்பாறைக்கு பாதி தூரம்தான் வந்திருக்கோம். இங்க நீங்க பாக்கறது மகாலக்ஷ்மி கோயில். அழகா இருக்கும், எல்லாரும் போய்ப் பாத்துட்டு வரட்டுமேன்னுதான் நிறுத்தினேன்’’ என்றார். ‘‘ரைட்டுங்க. பூம்பாறைல என்ன விசேஷம்?’’ என்று கேட்க, ‘‘அங்க ஒரு முருகன் கோயில் இருக்குது சார். குழந்தை வேலப்பர்னு பேரு. ரொம்ப அழகா இருக்கும் சாமி...’’ என்றார் சக்தி. அட, இன்னிக்கு ஆலய தரிசனம் வரிசையா அமையுதே என்ற வியப்புடன் மேலேறினோம்.

வேனிலிருந்து மஹாலக்ஷ்மி கோயில் வ்யூ!
மேலேறிச் சென்று பார்க்கையில் அவர் சொன்னது போலவே சிறிய கோயிலாக இருந்தாலும் அழகாக இருந்தது. புகைப்படக் கருவியை எங்கள் கைகளில் கண்டதுமே, ‘‘ஸார் கோயிலையும், கோயிலச் சுத்தியும் படமெடுத்துக்குங்க. அம்மனை படம் எடுக்கக் கூடாது’’ என்றார் அங்கிருந்த ஊழியர். அவர் அப்படிச் சொல்லாவிட்டால், சிறியதாக இருந்தாலும் அழகாக புன்னகை முகத்துடன் இருந்த அம்மனின் சிலையை நாங்கள் படம் எடுத்து விட்டிருப்போம். சொல்லி விட்டதால் வேறு வழியின்றி ஆலயத்தைச் சுற்றியிருந்த இயற்கையை ரசித்து, படங்களை சுட்டுக் கொண்டு கிளம்பினோம் அங்கிருந்து.

ஞானும் பின்னே  இயற்கையெனும் இளையகன்னியும்!
இதுவரை ஏற்றப் பாதையாய் இருந்தது மகாலக்ஷ்மி கோயில் தாண்டி சற்று தூரம் சென்றதுமே இறங்கு பாதையாக மாறியது. சுற்றிச் சுற்றி இறங்கி சுமார் 10 கி.மீ. தூரம் போனதும் பூம்பாறை கிராமம் வந்தது. வேனிலிருந்தபடியே அந்த கிராமத்தைப் பார்க்கையில் மதுரை நகர அமைப்பு மாதிரி குழந்தை வேலப்பர் ஆலயமும் அதைச் சுற்றிய சில தெருக்களும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. குழந்தை வேலப்பர் ஆலய வாசலில் வேனை நிறுத்தி உட்செல்ல, அங்கே கூட்டம் அதிகம் இல்லை. சிறிய ஆலயம். ஆனால் சுற்றிலும் நிறைய இடப்பரப்பு இருந்ததால் பார்க்க ரம்யமாகவே இருந்தது. உள்ளே சென்று முருகப் பெருமானை தரிசித்தோம். என்ன அழகு! ராஜ அலங்காரத்தில் அம்சமாய் நின்றிருந்தார். இங்கே எப்போதுமே ராஜ அலங்கார தரிசனம்தான் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நகருங்க, நகருங்க என்று விரட்ட யாரும் இல்லாமல் நிம்மதியான தெய்வதரிசனம் கிட்டியது மனதுக்கு மகிழ்வாக இருந்தது.

ஆலய வாசலில் இவர் விற்பது அசல் மலைப்பூண்டுங்க!
வழக்கம் போல கேமராவைக் கையிலெடுத்தால் உதை விழும் என்று எச்சரிக்கப்பட்டதால் படம் எடுக்க முடியாமல் போயிற்று.ஆனாலும் சென்னை வந்ததும் கூகிளாண்டவரிடம் வேண்டித் தேடியதில் நான் அங்கு கண்ட முருகப் பெருமானின் ராஜ அலங்காரப் படம் கிடைத்தது. அது இங்கே உங்கள் பார்வைக்கு. சிறிது நேரம் அந்தக் கிராமத்துத் தெருக்களில் நடந்து, தாக சாந்தி (ஐமீன்... கூல்ட்ரிங்ஸ்) செய்து கொண்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸும் வாங்கிக் கொண்டு வேனில் ஏறினோம். மீண்டும் ஏற்றம் மறுபடி இறக்கம் என்று வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்தது பூம்பாறையிலிருந்து கொடைக்குச் செல்லும் சாலை.

மனசைக் கவர்ந்த குழந்தை!
 கொடைக்கு வந்ததும், ‘‘சார், சாக்லெட்ஸ், தைலம்லாம் வாங்கணும்னு சொல்லிடிருந்தீங்களே... எனக்குத் தெரிஞ்ச நல்ல கடை இருக்கு. போலாமா?’’ என்றார் ஓட்டுனர். காலையிலிருந்து இரண்டு முறை இந்த விஷயத்தைக் கேட்டுவிட்டார். ஏனென்றுதான் தெரியலை. தலைவர் ‘‘ஓ.கே. போங்க’’ என்க, வேன் சிலபல தெருக்கள் கடந்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றின் வாயிலில் நின்றது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்றால் பெரிய மல்ட்டிஸ்டோரி பில்டிங்குகளை நினைத்துவிட வேண்டாம். ‘ப’ வடிவத்தில் வரிசையாகக் கடைகள் இருந்த தரைத்தள காம்பளக்ஸ்தான் அது. கடைக்குள் போனதுமே அங்கிருந்தவர்கள் அருமையாக கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்கள். சுத்தமான மலைத்தேன் பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்ததை சாம்பிள் காண்பித்தார்கள். தேனின் விலைதான் திகிடுதம்பாக இருந்தது. தலைவலித் தைலம், மூட்டுவலிக்கான தைலம், மூலிகை ஹேர் ஆயில் என இன்ன பிறவற்றின் விலையும் அப்படியே. சாக்லெட்தான் விலை குறைவாக இருந்தது. ‘‘எப்பவோ ஒரு தரம் வர்றோம். வாங்கலாம் பாஸ்!’’ என்றபடி நண்பர்கள் நிறைய வாங்கிக் குவித்தார்கள். (நாங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்த ஒரே இடம் இதுதானே!) நான் கொஞ்சம் வாங்கிவிட்டு வேனுக்கு வந்துவிட்டேன்.

ஷாப்பிங் செய்வதற்கு முன்! (லிஸ்ட் போடுகிறார் சீனியர்)
அனைவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு வேனுக்கு வர நீண்ட நேரமாயிற்று. எல்லோரும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தும் ஓட்டுனரைக் காணவில்லை. அவர் சற்றுப்‌ பொறுத்தே கடையிலிருந்து வந்து வேனைக் கிளப்பினார். இதற்குள் மதிய உணவு நேரம் தாண்டியிருக்க, காட்டேஜ் சென்று உணவருந்தலாம் என்ற குரல் அனைவரிடமிருந்தும் வந்தது. மதிய உணவாக இன்று மீன் குழம்பும், சிக்கன் ப்ரையும் செய்திருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து ஒரு மீனையும் சாப்பிட்டுப் பார்த்தேன். வெகு பிரமாதம்! இன்னுமிரண்டு பீஸ் ஃபிஷ்‌ஷை விழுங்கிவிட்டு காட்டேஜ் பொறுப்பாளரை பார்த்துப் பாராட்டினால், அவர் முன்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் தான் செஃப் ஆக இருந்ததாகக் கூறினார். அட்றா சக்க.. அட்றா சக்க... அதான் இவ்வளவு சூப்பர் சமையலாவென்று வியந்து பாராட்டிவிட்டு, அவரவர் அறைகளுக்குள் நுழையுமுன், ‘‘ஈவ்னிங் போட்டிங் போகணும். எல்லாரும் ரெடியாகி வந்திருங்க’’ என்றார் தலைவர்.

குழுவாகச் செல்கையில் எப்போதும் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். (குழுவாக இல்லாவிட்டாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதே உத்தமமானது என்பது வேறு விஷயம்). ஆனாலும் 12 பேர் வெவ்வேறு அறைகளில் உறங்கிய பின், மீண்டும் எழுந்து, தயாராகி வருவது என்கிற நடைமுறை விஷயத்தில் யாரேனும் ஒருவர் தாமதம் செய்தாலும் அனைவரின் நேரமும் வீணாகத்தான் போய் விடுகிறது. அன்று மாலையிலும் இதே விஷயம்தான் நடந்தது. அனைவரும் கிளம்புகையில் மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வேன் ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தலைவருக்கு போன் வந்தது. ‘‘அப்படியா? சரி... சரி... அப்ப நாளைக்கு காலைலயே ஆறு, ஆறரைக்கெல்லாம் கிளம்பி அங்க வந்துடறேன். நீங்க மத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க’’ என்று பேசிவிட்டு வைத்தார். அவர் மெதுவான குரலில்தான் போன் பேசுவார் என்றாலும் இந்த ஏரிப் பயணத்தின்போது நான் அவர் அருகாமை சீட்டில் இருந்ததால் அவர் பேசியது கேட்டது. பின் உரத்த குரலில் அறிவித்தார்- ‘‘ஃப்ரண்ட்ஸ்1 இப்ப ஏரியில சுத்தறதோட நம்ம கொடை ட்ரிப் முடியுது. நாளைக்குக் காலையில ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் எழுந்து ரெடியாயிடுங்க. நாம இங்கருந்து கிளம்பறோம்’’ என்று!

எல்லாரும் கசமுசவென்று பேசிக் கொள்ளத் துவங்க, ‘‘காலையில எங்க கிளம்பிப் போறோம் தலைவரே?’’ என்று மெல்லப் போட்டு வாங்க முயன்றேன். தலைவர் க.மீனில் ந. மீன்! ‘‘கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும் ஸார்! காலையில சொல்றேன்’’ என்றார். அதற்கு மேல் அவரிடமிருந்து விஷயத்தை உரிக்க முடியாது என்பது எனக்கு அனுபவப் பாடம் என்பதால் எதுவும் கேட்கவில்லை. ஏரிக்கரை அருகில் வேனை பார்க் செய்ததும், அங்கே வரிசையாக ஸ்வெட்டர் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளிடம் பேரம் பேசி ஆளுக்கொரு ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டோம். இதில் சற்று நேரம் ஓடிவிட, ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந்து விட்டது என்றார்கள். அடடா... என்னவொரு ஏமாற்றம்!

                                                                                                                     -தொடர்கிறேன்....

59 comments:

  1. நான் கொடைக்கானல் சென்றபோது பூம்பாறையைத் தவறவிட்டேன்... நீங்கள் காட்டிவிட்டீர்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்து ரசித்த ஸ்கூல் பையருக்கு உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. adutha nal...

    aiyo ippadi yosikka vechu naduvula viddu poringala sir..
    arumaiyana thodar.

    .


    ReplyDelete
    Replies
    1. அடுத்த நாள் வரைக்கும் என்னன்னு மூச்சு விடாம சஸ்பென்ஸ்ல தவிக்க விட்டாரு தலைவர் மஹேஷ்! அதையே பதிவுல மெயின்டைன் பண்றேன். அருமையான தொடர்னு சொன்ன உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  3. மெதுவான குரலில்தான் போன் பேசுவார் என்றாலும் இந்த ஏரிப் பயணத்தின்போது நான் அவர் அருகாமை சீட்டில் இருந்ததால் அவர் பேசியது கேட்டது. /// ஒட்டுக் கேட்டதக் கூட எவ்வளவு டீசண்டா சொல்ரீங்க? அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
    Replies
    1. ஷ்ஷ்ஷ்! என்ன்ன்ன சுடர் நீயி! இப்படியா பப்ளிக்ல போட்டு உடைச்சு மானத்த வாங்கறது? ஹி... ஹி... மிக்க நன்றி!

      Delete
  4. அடடா.... படகுப் பயணம் வாய்க்கவில்லையா.....

    இப்படிக் குழுவாக பயணம் செய்வதில் நிறைய பலன்கள் இருந்தாலும், நீங்கள் சொல்வது போல, ஒருவர் கொஞ்சம் தாமதம் செய்தாலும் அனைவருக்குமே தாமதம் தான்.... நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.....

    அடுத்த பகுதிக்கான ஆவல் அதிகரித்து விட்டது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தின் மிகப்பெரிய ஏமாற்றம் அதுதான் வெங்கட்! மற்ற எல்லாம் மகிழ்வே. அடுத்த பகுதிக்காய் ஆவல் கொண்ட தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. திகிடுதம்பாக - என்ன பொருள்?
    குழுவாகப் போகையில் எல்லாரையும் தார்க்குச்சி போடுவதற்காக ஒருவரை நியமிப்பது நல்லது. டீம் லீடர் மாதிரி - பொறுப்பில்லாத சோம்பேறிங்களை செருப்பாலடிச்சு எழுப்புறதுக்கு ஒரு லீடர் தேவை.

    ReplyDelete
    Replies
    1. ‘திகிடுதம்பாக’ என்பது மதுரை வட்டார வழக்குச் சொல் அப்பா ஸார்! ‘எக்குத்தப்பாக’ என்பதற்கான பொருள்தான் அதற்கும்! நீங்க சொல்ற மாதிரி ‌சாட்டையோட ஒரு லீடரை நியமிக்கணும்கறத இந்த டூர் முடிஞ்சப்புறம்தானே உணர்ந்தோம். இனி உஷாராய்டுவம்ல...! மிக்க நன்றி!

      Delete
    2. லேட்டா வரவங்க அபராதம் கட்டணும்னு முதல்லயே ரூல் போடுறதும் உண்டு.

      Delete
    3. லேட்டா வரவங்களுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லே. 

      Delete
    4. @அப்பாதுரை

      என் வகுப்புத் தோழர்களோட பயணம்னா அடிச்சி எழுபிட்டுப் போவோம்.. :-)

      Delete
  6. பயணத்தை உங்களுடன் தொடர்ந்து வருகிறேன் தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  7. கொடைக்கனால் பயணம் முழுசும் இப்பதான் வாசித்தேன். நல்லா 'சுருக்'ன்னு எழுதி இருக்கீங்க:-)))))

    ReplyDelete
    Replies
    1. நல்ல தொடர்கதை மாதிரி எழுதிட்டு இருக்காறு, இப்டி சுருக்ன்னு சொல்லிடீங்களே ஹா ஹா ஹா

      Delete
    2. தொடர்கதை ரொம்ப நீளாது சீனு! மிஞ்சிப் போனா இன்னும் ரெண்டே சாப்டர்தான். முழுமையாக வாசித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி துளசி டீச்சர்!

      Delete
  8. அங்கு எல்லாமே திகிடுதம்பா தான்... Tracking trip போகலையா...?

    ReplyDelete
    Replies
    1. ட்ராக்கிங் ட்ரிப் போகலை நண்பரே. டயம் பத்தாததுதான். தொடர்ந்து படித்தால் புரியும் உங்களுக்கு. மிக்க நன்றி!

      Delete
  9. பூம்பாரை நானும் கேள்விப்பட்டதில்லை, ஒருமுறையேனும் கொடைக்கானலில்தங்கி கண்டுகளிக்க வேண்டும். உங்கள் பயணம் போல். நாங்களும் போட்டிங்கை தவறவிட வாய்ப்பு இருந்த போதும் 05.05க்கு எங்களை அனுமதித்து உள்ளே விட்டனர். அனுமதி கிடைக்காதவர்கள் ஏரியைச் சுற்றி சைக்க்ளிங் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

    நீங்களும் சென்றிருக்கலாமே.... ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் சைக்கிளிங் செல்லவில்லை என்று யார் சொன்னது? வெயிட் அண்ட் ஸீ நெக்ஸ்ட் பார்ட் டியர்! மிக்க நன்றி!

      Delete

  10. 1962 ம் வருடம், மதுரையிலிருந்து என் நண்பர் திரு ரமணி அவர்களைக் காண நான்
    பண்ணைக்காடு என்னும் கிராமத்திற்கு ( கொடைக்கானலுக்கு ஒரு 20 கி.மி தொலைவில் )
    சென்றேன். அங்கு அவர் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்தார்.
    அவர் என்னை பூம்பாறைக்கு அழைத்து சென்றதாக நினைவு இருக்கிறது.

    ஆயினும் நீங்கள் விவரித்த முருகன் கோவிலைப் பார்த்ததாக தெரியவில்லை.

    டிசம்பர் மாதக்குளிர் படாத பாடு படுத்தியதும் நினைவு இருக்கிறது.



    அது சரி.. பால கணேஷ் பால சரித்திரமே இங்கிருக்கிறதே பார்த்தீர்களா ? விழியின் ஓவியம் என்பதுலே
    சுடர் விழி யோட வர்ணனை.
    http://www.sudarvizhi.com/2013/04/blog-post_30.html

    /நம்ம பாலகணேஷ் சார் மாதிரி இருக்க அங்கிள்ஸ்க்கு எல்லாம் இது பொருந்தாது. பிக்காஸ் அவங்க காலத்துல எல்லாம் கல்லூரிப் பருவத்துல காதல் வந்தாலே வெளிப்படுத்த ரொம்ப பயப்படுவாங்க!//

    இதுக்கெல்லாமா பயப்படுவது ? நாங்கள்ளாம் இல்ல..

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. கொடைக்கானல் பயணத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு எனுஅ மனம் நிறைய நன்றி! அந்த சேட்டைக்காரி சுடர் ‌சொல்றதை நம்பாதீங்க நீங்க! ஹி... ஹி...!

      Delete
  11. //நல்ல கடை இருக்கு. போலாமா?’’ என்றார் ஓட்டுனர். காலையிலிருந்து இரண்டு முறை இந்த விஷயத்தைக் கேட்டுவிட்டார். ஏனென்றுதான் தெரியலை.//
    //ஓட்டுனரைக் காணவில்லை. அவர் சற்றுப்‌ பொறுத்தே கடையிலிருந்து வந்து வேனைக் கிளப்பினார்.//
    இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தால் அவர் ஏன் உங்க்லை அந்த கடைக்கு அழைத்து சென்றார் என்பது எனக்கு விளங்கிவிட்டது.

    வழக்கம்போல் உங்கள் பாணியில் (உ –ம். தலைவர் க.மீனில் ந. மீன்!) வெளுத்து வாங்கியிருக்கிறீர்கள். இரசித்துப் படித்தேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சுக்கிட்டீங்களா...? நானும் சற்றே தாமதமாய்த்தான் புரிந்து கொண்டேன். அதேவிதமாய் இங்கே பகிர்ந்திருக்கிறேன். எழுத்து நடையையும் ரசித்து் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. நாங்க முன்னாடியே கேட்ச் பண்ணிட்டோம்ல

      Delete

  12. எனக்கு எதுவும் நினவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட காலம் ஆகிவிட்டதல்லவா? இப்போது படித்து ரசிக்கும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி ஐயா!

      Delete
  13. நீங்கள் சென்று வந்திருந்தாலும் இப்போது நாங்களும் அந்தந்த இடங்களில்!

    ReplyDelete
    Replies
    1. அந்தந்த இடங்களை ரசிக்கும் உணர்வினை என் பகிர்தலைப் படித்ததன் மூலம் பெற்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. Even I wanted to know the meaning of DAGIDUDAMBAGA but I got it through Abba sir.
    Thank you. This is really a new word from and the synonym for this may be - KOKKUMAKKU.
    Travelogue is going on smoothly. But the punctuality is the great concern when you go as a team. We should punish one or two persons who are not punctual by leaving them behind. then you see all will be ready before the scheduled time.

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா... கோக்குமாக்குன்ற வார்த்தையும் இப்டித்தான். பயணக் கட்டுரையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி! இனி வரு்ம் பயணங்களில் உங்கள் ஐடியாவைப் பண்ணிட வேண்டியதுதான்!

      Delete
  15. //மதிய உணவாக இன்று மீன் குழம்பும், சிக்கன் ப்ரையும் செய்திருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து ஒரு மீனையும் சாப்பிட்டுப் பார்த்தேன். வெகு பிரமாதம்! இன்னுமிரண்டு பீஸ் ஃபிஷ்‌ஷை விழுங்கிவிட்டு //- அதான் பதிவில ஒரே மீனா இருக்கா?.. ஐ மீன், க.மீன்.. ந.மீன்..

    எஸ்கேப்... !

    ReplyDelete
    Replies
    1. ஐ மீன் வாட் யூ மீன்! அதாவது கரெக்ட்டுங்கன்னு சொல்ல வந்தேன்! ஹி... ஹி...! மிக்க நன்றிங்கோ!

      Delete
  16. நல்ல விவரிப்பு. அது என்ன இடமோ! கூடவே நாங்களும் வருகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தலைவர் சொன்ன இடம் நாங்கள் எதிர்பாராதது ரோஷ்ணியம்மா. அடுத்த பகிர்வில வெளிப்படுத்திடறேன். ரசித்துக் கூடவே வரும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  17. சுற்றுலா அனுபவம் சிறப்பு! உங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் பகிர்வது இன்னும் சிறப்பு! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்து பாணியை ரசித்துத் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. நல்ல பயணம் தொடர்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  19. பூம்பாறையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களால் தான் அதைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள‌ முடிந்தது! சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமாக எழுதுகிறேன் என்று சொல்லி தெம்பூட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  20. குழுவாக பயணித்தால் பலசிக்கல் இருக்கும் எனக்கும் அந்த கொடைக்கானல் முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது சில சோம்போறிகளின் தூக்கத்தினால் அந்த சுமையை உங்கள் பயணக்கட்டுரை குறைத்துவிட்டது தொடரட்டும் பயணம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் தம்பி! குழுவாகச் சென்றால் பொறுமை அவசியம் என்பதை அறிந்தேன். மிக்க நன்றி!

      Delete
  21. தேனிலவுக்கு கொடைக்கானல்
    சென்றபோது...
    முதலில் என்னுடன் வந்த
    வாகன ஓட்டுனர் அழைத்துச் சென்ற இடம்
    குழந்தை வேலப்பர் கோவில் தான்...
    அப்போது அவர் சொன்னார்..
    "" இந்த ஆண்டவன் போல உங்களுக்கு
    அழகான குழந்தை பிறப்பார் என்றார்""'
    அதுவும் நடந்தது...
    ====
    அடுத்து குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு கூட்டிப்போனார்...
    ====
    நினைவுகளை மீட்டெடுத்து விட்டீர்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... குழந்தை வேலப்பரை நீங்களும் தரிசித்தீர்களா? மகிழ்ச்சி! நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ந்த மகேனுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  22. குழந்தை வேலப்பர் என்ன அழகு!நீங்கள் சொல்லும் இடங்களையெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். அடுத்தமுறை எல்லாவற்றையும் தவறாமல் பார்த்துவர!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து ரசித்து வரும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!

      Delete
  23. கொடைக்கானல் உங்க கூட வே வர்ற மாதிர் இருக்குங்க. உங்க பின்னாடியே வரோம்

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் பயணித்த உணர்வைப் பெற்ற நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  24. கொடைக்காணல் பயண அனுபவத்தில் போட்டிங் போக இயலாதது இரண்டாவது ஏமாற்றம். ஆனால் மற்ற இடங்களை, இயற்கையை, கோவில்களை தரிசிக்க முடிந்திருக்கிறதே.. அந்தவகையில் நல்ல அனுபவம்தான். இயற்கையெனும் இளையகன்னியுடனான புகைப்படம் அழகா இருக்கு கணேஷ். அடுத்த இடத்தைப் பற்றி அறியும் ஆவல் மிகுகிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து கொடைக்கானலுக்கு என்னுடன் பயணித்து ரசித்து எனக்கு ஊக்கம் தரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. நாங்களும் தொடர்கின்றோம் உங்களுடன்... பல வருடங்களுக்கு முன்பு பள்ளி சுற்றுலாவாக சென்றது இப்போது உங்கள் கட்டுரை படிக்கையில் நியாபகம் வருதே நியாபகம் வருதே ஆட்டோகிராப்... :)

    ReplyDelete
  26. // ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந்து விட்டது என்றார்கள். அடடா... என்னவொரு ஏமாற்றம்!//

    அப்பாடா ஏரியும், படகும் தப்பிச்சுடுத்து ....!

    என்னன்னேன் ட்ரேட்மார்க் வார்த்தைகள் , வரிகள் இல்லாம ஏமாத்திப்புட்டீங்க ...!

    ReplyDelete
  27. ஒரு நாள் லேட்டா கமென்ட் போடறதுல இருக்கிற சிரமம் இருக்கே.. நான் போட நினைச்ச கமென்ட் எல்லாம் ஆல்ரெடி போட்டுடாங்களே.. வட போச்சே..

    ReplyDelete
  28. Read all the parts only now. Interestingly written.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube