மு.கு.1 : சென்ற பகுதியில் இரவில் ஒரு அதிர்ச்சி என்று நான் குறிப்பிட்டதை மாலையில் என்று திருத்தி வாசிக்கவும்.
மு.கு.2 : இது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.
மு.கு.3 : அப்படி அவர்கள் சந்தேகப்பட்டதால் கொடைக்கானல் படங்களை மட்டும் போடலாம் என்றிருந்த நான், அங்கே என்னை எடு்த்த படங்களையும் போட முடிவு செய்துவிட்டேன். மனதை திடப்படுத்திக் கொள்க. ஹி... ஹி...!
காலை 5.45 மணிக்கு காற்றில் குளிர் இருந்தது. பனிப் படலம் கண் முன்னால் அசைந்தது. ஸ்வெட்டர் எதுவும் அணியாததால் உடல் சற்றே நடுங்கியது. ‘‘என்னா குளிர் பாருய்யா!’’ என்றேன் உடன் நடந்த நண்பரிடம். ‘‘கரெக்ட் சார்’’ என்று அவர் சொல்ல... ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகணேஷா?’’ என்றது மனஸ். வெள்ளி அருவியில் தண்ணீர் சீஸன் இல்லாத காலங்களில பணக்காரன் விடும் கண்ணீர் போல மிக மெல்லிய கோடாக விழும் என்றும், சீஸன் சமயங்களில் அடர்த்தியான கூந்தலுள்ள பெண்ணின் பின்னல் போல தடித்து விழும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். நாங்கள் சென்ற சமயம் சீஸனின் மிகத் துவக்கம் என்றாலும், அருவியில் துல்லிய வெள்ளியை உருக்கி ஊற்றிய மாதிரி நன்றாகத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.
மு.கு.2 : இது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.
மு.கு.3 : அப்படி அவர்கள் சந்தேகப்பட்டதால் கொடைக்கானல் படங்களை மட்டும் போடலாம் என்றிருந்த நான், அங்கே என்னை எடு்த்த படங்களையும் போட முடிவு செய்துவிட்டேன். மனதை திடப்படுத்திக் கொள்க. ஹி... ஹி...!
காலை 5.45 மணிக்கு காற்றில் குளிர் இருந்தது. பனிப் படலம் கண் முன்னால் அசைந்தது. ஸ்வெட்டர் எதுவும் அணியாததால் உடல் சற்றே நடுங்கியது. ‘‘என்னா குளிர் பாருய்யா!’’ என்றேன் உடன் நடந்த நண்பரிடம். ‘‘கரெக்ட் சார்’’ என்று அவர் சொல்ல... ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகணேஷா?’’ என்றது மனஸ். வெள்ளி அருவியில் தண்ணீர் சீஸன் இல்லாத காலங்களில பணக்காரன் விடும் கண்ணீர் போல மிக மெல்லிய கோடாக விழும் என்றும், சீஸன் சமயங்களில் அடர்த்தியான கூந்தலுள்ள பெண்ணின் பின்னல் போல தடித்து விழும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். நாங்கள் சென்ற சமயம் சீஸனின் மிகத் துவக்கம் என்றாலும், அருவியில் துல்லிய வெள்ளியை உருக்கி ஊற்றிய மாதிரி நன்றாகத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.
வெள்ளி அருவியின் நுழைவாயில்! |
‘‘ஹையா! சிலுசிலுன்னு காத்துல, அருவி விழறதைப் பாக்கும் போது பாடலாம் போல இருக்கு. இந்த மலையில எங்கருந்துதான் தண்ணி உற்பத்தியாகுதோ...?’’ என்றார் நண்பர்-2. (அவர் பார்ட்டைமாக இசைக்குழு ஒன்றில் பாடவும், வாத்தியம் இசைக்கவும் செய்கிறார்). ‘‘ஊற்றுலருந்து வர்ற நீர்வீழ்ச்சி இல்ல நண்பா இது. கொடைக்கானல் ஏரியில இருந்து வர்ற தண்ணீர்தான் இந்த நீர்வீழ்ச்சியோட துவக்கம். கடல்மட்டத்துல இருந்து 5900 அடி உயரத்துல இருக்கறதால மிகத் துல்லியமான சுத்தமான தண்ணீர் இது. பாக்கறதுக்கு வெள்ளியை உருக்கி ஊத்தின மாதிரி இருக்குல்ல... அதான் ‘வெள்ளி நீர்வீழ்ச்சி’ன்னுபேரு...’’ என்றேன் நான். ‘‘யப்பா! எப்படி இப்படி தகவலாக் கொட்டறீங்க? என்னா மெமரி உங்களுக்கு!’’ என்றார் நண்பர் ஆச்சரியமாக. ‘‘அதெல்லாம் ஒரு மண்ணுமில்லய்யா. டூர் கிளம்பறதுன்னு முடிவானதுமே எந்தெந்த இடங்கள் சுத்திப் பாக்க இருக்கு? அதோட விசேஷங்கள் என்னன்னு கூகிள்ல சர்ச் பண்ணி குறிப்பெடுத்துக்கிட்டேன். அவ்வளவுதான்!’’ என்றேன்.
பார்க்கவே பிரசவம்... ச்சே, பரவசம் தரும் நீர்வீழ்ச்சி! |
வெள்ளி அருவியை சற்று நேரம் ரசித்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் வேனுக்குத் திரும்பலாம் என்று வந்த எங்களை அங்கிருந்த கடைகள் வரவேற்றன. தைலம், சாக்லெட்டுகள் போன்றவற்றை விற்கும் கடைகளும், அருகிலேயே டீ மற்றும் டிபன் கிடைக்கும் கடைகளும் இருந்தன. ‘‘நமக்கு புக் பண்ணியிருக்கற காட்டேஜ்ல டிபன் காத்துட்டிருக்கும். அதனால ஒரு காப்பி மட்டும் குடிச்சுட்டு போயிரலாம்’’ என்றார் தலைவர். டீக்கடையில் அருகில் வந்தால்... அங்கே ஃப்ரெஷ்ஷாக செடியிலிருந்து பறித்த கேரட்டுகளை வைத்திருந்தார்கள். பார்க்கவே அவ்வளவு அழகாக, ஆசையாக இருந்தது. மூன்று கொத்து கேரட்டை வாங்கி அனைவரும் ஷேர் பண்ணிக் கொண்டு, காபி குடித்தபின் வேன் ஏறினோம்.
பச்சைப் பசேலென்று... ஸாரி, செக்கச்செவேல் கேரட்! |
நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த காட்டேஜ் மிக அழகாகவே இருந்தது. தரைமட்டத்திலிருந்த உயர்த்திக் கட்டப்பட்டிருந்த அதில் முதல் தளத்தில் இரு பெரிய அறைகளும் இரண்டாம் தளத்தில் மூன்று சிறிய அறைகளும் இருந்தன. கீழே 3 + 3 = 6 பேரும், மேலே 2+2+2 ஆக 6 பேரும் அவரவருக்கான அறைகளை முடிவு செய்ததும் தலைவர், ‘‘இப்ப மணி ஏழரை. ஒன்பது மணிக்கு குளிச்சு ரெடியாகி கீழ்தளத்துக்கு வந்துடு்ஙக. டிபன் ரெடியாயிருக்கும். சாப்டுட்டு புறப்படலாம்’’ என்றார். அறைக்குச் சென்று குளிக்கலாம் என்று ஹீட்டரைப் போட்டால், தண்ணீர் சூடாக வரவில்லை. மிக வெதுவெதுவெனத் தான் வந்தது. ‘‘இப்பத்தான் கரண்ட் வந்துச்சுங்க...’’ என்றார் விடுதிப் பராமரிப்பாளர். அப்போதுதான் நாம் சென்னையிலில்லை, தென்தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பது உறைத்தது. தமிழக அரசை வாழ்த்தியபடி குளித்துத் தயாரானேன்.
மணி 8.30 தானே ஆகுது, நாம வந்துட்ட தகவலை வீட்டுக்குச் சொல்லலாம் என்று செல்லைக் கையிலெடுத்தபடி அறையை விட்டு வெளியே வந்தேன். காலைப்பனியில் எதிரில் தென்பட்ட மலையின் அழகை க்ளிக்கியபடி டயல் செய்ய, பக்கத்து அறையில், மேல் தளத்தில் இருந்தெல்லாம், ‘‘ம்ம்ம்... வந்துட்டேம்மா. குளிச்சாச்சு. இனிதான் சாப்பிடப் போறேன்’’ என்று குரல்கள் கேட்டன. எல்லாருமே அவரவர் வீணையை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தால் (சம்சாரம் என்பது வீணை - கண்ணதாசன்) ஆளாளுக்கு பேசறாங்கன்னு புரிஞ்சதும் சிரிப்பு வந்துடுச்சு. ம்... Houseக்கு ஹவுஸ் Door Steps!
போன் பேசி முடிச்ச நேரம் காலை டிபன் வந்துசேர, அதன்பேரில் பாய்ந்தோம் அனைவரும். காரணம்... நேற்று இரவு உணவுக்காக நிறுத்தப்பட வழிநடை ஓட்டல் கழிசடை ஓட்டலாக இருந்ததும், அங்கே வறட்டி மாதிரி காய்ந்துபோன சப்பாத்தியும், ஆஃப்பாயில்டு தோசையும் மட்டுமே கிடைத்ததால் யாரும் சரியாகச் சாப்பிடாததும்தான்! சும்மா சொல்லப்படாது. டிபன் அருமையான ப்ரிப்பரேஷன்! மெதுமெது இட்லி, க்ரிஸ்பி வடை, கமகம பொங்கல், காரமான சட்னியும், வெங்காய சாம்பாருமாக... ஆஹா...! டிவைன்! (சாப்பாட்டைப் பத்தி எழுதினா இந்த வார்த்தையும் வரணும்ல...? ஹி... ஹி....)
காட்டேஜிலிருந்து என்னை எடுத்தது! |
போன் பேசி முடிச்ச நேரம் காலை டிபன் வந்துசேர, அதன்பேரில் பாய்ந்தோம் அனைவரும். காரணம்... நேற்று இரவு உணவுக்காக நிறுத்தப்பட வழிநடை ஓட்டல் கழிசடை ஓட்டலாக இருந்ததும், அங்கே வறட்டி மாதிரி காய்ந்துபோன சப்பாத்தியும், ஆஃப்பாயில்டு தோசையும் மட்டுமே கிடைத்ததால் யாரும் சரியாகச் சாப்பிடாததும்தான்! சும்மா சொல்லப்படாது. டிபன் அருமையான ப்ரிப்பரேஷன்! மெதுமெது இட்லி, க்ரிஸ்பி வடை, கமகம பொங்கல், காரமான சட்னியும், வெங்காய சாம்பாருமாக... ஆஹா...! டிவைன்! (சாப்பாட்டைப் பத்தி எழுதினா இந்த வார்த்தையும் வரணும்ல...? ஹி... ஹி....)
குறிஞ்சியாண்டவர் ஆலய முகப்பு! |
சம்பிரதாயப்படி முதலில் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வேனை செலுத்தச் சொன்னார் தலைவர். கோயிலை அடைந்ததும் அதன் முகப்பில் படங்கள் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே கேமரா அனுமதி இல்லையாம்! குறிஞ்சியாண்டவர் கோயில் சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்தது. முருகப் பெருமானும் அப்படியே... சிறிய மூலவராக இருந்தாலும் கொள்ளையழகாக இருந்தார். பிராகாரத்தில் நாங்கள் நடக்க, ‘‘தலைவா! இந்தக் கோயிலப் பத்தி என்ன குறிச்சு வெச்சீங்க/’’ என்று மறக்காமல் கேட்டார் நண்பர். ‘‘அதுவா..? 1934ம் ஆண்டுல ஐரோப்பாவுலருந்து வந்த லீலாவதிங்கற அம்மையார் கட்டினது இந்தக் கோயில். இப்ப பழநி கோயிலோட கட்டுப்பாட்டுல இது இருக்குது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கற குறிஞ்சிப் பூவை அது பூக்கற வருஷத்துல வந்தா இங்க பாத்து மகிழ முடியும்’’ என்றேன் நான்.
‘‘லாஸ்ட்டா எப்ப அந்தப் பூ பூத்தது? இனிமே எப்பப் பூக்கும்?’’ மற்றொரு நண்பர் கேட்க, ‘ழே’யெனறு விழித்தேன் நான்.‘‘ஸாரிப்பா... அதை நோட் பண்ணிக்கணும்னு தோணாமப் போச்சே...’’ என்றபடி தரிசனம் முடித்து பிராகாரத்தில் சற்று நேரம் அமர்ந்தோம். ஆலயத்தின் தரையை கிரானைட்டால் அமைத்தது ராமசுப்பையரின் குடும்பத்தினர் என்று தங்களின் சரித்திர சாதனை(!)யை கல்வெட்டாக பிராகாரத்தில் பொறித்திருந்தது தினமலர் நாளிதழ். ஆலயத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த கடைகளில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.
‘‘லாஸ்ட்டா எப்ப அந்தப் பூ பூத்தது? இனிமே எப்பப் பூக்கும்?’’ மற்றொரு நண்பர் கேட்க, ‘ழே’யெனறு விழித்தேன் நான்.‘‘ஸாரிப்பா... அதை நோட் பண்ணிக்கணும்னு தோணாமப் போச்சே...’’ என்றபடி தரிசனம் முடித்து பிராகாரத்தில் சற்று நேரம் அமர்ந்தோம். ஆலயத்தின் தரையை கிரானைட்டால் அமைத்தது ராமசுப்பையரின் குடும்பத்தினர் என்று தங்களின் சரித்திர சாதனை(!)யை கல்வெட்டாக பிராகாரத்தில் பொறித்திருந்தது தினமலர் நாளிதழ். ஆலயத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த கடைகளில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.
ஆலய வாசலில் எங்கள் குழுவின் ஒரு பகுதி! |
அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். ஸ்டைல் தொப்பிகள் (பாடும்போது நான் தென்றல்காற்று) அழகாக இருக்கவே அதில் ஒன்றை எடுத்து, ‘‘என்ன விலைங்க?’’ என்றேன். ‘‘130 ரூபாய்ங்க...!‘‘ என்றார் கடைக்காரர். ‘யப்பா!’ என்று பின்வாங்கி வேனுக்குப் பாய்ந்து விட்டேன். வேன் டிரைவர் வேனைக் கிளப்ப, ‘‘அடுத்து எங்க போறோம் தலைவா?’’ என்று கேட்டேன். ‘‘தூண் பாறைக்குப் போலாம் சார்!’’ என்றார் அந்த மலைப் பிரதேசத்தின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த வாகன ஓட்டுனர்!
-தொடர்கிறேன்....
மே.மை. இப்போது : இருபதாண்டுகளுக்குப்பின்-2
-தொடர்கிறேன்....
மே.மை. இப்போது : இருபதாண்டுகளுக்குப்பின்-2
|
|
Tweet | ||
கற்பனை பயணக் கதையா நம்பவே முடியலையே!
ReplyDeleteலைட்ஸ் ஆன் ராகி ரா சினிமா களிஞர்கள் பற்றி பாக்காமலே பேட்டி கண்டது போல( நீங்க சொன்னதுதானே பாஸ்) வித்தியாசமான முயற்சி.
வீணை மேட்டர் சுப்பர்
அடடா... கற்பனை இல்லை, உண்மைலயே போய் வந்ததுன்னு தானே சொல்லியிருக்கேன். அங்க எடுத்த படங்கள்கூட ஷேர் பண்ணியிருக்கேனே முரளி... கவனிக்கலையா? வீணை மேட்டரை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteகாட்டேஜ்ல எடுத்தத பாத்தா ஓட்ட வச்சது மாதிரியே இருக்கே. ஹிஹிஹி
Deleteதங்களது எழுத்து நடையில் மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது பயணக்கட்டுரை... குறிஞ்சிப்பூ தகவல்களை ரசித்தேன்...
ReplyDeleteஎழுத்து நடையை ரசித்த ஸ்கூல் பையனுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete1988 க்குப் பிறகு இப்போதுதான் கோடைக்கானலைப் பார்க்கிறேன் உங்கள் பதிவின் மூலம்! நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு உங்கள் பதிவைப் படித்தபோது ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇத்தொடரின் மூலம் கொடைக்கானல் வரும் உங்களுக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்!
Delete//(சாப்பாட்டைப் பத்தி எழுதினா இந்த வார்த்தையும் வரணும்ல...? ஹி... ஹி....)// ஹா ஹா ஹா
ReplyDeleteஎல்லா சரி என்ன அதிர்ச்சின்னு சொல்லவே இல்ல... அரசன் ஒரு கவிதை புக்கு தயாரா வச்சிருக்காரு.. உங்களுக்கு மூணு பார்சல் பண்ண சொல்லிருவேன்... எங்களக்கு கிடைச்ச ஆயுதம் அந்த கவித புக்கு தான்... அத படிச்சா அவனவன் ஷாவனும் ( எந்த வாய்ஸ் மாடுலேஷன்ல படிக்கணும்ன்னு உங்களுக்கு சொல்லியா குடுக்கணும் வாத்தியரே)
படங்களும் படங்களில் நீரும் அருமை ( இங்கு நீர் என்பது நீரை அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்)
ஒரு வருடத்திற்கு முன்பு கொடை சென்றது இதைப் படிக்கும் பொழுது மீண்டும் செல வேண்டும் போல் உள்ளது...
உங்கள் நண்பர் கேட்டாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது, ஆனால் நல்ல உத்தி.. இப்பதி தான் இருக்க வண்டும் என்பது போல் உள்ளது, வழித் தகவல்களை நீங்கள் உரைப்பது...
யோவ், நான் அதிர்ச்சியானது மாலையிலன்னு சொன்னேன்ல... இப்பதானே காலைல ஊர்சுத்திட்டிருக்கோம். இன்னும் பாக்க வேண்டியது, மதிய உணவு, ரெஸ்டுன்னு எவ்வளவு சொல்ல வேண்டியருக்கு. சற்றுப் பொறுத்திரும் ஐயா! ப.ப. எழுதின கவிதைகளைப் படிச்சே பொழைச்சவன் நான். அரசன் வெச்சிருக்கறதுல்லாம் ஜுஜுபி...! அப்புறம்... நண்பர் கேட்டதென்னவோ நிஜம்தான். அது எல்லா இடத்துலயும் இல்ல... அது நானா சேத்துக்கிட்டது- தகவல்களோட தரணும்கறதுக்காக. படிச்சு ரசிக்கிற உனக்கு என் மனம் நிறை நன்றி!
Delete//காலை டிபன் வந்துசேர, அதன்பேரில் பாய்ந்தோம் அனைவரும்.///
ReplyDeleteஇதை நீங்க சொல்ல வேண்டியதே இல்லை. ஆலய வாசலில் உங்கள் குழுவின் ஒரு பகுதியிம் போட்டோவை பார்த்தாலே புரிகிறது. ஹீ.ஹீ
ஹா..ஹா..!
Deleteயப்பா மதுரைத்தமிழா! வஞ்சனையில்லாத மனசுக்குச் சொந்தக்காரங்க நாங்கன்றதால கொஞ்சம் ஊட்டமா இருக்கோம். அதுக்காக இப்படியா கலாய்க்கிறது..? உஷா மேடத்துக்கு என்ன குஷி பாருங்க...! மிக்க நன்றி நண்பா!
Deleteஇது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.
ReplyDelete//ஹா ஹா..சூப்பர்.அண்ணா,படங்கள்ளாம் கம்பியூட்டர் கிராபிக்ஸா என்றெல்லாம் கேட்க மாட்டோம்.டோண்ட் வொரி.முழுசா படிச்சுட்டு வர்ரேன்.
என்னை நம்பிய தங்கைக்கு என் மனம் நிறைந்த நன்றி!
Deleteஎப்போதோ நேரில் பார்த்தவை! மீண்டும் நினைவு படுத்தும் பதிவு! நன்றி!
ReplyDeleteநினைவுகளில் சென்று ரசித்த உங்களுக்கு என் .உளம் கனிந்த நன்றி!
Deleteஅப்படி அவர்கள் சந்தேகப்பட்டதால் கொடைக்கானல் படங்களை மட்டும் போடலாம் என்றிருந்த நான், அங்கே என்னை எடு்த்த படங்களையும் போட முடிவு செய்துவிட்டேன். மனதை திடப்படுத்திக் கொள்க. ஹி... ஹி...!//
ReplyDeleteநல்லவேளை சொன்னிங்க....
இல்லாட்டி என் மனம் நொறுங்கியிருக்கும்
ஹி... ஹி... ஹி...!
Deleteஅப்போதுதான் நாம் சென்னையிலில்லை, தென்தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பது உறைத்தது.///
ReplyDeleteநாங்க தினமும் உறைக்கிறோம்....
அத நினைச்சு எப்பவும் நான் வருத்தப்படறதுண்டு. ஆனாலும் நிதசர்சனம் நேர்ல சந்திக்கறப்ப சூடு கொஞ்சம்கூடத்தான் நண்பா!
Deleteகுறிஞ்சியாண்டவர்ன்னு சொன்னதும் ஒரு தகவல் உங்களுக்காக...
ReplyDeleteஅங்க இருந்து பழனி மலை ரொம்ப பக்கம்... கோயிலுக்கு இடப்பக்கமா ஒரு பள்ளத்தாக்கு இருக்கே. அங்க இருந்து பழனி கிட்டத்தட்ட நேர் திசையில் இருக்கு.
அதனால குறிஞ்சி டூ பழனிக்கு ரோப்கார் விட சாதகமான இடமாம் குறிஞ்சி அமைந்துள்ள இடம்...
சர்வே எடுத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கேன்.
அப்படி ரோப்கார் வந்தால் கொடைக்கானலுக்கு பயண நேரம் குறைவே...
அட.. இது புதுத் தகவல் எனக்கு! ரசித்துப் படித்து அருமையான கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா!
Deleteசார், பதிவை ரெண்டு மூணு தடவ படிச்சுட்டேன்.. இரவு / மாலை எங்கேயும் அதிர்ச்சிய காணோமே.. ( நாங்கெல்லாம் உலக சினிமாலயே ஓட்டை எங்கேன்னு கண்டு பிடிப்போம்லே!!)
ReplyDeleteஅது இந்தத் தொடரோட நாலாவது பார்ட்லதான் வரும் நண்பா. காலை ஊர்சுற்றல், மதிய ஓய்வு முடிந்தால்தானே மாலை அதிர்ச்சி! மிக்க நன்றி!
Deleteசாப்பாடுன்னா டிவைன் வரணும். :)) இன்னும் படங்கள் போட்டிருக்கலாம். அந்த நீலகலர் டீசர்ட் நீங்களா? ஆளே மாறீட்டீங்க.
ReplyDeleteரசிச்சு சிரிச்சதுல எனக்கு மகிழ்ச்சி! நீல டீஷர்ட் யாமே! ஆனால் மாறல்லாம் இல்லீங்க... இதே திருவுருவம்தான் எப்பவும். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Delete// தலைவர் மற்றும் மேல்நிலை, கீழ்நிலை எல்லாருமாகச் சேர்த்து புறப்பட்டவர்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். //
ReplyDeleteரெம்ப சின்ன சைஸ் குருப் ஆ இருக்கேன்னு நினைச்சேன் . ஆலய வாசலில் எங்கள் குழுவின் "ஒரு பகுதி" புகைப்படத்தை பார்த்தவுடன் - பிரமிச்சுப்போயிட்டேன். ஒரு பகுதியே பெரும்பகுதியா இருக்கேன்னு. குழுவின் மொத்தப் பகுதியியையும் ஒண்ணா பாத்தா ? ஆத்தாடி...! நெனச்சுப்பாக்கவே முடியல . வைடு ஆங்கிள் கேமரா தான் வேணும் .
//சென்னையிலிருந்து மதுரை வரை ஃப்ளைட்டில் சென்று, அங்கிருந்து வேன் வைத்துச் செல்லலாம் என்று நான் சொன்னதற்கு என் சகாக்கள் ஏன் அப்படி முறைத்தார்கள் என்றுதான் சத்தியமாக எனக்குப் புரியவில்லை.//
இப்ப புரிந்துடுத்து எனக்கு . பிளைன் தாங்காதுன்னா ..தாங்காது ...!
// நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.
ஸ்வெட்டர் எதுவும் அணியாததால் உடல் சற்றே நடுங்கியது. ‘‘என்னா குளிர் பாருய்யா!’’ என்றேன் உடன் நடந்த நண்பரிடம். ‘‘கரெக்ட் சார்’’ என்று அவர் சொல்ல... ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகணேஷா?’’ என்றது மனஸ்.
அப்போதுதான் நாம் சென்னையிலில்லை, தென்தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பது உறைத்தது.
Houseக்கு ஹவுஸ் Door Steps! //
ரெம்பவே ரசித்த ரசனையான , ரகளையான வரிகள் . செஞ்சுரிய நெருங்கிட்டீங்க , அடிச்சு தூள் கிளப்புங்க ...
ஹா..ஹா..!
Deleteவைடு ஆங்கிள் லென்ஸ் எதுவும் இல்லாமலே மொத்தப் பேரையும் எடுத்த படம் பின்னால வருது நண்பா...! ஆனாலும் இப்படியா ஓவரா கலாய்க்கிறது..? பாருங்க உசா மேடம் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க! என் எழுத்து நடையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநானும் கலாய்க்கலாம்னுதான் நினைச்சேன்.. கோவிச்சுப்பிங்களோன்னு விட்டுட்டேன். ஆமா யாரும் chair -ஐ விட்டு எந்திரிக்கிறதே இல்லையா? மாசத்துக்கு ஒரு முறை பொடி நடையா இப்படி எதாவது ஒரு மலையை சுத்துங்கோ...! ஹா..ஹா..
Deleteமன்னிச்சிடுங்கோண்ணா..! மன்னிச்சிடுங்கோ...! கொஞ்சம் ஓவராத்தான் போயிடுத்து , சரி கமெண்ட டெலிட்டீரலாம்னு வந்து பாத்தா , அதுக்குள்ளார உஷாக்கா எரியுற தீயுல பெட்ரோல ஊத்திட்டு போயிட்டா(ர்) . கோவிச்சுக்காதேள் ண்ணா...! ஏதோ அறியா சிறுவன் தெரியாமல் பண்ணிட்டன் . பெரியவா(ல்) நீங்க தான் கொஞ்சம் பெரிய மனசு(?) பண்ணி என்ன மன்னிக்கணும் . இதுக்காக ஆத்துப்பக்கமெல்லாம் வரமா போயிடாதேள் , தவிச்சுப்போயிடுவேன் தவிச்சு…! பெரியவாள் ஆசிர்வாதம் நேக்கு எப்பவும் வேணுமாக்கும் .
Delete//ஆமா யாரும் chair -ஐ விட்டு எந்திரிக்கிறதே இல்லையா? மாசத்துக்கு ஒரு முறை பொடி நடையா இப்படி எதாவது ஒரு மலையை சுத்துங்கோ...! ஹா..ஹா..//
உஷாக்கா போதும்க்கா ... நெனச்சு நெனச்சு பெட்ரோல் ஊத்துவீங்கபோல ..? வேணாங்க விட்ருங்க நா பொழச்சு போறேன் . அய்யோ அண்ணா சத்தியமா நானில்ல.....
கலாய்த்தலும், பதிலுக்கு கலாய்க்கப்படுதலும் நட்பின் உரிமை உஷா! கோபம்லாம் வராது எனக்கு. நான் தினமும் காலைல ஒரு மணி நேரம் வாக்கி்ங் போறது வழக்கம். ஆனாலும் இளைக்கற வழியத்தான் காணோம். டயத்தக் கூட்டிப் பாத்துரலாமோ...? ஜீவன்சுப்பு...! எப்பல்லாம் டைம் கிடைக்குதோ அப்பல்லாம் எலலார் ஆத்துப் பக்கமும் தவறாம வருவேன் நான்!
DeleteEven if you beat on our head and said that you had been to Kodaikanal, we will definitely believe it. Housekku House door steps - avaravar Veenaiai Vittu Pirinthu - TYPICAL BALAGANESH PUNCH!!
ReplyDeleteஎன் எழுத்தை ரசித்துப் பாராட்டி உறசாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Delete‘‘130 ரூபாய்ங்க...!‘‘ என்றார் கடைக்காரர். ‘யப்பா!’ என்று பின்வாங்கி வேனுக்குப் பாய்ந்து விட்டேன்.//130 ரூபாயைப்பார்க்காமல் பேசாமல் வாங்கி எம் ஜி ஆர் ஸ்டைல் தொப்பியை மாட்டி ஒரு போஸ் கொடுத்து பதிவு போட்டு இருந்திருக்கலாமில்ல?
ReplyDeleteஅப்புறம் நிதானமா யோசிச்சப்ப இதேதான் எனக்கும் தோணிச்சும்மா. சரி... அடுத்த முறை போறப்ப பாத்துக்கலாம்னு மனசைத் தேத்திக்கிட்டேன். மிக்க நன்றிம்மா!
Deleteகுறிஞ்சியாண்டவர் கோயில்லயே குறிஞ்சிச்செடி இருக்குமே. அடுத்தாப்ல எப்போ பூக்கும்ன்னும் பக்கத்துலயே அறிவிப்புப் பலகையில் எழுதி வெச்சுருப்பாங்க. நாங்க ஏழெட்டு வருஷம் முன்னாடி போயிருந்தப்ப அப்பத்தான் சீசன் ஆரம்பம். கோயில் வாசல்லயே கொத்துக்கொத்தா வெச்சு வித்துட்டிருந்தாங்க. பழனி மலைக்கு இங்கிருந்து ரோப் கார் வசதி வரப்போவுதுன்னு அப்பவே எங்க கைடு சொன்னார். இன்னுமா வேலை முடியலை!!!
ReplyDeleteகாரட் வாங்கறதெல்லாம் சரி, கவனமா சாப்பிடுங்க. குரங்குகள் பிடுங்கிட்டுபோயிரும் :-))
அவிச்ச மக்காச்சோளம் கிடைக்குமே டேஸ்ட் செஞ்சீங்களா?
அடடா.. அந்த அறிவிப்புப் பலகைய கவனிக்காம மிஸ் பண்ணியிருக்கேனே... ரோப் கார் எப்போஓஓஓ வருமோ? வந்தா நிச்சயம் போய்ப பாத்திரணும். ராமதூதர்களால பட்ட அவஸ்தையும், படமும் தனியா பின்ன வரும் சாரல் மேடம்! மக்காச்சோளம் சாப்பிட்டோம். நிறைய சாப்பிட்ட விஷயங்களா எழுத வேணாமேன்னுதான் எழுதலை. உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு உளம் நிறைய நன்றி!
Deleteலாஸ்டா குறிஞ்சி பூத்தப்ப நான் அங்க போயிருந்தேனே!!! வருஷம் ஞாபகத்துக்கு வரலை. அயித்தானின் (மறைந்த) அண்ணன், அவரது மனைவி, அயித்தானின் அக்கா குடும்பத்தினர்னு ஆனந்தமா கொடைக்கானல் ட்ரிப் அடிச்ச ஞாபகம் வருது. ஆனா வருஷம் ஞாபகத்துக்கு வரலை.
ReplyDeleteஉங்க போட்டோ பாத்துட்டு நீங்க நெசமா கொடைக்கானல் போய்வந்ததா நம்பிட்டோம்.
அடுத்த முறை குறிஞ்சி பூக்கற சமயத்துல பதிவர் சந்திப்பை அங்க வெச்சு எல்லாரும் போய் ஜமாச்சிரலாமா தென்றல் மேடம்! நான் கொடைக்கானல் போய் வந்ததை நம்பிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteரசிக்க வைக்கும் பயணம்...
ReplyDeleteஅடுத்த முறை எங்கள் ஊருக்கு வந்தால் தான், கொடைக்கானல் சென்று வந்தீர்கள் (100%) என்று நம்புவேன்... ஹிஹி...
குரூப்பாப் போனதால சில நிர்ப்பந்தங்கள்னால உங்களையும், தமிழ்வாசியையும் மிஸ் பண்ணினேன். அடுத்த முறை உங்களையும் கூட்டிக்கிட்டுத்தான் விசிட் நண்பா. மிக்க நன்றி!
Deleteஇந்த ஏப்ரலில் .வெயில் மண்டையை பிளக்குதே என்று ஒவ்வொருவரும் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்க ,நீங்கள மட்டும் //ஸ்வெட்டர் எதுவும் அணியாததால் உடல் சற்றே நடுங்கியது. ‘‘என்னா குளிர் பாருய்யா!’’ என்றேன் //
ReplyDeleteநியாயமா இது?
எனக்கும் பள்ளி சுற்றுலா சென்ற நினைவு வந்தது உங்கள் பயணக் கட்டுரைப் படிக்கும் போது. எழுத்து நடை லாவகமாக கொடைக்கானலுக்கு எங்களை அழைத்து செல்கிறது.
வாழ்த்துக்கள்....தொடருங்கள்.....
என் எழுத்து நடையை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபடங்கள் குறைவுதான். விவரணை அருமை.
ReplyDeleteபடங்கள் நிறைய வெச்சிட்டமோன்னு மனசுல நினைச்சுட்டிருந்தேன். நீங்க சொல்றது தெம்பூட்டுது. இன்னும் கூட்டிரலாம். விவரணையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநானும் நம்பிட்டேன்...:)
ReplyDeleteவெள்ளி அருவியும், குறிஞ்சியாண்டவர் கோயிலும் படங்களும் தகவல்களும் நன்று...
அதிர்ச்சி அடுத்த பகுதியிலா?
அதிர்ச்சி நான்காவது பகுதியில் வரும் தோழி. படங்களையும் தகவலையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவிவரங்கள் அருமை.
ReplyDeleteஆங்காங்கே இருக்கும் உங்கள் டச்! ரசித்தேன்....
புகைப்படத்தில் கலக்கறீங்க பாஸ்!
என் எழுத்தில் ஸ்பெஷல் டச்சையும், படத்தையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி நண்பா!
Deleteகுறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பார்த்தால் பழனி மலை தெரியும்தானே? ரொம்ப நாளாச்சு கொடை போய்..!
ReplyDeleteதெரிகிறது. நின்று ரசித்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழைந்தோம். ஒரு முறை போய் வாருங்கள் உஷா. நன்றாக இருக்கிறது சீஸன்! ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஅதிர்ச்சியை சொல்வீர்கள் என்று எல்லோருமே காத்திருந்தால், இரவில் இல்லை மாலையில் அதிர்ச்சி என்று திருத்தி வாசிக்கவும் என்று சொல்லிவிட்டீர்களே! மாலையிலோ, இரவிலோ அதிர்ச்சி அதிர்ச்சி தானே!
ReplyDeleteநிச்சயம் அந்த மாலை அதிர்ச்சி நான்காம் பாகத்தில் வரும். சற்றே பொறுத்திருங்கள். நிச்சயம் ஏமாற்ற மாட்டேன்மா. மிக்க நன்றி!
Deleteமு.கு.2 : இது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்./// நல்ல வேள, போரதுக்கு முன்னாடியே நீங்க என்கிட்ட சொல்லீட்டதுனால எனக்கு உண்மை தெரிஞ்சது! இல்லாட்டி எனக்கும் இந்த சந்தேகம் வந்து இருக்கும்!
ReplyDeleteஆனாலும் ரொம்ப ஸ்வாரஸ்யமாத்தான் இருக்கு சார்! நேர்ல போய் பாத்தது மாதிரியே இருக்கு உங்க பகிர்வ படிக்கும் போது! எதெல்லாம் ஸ்வாரஸ்யம்னு பிரிச்சு சொல்லத் தெரியல! மொத்தமாவே ஸ்வாரஸ்யம்தான்! ஆனாலும் போரதுக்கு முன்னாடியே கூகுல் சர்ச் செய்யரது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியல. அவ்வ்வ்வ்வ்வ்
போற இடங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டா கூடுதலா ரசிக்கலாமேன்னுதான் முன்னாடியே சர்ச் போட்டேன். இது ஓவராம்மா சுடர்? நல்லவேளை... நீயாவது என்னை நம்பி சாட்சி சொல்றியேம்மா. மிக்க மகிழ்வுடன் என் மனம் நிறை நன்றி!
Deleteசுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளீர்கள். படங்கள் நன்று. செக்கச்செவேல் கேரட்கள் பளிச் பளிச்:)!
ReplyDeleteகாலேஜ் புரொபஸர், ஐந்தாம் வகுப்புச் சிறுவனை பாராட்டுவது மாதிரி படங்கள் நன்று என்கிற உங்கள் வார்த்தைகள் யானை பலம் எனக்கு! ரசித்து ஊக்கம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசுவாரசியம்.
ReplyDeleteRanjani Narayanan சொல்வது சரி. டயத்தை மாத்தினா உணர்வு மாறிடுமா? சுஜாதா இப்படி ஒரு வாட்டி எழுதி 'ஙே' ஆனாதால் நீங்களும் சுஜாதாவும் 1 :-)
இந்த விஷயத்துலயாவது சுஜாதாகிட்ட நெருங்க முடியுதேன்னு அல்ப சந்தோஷம் எனக்கு. ஹி... ஹி...! மிக்க நன்றி அப்பா ஸார்!
Deleteகுறிஞ்சியாண்டவர்// அவரை நானும் நானும் தரிசித்தேன் அண்ணாச்சி என்ன ஒரு அம்சம்ம்ம்ம்ம்! ஆனால் படம் எடுக்க எல்லாம் என் குருநாதர் விடவில்லை!ம்ம்
ReplyDeleteகுறிஞ்சி ஆண்டவரை தரிசித்த, என் எழுத்தை ரசித்துப் படித்த, வரும் வார வலைச்சர ஆசிரியரான தம்பி நேசனுக்கு என் இதயம் நிறைய நன்றி!
Deleteவணக்கம் சகோதரரே...
ReplyDeleteரசிக்க வைக்கும் பயணம்... உங்கள் கொடைக்கானல் பயணத்துடன் வந்து இங்கு இனைந்துகொண்டேன்.
அருமையாகப் பகிர்கின்றீர்கள். அழகிய படங்கள். அதிர்ச்சி தரும் படமும் ஒன்று...:).
வழக்கமான நகைச்சுவையோடு உள்ள உங்கள் எழுத்துக்கள், மிகவும் ரசிக்கின்றேன்.!
தொடரட்டும் உங்கள் பயணங்கள்... வாழ்த்துக்கள் சகோ.
மகிழ்ச்சி தந்தது உங்களின் வருகை இளமதி சகோ. என் எழுத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநல்லாத் தான் சுற்றி காண்பித்துக் கொண்டு வருகிறீர்கள்
ReplyDeleteகைடு சார் .. சாரி கணேஷ் சார் .
ராமதூதர்களால் ஏதும் அதிர்ச்சியோ ?
ராமதூதர்களால் அதிர்ச்சி எதுவும் இல்லீங்க.. சின்ன அவஸ்தைதான்! கைடின் பணியை ரசிக்கிற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவாவ்... ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க!!சம்சாரம் எனபது வீணை????
ReplyDeleteதொடர்ந்து ரெண்டு வருஷம் போனேன் சார்,.. எதனை முறை போனாலும் சலிக்காத இடங்கள்!!
என்ன அதிர்ச்சி சொல்லவே இல்ல!
''..சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்...'''ha!..ha!...கதை நடைப் பாணி நன்றாகப் போகிறது.
ReplyDeleteசுவையாக உள்ளது. நன்றி.
வேதா. இலங்காதிலகம்.