Saturday, April 27, 2013

மொறுமொறு மிக்ஸர் - 17

Posted by பால கணேஷ் Saturday, April 27, 2013
பார்த்தது : ‘‘ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துல ஒரு காட்சி வரும். வில்லன் ஒரு சர்வாதிகாரியான மன்னன். அவரோட அரசவையில வைத்தியரான எம்.ஜி.ஆரை கைது செஞ்சு கொண்டு வருவாங்க. சர்வாதிகாரி, தைரியமாப் பேசற எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘என்னோட அதிகாரம் என்னன்னு உனக்குத் தெரியுமா/’ என்பான். அதற்கு அவர், ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? - அது காலத்தை வென்று நிற்பதற்கு!’ என்று பதிலளிப்பார். என்னைய மாதிரி வாத்தியாருங்க பசங்களுக்கு மணிக்கணக்கா பாடம் சொல்லி சிலப்பதிகாரத்தோட சிறப்பை விளக்க வேண்டியிருக்கும். ஆனா இந்த ரெண்டு வரி வசனத்தால இன்னும் நிறையப் பேரோட மனசுகள்ல சிலப்பதிகாரத்தோட சிறப்பு போய்ச் சேர்ந்தது. அதாங்க சினிமாவோட சக்தி...’’

-தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சேனல் சேனலாகத் தாவி (கொஞ்ச நேரம்) தொலைக்காட்சி பார்த்தபோது ஏதோ ஒரு சானலி்ல முனைவர் கு.ஞானசம்பந்தன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார். நிஜம்தான்! சினிமா என்கிற அந்த மகத்தான மீடியாவின் சக்தியே அலாதிதான், அதை சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தில் எம்.ஜி.ஆருக்கு இணையாக யாரையும் சொல்லிவிட முடியாது என்கிற எண்ணம் என் மனதிலும் எழுந்தது.

==================================================
 
ரசித்தது :  நமது சக பதிவர் கோவை மு.சரளாதேவி எழுதிய காதல் கவிதைகளைத் தொகுத்து ‘காதலின் சாரல்’ என்ற தலைப்பில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். காதல் சுமந்த கவிதைகள் ரசனைக்குரியவை. அதிலும் சரளாவின் சொக்க வைக்கும் தமிழில் இன்னும் சிறப்பாக ஜொலித்து ரசனை‌க்குத் தீனியாக அமைந்திருக்கின்றன ஒவ்வொரு பக்கங்களும்.

ஸ்பாட் லேமினேஷன் செய்த அழகிய முகப்புடன், ரசனைகூட்டும் படங்கள் வைத்து லேஅவுட செய்யப்பட்டு ஒரே மூச்சில் படிக்கும் உந்துதலை ஏற்படுத்துகிறது புததகம். 64 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை கோயமுத்தூரில் ராஜவீதியில் 20ம் எண்ணில் இருக்கும் விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். கையைக் கடிக்காத வண்ணம் 30 ரூபாய் விலையில் வெளியிட்டிருப்பது இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு. இயன்றவர்கள் வாங்கிப் படித்து ரசியுங்கள்!

==================================================

கேட்டது : சமீபத்தில் பத்திரிகை உலக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் தமிழ்க் கொலை நடப்பது பற்றியும், எழுத்துப் பிழைகள் பற்றியும் ஒரு பாட்டம் புலம்பி, என் சர்வீஸில் நான் பார்த்த மகத்தான பத்திரிகை எழுத்துப் பிழைகளைப் பகிர்ந்து கொண்டேன். ரசித்துச் சிரித்த அவர் பின் சொன்னார்: ‘‘எழுத்துப் பிழையாவது பரவால்ல கணேஷ். சில சமயம் சொல்ல வர்றதை சரியான வார்த்தைகள்ல சொல்லாததால வர்ற பிழை இன்னும் அபாயமானது. ஒரு விஷயம் கேளுங்க... சொன்னா நம்ப மாட்டீங்க...’’ என்று ஆரம்பித்து சொன்னார். அவர் சொன்னதை பெயர்கள் மாற்றிச் சொல்கிறேன் நான்.

அது ஒரு குறிப்பிட்ட ஜாதிச் சங்கத்தினர் நடத்தும் பத்திரிகை. பத்திரிகை உலக அனுபவங்கள் எதுவும் இல்லாத, சங்கத்தின் தலைவர், செயலாளர் போன்றோரே ஆசிரியர்கள், நிருபர்கள் எல்லாம். உதவி ஆசிரியராக இருந்த செயலாளர் ராகவன் சங்க உறுப்பினர் ரங்கசாமி என்பவர் இறந்துவிட்டதாகவும், அவரது பத்தாம் நாள காரியங்கள் ----- தேதி நடைபெறும் என்றும் ஒரு இதழில் அஞ்சலி விளம்பரம் வெளியிட்டிருந்தார். அந்தத் தேதியில் ரங்கசாமியின் வீட்டிற்குச் சென்றவர்கள் அவரை நேரில் கண்டு அதிர்ச்சியானார்கள். இறந்தது தன் மகன் சீனிவாசன் என்று சொல்லி அவர் அழ... பத்திரிகை விளம்பரம் கண்டு அவர் இறந்ததாக எணணி வந்ததாக வந்தவர்கள் அழ... கடைசியில் கோபமான ரங்கசாமி பத்திரிகை அலுவலகம் வந்து உண்மையை விளக்கிச் சென்றார்.

பத்திரிகை ஆசிரியரான சங்கத்தலைவர் நடந்த தவறை விளக்கி ஒரு மறுப்புச் செய்தி வைக்கும்படி உதவி ஆசிரியரான செயலாளரிடம் சொல்ல, அவர் இப்படி மறு விளம்பரம் வெளியிட்டார் அடுத்த இதழில்: ‘‘சென்ற இதழில் திரு.ரங்கசாமி இறந்துவிட்டதாக வந்த செய்தி தவறானது. இறந்தது அவர் மகன் சீனிவாசன் தான். ரங்கசாமி இறக்கவில்லை என்பதை வருத்தத்‌துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!’’ எப்பூடி....!

==================================================

வந்தது : அந்த 7 வயதுச் சிறுவன் கோர்ட் கூண்டில் நின்றிருந்தான். தன் பெற்றோர் தன்னை அடித்து இம்சிப்பதாக அவன் ‌போன் செய்து புகார் தந்ததுதான் வழக்கு. வழக்கை விசாரித்த நீதிபதி, அவன் உறவுகளைப் பறறிக் கேட்டறிந்தபின் சொன்னார்; ‘‘நீ உன் அத்தைகூட இருந்துக்கறியா?’’ பையன் அலறினான். ‘‘ஐயய்யோ...! அத்தை இவங்களை விட அதிகமா அடிப்பாங்க ஸார்...’’ ஜட்ஜ் சற்று யோசித்து விட்டுக் கேட்டார். ‘‘சரி, அப்ப... உன் தாத்தாகிட்ட இருந்துக்கறியா? தீர்‌ப்பெழுதிடட்டுமா?’’ என்று. பையனோ, ‘‘அது வேண்டாம் ஸார்... இவங்களாவது அடிப்பாங்க. தாத்தாவுக்குக் கோபம் வந்துடுச்சுன்னா, நறுக்குன்னு கிள்ளுவார். சமயத்துல ரத்தமே வந்துடும். அவர்கூட இருகக என்னால ஆகாது!’’

நீதிபதி சற்றே கோபமாக, ‘‘என்னதான் வேணுங்கற நீயி?’’ என்று கேட்க, ‘‘யாரு அடிக்காதவங்களோ அவங்களோட இருந்துக்கதான் எனக்கு விருப்பம்’’ என்றான் பையன். சிறிது நேரம் யோசித்த நீதிபதி பின்னர் யாரும் எதிர்பார்க்காத அந்த தீர்ப்பைச் சொன்னார். ‘‘இந்தப் பையனை நல்லதொரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும். அப்படியொன்றை தேடிக் கண்டுபிடிக்கும் வரை இவனை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ அணியின் கட்டுப்பாட்‌டில் இருக்க உத்தரவிடுகிறேன். பையன் சொல்கிற மாதிரி ‘அடிக்காதவர்கள்’ அவர்கள் மட்டும்தான்’’ என்று தீர்ப்பளித்தார். எப்பூடி இந்தத் தீர்ப்பு?

-இது எனக்கு ஈமெயிலில் நண்பர் ஸ்ரீனிவாஸ் பிரபு ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தது. எழுத்துக் கூட்டிப படித்ததும் குபீரென்று சிரிப்பை வரவழைத்தது என்னிடம். என்னால் இயன்றவரை நன்றாக(?) முழி பெயர்த்திருக்கிறேன்.

==================================================

படித்தது : அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அவசரங்கள் என்னும் சிந்தனையே உதிக்காத உலக உத்தமர்கள் பங்குபெற்ற ஊர்வலம். வெய்யில் அடிக்கிறதா? சரி! போக்குவரத்து முடங்கி விட்டதா? சரி! பின்னால் வரும் வாகனங்கள் ஹாரன் அடிக்கின்றவனா? சரி. எதிர்ப்புற டிராபிக்கும் கெடுகிறதா? சரி. ஆட்டத்தின் ஆதிதாளம் மாறக் கூடாது. அவசரப்பட்டு ஃபரன்ஸ, மோரா என்று முத்தாய்ப்புக்கும் போய்விடக் கூடாது. ஊர்வலம் பிரதான சாலையில் போய்க் கொண்டிருந்தது என்றாலும் இது தன்னிலை மறந்த ஞானகர்ம சன்னியாச யோகத்துக்கான பைபாஸ் சாலைப் பயணம். சாமானியர்களுக்கு அவ்வளவாகப் புரியாது.

 ஏ! மனிதனே! இக வாழ்க்கை அவசரங்களை நினைத்து ஏன் பரிதவித்து்க் கொண்டிருக்கிறாய்? இதோ இறந்து கிடக்கும் இந்த மனிதனைப் பார். இவனை நாங்கள் பரவாழ்க்கைப் பயணத்துக்கு பார்சல் பண்ணிக் கொண்டிருக்கிறோம். பயணத்துக்கான பாஸ்போர்ட்டில் இவனுடைய அடையாளம் தமிழன் என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே, பொது வெளியை நாறடிப்பது பிறப்புரிமை ஆகிவிடுகிறது. நின்ற இடத்தில் துப்பி, நடந்தவாக்கில் ஒன்றுக்கடித்து, ஒன்வேயில் வண்டி ஓட்டி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி, லாரியில் பொதுக்கூட்டத்துக்குப் போய், வாங்கிய பிரியாணிப் பொட்டலத்தில் பாதியைச் சாப்பிட்டு விட்டு மீதியை வீதியில் போட்டு, பாக்கெட் குடிநீரை பல்லால் கடித்து இழுத்து, மேலுக்குக் கொஞ்சம் துப்பிக் கொண்டு, மிச்சத்தை உள்ளுக்குத் தள்ளி விட்டு....

அனைத்தையும் சரியாகச் செய்து முடித்து விட்டு அடங்கியிருக்கிறான் இம்மனிதன் இது இறுதிப் பயணம். இறந்தவனைக் கெளரவிப்பது முக்கியம். டிராஃபிக்கை நிறுத்தி, வெடித்தாளும், பூக்களுமாக சாலையை நாறடித்து, ஒலிக்கழிவால் காற்றை நிரப்பி வழியனப்பி வைத்தலே சரியான மரியாதை. நீங்கள் காத்திருக்கலாம், தப்பில்லை!

-சமீபத்தில் படித்து ரசித்தது. எழுதியவர்: பா.ராகவன். புத்தகம்: அன்சைஸ்.

சாலையின் குறுக்கே டிராக்ஃபிக்கை ஸ்தம்பிக்க வைத்துச் செல்லும் இறுதி ஊர்வலங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் கடுங்கோபம் எழும். அதே கோபத்தை என்ன அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ரா. எழுத்தில்!

==================================================

சமீபத்திய மின்னல் : வலையுலகுக்குப் புது வரவான ப்ரியா என்கிற தோழி தன் தளத்தில் அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். எனக்கு இவரின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. இன்னும் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டிய நல்ல எழுத்துக்கள் என்பது என் கருத்து. நேரமிருந்தால் இங்கே க்ளிக்கி படித்துப் பாருங்கள்!

77 comments:

  1. எனக்குதான் பர்ஸ்ட் மிக்ஸர் பொட்டலம் ஆஹா

    ReplyDelete
    Replies
    1. நான் சாப்பிட்டது போகதான் மத்தவங்களுக்கு அச்சுக்கு பிச்சுக்கு

      Delete
    2. முழி பெயர்த்தது மிக அருமை

      Delete
    3. முதல் நபராய் வந்து மிக்ஸரை ருசித்த மதுரைத் தமிழனுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  2. சினிமா மூலம் கூறப் படும் விஷயங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும் அது தான் அந்த ஊடகத்தின் சக்தி என்ன ஒன்று அதில் நல்லதை விட கெட்டதே அதிகம் காணக் கிடக்கிறது

    // ரங்கசாமி இறக்கவில்லை என்பதை வருத்தத்‌துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!’’ // ஹா ஹா ஹா செம செம

    ஐ பி எல் பற்றிய காமெடி இங்கு கூட காணக் கிடைகிறது ஹா ஹா ஹா

    அன்சைஸ் படிக்க ஆரம்பிச்சாச்சா பேஷ் பேஷ்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில உதாரணத் திரைப்படங்கள் வந்து மாற்ற முயற்சித்தாலும் அதேசமயம் வெளியாகற மத்த மொக்கைப் படங்களால அதோட வீரியம் குறைஞசிடுது சீனு. அன்சைஸ் இப்ப ரசிச்சுப் படிச்சுட்டிருக்கேன் உன் புண்ணியத்துல. ஐபிஎல் காமெடியை ரசித்த உனக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. இனிய வணக்கம் நண்பரே...
    அன்றைய திரைப்படங்களில் வரும் வசனங்கள் இன்றும்
    மனதில் நிலைகுத்தி நிற்பதற்கு காரணங்கள் இவைதான்...
    சொல்ல வந்ததை சில உவமைகளுடன் சுவைபட கூறுவார்கள்...
    அதுவும் கணீரென்ற குரலில்...
    ....
    சகோதரி.கவிதாயினி.சரளா அவர்களின் புத்தகத்தை
    வாங்கி விடுகிறேன் நண்பரே.
    ....
    நேற்று தான் நண்பர் முரளிதரன் அவர்களின் பதிவுப்பக்கம்
    எழுத்துப்பிழைகள் பற்றிய பதிவு படித்தேன்.
    இன்று இப்படியான பிழைகள் எல்லாம் சாதாரணமாக போய்விட்டது
    நண்பரே. சரி செய்யக்கூடாதா என்றால் நம்மை ஏற இறங்கப்
    பார்க்கிறார்கள்.
    அதுதான் உங்களுக்கு புரிஞ்சிருச்சு ல பேசாம போங்க என்கிறார்கள்...
    காலக்கொடுமை தான் போங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆம்! வாத்யாரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசனைக்குரியவையாக இருப்பதற்கு அவர் வசனம், பாடல்களில் விசேஷ கவனம் செலுத்தியதே காரணம். சரளாவின் புத்தகத்தை வாங்கிப் படிப்பதாகச் சொல்லிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி மகேன்!

      Delete
  4. எப்போதும் லால கடை மிக்சர் பிடிக்காது ஆனா பால கடை மிக்சர் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா. லாலா கடை மிக்ஸரை விட இந்த பாலாவின் கடை மிக்ஸரை ரசிப்பதாகச் சொல்லி தெம்பூட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி ஐயா!

      Delete
  5. //சீனு
    27 April 2013 8:54 am
    சினிமா மூலம் கூறப் படும் விஷயங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும் அது தான் அந்த ஊடகத்தின் சக்தி என்ன ஒன்று அதில் நல்லதை விட கெட்டதே அதிகம் காணக் கிடக்கிறது //

    யோவ்...ராஸ்கோல். வாழ்க்கைக்கான எல்லா பாடத்தையும் சொல்லி தந்தது நம்ம லிப் ஸ்டிக் ஸ்டார் படம். பாத்து பேசு.

    நீ அந்த கல்யாணத்துல சேர் வாடகைக்கு விடற ஆளு தான. கோர்ட்டுக்கு வா தம்பி. தேவயானி குறுக்கு விசாரண பண்ணனுமாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... கரெக்ட் சிவா! வாழ்க்கைக்கான முககியப் பாடத்தை அது நிச்சயம் கத்துத்தான் குடுத்தது. தேவயானியோட குறுக்கு விசாரணைய நம்ம சிஷ்யன் தாங்குவாரா?

      Delete
  6. பழத்துக்குள் ஊசியைச் செருகுவது போல..
    சொல்ல வந்ததை இலகுவாக மட்டுமல்லாது...
    சட்டென்று உறைக்குமளவுக்கு காரசாரமாக சொல்வதிலும்
    வல்லவர் அல்லவா திரு.பா.ராகவன் அவர்கள்.
    ---
    இதோ சகோதரி பிரியாவின் வலைத்தளத்துக்கு சென்று விடுகிறேன்...
    கவி படிக்க கசக்குமா???

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி மகேன்! கிண்டலிப்பதையே மிக லாகவமாக ஊசிக் குத்தலாகச் செய்கிற சரளமான எழுத்து பா.ரா.வுடையது. கவிதைகள் என்றும் நமக்கு இனிக்கும் பழம்தான். சென்று ருசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. சகோதரி சரளாவிற்கு என் வாழ்த்துகள்..

    பாவம் ரங்கசாமி.. ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. என் தோழிக்கு வாழ்த்துச் சொல்லி பதிவையும் ரசித்த ஆனந்துக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. அண்ணேன் மிச்சர் நல்லா மொரு மொறுன்னு சூப்பரா இருக்கு ...!

    முப்பது ரூவாய்க்கு கவிதா புஸ்தகமா ? அட பரவாயில்லையே ...!
    (கோயமுத்தூர்க்காரங்க ரெம்ப ரெம்ப நல்லவங்க ...! நோட் திஸ் பாயிண்ட்) .

    சமீபத்திய மின்னல் - பளிச்சுன்னு இருக்கு ...!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்து, சமீபத்திய மின்னலையும் படித்து ஊக்குவிக்கிற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள் தம்பீ!

      Delete
  9. கோவை சரளாவிற்கு இனிய வாழ்த்து.
    ஆகா என்று என் வலைக்கு வந்தார்கள். நானும் பல தடவை போனேன் இப்போது வருவதே இல்லை. களைப்பு வருகிறது.

    பிரியாவிற்குக் கருத்திட்டேன் வரிகள் நன்றாகவே உள்ளது.

    தங்கள் இடுகை சுவை தகவல்களிற்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் கோவை சரளாவிற்கு வேலைப் பணிகள் அழுத்துகின்றன வேதா மேடம்! அதைத் தாண்டி பதிவிடவே அவர் மிக சிரமம் கொள்ள வேண்டியிருக்கிறது. வரவேண்டிய சமயத்துல தவறாம வருவாங்க. கவலைப்படாதீங்கோ...! ப்ரியாவின் எழுத்தை ரசித்துப் படித்துக் கருத்திட்டுப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. //இறந்தது அவர் மகன் சீனிவாசன் தான். ரங்கசாமி இறக்கவில்லை என்பதை வருத்தத்‌துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!’’ எப்பூடி....!// - சோகத்துலயும் ஒரு காமெடி..

    நல்லா முழி பெயர்க்கறிங்க..

    //சாலையின் குறுக்கே டிராக்ஃபிக்கை ஸ்தம்பிக்க வைத்துச் செல்லும் இறுதி ஊர்வலங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் கடுங்கோபம் எழும். அதே கோபத்தை என்ன அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ரா. எழுத்தில்!// - நானும் ஆமோதிக்கிறேன்.

    ரசித்தது, சமீபத்திய மின்னல்- படிச்சிடறோம்..

    மொத்தத்தில் மிக்ஸர்- ரவுண்டு(வட்டமாய்த்தான்.. ) கட்டி உட்கார்ந்து சுட சுட காபி சாப்பிட்டுகிட்டே மிக்ஸரை கொறித்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பகுதியையும் நீங்க ரசிச்சதுலயும், பா.ரா.வின் எழுத்து உட்பட என் ரசனையுடன் ஒத்துப் போவதைக் கண்டும் மிகமிக மகிழ்ச்சி அடைகிறேன் உஷா. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. எனக்கு மிக்சர் மிகவும் பிடிக்கும். அதுவும் இது.. அலாதி ருசி!

    ReplyDelete
    Replies
    1. அலாதி ருசி என்ற பாராட்டினால் மலையளவு உற்சாகம் தந்த பந்துவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  12. எப்போது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது 'அவர்' படங்கள்... குறிப்பாக வரலாற்றுக் கதைப் படங்கள்!

    கேட்டது ஏற்கெனவே வேறு வகையில் படித்து ரசித்திருக்கிறேன்.

    'அடிக்காதவர்கள்' சிரிக்க வைத்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அவரின் வாள் சண்டைகள் மிகமிக உவப்பானவை. கேட்டது பகுதியில் வரும் விஷயம் சமீபத்தில்தான் நண்பர் மூலம் கேட்டேன் நான். முன்பே படித்திருக்கிங்கன்றது வியபபா இருக்குது. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு மிக மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  13. அத்தனையையும் சுவைத்தேன்... தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் சுவைத்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. முதல் முறையான வரவு என்னது உங்கள் பக்கத்துக்கு. எழுத்து நடை தலைப்புக்கள் வித்தியாசமாக கவரும்படி அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். அந்த ராமசாமிக்கு எங்கட வருத்தத்தை முடிஞ்சால் சொல்லிவிடுங்கோ...பிரியாவின் கவியும் படித்தேன் நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. முதல் வரவு மட்டுமல்ல, முதல்தரமான வரவு. உங்களுக்கு என் நல்வரவு. என் மிக்ஸரை சுவைத்ததுடன் ப்ரியாவின் கவிதையையும் படித்துக் கருத்திட்டு ஊக்கப்படு்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. உண்மை தான் சார் 2 வரி திருக்குறள் மனப்பாடம் பண்ண அவ்ளோ கஷ்டமா இருக்கு சினிமா பாட்டுனா உடனே மனப்பாடம் ஆகிருது என்ன பன்றது சார் ?

    ReplyDelete
    Replies
    1. உங்க பேரே புதுசா இருக்கு சக்கரக் கட்டி! சுவைச்சுப் பாத்துட வேண்டியதுதான். மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வலைப்பதிவு வந்துள்ளேன். இன்றைய மொறுமொறு மிக்சர் பாக்கெட்டை பிரித்து சாப்பிட்டேன். முனைவர் கு.ஞானசம்பந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்னும் எம்ஜிஆர் ரசிகர்கள்தான் என்னும்போது மிக்க மகிழ்ச்சிதான்.

    Phonetic முறையில் தமிழில் டைப் செய்யும்போது எழுத்துப்பிழை வராமல் இருக்க ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது.

    ( முன்பு ஒருமுறை தாங்கள் சொன்ன “வெளிச்சத்தின் நிறம் கருப்பு” ( ஆசிரியர்: முகில்) அப்போதே வாங்கி விட்டேன். இப்போழுதான் படிக்க தொடங்கி இருக்கிறேன். விறுவிறுப்பாகப் போகிறது. அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி! )





    ReplyDelete
    Replies
    1. வாத்யாருக்கு எல்லாத் தரப்பிலும் ரசிகரகள் உண்டு. உங்கள் கண் பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது என்பது நீங்கள் கருத்திட்டதில் உணர முடிவதில் மிகமிக மகிழ்ச்சி! முகிலின் புத்தகத்தை என் வார்த்தையை நம்பி வாங்கிப் படிக்கிற உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பரே!

      Delete
  17. அருமை. அருமை. ருசியோ பெருமை...

    நல்ல்ல்ல மிக்‌ஷர் ப்ரதர்! அதுக்குள்ள போட்டிருக்கிற அத்தனையுமே செமருசி!

    அதில நெய்யில வறுத்துப்போட்ட கஜுவான அந்த `மழைச்சாரலெனும் ப்ரியாவின் வலைப்பூ’ எனக்கு ரொம்பப்பிடிச்சுப்போச்சு..

    என்னவென சொல்லுறது உங்க பண்பை. இன்னிக்குத்தான் அங்கை வலைச்சரத்தில சகோ ராஜ் சொன்ன விஷயத்தை உடனடியாவே இங்கை நடைமுறைப்படுத்திட்டீங்க...
    எங்கையோ போயிட்டீங்க ப்ரதர்!!!

    வாழ்த்துக்கள்!

    த ம.9

    ReplyDelete
    Replies
    1. மழைச்சாரல் ப்ரியாவின் எழுத்தைப் படிச்சு ஊக்குவிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி சிஸ்! நான் எழுத வந்த புதுசுல வலையுலகம் புரியாம திருவிழால தொலைஞ்ச குழந்தை மாதிரி முழிச்சுட்டு நின்னப்ப பல சீனியர்கள் எனக்கு அறிமுகம் தந்து என் எழுத்தை உரமாக்கினாங்க. அதை நான் இப்ப என் ஜுனியர்களுக்குச் செய்கிறேன். அவ்ளவ்தான்! இதைப் பாராட்டிய உங்களுக்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!

      Delete
  18. என்னுடைய வலைதளத்தை பற்றி இங்கே குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ... நான் இதை சற்றும் எதிர் பார்கவில்லை... தோழர் kathir rath மற்றும் இளமதி அவர்களின் கமென்ட் மூலமே அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.. :) அத்துடன் என் வலைதளத்திற்கு வந்து வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் நன்றிகள்... :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல ரசனையான கவிதைகளை வழங்கி வரும் உங்கள் எழுத்து எனக்கு மிகப் பிடிக்கிறது. மகிழ்வுடன் நன்றி தெரிவித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  19. சினிமாவின் வீரீயம் அதிகம்தான் ஆனால் அதனை எத்தனை நல்லவிடயத்துக்கு பயன்படுத்துகின்றோம் என்றால்??
    புத்தக அறிமுகத்துக்கு நன்றி கவிதையில் நனைவோம் பா.ரா புத்தகம் இனித்தான் தேடனும் .
    எழுத்துப்பிழை எல்லோருக்கும் அவசரம் என்ற நிலையில் வருவது என்பது என் நிலை இன்றைய காலம் அவசரம் முன்னர் போல இல்லையே!
    பாவம் ராமசாமி:))))

    ReplyDelete
    Replies
    1. மி்க்ஸரை ரசித்துச் சுவைத்துக் கருத்திட்டநேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. வாத்தியார் நினைவுடன் வந்த மொறுமொறு மிக்ஸர் ருசியோ ருசி!
    பா. ராகவனின் எழுத்துக்கள் எனக்கு எப்போதுமே பிடிக்கும். அவர் புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி!
    கோவை மு. சரளாவிற்கு பாராட்டுகள்!

    எழுத்துப் பிழைகள் தவிர்க்கப் பட வேண்டும். தகவல் பிழை அதனினும் கொடிது.
    வீரேந்தர் சேவாக் உங்கள் மேல் கேஸ் போடப் போகிறாராம் - ஸ்கூப்!


    ப்ரியாவின் கவிதைகளை படிக்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்ததாலும், என் ரசனையுடன் ஒத்துப் போவதாலும், ப்ரியாவின் தளத்தில் கருத்திட்ட உற்சாகப்படுத்தியதாலும் முக்கனிச் சுவையைத் தந்து எனக்கு மகிழ்வளித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  21. நல்ல மொறுமொறு மிக்சர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் மொறுமொறுப்பை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி மாதேவி!

      Delete
  22. சிறப்பான சுவையான, காரசாரமான மிக்சர்....

    எழுத்துப் பிழைகள் - தவிர்க்கப் பட வேண்டியது தான். விளம்பரம்... அப்பப்பா... கதையே மாறிப்போச்சே!

    புதிய தள அறிமுகம் - நன்று. படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்ததுடன் புதிய தளத்தையும் படித்து ரசிக்கவிருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. நாட்டாம..... தீர்ப்ப மாத்திச் சொல்லுங்க!...... மிக்சர் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸர் சூப்பர் என்று சொன்ன சுடருக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  24. நான் சுவைக்கும் முதல் மிக்ஸர் வாத்தியாருடன் ஆரம்பிப்பது என் அதிஷ்டம்.
    வந்து, பார்த்து, கேட்டு, படித்து, ரசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் படித்து நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே!

      Delete
  25. மிக்ஷெர் அருமை சார்... உண்மையில் MGR அளவுக்கு மீடியாவை நல்ல முறையில் பயன்படுத்தியவர்கள் இருக்க மாட்டார்கள்....

    பாவம் சார் ... டெல்லி --தலைநகருக்கு வந்த தலை எழுத்தைப் பாருங்க!!

    சவ ஊர்வலம் - கொடுமையிலும் கொடுமை....

    ReplyDelete
    Replies
    1. மி்க்ஸரின் எல்லாப் பகுதிகளையும் சுவைத்த சமீராவுக்கு என் மனம் நிறை நன்றி! (இந்தப் பக்கம் பாத்தே நாளாச்சு சமீரா! இப்ப பிஸில்லாம் முடிஞ்சு ஃப்ரீயாயிட்டியாம்மா?)

      Delete
  26. பல்சுவை விருந்தும் மிக்சரும்....சூப்பர் அண்ணே....

    ReplyDelete
    Replies
    1. மிக்žஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி மனோ!

      Delete
  27. மிக்ஸர் என்ற பேருக்குத் தக்க எத்தனை வித விதமான ருசிகர தகவல்கள். நன்றியும் பாராட்டும் கணேஷ்.

    ஊடகத்தின் வலிமையை என்னவென்று சொல்வது? சரியான முறையில் பயன்படுத்தினால் எல்லோருக்குமே நன்மை கிட்டும்.

    சரளாவுக்கு என் இனிய வாழ்த்துக்கள். அவரது கவிதைகள் ஆழமும் அகலமும் நிறைந்தவை. வாசிப்போரைத் தன்னுள் ஈர்க்கும் திறம் கொண்டவை.

    எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் பற்றி என்ன சொல்ல? வேதனைதான். சுட்டிக்காட்டினால் சிலருக்குப் பிடிப்பதில்லை. சிலருக்குப் புரிவதே இல்லை.

    பா.ராகவன் அவர்களின் எழுத்தை வாசித்து மலைத்துவிட்டேன். எவ்வளவு அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியிருக்கிறார். பிரமாதம்.

    மின்னல் வரிகளின் ஒளி வழிகாட்ட மழைச்சாரல் தேடிச் செல்கிறேன்.நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்‌வொரு அம்சத்தையும் ரசித்தும், சரளாவை வாழ்த்தியும், பா.ராவின் எழுத்தை என்போலவே ரசித்தும் மழைச்சாரலுக்கும் சென்று ப்ரியாவை ஊக்குவித்தும் மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  28. வழக்கம்போல் தாங்கள் தந்த மொறு மொறு மிக்ஸர் மொரமொரப்பாக இருந்தது. அதிலும் ‘வந்தது’ தலைப்பில் உள்ள துணுக்கைப் படித்ததும் வாய்விட்டு சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாய்விட்டுச் சிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  29. நான் தாமதமாக வந்துவிட்டாலும் மிக்சரின் மொறு மொறுப்பு குறையாது குறையவில்லை. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் கூறியது போல பொனிடிக் முறையில் டைப் செய்யும்போது பிழைகள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது.
    எச்சரிக்கை: விரைவில் அதைப் பற்றிய பதிவொன்றை எழுத நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்கள் முரளி. அவசியம் பேசப்பட வேண்டிய விஷயம்தான் இது. மிக்ஸரை ரசி்த்த உங்களுக்கு என் மனம் நிறை‌ நன்றி!

      Delete
  30. சரியா சொன்னீங்க சீக்கிரம் என்றும் மறவாதபடி ஒரு விஷயத்தை பதிப்பது சினிமா வை போல் எதுவும் முடியாது
    ரசித்த தகவலுக்கு நன்றி
    கேட்டது ..................இப்படியும்
    வந்தது எங்கு நடந்தது
    படித்தது- உண்மைதான் கோபம் வரும் பக்கத்தில் இருப்பவர்களிடம் அங்கலாய்க்ககூட முடியாத விஷயம்
    மின்னல் அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் எல்லாப் பகுதியையும் ரசித்துப் படித்துக் கருத்திட்ட பூவிழிக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  31. கோவை.மு.சரளாவுக்கு வாழ்த்துகள்.

    நல்ல தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. தோழியை வாழ்த்தி, நல்ல தொகுப்பென்ற வார்த்தையால் மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  32. சகோதரி சரளா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... புதிய தளத்திற்கு நன்றி...

    மிக்சர் அருமை... குறிப்பாக நம்ம தலைவர்...

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த நண்பருக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  33. கோவை சரளாவின் ஒரு கவிதை சாம்பிள் தரக்கூடாதோ? பா.ராகவன் எழுத்தை மட்டும் நாலு பத்தி போடுறீங்க?

    உமது அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா நிலைத்து நிற்க - விசில் பிய்த்துக் கொண்டு போன காட்சி. அதனால் மக்களுக்கு சிலப்பதிகாரம் பற்றித் தெரிய வாய்ப்பு கிடைத்தது என்பது விசிலை விடப் பாமரத்தனம். ஏதோ வாத்யாரு சொன்னாருன்றதுக்காக விசிலடிச்சாங்களே தவிர சிலப்பதிகாரத்தைக் கொணாந்து காட்டினா அதாலயே மண்டைய பொளப்பாங்க ஜனங்க. ஏதோ சொல்றவரு சொல்லிட்டுப் போவட்டும்.. என்னா சொல்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. அவ்ங்க கவிதைகளை ப்ளாக்லயே நிறையப் பேர் படிச்சிருக்கக் கூடும்கறதால தான் சாம்பிள் வைக்கல. இப்ப நீங்க சொன்னப்புறம்தான் வெச்சிருக்கலாமோன்னு தோணுது. தலையில குட்டிக்கறேன் நான்!
      ‘‘திருக்குறள், தேவாரப் பாடல் எல்லாம் மனப்பாடப் பகுதியில வந்தா விளக்கெண்ணெய் குடிக்கற மாதிரி ஃபீல் பண்ணிட்டு படிககறாங்க பசங்க. அதுவே குவித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்ன்னு (தளபதி படப்பாட்டு) சினிமாப் பாட்டுல வந்தா ஈஸியா ராகத்தோட பாடிடறாங்க. பேசாம திருக்குறள், தேவாரப் பாடல் எல்லாத்துக்கும் இளையராஜா இசையமைக்கச் சொல்லி பசங்களை படிக்க வெச்சிடலாம் போலருக்கு’’ என்று முன்பொரு முறை சொன்னாரு முனைவர் கு.ஞா. சினிமாவின் சக்தியை எப்பவுமே வியக்கறவர் அவர். நீங்க சொல்றது நடைமுறை சாத்தியமான விஷயம்!

      Delete

  34. மொறு மொறு மிக்சர் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கிறது பார்த்தது எங்களையும் பின்னோக்கி பார்க்க வைத்தது

    ரசித்தது என்ன மகிழ்வித்தது

    கேட்டது வருத்தத்தை தந்தது

    வந்தது வெட்கத்தையும் வேதனையும் தந்தது

    படித்து படித்தது சிந்திக்க வைத்தது



    மேலும் பாலா சாரின் தளத்தில் என்னை வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் பாலா சாருக்கு சிறப்பு நன்றியையும் ...........மேலும் தோழி வேதா வருத்தம் என்னை வருந்த வைத்தது உங்களுடைய தளம் என் முகப்பில் வருவதில்லை இப்போதெல்லாம் ஆகையால் தெரியவில்லை எனக்கு அவசியம் நான் வருகிறேன் உங்கள் தளத்திற்கு ,பாலா சார் சொன்னது போல நேரமின்மை ஒரு காரணம் .

    என்னுடைய இந்த காதலின் சாரல் நூல் மிகவும் எளிய வார்த்தைகளில் காதலை வெளிபடுதியிருகிறேன் விலை மட்டுமே மலிவு அதன் உள்ளே இருக்கும் ஒரு பெண்ணின் உணர்வு விலைமதிப்பில்லாதது அவசியம் அனைவரும் வாங்கி படியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க சரளா! விலை புத்தகத்திற்கு மட்டுமே. உள்ளிருக்கும் கவிதைகளின் உணர்வுகளுக்கு விலைமதிப்பேயில்லை! மிக்ஸரை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  35. மிக்சரின் அனைத்து பகுதிகளுமே சுவையாக இருந்தது...

    கோவை.மு.சரளா அவர்களுக்கு வாழ்த்துகள். எங்கூரு எழுத்தாளர், எங்கூரு பதிப்பகம்...சந்தோஷம்.

    ப்ரியாவின் தளத்துக்கு சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... என்ன இருந்தாலும் ஊர்ப் பாசம்கறதோட வேல்யூவே தனிதான். ரோஷ்ணிம்மாவையும் இவ்வளவு சந்தோஷப்பட வெச்சுடுச்சே! மிக்ஸரையும் ரசித்து ப்ரியாவின் தளத்திலும் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  36. எம்ஜியார் படங்களில் இருந்து இதுபோல நிறைய உதாரணங்களை கூறலாம். அந்த டெல்லி டேர்டெவில்ஸ் மேட்டர் முன்பு இந்தியா அணியை வைத்து வலம் வந்த ஒரு ஜோக். பகிர்வுக்கு நன்றி சார். நீண்ட காலம் கழித்து பதிவுலகுக்கு வருகிறேன். எப்படி இருக்கீங்க சார்?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா பாலா? எனக்கு இந்த ஜோக் புதுசாக இருந்தது. நான் நலமே! நீண்ட நாள் கழித்து உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  37. மொறு மொறு மிக்சர் என்றால்
    முன்னுக்கு பாயும் என்னை
    நறுமணப் பதிவுகள் இட்டு
    நனைத்துவிட்டீர் உள்ளமெல்லாம்

    விளம்பரம் என்றெண்ணி
    விரைந்து படிக்கையிலே
    தளம்பிடும் சினிமா உலகில்
    வளமிட்ட வாத்தியார் கண்டேன்...!

    ரசித்ததும் கேட்டதும் இருதுருவ
    விசித்திரமாக இருக்கையிலே
    வழக்கின் தீர்ப்பில் மகிழ்கின்றேன்
    வந்தவர் போவதில் நெகிழ்கின்றேன்...!

    புதுவரவு மின்னலென புகழ்கின்ற
    புதுக்கவிதை நடுகின்ற பிரியாவும்
    பொதுநலம் கொண்ட அறிமுகத்தில்
    பூத்துக் குலுங்கிட வாழ்த்துகின்றேன்...!

    அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
    தங்கள் வலைப்பூ முகவரி தந்த
    அன்பு தங்கை பிரியாவுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்று... ப்ரியாவினால் எனக்கும் இன்று தங்களின் அறிமுகம் கிடைத்தது. அழகாய் கவிதையிலேயே நீங்கள் ரசித்ததை உணர்த்தியிருக்கும் திறம் கண்டு தங்களை வியக்கிறேன் சீராளன்! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube