Monday, April 15, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 4

Posted by பால கணேஷ் Monday, April 15, 2013
ங்கள் குழுவில் ஒருவர் பார்ட்டைமாக இசைக் குழுவில் வாசிப்பவர்/பாடுபவர் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆசாமி இரண்டு சிறிய டிரம்ஸையும் குச்சிகளையும் கொண்டு வந்திருந்தார். தலைவர் அவரைப் பார்த்து, ‘‘டேனியல்! நீங்க பீட் அடிங்க. நம்ம ஆளுங்க ஒவ்வொருத்தரா டான்ஸ் பண்ணுவாங்க இப்ப...’’ என்றார். என்னது...? டான்ஸா, நாமளா? பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு. தலைவரிடம் ‘அப்ஜெக்ஷன் மை லார்ட்’ என்று கை உயர்த்தி மறுக்க நான் முயல்வதற்குமுன் நண்பர் ட்ரம்ஸை அடிக்க ஆரம்பிக்க, ஸ்டெப்ஸ் வைத்து ஆட ஆரம்பித்து விட்டான் குழுவில் இருந்த ஒரு இளைய ப(பு)யல்! அதை நியாயப்படி டான்ஸ் என்று சொல்லுதல் தகாது. சவ ஊர்வலங்களுக்கு முன்னால் ‘ஃபுல்’லாக ஒரு கோஷ்டி ஆடிவருவதை கவனித்ததுண்டா நீங்கள்? அதைப் போன்ற ஸ்டெப்ஸ்கள் அவை. பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது எனக்கு.

அவன் நிறுத்த... அடுத்து யார் ஆடுவது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க... சட்டென்று முன் வந்த உதவி ஆசிரிய நண்பர் ஒருவர் செம குத்து குத்தினார். பின் ஒவ்வொருவராக ஆட (குதிக்க...?) ஆரம்பித்தனர். கடைசியாக தலைவர் என் முகத்தைப் பார்க்க பலி பீடத்தின் முன் நிறுத்தப்பட்ட ஆடு போல, (அல்லது) கேப்டனின் முன்னால் நிற்கும் பத்திரிகையாளர் போல பேய்முழி முழித்தேன். ‘‘இல்ல தலைவரே... என்னாலல்லாம் ஆட முடியாது’’ என்று நான் சொல்ல, ‘‘இவங்கல்லாம் கத்துட்டா வந்து ஆடினாங்க. சும்மா வாங்க... கமான் கணேஷ்... கமான்...’’ என்று கிண்டியில் ஓடிய குதிரைகளைக் கூப்பிடுவது மாதிரி உற்சாகமாகக் கூப்பிட்டார் தலைவர். ‘‘இல்ல தலைவா... நாம இருக்கறது ஃபர்ஸ்ட் ப்ளோர். நான் ஆடி பில்டிங் ஏதாவது டாமேஜ் ஆயிட்டுதுன்னா... இன்சார்ஜ் சும்மா விடமாட்டாருங்களே..’’ என்றேன் நான். நான் சொன்னதற்கு அவர் பயந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், நான் மிகத் தயங்கியது அவரை யோசிக்க வைத்ததோ என்னவோ... ‘‘சரி, நீங்க ஆட வேணாம், ஏதாவது பாடுங்க...’’ என்றார்.

2ம் நாள் காலை என் அறையிலிருந்து. ‘என்ன பண்றாங்க இவங்க?’

அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று உடனே அஸ் யூஷுவல் மக்கள் திலகத்தின் பாடல் ஒன்றைப் பாடினேன். பல்லவி பாடி முடிப்பதற்குள்ளேயே... ‘‘கணேஷ் பாடச் சொன்னா பாடணும், ஒப்பிக்கக் கூடாது’’ என்று கலாய்த்தார் உ.ஆ. நண்பர். அதற்குள் ட்ரம்ஸ் டேனியல், ‘‘ஃபாஸ்ட் பீட்டா ஒண்ணு பாடுங்க தலைவா...’’ என்றார். சட்டென்று ரெண்டுக்கும் ஏத்த மாதிரி ரூட்டைமாத்தி, ‘‘ஒரு Girlஐப் பார்த்து Moonஐப் பார்த்தேன். Moonல் Chilness இல்லை, அவள் Eyesஐப் பார்த்து Flowerஐப் பார்த்தேன். Flowerல் Brightness இல்லை’’ என்று வேகமான பீட்டில் வாத்யார் பாட்டைப் பாட, ட்ரம்மர் செம தட்டுத் தட்ட, அனைவரும் கைகளைத் தட்ட, உற்சாகம் தூள் பறந்தது. இந்த இடை நேரத்தில் அப்படி இப்படியென்று ஒரு மணி நேரம் ஓடிவிட்டிருக்க, ‘‘சரி, புறப்படலாம்’’ என்றார் தலைவர். ஹப்பாடா!

ஆறே முக்காலுக்கு வேன் தியேட்டரை நோக்கிச் செல்ல, நானும் மற்றொருவரும் காபி குடிக்க வேண்டும் என்க, அனைவரும் ஆமோதிக்க ஒரு டீக்கடை அருகில் வேன் நிறுத்தப்பட்டது. காபியும், டீயும் ஆர்டர் செய்யப்பட்டு, கிடைதததும் குடிக்க ஆரம்பித்தோம். என்னுடன் காபி குடித்த நண்பன், ‘‘காபில பால் ரொம்ப கம்மியா ஊத்திட்டார். ஒரே டிகாஷனா இருக்கு’’ என்றான். ‘‘கடைக்காரரைப் பாத்தயில்ல... மலையாளி. பாலக்காட்டுக்காரரா இருப்பார்..’’ என்றேன். ‘‘எப்படிச் சொல்றீங்க?’’ என்று அவன் கேட்க, ‘‘பாலக்காட்டார் என்பதால தான் காபிலகூட பாலக் காட்டாம குடுத்துட்டாரு...’’ என்றேன். இந்த வார்த்தையை நான் முனைவர் கு.ஞானசம்பந்தனின் புத்தகத்திலிருந்து உருவினேன் என்பது தெரியாததால் சுற்றியிருந்த மூன்று நண்பர்களும் சிரித்தனர்.

கொடைக்கானலின் ஒரே தியேட்டர் மிகப் புராதனமாயிருந்தது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கியதும், டிக்கெட் கிழிப்பவர் அதைப் பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதிக்கிறார். வேறு உள்நுழைவு வாயில் கிடையாதாம். தியேட்டரின் உள்ளே போனதும் அது சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது. அவ்வளவு பழமை! ‘பரதேசி’ படம் ஓடத் துவங்கி பத்து நிமிஷங்கள் கழித்து அந்தத் தியேட்டரின் ஸ்பீக்கர்களின் சவுண்ட் சிஸ்டம் காதுக்குப் பழகிய பிறகுதான் என்ன வசனம் பேசுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடிந்தது. அதுவரை ஏதோ வழவழா கொழகொழாவென்று ஏதோ பேசுவதாகத்தான் புரிந்ததே தவிர, என்ன பேசுகிறார்கள் என்பதே புரியலையே...! கொடுமைடா சாமி!

‘பரதேசி’ படத்தின் விமர்சனத்தைப் பலரும் எழுதியதை பல தளங்களில் படித்திருப்பீர்கள் என்பதால் நான் அதிகம் சொல்லப் போவதில்லை. பாலாவின் ‘நான் கடவுள்’ படம் பார்த்தபின் என்னுள் எழுந்த ஒருவிதமான ‘அவெர்ஷன்’ நீங்கவே பலநாள் ஆனது என்பதால் நானாக விரும்பி பரதேசிக்குப் போயிருக்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் கூட்டிச் சென்ற தலைவருக்கு நன்றி. பாலா வழக்கமாக தன் படங்களில் காமெடி வைக்கிறேன் என்று அபத்தமாக ஏதாவது காட்சி அல்லது பாடல் வைத்து சோதிப்பார். இந்தப் படத்தில் அந்த சமரசம் கூட இல்லாமல் மிக அருமையாகச் செய்திருந்தார். A Neat Film! என்னைப் பொறுத்தவர‌ை பாலாவின் படங்களில் இதுதான் ‘தி பெஸ்ட்!’ கொரிய நாட்டுத் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘‘என்னமா ஃபீலிங்ஸை காட்சிப்படுத்தறாங்க. மனசைப் பாதிச்சிடுது இந்தப் படங்கள். தமிழ்ல யாரும் இப்படி ட்ரை பண்றதில்லையே’’என்று ஒரு வருத்தம் என்னுள் எழும். அந்தக் குறையைப்‌ போக்கிய, உலக சினிமாக்களுக்கு ஒரு மாற்றும் குறையாத தமிழ்த் திரைப்படம் ‘பரதேசி’ என்பேன்.

நம்ம மனஸ் இருக்கே...  அதுக்கு எப்பவுமே புத்திசாலித்தனமா படத்தை க்ரிட்டிசைஸ் பண்ணி ஆழமா கேள்வில்லாம் கேக்கத் தெரியாது. ரொம்ப பாமரத்தனமா கேக்கும் கேள்விகளை... உதாரணத்துக்கு ரெண்டு இங்க. 1) இந்த பாலா ஏன் எந்தப் படமா இருந்தாலும் ஹீரோவோட தலையை மாடு மேஞ்ச மாதிரி ஒரு கிராப் பண்ணி வெக்கறாரு? 2) அந்த வெள்ளைக்கார துரை எஸ்டேட்ல ஒரு பொண்ணை கை வெக்கறாரு- கணவனாக காப்பாத்த முடியாத நிலையில - ஆக்சுவலி அந்தப் பொண்ணைவிட கூட நிக்கற தன்ஷிகாவே அழகா இருக்கா. அவ மேல கை வைக்கணும்னு ஏன் வெள்ளக்காரனுக்குத் தோணலை? பாத்தீங்களா ஸார்/மேடம்... இந்த சின்னப்புள்ள மனஸை என்ன சொல்லி அடக்கறது? ‘‘இ‌‌தோபாரு...சின்னச் சின்னதா நிறைய குறை கண்டுபிடிக்கறதையெல்லாம் இந்த மாதிரி நல்ல படங்களைப் பொறுத்தவரை நிறுத்திக்க. பாஸிடிவ் பாயிண்ட்டை மட்டும் பாத்து படத்தை ஓடவெச்சாதான் நிறையப் பேருக்கு இதுமாதிரி முயற்சிக்க தைரியம் வரும்’’ன்னேன்.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் மெல்லிய சாரல் மழை பொழிந்து கொண்டிருந்தது. ஆளாளுக்கு கிடைத்த ஷெல்டரில் ஒண்டிக் கொள்ள... தொலைவில் நிறுத்தியிரு்ந்த எங்கள் ரதத்தை எடுத்துவர ஓடினார் ரதசாரதி! அப்போது எங்களைக கடந்து சென்றவர்கள் பேசியதைக் கவனித்தேன். இரண்டு கான்ட்ராஸ்டான விமர்சனங்கள் காதில் விழுந்தது. 1) ‘‘பாலா இந்தப் படத்தை எடுத்ததுக்கு்ப் பதிலா பேசாம ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புறப் படுத்துத் தூங்கியிருக்கலாம்டா...’’ 2) ‘‘மனசை உலுக்கிடுச்சு மாப்ளே... இன்னிக்கு நைட்டு சுத்தமாத் தூக்கம் வராது...!’’ இந்த இரண்டில் விமர்சனங்களில் உங்களின் ஓட்டை எந்த விமர்சனத்திற்குப் போடுவீர்கள்?

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் காட்டேஜுக்குச் செல்ல, குறுகிய பாதைகள்/ வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். மெயின் ரோடுகளைத் தாண்டியதும் பார்த்தால் மழை + பனியில் கண்ணாடிக்கு வெளியே சாலையே தெரியவில்லை. டிரைவர் மிக மெதுவாக வண்டியை ஓட்டியபடி துணி மற்றும் பேப்பர்களை வைத்துத் துடைத்தும் மிக மங்கலாகத் தெரிந்தது. வேனுக்கு வெளியே தலையை நீட்டி... ஸாரி, பாதி உடம்பையே நீட்டி சாலையைக் கவனி்த்தபடி வாகனத்தை மிக மெதுவாக ஓட்டிச் சென்று எங்களை காட்டேஜில் சேர்த்தார் டிரைவர். ‘ஹப்பாடா... ஒரு வழியா வந்தாச்சுப்பா...’’ என்று ஆசுவாசப்படுத்தியபடி முதல் தின நிகழ்ச்சிகளின் முடிவாக, அவரவர் அறையில் சென்று இரண்டு கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு உறங்கத் துவங்கினோம்.

                                                                                                                  -தொடர்கிறேன்...

58 comments:

  1. கொரிய நாட்டுத் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘‘என்னமா ஃபீலிங்ஸை காட்சிப்படுத்தறாங்க. மனசைப் பாதிச்சிடுது இந்தப் படங்கள். தமிழ்ல யாரும் இப்படி ட்ரை பண்றதில்லையே’’என்று ///


    hahaha unmaiya ninga koriya nattu padam parpingala sir?

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையில் முதல் நபராக வந்து கருத்திட்டமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் மஹேஷ்! நான் கொரியன் படங்கள் பார்ப்பதுண்டு (நிறைய இல்லாவிட்டாலும் ஓரளவு) என்பதால்தான் அப்படி எழுதினேன். முன்பு பார்த்த ஒன்றின் விமர்சனம்கூட என் தளத்தில் எழுதினதுண்டு. இதோ லிங்க் :

      http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_17.html

      Delete
  2. அதிசயம்!

    ஆஹா மீத ஃபஸ்ட்..


    ReplyDelete
    Replies
    1. Yeah..! You are the First and I offer a Special Cake to you! Tks.

      Delete
  3. அடுத்த முறை சந்திக்கும் போது ஒப்பிப்பதை கேட்க வேண்டும்... ஹிஹி...

    விமர்சனம் சுருக்... நறுக்...

    ReplyDelete
    Replies
    1. சான்ஸ் கம்மி D.D.! பயணத்தின் இரண்டாம் நாளிலும் என் பாட்டுக் கச்சேரிதான் நடந்தது என்பதால் ஓரளவு ராகத்துடன் பாடவே ஆரம்பித்து விட்டேன் இப்பல்லாம். ஹா... ஹா... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. // கேப்டனின் முன்னால் நிற்கும் பத்திரிகையாளர் போல//
    இந்த வரியை படித்ததும் என்னை அறியாமல் வந்த சிரிப்பு அடங்க நேரமாயிற்று என்பது நிஜம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. அவர் திட்டுவாரா, இல்ல... அடிப்பாரான்னு கெஸ் பண்ண முடியாத நிலையிலதானே சந்திக்க வேண்டியிருக்கு இப்பல்லாம். அதான் அப்படி எழுதினேன். ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  5. பகிர்வு அருமை. கூடவே பார்த்த திரைப்படத்தின் விமர்சனம். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  6. நகைச்சுவையான பயண அனுபவம்..நானும் உங்கள் பயணத்தில் தொடர்கிறேன். பாஸ் எந்த ஆபிஸில் வேலை செய்கிறிர்கள் அங்கு மருந்துக்கு கூட பெண்கள் கிடையாதா என்ன? அட்லீஸ்ட் ஒரு பெண்ணாவது இருந்து வரும் உங்க குருப்பு கூட வந்து இருந்தால் நீங்கள் பாடிய பாடலுக்கு நன்றாக ஆட ஒரு பெண் கிடைத்திருப்பாளே....

    ReplyDelete
    Replies
    1. மச்சி... நம்ம ஆபீஸ்ல நிறையப் பொண்ணுங்க இருக்குது. ஆனா பாருங்க.. எங்க டிபார்ட்மெண்ட்ல ஒரு பொண்ணுகூட இல்ல...! வாட் டு டூ? அதனால நீங்க எதிர்பார்க்கற எக்ஸ்ட்ரா இனிமையை நாங்க இழந்துட்டோம். ஹி... ஹி...! மி்க்க நன்றி!

      Delete
  7. ரசித்தேன் மகிழ்ந்தேன்,தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைய ந்னறி!

      Delete
  8. அப்போ அடுத்து பதிவர் சந்திப்பு வந்தா நீங்க அதே பொண்ண பார்த்து சில்னெஸ் குறையாம படியே ஆகணும்...

    சும்மா இரங்கி ஒரு குத்து வுட்டு அடிச்சி தூள் பாரதி இருக்க வேண்டாமா, டேனியலின் தாரை தப்பட்டைகள் கிழிந்திருக்க வேண்டாமா...

    வாத்தியரே அப்போ கொரியப் படங்கள் கூடப் பாக்குறீங்க, நான் தமிழ் ஆங்கிலம் மிஞ்சி போனா இந்தி ஐயோ ஐயோ ...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவர் சந்திப்புதான...? தாராளமாப் பாடிட்டாப் போச்சு! சீனு கேட்டு நிறைவேத்தாமலா? அப்போ கொரியப்படங்கள் இல்ல... அப்பப்போ கொரியப்படங்கள் விரும்பிப் பாக்கறதுண்டு. நீ பாக்க விரும்பினா என்கிட்ட டிவிடி வாங்கிட்டுப் போயி பாக்க என்ன தடையாம்? மிக்க நன்றிப்பா!

      Delete
  9. பாலக்காட்டார் - very funny
    இருந்தாலும் கொடைக்கானல் போய் ஒரு புதுச்சினிமா பாத்துட்டு வரணும்னா.. என்னவோ போங்க.
    நீங்க டேன்ஸ் ஆடினது யுட்யூப்ல இருக்குதா?

    ReplyDelete
    Replies
    1. நல்லகாலம்.. யூ டியூப்ல இந்தக் கூத்துக்களப் போடணும்னு எங்க ஆபீஸ் மக்களுக்குத் தோணலை. உங்க கருத்த அவங்க யாரும் கவனிச்சுடாம இருக்கணுமே சாமீஈஈஈஈ! மி்க்க நன்றி நண்பரே!

      Delete
  10. ஹப்ப்பா.... ரொம்ப நாள் அப்புறம் வரேன்.....
    ஏன் சார் அங்க போயும் சினிமா தான் பாக்கணுமா? அதும் அந்த படத்தை!!

    நீங்க ஒரு நாள் அந்த பாட்டை கண்டிப்பா பாடிகாட்டனும்.......

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா...! சமீராவுக்கு இல்லாததா? கண்டிப்பா பாடிக் காட்டறேன்மா. ரசித்துப் படித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. // நான் மிகத் தயங்கியது அவரை யோசிக்க வைத்ததோ என்னவோ... ‘‘சரி, நீங்க ஆட வேணாம், ஏதாவது பாடுங்க...’’ என்றார்.//- அங்க பாடியதால் இங்கே கேட்கலை( நல்ல வேளை! )

    ReplyDelete
    Replies
    1. இப்ப தப்பிச்சுட்டீங்க...! ஹா... ஹா... என்றாவது ஒரு நாள் மாட்டுவீங்க தோழி! அப்ப பாத்துக்கறேன்...! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  12. Very very embarrassing moment for you when you were asked to dance and for them when you sung. Still I enjoyed your Thanglish song.

    ReplyDelete
    Replies
    1. தங்கிலீஷ் பாட்டை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. கொடைக்கானல்ல போயி ஸோலோவா பாடி ஆட ச்சான்ஸ் கிடைச்சா தூள் கிளப்ப வேணாமான்னு கேக்க நினைச்சேன். ‘‘ஒரு Girlஐப் பார்த்து Moonஐப் பார்த்தேன். Moonல் Chilness இல்லை, அவள் Eyesஐப் பார்த்து Flowerஐப் பார்த்தேன். Flowerல் Brightness இல்லை’’ன்னு பாடி சான்ஸை விடலைன்னு நிரூபிச்சிட்டீங்க :-))

    'பரதேசி' விமர்சனமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பாடிய எனக்கு உற்சாகம் தந்து, பரதேசி பற்றி எழுதியதையும் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. //Girlஐப் பார்த்து Moonஐப் பார்த்தேன். Moonல் Chilness இல்லை, அவள் Eyesஐப் பார்த்து Flowerஐப் பார்த்தேன். Flowerல் Brightness இல்லை’//

    நல்லாவே பாடியிருக்கிறீர்கள். இது தானே அதிர்ச்சி.
    இதஈடவும் உங்கள் பரதேசி பட விமர்சனம் அதிகம் ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்...தொடரன்கள்./.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... இந்த அதிர்ச்சிக்குத்தான் அத்தனை பில்டப்பு! ஹி... ஹி... ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. சான்ஸ் கிடைச்சா எதையும் விடறதில்லை போல பாட்டு கலக்குங்க' பரதேசி '
    விமர்சனம் நல்ல சொல்லிடே வந்தீங்க நான் கூட என்னடா இவர பாணியில் கொஞ்சம் உதைக்குதே நினைக்கும் போது டப்புநு 2 கேள்வியை கேட்டு கலக்கிடீங்க

    ReplyDelete
    Replies
    1. பாட்டைப் பற்றிச் சொன்னதை ரசித்து, என்னோட பாணியை எதிர்பார்க்கும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. மதுரக்காரய்ங்கன்னாலே பாட்டு படிப்பாங்க என்ற அவச் சொல்லை நீக்கி விட்டீர்கள் போல! பாடிட்டீங்களே!

    ReplyDelete
    Replies
    1. ஹா.... ஹா... எனக்கு முன்னாடியே அவச் சொல்லை நீக்கிய நீங்கல்லாம் இருக்கீங்களே! அப்புறம் என்ன...? மிக்க நன்றி!

      Delete
  17. பாசத்திற்குரிய பலகணேஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் . வழமை போல தங்களது இந்த பதிவும் மிகவும் நகைச்சுவையாகவும் , ரசிக்கும்படியும் இருந்தது . தொடருங்கள் .தொடர்கிறேன் ...!

    ReplyDelete
    Replies
    1. எப்பவுமே கைப்புள்ள மாதிரி கலாய்ச்சுட்டே இருந்தா கடசில , நம்மள பவர் ஸ்டார் மாதிரி ட்ரீட் பண்ண ஆரம்"பிச்சுடுவீங்க ", அதுனாலதான் இந்த புத்தாண்டு முதல் சூப்பர் ஸ்டாராக மாற இருக்கிறேன் . ஸோ இனிமே கலாய்ச்சு பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் .

      தங்களது குறுஞ்செய்திக்கு மிக்க நன்றி அண்ணா ..! தொடர்கிறேன் தொடருங்கள் ...!

      Delete
    2. தம்பி...! ஓவரா பம்முறியே... மெய்யாலுமே திருந்திட்டியா? இல்ல அடுத்த பதிவுல கும்மிரலாம்னு பதுங்கறியா? எதுவா இருந்தாலும் நோ ப்ராப்ளம். தொடர்ந்து படித்து ரசித்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தினாலே போதுமானது! புத்தாண்டு தீர்மானம் எடுத்த உனக்கு என் மனம் நிறைய வாழ்த்துக்களும் நன்றியும்!

      Delete
  18. மனசில் எழுந்த கேள்விகள் நியாயமானவைதான்!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து ஆமோதித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  19. ரசிக்கும் படி எழுதுவது உஙக்ளுக்கு கைவந்த கலை ஆச்சே.சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. மிக ரசித்துப் பாராட்டியமைக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா!

      Delete
  20. நல்ல சுவையான அனுபவங்கள்! பாட்டு பிரமாதம்! நாங்கள் படிக்கும் காலத்தில் பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடலை இப்படிதான் மில்க்கும் ஃப்ரூட்டும் ஹேண்ட்ஸில் டேக்கி என்று பாடுவோம். இனிய பல நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.

    பரதேசி பட விமர்சனம் அருமை. உங்களுடைய இரண்டாவது கேள்விக்கு விடையாக எனக்குத் தோன்றியது இது. முன்பே அந்த அதிகாரி வேதிகாவின் மேல் கைவைத்திருக்கலாம். அந்த சமயத்தின் இயலாமையும் கோபமுமே கூட அவள் கணவனை அவளை விட்டு ஓடச்செய்திருக்கலாம்.

    பாலக்காட்டார் நகைச்சுவை சுட்டது என்றாலும் சுவைத்தது. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிப் பருவத்துல இந்த விளையாட்டு உங்க சைடிலயும் இருந்துருக்கா? ரொம்ப சந்தோஷம்...! அட... இப்படிக்கூட இருக்கலாம்னு தோணுது உங்க அழகான விடையப் பாத்ததும்! இருக்கலாம்தான்...! சுட்ட நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. அருமை சகோ. வழமைபோல நல்ல நகைச்சுவை கலந்த தொடர். சிரிச்சு, ரசிச்சுப் படித்தேன்.

    நீங்கள் பாடியவிதம் மிக அருமை.

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ரசித்துப் படித்து தொடர ஊக்கிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  22. //கொரிய நாட்டுப் படங்களைப் பார்த்த//

    அட இண்டர்நேஷனல் லெவல்ல படம் பார்ப்பீங்களா? சொல்லவே இல்லை! :)

    சுவையான கட்டுரை. பாட்டு டான்ஸ் -னு ஒரே அமர்க்களம் தான் .... நடக்கட்டும் நடக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டு அலமாரியில ஏராளமான டிவிடிக்கள் இருப்பதை கவனிச்சிருப்பீங்கன்னுல்ல நினைச்சேன். எல்லா மொழிப் படங்களும் இருக்கும் வெங்கட்! எழுத்தை ரசித்து வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. நல்லவேளை...

    கொடைக்கானல் ஆட்டம் காணல... தப்பிச்சது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... எவ்வளவு பெரிய சேதாரத்திலிருநு்து தப்பிச்சிருக்குது. ஹி... ஹி...! மிக்க நன்றி நண்பா!

      Delete
  24. ' ஒரு பெண்ணைப்பார்த்து நில‌வைப் பார்த்தேன்' பாடலை இப்படியும்கூட பாடலாமா? பாவம் டி.எம்.செளந்தரராஜன்! நகைச்சுவை உண‌ர்ச்சி கம்மியாக இருக்கும் எனக்கே உங்கள் பாடலைப்படித்து சிரித்ததில் கண்ணில் நீரே வந்து விட்டது! அந்த‌ வகையில் உங்களுக்கு அன்பு நன்றி!

    பயண அனுபவங்களை மிக அருமையாக எழுதி வ‌ருகிறீர்கள்! இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. பயண அனுபவத்தை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  25. பாடல் சூப்பர் சார்.. கோவைக்கும் உங்க இசை சேவை தேவை..விரைவில் எதிர்பார்க்கிறோம்..

    // கூட நிக்கற தன்ஷிகாவே அழகா இருக்கா. அவ மேல கை வைக்கணும்னு ஏன் வெள்ளக்காரனுக்குத் தோணலை? //

    சார், முதல் தடவ பாக்கும் போது நானும் இதே தான் நினைச்சேன்.. ஆனா தன்ஷிகா வீட்டுக்கு அதர்வா வரும்போது தன்ஷிகா "இனி எவனாவது ஆம்பளை இந்த பக்கம் வந்தா வெட்டிடுவேன்" என்று கூறுவதாக ஒரு காட்சி இருக்கும். கவனித்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. விரைவில் கோவையில் என் இசையை(?)க் கேட்கும் பாக்கியம்(!) கிட்டும் ஆவி! பரதேசியில் நீங்க சொன்ன விஷயம் கவனத்தில பதியலை. இப்பத்தான் நீங்க ‌சொன்னதும் நினைவுக்கு வருது. சரிதான்! மிக்க நன்றி!

      Delete
  26. கணேஷ் பயண அனுபவத்தை இப்படி சுவாரஸ்யம் ததும்ப சொல்ல திறமை வேணும் கணேஷ்க்கு அது இருக்கு..பாட்டெல்லாம் பாடி தூள் கெளப்பி?:) அடுத்த வாட்டி கணேஷை பாடாம போக விடுவோமா?:)

    ReplyDelete
    Replies
    1. பெங்களூராவது தப்பிச்சுடும்னு பாத்தேன். நீங்களும் மாட்னீங்களா...? ஹி... ஹி... இதுக்காகவே கூடிய சீக்கிரம் பெண்களூரு, ஸாரி, பெங்களூரு விசிட் அடிக்கறேன்க்கா. மிக்க நன்றி!

      Delete
  27. ரசனை...ரசித்தேன் தொடரட்டும். இனிய வாழத்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  28. எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும் சாமீ....!
    // உலக சினிமாக்களுக்கு ஒரு மாற்றும் குறையாத தமிழ்த் திரைப்படம் ‘பரதேசி’ என்பேன்.// இது உண்மையா இல்லை ஏதேனும் உள்குத்து இருக்கா?

    என் ஓட்டை எந்த விமரிசனத்துக்குப் போடறதுன்னு தெரியலயே!

    மக்கள் திலகத்தின் பாடலை ஆங்கிலம் கலந்து தமிழில் பாடிய உங்கள் புலமையை மெச்சுகிறேன், கணேஷ்!

    ReplyDelete
  29. பாலாவின் படங்கள் நிஜத்தை உள்வாங்கி ஜோசிக்க வேண்டும் அவர் ஒரு ஜீனியஸ் என்பேன் குத்து மசாலா தாண்டி யாதார்த்தம் சொல்லும் இயக்குனர்!ம்ம் தொடரட்டும் !

    ReplyDelete
  30. ஒருவழியா நல்லதொரு பாடலை பாடிவிட்டீர்களா....பாராட்டுகள்.

    சென்ற முறை வந்த போது பரதேசி படம் பார்க்கலாம் என்று சொல்லியும் என்னவர் வேண்டாம் என்று சொல்லி விட்டார். அழுவனாம்...:))

    ReplyDelete
  31. நகைச்சுவையுடன் சுற்றுலா களை கட்டியது.

    பரதேச் படம் இன்னும் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube