Tuesday, February 28, 2012

னதிற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி பதிவாக்கிக் கொண்டிருக்கும் இவனை, ‘பள்ளிப் பருவத்தைக்‌ கொஞ்சம் திரும்பிப் பாரண்ணா’ என்று தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் பணித்தார் தங்கை ராஜி. அவ்வன்பு வேண்டுகோளினை ஏற்று, சற்றே பின்னோக்கிப் பார்ககிறான் இவன்!

வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் பள்ளி என்பதால், அப்பா வாங்கித் தந்த அலுமினியப் பெட்டியில் புத்தகங்களைச் சுமந்தபடி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கைவீசி இவன் வர, வீட்டு மாடியிலிருந்து அப்பாவும் அம்மாவும் கையசைக்க, பதிலுக்கு இவன் உற்சாகமாகக் கையசைத்தபடி ஓடிவர, பெட்டி திறந்து புத்தகங்கள் கீழே கொட்டியதையும், தெருவோரச் சிறுவன் ஒருவன் அதைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதையும் கண்டு, அம்மாவும் அப்பாவும் பதறிக் கையசைக்க, மேலும் உற்சாகமாய் கையசைத்தபடி (திரும்பிப் பாராமலே) வீட்டுக்கு வந்து இவன் திட்டு வாங்கியது ஒன்றிலே.... வகுப்பு ஒன்றிலே!

ள்ளிப் பரீட்சையன்று எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மக்கள் திலகம் ‘சப்லா மாமா டோலக் தாத்தா’ என்று பாடியது மிதந்துவர, அதைக் கேட்ட சுகத்தில் கண்ணுறங்கி எதுவும் எழுதாமல் வந்து, அப்பாவியாய் வீட்டில் நடந்ததைச் சொல்ல, அவர்கள் சிரித்து மகிழ்ந்ததும், அப்பாவை இவன் இழந்ததும் இரண்டில்தான்... வகுப்பு இரண்டில்தான்!

சித்தப்பா கொடுத்த பத்துப் பைசாவை வாயில் அடக்கிய வண்ணம் வகுப்பைக் கவனிக்க, மங்கையர்க்கரசி டீச்சர் ஏதோ சொன்னதற்கு சிரித்து, காசு தொண்டையைத் தாண்டி உட்செல்ல, இவன் கண்கள் செருகி, மங்கை டீச்சரை அழவைத்து, சித்தப்பாவை ஹாஸ்பிடலுக்கு அலைய வைத்தது (மங்கை டீச்‌சர் உடனே வாழைப்பழங்கள் வாங்கித் தந்து சாப்பிட வைத்த புத்திசாலித்தனத்தால் மறுநாள் எக்ஸ்ரேயில் வயிற்றில் எதுவும் இல்லை, வெளியேறி விட்டது என்பது தெரிந்தது.) மூன்றுங்கோ... வகுப்பு மூன்றுங்கோ!

கேட்ட மாத்திரத்தில் மனதில் பதித்துக் கொள்ளும் திறனை இயற்கை தந்திருந்ததால், இரண்டு பக்க விடையை ஒரே மூச்சில் சொல்லி, ட்யூஷன் மிஸ்ஸிடம் இவன் பாராட்டுப் பெற்றதும், என்னை உதாரணம் காட்டி மிஸ் திட்டியதால் உடன் படித்த சேட்டுப் பெண்களின் வயிற்றெரிச்சலைக் ‌கொட்டிக் கொண்டதும் நான்கிலே... வகுப்பு நான்கிலே!

ண்ணனுடன் கோவைக்கு குடிபெயர, இவன் கோலி குண்டும், கிட்டிப்புள்ளும் கதியென தெருத் தெருவாய் அலைந்தது ஐந்தல்லவா... வகுப்பு ஐந்தல்லவா!

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் அடுத்த ஆண்டு படிக்க, வயல் வெளிகளின் ஊடே திரிந்து வகுப்புக்குச் சென்றதும், பாதையில் சர்வசகஜமாய் நடமாடும் பாம்புகளைக் கண்டு இவன் பயந்ததும், கால் பந்து ஆட்டத்தை வெறியுடன் ஆடியதும் ஆறிலேதான்... வகுப்பு ஆறில்தான்!

மலஹாசன் என்ற புதிய கதாநாயகனைப் பார்த்து ரசித்ததும், ஸ்ரீதேவி என்கிற நடிகையை இவன் ஜொள்ளு விட்டதும் ஏழிலேயல்லவா... வகுப்பு ஏழிலே அல்லவா!

துரையில் பாரதியார் பணிபுரிந்த பள்ளி என்கிற பெருமையுடைய சேதுபதியில் இவன் படித்ததும், நிறைய சினிமாக்களை பார்த்ததும், அப்படியும் வகுப்பில் இரண்டாவதாக வந்ததும் (சிவகுமார்னு ஒரு வில்லன் இவனைத் தாண்டி ஃபர்ஸ்ட் வந்தடுவான்) எட்டுங்க... வகுப்பு எட்டுங்க!

தேவகோட்டைக்கு அடுத்த வருஷமே குடும்பம் பெயர, தேபிரித்தோ ஸ்கூல்ல இவன் படிச்சதும், கால்பந்து விளையாடி நண்பனோட கன்னத்துல ரத்தக்கோடு ‌போட்டதும், அதுவே அழுத்தமான நட்பானதும் (என் பதிவு: ரத்தத்தில் பூத்த நட்பு) நிறைய நிறைய சினிமாக்கள் பார்த்ததும் ஒன்பதில்தான்... வகுப்பு ஒன்பதில்தான்!

டுத்த ஆண்டில் காரைக்குடியில் குடும்பம் இருக்க, தினமும் பஸ்சில் தேவகோட்டை போய் வந்ததும், பஸ் அதிர நண்பர்கள் குழாத்துடன் இவன் கொண்டாடி மகிழ்ந்ததும், பெண் பிள்ளைகளுக்காக சில சாகசங்கள் செய்ததும், எல்லாம் தாண்டி நல்ல சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றதும் எல்லாமே பத்துங்கோ... வகுப்பு பத்துங்கோ!

வன் வார இதழ், மாத நாவல்கள் எல்லாம் படிக்கத் துவங்கியதும், டைப்பிங் கற்றுத் தேறியதும், ‘ஐங்கரன் கீதமாளிகை’ நடத்தியவரை நட்பாக்கிக் கொண்டு வகுப்பு நேரம் தவிர, அங்கேயே பழியாய்க் கிடந்து இசை‌ கேட்டு மகிழ்ந்ததும், காரைக்குடி கொப்புடையம்மன் திருவிழாவில் இரவெல்லாம் கோலாகலமாய் கழித்ததும் +1ல தாங்கோ... வகுப்பு +1ல தாங்கோ...

காரைக்குடியில் இவனுக்குத் தனி நண்பர்கள் குழு அமைந்ததும், ஓய்வு நேரத்தில் செஸ் விளையாட்டும், சாக்பீஸ் செய்வதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், புத்தகங்கள் படிப்பதுமாய் இனிமையான பொழுதுகள் அமைந்தது +2வில் அன்றோ! வகுப்பு +2வில் அன்றோ!


தொல்லைகள் அற்ற, என்றும் திரும்பி வராத அந்த பிள்ளைப் பருவத்தை எண்ணி இவன் ஏக்கத்துடன் இருப்பது தொடருமன்றோ எந்நாளும்! இந்த நினைவலைகளைத் தொடர்பதிவாக்கும்படி தங்கை ராஜி கோரியதால் இவன் தனக்குப் பிடித்த ஐவரை அவர்களின் பள்ளிப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கும்படி அன்புடன் அழைக்கிறான்.

1. நண்பர் மதுமதி.
2. நண்பர் நடனசபாபதி
3. நண்பர் வெங்கட் நாகராஜ்
4. ஷைலஜா அக்கா
5. தோழி ‘தென்றல்’  சசிகலா

இவர்களின் பள்ளிப் பருவ அனுபவங்களைப் படித்து மகிழ, உங்களுடன் சேர்ந்து காத்திருக்கிறான் இவன்!

77 comments:

  1. அட என்ன நண்பரே.... நம்மளையும் திரும்பிப் பார்க்கச் சொல்லி இருக்கீங்க!

    திரும்பிப் பார்க்கிறேன் - கொஞ்சம் நேரம் கொடுங்க....

    ஏன்னா முழுதா திரும்பிப்பார்க்க கொஞ்சம் நேரம் எடுக்கும்.... :)

    இனிமையாக எழுதி இருக்கீங்க நண்பரே..... சுவைபட இருந்த பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்... ராஜி என்னைத் தொடர் பதிவு எழுதச் சொன்னதும் பள்ளிப் பருவத்துல சொல்ல என்ன இருக்குன்னு எனக்கும் மலைப்பாத் தான் இருந்தது. ஆனா எழுத ஆரம்பிச்சதும் தானா வந்துடுச்சு. நீங்களும் கலக்குவீங்க. அதுக்காக நான் காத்திருக்கேன். நன்றி!

      Delete
  2. நிகழ்வுகளும் அதைச் சொல்லிச் சென்றவிதத்திலும்
    பதிவு படு சுவாரஸ்யம்
    பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றி!

      Delete
    2. பள்ளியில் படித்த நாட்களைப்பற்றி பகிர்ந்து கொண்டது நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

      Delete
    3. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  3. மிக சுவாரஸ்யமாக ரசிக்கும்படித் தொகுத்து இருக்கிறீர்கள் .
    பாராட்டுக்கள். இவன் [appo] புத்திசாலித்தனமான வால் பையனாக
    இருந்து இருக்கிறானே .

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் தோழி. வால்தனமும் கூடவே பயந்தாங்கொள்ளித் தனமும் இருந்தது அப்போ இவன் கிட்ட. சுவாரஸ்யம் என்று ரசித்ததற்கு என் இதய நன்றி!

      Delete
  4. நல்ல தொடர்பதிவுதான் நல்ல ரசித்து சொல்லி இருக்கீங்க எல்லாருக்குமே இதுபோல ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். நான் வாழ்க்கையில் மிஸ் பண்ணின விஷயமே இந்த பள்ளிப்படிப்பைத்தான். வெரி ஸேட் இல்லியா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா. பள்ளி படிக்கும் சமயம் கிடைக்கிற நட்புகளும், போட்டுக்கற சின்னச் சி்ன்ன சண்டைகளும் எல்லாமே சுவாரஸ்யம்தான். இந்த விஷயத்தை நீங்க மிஸ் பண்ணினதுல எனக்கும் வருத்தம்தான். படித்து, பாராட்டி, ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  5. அண்ணா, சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லை, தயிர்சாதம் அது இதுன்னு சொல்லிட்டு இப்போ கலக்கிட்டீங்க. இவ்வளவு நடந்திருக்கா?

    ReplyDelete
  6. 12 வகுப்புல ஒரு இடத்துலயும் லவ், இனக்கவர்ச்சி ஏதும் காணோமே! அண்ணா, நீங்க ரொம்ப நல்ல்ல்ல்லவங்களா?

    ReplyDelete
    Replies
    1. 12 வகுப்பு படிக்கும் போது பஸ்ல அலப்பறை பண்ணிப் பாத்தும், காலேஜ்ல பெண்கள் ஏரியாவுல சுத்தியும்கூட எந்தப் பொண்ணும் இவனை லவ் பண்ணலைங்கறது பெரிய சோகம்மா. (உருவம் அப்படி... எஸ்.பி.பி. சைஸ்ல காலேஜ் படிக்கறப்ப இருந்தா?) சரி, லவ்வுக்கும் நமக்கும் ராசியில்லைன்னு இவன் விட்டுட்டு, ஸைட் அடிக்கிறதை மட்டும் பண்ணிட்டிருந்தான். ஹி... ஹி...

      Delete
  7. வரிசைப்படுத்தி பகிர்ந்தவிதம் அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்‌ந்த நன்றி.

      Delete
  8. நகைச்சுவை உணர்வு மிளிர தொடர் பதிவில் ஞாபகம் வருதே பாடி இருப்பது அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதேதான்... பள்ளிப் பருவத்தை நினைக்கணும்னதும் அந்தப் பாட்டுத்தான் என் மனசில ஓடிச்சு. ரசித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி சிஸ்!

      Delete
  9. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சம்பவத்தை சொல்லி அசைப்போட்ட உங்க டச் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. நலமா பிரபா? எழுத்து டச் நன்று என்று தட்டிக் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  10. 7ம் வகுப்புன்னா 13 வயசு இருக்குமா ஃப்ரெண்ட்.அப்பவே ஸ்ரீதேவியை ஜொள்ளு விட்டீங்களா !

    ReplyDelete
    Replies
    1. வெரி கரெக்ட் ஹேமா! அப்ப 13 வயசுதான். சிகப்பு ரோஜாக்கள் படம் பாத்ததுலருந்து இவன் ஸைட் அடிக்கிறது ஆரம்பமாயிடுச்சு. ஆனா love ங்கற விஷயம்தான் இவன் லைஃப்ல வராமலே போய்டுச்சு. ஹும்...!

      Delete
    2. அப்பா...பெருமூச்சு சுவிஸ் வரைக்கும் வந்து ஐஸ் மலையே கரையுது.இப்ப என்னா வந்துச்சு ஃப்ரெண்ட்.வீட்ல காதலிச்சிட்டாப் போச்சு !

      Delete
  11. மிக அழகாக விஷயங்களை தொகுத்து வழங்கி இருக்கீறிங்க. என்னையும் உங்களோடு சேர்த்து என்னையும் சகோதரி ராஜி அழைத்து இருக்கிறார்கள் .உங்களை பார்த்து காப்பி அடிக்கலாம் என்றால் நீங்கள் மிகவும் அழகாக எழுதி இருக்கீறிர்கள் காப்பி அடித்தால் அவர் கண்டுபிடித்து விடுவார். என் நிலமை இப்போது திருவிளையாடலில் வரும் நாகேஷ் நிலமை போல ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. சும்மா டூப் விடறீஙக... உங்கள் பாணியில நீங்க வேற விதமா எழுதி அசத்திடுவீங்கன்னு எனக்குத் தெரியும் நண்பா! நானும் அதைப் படிக்க காத்திருக்கேன்... என் எழுத்தைப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  12. வி ப சி கே அ வி க ம தே அ இ கா = எல்லாமே அருமை.

    இரண்டாம் வகுப்பிலேயே தந்தையின் இழப்பா...ஐயோ...
    ஏழாம் வகுப்பிலேயே ஜொள்ளா..அது சரி...

    புதுமையான முறையில் அழகாகத் தொகுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த விஷயங்களை அழகாய்ப் பாராட்டி ஊக்கமளித்த தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  13. Nagaichuviyodu azhagaa cholliyirukkireerkal. Vaazhthukkal

    ReplyDelete
    Replies
    1. ரசித்து, வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  14. வழக்கம்போல சுவாரஸ்யமா எழுதிட்டீங்க என்னையும் அழைத்ததற்கு நன்றி இப்போதான் ஊர் திரும்பினேன் அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு எழுதிடறேன் கணேஷ் என்ன?!

    ReplyDelete
    Replies
    1. டேக் யுவர் ஓன் டைம் அக்கா... உஙகள் பள்ளி நினைவுகளை தெரிஞ்சுக்க ஆவலாய் வெய்ட்டிங்.

      Delete
  15. சார் சூப்பர் சார்.எனக்கு என் பள்ளி பருவங்கள் ஞாபகம் வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிப் பருவத்தை நினைத்து ரசித்துப் பாராட்டிய பாலாவுக்கு என் இதய நன்றி.

      Delete
  16. அடேங்கப்பா நினைவாக எல்லாம் சுவை படச் சொல்லியுள்ளீர்கள். வாசிக்க ரசனையாக உள்ளது. சுவைத்தேன் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நினைவலைகளை படித்து ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  17. பள்ளிப் பருவத்தை மீண்டும் திரும்பிப் பார்க்க அன்புடன் அழைத்தமைக்கு நன்றி நண்பரே! ‘நினைவோட்டம்’ என்ற தலைப்பில் எனது பதிவில் இது பற்றி ஏற்கனவே எழுதி இருந்தாலும், நிச்சயம் ஓரிரு நாளில் எனது பள்ளிப் பருவத்தை மீண்டும் திரும்பிப் பார்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் திருப்பிப் பார்க்கும் நினைவலைகளைப் படிக்க காத்திருக்கிறேன். அந்த பழைய பதிவின் லிங்கையும் இப்பதிவில் வெளியிடுங்கள். என் அழைப்பை ஏற்றுத் தொடரும் உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  18. அருமை.அருமை. சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.காசு முழுங்கியதை எல்லாம் அழகாக ஞாபகம் வைத்து நாங்களும் ரசிக்கும்படியாக எழுதியிருக்கீங்க கணேஷ். நகைச்சுவைக்கு நடுவில் ஒரு சோகம்.வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் எது செய்தாலும் கோபமே படாமல் ரசித்த அப்பாவை நினைக்கையில் இன்றும் மனம் இளகி விடும். என்னுடன் சிரிப்பிலும சோகத்திலும் பங்கெடுத்துக் கொள்ளும் தங்களுக்கு மன நெகிழ்வுடன் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

      Delete
  19. அருமையாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் சார். உங்கள் சிறுவயது ஞாபகங்களை நாங்களும் தெரிந்துகொண்டோம். நன்றி உங்களுக்கும் சகோதரி ராஜிக்கும் (அவங்கதானே காரணம்).

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை ரசித்ததுடன் எனக்கும் தங்கைக்கும் நன்றி சொல்லிய உங்களுக்கு என் அன்பும், இதயம் கனிந்த நன்றிகளும் துரை.

      Delete
  20. ஒன்று முதல் பனிரெண்டு வரை நானும்
    உங்கள் கூட வந்ததாக ஓர் உணர்வு!
    எழுதுவது என்பதுஒரு கலை!
    அது உங்கள் பால் திறமையாக அமைந்துள்ளது!
    பாராட்டுக்கள்
    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டு எனக்கு பெரும் பலம். நன்றி ஐயா...

      Delete
  21. :)சுவாரஸ்யம்.... பயங்கர வால் கலந்த புத்திசாலியும் பொல.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... ஆமாங்க ஷக்தி. சாதுவான வால்தான் நான். என்னை உற்சாகப்படுத்திய வருகைக்கு என் நன்றி.

      Delete
  22. என் பள்ளி பருவத்தையும் மீட்டுப்பார்க்க தோணிச்சு

    ReplyDelete
    Replies
    1. பள்ளிப் பருவத்தை நீங்கள் திரும்பிப் பார்த்ததில் எனக்கு மிகமிக மகிழ்வு. மிக்க நன்றி.

      Delete
  23. பசுமை நினைவுகள் தொடர் பதிவோடு சந்திக்கிறேன் நட்பே .

    ReplyDelete
    Replies
    1. ‌உடனே என் அழைப்பை ஏற்றுப் பதிவிட்ட நட்புக்கு என் இதயம் கனிந்த நன்றி!

      Delete
  24. உங்கள் பள்ளி வாழ்க்கையில் ஒரு ஃபிகர் இல்லை, ஜிகிடி இல்லை அதனால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சிலருக்கு அந்தக் குடுப்பினை இல்லை செந்தில்! தங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  25. தங்களின் பள்ளிப் பிராயங்களில் தான் எத்தனை ஊர் மாற்றல்கள்.....
    இரண்டாவது வகுப்பில் அப்பாவை இழந்தது கொடுமை.....:(((

    சுவைப்பட எழுதியிருக்கிறீர்கள் சார்....

    ReplyDelete
    Replies
    1. வருஷத்துக்கு ஒரு ஊர்ன்னு படிக்க நேர்ந்தது விதி. (அண்ணனுக்கு அடிக்கடி பணி மாற்றல் ஆகற வேலையானதால அப்படியாச்சு.) ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  26. அழகான நினைவுகள் அப்பாவின் இழப்பு உண்டாக்கும் கனம் தவிர. சுவையாகப் பகிர்ந்த விதமும் நன்று. பனிரெண்டு வருடங்களை ஆறு பள்ளிகளில் படித்திருக்கிறீர்கள். நிறைய அனுபவங்கள் இருந்தாலும் பதிவுக்காகக் குறைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். ரத்தத்தில் பூத்த நட்பே ஒரு பதிவாகிவிட்டதே.... இனிய நினைவுகளைத் தூண்டி மீண்டும் நம்மைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ராஜிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். விரைவில் நானும் எழுதுவேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கவனிப்பு கீதா. எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்ன நம்ம கிட்ட சொல்றதுக்கு என்ன விஷயம் இருக்குன்னு தோணிச்சு. எழுத ஆரம்பிச்சதும் விஷயங்கள் பொங்கி வந்தன. நீளம் கருதி நிறைய விஷயங்களைச் சொல்லலை. அப்பப்ப தனிப் பதிவுகளா சொல்லலாம்னு உத்தேசம். அதற்காக தங்கை ராஜிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! உங்கள் நினைவுகளைப் படிக்கும் ஆர்வத்துடன் உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  27. நல்ல அனுபவங்கள்... பள்ளி வாழ்க்கை ஒரு வசந்தகாலம்... (அதற்குமேல நாம படிக்கலையே.. ஹி..ஹி..)

    ReplyDelete
    Replies
    1. ஆம், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்சசி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  28. தங்களுக்கு தங்கப்பேனா விருது அளித்திருப்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதை ஏற்றிக்கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    http://sekar-thamil.blogspot.in/2012/02/blog-post_29.html

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் தாங்கள் அளிப்பதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நன்றி நவில்கிறேன் நண்பரே!

      Delete
  29. யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்றதுக்கு பொருத்தமான உதாரணம் நீங்க தான்.

    ReplyDelete
    Replies
    1. படிக்கிற காலத்துல மட்டுமில்லாம, வேலை பாக்கறதுன்னு வந்தப்ப கூட ஊர் மாறுற ராசி என்னை விடலை. அதனால நீங்க சொன்னது மிகமிகச் சரி! நன்றி ஸார்!

      Delete
  30. சூப்பருங்கோ! பதிவு சூப்பருங்கோ!

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமான வரிகள் கொண்டு நிறைவாய்ப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  31. ”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!”அருமை கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்க என் மனமார்ந்த நன்றி.

      Delete
  32. அன்பு நண்பரே,
    பள்ளிவருவ நினைவுகள் என்றாலே
    ஒரு தனி சந்தோசம் தான்..
    பட்டாம்பூச்சி சிறகடிச்சி பரப்பதைப்போல
    துள்ளித் திரிந்த காலம் அது..
    அழகாக தொகுத்திருக்கிறீர்கள்..நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவுக்காக நினைத்துப் பார்த்தபோதுகூட மனதில் பட்டாம்பூச்சி சிறகடிக்கத்தான் செய்தது மகேன். படித்து, ரசித்து, பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  33. அருமை. கணேஷ். ஒரே ஒரு வருத்தம் தங்கள் தந்தையின் மறைவு,.
    இங்கள் பன்னிரண்டு வகுப்புகளும் பனிரண்டு விதமாக அழகுக் கதை சொல்கின்றன.

    பள்ளிக் காலமே சிறந்தது.
    பாம்புகளுடன் பள்ளிக்கூடம் சென்ற ஒரே மனிதர் நீங்களாகத் தான் இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்ததற்கும் அழகாகப் பாராட்டி உற்சாகம் தந்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!

      Delete
  34. http://shylajan.blogspot.in/2012/03/blog-post_04.html

    இங்கே எழுதி விட்டேன் கணேஷ் உங்கள் அழைப்பை நிறைவேற்றிவிட்டேன் வழக்கம்போல திரட்டிகளில் சேர்த்துவிடுங்கள் நன்றி

    ReplyDelete
  35. அன்பு நண்பருக்கு,

    உங்கள் அழைப்பிற்கு நன்றி. இன்று எனது பக்கத்தில் எனது பள்ளி நினைவுகள் பற்றி பகிர்ந்து இருக்கிறேன்....

    http://venkatnagaraj.blogspot.in/2012/03/blog-post_05.html

    சமயம் கிடைக்கும் போது வந்து படித்து சொல்லுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. இப்பவே வந்துடறேன். என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி நண்பரே!

      Delete
  36. பள்ளி அனுபவத்தை சுவையாக சொல்லியிருந்தீர்கள்..என்னையும் கூட அனுபவத்தை பகிர சொல்லியிருக்கிறீர்கள்..அதற்கு நன்றி..விரைவில் பதிவிடுகிறேன். என்னது‘சப்லா மாமா டோலக் தாத்தா’வா..அப்ப நீங்க ரொம்ப ரொம்ப மூத்தவங்கதான்..சந்தேகமே இல்லை.(சும்மா)

    ReplyDelete
    Replies
    1. அப்பத்தானே பள்ளிக்குப் போக ஆரம்பிச்சிருந்த காலம். நாங்க எப்பவும் யூத்து தான், தெரியும்ல... ஹி... ஹி... நன்றி கவிஞரே...

      Delete
  37. ஆஹா வசன கவிதையாய் வந்து விழுந்த நிகழ்வுகள். ஒவ்வொரு வகுப்பிலும் நடந்த நினைவுகளின் நினைவுகளை அழகாக சொல்லி சென்ற விதம் அருமை. ஒன்றாம் வகுப்பில் தொலைத்தது போலவே அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் தொலைந்துதான் போயின. சிறுவயதிலே மன சக்தி என பிரமிக்க வைத்து, இரண்டாவது இடம் பெற்ற நிகழ்வும் என சிறப்பு. பல பள்ளிக்கூடங்களில் படித்த அனுபவங்கள். பயமும், விளையாட்டுத்தனமும் என சிறப்பு. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டி எனக்குள் ஊக்கசக்தியை விதைத்த நண்பருக்கு மனமகிழ்வுடன் என் இதய நன்றி...

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube