Saturday, February 4, 2012

ஆனந்த அதிர்வுகள்

Posted by பால கணேஷ் Saturday, February 04, 2012
‘ராஜேஷ்குமாரும் நானும்’ என்ற தலைப்பில் நான் நடைவண்டிகள் தொடரை ஆரம்பித்திருந்தேன். அனைவரும் ரசித்து, உடனே தொடரச் சொன்னதால் உடனே அடுத்த பகுதியை வெளியிட்டு விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் இரண்டு விஷயங்கள் குறுக்கிட்டு, அதை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன். மன்னிக்க.

===========================================

‘‌ரா
ஜேஷ்குமாரும் நானும்’ முதல் பகுதியைப் படித்து விட்டு கோவையிலிருந்து என் நண்பன் வீரவிஜயன் போன் செய்தார். ‘‘நானும்தானே ராஜேஷ்குமாரை நீங்க பாக்கப் ‌போகும்போது கூட இருந்தேன். என்னைப் பத்திச் சொல்லாம விட்டுட்டீங்களே...’’ என்றார்.

மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஆறு வருடங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தோம் நாங்கள். அவர் தொலைபேசி எண்ணை மாற்றி விட்டிருக்க, நான் இங்கே சொல்ல முடியாத பல சொந்தக் கஷ்டங்களில் உழன்று கொண்டிருக்க, ‘டச்’சில் இல்லாமலே இருந்து விட்டோம். இப்போது ய‌தேச்சையாக இந்தப் பதிவைப் படித்தவர், என் தளத்திலிருந்த ஒரு ‘க்ளூ’வைக் ‌கண்டறிந்து, அதன் மூலம் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்திருக்கிறார்.

ராஜேஷ்குமார் அவர்களுடனான என் நட்பில் இனிவரும் சில விஷயங்கள் நடந்தபோது முழுக்கவும் என்கூட இருந்தவர் விஜயன். ஆகவே, அவருடன் மீண்டும் பேசியதில் மிக அகமகிழ்வு எனக்கு. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டதிலும் மகிழ்வுதான்.

===========================================

தோழி ஸ்ரவாணி தன் ப்ளாக்கில் எனக்கு ஒரு விருது கொடுத்திருந்தார். அதைப் பற்றிய விவரம் அவர் வார்த்தைகளிலேயே கீழே தருகிறேன்:

'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

எப்படி என்னை ‘இளம்’ வலைப்பதிவாளர் என்று தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை... ஆனாலும் தோழி கொடுத்த விருதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு இங்கே என் தளத்தில் இணைத்திருக்கிறேன். இப்போது அவர் சொன்னபடி நான் ஐந்து பேருக்கு வழங்கியாக வேண்டும் அல்லவா.... அந்த ஐந்து பேர்:

1. கதை, கவிதை, நகைச்சுவை என்று எல்லா ஏரியாவிலு்ம் முத்திரை பதிக்கும்.... அக்கா ஷைலஜா அவர்கள் (எண்ணிய முடிதல் வேண்டும்)

http://shylajan.blogspot.in/2012/02/blog-post.html

2. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் அதை மனதில் பதியும் வண்ணம் ‌சொல்லும் வித்தை தெரிந்த... தங்கை ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)

http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post.html

3. அழகுத் தமிழ்க் கவிதைகளாலும், அறிவுக்கு வேலைதரும் வார்த்தைப் புதிர்களாலும் (என் அறிவுக்குத்தான் எட்டுறதில்ல) அசத்தி வரும்... நண்பர் மகேந்திரன் அவர்கள் (வசந்த மண்டபம்


http://ilavenirkaalam.blogspot.in/2012/02/blog-post.html

4. சினிமா, தொடர் கதை, சாதனையாளர்களின் வரலாறு, கிரிக்கெட் என்று எல்லாத் திசைகளிலும் எழுதிக் குவித்து வரும்... நண்பர் K.S.S.ராஜ் அவர்கள் (நண்பர்கள்)


http://www.nanparkal.com/2012/02/blog-post_03.html

5. சின்னச் சின்ன சுவாரஸ்யக் கதைகள், உடல் நலத்துக்கேற்ற உன்னத விஷயங்கள், அவ்வப்போது அழகுக் கவிதைகள் என வியக்க வைக்கும்.... நண்பர் துரை டேனியல் அவர்கள் (தளத்தின் பெயரும் இதுவே)

http://duraidaniel.blogspot.in/2012/02/stress_03.html

இவர்கள் ஐவரும் என் அன்பை ஏற்றுக் கொண்டு, தோழி ஸ்ரவாணி சொன்னது போல உங்களுக்கு உகந்த ஐந்து பேருக்கு வழங்கி மகிழும்படி வேண்டுகிறேன். இதோ அந்த விருதின் படம்:


===========================================


 ===========================================

55 comments:

  1. அப்படி வழங்காமல் இருந்த பதிவர் ஒருவருக்கு இரண்டே நாளில் உட்காரும் இடத்தில் கட்டி வந்தது :))

    ReplyDelete
  2. @ அப்பாதுரை said...

    கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியதுதானே... ஹா... ஹா... எதுக்கு வம்பு? நான் வழங்கிட்டேன்ப்பா... முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  3. தொலைந்த நண்பர் கிடைத்தது மகிழ்ச்சி. முதல் விருது இரட்டிப்பு மகிழ்ச்சி.

    ஏன் அண்ணா LAY OUT ஐ மாத்திட்டீங்க?

    ReplyDelete
  4. @ ரசிகன் said...

    நீங்கள அகமகிழ்நதது என் மேலுள்ள அன்பின் வெளிப்பாடு என்பதால் நானும் மகிழ்கிறேன். அந்த லேஅவுட் திடீரென்று கமெண்ட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக வரிகளை மெர்ஜ் செய்து காட்டியது. அதனால்தான் மாற்றிவிட்டேன் தம்பி. தங்களின் அன்புக்கும் வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. உங்கள் நட்பை இணைத்து வைத்த வலைத்தளத்தின் மகிமை என்னவென்று சொல்வது...?
    விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. அப்பாதுரை அவர்களின் கமெண்ட், அதற்கு உங்கள் பதில் இரண்டையும் படித்துவிட்டு, இடி இடி என சிரித்துக் கொண்டே, இந்தக் கமெண்ட் .... ஹா ஹா ஹா

    ReplyDelete
  7. பிரிந்திருந்த நண்பர் திரும்பக் கிடைத்ததற்கும் உட்காருமிடத்தில் கட்டியைத் தவிர்த்ததற்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்....இணைந்த நட்பு விருதுகள்....!

    கடைசி படம்..."இரை நீளமாகத்தானே இருக்கிறது நீள வாக்கில் மூன்று குஞ்சுகளின் வாயிலும் சொருகி விட வேண்டியதுதான்....!சமத்துவம்!!

    ReplyDelete
  8. தஙகள் விருதுகளுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. தொடர்பிலில்லாத நட்பு மீண்டும் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியே. தங்கள் தங்கை என்ற தகுதியை தவிர இந்த விருதை பெறும் தகுதி இதுவரை இல்லை. இனி வளர்த்துக்குறேன்.

    ReplyDelete
  10. இன்னும் திரட்டிகளில் இணைக்கலை போல. தமிழ்மண ஓட்டுக்கு பதிவுக்கு கீழே லிங்க் கொடுங்கண்ணா.(நான் ஓட்டு போட்டுட்டேன்)

    ReplyDelete
  11. நான் போய் ஐந்து பேரை தேடுறேன்.

    ReplyDelete
  12. அட எனக்கும் ஒரு விருதை வழங்கி என்னை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி பாஸ்.
    நானும் இன்று இரவு என் தளத்தில் என் சார்பில் 5 பேருக்கு விருது வழங்குகின்றேன் மிக்க நன்றி பாஸ்

    ReplyDelete
  13. @ குடந்தை அன்புமணி said...

    வலைத்தளத்தில் எழுதுவதன் மகிமையை நான் அழுத்தமாகப் புரிந்து கொண்ட சந்தர்ப்பங்களில் இந்த மகிழ்வான சந்தர்ப்பமும் ஒன்று. அன்பான கருத்துச் சொன்ன நண்பர் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  14. @ kg gouthaman said...

    எனக்குள் ரசிகத் தன்மையை நான் வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணை அப்பாத்துரை ஸார்தான். நீங்கள் ரசித்ததில் மகிழ்வுடன் என் இதய நன்றி.

    ReplyDelete
  15. @ ஸ்ரீராம். said...

    நட்பை அடைந்ததிலும் கட்டியைத் தவிர்த்ததிலும் நானும் மிக மகிழ்கிறேன். அந்தக் குருவிக்கு உங்கள் ஐடியா சொல்லப்பட்டது. தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  16. @ dhanasekaran .S said...

    வாங்க தனா... உஙகளின் தொடர்ந்த வருகைக்கும் நல்ல கருத்துக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  17. @ ராஜி said...

    என் நட்பை மீண்டும் அடைந்ததில் என்னுடன் சேர்ந்து நீயும் மகிழ்வாய் என்பதை நானறிவேன். ‘எனக்குப் பிடித்த’ என்ற இந்த விருதுக்கு முழுத் தகுதியும் உனக்கு உண்டும்மா... திரட்டிகள்ல சசிகுமார் சொன்னபடி இணைச்சேன். ஓட்டுப்பட்டி இணைக்கற லிங்க்கை குறிச்சுக்க மட்டும் மறந்துட்டேன். (பலமாசப் பழக்கத்தால என்டர் தட்டிட்டேன்.) அதனால அடுத்த பதிவுலருந்து ஓட்டுப்பட்டி இணைச்சிடுறேன். சரியா...

    ReplyDelete
  18. @ K.s.s.Rajh said...

    நீங்கள் மகிழ்ச்சி அடைந்ததில் எனக்கும் மகிழ்வு நண்பா. அவசியம் உங்கள் தளம் வந்து பார்க்கிறேன். உஙகளுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  19. 'ஆனந்த அதிர்வுகள்' - !!!!!! விஜயன் + விருது இடுகை கண்டு நானும் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
    ஏற்று சிறப்பித்து மேலும் 5 சிறந்த பதிவாளர்களை
    எமக்கு அறியத் தந்தமைக்கு என் நன்றிகள்.
    அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அந்தப் பதிவாளர்களின்
    லிங்க் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பு. ஏனெனில்
    விருதின் நோக்கம் அந்த வலைகளுக்கு நம் மூலமாக
    வருகையாளர்களைத் தருவது.
    'இளம் ' என்றது உங்கள் அகவை நோக்கி அல்ல
    'முது பெரும் ' கணேஷ் சார் .... வலைப்பூவின் அகவை
    அடிப்படையில் . ஹஹஹா .... ஆனால் நான்
    முக்கியமாக பார்த்தது 'மிகவும் பிடித்த' என்ற
    அடிப்படையே. மற்ற காரணிகள் எல்லாம் அதன் பின்னே தான்.
    மட்டற்ற மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறேன் அனைத்திற்கும்.

    ReplyDelete
  20. //‌ராஜேஷ்குமாரும் நானும்’ முதல் பகுதியைப் படித்து விட்டு கோவையிலிருந்து என் நண்பன் வீரவிஜயன் போன் செய்தார். ‘‘நானும்தானே ராஜேஷ்குமாரை நீங்க பாக்கப் ‌போகும்போது கூட இருந்தேன். என்னைப் பத்திச் சொல்லாம விட்டுட்டீங்களே...’’ என்றார்//

    <<அதானே அதெப்படி அவரை நீங்க விடலாம்? வீரவிஜயன் போன் நம்பர் கொடுங்க இன்னும் நல்லா
    ஃபைட் பண்ண சொல்றேன்!!(*ச்சுமா கிட்டிங்():)

    நண்பன் மீண்டதில் எனக்கும் மகிழ்ச்சி கணேஷ்.

    //'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

    //

    என்னது இளம் வலைப்பதிவாளரா நானா?:) ஆனா யங் அட் ஹார்ட் அதான் எனக்குத்தரீங்களோ இதுக்கு கண்டிப்பா நன்றி. உங்களுக்குக்கிடைச்சதுக்கும் வாழ்த்துகள்.தொடர் சங்கிலியை உடனே இல்லேன்னாலும் நிச்சயமா உடைக்காம கொண்டு போறேன்.

    ReplyDelete
  21. @ ஸ்ரவாணி said...

    ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்தை மடமா? ‘இளம்‘ இல்லைன்னுட்டா உடனே ‘முதுபெரும்‘னு பட்டம் வழங்கி தாத்தா ஆக்கிடறதா..? மனசால இளைஞன் வந்து உதைக்கிறேன் உங்களை இருங்க... நீங்க சொன்ன மாதிரி இப்ப லிங்க்கும் இணைச்சிட்டேன். ஓ.கே.வா... தங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  22. @ ஷைலஜா said...

    நானும்கூட ‘இளம்‘ என்பதற்கு வயசைத்தான் முதல்ல நினைச்சு ஏமாந்துட்ட்ன். (பார்க்க... மேலே ஸ்ரவாணியின் விளக்கம்) விஜயன் நம்பர் என்ன... நீங்க கேட்டா எதுன்னாலும் கிடைக்கும். மிக்க நன்றிக்கா..

    ReplyDelete
  23. விருதுக்கு வாழ்த்துக்கள்,

    பழைய நண்பர்கள் மறுபடியும் நட்பை புதுப்பித்தமைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. இதுபோல ஆனந்த அதிர்வுகள் மனமதை இனிக்க வைக்கும்..
    இதோ உங்கள் கையால் பதிவுலகில் எனக்கான மூன்றாவது
    விருது...
    மனம் குதூகலித்தேன் நண்பரே...

    " விருது கொடுத்து
    வீறுநடை போடும் மன்னவனே
    உம நட்புக்கு
    நான் இழைக்க நன்றியுண்டா???
    அதற்கும் மேல் என்
    நட்பு உள்ளத்தை உங்களுக்கு
    காணிக்கையாக்குகிறேன்"""

    நன்றி நன்றி நன்றி..

    .....
    நிச்சயம் அடுத்து ஐந்து பதிவர்களுக்கும்
    இந்த விருதினை கொடுக்கிறேன்..

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  25. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    நான்தான் உங்க ஏரியாவுக்கு வந்து நாளாச்சு. ஸாரி பிரகாஷ். ஆனா நீங்க என்னை வாழ்த்தத் தவறுவதில்லை. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  26. @ மகேந்திரன் said...

    நாம் சந்தோஷிக்கவும் மற்றவர்களைச் சந்தோஷிக்க வைப்பதற்கும் தானே பிறப்பெடுத்திருக்கிறோம். அதனால் உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சியே. உங்களுக்கு என் இதண நன்றி நண்பா...

    ReplyDelete
  27. என் இனிய வணக்கம்,
    அருமையான முயற்சி இது..பதிவர்களுக்கு மென்மேலும் ஊக்கத்தை கொடுக்கக்கூடியவை..பதிவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.நன்றி.

    ReplyDelete
  28. @ Kumaran said...

    வருக குமரன் ஸார்... தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  29. இந்த பதிவு எனக்கும் ஆனந்த அதிர்வுகளாய் இருந்தது.முக்கிய காரணம் பின்னுட்டத்தில் உங்க டைமிங் காமெடி.& விருது பெற்றதிற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள்.ஆனால் இப்படி ஒரு விருது இருக்குன்னு உங்க பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  30. விருது பெற்றமைக்கும் மிகச் சிறந்த பதிவர்களை
    சரியாகத் தேர்ந்தெடுத்து விருதினை பகிர்வு செய்தமைக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. @ thirumathi bs sridhar said...

    என் அரட்டை காமெடியை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  32. @ Ramani said...

    தங்களின் வாழ்த்து மிக மனமகிழ்வை அளித்தது. உங்களுக்கு என் இதய நன்றி ஸார்...

    ReplyDelete
  33. கணேஸ்...முதலில் பிரிந்திருந்த நண்பர்களை இணைத்த இணையத்தைப் பாராட்டுவோம் !

    முதல்முதலாக அருமையான விருது கிடைத்திருக்கிறது.அதற்கும் வாழ்த்தோடு பாராட்டு.பெற்றுக்கொண்டவர்களுக்கும் வாழ்த்து.

    குருவி தற்சமயம் உணவு கொடுக்கவில்லை.
    கொடுப்பதைப்போலப் பாசாங்கு காட்டி அந்த மெல்லிய கொப்பில் நடக்கப்பழக்குகிறதோ !

    ReplyDelete
  34. @ ஹேமா said...

    ஆம். இணைத்தில் நான் எழுத ஆரம்பித்ததை எண்ணி நேற்றிலிருந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அதை வாழ்த்துவோம் நாம். குருவி பற்றிய உங்களின் கோணம் புதிதாக இருக்கிறது. வருகைக்கும் வாழ்த்தியதற்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  35. O.k. Romba Nanri Sir! Attendance & Vote pottutten. Konjam porunga. Vanthidaren.

    ReplyDelete
  36. உங்கள் பதிவின் மூலம் தற்காலிகமாக தொடர்பிழந்திருந்த உங்கள் நட்பு திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. விருது பெற்ற உங்களுக்கும், விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. கணேஷ் சார்! என்ன இப்படி செஞ்சிட்டிங்க? விருது வாங்கற அளவுக்கு நான் ஒண்ணும் தகுதியான ஆள் கிடையாது சார். ஆனாலும் உங்க அன்புக்காக வாங்கிக்கறேன். மிக்க நன்றி. ஆனால் எப்படி நான் ஐந்து பேரைக் கண்டுபிடிக்கிறது. எனக்கு நேரம் கிடைக்கிறதே கம்மிதான். செமத்தியா வேலை வாங்கிட்டீங்க போங்க.சரி. இருந்தாலும் முயற்சி பண்றேன். சரி சார். என் அசிஸ்டண்ட் வந்துட்டாரு. அப்புறம் வரேன். வுடு ஜூட்.....


    "யோவ் அசிஸ்டண்ட்! எடுய்யா அந்த லென்சை!"

    ReplyDelete
  38. @ துரைடேனியல் said...

    வெல்கம் துரை! நீங்க எப்ப வேணா வரலாம். மேன்மேலும் பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வாழ்த்துக்கள் + என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  39. @ பாலா said...

    வருகைக்கும், வாழ்‌த்துக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் பாலா!

    ReplyDelete
  40. @ Rathnavel Natarajan said...

    தங்களி்ன் தொடர் வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் நெகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் நான்!

    ReplyDelete
  41. இந்த விருதைப் பெற்ற உங்களுக்கும் நீங்கள் கொடுத்த அந்த ஐந்து பேருக்கும் வாழ்த்துகள்..மகிழ்ச்சி..

    ReplyDelete
  42. சார்! எனக்கு 2 நாட்கள் நேரம் கொடுங்கள். அதன் பிறகு இந்த விருதுகளை புதிய இளம் பதிவர்களுக்கு வழங்குகிறேன்.

    ReplyDelete
  43. @ துரைடேனியல் said...

    துரை! நல்ல விஷயங்களைச் சொல்லும் நீங்கள் விருதுகளுக்கு நிச்சயம் தகுதி உள்ளவர்தான் என்பது என் திடமான நம்பிக்கை. அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் உங்களுக்கு. தாராளமாக நேரம் எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வழங்கி மகிழுங்கள். தவறே இல்லை. நிறைய நட்புகள் ஏற்படவும், நிறைய ப்ளாக்குகளை நாம் படிக்கவும் (தொடர் பதிவுகள் போல) இது வழிவகுக்கும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. @ மதுமதி said...

    இப்ப நீங்க கவிஞரா, பத்திரிகை ஆசிரியரான்னே தெரியலை. (திட்டமிட்டு பத்திரிகை போல செயல்படுபவர்னு ஸ்ரவாணி சொன்னாங்களே) எதுவா இருந்தாலும் உங்களுக்கும் என் வாழ்த்துக்களும், என் இதயம் கனிந்த நன்றியும்!

    ReplyDelete
  45. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  46. பழைய நண்பர் மீண்டும் கிடைத்ததற்கு சந்தோஷம், வாழ்த்துக்கள்.
    பரிசு பெற்ற தங்களுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. @ திண்டுக்கல் தனபாலன் said...

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  48. @ RAMVI said...

    தங்களின் வாழ்த்துக்களால் மகிழ்ந்தேன். என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள் கணேஷ் மற்றும்
    ஷைலஜா, வசந்தமண்டபம் மகேந்திரன்,
    மற்ர நண்பர்களுக்கும்... மேலும் மேலும் விருதுகள் குவியுங்கள்.

    ReplyDelete
  50. @ Shakthiprabha said...

    வாழ்த்துக்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி. உங்களை விட்ருவோமா? நான் விருது கொடுத்த நபர்களில் ஒருவர் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார். தவிர வைகோ சார் வேற பன்முகப் படைப்பாளி விருதை அளித்திருக்கிறார் தங்களுக்கு. உங்களுக்கு என் மகிழ்வு நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. 'லீப்ச்டர்' விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! இன்னும் பல விருதுகள் தங்களைத் தேடிவர விழைகின்றேன்.

    ReplyDelete
  52. @ வே.நடனசபாபதி said...

    அட, நீங்க இப்படிச் சொன்ன நேரம்... தோழி ஷக்திப்ரபா மூலமா இன்னொரு விருது கிடைச்சிடுச்சு. உங்களின் அன்பான வாழ்த்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  53. நான் படிக்கும் வலைப்பூக்களில் உங்களின் கருத்துரைகளைப் படித்து, பல நாட்களாக உங்கள் பக்கமும் வர வேண்டும் என நினைப்பேன்... இன்று தான் வந்திருக்கிறேன்... நல்ல பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கும் உங்களை இத்தனை நாள் படிக்கவில்லையே என்று தோன்றுகிறது....


    தொடர் ஆரம்பித்து விட்டேன். இனி தொடர்ந்து படிப்பேன். பழைய பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன்....

    உங்கள் நண்பரின் தொடர்பு மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்தான்... விருது பெற்றதற்கு வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete
  54. @ வெங்கட் நாகராஜ் said...

    வலைப்பூக்களில் மற்றவர்களின் பின்னூட்டங்களைப் படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதய நன்றி.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube