தோழி ஸ்ரவாணி தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது. தோழி ஷக்திப்ரபா எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். விஷயமறிந்ததும் என் உணர்வுகளை நேர்மையாகச் சொல்வதென்றால் பாராட்டுப் பெற்றதில் நிறைய மகிழ்ச்சி + இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற நல்ல விஷயங்களைத் தர வேண்டுமே என்ற பயம். இப்படிக் கலவையான உணர்ச்சிகளில் இருக்கும் நான் என் மேல் நம்பிக்கையும், அன்பும் கொண்டு விருது வழங்கிய ஷக்திப்ரபா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், நான் ஐந்து பேருக்கு வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தேர்ந்தெடுத்த இந்த ஐவரும் அறிமுகம் தேவையில்லாத, என்னிலும் மேம்பட்ட வித்தகர்கள்.
1, திரு. ரமணி அவர்கள்
2, திரு,சென்னைப் பித்தன் அவர்கள்
3, திரு. அப்பாத்துரை அவர்கள்
4, திரு,ரிஷபன் அவர்கள்
5, திரு,ரெவெரி அவர்கள்
இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த ஷக்திப்ரபாவும், அவருக்கு விருது தந்த வை.கோ அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இனி, எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் : 1. புத்தகங்கள் படிப்பது, 2. மெலோடி பாடல்கள், 3. மழையை ரசிப்பதும், நனைவதும், 4. எம்.ஜி.ஆரின் படங்கள், 5. தூக்கம் (சிரிக்காதீங்க ப்ளீஸ்), 6. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், 7. ஐஸ்க்ரீம்கள்.
==============================================
சமீபத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தாறுமாறாக அடி வாங்கி, மாவுக் கட்டுடன் திரும்பியிருக்கிறது. ‘வெற்றிகளைக் குவித்த கேப்டன்’ என்று தோனியைக் கொண்டாடியவர்கள் எலலாம் இப்போது அவரைத் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். டி.வி. செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் படித்த இதைப் பற்றி எண்ணியபடியே காலையில் பழைய பாடல்கள் பார்க்க டி.வி.யைப் போட்டேன். சிவாஜி கணேசன் தோன்றி சோக கீதம் பாடிக் கொண்டிருந்தார்.
என்ன ஆச்சரியம்..! அப்படியே அவர் மார்ஃபிங்கில் உருமாறி தோனியாக எனக்குக் காட்சியளித்தார். அவர் பாடிய பாடலைக் கேளுங்கள்... இல்லை, படியுங்கள்!
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா...
வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,
அவுட்டானது எனக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த
கிரவுண்டினில் எனக்கே இடமேது?
கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்
போனால் போகட்டும் போடா...
வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,
அவுட்டானது எனக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த
கிரவுண்டினில் எனக்கே இடமேது?
கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்
‘ஆட்’ல் (விளம்பரத்தில்) நடிப்பது வரவாகும்
நான் டக் அவுட் என்பது நிலையாகும்!
போனால் போகட்டும் போடா....
நான் டக் அவுட் என்பது நிலையாகும்!
போனால் போகட்டும் போடா....
அம்பயர் சொன்னான் அவுட்டென்றே - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா..?
(பழைய) ரெக்கார்டைச் சொல்லி அழுவதனாலே...
மீண்டும் ஆடவும் விடுவானா..?
கூக்குரலாலே கிடைக்காது - அவன்
உயர்த்திய விரல்தான் இறங்காது -இனி
ஆட்டம் என் பக்கம் திரும்பாது!
போனால் போகட்டும் போடா....
ஸிக்ஸரும் ஃபோரும் ‘ஐபிஎல்’லில் அடித்தேன்-
இங்கொரு ஸிக்ஸர் அடித்தேனா?
அடித்தால் நானும் தலையைக் குனிந்தே
பெவிலியன் மீண்டும் வருவேனா?
நமக்கும் மேலே அம்பயரடா - அவன்
ரூல்ஸ் எ(ல்)லாம் தெரிந்த தலைவனடா!
என்னை ஆட்டிப் படைக்கும் கலைஞனடா!
போனால் போகட்டும் போடா - கேப்டன்
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா..
==============================================
சமீபத்தில் தோழி ஹேமாவின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, இந்தப் பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை அழவும், பின்பு சிரிக்கவும் வைத்த ஹேமாவுக்கு இந்தப் பாடல் தர்ப்பணம்! ச்சே... வேறென்னமோ சொல்வார்களே... ஆங், சமர்ப்பணம்!
==============================================
என்னுடைய பதிவில் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை எல்லாம் தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் மீண்டும் இயங்கச் செய்த அன்பு நண்பர் அப்துல் பாஷித் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் + அவருடைய சேவைக்கு ஒரு ராயல் சல்யூட்!
இல்லையென்றால் அவன் விடுவானா..?
(பழைய) ரெக்கார்டைச் சொல்லி அழுவதனாலே...
மீண்டும் ஆடவும் விடுவானா..?
கூக்குரலாலே கிடைக்காது - அவன்
உயர்த்திய விரல்தான் இறங்காது -இனி
ஆட்டம் என் பக்கம் திரும்பாது!
போனால் போகட்டும் போடா....
ஸிக்ஸரும் ஃபோரும் ‘ஐபிஎல்’லில் அடித்தேன்-
இங்கொரு ஸிக்ஸர் அடித்தேனா?
அடித்தால் நானும் தலையைக் குனிந்தே
பெவிலியன் மீண்டும் வருவேனா?
நமக்கும் மேலே அம்பயரடா - அவன்
ரூல்ஸ் எ(ல்)லாம் தெரிந்த தலைவனடா!
என்னை ஆட்டிப் படைக்கும் கலைஞனடா!
போனால் போகட்டும் போடா - கேப்டன்
பதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா..
==============================================
சமீபத்தில் தோழி ஹேமாவின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, இந்தப் பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை அழவும், பின்பு சிரிக்கவும் வைத்த ஹேமாவுக்கு இந்தப் பாடல் தர்ப்பணம்! ச்சே... வேறென்னமோ சொல்வார்களே... ஆங், சமர்ப்பணம்!
==============================================
என்னுடைய பதிவில் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை எல்லாம் தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் மீண்டும் இயங்கச் செய்த அன்பு நண்பர் அப்துல் பாஷித் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் + அவருடைய சேவைக்கு ஒரு ராயல் சல்யூட்!
|
|
Tweet | ||
விருதுக்கு வாழ்த்துகள். ஐஸ்கிரீம்கள் என்பதை 'சட்'டென ஐஸ் க்ரீம் மகள் எனப் படித்தேன்!
ReplyDeleteதோனிப் பாடல் - ஹா...ஹா...ஹா..
வாழ்த்துக்கள் கணேஷ் சார்...
ReplyDeleteபொறுப்போடு எழுது என்கிறீர்கள் விருது அளித்து...
நன்றியோடு பெற்றுக்கொள்கிறேன்...
விருது பெற்ற சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
முதலில் விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறப்போகும் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறிய கதம்பம்.நீங்கள் சுட்டிக் காட்டிய பதிவுகளை வாசிக்கிறேன்.நன்றி.
ReplyDeleteமுதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteநீங்கள் விருதுக்காக தேர்வு செய்தவர்கள்
பதிவுலகில் வைரமாக மின்னக் கூடியவர்கள்.
விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
கிரிக்கெட் கவிதை பார்த்து வாய்விட்டு சிரித்தேன்..
விருது பெற்ற தங்களுக்கும் தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDelete@ ஸ்ரீராம். said...
ReplyDeleteதோனிப் பாடலை ரசித்துப் பாராட்டி, என்னை வாழ்த்திய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்!
@ ரெவெரி said...
ReplyDeleteஉண்மை! இந்த விருது எனக்குக் கொடுக்கப்பட்டதும் எனக்கும் இந்த உணர்வுதான் தோன்றியது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ மதுமதி said...
ReplyDeleteவிருது பெற்றவர்களை மனமகிழ்வோடு வாழ்த்திய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!
@ மகேந்திரன் said...
ReplyDeleteநான் தேர்வு செய்த வைரங்களை வாழ்த்தியதற்கும், கிரிக்கெட் (கவிதை அல்ல) பாடலை ரசித்ததற்கும் என் இதய நன்றி மகேன்!
விருதுக்கு மிகவும் நன்றி, கணேஷ். விட்டுப்போன ந் சென்னை வரப்ப வச்சுக்குவோம் :)
ReplyDeleteஹேமாவின் பதிவுகள் பல ரொம்ப ஆழமானவை என்பது என் கருத்தும் கூட.
@ அப்பாதுரை said...
ReplyDeleteகண்டிப்பா சென்னைல வெச்சுக்கலாம் ஸார்! நீங்கள் சொன்னது சரியே. ஹேமா தன் பதிவுகளை தவம்போல எழுதுகிறார். (என்னைப் போல மொக்கை போடாமல்) என் தோழி என்று நான் பெருமைப்படுபவர்களில் அவரும் ஒருவர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
@ ராமலக்ஷ்மி said...
ReplyDeleteதங்களின் வருகையும், வாழ்த்தும் தந்த மகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் நான்!
முதலில் விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறப்போகும் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமேலும் மேலும் விருதுகள் பெற வாழ்த்துகள்.
@ Lakshmi said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்!
தோனி பாடல் சூப்பர். இன்னமும் சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.
ReplyDeleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவிருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
உங்கள் சமர்பனங்கலையும் , உங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்கலையும் கண்டு மகிழ்ந்தேன் .
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் ' திறமையான வலைப்பதிவாளர் '
ReplyDeleteகணேஷ் சார் அவர்களே !
உல்டா பாடல் ... ஹஹஹா... ரகம் !
உங்களுக்குக் கிடைத்த விருதுகளுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ கணேஷ்..
ReplyDeleteகிரிக்கெட் பாடல் வரிக்கு வரி வயித்து வலியை உண்டு பண்ணியது..:) ( சிரித்து சிரித்து)
மிக அருமை கணேஷ்.. உதவியவர்களைப் பற்றிப் பதிவில் குறிப்பிடுவது.. சிறப்பு..
1. புத்தகங்கள் படிப்பது, 2. மெலோடி பாடல்கள், 3. மழையை ரசிப்பதும், நனைவதும், 4. எம்.ஜி.ஆரின் படங்கள், 5. தூக்கம் (சிரிக்காதீங்க ப்ளீஸ்), 6. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், 7. ஐஸ்க்ரீம்கள்.
ReplyDelete>>>
இந்த ஏழில் எம்.ஜி.ஆர் பாடல்கள் தவிர்த்து மற்றா ஆறும் எனக்கும் பிடிக்கும். அடடா அண்ணன் தங்கக்குள் எவ்வளவு ஒற்றுமை.
கேப்டன் பாட்டு சூப்பர். பேசாம நிங்க படங்களுக்கு பாட்டெழுத போய்டுங்கண்ணா
ReplyDelete@ kg gouthaman said...
ReplyDeleteரசித்துச் சிரித்து என் எழுத்தை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
@ sasikala said...
ReplyDeleteவெல்கம் ஃப்ரெண்ட். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
@ ஸ்ரவாணி said...
ReplyDeleteநீங்கள் தொடங்கி வைத்தது மனமகிழ்வுடன் தொடர்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உல்டா பாடலை ரசித்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
உங்களுக்கு பொருத்தமான விருதை தந்த தோழி சக்திபிரபாவுக்கு என் நன்றிகளை சொல்லிடுங்க
ReplyDeleteவிருதுகளை வென்ற அனைவருக்கும் அதை கொடுத்த தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDelete@ தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteஉங்களின் ஆசியும் வாழ்த்தும் எனக்கு என்றும் உண்டென்பதை அறிவேன். மிக மகிழ்வாக இருக்கிறது. கிரிக்கெட் பாடலை நீங்கள் ரசித்ததில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. உதவியவர்களுக்கு நன்றி சொல்வதுதானே நற்பண்பு? அக்கா... அதை நீங்கள் குறிப்பிட்டதும் மகிழ்ச்சி. இத்தனை மகிழ்வைத் தந்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
@ ராஜி said...
ReplyDeleteசினிமா விஷயத்துல உன் நிலைப்பாடுதான் எனக்கு நல்லாத் தெரியுமேம்மா. மத்த எல்லா ரசனையும் ஒத்துப் போவதில் என்னைவிட மகிழ்பவர் யார் இருக்க முடியும்? சினிமாவுக்குப் பாட்டா... அதுக்கு மதுமதி மாதிரி பெரியவங்கல்லாம் இருக்காங்களே... இருந்தும் இந்த வார்த்தைகள் எனக்கு ஊக்க டானிக்காச்சே... ஷக்திப்ரபா கிட்ட உன் தேங்க்ஸை சேர்த்திடறேன். சரியா...
@ Kumaran said...
ReplyDeleteவருக குமரன் ஸார்... தங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
வாழ்த்துக்கள். உங்களுக்கும் நண்பர்களுக்கும். :)
ReplyDeleteதோனி கேப்டன்ஸி அது தவிர, யுவ்ராஜ்சிங் உடல்நிலை இன்னுமே சங்கடப்படுத்துகிறது. நிலையில்லாத வாழ்வில் நிலைப்பது நாம் உளமாற மகிழ்வதும் மற்றவர்களை மகிழ்விப்பதும் தான் போலும்.
ஒரு சிறந்த குழாத்தில் என்னையும் இணைத்து விருது கொடுத்துக் கௌரவித்தமைக்கு நன்றி.சிறிது நாட்களாகச் சோர்ந்திருந்த எனக்கு இது ஒரு டானிக்.அனைவருக்கும் வாழ்த்துகள்.நன்றி கணேஷ்.
ReplyDeleteபெற்ற விருதுகளிற்கு நல் வாழ்த்துகள். மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
பட்டமளிப்பு விழா தொடரவாழ்த்துக்கள்!
ReplyDeleteநூல் வெளியீட்டு விழாவிற்கு தவறாது
வரவும்
சா இராமாநுசம்
@ Shakthiprabha said...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு என் இதய நன்றி ஷக்தி. வேதனைகளைக் கூட சிரித்து மகிழ்வது நமக்கெல்லாம் வழக்கமானதுதானே... இதுவும் அவ்வகையே.
@ சென்னை பித்தன் said...
ReplyDeleteஉங்களையெல்லாம் முன்மாதிரியாக வைத்துத்தானே என் போன்றவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சோர்வடைவதா.... நீங்கள் இதை ஏற்று என்னை கௌரவித்ததில் மனமகிழ்வுடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ kavithai (kovaikkavi) said...
ReplyDeleteமனமார நீஙகள் வாழ்த்துவதில் நான் நெகிழ்கிறேன். உங்களின் அன்பினில் மகிழ்ந்து உளமார நன்றி நவில்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி பாஸ் வாழ்த்துக்கள் கலக்குங்க
ReplyDelete////போனால் போகட்டும் போடா - கேப்டன்
ReplyDeleteபதவியில் நிலையாய் இருந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா...
வந்தது தெரியும், போனது ஸ்டம்ப்பு,
அவுட்டானது எனக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் நின்று விட்டால் - இந்த
கிரவுண்டினில் எனக்கே இடமேது?
கிரிக்கெட் என்பது வியாபாரம் - அதில்
‘ஆட்’ல் (விளம்பரத்தில்) நடிப்பது வரவாகும்
நான் டக் அவுட் என்பது நிலையாகும்!////
ஹா.ஹா.ஹா.ஹா.செம ஜோக் பாஸ்
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதங்களது வாழ்த்துக்களினால் மகிழ்ந்து மனம் நிறைந்து நன்றி கூறுகிறேன் ஐயா. பிப்.19ஐ என் மொபைலில் குறித்து வைத்துள்ளேன். தவறாமல் நான் அங்கு இருப்பேன்.
@ K.s.s.Rajh said...
ReplyDeleteவாங்க ராஜ்... தங்களது வாழ்த்துக்கும், ரசித்துச் சிரித்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி.
சார் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். தோனி பாடல் அருமையாக உள்ளது.
ReplyDeleteபல்திறப்புலமை வாய்ந்த வலைப்பதிவாளருக்கான விருதை (Versatile Blogger award) பெற்றமை அறிந்து மகிழ்ச்சி. இன்னும் அநேக விருதுகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDelete‘போனால் போகட்டும் போடா’ பாட்டு அருமை.
@ பாலா said...
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுக்கும், பாடலை ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி பாலா.
@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteதங்களுக்கும் பாடல் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. தஙகளின் வாழ்த்துக்கு என் இதயம் கனிந்த நன்றி.
விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவழ்த்துக்கள்!நீங்கள் இயற்றிய பாடல் அருமை.அப்போ நல்ல கவிஞராகிட்டீங்க...!
ReplyDelete@ r.v.saravanan said...
ReplyDeleteமகிழ்ச்சி தந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சரவணன்.
@ ஸாதிகா said...
ReplyDeleteஎன்னது... நான் இயற்றிய பாடலா? சரியாப் போச்சு... கண்ணதாசன் எழுதினதும்மா. உல்டா தானே பண்ணினேன். இருந்தாலும் வாழ்த்துக்களை சந்தோஷமா ஏத்துக்கிட்டு நன்றி சொல்லிக்கறேன்.
வாழ்த்துக்கள்.
ReplyDelete@ மாதேவி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வழங்கிய தஙகளுக்கு என் மனமார்ந்த நன்றி!
எம்ஜிஆர் பாடல்கள் பிடிக்காத ராஜியின் அட்ரெஸ் கிடைக்குமா?
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும் , உங்களிடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDelete@ அப்பாதுரை said...
ReplyDeleteஉங்களுக்கு ஒரு சிறப்புத் தகவல் அப்பா ஸார்... ராஜி சினிமாவே பாக்கறதில்லை. அவங்க அட்ரஸ்... உங்க கேள்வியை அவங்களுக்கு ரீடைரக்ட் பண்ணிடறேன். சரியா?
@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ராஜா ஸார்!
விருது மேல விருது வாங்கும் கணேஷுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅட...இங்க பாருங்களேன் எனக்கொரு பாட்டுப் பாடியிருக்கார் கணேஸ்.கண்ணதாசன் இல்லன்னு தைரியம் உங்களுக்கு.இருந்தா நானே சொல்லிக் குடுத்திருப்பேன்.அவர் பாட்டை உல்டா பண்ணினதுக்கு.(அவர் பாட்டுத்தானே?)தர்ப்பணம் சமர்ப்பணம்ன்னு உளறிக்கிட்டு....சந்தோஷமான தருணமாக நெகிழ்வாக உணர்கிறேன் தோழரே.நன்றி நன்றி.என் பதிவுக்குக் கிடைத்த அங்கீகாரம் இது.நாம் பட்ட அனுபவங்களின் வலிகள்.எதிர்காலச் சந்ததிக்குத் தேவைப்படும் ஆவணப்பதிவுகள் அவை !
ReplyDeleteரொம்பக்காலாமா காணாமல் இருந்தது.மீண்டும் என்ன விருதுகள் உலாக்காலமோ.சந்தோஷம்.இன்னும் இன்னும் விருதுகள் நிறைய என் அன்பு வாழ்த்துகள் !
அட்டா மிக அருமையான பதிவு சார்..
ReplyDeleteவிருதுபெற்ற ஐவரும் சிறப்பானவர்கள்..
போனால் போகட்டும் போடா தோனி வேர்ஷன் சூப்பர்..
உங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களில் எம்.ஜி.ஆரின் படங்கள் தவிர்த்து மற்ற எல்லாம் எனக்கும் பிடிக்கும்..
வாவ்.. சினிமா பார்க்காத ஒருத்தரா.!. இப்ப நிஜமாவே அட்ரெஸ் கேட்டு மீட் பண்ணனும் போலிருக்கே!
ReplyDeleteதங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஇன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சார் ! உல்டா பாடல் அருமை !
ReplyDeleteஇத்தனை நாட்களா எப்படி உங்களுக்கு விருது கொடுக்காம விட்டாங்கன்னு ஆச்சர்யமா இருக்குண்ணே..! அதுசரி, அதுஅதுக்கு நேரங்காலம் வரணுமோ..! மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னையும் மதித்து, வந்து கருத்திட்டமைக்கு நன்றிண்ணே!
ReplyDelete@ ஷைலஜா said...
ReplyDeleteதங்களைப் போன்றவர்களின் அன்பும், ஆசியும் இருந்தால் எதுவும் கிடைக்கும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ ஹேமா said...
ReplyDeleteவாங்க ஃப்ரெண்ட்! கண்ணதாசனே படிச்சாலும் சிரிச்சிருப்பார்னு நம்பித்தான் எழுதினேன். அதனால எனக்கு பயம் இல்லப்பா. மேலும் விருதுகள் பெற வாழ்த்திய அன்புக்கு என் இதயம் கனிந்த நன்றி!
@ Riyas said...
ReplyDeleteஆச்சரியம்தான்! சிலருக்கு ஏனோ எம்.ஜி.ஆரைப் பிடிப்பதில்லை. மற்ற ரசனைகள் ஒத்திருப்பதில் மகிழ்ச்சி எனக்கு. தோனி வெர்ஷனை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ அப்பாதுரை said...
ReplyDeleteநீங்க தமிழ்நாட்டு வர்ற சந்தர்ப்பத்துல நிச்சயம் அந்த சுவாரஸ்யமான பெர்சனாலிட்டி மீட் பண்ணலாம் ஸார்!
@ யுவராணி தமிழரசன் said...
ReplyDeleteமுதல் வருகைன்னு நினைக்கிறேன். நல்வரவு! தங்களின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி!
@ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபாடலை ரசித்து, என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!
@ திவ்யா @ தேன்மொழி said...
ReplyDeleteமதுமதி அறிமுகப்படுத்தினதால வந்து பார்த்தேன். இத்தனை நாள் கவனிக்கலையேன்னு தோணிச்சு. நல்லா எழுதறம்மா. என்னை வாழ்த்திய அன்புக்கு என் மனமார்ந்த நன்றி தங்கச்சி!
வாழ்த்துக்கள். உங்களுக்கும் நண்பர்களுக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்களுக்கும் நண்பர்களுக்கும்
ReplyDelete@ மாலதி said...
ReplyDeleteமகிழ்வுடன் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@ சமுத்ரா said...
ReplyDeleteநான் மதிக்கற எழுத்துக்குச் சொந்தக்காரரான உங்களின் வாழ்த்துக்க மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!
பரிசு பெற்றமைக்கும் பரிசு வாங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDelete@ dhanasekaran .S said...
ReplyDeleteவாழ்த்துப் பெற்றதில் மகிழ்ந்து தங்களுக்கு நன்றி நவில்கிறேன் நான்.
வாழ்த்துகள் தங்களுக்கும், விருதுகள் பெற்ற நண்பர்களுக்கும்.
ReplyDelete@ கே. பி. ஜனா... said...
ReplyDeleteமனமகிழ்வுடன் வாழ்த்திய தங்களுக்கு அகநிறைவுடன் என் நன்றி.
@ V.Radhakrishnan said...
ReplyDeleteதங்களின் வாழ்த்து தந்த மகிழ்வுடன் தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரொம்ப லேட்டாய் வந்து நன்றி சொல்கிறேன்.. ஊரில் இல்லாததுதான் காரணம்..
ReplyDeleteஅன்பின் நன்றி.. உங்கள் மனசுக்குள் நான் இருப்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.
என்றும் அது நிலைக்க என் பிரார்த்தனை.
@ ரிஷபன் said...
ReplyDeleteதாமதமானால் என்ன... என் அபிமானத்தை நீங்கள் அங்கீகரித்ததே போதுமானது. தங்களுக்கு என் இதய நன்றி!