மக்களின் அடிப்படைத் தேவை நிறைவேறினாலே போதும். அவர்கள் வசிக்கும் இடம் பொன்னுலகம். அவர்களுக்கு உணவும், நீரும், உறைவிடமும் தவிர வேறென்ன வேண்டும்?
பசி வந்திடப் பத்தும் பறந்து விடும் அல்லவா? பசியால் வருந்துபவரின் இரங்கத்தக்க நிலை எப்படி இருக்கும்? மணிமேகலை அதைக் காட்சியாக்குகிறது. குடிச் சிறப்பை நினையான், போற்றி ஒழுகிய ஒழுக்கத்தை மறப்பான், காக்கும் கடமை மறந்து, துணைவி, குழந்தை என்போர் பெருமிதமுறச் செய்ததை மறந்து அவர்களுடன் மற்றவர் வாசலில் நிற்கச் செய்யுமாம். மானம் துறக்கும் நிலை இது.
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி
பசி வந்திடப் பத்தும் பறந்து விடும் அல்லவா? பசியால் வருந்துபவரின் இரங்கத்தக்க நிலை எப்படி இருக்கும்? மணிமேகலை அதைக் காட்சியாக்குகிறது. குடிச் சிறப்பை நினையான், போற்றி ஒழுகிய ஒழுக்கத்தை மறப்பான், காக்கும் கடமை மறந்து, துணைவி, குழந்தை என்போர் பெருமிதமுறச் செய்ததை மறந்து அவர்களுடன் மற்றவர் வாசலில் நிற்கச் செய்யுமாம். மானம் துறக்கும் நிலை இது.
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி
(மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, 76-80)
ஆம்! பிடித்த கல்விப் பெரும்புணையை விடுவான். கற்றதோடு கற்ற வழி நின்ற பெருமகன் எந்தக் கல்வியை வாழ்க்கைக் கடல் கடக்க உதவும் புணையாக எண்ணியிருந்தானோ அதை விட்டு விடுவான். நாணத்தை அணிகலனாக அணிந்த குலமகள், நாணத்தை இழக்கச் செய்துவிடும் நிலையை அவனே உண்டாக்குவான். வேலியே பயிரை மேய்வது போன்றதுதானே இதுவும்?
சிகரம் அடிவாரத்தில்! வேறென்ன வேண்டும், மாறுபாட்டால் வாழ்வு சிதைய?
பசி போக்குவது - மானம் காத்தல்தான். அதைச் செய்ய வேண்டியதல்லவா மன்னன் கடமை? அதைச் செய்வதிலிருந்து விலகுவது தன்மானம் இழக்கும் செயலல்லவா? தாமே அதற்குக் காரணமாதல் எவ்வளவு இழிவானது?
நீ எப்படிப்பட்ட ஆற்றல் உடையவன்?
செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டிய விளைக்கும் ஆற்றலை
சிகரம் அடிவாரத்தில்! வேறென்ன வேண்டும், மாறுபாட்டால் வாழ்வு சிதைய?
பசி போக்குவது - மானம் காத்தல்தான். அதைச் செய்ய வேண்டியதல்லவா மன்னன் கடமை? அதைச் செய்வதிலிருந்து விலகுவது தன்மானம் இழக்கும் செயலல்லவா? தாமே அதற்குக் காரணமாதல் எவ்வளவு இழிவானது?
நீ எப்படிப்பட்ட ஆற்றல் உடையவன்?
செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டிய விளைக்கும் ஆற்றலை
(புறநானூறு 38)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆவூர் மூலங்கிழார் பாராட்டுகிறார். ஆற்றலின் எல்லை காட்டும் இயன்மொழித் துறைப் பாடல் இது. காலத்தை வெல்லும் ஆற்றல் - சூரியனில் நிலவின் தண்மையையும், நிலவில் சூரியனின் வெம்மையையும் விளைவிக்கும் ஆற்றல் - இயலக் கூடிய ஒன்றா? இயலாதுதான்! எனினும் உயர்வுநவிற்சியழகு இது. ‘என்னைப் பெற்ற ராசா’ என்று குழந்தையைத் தாய் கொஞ்சுகிறாளே... அப்படி!
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை
(புறநானூறு 55)
என்று பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மருதனிளநாகனார் வாழ்த்துகிறார்.
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
(பாரதிதாசன் கவிதைகள், ப.145)
எனப் பாடுகிறார் பாரதிதாசனார். இருபதாம் நூற்றாண்டுப் புலவரின் விருப்பம் இது. இரண்டாம் நூற்றாண்டுப் புலவரின் வாழ்த்தும் இதுவே. இல்லோர் கையற வாழ வேண்டும். இல்லாதார் இல்லையாகும்படி நாட்டை வைத்திருத்தலே திரு.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையம்
சேரா தியல்வது நாடு
(திருக்குறள் 734)
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்,
ஆங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றம்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇய உலகமொடு உடனே
(புறநானூறு 56)
வாழுமாறு வாழ்த்துகிறார்.
‘தமிழ் இலக்கியங்களில் காலம்’ என்னும் நூலிலிருந்து (மணிவாசகர் பதிப்பகம்) எடுக்கப்பட்ட ஒரு துளியைத்தான் இதுவரை நீங்கள் சுவைத்தீர்கள். நூலாசிரியர் டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ., பி.எச்டி., மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழாசிரியையாகவும், மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழறிவை எனக்கு ஊட்டிய முதல் ஆசிரியை மற்றும் உறவு முறையில் எனக்கு சித்தி!
|
|
Tweet | ||
மணிமேகலை பாத்திரம் நான் படிச்சு பிரமித்த பாத்திரம். அவள் நினைத்திருந்தால் மாட மாளிகைகளில் வாசம் செய்து பொன்னரசியாய் வலம் வந்திருக்க முடியும். சிற்றின்ப சுகங்களை உதறிதள்ளி சிறு வயதிலேயே பேரின்ப சுகம் தேடி சென்றவள் மணிமேகலை.அப்பேற்பட்ட குணவதி வேறேந்த புராணக்கதைகளில் மானிடப்பிறவி பெண் சித்தரிக்க பட்டிருக்கிறாளான்னும் எனக்கு தெரியலை அண்ணா
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..வீட்டிலேயே தமிழாசிரியர் இருந்ததால் தான் தங்களின் தமிழ் சுத்தமாக இருக்கிறதோ?
ReplyDeleteஎனவேதான் பாரதி சொன்னான்”தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினையழித்திடுவோம்”
ReplyDeleteமிக நல்ல பகிர்வு.
ஒரு துளியே இத்தனை சுவையாக இருக்கே! காட்டாயம் புத்தகம் வாங்கி விடுகிறேன்.நன்றி அறிமுகத்துக்கு.
ReplyDeleteநன்று புலவரே....நன்று. ஆனால் இவ்வளவு தமிழ் எமக்கு ஒத்துக் கொள்வதில்லை! ('தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்' என்று கர்ஜித்த குருவை விட்டு விட்டீர்களே...!)
ReplyDeleteபடித்ததில் உங்களுக்குப் பிடித்ததை எங்களுக்கும் பகிர்ந்த உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டுகள்....
ReplyDeleteநம் இலக்கியங்களில் இல்லாத சுவைதான் என்ன?
@ ராஜி said...
ReplyDeleteஇரட்டைக் காப்பியங்களின் உச்சமே மணிமேகலை கதாபாத்திரம்தான். முதல் வருகையாக வந்து நல்ல கருத்தைப் பகிர்ந்தாயம்மா. என் இதயம் நிறைந்த நன்றி!
@ மதுமதி said...
ReplyDeleteஆம் கவிஞரே... அப்போது நான்காம் வகுப்பு முழுப் பரீட்சை முடிந்தால் விடுமுறை நாட்களில் விளையாடிய நேரம் போக மற்ற நேரத்தில் ஐந்தாம் வகுப்பு பாடத்தை பயிற்றுவிப்பார்கள். வகுப்புகளில் நான் எளிதாகத் தேறி விடுவேன். மறக்க முடியாத நினைவுகள்! அவற்றிற்கு இட்டுச் சென்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
@ சென்னை பித்தன் said...
ReplyDeleteநல்ல தமிழ் இலக்கியங்களின் வார்த்தைகள் புரியவில்லை என்பவர்களுக்கும் எளிமையாய் இலக்கியம் படைத்த மீசைக்காரனை நான் மிக நேசிப்பவன். அவரைத் தாங்கள் குறிப்பிட்டதில் அகமகிழ்ந்து நன்றி நவில்கிறேன்.
@ RAMVI said...
ReplyDeleteஇலக்கியங்கள் படிப்பதில் ஈடுபாடுள்ள உங்களைப் போன்றவர்களால் தான் நல்ல எழுத்துக்கள் படைக்கப்படுகின்றன. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteநான் எடுத்த இந்தத் துளியில்தான் அவர் இல்லை. அவர் என் மனதில் இருக்கிறார் நண்பரே... புத்தகத்திலும் உண்டு. தங்களின் வருகைக்கும், நற்கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி!
@ வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநன்று சொன்னீர்கள். நம் தமிழ் இலக்கியங்கள் வழங்காத சுவை ஏதாவது உண்டா என்ன? ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி!
மற்ற பிணி எல்லாம் என்றோ ஒரு நாள் வரும்.
ReplyDeleteஆனால் பசிப்பிணி .?..... உண்மை.
வேர்களைத் தேடி போல் தங்களின்
இலக்கிய ஆர்வம் தெரிந்து கொள்ள இந்த
பதிவு ஏதுவாக இருந்தது.
பகிர்விற்கு நன்றி.
முனைவர் கமலம் சங்கர் அவர்களது ‘தமிழ் இலக்கியங்களில் காலம்’ என்ற நூலை படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது தங்களின் பதிவு என்பது உண்மை. நல்ல நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteஉங்களிடமிருக்கும் வண்ணத்தமிழ் உங்கள் சித்தியிடமிருந்த வடிவமோ.கொஞ்சு தமிழில் அழகான
ReplyDeleteபதிவு ஃபிரெண்ட் !
nalla arimukam... vaalththukkal
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteகுறிப்பிட்டுச் செல்லும் பாடல்களும்
அதற்கான விளக்கங்களும் அருமை
புத்தகத்தையும் குறிப்பிட்டமைக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 6
ReplyDeleteஆஹா.. தமிழ்சுவை விருந்து. மணிமேகலை, திருக்குறள், புறநானூறு,etc... என்று திகட்டத் திகட்ட விருந்து. பகிர்வுக்கு நன்றி சகோ. தமிழாசிரியரின் மகனல்லவா. கேட்கவா வேண்டும்?
ReplyDeletetha ma 7.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html
ReplyDeleteவணக்கம்! இலக்கிய மேற்கோள்களை வலைப் பதிவில் வந்து சேர்த்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅருமை...அருமை...
ReplyDeleteநல்லதொரு பகிர்வு அன்பரே
@ ஸ்ரவாணி said...
ReplyDeleteவிரும்பிப் படித்து, ரசித்ததைக்கூறி எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். பழனியப்பா பதிப்பகத்திலும், மணிவாசகர் பதிப்பகத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகத்தைப் படித்ததுமே அதை எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது எனக்கு. அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்த அதை நீங்களும் ரசித்ததில் மகிழ்வுடன் என் நன்றி!
@ ஹேமா said...
ReplyDeleteஆமாம் தோழி! தமிழ் மொழியைப் பிழையின்றி உச்சரிக்கவும், சந்திப் பிழை இன்றி எழுதவும் இன்னும் நிறைய... நிறைய கற்பித்த குரு என் சித்தி. தாங்கள் இப்பதிவை ரசித்ததில் எனக்கு மிகுந்த மனத்திருப்தி. நன்றி!
@ மதுரை சரவணன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சொன்ன எங்கஊர் சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ Ramani said...
ReplyDeleteஇலக்கியம் சார்ந்த விஷயத்தை ரசித்துப் பாராட்டிய ரமணி ஸாருக்கு என் இதயம் கனிந்த நன்றி!
@ துரைடேனியல் said...
ReplyDeleteதமிழ் அமுதத்தைப் பருகி மகிழ்ந்த துரைக்கு என் இதய நன்றி!
@ விச்சு said...
ReplyDeleteநன்றி நண்பரே! பார்த்துக் கருத்தினைப் பதிந்து, வாக்கிட்டேன். தங்களின் கவனத்தில் நான் இருக்கிறேன் என்பதில் மிகமிக அகமகிழ்வு கொள்கிறேன். மகிழ்வைத் தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
@ தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteபெயரிலேயே தமிழை வைத்திருக்கும் நீங்கள் இதை ரசிக்காமல் இருந்தால்தானே ஆச்சரியம்! ரசித்துக் கருத்திட்டு ஊக்கப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி!
@ guna thamizh said...
ReplyDeleteமுனைவரையா நலமா? பார்த்து நாளாச்சு. நீங்கள் ரசித்துப் பாராட்டுவது அகமகிழ்வு தருகிறது எனக்கு. அதனைப் பெறுவதற்கென்றேனும் அவ்வப்போது இப்படி நல்ல பகிர்வுகளைத் தர முயல்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!
தமிழ்ப்பசி தீர்க்கும் இலக்கியவிருந்து, பசிப்பிணி பற்றிப் பேசி அசத்துகிறது. நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலில் மற்றுமொரு அருமையானப் புத்தகம். கிர்வுக்கு மிகவும் நன்றி கணேஷ் சார்.
ReplyDelete@ கீதமஞ்சரி said...
ReplyDeleteபடிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டீர்கள் என்பதில் மிக மகிழ்ச்சி கொண்டேன் கீதா! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. (சார் என்கிற வார்த்தை வேண்டாம் தோழி. பெயரிட்டே அழையுங்கள் நீங்கள்!)
உண்மை தான். அடிப்படை தேவையில் முதன்மை ஸ்தானம் வகிப்பதல்லவா! அதன் பின்னரே இருக்க இடம் என்ற நினைப்பு கூட வரும்.
ReplyDeleteஇப்போதெல்லாம் இந்த மாதிரி பாடல்களை படிப்பதே அரிதாகி விட்டது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.
ReplyDelete@ Shakthiprabha said...
ReplyDeleteஇல்லையா பின்ன... இது வந்திட்டா பத்தும் பறந்து போயிடும்னுல்ல சொல்லியிருக்காங்க... (எனக்கு இது வந்துட்டா ஒண்ணு மட்டும்தான் பறந்து போகும்- நிதானம். பசி வந்துட்டா கோபம் வரும் எனக்கு) உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.
@ பாலா said...
ReplyDeleteஉங்களின் நல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் மனம் நிறைந்து நன்றி கூறுகிறேன் நான்.
பாடல்களும் விளக்கமும் அருமை அய்யா
ReplyDeleteபாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் பயணம்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
இனியொரு விதி செய்வோம்
ReplyDeleteஅதை எந்நாளும் காப்போம்
தனி ஒருவர்க்கு உணவிலைஎனில்
இச்சகத்தினை அழித்திடுவோம்.
எனும் மகாகவியின் வாக்கு விட்டுப்போனது எப்படி ?
@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteரசித்துப் பாராட்டிய நண்பர் ராஜாவுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@ தமிழ்தோட்டம் said...
ReplyDeleteதமிழைப் படித்து ரசித்துப் பாராட்டிய தமிழ்த் தோட்டமே.. தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!
கணேஷ்..இன்றுதான் உங்கள் மறுமொழி வாசித்தேன்..பிரதிபாவின் மூன்றாவது கண் கிடைக்குமா?
ReplyDeleteஇயன்றால் தொடர்பு கொள்ளவும் 9340089989
வாசித்தேன் மகிழ்ந்தேன்
ReplyDeleteநல்லதொரு பதிவு சார் ! விரும்பிப் படித்தேன் ! நன்றி !
ReplyDelete@ மணிஜி...... said...
ReplyDeleteஅவசியம் பேசுகிறேன்... இன்று மாலை! நன்றி ஸார்.
@ சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபடித்து மகிழ்ந்த நண்பருக்கு மனமகிழ்வுடன் என நன்றியை உரித்தாக்குகிறேன்.
@ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteரசித்துப் படித்த தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி நண்பரே..!
மணிமேகலை என்னை கவர்ந்த கதாபாத்திரம்.... ஒரு துளியே சுவையாக இருந்தது. அவ்வப்போது இது போன்ற இலக்கிய விஷயங்களை பகிர்ந்திடுங்கள்.
ReplyDelete@ கோவை2தில்லி said...
ReplyDeleteநீங்கள் கேட்டபடி இனி அவ்வப்போது இலக்கிய விஷயங்களையும் பகிர்கிறேன். (நானே எழுதி) ஊக்கப்படுத்திய தங்களுக்கு என் இதய நன்றி.
இலக்கியச் சுவையைப் பதிவாக்கி பசியினால் இழக்கப்படும் பத்தையும் பட்டியல் இட்டதற்கு நன்றி சகோ.
ReplyDelete@ தனிமரம் said...
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்த் நன்றி!
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்
ReplyDeleteஎன்றால், தங்கள் சித்தியே தமிழ்ப் பேராசிரியர்
என்றால் சொல்லவா வேண்டும்!
கணேஷ், புலவர் கணேஷ் ஆக
வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதங்களின் வாழ்த்தினால் அகமகிழ்ந்து நெகிழ்வுடன் நன்றி நவில்கின்றேன் நான்!
புசித்து சுவைக்க
ReplyDeleteபசிப்பிணியை
அழகுத்தமிழில்
இலக்கிய சுவையுடன்
அற்புதமாக
விளக்கி இருக்கிறீர்கள்
நண்பரே.
தொடருங்கள் இதுபோல.....
@ மகேந்திரன் said...
ReplyDeleteஅவசியம் தொடர்கிறேன் நணபா. ரசித்துப் படித்து, கருத்திட்டு உற்சாகம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!
‘தமிழ் இலக்கியங்களில் காலம்’ என்னும் நூலிலிருந்து (மணிவாசகர் பதிப்பகம்) எடுக்கப்பட்ட ஒரு துளியைத்தான் இதுவரை நீங்கள் சுவைத்தீர்கள். நூலாசிரியர் டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ., பி.எச்டி., மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழாசிரியையாகவும், மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழறிவை எனக்கு ஊட்டிய முதல் ஆசிரியை மற்றும் உறவு முறையில் எனக்கு சித்தி!
ReplyDeleteகமபன் வீட்டுகட்டுத்தறியும் கவி பாடும் என்று சும்மாவா சொன்னார்கள்.வாழ்த்துக்கள்!
@ ஸாதிகா said...
ReplyDeleteஆம்... நீங்கள் சொல்வது உண்மைதான் தங்கையே. நற்கருத்திட்டதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
கணேஷ் ஜீ்...மணிமேகலை யாருடைய மகள்? தெரியுமா...?
ReplyDelete@ தமிழ்சேட்டுபையன் said...
ReplyDeleteகோவலன்-மாதவி மகள், உதய குமாரன் காதல், மணிமேகலா தெய்வம ரட்சித்தல், புத்த பீடிகையால் முன்ஜென்மம் அறிதல், அட்சயபாத்திரம் அமுத சுரபி கிடைத்தல், பசிப்பிணி தீர்ககும் மணிமேகலை ஆதல். சரிதானா தமிழ் சேட்டுப் பையன்? (கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவரே...?) தங்களின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!
இலக்கியப் பகிர்வு அருமை கணேஷ்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளவும்.
ReplyDelete@ தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteஇலக்கியத்தை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிக்கா... விருதா... எனக்கே எனக்கா? நீங்கள் கொடுப்பதால் மனமகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன்.
//டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ., பி.எச்டி.,//
ReplyDeleteநான் மதுரைக் கல்லூரியில் படித்தவன்தான். அவர்களை நான் அறியவில்லையே. அவர்கள் எந்த ஆண்டு பணிபுரிந்தார் என்று சொல்ல முடியுமா?
@ Avargal Unmaigal said...
ReplyDeleteஆண்டு... துல்லியமாக என் நினைவில் இல்லை. சித்தியிடம் கேட்டு சற்று நேரத்தில் சொல்கிறேன் தோழரே... (நீஙகளும் நம்ம ஊர்ப்பக்கம் தான்ங்கறதுல கொள்ளை மகிழ்ச்சி எனக்கு)
@ Avargal Unmaigal said...
ReplyDeleteநண்பரே... அவர்கள் மதுரைக் கல்லூரியில் 1993 முதல் 2006ம் ஆண்டு வரை தமிழ்த்துறை பேராசிரியையாக இருந்துள்ளார். நன்றி.