Friday, February 10, 2012

நடை வண்டிகள் - 3

Posted by பால கணேஷ் Friday, February 10, 2012
ராஜேஷ்குமாரும் நானும் - 3

கோவை தினமலரிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகிப் போனதும் அங்கே ‘கதை மலர்’ என்று வந்து கொண்டிருந்த வார இணைப்பிதழுக்கு பொறுப்பு கொடுத்தார்கள். அந்த இதழுக்காக ஆர்.கே.வுக்கு போன் செய்து, ‘ரத்தினங்கள் போல ஒன்பது முத்திரைச் சிறுகதைகள் (முன்பே எழுதியதாயினும்) தாருங்கள்’ என்று கேட்டேன். அவருக்கு அப்போது அவகாசமில்லாததால் என்னையே செலக்ட் செய்து ‌போட்டுக் கொள்ள அனுமதி கொடுத்தார்.

பின்னர் கோவை சென்று (வழக்கம்போல்) அவரைச் சந்தித்த போது அந்தச் சிறுகதைகளில் சில அவருக்கே நினைவில்லை என்றும் எங்கிருந்து எடுத்தேன் என்றும் கேட்டார். அவரது சிறு‌கதைகளை பைண்ட் செய்து தொகுப்புகளாக வைத்திருப்பதைச் சொன்னேன். மறுமுறை சென்றபோது எடுத்துச் சென்று கொடுத்தேன். மிகமகிழ்ந்து போய், ‘‘ஒரு எழுத்தாளனுக்கு இதைவிடப் பெரிய பொக்கிஷம் கிடையாது கணேஷ்’’ என்று சொல்லி, மகாத்மா எழுதிய ‘சத்தியசோதனை’ நூலை ஆட்டோகிராஃப் போட்டு எனக்கு அன்பளித்தார். என்னுடைய புத்தகப் பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று இன்றுவரை.

க்ளோனிங் பற்றிய தகவல்களைக் கொடுத்தபோது, ‘‘இந்த மாதிரி வாசகர்கள் தகவல்கள் தந்தால் அவர்கள் பேரை என் கடிதத்தில் சொல்லிவிடுவது வழக்கம். உங்க பேரைப் போட்டுடறேன்’’ என்றார். ‘‘தினமலருக்குப் பரந்த மனம் கிடையாது. அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டுதான் நான் உங்களிடம் அறிமுகமாகி நட்பானது போல நினைத்து நடந்து கொள்வார்கள். அதனால் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டேன்.

பின்னாளில்  க்ரைம் நாவல் ஸ்பெஷல்’ என்று ஜி.அசோகன் அவர்கள் ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வெளியிட ஆரம்பித்தார். பல நாவல்களை கத்திரி வைக்காமல் வெளியிடுவார். சில நாவல்களில் அவரது கத்திரி விளையாடி விடும். (ஆனால் எங்கு கத்திரி வைக்கிறார் என்பது புதிதாய் படிப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. அப்படி ஒரு திறமையான எடிட்டர் அவர்). நான் ராஜேஷ்குமாரிடம் நேயர் விருப்பம் மாதிரி எனக்குப் பிடித்த அவரது தொடர்களையெல்லாம் சொல்லி வெளியிடச் சொல்வேன். இந்த அன்புத் தொல்லையைப் பற்றி அவர் தன் கடிதத்தில் வாசகர்களுக்கு எழுதிவிட, தினமலரில் (படிக்கும் பழக்கம் வைத்திருந்த மிகச் சிலரிடம்) என் மதிப்பு ‘கும்!’

தன்பின் வந்த காலங்களில் அவர் எக்கச்சக்கமாக நாவல் எழுதும் கமிட்மெண்ட்களைக் குறைத்துக் கொண்டு, அளவோடு எழுத ஆரம்பி்த்தார். க்ரைம் நாவல் தவிர வேறு ஏதாவது ஒரு மாத நாவல் மட்டும் எழுதலாம் என்று முடிவெடுத்து அவர் செயல்படுத்த, அவரிடம் நாவல் கேட்டுப் பெற முடியாத மாத நாவல் பதிப்பாளர் ஒருவர் ‘‘ராஜேஷ்குமாருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’’ என்று செய்தி வெளியிட்ட கொடுமையும் நடந்தது. பின்னொரு சமயம் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நன்றாக எழுதுகிறார் என்பதால் ராஜேஷ்குமார் பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்த, சென்னையில் வேறு சில பத்திரிகைகளில் வாய்ப்புக் கேட்டுச் சென்ற அவர், ‘‘ராஜேஷ்குமாருக்கே கதை எழுத ஐடியாக்கள் எல்லாம் நான்தான் கொடுக்கிறேன்’’ என்றெல்லாம் சொல்லிவிட, அந்த பத்திரிகை நண்பர்கள் ரா.கு.விடம் அதைத் தெரிவித்தனர். ஒருமுறை இவரது க்ரைம் நாவலின் கருவைச் சுட்டு ஒரு திரைப்படமே வெளிவந்தது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அமைதி காத்துவிடுவது அவரது வழக்கம். அதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘‘அவதூறாக அவர் பத்திரிகையில் எழுதினால் எழுதிட்டுப் போகட்டும். வாசகர்களுக்கு என்னைப் புரியும்’’ என்றும், ‘‘யார் எழுத்து ஒரிஜினல்ங்கறது காலப் போக்குல நிலைச்சுடும். விடுங்க கணேஷ்.’’ என்றும் சொன்னார். (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று எழுத்துலகிலேயே இல்லை. க்ரைம்கதை மன்னனோ இன்றும் வெற்றி வலம் வருகிறார்).  ‘‘என் கதையைச் சுட்டு படம் எடுத்து விட்டார்கள் என்று வழக்குப் போட்டால் வாய்தாவாக வாங்கி பல வருடம் போராடி, கடைசியில் ‘இது ராஜேஷ்குமாரின் கதை என்பதற்கு சாட்சி இல்லை. ராஜேஷ்குமாரை கோர்ட் கண்டிக்கிறது’ என்பார்கள். இதற்காக அலையும் நேரத்தில் நான் உருப்படியாக பல விஷயங்கள் செய்யலாம்.’’ என்றார்.

ராஜேஷ்குமாருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்தபோது ஆதங்கமாக ஒரு விஷயம் சொன்னார். அவரிடம் அவர் எழுதிய நாவல்களை இரவல் வாங்கிச் சென்ற எவரும் திருப்பிக் கொடுத்ததே இல்லை என்பதே அது. எனக்கும் இது விஷயத்தில் பெரிய மனக்குமுறல்கள் இருந்ததை அவரிடம் கொட்டித் தீர்த்தேன். (பார்க்க: என் பதிவு புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்?) அவரிடம் இல்லாத பல நாவல்களை அவர் சொல்ல, என் கலெக்ஷனில் இருந்தவற்றையெல்லாம் அவருக்குக் கொடுத்தேன்.

‘அவரது மகன்களின் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தியதும், அவருடனிருந்ததும் மறக்க இயலாத இனிய அனுபவம். அவர் பேரனைப் பார்த்துவிட்ட காலத்தில் நான் சென்னைக்கு வந்து ‘கல்யாணமாலை’ இதழில் லேஅவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். பேரனைப் பார்க்க சென்னை வந்த அவரிடம் பேட்டி தரும்படி கேட்டேன்.விரிவாகப் பேசினார் - மூன்று இதழ்களில் வெளியிடும் அளவுக்கு. (கதைகளில் ஏகப்பட்ட கொலைகளைச் செய்துவிட்ட இவருக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கமே வந்து விடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?) இன்றும் எப்போது வேண்டுமானாலும் செல்போனில் அழைத்தால் மனம் விட்டு நிறைய நேரம் பேசுவார்.

வ்வளவு புகழ் அடைந்தாலும் சிறிதளவும் கர்வம் இல்லாமல், பழகும் தன்மை மாறாமல் 1996ல் பார்த்ததைப் போலத்தான் இப்போதும் அவரைப் பார்க்கிறேன். அவரிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த எளிமையும், எப்போதும் இன்சொற்கள் பேசுவதும்தான்!
-‘ராஜேஷ்குமாரும் நானும்’ நிறைவடைய
‘சுபாவும் நானும்’ தொடங்குகிறேன்....

==========================================================

ண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் என்னை புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுத்து எவையும் நிறைவேறும் வழியாக இல்லாததால் இவ்வாண்டு நான் எடுத்த ஒரே புத்தாண்டுத் தீர்மானம், ‘இனி புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவும் எடுப்பதில்லை’ என்பதே. அதனால் என்னால் தொடர இயலவில்லை. மன்னித்துவிடுங்கள் மகேந்திரன்! (அட, நாவல் தலைப்பு மாதிரி இல்லை..?)

58 comments:

  1. @ சி.பி.செந்தில்குமார் said...

    முதல் வருகையாக வந்த நண்பனின் பாராட்டு மனதை மகிழச் செய்கிறது. என் மனமார்ந்த நன்றி செந்தில்!

    ReplyDelete
  2. ராஜேஸ்குமார் அவர்கள் நான் வியந்த எழுத்தாளர்களில் ஒருவர் அவருக்கு பைத்தியம் பிடித்ததாக எழுதியது ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்றே நினைக்கிறேன்...நீங்கள் அவரோடு பழகியிருப்பது உங்கள் மீது மதிப்பு கூடுகிறது..

    ReplyDelete
  3. பிரபல எழுத்தாளரின் நட்புகிடைத்தது உங்களுக்கு பெரிய பாக்கியம் ராஜேஷ்குமார் என்னும் பிரபலஎழுத்தாளர் ஒரு அற்புதமான மனிதரென்பதும் உங்க பதிவு வாயிலாகதெரிந்து கொள்ளமுடிந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துகள் கணேஷ்

    ReplyDelete
  4. எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாத பல சுவையான செய்திகளை தந்தமைக்கு நன்றி. 'சுபாவும் நானும்' என்ற தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  5. இதைப் படித்துவிட்டேன். அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  6. @ வீடு K.S.சுரேஸ்குமார் said...

    அது ஒரு மாதநாவல் பத்திரிகைதான். ஆனால் நீங்கள் சொன்ன ரேஞ்சுக்கு நடத்தப்பட்டு வந்தது. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  7. @ Lakshmi said...

    நல்ல எழுத்தாளர் என்பதை விடவும் நல்ல மனிதரென்பதுதான் கூடுதல் சிறப்பு. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  8. @ வே.நடனசபாபதி said...

    சுவாரஸ்யமான பகிர்வை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பதாகச் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  9. @ kg gouthaman said...

    அடு்த்த பகுதிக்கு சற்று மெனக்கெட்டு வரிசைப்படுத்தித் தர வேண்டியிருக்கிறது. விரைவில் தொடர்கிறேன். மதிப்புமிகு தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  10. இன்னொரு மிகப்படாபிரபல எழுத்தாளரைச் சந்தித்துவிட்டு ஏன் சந்தித்தோம் என்று ஆனது - ராஜேஷ்குமார் நல்ல மனிதராகத் தோன்றுகிறார். சந்திக்கத் தோன்றுகிறது. எல்லோரிடமும் இப்படிப் பழகுவாரா? (bad question :)

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு..அனுவங்கள் நிறைந்த தொகுப்பு..அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்..நன்றிகள்.
    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  12. ராஜேஷ் குமார் அவர்களை பற்றிய தகவலுக்கு நன்றி. அவரின் அனைத்து நாவல்களையும் ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் ல் எவரேனும் வெளியிடுவார்களா ?

    ReplyDelete
  13. மிக அருமையான எழுத்தாளரும் நல்ல மனிதருமான ராஜேஷ் குமார் அவர்களுடனான தங்கள் அனுபவம் மிகவும் ரசனையாகவும் ஆத்மார்த்தமாகவும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. வரவிருக்கும் பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. @ அப்பாதுரை said...

    எனக்கும் மிகப் பிரபல எழுத்தாளர் ஒருவருடனான கசப்பான அனுபவம் உண்டு. நல்ல விஷயங்களைப் பகிர்ந்து விட்டு கடைசியாகச் சொல்ல எண்ணியுள்ளேன். ரா.கு.வைப் பொறுத்த வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகுபவர். அதனால்தான் அவரை அறிந்தவர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். நன்றி ஸார்!

    ReplyDelete
  15. @ Kumaran said...

    தொடர்ந்து என்னை ஊக்கப்டுத்தும் தங்களுக்கு என் இதயம் கனிந்த ந்ன்றிகள் குமரன் ஸார்...

    ReplyDelete
  16. @ அஹோரி said...

    இன்ட்லியில் ஒரு அன்பர் அவவாறு வெளியிடுவதைப் பார்த்தேன். தேடிப் பார்த்து விரைவில் உங்களுக்கு லிங்க தருகிறேன். bganesh55@gmail.com என்ற என் மின்மடல் முகவரிக்கு தொடர்பு கொண்டால் என்னிடமிருக்கு சிலவறறையும், பின்னர் தேடி மற்றவற்றையும் உங்களுக்குத் தருகிறேன் நண்பரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  17. @ கீதமஞ்சரி said...

    நீங்கள் படித்து ரசித்ததில எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. தொடரும் உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  18. ‘சுபாவும் நானும்’ தொடங்குகிறேன்....

    தொடருங்கள்..

    ReplyDelete
  19. ''..கதைகளில் ஏகப்பட்ட கொலைகளைச் செய்துவிட்ட இவருக்கு ரத்தத்தைப் பார்த்தால் மயக்கமே வந்து விடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?...'''
    இல்லையே! இப்படிப் பலர் உள்ளனர். மிக நன்றி தங்கள் அனுபவப் பகிர்விற்கு. ரசித்துப் படித்தேன்.வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. @ சமுத்ரா said...

    தொடர்வதில் மிக்க மகிழ்வுகொண்டு நன்றி நவில்கின்றேன் நான்!

    ReplyDelete
  21. @ kovaikkavi said...

    தங்களின் தொடர்ந்த வருகைக்கும் ரசித்துப் படித்து கருத்திட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  22. ராஜேஷ்குமார் கதை போல உங்கள் எழுத்தும் மின்னல் வேகம் அருமைப் பதிவு

    ReplyDelete
  23. @ dhanasekaran .S said...

    என் எழுத்தைப் பாராட்டிய நண்பருக்கு மனநெகிழ்வுடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. பதிவு நன்றாக வந்து இருக்கிறது.
    புத்தாண்டு தீர்மானமும் சரிதான்.
    ஆனால் மீண்டும் அடுத்த ஆண்டு
    எதாவது எடுக்கத் தோன்றும்.
    அதுதான் மனிதனின் விந்தை மனது.
    வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
    காத்து இருக்கிறோம்.

    ReplyDelete
  25. @ ஸ்ரவாணி said...

    உண்மைதான். மனிதனின் மனம் எப்போது எப்படி மாறும் என்பதை யாரறிவார்? பார்க்கலாம். தொடரும் உங்கள் ஆதரவிற்கு என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  26. வணக்கம் பாஸ் க்ரைம் கதை மன்னன் ராஜேஸ்குமாருடன் நெருங்கிப் பழகிய உங்களுடன் பழகுவதே பெருமையாக இருக்கின்றது.
    உங்கள் இனிய அனுபவங்களை பகிர்ந்திருந்தீர்கள்.சுவாரஸ்யமாக இருந்தது

    ReplyDelete
  27. ரா.கு மிகவும் எளிமையானவர் என்று தெரிகிறது. 'அந்த' மி.பி எ. சு என்று நினைக்கிறேன்! சுபாவுடனான அனுபவங்கள் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாதிரி பிரபல எழுத்தாளர்களுடன் பழகிய நீங்களும், அந்த அனுபவத்தைப் படிக்கும் நாங்களும் லக்கிதான்! சில எழுத்துகளை தூர நின்று ரசிப்பதுடன் நிறுத்தி விட வேண்டும். அருகில் சென்று அறிமுகமெல்லாம் எதற்கு?!!

    ReplyDelete
  28. அன்பு நண்பரே,
    கலக்கம் வேண்டாம்
    குழப்பம் வேண்டாம்..
    நீங்கள் எடுத்த தீர்மானம் கூட ஒரு
    வகையில் சரியானது.
    உங்கள் அன்புக்கு என்றென்றும்
    நிழலைத் தொடர்வேன்.

    ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களில்
    விவேக் மற்றும் கோகுல்நாத் கதாபாத்திரங்கள்
    எனக்கு மிகவும் பிடித்தவை.
    நடைவண்டிப் பயணம் தொடரட்டும் நண்பரே.

    ReplyDelete
  29. @ K.s.s.Rajh said...

    தஙகளின் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ராஜ்.

    ReplyDelete
  30. @ ஸ்ரீராம். said...

    உண்மைதான் சார். சில எழுத்துக்களை தூரவே நின்று படித்துவிட்டு நின்றுவிட்டால் நல்லதுதான். ஆனால் அந்த பத்து சதவீதத்திற்காக 90 சதவீதத்தை புறந்தள்ளி விடவும் முடியாது. என்னைப் பொறுத்த வரையில் நானாக ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஒன்றிரண்டுதான். மற்றவை தானாக அமைந்தவையே. பின்னால் படிக்கையில் உஙகளுக்கே புரியும். (அந்த மி.பெ.எ. சு அல்ல ‘பா’வில் துவங்கும்.)

    ReplyDelete
  31. @ மகேந்திரன் said...

    என்னைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி மகேன். தங்களின் அன்பினை உணர்ந்து மகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்.

    ReplyDelete
  32. Fulla padikkala. Konjam porunga. Marupadi varen.

    TM 7.

    ReplyDelete
  33. ராஜேஷ்குமார் பற்றிய பகிர்வு அருமை கணேஷ் ராஜேஷ்குமருடன் நீங்கள் இவ்வளவு நெருக்கம் என்பதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி

    அவ்வபோது என் தளத்திற்கும் வருகை தந்து என்னை ஊக்குவிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  34. என்னங்க ஐயா ராஜேஷ்குமாரைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம்ன்னு ஆர்வமா இருந்தேன்.அதுக்குள்ள முடிந்தது..சுபா தொடருவார்ன்னு சொல்லிட்டீங்களே..சரி பரவாயில்லை.சுபாவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்திக்கிறேன்.முதலில் 'சு' வா 'பா'வா
    சரி யாராக இருந்தாலும் ஆர்வத்தை அப்படியே வைக்கிறேன்..

    ReplyDelete
  35. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ...நான் அவரின் நாவல்களை எனது சிறுவயதில் இருந்தே படித்து வருகிறேன்...ஒருமுறை கோவையில் அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு தலைமை விருந்தினராக வந்து இருந்தார்,,,அப்போது அவரிடம் ஆட்டோ கிராப் வாங்கியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.இன்னும் அவரது கிரைம் நாவலுக்கு அடிமை.அவரை எப்படியாவது சந்திக்கணும் என்கிற ஆவல் இன்னும் இருக்கிறது.வடவள்ளியில் தான் வசிக்கிறார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.உங்களின் தயவால் அவரை சந்திக்க முடியுமா...?

    ReplyDelete
  36. உடுக்கை இழந்தவன் கைபோல உங்கள் நட்பு
    இருக்கிறது வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. நான் எடுத்துக் கொண்ட விஷயம் இந்த எளிமையும், எப்போதும் இன்சொற்கள் பேசுவதும்தான்!
    >>
    வாழ்க்கைக்கு மிக அவசியமான பொக்கிஷத்தைத்தான் எடுத்துக்கிட்டிருங்கீங்க

    ReplyDelete
  38. @ துரைடேனியல் said...

    துரை! முழுவதும் படிப்பதற்கு முன்பே வாக்கிட்டது என் எழுத்தின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  39. @ r.v.saravanan said...

    வந்துட்டேன் சரவணன்! நீங்கள் ரசித்ததில் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன் நான்!

    ReplyDelete
  40. @ மதுமதி said...

    எதுவாயினும் அளவுக்கு மீறினால் திகட்டி விடும் கவிஞரே... அதனால் நான் ‘கற்றதும் பெற்றதும்’ ஆன விஷயங்களை சுருக்கமாகச் சொல்லிச் செல்லவே விருப்பம். எனக்கு மட்டுமில்லை... சுபாவுடன் பழகிய யாருமே ‘சு’ என்றும் ‘பா’ என்றும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். எனவே ‘சுபா’வைப் பற்றியே சொல்கிறேன். தொடருங்கள். இந்த வார வேலைப் பளுவிலும் என் தளத்துக்கு வந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  41. கோவை நேரம் said...

    சரியாப் போச்சு. நான் என்ன பெரிய ஆளா அவரை அறிமுகம் செய்வதற்கு? இவ்வளவு தீவிர ரசிகரைச் சந்தி்ப்பதைவிட எழுத்தாளருக்குப் பெரிய மகிழ்ச்சி என்ன இருக்க முடியும். வடவள்ளியிலிருந்து மருதம‌லை செல்லும் வழியில் ‘நவாவூர் பிரிவு’ என்ற இடத்தில் யமுனா தெருவில் ‘க்யூரியோ கார்டன் அவென்யூ’ சென்று யாரைக் கேட்டாலும் அவர் வீட்டைக் காட்டுவார்கள். எதற்கும் 2422699 என்ற எண்ணிற்கு தொலைபேசி அவர் வீட்டில் இருப்பாரா என்பதைக் கேட்டுச் சென்று பாருங்கள். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  42. @ புலவர் சா இராமாநுசம் said...

    புத்தக வெளியீட்டு விழாவிற்கான தொடர் பணிகளுக்கு இடையிலும் என் தளத்தைப் படித்து கருத்திட்டு உற்சாகப்படுத்தும் உங்களுக்கு நன்றி என்ற சம்பிரதாய வார்த்தையைத் தாண்டி என் உணர்வுகள் இருப்பினும் வேறு வார்த்தையின்றி... நன்றி ஐயா!

    ReplyDelete
  43. @ ராஜி said...

    ஆமாம் தங்கச்சி. மற்ற எழுத்தாளர்களுடனான என் நட்பைச் சொல்லும் போதும் (சுய தம்பட்டங்களுக்கு நடுவில) நான் பெற்ற நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கத்தான் இதை எழுதறேன். நன்றிம்மா!

    ReplyDelete
  44. வணக்கம்! ”ராஜேஷ்குமாரும் நானும்” என்ற தலைப்பில் நல்ல பகிர்வு! ”நடை வண்டிகள்” நல்லதொரு நூலாக வடிவெடுக்க எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. அன்புக்குரியவராக இருந்த நீங்களும் இப்போ மதிப்புக்கிரியவராகிவிட்டீர்கள் தோழரே!

    ReplyDelete
  46. அட..சுபாவுடனுமா?சூப்பர்...!

    ReplyDelete
  47. @ தி.தமிழ் இளங்கோ said...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்‌ந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  48. @ ஹேமா said...

    சில சந்தனக் கட்டைகளுடன் சேர்ந்ததால் நானும் சற்று மணக்கிறேன். அவ்வளவுதான் ஹேமா. அன்புக்குரியவனாக இருக்கவே எப்போதும் எனக்கு விருப்பம். நன்றி!

    ReplyDelete
  49. @ ஸாதிகா said...

    மகிழச்சியாக இருக்கிறதா தங்கச்சி! நான் பழகிய ஆறு எழுத்தாளர்களைப் பற்றியல்லவா பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் இங்கு. தொடரட்டும் உங்கள் வருகை. என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  50. மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்... நிறைய சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது...

    சுபா பற்றிய பதிவுகளை எதிர்நோக்கி.....

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
  51. தங்கள் இருவரின் நட்பு பற்றியும்,குணநலன்கள்,அனுபவங்கள் பற்றியும் அறியத்தந்தமை மனதில் சுவாரஸ்யமாக பதிந்துவிட்டது.

    ReplyDelete
  52. ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

    நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.

    அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

    அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

    சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!



    Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

    Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

    .

    ReplyDelete
  53. @ வெங்கட் நாகராஜ் said...

    முதல் வருகைக்கு என் நல்வரவு. அனைத்துப் பகுதிகளையும் நீங்கள் படித்து ரசித்ததில் மிகுந்த மனமகிழ்வுடன் ந்ன்றி நவில்கிறேன் நான்,

    ReplyDelete
  54. @ thirumathi bs sridhar said...

    தொடர்ந்து தாங்கள் படித்து என்னை உற்சாகப்படூத்தியதற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!

    ReplyDelete
  55. உன்னத மனிதருடனான உங்க அனுபவம் படிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். சரளமான எழுத்து நடை உங்களுக்கு கணேஷ்.

    ReplyDelete
  56. @ ஷைலஜா said...

    உன்ன‌த மனிதர் தான். சபையில சொல்ல வேண்டியதை ‌மட்டும் சொல்லிருக்கேன். இன்னும் நிறைய மனதுக்குள். நான் வியக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரியான தங்களிடமிருந்து என் எழுத்து நடைக்குப் பாராட்டு கிடைத்ததில் கொள்ளை மகிழ்வுடன்... நன்றி!

    ReplyDelete
  57. // (அவர் சொன்னது போல அந்த ‘டூப்’ எழுத்தாளர் இன்று எழுத்துலகிலேயே இல்லை. க்ரைம்கதை மன்னனோ இன்றும் வெற்றி வலம் வருகிறார்). //
    சத்தியமான உண்மைகள் அய்யா ஒவ்வொரு தனிமனிதனும் புரிந்து உணர்ந்து நடக்க வேண்டிய விஷயங்கள்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube