புலவர் சா.இராமாநுசம் அவர்களின் ‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா நேற்று தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்தது. நான்கு மணிக்கு விழா என்பதால் நான்கு மணிக்குச் சென்றேன். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றவர் புலவரின் மகள் திருமதி. சித்ரா சீனிவாசன். அவர் என்னை புலவரையாவிடம் அழைத்துச் செல்ல, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் பல சான்றோர்களை எனக்கு அறிமுகம் செய்வித்தார்.
சற்று நேரத்தில் நண்பர் சென்னைப் பித்தன் வந்து என்னோடு இணைந்து கொண்டார். நாங்கள் பேசிக் கொண்டிருக்க, விழா துவங்குவதற்குச் சற்று முன் தோழி ஸ்ரவாணி தன் கணவருடன் வருகை புரிந்தார். சற்று நேரத்தில் விழா துவங்கியது. வரவேற்புரை நிகழ்ந்த பின்னர் புலவர் சா.இராமாநுசம் அவர்களுக்கு பல பெரியவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்கள்.
சற்று நேரத்தில் நண்பர் சென்னைப் பித்தன் வந்து என்னோடு இணைந்து கொண்டார். நாங்கள் பேசிக் கொண்டிருக்க, விழா துவங்குவதற்குச் சற்று முன் தோழி ஸ்ரவாணி தன் கணவருடன் வருகை புரிந்தார். சற்று நேரத்தில் விழா துவங்கியது. வரவேற்புரை நிகழ்ந்த பின்னர் புலவர் சா.இராமாநுசம் அவர்களுக்கு பல பெரியவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்கள்.
புலவரையா தன் மகள் திருமதி. சித்ராவின் மூலம் வலையுலக நண்பர்களான எங்கள் மூவரையும் மேடைக்கு அழைத்து மரியாதை செய்தார். (முன்பே எங்களுக்குத் தெரிந்திருந்தால் மறுத்திருப்போம்.) இப்படி ஒரு கெளரவத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகமிக நெகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் அது. புலவரையா! உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை.
இந்த விழா சம்பந்தப்பட்ட ஒரே ஒரு வருத்தமான விஷயம் என்னவெனில்... முழுமையாய் விழா நிகழ்ந்து முடியும் வரை இருக்க முடியாமல் இடையிலேயே புறப்பட வேண்டிய ஒரு தவிர்க்க இயலாத வீட்டு வேலை எனக்கு வாய்த்து விட்டதே என்பதுதான். புலவரையாவிடம் மன்னிப்புக் கோரி, பாதியிலேயே புறப்பட்டு விட்டேன்.
கெளரா புத்தகம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. 144 பக்கங்களில் 60 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை அரங்கில் 50 ரூபாய்க்கு அளித்தார்கள். வலையில் வந்த கவிதைகள் எனினும் படிக்காமல் விட்டவை நிறைய இருப்பதால் முழுமையாகப் படித்துவிட்டு புலவரையாவைச் சந்திக்கலாம் என்றெண்ணியுள்ளேன்.
விழா மேடையில் கேட்ட விஷயம்: தமிழ்நாடு அரசு பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற 370 ஆசிரியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தபோது அவர்களுக்காக அரசுடன் போராடி மீண்டும் பணியில் சேர்க்க ஆணை பெற்றுத் தந்திருக்கிறார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய புலவர் சா.இராமாநுசம் அவர்கள். அது மட்டுமா... போராட்டத்தின் விளைவாக அனைத்து ஆசிரியர்களும் பெற்ற ஓர் ஊதிய உயர்வு தமிழாசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட, ஓராண்டு போராடி அதைப் பெற்றுத் தந்திருக்கிறார். இப்படி நற்செயல்கள் பல செய்து, அகவை எண்பதைக் கடந்துவிட்ட நிலையில் உற்சாகமாய் நற்கவிதைகள் வழங்கி வரும் அவர் நீடூழி வாழப் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன் நான்.
புலவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. ஆனால் நேற்றிரவு கவிதை போல் ஒன்று தோன்றியது. அதை அவருக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு தருகிறேன்.
இந்த விழா சம்பந்தப்பட்ட ஒரே ஒரு வருத்தமான விஷயம் என்னவெனில்... முழுமையாய் விழா நிகழ்ந்து முடியும் வரை இருக்க முடியாமல் இடையிலேயே புறப்பட வேண்டிய ஒரு தவிர்க்க இயலாத வீட்டு வேலை எனக்கு வாய்த்து விட்டதே என்பதுதான். புலவரையாவிடம் மன்னிப்புக் கோரி, பாதியிலேயே புறப்பட்டு விட்டேன்.
கெளரா புத்தகம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. 144 பக்கங்களில் 60 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை அரங்கில் 50 ரூபாய்க்கு அளித்தார்கள். வலையில் வந்த கவிதைகள் எனினும் படிக்காமல் விட்டவை நிறைய இருப்பதால் முழுமையாகப் படித்துவிட்டு புலவரையாவைச் சந்திக்கலாம் என்றெண்ணியுள்ளேன்.
விழா மேடையில் கேட்ட விஷயம்: தமிழ்நாடு அரசு பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற 370 ஆசிரியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தபோது அவர்களுக்காக அரசுடன் போராடி மீண்டும் பணியில் சேர்க்க ஆணை பெற்றுத் தந்திருக்கிறார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய புலவர் சா.இராமாநுசம் அவர்கள். அது மட்டுமா... போராட்டத்தின் விளைவாக அனைத்து ஆசிரியர்களும் பெற்ற ஓர் ஊதிய உயர்வு தமிழாசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட, ஓராண்டு போராடி அதைப் பெற்றுத் தந்திருக்கிறார். இப்படி நற்செயல்கள் பல செய்து, அகவை எண்பதைக் கடந்துவிட்ட நிலையில் உற்சாகமாய் நற்கவிதைகள் வழங்கி வரும் அவர் நீடூழி வாழப் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன் நான்.
புலவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. ஆனால் நேற்றிரவு கவிதை போல் ஒன்று தோன்றியது. அதை அவருக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு தருகிறேன்.
========================================================
சாதிக்கொரு சங்கம் உண்டிங்கே - மதங்கள்
பலப்பல உண்டிங்கே மாந்தர்
மோதிக் கொள்கிறார் அனுதினம் - எவர்
இனம் பெரிது எனவும்
மதத்தில் சிறந்தது எதுவென்றும் -ஒன்றும்
அறியாப் பேதையாய் நான்!
பெற்றோர் இவரென்பது என்தெரிவா?- அன்றி
என்மதம், என்குலம், என்குணம்
நிறம் என்றெதை யேனும் தெரிந்தெடுத்தேனா?
என்னுடையது சிறந்ததென யானும்
திறமப்ட இயம்பிட காரணம் யாதுமுளதோ?
எங்கோ இருந்து ஏதோவொன்று
விரும்பிட ஈண்டு பிறந்தனன் யான்!
ஏனிந்த மோதல் மானிடர்காள்?
அறிவிலியாய் யான் மனங்குழம்பி நிற்கிறேன்...
அறிந்திட்டோர் விளக்கிடுக அடியேனுக்கு!
சாதிக்கொரு சங்கம் உண்டிங்கே - மதங்கள்
பலப்பல உண்டிங்கே மாந்தர்
மோதிக் கொள்கிறார் அனுதினம் - எவர்
இனம் பெரிது எனவும்
மதத்தில் சிறந்தது எதுவென்றும் -ஒன்றும்
அறியாப் பேதையாய் நான்!
பெற்றோர் இவரென்பது என்தெரிவா?- அன்றி
என்மதம், என்குலம், என்குணம்
நிறம் என்றெதை யேனும் தெரிந்தெடுத்தேனா?
என்னுடையது சிறந்ததென யானும்
திறமப்ட இயம்பிட காரணம் யாதுமுளதோ?
எங்கோ இருந்து ஏதோவொன்று
விரும்பிட ஈண்டு பிறந்தனன் யான்!
ஏனிந்த மோதல் மானிடர்காள்?
அறிவிலியாய் யான் மனங்குழம்பி நிற்கிறேன்...
அறிந்திட்டோர் விளக்கிடுக அடியேனுக்கு!
|
|
Tweet | ||
வெளியூரில் இருக்கும் எங்கள் சார்பாக
ReplyDeleteநீங்கள் மூவரும் கலந்து கொண்டு
சிறப்பித்தமைக்கும் உடனடியாக அதனைப்
பதிவாக்கித் தந்தமைக்கும் மனமார்ந்த நன்றி
கவிதையின் சிந்தனையும் சொல்லிச் செண விதமும்
வார்த்தைப் பிரயோகமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteAvarukkum ungalukkum vaazhthukkal
ReplyDeleteவணக்கம்! புலவர் அய்யா அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று சிறப்பித்த மூன்று வலைப் பதிவர்களுக்கும் நன்றி! புலவரின் ஆசிரியர் போராட்டமும் வெற்றியும் புதிய தகவல். தங்கள் கட்டுரையின் தலைப்பில் புலவரின் சா.இராமாநுசம் என்ற பெயரில் “மா” விடுபட்டு உள்ளது.
ReplyDeleteUngal pathivu kandu makilnthen. Kavithai arumai. Thaodarnthu eluthungal Sir!
ReplyDeletetha ma 4.
ReplyDeleteகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம்! நீங்கள் புலவரய்யா அவர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்கு போய் வந்ததின் தாக்கம் இந்த கவிதை என எண்ணுகிறேன். கவிதை நன்று! நண்பர் திரு சென்னை பித்தன் அவர்களும் இது பற்றி பதிவு இட்டுள்ளார். மேடையில் உங்களை புலவர் கௌரவித்தது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDelete@ Ramani said...
ReplyDeleteஆமாம் ரமணி ஸார்! எல்லோருக்குமே வர ஆசை இருப்பினும் வெளியூரிலிருப்பதும் சூழ்நிலைகள் அனுமதிக்காமலும் இருக்கலாம். ஆகவே உங்கள் சார்பாக நாங்கள் வாழ்த்தினோம் என்பதே சரி. நல்ல கருத்தளித்த தங்களுக்கு நன்றி!
@ middleclassmadhavi said...
ReplyDeleteமகிழ்ந்து வாழ்த்திய உங்களுக்கு உவப்புடன் நன்றி நவில்கிறேன் நான்!
@ தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteபெரிய தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தியமைக்கு நன்றிங்க தமிழ் இளங்கோ! இப்போ திருத்திட்டேன்! நம் அனைவரின் சார்பாகவும் நாங்கள் அங்கிருந்தோம். மிக்க நன்றி!
@ துரைடேனியல் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் ஊக்கமளித்த கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி துரை!
@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteஆம்! கவிதைப் புத்தகத்தி்ல ஓர் அவசர உலா வந்ததின் தாக்கம்தான் இது. நண்பர் செ.பி. அவர்கள் எக்ஸ்பிரஸ் ஆயி்ற்றே! இரவே வெளியிட்டு விட்டார். பார்த்து கருத்திட்டேன். நான் அதிகாலையில் வெளியிட்டேன். உற்சாகமூட்டிய கருத்திற்கு தங்களுக்கு என் இதய நன்றி!
கவிதை விழா பற்றிய பகிர்வு...
ReplyDeleteதாங்கள் சிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சி....
y not attaaching in thiratties?
ReplyDeleteஉண்மையில் விழா மிகச் சிறப்பாக இருந்தது.
ReplyDeleteவரவேற்பு , ஹை டீ , குளிர் அரங்கம் ,
ஐயா அவர்களின் உற்சாகம் , சித்ரா அவர்களின் இனிய விருந்தோம்பல் ,இன்ப அதிர்ச்சியான
மேடைக் கௌரவம் , உங்கள் + சென்னைப்பித்தனுடனான சந்திப்பு என்று
ஒரு இனிய மாலையை , நீங்காத நினைவுகளை
அது தந்து விட்டுச் சென்றது.
உங்கள் கவிதை மிக அருமை. அவர் புத்தகம்
ஒரே இரவில் உங்களை இப்படிப் புலவர் ஆக்கி விட்டது
இல்லையா ?
@ தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteநம் அனைவரின் சார்பிலும் அங்கிருந்ததில் மகிச்சி எனக்கு. நன்றி பிரகாஷ்!
@ சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteசில திரட்டிகள்ல எப்படி இணைக்கறதுங்கற வித்தைய முழுசா நான் இன்னும் கத்துக்கலை செந்தில்! நாளைக்கு அடுத்த பதிவு போடறதுக்குள்ள கத்துக்கிட்டு சேத்துடறேன்... மிக்க நன்றி நண்பா.
@ ஸ்ரவாணி said...
ReplyDeleteஆம், இனிய நினைவுகள் தந்த அருமையான மாலைப் பொழுதாகத்தான் அமைந்தது. நான் எழுதியதை கவிதை என்று சொன்னதற்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! நான் (புலவர், நீங்கள், மதுமதி, மகேன், ஹேமா போன்ற) பூக்களோடு சேர்ந்த நார் அல்லவா...
விழா பற்றியும், சென்றவர்கள் பற்றியும் உடன் அறிந்தது மகிழ்ச்சி. அனைவுருக்கும் வாழ்த்துகள். தங்கள் கவிதைக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அருமைப் பதிவு வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பொழுதினை வெகு அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete@ kovaikkavi said...
ReplyDeleteஎனக்கு வாழ்த்துச் சொன்ன தங்களுக்கு அகமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் தோழி.
@ DhanaSekaran .S said...
ReplyDeleteமகிழ்வுடன் வாழ்த்திய நண்பர் தனசேகரனுக்கு நன்றிகள் பல.
@ ஸாதிகா said...
ReplyDeleteஆமாம் தங்கச்சி... கவிதைகள் எனக்கு மிகப் பிடித்தமானவை என்பது தாங்கள் அறிந்தது தானே... பாராட்டியதற்கு என் இதய நன்றி.
‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’
ReplyDeleteநிறைவாய் அலையடித்து சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
புலவர் ராமானுசம் ஐயா அவர்களுக்கு வந்தனங்களும், வாழ்த்துகளும். நல்ல பகிர்வு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.கவிதை(பா?!) அருமை.மறக்க முடியாத மணித்துளிகள்!
ReplyDeleteஇப்போது தான் ஐயா சென்னைபித்தன் அவர்கள் பக்கத்தில் விழாபற்றி படித்து வந்தேன்.... எங்களுக்கும் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ள ஆசைதான்.... ஆனால் முடிவதில்லை - எங்கோ தொலைவில் இருப்பதால்...
ReplyDeleteபகிர்வுக்கு மிக நன்றி நண்பரே...
உங்க கவிதை நல்லா இருக்குண்ணா. கரண்ட் கட் மொபைல் போன்ல கருத்து சொல்வதால் பிடித்த வரிகள் காப்பி பேஸ்ட் பண்ண முடியலை. சாரிண்ணா
ReplyDeleteபுலவர்-பெருமைக்குரியவர்!
ReplyDeleteவெளிநாட்டில் இருக்கும் எங்களாலும் ஐயாவின் நூல் வெளியீட்டுக்கு வரமுடியாத நிலையில் வலைக்குடும்பத்தின் சார்பில் நீங்களும் கலந்து சிறப்பித்ததும் அதனைப் பதிவாக்கியதற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteதங்களின் வருகைக்கும், நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteதங்களின் வாழ்த்து அவருக்கு மகிழ்வுதரும். மிக்க நன்றி.
@ சென்னை பித்தன் said...
ReplyDelete‘பா’ என்றே குறிப்பிடலாம் பாவைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
@ வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஆம். தொலைவில் இருப்பதால் உங்களின் சார்பாக நாங்கள் கலந்து கொண்டோம். தில்லியில் விழா நடந்தால் எங்களின் சார்பாக நீங்கள் வாழ்த்துவீர்கள் அல்லவா? ஆக, எண்ணமே, நட்பே போதுமானதுதானே... தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@ ராஜி said...
ReplyDeleteஹையா... ‘பா’ நல்லாருக்குன்னு நீ சொன்னது என்க்கு வைட்டமின் மாத்திரை பாட்டிலை அட் எ டைம் முழுங்கிட்ட மாதிரி உற்சாகமா இருக்கு. மிக்க நன்றிம்மா...
@ koodal bala said...
ReplyDeleteஆம். மதிப்புக்கும் உரியவ்ர்தான். மிக்க நன்றி பாலா!
@ தனிமரம் said...
ReplyDeleteஉண்மைதான். வலையுலகின் பிரதிநிதிகளாகத் தான் நாங்கள் உணர்ந்து மகிழ்கிறோம். நற்கருத்தை நவின்ற தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே...
அடடா..இந்த இடுகையை எப்போது போட்டீர்கள்..என் கண்ணில் படவேயில்லை.மன்னிக்கவும். நேற்றே சென்னைபித்தன் ஐயாவின் பதிவில் கண்டேன்.. விழாவிற்குச் சென்று புலவர் ஐயாவை நீங்கள் கௌரவித்த செய்தியையும் நீங்கள் மூவரும் கௌரவிக்கப்பட்ட செய்தியையும் கண்டு மகிழ்ந்தேன். நானும் வரவேண்டுமென எண்ணியிருந்தேன் வேலைப்பளுவால் இயலவில்லை. விழாவிற்கு சென்றதால் புலவர் ஐயா மரபுக் கவிதை எழுதும் வித்தையையும் கற்றுக் கொடுத்துவிட்டார் போலும்..
ReplyDeleteகவிதை அருமை.. அப்படியே தொடருங்கள் அது உங்களை அறியாமலேயே ஓர்நாள் புத்தகம் ஆகலாம்.மகிழ்ச்சி.
நீங்கள் கூறிய விதம் எங்களையும் கை பிடித்து அழைத்து சென்றதைப் போல இருந்தது . மனக்கண்ணில் வந்து போனது .
ReplyDeleteபுலவர் ஐயாவுக்கும்,ஃபிரெண்ட் உங்களுக்கும்கூட அன்பு வாழ்த்துகள்.ஐயாவோட சேர்ந்த நாரும் மணம் வீசுது மகனே!
ReplyDeleteவிழாவைப் பற்றி நாங்களும் தெரிந்து கொள்ளும் விதமாக பதிவிட்டதற்கு நன்றி. தாங்கள் கெளரவிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@ மதுமதி said...
ReplyDeleteஎன் விஷயத்தில் உங்கள் வாக்கு என்றுமே நல்வாக்காகத்தான் அமைந்திருக்கிறது. இவ்வாக்கும் அப்படியே நடந்தால் மிகமிக மகிழ்வேன். எனக்கு நீங்கள் தந்த உற்சாக இன்ஜெக்ஷனுக்கு இதயம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்!
@ சசிகலா said...
ReplyDeleteஅழகான வார்த்தைகளால் ரசித்ததைச் சொல்லியிருக்கிறீர்கள் தென்றலே! உற்சாகமூட்டும் தங்களின் வருகைக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteவாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ராஜா ஸார்...
@ ஹேமா said...
ReplyDeleteஹா... ஹா... நீங்கதான் ஃப்ரெண்ட் சரியாச் சொன்னீங்க... நான் நார்தான். ஆனா பூக்கள் உங்களையும் சேர்த்து பலர்! உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!
@ RAMVI said...
ReplyDeleteதங்கள் வாழ்த்து மிக்க மனமகிழ்வு தருகிறது எனக்கு. தங்களுககு என் மனமார்ந்த நன்றி!
நம் வீட்டு விழாவுக்கு நம்மவர் போய் வந்தது போல் உள்ளது...
ReplyDeleteநன்றி கணேஷ் சார்...
@ ரெவெரி said...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
உங்கள் அன்பை அருமையாகத் தெரிவித்திருக்கிறீர்கள். கவிதையும் நன்றே.
ReplyDelete(உதட்டிலிருந்து வந்தால் காதல்; உள்ளத்திலிருந்து வந்தால் கவிதை :)
@ அப்பாதுரை said...
ReplyDeleteநான் மிக மதிக்கும் தங்களின் பாராட்டு எனக்கு பலம். தங்களுக்கு என் இதய நன்றி!
கவிதை விழா பற்றிய விவரம் அருமை. புலவர் ஐயா அவர்களை கௌரவித்திருக்கிறீர்கள் உங்க வருகை மூலம்
ReplyDeleteஉங்களுக்கு மேடையில் கிடைத்த பெருமையில் இன்னும் ஒரு சுற்று பூரித்துப்போனேன் கணேஷ்! என்ன ஒரு நல்ல மனம் புலவர் ஐயாவிற்கு! பல்லாண்டு அவர் வாழ நானும் கடவுளை வேண்டுகிறேன்.
ReplyDelete@ ஷைலஜா said...
ReplyDeleteஎன் மகிழ்வு என்பது உங்களின் மகிழ்வும் தானே... மிகமிக பெருமிதம் கொள்கிறேன் நீங்கள் என் அக்கா என்பதில். மிக்க நன்றி.
அன்பின் இனிய தம்பி!இல்லை !மகனே!
ReplyDeleteநேரில் உங்கள் வருகையும்,விழா நிகழ்ச்சியை சிறப்பாக தங்கள் வெளியிட்டமைக்கு
மிக்க நன்றி!
மேலும் மரபுக் கவிதையும் வடித்துள்ளீர்
நீங்கள் விரைவில் வலையுலகத்தில் என்
வாரிசாக வருவீர்கள் என வாழ்த்துகிறேன்!
சா இராமாநுசம்
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteமகன் என்றது எனக்கு மிகவும் உவப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. தங்களின் பாராட்டுக்குத் தகுதியாக முன்னிலும் அதிகமாக உழைப்பேன். மிக்க நன்றி!
நேரில் காணாதவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதற்கு நன்றிகள்,தங்கள் கவிதையும் அருமை.
ReplyDelete@ thirumathi bs sridhar said...
ReplyDeleteஎன் கவிதையைப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
புலவருக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.
ReplyDelete@ Shakthiprabha said...
ReplyDeleteநல்லோர் வாழ்த்து மகிழ்வே தரும். உங்கள் வாழ்த்தை அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன். நன்றி!
அருமையானதொரு விழாவைப் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி,
Delete