வணக்கம் நண்பர்களே, ஒரு சேஞ்சுக்காக... Let us begin with a smile...
வரைந்தவர் : என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ். சமீபத்தில் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதத் துவங்கியிருக்கிறார் தாஸ். ஒருமுறை சென்று பாருங்களேன்... http://pukkoodai.blogspot.in/
============================================
============================================
இது புதிர் நேரம்: இந்தப் படத்தைப் பாருங்கள். நான்கு தீக்குச்சிகளால் ஒரு கோப்பை வரைந்து அதனுள் ஒரு பழம் வைக்கப்பட்டுள்ளது. (கற்பனை பண்ணிக்குங்க) இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும். பழம் கோப்பைக்கு வெளியில் வர வேண்டும். கோப்பையின் வடிவம் மாறக் கூடாது. (பழத்தை மட்டும் நகர்த்தி, வெளில வெச்சுட்டாப் போச்சுன்னு சொன்னீங்கன்னா தலையில குட்டுவேன்) யோசியுங்க. விடையை... (அடுத்த பதிவுல சொல்லலாமான்னு யோசிக்கிறேன்)
விளம்பர நேரம் இது. இந்நாட்களில் பிரபலமான திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. அக்காலத்திலேயே தன்னுடைய பெருவெற்றி பெற்ற திரைப்படமான ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பியிருக்கிறார் மக்கள் திலகம். அதற்கான விளம்பரத்தை நிறையப் பேர் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதால் கீழே தந்துள்ளேன். (அவரின் எண்ணம் ஏனோ நிறைவேறாமலேயே போய் விட்டது.
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
பாண்டியராஜன்: அப்பா! நானும் நாயா அலைஞ்சு பாத்துட்டேன். ஒரு பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது!
நாகேஷ்: டேய்! நாயா அலைஞ்சா பொண்ணு கிடைக்காதுடா, பன்னுதான் கிடைக்கும்!
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஒ.வி.கிருஷ்ணாராவ்: என் பொண்ணு பங்கஜவல்லி. ‘பங்கு’ன்னுதான் கூப்பிடுவோம். வாம்மா பங்கு...
பெண் வருகிறாள். ஆறரை அடி உயரத்தில்!
நாகேஷ்: இவளை எதுக்கு பங்குன்னு கூப்பிடணும்? பேசாம நுங்குன்னே கூப்பிடுங்களேன்...
:

சமீபத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது அதில் வந்த ஒரு வரி என்னை உறுத்தியது. (எம்.ஜி.ஆரை விடமாட்டான்யா இவன்னு யார்ப்பா அங்க முணுமுணுக்கறது?)
‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்று ஒரு சின்னப் பையனுக்கு புத்தி சொல்லிப் பாடுகிறார் எம்.ஜி.ஆர். அன்னை என்பவள் அடுக்களையில் இருப்பவள், உலக விவரம் தெரியாது. அதனால் அவளிடம் அன்பை மட்டும் பெறலாம். அப்பா ஊரைச் சுற்றுபவர், அதனால் நீ அவரிடம் அறிவைப் பெறலாம் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் இதற்கு?
அந்நாட்களில் பெண்கள் ‘பெரிய மனுஷி’ ஆனதும் படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். என் அம்மா அப்படித்தான் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். ஆனால் என் அம்மாவிடமிருந்து நான் கற்றதும், பெற்றதும் மிக அதிகமாயிற்றே. வெளி உலகத்தில் நிறையப் பழகினாலும் கிணற்றுத் தவளையாய், அறிவற்ற அப்பாக்களும் உண்டுதானே? அன்னையிடம் அதிகப் பாசம் வைத்திருந்த எம்.ஜி.ஆர். எப்படி இப்படிப் பாடலாம்? தனக்கு உறுத்தலாக இருக்கும் வரிகளை கவிஞர்களிடம் மாற்றி எழுதிப் பதிவு செய்யச் சொல்லித்தான் எம்.ஜி.ஆர். நடிப்பார் என்பது உலகமறிந்தது. அதனால்தான் எந்தப் பாடலாக இருந்தாலும் ‘எம்.ஜி.ஆர். பாட்டு’ என்றுதான் சொல்வார்கள்.
வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி... இவை மிகமிகத் தவறான வரிகள் என்றே மனதில் பட்டது. உங்களின் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்...
‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்று ஒரு சின்னப் பையனுக்கு புத்தி சொல்லிப் பாடுகிறார் எம்.ஜி.ஆர். அன்னை என்பவள் அடுக்களையில் இருப்பவள், உலக விவரம் தெரியாது. அதனால் அவளிடம் அன்பை மட்டும் பெறலாம். அப்பா ஊரைச் சுற்றுபவர், அதனால் நீ அவரிடம் அறிவைப் பெறலாம் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் இதற்கு?
அந்நாட்களில் பெண்கள் ‘பெரிய மனுஷி’ ஆனதும் படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். என் அம்மா அப்படித்தான் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். ஆனால் என் அம்மாவிடமிருந்து நான் கற்றதும், பெற்றதும் மிக அதிகமாயிற்றே. வெளி உலகத்தில் நிறையப் பழகினாலும் கிணற்றுத் தவளையாய், அறிவற்ற அப்பாக்களும் உண்டுதானே? அன்னையிடம் அதிகப் பாசம் வைத்திருந்த எம்.ஜி.ஆர். எப்படி இப்படிப் பாடலாம்? தனக்கு உறுத்தலாக இருக்கும் வரிகளை கவிஞர்களிடம் மாற்றி எழுதிப் பதிவு செய்யச் சொல்லித்தான் எம்.ஜி.ஆர். நடிப்பார் என்பது உலகமறிந்தது. அதனால்தான் எந்தப் பாடலாக இருந்தாலும் ‘எம்.ஜி.ஆர். பாட்டு’ என்றுதான் சொல்வார்கள்.
வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி... இவை மிகமிகத் தவறான வரிகள் என்றே மனதில் பட்டது. உங்களின் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்...
============================================
இது புதிர் நேரம்: இந்தப் படத்தைப் பாருங்கள். நான்கு தீக்குச்சிகளால் ஒரு கோப்பை வரைந்து அதனுள் ஒரு பழம் வைக்கப்பட்டுள்ளது. (கற்பனை பண்ணிக்குங்க) இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும். பழம் கோப்பைக்கு வெளியில் வர வேண்டும். கோப்பையின் வடிவம் மாறக் கூடாது. (பழத்தை மட்டும் நகர்த்தி, வெளில வெச்சுட்டாப் போச்சுன்னு சொன்னீங்கன்னா தலையில குட்டுவேன்) யோசியுங்க. விடையை... (அடுத்த பதிவுல சொல்லலாமான்னு யோசிக்கிறேன்)
============================================
விளம்பர நேரம் இது. இந்நாட்களில் பிரபலமான திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. அக்காலத்திலேயே தன்னுடைய பெருவெற்றி பெற்ற திரைப்படமான ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பியிருக்கிறார் மக்கள் திலகம். அதற்கான விளம்பரத்தை நிறையப் பேர் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதால் கீழே தந்துள்ளேன். (அவரின் எண்ணம் ஏனோ நிறைவேறாமலேயே போய் விட்டது.
============================================
புத்தகக் கண்காட்சியைப் பற்றி அனைவரும் எழுதி முடித்து விட்டார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றிவந்த போது ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. தமிழின் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்த்தால் சாதாரணப் பதிப்பகங்கள் அதே அளவு பக்கங்களுக்கு வைக்கும் விலையை விட, ஒன்றரை மடங்கு அதிக விலை வைத்திருந்தார்கள். (பேசிவைத்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்று மனதில் பட்டது,)
முன்னாட்களில் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ போன்ற பல பெரிய புத்தகங்களை என் அப்பா ‘மக்கள் பதிப்பு’ என்று வெளியாகியிருந்ததை வாங்கி வைத்திருந்தார். ‘மக்கள் பதிப்பு’ என்பது சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிட்டு வெளியிடுவது. விலை உயர்ந்த தாளில் நூலகங்கள் வாங்கிக் கொள்ளலாம். வெகுஜனங்களைச் சென்றடைவதற்காக இப்படி ‘மக்கள் பதிப்பு’ ‘மலிவுப் பதிப்பு’ என்று அந்நாட்களில் வெளியிட்டிருக்கிறார்கள். (நூலகப் பதிப்பின் விலை 40 ரூபாய் இருந்தால் மக்கள் பதிப்பு 10 ரூபாய்தான்)
இப்படி சில மலிவுப் பதிப்பு நூல்கள் ‘பாரதி பதிப்பகம்’ ஸ்டாலில் இப்போது வாங்கினேன். புதுக்கருக்கு அழியாமல் மூன்று ரூபாய்க்கும், நான்கு ரூபாய்க்கும் இருந்தன. அள்ளிக் கொண்டு வந்தேன். நமக்குத் தேவை புத்தக்திலுள்ள விஷயமா, இல்லை, பேப்பரின் தரமா? இந்நாட்களில் எந்தப் பதிப்பகங்களும் இப்படி ‘மக்கள் பதிப்பு’ வெளியிடக்கூட எண்ணுவதில்லை. ஏன் என்பதுதான் புரியவில்லை.

பழைய விகடன் இதழ் ஒன்றில் நான் ரசித்த துணுக்கு:
============================================
நாகேஷின் டைமிங் காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதிராளி டயலாக்கை முடித்ததும் ஒரு மாத்திரை நேரத்திற்கும் குறைவாய் நாகேஷின் பதில் வந்து விழுந்து சிரிக்க வைக்கும். ஆபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மா பார்த்துக் கொண்டிருந்த பழைய படம் ஒன்றில் நாகேஷ் டைமிங் ஜோக் அடித்ததைப் பார்த்து சிரித்தேன். அந்த ஜோக்ஸ் இங்கே))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
பாண்டியராஜன்: அப்பா! நானும் நாயா அலைஞ்சு பாத்துட்டேன். ஒரு பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது!
நாகேஷ்: டேய்! நாயா அலைஞ்சா பொண்ணு கிடைக்காதுடா, பன்னுதான் கிடைக்கும்!
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஒ.வி.கிருஷ்ணாராவ்: என் பொண்ணு பங்கஜவல்லி. ‘பங்கு’ன்னுதான் கூப்பிடுவோம். வாம்மா பங்கு...
பெண் வருகிறாள். ஆறரை அடி உயரத்தில்!
நாகேஷ்: இவளை எதுக்கு பங்குன்னு கூப்பிடணும்? பேசாம நுங்குன்னே கூப்பிடுங்களேன்...
:
============================================
புதிரின் விடையை அடுத்த பதிவுல தரலாமான்னு யோசிச்சேன். ஆனா அப்படிச் செஞ்சா மிக்ஸர் பொட்டலம் முழுத் திருப்தியைத் தராதுன்னு தோணினதால இங்க விடை:
============================================
அவ்வளவுதான்.. மிக்ஸர் பொட்டலம் தீர்ந்துடுசு்சு! பின்ன பார்க்கலாம்!
|
|
Tweet | ||
என்னங்க புதிரும் சொல்லி விடையையும் சொல்லிட்டீங்களே யோசிக்கவா விடல்லியே . மதவங்க புத்திசாலிதனத்தில் அவ்வளவு நம்பிக்கையா? ( ஜஸ்ட் ஜோக்கிங்க்)
ReplyDeleteநாகேஷ் ஜோக் வாய்விட்டு சிரிக்கவைக்குமெப்பவுமே. எம்,ஜி, ஆர் பாட்டில் நீங்க சொன்னபிறகுதான் யோசிக்கத்தோனுது.உங்க அம்மாவாவது பெரியமனுஷி ஆன பிறகுதான் படிப்பை நிப்பாட்டினாங்க. எங்கபக்கம் பெண்குழந்தை என்பதால் என்னைலாம் பள்ளிக்கூடம் பக்கமே அனுப்பலியே. நான் பள்ளி சென்ரு படித்தே இல்லேன்னு சொன்னா இப்ப யாருமே நம்பமாட்டேங்கராங்க. பள்ளிப்படிப்பைவிட அனுபவப்படிப்புதான் சமயத்தில் உதவுது.அம்மாக்க்ளுக்கும் அறிவு இருப்பதாலதானே இது சாத்தியமாகுது.
@ Lakshmi said...
ReplyDeleteமுதல் வருகையில முத்தான கருத்தை சொல்லியிருக்கீங்க. நீங்க பள்ளி சென்று படித்ததில்லைன்ற தகவல் எனக்கும் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. படிப்பு வேற, அறிவு வேறன்னு தெரியறதால எம்.ஜி.ஆர். பாட்டு தப்புன்னு நான் நினைச்சது சரின்னு ஆகுது! மிக்க நன்றிம்மா!
கோப்பை பந்து புதிரில் எங்களை யோசிக்க விட்டிருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றியது. மொறு மொறு மிக்சர்தான் - சந்தேகமே இல்லை.
ReplyDelete'அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்; தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்..' என்பதுதானே பாடல். அன்னையிடம் நீ அன்பை வாங்கணும், தந்தையிடம் நீ அறிவை வாங்கணும் .. என்று கட்டாயப் படுத்தவில்லையே! 'நீ வாங்கலாம்' - என்றால் : you may get - என்றுதான் அர்த்தம் காணவேண்டும். you must get என்று சொல்லவில்லையே! (ஹையோ ஜால்ரா வாலிக்கு - இப்படி ஒரு ஜால்ராவா!)
@ kg gouthaman said...
ReplyDeleteவாங்கலாம், வாங்கணும் - இப்படி ஒரு கோணம் இருக்கா? நன்று! புதிர் விஷயத்தில் போட்டி ஏதாவது வைத்தால் தவிர அதே பதிவிலேயே முடிவைத் தந்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது எனக்கு. தாங்கள் தந்த நற்கருத்துக்கு என் இதயம் கனிந்த நன்றி!
வாலி சொல்லியிருப்பது சரி என்றும் சொல்லலாம். தவறு என்றும் சொல்லலாம். ஒன்றும் சொலாமலும் விடலாம்!!
ReplyDeleteபுதிர் கீழே விடைகட்டாயம் இருக்கும் என்று தெரிந்தாலும் சரியாகவே யூகித்து விட்டேன்.(நிஜமா...நம்புங்க!)
எம் ஜி ஆர் உ.சு.வா வைக் கூட 'தென்னாப்பிரிக்காவில் ராஜு' என்று இரண்டாம் பாகம் எடுக்கத் தீர்மானித்திருந்தார்.
புத்தக(க் கண் காட்சி) விஷயம்-என் எண்ணமும் அஃதே...அ ஃதே...
சார் , நான் புதிருக்கு யோசித்த விடை ..
ReplyDeleteகோப்பையை அப்படியேத் தலைகீழாகத் திருப்புவது தான்.
இதற்கும் இரு குச்சிகள் தானே மாற்றிப் போடுகிறேன்.
இந்த விடையும் சரி தானா ?
அக்காலப் பாடல்களில் சில பழமை வாதக்
கருத்துக்கள் உண்டு தான்.
சொன்னது நீ தானா பாடலில் கூட இன்னொருவர் கையில் நானா ?
என்ற பொருளில் வரிகள் வரும். மறுமணம் என்பது அவரவர் விருப்பம்
என்றாலும் சினிமா போன்ற ஊடகங்கள் அந்த பழமை
எண்ணத்தை நீக்குவதற்குத் துணை போக வேண்டும்
என்பதே என் கருத்து. நானும் சில மலிவு பதிப்புகள்
வாங்கி உள்ளேன். அதே போல் ஆங்கில நாவல் [என் மகனுக்கு] களும்
தள்ளுவண்டியிலும் , திருவல்லிக்கேணியிலும் வாங்குவது உண்டு.
பதிவு அருமை.
கணேஷ் எனக்கு தமிழ் மணத்தில்என் பதிவை இணைக்க முடியல்லியே நீங்க எப்படி இணைக்கரீங்க?
ReplyDeleteமிக்ஸர் மொறுமொறு தான். எல்ல விஷயங்களுமே நன்றாக இருக்கு.
ReplyDeleteநாகேஷ் ஜோக்ஸ் சிறப்பு.
புதிர்-- எங்களையும் கொஞ்சம் யோசிக்க விடுங்க..
@ Lakshmi said...
ReplyDelete‘ப்ளாக்கர் நண்பன்’ என்ற தளத்தில் எழுதி வரும் நண்பர் அப்துல் பாஷித்தின் இந்தப் பதிவில் வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்.
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html
இதன்படி கவனமாக பழைய திரட்டிகளை எடுத்து விட்டு இணைத்தேன் சரியாகி விட்டது. நீங்களும் முயன்று பாருங்கம்மா...
Lakshmi said...
ReplyDeleteமேலே சொன்னது ஓட்டுப் பட்டை சரியாக. தமிழ்மணத்தில் இணைக்க மட்டும் எனில், பதிவை பப்ளிஷ் செய்ததும், நியூ டேப் ஓபன் செய்து கீழேயுள்ள கோடில்:
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://minnalvarigal.blogspot.com
கடைசியில் உங்கள் ப்ளாகின் பெயரை .com என்றே கொடுத்து என்டர் தட்டினால் தானே சேர்ந்து விடும்.
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteவாலி விஷயத்தில் இப்படி நழுவிட்டீங்களே... நீங்கள் புதிரின் விடையை யூகித்தேன் என்று சொல்வதில் எனக்கு வியப்பில்லை. உங்களால் முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. புத்தக விஷயத்தில் என் கருத்தோடு நீங்கள் இசைந்ததில் மகி்ழ்வோடு என் ந்ன்றி!
@ ஸ்ரவாணி said...
ReplyDeleteஇல்லை ஃப்ரெண்ட்! கோப்பையை இரண்டு குச்சிகளை பயன்படுத்தி அப்படியே திருப்பினாலும் பழம் உள்ளேயே தானே இருக்கும். பழம் வெளியே வர வேண்டும் என்பதுதானே கண்டிஷன்! அதனால் நீ்ங்கள் சொன்ன மெதட் சரிவராது. சினிமாப் பாடல்களில் கூட பெண்களைக் குறைவாகப் பேசக கூடாது என்பது என் விருப்பம். புத்தக விஷயத்தில் நானும் உங்களைப் போல பழைய புத்தகக் கடைகளில் அள்ளி வருவதுண்டு. தங்களின் கருத்தில் மகிழ்வோடு என் இதய நன்றி!
@ RAMVI said...
ReplyDeleteஎன் மதிப்பிற்குரிய நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு இனி வரும் மிக்ஸர்களில் யோசிக்க வைக்கும் புதிரையும், விடையை அடுத்த பதிவிலும் தருகிறேன். சரிதானே... நாகேஷை உங்களுக்கும் பிடிக்குமா? நன்று! மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
அருமையான பல்சுவைப் பதிவு
ReplyDeleteவாலியின் பாடலில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான்
ஆயினும் இரண்டு பேரிடமும் இரண்டும் பெறமுடியும்
நீங்கள் சொல்வது போல் அமாவுக்குக்கென யோசித்தால்
அப்பாவுக்கு அன்பில்லை எனப் பொருள் கொள்ள வேண்டிவரும்
பொதுவாக அதிகம் என்கிறவார்த்தையை
குறிப்பால் உணர்ந்து கொண்டால் பாடல் சரியாகப்
பொருள்தரும் என்பது என் கருத்து
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் குறிப்பு மிக்க உதவியாக இருந்தது
ReplyDeleteஓட்டுப் பெட்டியை இணைத்துவிட்டேன்
மிக்க நன்றி
ஆமாங்க நானும் கோப்பையை அப்படியே தலை கீழாக கவிழ்ப்பது பற்றி தான் யோசித்தேன் .
ReplyDeleteபழைய பாடல்களில் கருத்து சொல்வது உண்மைதான் .அருமையான பதிவுங்க .
ஞாயிறு மொறு மொறு எப்பவும்போல சுவை.வெளியில் -19 ல் குளிர்.ஒரு கறுப்புக் காபியோடு இங்கே நான்.நீங்க ஃப்ரெண்ட் ?
ReplyDeleteநாகேஷ் நகைச்சுவை எப்போதும் உற்சாகம் தரும்.திரும்பத் திரும்பக் கேட்டாலும் புதிது.அவரின் இழப்பை எப்போதும் கவலைப்பட வைக்கும் அவரது சிரிப்பலைகள் !
நீங்கள் சொன்ன பாடல் மட்டுமல்ல பல பல பாடல்கள் இப்படி இருக்கிறது.யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல பெரியவர்களும் சில இடங்களில் தவறிவிடுகிறார்கள்.எம்.ஜி.ஆர் அவர்கள் நிச்சயம் இந்தப் பதிவைப் பாத்திட்டுத்தான் இருப்பார் !
மிக்சர் சூப்பர்&புதிரை அடுத்த பதிவு வரை யோசிக்க வைக்காமல் உடன் பதில் தந்ததிற்கு நன்றி,நானும் கன்ஃபூயசனில் இருந்தேன்.
ReplyDelete@ Rathnavel Natarajan said...
ReplyDeleteரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ Ramani said...
ReplyDeleteபாடலைக் கேட்ட நிமிடம் என் மனதில் தோன்றிய உணர்வுகளை எழுத்தாக்கி விட்டேன். நீங்கள் சொன்னது போல பொருள் கொண்டால் நல்ல இனிமை தருகிறது. தங்களின் பதிவின் இணைப்பையும், ஓட்டுப் பட்டியும் சரியானதில் நானும் மிகமிக மகிழ்கிறேன். எனக்கு உற்சாக இன்ஜெக்ஷன் போட்ட உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!
@ sasikala said...
ReplyDeleteவாங்க தென்றல்! இது உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல மனமகிழ்வு எனக்கு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ ஹேமா said...
ReplyDeleteநாளை என் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரின் இரண்டாவது மகள் திருமணம்கறதால வெய்யில்ல அலைஞ்சுட்டு இருக்கேன். (பதிவை காலையில போட்டுட்டு இப்பத்தான் உங்க கமெண்ட்டையே பாக்கறேன்).
நாகேஷ் ஒரு ஜீனியஸ்! எல்லோருக்கும் பிடித்த நகைச்சுவை அவருடையது. எம்.ஜி.ஆர். இதைப் பாத்துட்டிருப்பாருன்னு நீங்க சொன்னது என்னை சிறகில்லாம பறக்க வெச்சது. மிக்க நன்றி தோழி!
@ thirumathi bs sridhar said...
ReplyDeleteஇப்ப நான்தான் கன்ப்யூஷன்ல இருக்கேன். ராம்வி மேடம் எங்களை கொஞ்சம் யோசிக்க விடுங்கறாங்க. நீங்க என்னடான்னா உடனே பதிலை தர்றது நல்லாருக்குன்றீங்க. என்ன பண்ணலாம்? மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
அண்ணா
ReplyDeleteசொன்னா நம்புவீங்களா?!புதிருக்கான விடையை நான் இப்படித்தான் யூகிச்சேன். விடை கரெக்டா இருந்ததை பார்த்து, நமக்கும் அப்பப்போ சிறுமூளை வேலை செய்ய்துன்னு என் முதுகுல நானே தட்டிக்கிட்டேன்.
@ ராஜி said...
ReplyDeleteஎன்னம்மா இது... உன்னை நம்பாமலா? ஆனா... இதுக்கான விடையக் கரெக்டா கண்டுபிடிச்சா அதுக்குப் பேரு சிறுமூளை இல்லம்மா... பெரிய்ய்ய்...ய மூளை! உனக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்!
சுவையான பல்சுவை பகிர்வு...
ReplyDeleteவாலி அப்படி எழுதியதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் சொல்வார் :)
புதிர் - :) நீங்களே சொல்லிட்டீங்களே....
நாகேஷ் அவர்களின் காமெடி - அவரை அடித்துக் கொள்ள ஆளேது...
நல்ல பகிர்வு. தொடருங்கள்...
உமது புதிர் விடையில் பிழை இருக்கிறது புலவரே.
ReplyDeleteஅன்பை வாங்கலாம் என்பதிலிருந்து அடுக்களைக்கு எப்படித் தாவ முடிகிறது? எனக்கென்னவோ அன்பை வாங்கலாம் என்பதை அப்படியே ஏற்க முடிகிறது. தந்தையிடம் அறிவை வாங்கலாம் என்பதை விட அடியை வாங்கலாம் என்பது சரியாக இருந்திருக்கும்.
@ வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவாலி எழுதியதற்கு கே.ஜி.கெளதமன் ஸாரும், ரமணி ஸாருமே காரணம் சொல்லிட்டாங்களே... நாகேஷை நினைவுகூர்ந்து மகிழ்ந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
@ அப்பாதுரை said...
ReplyDeleteஇருக்க வாய்ப்பில்லையே... தீக்குச்சிகளை வைத்து செய்து பார்த்து விட்டல்லவா வெளியிட்டேன். என்ன பிழை ஸார்? என்னாது... அப்பாவிடம் அடி வாங்குவதா? எங்கப்பா லைஃப்ல ஒரு தடவைகூட என்னை அடிச்சதில்லயாக்கும்! தங்கப் பிள்ளையில்ல நாங்க! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Mixer Arumai. Nagesh Jokes Super.
ReplyDeleteTM 6.
@ துரைடேனியல் said...
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி துரை!
கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061
ReplyDelete‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்ற இந்த வரிகளைப்பற்றிய உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். ‘தாயோடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம்’ என்ற கருத்தை ஒட்டி இந்த பாடலை கவிஞர் வாலி அவர்க எழுதியிருக்கலாம்.எப்படி இருப்பினும் குற்றம் குற்றமே.
ReplyDeleteமிக்ஸரின் மற்ற யாவையுமே வழக்கம்போல் மொறு மொறு தான்.வாழ்த்துக்கள்!
நாகேஷ் சொன்னதை நினச்சிபபர்த்தாலே சிரிப்பா வருது மிகசர் வழக்கம்போல சுவை கணேஷ்!
ReplyDelete@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!
@ ஷைலஜா said...
ReplyDeleteகரெக்ட்க்கா. நாகேஷோட வாய்ஸ் மாடுலேஷனை மனசுல நெனைச்சுக்கிட்டு ஜோக்கைப் படிச்சா குபீர்னு சிரிப்பு வரத்தான் செய்யும். ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வந்திருக்கிறேன் சார்.
ReplyDeleteமிக்ஸர் மொறு மொறுப்பாக சுவையாக இருந்தது.... பாடலைப் பற்றி தாங்கள் சொன்ன பிறகு தான் யோசிக்க வைத்தது.... காரணம் ஏதாவது இருக்கலாம்.
நாகேஷின் நகைச்சுவைகள் என்றுமே அலுக்காதவை.
புதிருக்கு விடையை நல்ல வேளை சொல்லிட்டீங்க.... இல்லேன்னா யோசிச்சுகிட்டே இருந்திருப்பேன்...
நேரம் கிடைக்கிறப்போ உங்க தொலைபேசி இமெயில் விவரங்களை அனுப்புங்க கணேஷ், நன்றி. msuzhi@ymail.com
ReplyDeleteவாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி... இவை மிகமிகத் தவறான வரிகள் என்றே மனதில் பட்டது. உங்களின் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்..//ஒரு பழைய பாடலை தேடிப்பிடித்து ஆராய்ச்சி செய்து அலசி இருப்பது அருமை.
ReplyDeleteஏன் ஜெயலலிதா கூட அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்று பாடவில்லையா?
சார்!
ReplyDeleteதங்கள்
மிக்ஸர்பகுதி மிக அருமை!
மிகவும் ரசித்தேன்!
சிரிப்போட பதிவை படிக்க ஆரம்பிச்சேன். :)
ReplyDeleteஎம்.ஜி.ஆர் பாடலை வைத்து இப்படி எல்லாம் ஆராச்சியா? சுவரசியமாதான் இருக்கு. அன்புக்கு அம்மா, அப்பா. அப்பாவும் என்னிடம் மிகவும் உயிராய் இருந்தார். அறிவுக்கு ஆயிரம் நல்ல நூல்கள் இருக்கின்றன. எம்.ஜி.ஆர். பாடலை பொறுத்தவரை தந்தையிடம் அறிவை வாங்கலாம். அறிவு இருந்தா, வாங்கிக்க விருப்பம் இருந்தா வாங்கிக்கலாம். கட்டாயம் ஒண்ணும் இல்லையே. அதனால பரவாயில்லை.
புதிர் விடையை எப்பவும் போல நீங்களே சொல்லிடீங்களே. புதிரை பாத்த உடனே நைசா போய் கீழ விடை இருக்கான்னுதான் முதல்ல பாத்தேன். இருந்துது. ஹிஹிஹிஹி .....அதனால மண்டை எல்லாம் உடைசுக்கல.
நாகேஷ் பத்தி எழுதி இருந்ததை படிச்சப்போ என் நினைவுக்கு வந்தது, தில்லானம் மோகனாம்பாள் படத்தில் வரும் டயலாக்தான்.
மோகனா கண்டிப்பாக ஆடவே கூடாது / ஏன் நீர் ஆடபோகிறீரா / எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை / கத்துண்டு ஆடத்தான் போறீரா? :)
@ கோவை2தில்லி said...
ReplyDeleteதங்களுக்கு என் நல்வரவு மேடம்! நிறைய தளங்கள்ல உங்களின் கருத்துக்களைப் படிச்சு ரசிச்சதுண்டு. என் தளத்துலயும் பார்த்ததுல மிகமிக மகிழ்ச்சி. மிக்ஸரின் எல்லா அம்சங்களையும் நீங்க ரசிச்சதுல சந்தோஷத்தோட என் மனமார்ந்த நன்றி!
@ ஸாதிகா said...
ReplyDeleteகரெக்ட்! ஜெயலலிதா பாடியதும் இதே பொருளில்தான் என்பதை ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி. யாரிடம் எது மிகுதியாகக் கிடைக்கிறதோ, அதைக் குறித்து பாடியிருக்கிறார்கள் என்ற விளக்கம் எனக்குக் கிடைத்து விட்டதே. வருகைக்கும், நற்கருத்துக்கும் என் இதய நன்றி சிஸ்!
@ யுவராணி தமிழரசன் said...
ReplyDeleteவருக யுவராணி மேடம்! தாங்கள் ரசித்ததைச் சொல்லி எனக்கு ஊக்கமளித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@ மீனாக்ஷி said...
ReplyDeleteபாடலைப் பத்தி உங்க கருத்தை நான் ஏத்துக்கறேன். அறுபதாயிரம் திருடிட்ட நாகேஷ்ட்ட மை.ம.கா.ராஜன் படத்துல கமல் சொல்லுவார்: ‘விஸ்வாசம்னா தெரியுமா? நான் சொன்னது் ஆறாவது மாடிலருந்து குதிக்கிறான். நீங்க...’ / நொடியின் பின்னத்தில் நாகேஷ்: ‘என்னாலல்லாம் குதிக்க முடியாது’/ கமல்: ‘அதில்லை. ஒரு மாசத்துல...’ / நாகேஷ்: ‘ஒரு மாசம் குடு்த்தாலும் குதிக்க முடியாது’ -என்று அவர் பணத்தைப் பத்திப் பேச, இவர் குதிக்கிறதைப் பேச அப்படிச் சிரிச்சு ரசிச்சிருக்கேன். நினைவுகளைக் கிளறிவிட்டு சந்தோஷம் ஊட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!
வணக்கம் நண்பர் கணேஷ்,
ReplyDeleteநீண்ட தாமதமாகி விட்டது..வருவதற்கு..
நாடோடியின் மகன் பற்றி நீங்கள் சொல்லித்தான்
தெரிகிறது. இதுபோல விஷயங்கள் தெரிந்தவர்கள்
சொல்கையில் ஆச்சர்யமாக இருக்கிறது.
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ் அவர்களை
பார்த்ததுமே சிரிப்பு வந்து விடும்..
"" அட போங்கப்பா.. அரசருக்கே புரிந்து விட்டது..""
என்ற திருவிளையாடல் காவிய தருமியை
மறக்க முடியுமா.....
சுவையான பல்சுவை பகிர்வு..
ReplyDelete@ மகேந்திரன் said...
ReplyDeleteதாமதமானால் என்ன... நீங்கள் படித்ததே எனக்கு மகிழ்வுதான். எல்லாவற்றையும் ரசித்ததுப் பாராட்டியதிலும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.
கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர்.
ReplyDeleteஹலோ கணேஷ்,
ReplyDeleteநாடார் கடையில் நீ நாட்டு சக்கரை வாங்கலாம்!
பாய் கடையில் நீ பயத்தம்பருப்பு வாங்கலாம்!!
என்றால்,
நாடார் கடையில் பயத்தம்பருப்பு கிடைக்காதென்றோ,
பாய் கடையில் நாட்டு சக்கரை கிடைக்காதென்றோ,
அர்த்தம் இல்லை..
எனக்கு தெரிந்த ஒருவர்
அன்பை அத்தையிடமும்,அறிவை அப்பத்தாவிடமும் வாங்கியுள்ளார்.
மற்றபடி தமிழ் வலைதள மொக்கை பதிவுக்கு UNIT OF MEASUREMENT ஆன "டோண்டு" ஸ்கேலில் உங்க பதிவு 0.5 டோண்டு பெறும்!
தொடரட்டும் உங்கள் பணி!
வாழ்த்துக்கள்.
@ சமுத்ரா said...
ReplyDeleteரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@ சென்னை பித்தன் said...
ReplyDeleteரத்தினச் சுருக்கமாக ரசித்த விஷயத்தைச் சொன்ன தங்களை வியந்து, என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ Ganpat said...
ReplyDeleteபாடல் விஷயத்தில் எனக்குத் தெளிவு கிடைத்து விட்டது. ஆனால் ரேங்கிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது இன்றுவரை (நிஜமாய்). எனக்குத் தோன்றுவதைப் பகிரத்தான் எழுதி வருகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.
அம்மாவின் அன்பு ஸ்பெஷல் என்பதால் இருக்குமோ:)? ஆனாலும் உங்கள் ஆதங்கம் சரியாகவே தோன்றுகிறது.
ReplyDeleteமொறுமொறு தொகுப்பு நன்று.
@ ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅம்மாவிடம் வற்றாத அன்பு கிடைக்கும் என்பதால் எழுதியிருப்பார் என்றுதான் அனைவரும் விளக்கியதும் எனக்கும் தோன்றுகிறது. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
நான் லேட்டாக வந்தாலும் மிக்ஸர் நமத்து போகாமல் மிக சுவையாகவே இருக்கிறது
ReplyDeleteஇந்த மிக்ஸர் சிந்திக்கவும்,சிரிக்கவும்,மூளைக்கு வேலைகொடுக்கவும் செய்கிறது.
Avargal Unmaigal said...
ReplyDeleteலேட்டாய்ப் படி்ததாலும் நமத்துப் போகாமல் மிக்ஸர் இருக்கிறது என்று உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!