Sunday, February 26, 2012

கடுகு அவர்களின் சதாபிஷேகம்

Posted by பால கணேஷ் Sunday, February 26, 2012
ன்னுடைய நண்பரும், நலம் விரும்பியுமான, அகஸ்தியன், கடுகு ஆகிய பெயர்களில் எழுதி வரும் திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா தம்பதியினரின் சதாபிஷேக விழா நேற்று (25.2.12) நடைபெற்றது. கடுகு அவர்கள் பிரபல பத்திரிகைகளில் எழுதிப் பெயர் பெற்ற எழுத்தாளர் மட்டுமின்றி வலைத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வரும் உற்சாக இளைஞர். இந்த விழாவில் வலையுலகின் சார்பாக நானும், ஷைலஜா அக்காவும் மகிழ்வுடன் கலந்து கொண்டோம்.
நூல் வெளியீடு!

நானும் இருக்கேன்ல... கண்டுபிடிங்க!
நானும் ‌ஷைலஜாக்காவும் ஆசிபெற்ற போது...
நானெல்லாம் நகைச்சுவையாக எழுத வேண்டும் என்று நினைத்து முயன்றால்தான் அது வரும். கடுகு ஸாருக்கோ எழுத வேண்டும் என்று நினைத்தாலே நகைச்சுவைதான் பொங்கி வரும். எழுத்தின் மூலம் சிரிக்க வைப்பது மிகக் கடினம். அக்கடினமான செயலை அநாயசமாகச் செய்து வரும் அவர் பேசினாலே நகைச்சுவை தெறிக்கும்.  என் நண்பர் ‘க்ளிக்’ ரவி அவரைப் பேட்டி கண்டபோது...

‘க்ளிக்’ ரவி : நீங்க முதல்முதலா எப்ப எழுத ஆரம்பிச்சீங்க ஸார்?

கடுகு ஸார் : அது... அஞ்சு வயசுல திண்ணைப் பள்ளிக கூடத்துல சேர்த்தபோது, நெல்லுல விரலைப் பிடிச்சு ‘அ’ எழுத வெச்சாங்க. அப்போ...

‘க்ளிக்’ ரவி: அவ்வ்வ்வ்வ்வ! அதைக் கேக்கலை ஸார். பத்திரிகையில எப்ப எழுத ஆரம்பிச்சீங்க?

விழாவில் ‘கமலாவும் நானும்’ என்கிற புத்தகமும் (வலையில் அவர் எழுதியவற்றின் தொகுப் பும் பல சிறுகதைகளும்), ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ (பாடல்களும், உரையுமாக பதம் பிரித்து வெளியிட்டிருக்கும் இரு பெரிய தொகுப்புகள்) என்கிற புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடந்தது. விலைமதிப்பற்ற இந்த அரிய புத்தகங்களை வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பரிசாக உவப்புடன் வழங்கினார் கடுகு அவர்கள். விழாவில் திரு.ராணி மைந்தன் பேசும்போது...

‘‘எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் மனைவி, கடுகு ஸாரிடம், ‘கமலாவும் நானும் புத்தகத்தைப் படிச்சேன். கீழ வைக்கவே மனசு வரலை ஸார்’ என்க, கடுகு ஸார் உடனே, ‘சில புஸ்தகத்தை கீழே வெச்சுட்டா மறுபடி எடுக்க மனசு வராது’ என்று பளிச் பஞ்ச் அடிக்க, அவர் உடன் சிரித்து விட்டார்’’ என்று சொல்லவும், விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கூடச் சிரித்தோம்.
நெகிழ்வுடன் கடுகு ஸார்!

விழாவில் கடுகு அவர்களின் பேத்தி அருந்ததி பகவத் கீதையின் ஒரு அத்தியாயத்தை (கடினமான வடமொழி ஸ்லோகங்களை) அட்சரம் பிசகாமல் அழுத்தம் திருத்தமாக அழகாகப் பாடினார். அமெரிக்காவில் வசிக்கும், ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தை திருத்தமாக இப்படிப் பாடியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

இயக்குனர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு ஆகிய இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து கடுகு ஸாரின் நெருங்கிய நணப்ர்கள். அந்த நட்பின் உரிமையுடன், நெகிழ்வுடன் சுவாரஸ்யமாகப் பேசி அசத்தினார் திரு.சித்ராலயா கோபு அவர்கள். எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, நடிகர் திரு.காத்தாடி ராமமூர்த்தி, ‘கல்கி’ ராஜேந்திரன் அவர்கள், பத்திரிகையாளர் திரு.ராணிமைந்தன், ஹ்யூமர் கிளப் திரு.சிரிப்பானந்தா, எழுத்தாளர் ‌ஜே.‌எஸ்.ராகவன், வலையுலகிலும் பிரபலமான எழுத்தாளர் ஷைலஜா அக்கா, நான் என்று பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்கள். (சந்தடி சாக்குல என்னையும் சேர்த்துக்கிட்டதை கண்டுக்காதீங்கப்பா)
கடுகு ஸாரின் குடும்பம்!

வந்திருந்த அனைவருக்கும் கடுகு ஸாரின் புதல்வி ஆனந்தி நன்றி கூறினார். கடுகு ஸார் மேடையில் பேச மாட்டேன் என்று முன்பே சொல்லியிருந்தார். எனினும் சில வார்த்தைகள் பேசித்தானாக வேண்டும் என்ற அன்பு வற்புறுத்தலினால், மன நெகிழ்வுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்டு, கடுகு ஸார் அன்பளிப்பாக வழங்கிய பொக்கிஷ புத்தகங்களையும் பெற்றுக் கொண்டு திரும்பிகையில் மிகுந்த மன நிறைவும், மகிழ்ச்சியும் இருந்தது.

80ம் கல்யாணம் செய்து கொண்டு, முப்பது வயது இளைஞருக்குரிய உற்சாகத்துடன் இன்றும் எழுதி வரும் கடுகு அவர்கள் இன்னும் நிறைய எழுதி நம்மை மகிழ்விக்கவும், திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா ரங்கநாதன் தம்பதிகள் பல்லாண்டு காலம் நீடூழி வாழவும் நீங்களும் என்னோடு சேர்ந்து வாழ்த்துங்கள். (விழாவில் ராணிமைந்தன் அவர்கள பேசும்போது எனக்கு ஏற்புடைய ஒரு கருத்தைச் சொன்னார்: ‘‘ஆசி பண்றதுக்குத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு வயசு தேவையில்ல... நல்ல மனசு இருநதாலே போதும். அதனால நாம எல்லாரும் அவரை வாழ்த்தலாம்’’ என்று. ஆகவே நீங்களனைவருமே வாழ்த்தலாம்) கடுகு ஸார் என் வலைத்தளத்தை தவறாது பார்ப்பார் என்பதால் (என் பாக்கியம்!) உங்கள் வாழ்த்துக்கள் அவரைச் சென்றடைந்து விடும்.

100 comments:

  1. பய்னுள்ள மகிழ்ச்சிகரமான பதிவு.

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள்.

    இவருக்கு வயதானாலும் நகைச்சுவை போகாது என்று புரிகிறது.

    அழகான படங்களுடன் அருமையான பதிவு.

    அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து எழுதிக்கொண்டே இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அந்த தம்பதிக்கு நமஸ்காரங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. ஆம்! அவருடைய நகைச்சுவை ஆறு என்றும் வற்றாதது. தங்களின் பிராத்தனைகளையும், நமஸ்காரங்களையும் தெரிவித்து விடுகிறேன் ஐயா. மிக்க நன்றி!

      Delete
  2. ‘கடுகு’ அவர்களின் சதாபிஷேகம் விழாவில் நானே நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது உங்களது பதிவைப் படித்தபோது. வாழ்த்துக்கள்! திரு.சித்ராலயா கோபு, எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, நடிகர் திரு.காத்தாடி ராமமூர்த்தி, ‘கல்கி’ ராஜேந்திரன், பத்திரிகையாளர் திரு.ராணிமைந்தன், ஹ்யூமர் கிளப் திரு.சிரிப்பானந்தா, எழுத்தாளர் ‌ஜே.‌எஸ்.ராகவன், வலையுலகிலும் பிரபலமான எழுத்தாளர் ஷைலஜா, என்று பல பிரபலங்களுடன் சேர்ந்து பிரபலமான தாங்களும் சேர்ந்து வாழ்த்தியது அறிந்து மகிழ்ச்சி. சிலர் ‘வாழ்த்த வயதில்லை என்பார்கள்.’ அது தவறு. ஆசி கூறத்தான் வயது இருக்காது பலருக்கு. ஆனால் யாரும் யாரையும் வாழ்த்தலாம். நகைச்சுவை மன்னன் திரு திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா ரங்கநாதன் தம்பதிகள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பு வாழ்த்துக்களை கடுகு ஸாரிடம் சேர்ப்பிக்கிறேன். மிக்க நன்றி நண்பரே...!

      Delete
  3. பிளாக் ரொம்ப அழகாக உள்ளது சார்..பதிவும் அருமை..நல்ல பகிர்வு..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புதிய வடிவத்தையும், பதிவையும் பாராட்டி ரசித்ததற்கு என் மனமார்ந்த நன்றி குமரன்!

      Delete
  4. நல்ல பகிர்வு.... விழாவில் நாங்களே கலந்து கொண்ட உணர்வு... நகைச்சுவை உணர்வு அவருக்கு மிக அதிகம்....

    //ஆசி கூறத்தான் வயது இருக்காது பலருக்கு. ஆனால் யாரும் யாரையும் வாழ்த்தலாம்.// சரிதான்... எனது வாழ்த்துகளும்....


    திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா ரங்கநாதன் தம்பதிகள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்தையும், பிரார்த்தனைகளையும் அவரிடம் சேர்ப்பிக்கிறேன். தங்களுக்கு என் அன்பும், நன்றியும்!

      Delete
  5. Vaazhthukkal. Azhagaaga padhividum ungalukkum vaazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கும், எனக்கும் வாழ்த்துத் தெரிவித்த தங்களின் அன்புக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் நான்!

      Delete
  6. ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தை திருத்தமாக இப்படிப் பாடியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

    நானும் சில குழந்தைகளின் திறமைகளைப் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இப்படியான அதிர்ச்சிகள் மகிழ்வையும் தருகின்றனவே... அதனால் அடிக்கடி அதிர்ச்சிகள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

      Delete
  7. ‘‘ஆசி பண்றதுக்குத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு வயசு தேவையில்ல... நல்ல மனசு இருநதாலே போதும். அதனால நாம எல்லாரும் அவரை வாழ்த்தலாம்’’

    மிகவும் பிடித்த எழுத்தாளர் பல்லாண்டு நலமுடன் வாழ பிரார்த்திக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. நல்ல எழுத்தை ரசிக்கும் தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

      Delete
  8. கடுகு சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இன்னும் பூரண ஆயுளோடு வாழ்ந்து நல்ல பல படைப்புகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க இறைவனை வேண்டுகிறேன். தங்கள் தளம் அழகாக உள்ளது. அருமையாக டிசைன் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களையும் வேண்டுதலையும் கண்டு அகமகிழ்ந்தேன். வலைப்பூவின் அழகைப் பாராட்டியதற்கும் சேர்த்து உங்களுக்கு என் இதய நன்றி துரை!

      Delete
  9. சதாபிஷேக விழா என்றாலே அவர்களுக்குள் எத்தனை எத்தனை அனுபவங்கள் நிறைந்து இருக்கும் . அதனை அழகாக பதிவாக்கும் விதம் பற்றி சொன்ன விதம் அருமை . அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஆம் சசிகலா! அவரைப் போன்றவர்களின் அனுபவங்கள் என்றும் நமக்கு நல்வழி காட்டும் விளக்குகள்! தங்களின் வாழ்த்துக்கு என் இதய நன்றி!

      Delete
  10. நல்ல பகிர்வு. மணமக்களுக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு என் இதயநன்றி!

      Delete
  11. அன்புள்ள கணேஷ்

    ஸ்பீட், ஸ்பீட் ஜெட் ஸ்பீட். காலை எழுந்தவுடனேயே வந்து படங்களை வாங்கிக்கொண்டு போய் உடனேயே 'பிளாக்'கில் அருமையான, யதார்த்தமான வர்ணனைவரிகளால் கடுகு சாரின் சதாபிஷேகத்தை படம்பிடித்துக்காட்டிய் பாங்கு அபாரம்! (தங்களின் வர்னணனையால் படங்கள் 'பிற்சேர்க்கை"யாகி விட்டன!) கடுகு சார் மாதிரி பெரியவர்களின் (அவர் கோச்சுப்பார், என்னை சந்தடி சாக்குல பெரியவராக்கிட்டீங்களே!) ஆசீர்வாதங்களும், வழிகாட்டுதல்களும் நமக்கெல்லாம் எக்கச்சக்கமாக தேவைப்படுகிறது. விழாவுக்கு வராத அன்பர்களும் செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை!

    அன்புடன் க்ளிக் ரவி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பு்கைப்படங்கள் இந்தக் கட்டுரைக்கு அழகு சேர்க்கின்றன என்பதே உண்மை. தங்களின் பாராட்டினால் மிகமிக மகிழ்ந்தேன் நண்பரே! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  12. எண்பது கண்ட இளைஞர் கடுகு தம்பதியினருக்கும் அதை எங்கள் எல்லோருக்கும் அறிவித்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக் கூறிய தங்களுக்கு எங்களின் நெகிழ்வான நன்றி ஸார்!

      Delete
  13. நான் கடுகு சாரின் எழுத்தின் பரம் ரசிகன்
    அவர் 80 வது வயது நிறைவு விழா சிறப்புப் பதிவு
    கண்டு மிக்க மகிழ்ந்தேன்
    நூறாண்டு கடந்து அவர் இதைப் போலவே இளமையோடு வாழ
    மதுரை மீனாட்சியின் அருளை வேண்டிக்கொள்கிறேன்
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் என் போல் ரசிகர்தான் என்பதில் மகிழ்வும், அன்னை மீனாட்சியை வேண்டுகிறேன் என்பதில் நெகிழ்வும் கொண்டு, என் மனப்பூர்வமான நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

      Delete
  14. கணேஷ் தங்கள் தளம் மூலமாக கடுகு சாருக்கு என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். அவருடைய சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்ட ஏமாற்றத்தை ஒரு சிறிதளவேணும் போக்கியதாகத்தான் உங்களின் இந்தப் பதிவைச் சொல்லவேண்டும். கடுகு சாரின் நகைச்சுவை மட்டுமல்ல அவரது அன்பும் அவரது விருந்தோம்பலும்கூட என்றும் மறக்கவிடாது. மிகப்பெரிய பதவி மிகப்பெரிய மனிதர்களின் நட்பு என்று எந்தநாளும் வளைய வந்தபோதிலும் அனைவரிடமும் பேதமின்றிப் பழகும் பாங்கும் அவருக்கு மட்டுமே உரியவை. அவருடைய நட்பு வட்டத்திற்குள் இருக்கும் நீங்களும் கொடுத்துவைத்தவரே. என்னுடைய அன்பையும் வணக்கத்தையும் கடுகு சாருக்குச் சொல்லிவிடுங்கள்.
    அன்புடன்,
    அமுதவன்.

    ReplyDelete
    Replies
    1. அவரது விருந்தோம்பல் மற்றும் அன்பை அனுபவித்தவர்களுக்கு அதன் அருமை நன்கு புரியும் என்பதே உண்மை. தங்களால் விழாவில் கலந்து கொள்ள இயலாத குறையை ஒரு சிறிதளவேனும் என் பதிவு நிவரத்தி செய்ததில் மிகமிக மனநிறைவு கொண்டு, தங்களுக்கு என் இதயநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  15. ஆகா மிக அருமையாய் எழுதி இருக்கீங்க கணேஷ்.இன்னும் நடந்ததை ஊர்போய் நான் எழுதுவேன்.... அந்த ஆசி பெறும் போட்டோல அந்த சிவப்புகலர் லேடி நான் தான்னு யாரும் நினச்சிடப்போறாங்க:! என்னை மறைத்துக்கொண்டு கணேஷ் :):) ஆனா கூட்டத்தில் அமர்ந்திருக்கும் போட்டோக்களில் உங்களையும் என்னையும் யாராவது சரிய கண்டுபிடுபிடிச்சா ஆயிரம் பொற்காசுகள்னு சொல்லிப்பாருங்களேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா... நீங்க எழுதறதுக்குன்னே தனியா விஷயங்கள் உண்டே! இப்ப நீங்க சொன்னதும்தான் எனக்கும் தோணுது- அந்த சிவப்பு நிற புடவை கட்டியது நீங்கன்னு மத்தவங்க நெனைகக சான்ஸ் இருக்குன்றது! உங்களை மறைச்சிட்டனே... என்ன செய்ய? என் உடம்பு சைஸ்(!) அப்படி. கூட்டத்துல உங்களையும் என்னையும் வட்டமிட்டுக் காட்டிறலாமாக்கா?

      Delete
  16. வணக்கம்! சாவி ஆசிரியராக இருந்த குங்குமம் மற்றும் சாவி வார இதழ்களில் கடுகு, அகஸ்தியன் பெயரில் வந்த நகைச்சுவை துணுக்குகள், கட்டுரைகள், தொடர்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். இருவரும் ஒருவரே என்பதை மின்னல் வரிகள் கணேஷின் வலைப் பதிவைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் தெரிந்து கொண்டேன். கடுகு, அகஸ்தியன் எனப்படும் பி.எஸ்.ரங்கநாதன் அவர்களின் சதாபிஷேகத்தை முன்னிட்டு எனக்கு வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். மின்னல் வரிகள் கணேஷுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அட, இந்தத் தகவல் உங்களுக்குப் புதுசா? தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி தமிழ் இளங்கோ.

      Delete
  17. உங்களை மறைச்சிட்டனே... என்ன செய்ய? என் உடம்பு சைஸ்(!) அப்படி. கூட்டத்துல உங்களையும் என்னையும் வட்டமிட்டுக் காட்டிறலாமாக்கா?




    Reply>>>>>>>>


    yes !!! 1000porkaasukaL namakke!!!

    ReplyDelete
  18. ஆசி பண்றதுக்குத்தான் வயசு வேணும். வாழ்த்தறதுக்கு வயசு தேவையில்ல... நல்ல மனசு இருநதாலே போதும். அதனால நாம எல்லாரும் அவரை வாழ்த்தலாம்’’
    நீங்க பார்த்து ரசித்த விஷயங்களை எங்களையும் ரசிக்கவச்சுட்டீங்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  19. நன்றிகள் கோடி,இந்த அருமையான பதிவிற்கு.

    ReplyDelete
    Replies
    1. படித்து, ரசித்து நன்றி தெரிவித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!

      Delete
  20. நிகழ்ச்சியில் நாங்களும் கலந்து கொண்டு பார்த்தது போல் இருந்தது தங்களின் எழுத்தால்...

    அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். அவர்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்ந்து மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! நம் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நிச்சயம் பலனுண்டு. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  21. உங்க வட்டத்துல நானும் வைகேரியசா நுழைஞ்சுக்கறேன்.. பதிவுக்கு நன்றி.
    அவருக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் வட்டத்துல நீங்க இல்லாமலா? கடுகு ஸாரிடம் உங்கள் வணக்கங்களைச் சேர்த்துடறேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  22. கடுகு ஐயாவுக்கு கன் வாழ்த்துக்கள்!
    படங்கள் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. அவரிடம் உங்க வாழ்த்துகளைச் சொல்லிடறேன் ஐயா! படங்களையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  23. பெரியவரின் ஆசி எங்களுக்கும் ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நெருங்கிய ஃப்ரெண்ட் நீங்கன்றதால கடுகு ஸாருக்கும் ஃப்ரெண்ட்தான்! அவரின் ஆசி நமக்கு எப்பவும் உண்டு ஹேமா! நன்றி!

      Delete
  24. கணேஷ் சார் ,
    சதாபிஷேகம் கண்ட திரு. கடுகு சார் அவர்கள்
    எனக்குத் தங்கள் வலைத்தளம் மூலமாகவே
    அறிமுகம் . பதிவும் படங்களும் அருமையாக உள்ளன.
    அவரின் வலைத்தள முகவரி சொல்லவும் .
    அன்புத் தம்பதியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    தங்கள் புதிய முகப்பு அட்டகாசமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. என்ன தோழி, நான் ரசிக்கும் தளங்களின் வரிசையில் ‘கடுகு தாளிப்பு’ இருப்பதை கவனித்ததில்லையா நீங்கள்? நீங்கள் கேட்டபடி அவரது தள முகவரி இதோ:

      http://kadugu-agasthian.blogspot.in/2012/02/blog-post_18.html

      நையாண்டியும், நகைச்சுவையும் ததும்பும் எழுத்துக்களை படித்து ரசியுங்கள். அவர்களுக்கு வாழ்த்துச் சொன்னதற்கும், என் வலைத்தள புதிய வடிவத்தை ரசித்துப் பாராட்டியதற்குமாய் என் இதயம் கனிந்த நன்றிகள் உங்களுக்கு!

      Delete
  25. நான் கடுகு சாரின் எழுத்தை ரசித்த வாசகர்களில் நானும் ஒருவன். அப்படி ஒருத்தர் இன்னும் இருந்து விழா கொண்டாடுகிறார் என்பதை உங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன். மிக மகிழ்ச்சி. அகஸ்தியன் சாரை பார்க்கும் அல்லது பேசும் வாய்ப்பு கிடைத்தால் எனது வாழ்த்தையும் அவரிடம் சொல்லுங்கள். அவரது வலைட்தளம் முகவரி இருந்தால் அனுப்பிவைக்கவும்

    ReplyDelete
    Replies
    1. அவரிடம் தங்கள் வாழ்த்தை அவசியம் தெரிவிக்கிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி! அவரது வலைத்தளம்: ‘கடுகு தாளிப்பு’
      http://kadugu-agasthian.blogspot.in/2012/02/blog-post_18.html

      Delete
  26. அருமையான பகிர்தலுக்கு நன்றி.

    கடுகு தம்பதி நெடுங்காலம் மனமகிழ்ச்சியுடன் வாழணும்.

    இனிய வாழ்த்துகளுடன் அன்னாரின் ஆசிகளை வேண்டும்,
    துளசி

    ReplyDelete
    Replies
    1. நம் அனைவருக்கும் அவர்களின் ஆசி உண்டு டீச்சர்! வாழ்த்தியதற்கும், வருகைக்கும் என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!

      Delete
  27. கடுகு சாரின் சதாபிஷேக நிகழ்வில் பங்குபெற்ற மகிழ்வை எங்களுடன் பகிர்ந்து நாங்களும் விழாவில் கலந்துகொண்ட மகிழ்வை அனுபவிக்கச் செய்ததற்கு நன்றி கணேஷ். என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் அத்தம்பதியினருக்கு. வாழ்த்த வயது தேவையில்லையென்று நானும் படித்திருக்கிறேன். இல்லையெனில் பாரதி 'வாழ்க நீ எம்மான்' என்று மகாத்மாவை வாழ்த்தியிருப்பாரா?

    கூட்டத்தில் ஒருவர் மட்டும் அழகாகக் கன்னத்தில் கையூன்றி போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே.... அவர்தானே ஷைலஜா மேடம்? அவருக்கு இடப்பக்கம் ஒரு நாற்காலி தள்ளி நீங்க. சரிதானே?

    பொற்காசுகள் அனுப்பவேண்டிய முகவரி, கீதமஞ்சரி, ஆஸ்திரேலியா.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! என்ன ஒரு உன்னிப்பான கவனிப்பு... சரியான பதில்! அசத்திட்டீங்க கீதா! யாரங்கே... உடனே ஆஸ்திரேலியாவுக்கு ஆயிரம் பொற்காசுகளை அனுப்பி விடுங்கள் அமைச்சரே!

      Delete
  28. சதாபிஷேகம் கண்ட கடுகு ஜயாவுக்கு என் வாழ்த்துக்கள் .அதை பற்றிய பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நன்றிகள் சகோதரரே......

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து என் தளத்தைப் படித்து ஆதரவளித்து வரும் சகோதரிக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

      Delete
  29. 80ம் கல்யாணம் செய்து கொண்ட திரு.பி.எஸ்.ரங்கநாதன் - கமலா ரங்கநாதன் தம்பதிகள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    ஐந்தாவது படத்தில் ஆசிர்வாதம் வாங்க தயாராக நிற்பவர்கள் நீங்களும் ஷைலஜா அக்காவுமா?அல்லது ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருபவர்களா?படங்களுக்கு கீழே விளக்கமும்,பெயர்களும் போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் வாங்க காத்திருப்பது நான். என் உருவம் மறைத்திருப்பது ஷைலஜாக்கா. உங்களின் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் என் இதய நன்றி!

      Delete
  30. ஆச்சாரியன் ஆசியுடன் இன்னும் ஒரு நூறாண்டு இரும் என கடுகு தம்பதியினரை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் நிறைவான வாழ்த்துக்கு என்னுடைய மகிழ்வான நன்றி!

      Delete
  31. என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க அண்ணா(ஆனால், கொஞ்சம் லேட்டாகிடுச்சு)

    ReplyDelete
    Replies
    1. லேட்டானா என்னம்மா... லேட்டஸ்டா உன்னோட வாழ்த்துக்களையும் அவர்ட்ட சேர்த்துடறேன்! நன்றிம்மா!

      Delete
  32. உங்கள் பதிவை படித்தது விழாவில் நேரில் கலந்துக்கொண்ட திருப்தி.

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  33. சதா சிரிப்பை வரவழைக்கும் கடுகு அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சி பார்த்து, படித்து மகிழ்ந்தேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  34. அருமையான பதிவு.
    கடுகு என்ற பெயருக்குள் எத்தனை மகிமை. ஷைலஜாவுக்கு எங்களையெல்லாம் நினைவு இர்க்கிறதா என்று கேட்கவும்:)

    சதாபிஷேகத்தம்பதிகளுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்து வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி! (ஷைலஜாககாவிடம் இப்பவே கேட்டுடறேன்...)

      Delete
  35. வாழ்த்துக்கள் கடுகு சாருக்கு.
    எங்களையும் கலந்து கொண்ட நிறைவு தந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

      Delete
  36. எல்லாரையும் எழுத்து மூலமா சந்தோஷபடுத்தும் நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்! விழாவுக்கு நேர்ல போன மாதிரி இருந்தது.

    குறிப்பு - ஷைலஜாக்கா மைசூர்பா கொண்டு வந்திருந்தாங்களா?? :))

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க தக்குடு! பெங்களூருக்கு வந்தாதான் மைசூர்பான்னு சொல்லிட்டாங்க... அவ்வ்வ்வ்வ! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  37. பொதுவாக சதாபிஷேக விழா போன்றவைகளுக்கு அழைப்பு கிடைக்கவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். நாங்களே விழாவில் நேரில் கலந்துக் கொண்டது போன்ற உணர்வினை அளித்தது உங்கள் பதிவு. எழுத்துலக பிரமுகர்களின் விழாக்கள் என்றாலே நம்மவீட்டு விசேஷமாய் மனம் பூரிக்கின்றது! வாழிய பல்லாண்டு! தொடரட்டும் அவர்களது சேவை! இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க சந்தோஷத்துடன் வாழ்த்தியிருக்கும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!

      Delete
  38. கடுகு சாருக்கு என் பணிவான வணக்கங்கள்.
    மிகவும் அருமையான விஷயத்தினை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்,கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் வழங்கிய தங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  39. கடுகு சாருக்கு எங்கள் நமஸ்காரங்களும். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நமஸ்காரத்தை சேர்ப்பித்து விடுகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  40. வாழ்த்துக்கள் கடுகு சாருக்கு...
    பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி கணேஷ் சார்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து்கள் தெரிவித்த தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  41. சதாபிஷேகத் தம்பதியின் ஆசி பெறுவது மிக விசேஷம்!அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.கடுகு சாருக்கும் அவர் துணைவியாருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். பாக்கியசாலிதான் நான். உங்கள் வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பிக்கிறேன். நன்றி நண்பரே...

      Delete
  42. என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா உஙகள் வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்திடுறேன் செந்தில். மிக்க நன்றி.

      Delete
  43. கடுகு சாருக்கும், அவர் மனைவிக்கும் பணிவான வணக்கங்கள்.
    தொச்சுவை மறக்க முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கமலா-தொச்சு கதைகளுக்கு ரசிகரா? மகிழ்ச்சி. உங்கள் வணக்கங்களை சேர்த்து விடுகிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  44. எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்... அவருடைய ஆயுளும் அவருடைய நகைச்சுவையும் நீண்டு கொண்டேயிருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. என் எண்ணத்தை வார்த்தைகளாக்கி வாழ்த்தியிருக்கும் நண்பர் அன்புமணிக்கு என் இதயபூர்வமான நன்றி.

      Delete
  45. கடுகு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

    அருமைப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய நண்பனுக்கு என் மனமார்‌ந்த நன்றி!

      Delete
  46. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
    Replies
    1. தங்களி்ன் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி தனபாலன் ஸார்!

      Delete
  47. தக்குடுFeb 27, 2012 12:55 AM
    எல்லாரையும் எழுத்து மூலமா சந்தோஷபடுத்தும் நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்! விழாவுக்கு நேர்ல போன மாதிரி இருந்தது.

    குறிப்பு - ஷைலஜாக்கா மைசூர்பா கொண்டு வந்திருந்தாங்களா?? :))

    Reply......

    ஹோய் தக்குடு வாலுத்தனம் இன்னும் போலயா கல்யாணம் ஆகி சமத்தாகிட்டேன்னு நினச்சேன்:):)

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறக்கா... கல்யாணத்துக்கப்புறம்தான் தக்குடுவுக்கு வால் கொஞ்சம் பெரிசாயிருக்கு!

      Delete
  48. வல்லிசிம்ஹன்Feb 26, 2012 11:11 PM
    அருமையான பதிவு.
    கடுகு என்ற பெயருக்குள் எத்தனை மகிமை. ஷைலஜாவுக்கு எங்களையெல்லாம் நினைவு இர்க்கிறதா என்று கேட்கவும்:)

    சதாபிஷேகத்தம்பதிகளுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    Reply>>>>>>>

    அச்சாச்சோ வல்லிமா அன்பை அள்ளித்தரும் உங்களை நினைக்காமல் போவேனா>? சென்னை வெய்யிலில் அதிகம் யாரையும் சந்திக்க முடியவில்லை சேர்த்து வச்சி ஒருதடவை உங்களை அறுக்காம போயிடுவேனா என்ன?:)

    ReplyDelete
    Replies
    1. ஓ! சந்திக்காததாலதான் வல்லிம்மாவுக்கு கோபமா? அதை சாந்தப்படுத்த இன்னொரு விஸிட் வருவீங்கதானேக்கா?

      Delete
  49. ஷைலூ,

    அச்சச்சோ!!!!! கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் சமர்த்தாவாங்களா என்ன??????

    ReplyDelete
  50. Good that you attended it and glad that you shared it here.

    Kadugu saar ungal blog padikkiraaraa? Congrats

    ReplyDelete
  51. Reply
    துளசி கோபால்Feb 28, 2012 06:43 PM
    ஷைலூ,

    அச்சச்சோ!!!!! கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் சமர்த்தாவாங்களா என்ன??????

    Reply<<<<<<<<<ஆஹா இது கேள்வி:) பதில் சொல்ல ஆண் ரெடியா?:)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube