Monday, April 1, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 1

Posted by பால கணேஷ் Monday, April 01, 2013
னவரி மாதம் புத்தகக் கண்காட்சி முடிந்த பின்னர் அலுவலகத்தில் அந்தத் தகவல் சொல்லப்பட்டது. டிசம்பர் மாதம் முழுவதும் பு.கண்காட்சிக்குள் நிறைய ப்ராஜக்ட்களை முடிப்பதற்காக அனைவரும் இரவு பகலாக விடுமுறை எடுக்காமல் பணி செய்ததற்குப் பரிசாக ஒரு உல்லாசப் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று. இருப்பினும் எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையில் மற்ற துறைகளில் இருந்தவர்கள் தங்கள் தங்கள் குழுவுடன் சென்று வந்துவிட, நாங்கள் அதைப் பார்த்து ‘ழே’யென்று விழித்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஒருவருக்கொருவர் ஆர்வமாக அதைப் பற்றிப் பிரஸ்தாபித்து, எப்போது எப்போது என்று ஆர்வக் கேள்விகள் எழுப்பி ஓய்ந்து, சரி... இனி நடந்தா நடக்கட்டும்பா என்று ஓய்ந்திருந்த வேளையில் திடீரென்று அனைவரையும் அழைத்து டூர் ஓகே ஆகிவிட்டது என்றும், வரும் வாரத்திலேயே மூன்று நாள் டூராக கொடைக்கானல் சென்று வரலாம் என்றும் பிரிவுத் தலைவர் அறிவித்தார். ரயில் டிக்கெட்டுகள் புக் பண்ணலாம் என்று பார்த்தால் எல்லாம் ஒரு மாதத்திற்கு ஃபுல் என்றது இணையம். பஸ்ஸில் போவது சரிப்பட்டு வருகிற விஷயமாகத் தெரியவில்லையே... என்ன செய்வது என்றெல்லாம் ஆலோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

சென்னையிலிருந்து மதுரை வரை ஃப்ளைட்டில் சென்று, அங்கிருந்து வேன் வைத்துச் செல்லலாம் என்று நான் சொன்னதற்கு என் சகாக்கள் ஏன் அப்படி முறைத்தார்கள் என்றுதான் சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இப்படி ஆளாளுக்கு யோசனைகள் சொல்லியபின், ஒரு டெம்போ டிராவலர் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலேயே மூன்று தினங்களும் சென்று சுற்றி வரலாம் என்று முடிவானது. வெள்ளி இரவு கிளம்பி சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சுற்றிவிட்டு செவ்வாய் காலை சென்னை வந்து ஊர் சுற்றிய களைப்பு நீங்க ஓய்வெடுத்தபின் புதன் கிழமை வேலைக்கு வந்தால் போதும் என்று முடிவாக சொல்லப்பட்டது புதன்கிழமையன்று. அனைவரும் மகிழ்ச்சியுடன் மீதமிருககும் இரண்டு நாட்களில் பயணத்துக்கு எங்களை தயார்படுத்திக கொண்டோம்.

நான் மட்டும் பயணத்துக்கு தயார்படுத்துவதுடன் பார்க்கிற விஷயங்களை எழுதி உங்களையும் படுத்தலாம் என்று முடிவெடுத்திருந்த காரணத்தால் கூடுதல் மகிழ்வுடன் தயாரானேன். எழுதினால் மட்டும் போதாதே... அங்கங்கே விஷுவலாகப் புகைப்படங்கள் வைக்கா விட்டால் சுவாரஸ்யம் வராதே என்று எண்ணம் எழுந்தது. நான் அதிகம் கேமராவைக் கையாண்டு படங்கள் எடுத்தவனில்லை. எடுத்த ஒன்றிரண்டு சமயங்களிலும் க்ளிக் செய்யும் போது கை ஷேக் ஆனதால் ப்ளர் ஆன படங்களாக அமைய, திட்டுதான் வாங்கியிருக்கிறேன். இருந்தாலும் ஆசை யாரை விட்டது...? உறவினர்கள் ஒவ்வொருவருக்காக போன் செய்ய, ‘என் கேமரா ரிப்பேர்’, ‘என் கேமரா திருட்டுப் போயிடுச்சு’ என்பதான பதில்கள்தான் வந்து ஏமாற்றமடையச் செய்தன.

‘உறவுகள் ஒத்துவராது. நட்புகள்தான் கைகொடுக்கும்’ என்பதை (வழக்கம்போல்) உணர்ந்து நண்பர்களிடம் கேட்கலாம் என்று முடிவு செய்‌ததும் முதலில் நினைவுக்கு வந்தவர் நண்பர் ’தல’, ‘அடையாறு அஜீத்’ என்றெல்லாம் அ‌னைவரும் அன்போடு அழைக்கும் சென்னைப்பித்தன் அவர்கள்! பதிவர் சந்திப்பு உள்ளிட்ட விழாக்களில் அவர் புகைப்படங்கள் சுடு‌வதைக் கண்டதுண்டு. அந்தக் கேமராவையும் வியந்ததுண்டு. அவரிடம் கேட்டதும் ஒரு கணமும் யோசிக்காமல் தயக்கமின்றி, ‘‘வந்து வாங்கிக்கங்க’’ என்றார். மிகமிக மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லி (நம்மளையும் நம்பிட்டாரேய்யா...) கேமராவை பெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானேன். நாமல்லாம் ராமலக்ஷ்மி மேடம் அளவுக்கு சூப்பரா எடுக்காட்டியும், ஏதோ சுமாராவாவது எடுத்துரலாம்னு மனசுல நம்பிககையிருந்தது. இங்க நீங்க இனி பார்க்கப்போற படங்கள் 90 சதவீதம் நாஆஆஆனே சுட்டவை. அவை நன்றாக வ்நதிருக்கின்றன என்பதில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. அதற்குக் காரணமான நண்பர் சென்னைப்பித்தனுக்கு இங்கு மீண்டும் ஒரு முறை மனம் நிறைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மலைகளின் இளவரசி’யிலிருந்து நான் சிறைபிடித்த இயற்கை எழில்!

வெள்ளி மாலை வேன் வந்ததும் அனைவரும் ஏறி அவரவர் இடத்தைப் பிடித்தோம். வேன் ஓட்டுனர் இளைஞராக இருந்தது மற்றொரு பெரும் ஆறுதல். அதனால் அவர் வேனிலிருந்த டிவியில் படம் போட்டுப் பார்க்க வைத்ததுடன் பகல் நேரங்களில் டிவிடியில் அவர் வைத்திருந்த MP3 பாட்டுக்களின் கலெக்ஷனையும் போட்டு பயணத்தை .உற்சாகமாக வைத்திருக்கப் பெருமளவு உதவினார். (அவர் படம் போட்டதால் வந்த உபத்திரவம் கீழே..) நான் வேலை பார்க்கும் பிரிவில் தலைவர் மற்றும் மேல்நிலை,  கீழ்நிலை எல்லாருமாகச் சேர்த்து புறப்பட்டவர்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். இந்த வித்தியாசமெல்லாம் கிளம்பும் முன் வரைதான். அந்த மூன்று தினங்களும் அனைவரும் ஒரே நிலையில் நண்பர்களாக மட்டுமே இருந்தது மிகமிக வித்தியாசமான அனுபவம்.

வேனில் தலைவர் மற்றும் ஒருவர் தவிர அனைவரும் ஏறிட அலுவலகத்திலிருந்து பெப்ஸிகலமாகப் (எப்பவும் கோலாகலம்னுதான் சொல்லணுமா?) புறப்பட்டோம். தலைவர் + மற்றொருவரை கிண்டியில் பிக்கப் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். கிண்டியில் அவர்கள் ஏறியபோது கூடவே இரண்டு அட்டைப்பெட்டிகள் வந்தன. அட்டைப் பெட்டிகளில் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சூடான(டேற்றும்) பானங்கள் இருந்தன. அவரவர் தங்களுக்குப் பிரியமானதை எடுத்துக் கொண்டு உறிஞ்ச ஆரம்பிக்க, ஸ்பீக்கர்களில் பாடல்கள் ஒலிக்க, உற்சாகக் கூச்சல்களுடன் பயணம் இனிதே துவங்கியது. மாலை ஆறரை மணிக்குத் துவங்கிய பயணத்தில் இரவு உணவு முடிந்தபின், ஆரம்ப ஆர்ப்பாட்டக் கூச்சல்கள் ஓய்ந்த வேளையில், ‘‘படம் போடச் சொல்லுப்பா பாக்கலாம்’’ என்றார் தலைவர். வேனை ஓட்டியபடியே ஓட்டுனர் டிவிடியைப் போட, ஓடத் துவங்கியது ‘ஆதிபகவன்’ திரைப்படம். ஐயோ, மறுபடியுமா? அதிர்ச்சியில் மயக்கமானேன் நான்.

இடையில் கண் விழித்தபோது ‘அட, அதுக்குள்ள விழுப்புரமா?’ மீண்டும் கண்ணயர்ந்து, விழிக்க, ‘அட, திருச்சிகிட்ட வந்தாச்சா?’ (நல்ல ஸ்பீட் ஓட்டுனர்) இப்படி பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாகப் பயணம் தொடர, அதிகாலை நல்ல உறக்கத்திற்குப் போய் மீண்டும் கண் விழித்தபோது காலை மணி ஐந்து. அப்போது வேன் ‘மலைகளின் இளவரசி’யின் அடிவாரத்தைத் தொட்டு அவள் மடியில் தவழ்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. 

அதிகாலை ஐந்தே முக்கால் மணிக்கு வெள்ளி அருவியை வேன் அடைய,  எங்களி்ன் சுற்றுப் பயணத்தின் முதல் ரசிப்பிடம் வந்தது. அன்றைய இரவு எனக்காகக் காத்திருந்த அதிர்ச்சியை சற்றும் அறியாதவனாய் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் குரலெழுப்பியபடி வெள்ளி அருவியை ரசிப்பதற்காக வேனை விட்டு இறங்கினேன் நான்.
                                                                                                                          -தொடர்கிறேன்..!

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : இருபதாண்டுகளுக்குப் பின்..1

76 comments:

  1. நீங்கள் மயக்கமானதற்கு ஆதிபகவன் காரணம் அல்ல உங்கள் வண்டியில் இருந்த சூடான பானங்களின் வாசனையால் வந்த மயக்கமா இருக்க்கும். யார் அது இந்த அப்பாவி வரும் வண்டியில் சூடான பானங்களை ஏற்றியது

    ReplyDelete
    Replies
    1. குழுத் தலைவரின் வேலை அது. நீங்க சொன்ன மாதிரி வந்த மயக்கமா இருந்தாலும் ஆதிபகவன் அதை சீக்கிரமா வினைபுரியத் தூண்டிருச்சு. ஹி... ஹி... இந்தத் தொடரின் முதல் வருகையாளராக வந்து உற்சாகம் தந்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி நண்பா!

      Delete
  2. சுற்றுலாவுக்காக காரில் போகும் போது தூங்கப்டாது, ஆனால் ஆதிபகவன் பார்த்தால் மலையில் இருந்து குதிக்க தோணி இருக்குமே அண்ணே ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. நான் பின் வரிசைல இருந்ததால தூங்கலாம். அடு்த்த நாள் முன் வரி‌சைல டிரைவருக்கு கம்பெனி குடுத்ததால தூங்கல மனோ. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  3. வழக்கம்போல் அருமையான தொடக்கம். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருவதாகக் கூறி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  4. அருமையான துவக்கம். "பெப்சிகலமான" அர்த்தம் புதுமை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல துவக்கம் என்று கூறி மகிழ்வு தந்த ஸ்கூல் பையனுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  5. நல்ல பயணப்பகிர்வு/வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாத்து நாளாச்சு விமலன். நலம்தானே... இதை ரசித்து, என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete

  6. ஆரம்பமே உற்சாகம் தருகிறது! தொடருங்கள் தொடர்வேன்!

    ReplyDelete
    Replies
    1. தெம்பூட்டும் வார்த்தைகளால் ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஐயா!

      Delete
  7. ஒரு திகில் தொடர் போல முடிச்சிருக்கீங்க.. உங்க எழுத்துக்கு முன்னாடி படங்களின் தேவை மிக குறைவு..

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்கள்ல படம் தேவைப்படும் நண்பா. ஆனாலும் உங்கள் வார்த்தைகள் கோடையில மனசுக்கு ஜில்லுன்னு இருக்குது. மிக்க நன்றி!

      Delete
  8. கொடைக்கானல் பார்த்து வருடங்களாகி விட்டன! அந்தக் குறை தீர அட்டகாசமான ஆரம்பத்துடன் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் படுத்தலாம் என்று முடிவெடுத்திருந்த காரணத்தால்

      அண்ணா நீங்க இப்படி எங்களையெல்லாம் படுத்தினா தொடர்ந்து பயணக்கட்டுரைகள் எழுதச்சொல்லிஉங்களை நாங்கல்லாம் படுத்தி எடுத்துய்டுவோமே பரவால்லியா?

      Delete
    2. உடன் வரும் உங்களுக்கு மனம் நிறைய நன்றி மனோம்மா!

      தளிர்...! நீங்க எவ்வளவு படுத்தினாலும் எனக்கு சந்தோஷம் தான்ம்மா!

      Delete
  9. பகல் நேரங்களில் டிவிடியில் அவர் வைத்திருந்த MP3 பாட்டுக்களின் கலெக்ஷனையும் போட்டு பயணத்தை .உற்சாகமாக வைத்திருக்கப் பெருமளவு உதவினார்.

    இந்தமாதிரி பயணங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே எவ்வளவு தூரம் பயணித்தாலும் அலுக்கவே அலுக்காதுதான். சுகமானபயணமாக இருந்திருக்குமே?

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பாட்டுகளுடன் சேர்ந்து நாங்களும் பாடி, கைதட்டி, கூச்சலிட்டு... அப்பப்பா! ஜாலிலோ ஜிம்கானா தான் தளிர்! மிக சுகமான பயணமாக அமைந்தது!

      Delete
  10. நான் வேலை பார்க்கும் பிரிவில் தலைவர் மற்றும் மேல்நிலை, கீழ்நிலை எல்லாருமாகச் சேர்த்து புறப்பட்டவர்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். இந்த வித்தியாசமெல்லாம் கிளம்பும் முன் வரைதான். அந்த மூன்று தினங்களும் அனைவரும் ஒரே நிலையில் நண்பர்களாக மட்டுமே இருந்தது மிகமிக வித்தியாசமான அனுபவம்.

    ஆமா நீங்க சொல்வது உண்மைதான் இது போல பயணங்களில் எல்லாருமே சமமானவர்களாக ஃபீல் பண்ண முடியும் தான்

    ReplyDelete
    Replies
    1. பயணம் முடிந்து திரும்பியதும் இந்த நெருக்கத்தால் முன்பைவிட புரிதலுடன் வேலை செய்ய முடிகிறது தளிர்! அதற்காகவே இதுபோன்ற பயணங்கள் அவசியம் தாம்மா!

      Delete
  11. பெப்ஸிகலமாகப் (எப்பவும் கோலாகலம்னுதான் சொல்லணுமா?)

    இந்த குறும்புத்தனமான எழுத்துக்கள்தான் உங்க பயணக்கட்டுரையின் +பாயிண்ட். அண்ணா.ரொம்பவே ரசனையான மனசுக்காரர் நீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தங்கையே...! அடிப்படையில் அமைந்த அந்த ரசனை மனதுதான் நான் பல பெரும் துன்பங்களை அனுபவித்தபோதும் கடந்துவர உதவியது. குறும்புத்தனத்தை ரசித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  12. நான் ஆவலுடன் காத்திருந்த கொடை பயணக்கட்டுரை
    இதோ படத்திற்கு முன்னே பின்னே என அற்புதமாய்
    ஜொலிக்கிறதே. இரவு அதிர்ச்சி - மோகினிப் பிசாசு ?

    ReplyDelete
    Replies
    1. ஸாரி... நியாயமாக மாலை அதிர்‌ச்சி என்று நான் எழுதியிருக்க வேண்டும். இரவு என்றதால் இப்படி ஒரு கற்பனை உங்களுக்கு வந்திடு்ச்சு போல... இது அது அல்ல! உண்மையில் என்னால் பயண அனுபவத்தைச் சொல்வது சாத்தியமா என்று தயங்கியபோது, என்னை ஊக்குவித்து எழுத தைரியம் தந்தது உங்களின் ஆதரவுதான்! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. ஆதிபகவன்’ திரைப்படம். ஐயோ, மறுபடியுமா? அதிர்ச்சியில் மயக்கமானேன் நான்.

    அப்படி அந்தப்படத்தில் என்ன இருந்துச்சி?

    ReplyDelete
    Replies
    1. சிலருக்கு அந்தப் படம் பிடிச்சிருந்துச்சு தளிர்! ஆனா எனககு சுத்தமாப் பிடிக்கலை. ஒரு தரம் பாத்தப்பவே ரொம்ப கஷ்டப்பட்டேன். படம் ‌எப்படா முடியுமு்ன்னு தோணிடுச்சு. அதைப் போய் மறுபடி பாக்கணும்னு நினைச்சாலே.... நான் மயக்கமானதுல என்ன ஆச்சரியம் தளிர்!

      Delete
  14. //என் சகாக்கள் ஏன் அப்படி முறைத்தார்கள் என்றுதான் சத்தியமாக எனக்குப் புரியவில்லை.// ஹா ஹா ஹா இதுவே நானாக இருந்திருந்தால் உடனே ஒத்துக் கொண்டிருப்பேன்...

    ஹா ஹா ஹா இன்பச் சுற்றுல்லாவையும் திகிலா மாதப் போறீங்களா.. சபாஷ்.. ஆதி பகவன் சினிமா விமர்சனம் எழுதாதை வன்மையாகக் கண்டிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. திகில் எதுவும் இல்ல சீனு. எனக்கு ஒரு சின்ன ஷாக் தந்த நிகழ்வு. அவ்வளவுதான். ஆதிபகவனா..? வேணாம், விட்ருய்யா! அடுத்து நாங்க பரதேசி படம் பாத்ததைப் பத்தி சொல்றப்ப அதோட விமர்சனத்தை எழுதிடறேன் சரியா? மிக்க நன்றி!

      Delete
  15. அன்றைய இரவு எனக்காகக் காத்திருந்த அதிர்ச்சியை சற்றும் அறியாதவனாய் //சாட்சாத் ராஜேஷ்குமாரின் ரசிகர்,நண்பர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.சிக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்க.அப்புறம் ஸ்மால் டவுட்டு.இப்படி எல்லாம் பயணத்தை சுவாரஸ்யமாக விவரித்து விட்டு படங்கள்ளாம் காட்டிவிட்டு கடைசியா ஹி ஹி..இதெல்லாம் என் சொந்த கற்பனை என்று எங்களை கவுத்துட மாட்டீர்கள்தானே?

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ...! என்ன சிஸ்டர் இப்படி சந்தேகப்படறீங்க? நிசம்மா போய் வந்த டூர்தான் இது. அப்டில்லாம் எதுவும் சொல்லி ஏமாத்திர மாட்டேன்மா. தொடரின் துவக்கத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. சரியான இடத்துல தொடரும் போட்டுட்டீங்க..

    ஆமா,.. நிஜமா பயணம் போனீங்கதானே?. ஏப்ரல் ஒண்ணாம் தேதிக்கான ஸ்பெஷல் இடுகையோன்னு யோசிக்க வேண்டியிருக்கு :-))))

    ReplyDelete
    Replies
    1. சாரல் மேடம்....! நீங்களுமா? போன முறை விளையாட்டா நான் பண்ணது இப்ப வீணையா... ச்சே, வினையாய்டுச்சு போலருக்கே...! நிச்சயம் ஏமாற்றுதல் எதுவும் இல்லைங்க... ரியலாப் போய் வந்த பயணத்தை ரியலாத் தர்றேங்க. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  18. Replies
    1. பாத்து நாளாச்சு மாதவி மேடம்..! நலம்தானே! சுருக்கமான வரிகளில் நீங்கள் ரசிச்சதை தெரிவிச்சு எனக்கு உற்சாகம் தந்துட்டீங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  19. //அன்றைய இரவு எனக்காகக் காத்திருந்த அதிர்ச்சியை சற்றும் அறியாதவனாய் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் குரலெழுப்பியபடி வெள்ளி அருவியை ரசிப்பதற்காக வேனை விட்டு இறங்கினேன் நான்.// என்னங்க இது திக்குனு ஒரு செய்தியை சொல்லி தொடரும்னு போட்டுட்டிங்க.. சீக்கிரமா சொல்லுங்க சஸ்பென்ஸ் தாங்கலை!

    ReplyDelete
    Replies
    1. ‘அன்று மாலை’ என்று திருத்தி வாசிக்கவும், ப்ளீஸ்! சீக்கீரமாவே தொடர்ந்திடறேன் தோழி. ரசித்துப் படி்த்து எனக்கு குளூக்கோஸ் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. கொடைக்கானல்... அப்படின்னு சொன்னதுமே
    தேனிலவு தான் நினைவுக்கு வருகிறது நண்பரே....
    தொடருங்கள் தொடர்ந்து வருகிறேன்...
    இங்கே அடிக்கிற வெயிலுக்கு சும்மா சில்லுனு இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வருகிறேன் என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. ரசிக்க வைக்கும் ஆரம்பம்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  22. ARAMBAME ASATHHAL !!! THODARUNGAL KATHIRUKKIREN SORRY KATHIRUKIROM

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் கருத்துக்கு என் மனம் நிறைய நன்றி மோகன்!

      Delete
  23. ஆக சுட கத்துகிட்டீங்க போல..(போட்டோ எடுக்க) அருமையான பயண அனுபவம் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ தேர்ற அளவுக்கு சுடக் கத்துக்கிட்டேம்மா. நல்லான்னு சொல்ல முடியாது. அனுபத்தை ரசித்த தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  24. திரு சென்னைப்பித்தன் அவர்களின் கேமிராவில் எடுத்த புகைப்படம் மிக நன்றாக இருக்கிறது. :)))))
    மற்றவர்கள் முன்னாலேயே மலை ஏறிவிட்டார்கள் போல! நீங்கள் இனிமேல்தானா!

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா... ஆமாம் ஸ்ரீராம். இனிதான். படத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. கொடைக்கானல் சுற்றுலா உங்கள் எழுத்தில் வலம் வருகிறது நாங்களும் உங்கள் எண்ணம் பற்றி சுற்றி பார்க்கிறோம்

    பெப்ஸிகலமாக

    இங்கே தான் இருக்கு உங்க எழுத்து சுவை

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து, ரசித்ததை உரைத்து உற்சாகம் தந்திட்ட நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  26. அண்ணன்னா ...! எரோபிளான் பதிவில், எழுத்தில் டபுள் செஞ்சுரி அடித்திருந்தீர்கள்.. இந்தமுறை ட்ரிபிள் செஞ்சுரியை எதிர்பார்க்கிறேன்.

    டெம்போ ட்ராவலரில் தானே போறம்னு , செஞ்சுரியோட நிறுத்திடாதிங்க.தாங்காது எங்க மனஸ்.

    இந்த பதிவை , பஸ்ட் ஓவரில் விக்கெட்டை சோதிக்கும் பேட்ஸ்மேனாக நினைத்து , அடுத்தடுத்த நகைச்சுவை பவுண்டரிகளுக்கு காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன் .

    (யே மனஸ் ... கொஞ்சம் பினாத்தாம இருப்பா , அண்ணேன் நிச்சயமா கலக்கிடுவாருப்பா..! )

    ReplyDelete
    Replies
    1. தம்பி... பயணக் கட்டுரையில் நகைச்சுவையை லேசாகத் தெளிக்கலாமே தவிர, அதிகம் சேர்ததால் சு‌வை தராது. அதனால் இதில் மெல்லிய நகைச்சுவை கோட்டிங் மட்டுமே இருக்கும். உங்கள் விருப்பத்திற்காக வரும் வாரம் ஒரு ட்ரீபிள் செஞ்சுரி நகைச்சுவை பதிவு எழுதி வெளியிட்டுடறேன். சரிதானே...! அதுசரி... இந்த மனஸ் உங்களையும் படுத்த ஆரம்பிடு்சா..? ஹி... ஹி... என்மேல் அளவற்ற நம்பிக்கை வைத்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  27. வாவ்..... சுவாரசியமா ஆரம்பிச்சு சூடேறிடுச்சு பயணத்தில். தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. பயண அனுபவங்களை விவரிப்பதில் நீங்கள் எனக்கு முன்னோடியாயிற்றே வெங்கட்! நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  28. போன வாரம் போய்ட்டு வந்து இப்பத்தானா எழுதுரீங்க? சரி நடத்துங்க! பயணக் கட்டுரை கூட கத மாதிரியே உங்களோட வழக்கமான ஸ்டைல்ல இருக்கரது சிறப்போ சிறப்பு! ஆவளுடன் அடுத்த பகுதியை எதிர்பாக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படங்கள் சரியா வரணுமேன்னுதான் கொஞ்சம் வெயி்ட்டிங் சுடர்! தவிர எப்படி எழுதறது, எதைச் சொல்றதுன்னு ப்ளான் பண்ணிட்டு வரவும் லேட்டாயிடுச்சு. கதை மாதிரியே இதுவும் இருக்குன்னு நீங்க பாராட்டினது எனக்கு இன்னும் பல யானை பலம்! மிக்க நன்றிம்மா!

      Delete
  29. சூப்பரு, படங்கள் கம்மியாவும் நிகழ்வுகள் குறித்து விரிவாகவும் எழுதுங்க என்ற நம்பிக்கையுடன்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் அப்படித்தான் எழுதுவேன். இந்த முறை படங்கள் அதிகமா மேட்டர் குறைவாத் தரலாம்னு மனசுல நினைச்சிருந்தேன். நீங்க இப்பூடிச் சொல்லிப்புட்டீ்ங்களே நண்பா... உங்கள் விருப்பத்தை மதித்து படங்களைக் கொஞ்சம் குறைத்து விஷய கனத்தை சற்றுக் கூட்ட முயல்கிறேன் வரும் பகுதிகளில்! சூப்பரு என்ற உங்களின் வார்த்தை தந்தது எனக்கு அளப்பரிய தெம்பை! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  30. அன்றைய இரவு எனக்காகக் காத்திருந்த அதிர்ச்சியை சற்றும் அறியாதவனாய் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் குரலெழுப்பியபடி வெள்ளி அருவியை ரசிப்பதற்காக வேனை விட்டு இறங்கினேன் நான்.///

    சார்... அனுபவமா? இல்ல... தொடர் கதையா?

    சுவாரஸ்யமா இருக்கு...

    நம்ம ஊருக்கு பக்கத்துல வந்துட்டு ஒரு போன் போட்டிருக்காம்ல?

    ReplyDelete
    Replies
    1. அனுபவம்தான் பிரகாஷ். தொடர்கதை மாதிரி சுவாரஸ்யமாகத் தர ஆசை. அங்கருந்து திரும்பும் போது உங்களுக்கும் DDக்கும் போன் போட்டு சந்திக்க விரும்பினேன். குழுவாப் போனதால சூழ்நிலை அனுமதிக்கலை. ஸாரி! ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  31. I know pretty well what was the shocking incident - It must be silver stream has become silver plain - velli odai villi medai yaga irundhirukum.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அதில்லை... நான் மாலையில் என்றுதானே சொன்னேன். வெள்ளி ஓடையில் தண்ணீர் வரத்து இருந்தது மோகன். மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மனம் நிறைய நன்றி!

      Delete
  32. //ஆறரை மணிக்குத் துவங்கிய பயணத்தில் இரவு உணவு முடிந்தபின்,..// இதை விவரிக்காமல் ஒரு பயணக் குறிப்பா! மணியன் முதல் எல்லா சுற்றுலாவாசிகளும் மறக்காமல் எழுதுவது நம் நாட்டு / வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கியதையோ அல்லது நல்ல ஐட்டத்தை வெளுத்துக் கட்டியது பற்றியோ விவரமாக இருக்கும்! ம்ம்ம், முதல் படமே டாப்! மற்றவற்றை பார்ப்போம்! - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. நானும் மணியன், லேனா டுமீல்வாணன், ஸாரி... லேனா தமிழ்வாணன் பயணக் கட்டுரைல்லாம் படிச்சதுண்டு ஜெ. அந்த இரவு உணவைப் பத்தி குறிப்பிடாததுக்குக் காரணம், வெள்ளி அருவியைப் பார்த்தபின் நாங்கள் காலை டிபன் சாப்பிடும்போது உங்களுக்குத் தெரிய வரும். தவிர... அவங்கல்லாம் வெளிநாட்டுக்கு போனதால உணவுக்கு ஏங்கி வெளுத்துக் கட்டினத‌ை எழுதலாம். நான் எழுதினா என்னை வெளுத்துக் கட்டிடுவாங்களோன்ற பயம்தான். ஹி.. ஹி...! மிக்க நன்றி!

      Delete
  33. அஹா தலைப்பே அசத்தலா இருக்கே!! நல்ல என்ஜாய் பண்ணீங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா... மூணு நாளும் உங்கூட்டு ஜாய், எங்கூட்டு ஜாய் இல்ல.. செமத்தியா என்ஜாய் பண்ணோம்! என்கூடவே வந்து தெரிஞ்சுக்குவதானே...? மிக்க நன்றி!

      Delete
  34. சூப்பர் கணேஷ்! அதென்ன பிரபல எழுத்தாளர் பாணில முக்கியமான இடத்துல தொடரும் ம்?:)

    ReplyDelete
    Replies
    1. ஹி.... ஹி... அடுத்த பகுதியையும் படிக்க ஒரு சின்ன பெப் குடுத்தா தானே ஆவல் இருக்கும்? அதான்க்கா அப்படி..! தவறாம வந்துடுங்க. மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  35. கொடைக்கானல் ’பிராந்தி’யத்தில் சிலருக்கு’ரம்’மியமான பயணம் போலிருக்கிறது!
    பயண அனுபவத்தை ஒரு சிறுகதை போல் அழகுறச் சொல்ல உங்களால் மட்டுமே முடியும்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... குட்டன் ஸ்பெஷல் வார்த்தைகளி்ல் வரும் ரம்மியமான இந்தக் கருத்துக்காகத்தான் பிஸ்கெட்டுக்கு ஏங்கும் குழந்தை மாதிரி உரிமையா சண்டை போட்டேன்! லயிச்சுப் படி்ச்சேன்னு சொல்லி என்னை மகிழ்வில் துள்ள வைத்த உங்களுக்கு மிக்க நன்றிப்பா!

      Delete
  36. பெப்சிக்கலமாக ஆரம்பம் சுவையாக இருக்கிறது. இனிதாகப் டெம்போ ட்ரேவலரில் சுகமான பயணம் போய்க் கொண்டிருக்கும்போது அதென்ன சடன் ப்ரேக் மாதிரி ஒரு சஸ்பென்ஸ்?

    ம்ம்ம்... அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

    பயணத்தில் உடன் வருகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. பயணத்தின் உடன் வருகிறேன் என்று சொல்லி மகிழ்வூட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா!

      Delete
  37. சுப்பர் படம், பயண விவரம் போல. அருமை. தொடர்வேன்
    வாழ்த்து.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஹை! சூப்பர் படம் என்ற உங்கள் வார்த்தை மகிழ்வில் துள்ள வைக்கிறது என்னை. தொடரும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி வேதாம்மா!

      Delete
  38. புகைப்படம் நன்றாக உள்ளது. என்ன அதிர்ச்சியோ! அடுத்த பகுதியை படித்து தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube