Wednesday, March 27, 2013

ஆனானப்பட்ட கணேஷ்! (சிறுகதை)

Posted by பால கணேஷ் Wednesday, March 27, 2013
ல்லூரியின் இரண்டாமாண்டு துவங்கிய இரண்டாம் நாள்!  "மச்சி என்ன பிகருடா அவ... அவள டாவடிக்கிற நம்ம தினேஷ் மெய்யாலுமே கொடுத்து வச்சவன்டா, பொறந்தா அவன மாதிரி கன்னிராசிக்காரனா பொறக்கனும் " கிளாஸ் வாசல்ல நின்னு எவனையோ கடல போட வச்சிட்டு இருந்த ரேவதியப் பார்த்து ஜொள்ளிட்டு இருந்தான் நந்தா. அந்த மன்மதனே பார்த்தாலும் ஜொள்ளுமளவுக்கு ரேவதியாகபட்டவள் சூப்பர் பிகர்களையே பொறமை கொள்ளச் செய்யும் சூப்பர் பிகர்!

கிளாசுக்கு வெளியே ஆரம்பித்த கடலை வாசம் அறை முழுவதையும்  நிறைத்திருக்க, அது யாரை கடுப்பேற்றியதோ இல்லையோ, எங்கள் வாத்தியார் கிறிஸ்டோபரை அதிகமாய் வெறி ஏற்றி இருந்தது.   வகுப்பறையில் இருந்த ஒவ்வொருவரும் ரேவதியுடன் ஏதோ ஒரு பாரின் லொக்கேசனில் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், நான் மட்டும் ரேவதியை ஒருவித வெறுப்பு கலந்த உணர்வுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த தினேசையும் மணியையும் பார்த்தேன், ஞாயிறு மதியத்தில் சரவணபவனில் காலி டேபிளைப் பிடித்து விட்டவர்கள் மாதிரி என்னைப் பார்த்து அகலமாகச் சிரித்து என் கடுப்பை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
 
நான் கணேஷ்! கணேஷாகப் பிறந்த மற்றவர்களுக்கும் எனக்கும் சிறிதாவது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, என் தாத்தாவும் அவரின் புத்திரனும் எனக்கு வைத்த பெயர் பாலகணேஷ். இருந்தும் அனைவரும் வித்தியாசமே இல்லாமல் "கணேஷ்", "கணேஷ்" என்று விளித்துத் தொலைப்பதால் "உள்ளேன் அய்யா" சொல்லும் பொழுது மட்டும் என் பெயர் பால கணேஷ், நேரம் போகாமல் எதையாவது கிறுக்கித்தள்ளும் பொழுது ஒரு சிறுவித்தியாசத்திற்காக ‘பா கணேஷ்’, மற்ற நேரங்களில் கணேஷ்.  என்னைய நீங்க பார்த்திருப்பீங்களான்னு தெரியாது, ஆனா என்னைப் போல் ஒருவரையாவது நிச்சயம் பார்த்திருக்கலாம், உடனே சென்று கண்ணாடியில் ஒருமுறை உங்களை உருப்படியாய்ப் பாருங்கள், நீங்கள் என்னைப் போல் இருப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது. நான் வளர வேண்டிய வயதில் காம்ப்ளான் தன் பணியை செய்ய மறந்ததால் என் உயரம் ஐந்தே கால் அடி, சமீபத்தில் எடை பார்த்த பொழுது 55கி. கண்ணாடி போட்டிருப்பேன், எப்போதும் கட்டம் போட்ட மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, எப்பொழுதாவது பூ போட்ட சட்டை. இப்படி எல்லாம் என்னுருவக் குறியீடுகளைச் சொல்வதால் எனக்கு வயதொன்றும் 55 இல்லை. சொன்னால் நம்ப மாட்டீங்க... இரண்டாமாண்டு கல்லூரி மாணவன் நான். என்ன... என்ன சிரிப்பு? என்னைக் கல்லூரி மாணவனாக நினைத்துப் பார்க்க உங்கள் கற்பனை இடம்தர மறந்தால் பிழை என் மீது இல்லை, சூடம் அடித்துச் சத்தியம் செய்வேன்- பிழை உங்கள் கற்பனையில் தான் என்று!

"டேய் கணேஷ்! ஏண்டா அவள பாத்து இப்டி மொறைக்கற? ஒரு பிகர எப்டி சைட் அடிக்கணும்னு கூட தெரியாத பயடா நீ"  இந்த மாதிரி பன்ச் டயலாக்லாம் நந்தா சொல்லி நான் கேக்கணும்ன்னு என்னோட தலையெழுத்து. காரணம், நானாவது சைட் அடிக்கறதுக்காக கிளாஸ் வாசல் வரைக்கும் போவேன். ஆனா இவனோ... முன்னாடி ஒரு சூப்பர் பிகர் வந்து நின்னாக்கூட "ஹலோ, கொஞ்சம் தள்ளி நில்லுங்க போர்ட் மறைக்குது, நோட்ஸ் எடுக்கணும்"ன்னு சொல்லி வெறுப்பேத்துற பய, அதனால தான் கடியாகுது மை லார்ட். இன்னும் நான் அவள வச்ச கண் வாங்காம வெறி கொண்டு மொறச்சு பார்த்துட்டுதான் இருந்தேன்.

"டேய் சொல்லுடா, ஏன்டா தினேஷ்கூட பாலா படத்தை மூணு ஷோவும் தொடர்ந்து பாத்த மாதிரி சீரியஸா இருக்குறான்? அதுசரி... தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தானே?", நந்தா கொஞ்சம் சத்தமாவே கேட்டுட்டான், நல்லவேளை... எல்லாரும் ரேவதிய சைட் அடிக்கிறதுல பிசியா இருக்கறதால, யார் காதுலையும் விழுந்த்ருக்காது. ஏன்னா "தினேஷும் ரேவதியும் இன்னும் லவ் பண்ணறாங்க தான?" அப்டிங்கற கொஸ்டின்ல தான் இந்தக் கதையோட ட்விஸ்டே இருக்கு! (சீரியஸா ட்விஸ்ட்லாம் வெப்போம்ல கதையில- கொஞ்சம் அசட்டுத்தனம் தூக்கலா இருந்தாலும்!)

அதுக்காக நீங்க சீரியஸ் ஆகாதீங்க. இந்தக் கதையில நம்ம வாத்தியார் கிறிஸ்டோபர் தவிர மத்த எல்லாருக்கும் காமெடி ரோல் தான். ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல்- நம்ம பவர்ஸ்டார் மாதிரி... ஹி... ஹி...! அப்போ கிறிஸ்டோபர்க்கு என்ன ரோல்ன்னு கேக்கறீங்களா? இதோ என் தலையில சாக்பீச தூக்கி எறியப்போற இந்த ஆளுக்கு வில்லன் ரோல் கொடுக்காம வேற என்ன ரோல் கொடுக்கிறதாம்? வாத்தி கிறிஸ்டோபர், என்னோட நெத்திக்கு குறிபார்த்து எரிஞ்ச சாக்பீஸ் பத்துநாள் பட்டினியாக் கிடந்த நாய் ப்ரெட்டைப் பாத்ததும் பாயற மாதிரி குறி பிசகாம சுர்ருன்னு என் நெத்தியில வெள்ளைத் திலகமிட்டு நொடி நேர வலி கொடுத்துட்டு கீழ விழுந்தது. நான் கேப்டன் மாதிரி கண்கள் சிவக்க வீராவேசத்தோட எந்திரிச்சு அவரப் பார்த்தேன். நான் அடிபட்ட காட்சியப் பார்த்து மொத்த கிளாஸும் விழுந்து விழுந்து சிரிக்குது, போதாக்குறைக்கு வெளியில வேற சூப்பர் பிகர்! இந்தாளு கண்டிப்பா எதோ பெரிய டயலாக் விடப் போறாருன்னு மட்டும் என்னோட மனசு சொல்லுச்சு... ஆமா, நா எதிர்பார்த்தது சரிதான்.

"டேய் கணேஷ், ஒரு பொம்பளப் புள்ளையப் போயி சைட் அடிக்கிறியே வெக்கமா இல்ல உனக்கு?"ன்னாரு கிறிஸ்! எங்களால எத வேணா அடக்க முடியும் ஆனா சிரிப்பை மட்டும்... ம்ம்ஹும், முடியவே முடியாது! மணி கொஞ்சம் சத்தமாவே சிரிச்சிட்டான், அவன் கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டேன், மெதுவா எனக்கு கேக்குற மாதிரி சொன்னான், " சரியான லூசுப்பயடா, பொம்பளப் புள்ளைய சைட் அடிக்காம பக்கத்துல இருக்குற அவனையா சைட் அடிப்பாய்ங்க...!"

இந்தாளு இப்படி எதாவது பேசாட்டா தான் அதிசயம். பேச்சுல கொஞ்சம் பெண்மை இருக்கும், அசைவுகள்ள கொஞ்சம் அபிநயம் இருக்கும், அறச்சீற்றம் வரும் போது மட்டும் பெண்மையும் மென்மையும் கலந்த ‘வரலாறா’ இருப்பாரு. ஆனாலும் வாத்தி கொஞ்சம் ரப் டைப்பாமாம்...! அவரே சொல்லிக்குவாரு அப்படி! காலேஜ்ல வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆவுது... அதுக்குள்ள ரெண்டாயிரம் பட்டப் பேரு வாங்கின அபூர்வ சிகாமணி! நமக்கு இப்போ முக்கியம் கிறிஸ் இல்ல, தினேஷும் ரேவதியும், அவங்களோட லவ்வும் தான், அதத் தெரிஞ்சிக்க ஒரு செமஸ்டர் ரிவேர்ஸ்ல போயே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். வாங்க, போகலாம்...!

எல்லாப் பசங்களும் தனக்குன்னு ஒரு பிகர கரெக்ட் பண்ணகூடிய வசந்த காலம் தான் செகண்ட் செமஸ்டர்.  மதியஉணவுக்குப் பின் வகுப்பறையின் வெளியில் அமர்ந்து இயற்கையை(!) ரசித்துக் கொண்டிருந்த நேரம்,  எங்களைக் கடந்தவள் தான் அழகு தேவதை ரேவதி. "யாருடா அவ, இத்தன நாளு நம்ம கண்ணுல படாம போயிட்டா", அவளைப் பார்த்ததும் தினேஷ் சற்றே சுறுசுறுப்படைந்தான் புள்ளிமானைக் கண்ட வேடன் போல் என்பது அனைவரும் படித்து சலித்துப் போன டயலாக் என்பதால் ரேவதியைக் கண்ட தினேஷைப் போல அவளைப் பின் தொடர ஆரம்பித்தான். நண்பனைத் தொடரும் நிழலாக மணியும் அவனுடன் சேர நானோ "இவிங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லடா, ஆவூன்னா ஃபிகரு பின்னாடி போயிருவானுங்க" என்று அவர்கள் இருவரையும் திட்டிக் கொண்டே நந்தாவின் அருகில் சென்று அமர்ந்தேன். காரணம் நானும் நந்தாவும் ஃபிகர்கள் எங்களைக் கடக்கும் பொழுது மட்டுமே சைட் அடிக்க பிடிக்கும் சோம்பேறிகள் என்பதால்!

முதல் கட்ட முற்றுகையை முடித்த வெற்றிக் களிப்புடன் இருவரும் திரும்பினர், "டேய் கணேஷ்! நீயெல்லாம் சுஜாதா புக் படிக்க மட்டுந்தான்டா லாயக்கு" என்று என்னை கடுப்பேற்றிவிட்டு, ‘‘அவ EEE பர்ஸ்ட் இயர்! எப்புடி... நாங்க கண்டு பிடிச்சோம்ல! என்ன... பேரு தான் கண்டுபிடிக்க முடியல" என்றான் தினேஷ். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த நியுட்டன் போல் லுக் விட்ட தினேஷைப் பார்த்து பாலா சொன்னான் "ப்பூ... இதுக்கு தான் இப்டி அலட்டிகிறியா? அவ பேரு ரேவதி, ஏரியா கிண்டி, வாராவாராம் மவுண்ட் சர்ச்க்குப் போவா, இன்னும் ஆள் இல்ல, டுலெட் தான்" அசால்ட்டாக அவ டேட்டாவை அள்ளி எறிந்தான் அசல் பாலா.  "அவ டுலெட் தான், பட், டூ லேட் இல்ல தானே... மணி! நா முடிவு பண்ணிடண்டா, இந்த தினேஷ் மோதிரம் மாத்திக்கிட்டா அது அந்த ரேவதி கூடத் தாண்டா" எப்படித்தான் இவனுங்களால மட்டும் நிமிஷத்துல ஒவ்வொரு மதத்துக்கும் மாறி, அதுக்குத் தக்கபடி பஞ்ச் டயலாக் பேச முடியுதோ? அட ஆண்டவா...!

பேஸ்புக்கும், மொபைலும் கைக்குள்ளிருக்க, இதற்குப் பின்னான காட்சிகள் அனைத்தும் அவர்களின் காதலின் வேகத்திலும்  வேகமாக நகர்ந்தன. அண்ணலும் ஏர்டெல், அவளும் ஏர்டெல்! பத்து பைசா பூஸ்டர் காதலுக்கு மேலும் மேலும் பூஸ்ட் ஏற்றிக் கொண்டிருந்தது. செமஸ்டர் லீவில் இருந்த நேரம், திடிரென்று ஒருநாள் தினேஷிடம் இருந்து போன், " மச்சி அவ போன் நம்பர மாத்திட்டாடா, பேஸ்புக்குல கூட என்ன அன்பிரண்ட் பண்ணிட்டா, எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையுமே இல்லடா, ஆனா போன ஒருவாராமா அவ என்கூட ஒழுங்காவே பேசல, அதுனால நானும் கோவத்துல இருந்தேன். இதுக்குலாமாடா போன் நம்பர மாத்துவாங்க" அழாத குறை, ஆனாலும் அவன் அழவில்லை, அவன் அழாததால் இந்தக் கதை ஒரு கண்ணீர்க் கதை ஆகாமல் தப்பித்தது தற்செயலே.

என்னதான் அவன் அவளை உயிருக்கு உயிராய் காதலித்ததாய் சொன்னாலும், மணிக்கணக்கில் வருங்காலம் பற்றி பேசியதாய் சொன்னாலும், அந்த உயிர் இருந்த உறைவிடத்து முகவரி கேட்கவேண்டும் என்று மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை, அதை துப்பறியலாம் என்று குத்துமதிப்பாய் வண்டிகளில் ஏறி, கிண்டியைச் சுற்றி, தெண்டமாய் அலைந்து முண்டங்களாய்த் திரும்பியதுதான் மிச்சம்! அவள் முகவரி  கண்டுபிடிக்க முடியவில்லை. நாளொரு புலம்பலும் பொழுதொரு சோகப்பாட்டுமாக இவனது காதல் தோல்வி(?)யைப் போன்ற தோல்வி எங்களை வாட்டத்தொடங்கியது- அதிலும் என்னை மிக அதிகமாக! காதல் தோல்வியானது காதலித்தவனை விட அவனது நண்பர்களை அதிகம் தாக்க வேண்டும் என்பது எவன் விட்ட சாபமோ தெரியவில்லை. எதுவானாலும் அவள் கல்லூரி வந்து தானே ஆக வேண்டும், அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தினமும் அவனிடம் உருவேற்றிக் கொண்டே இருப்பேன். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பா! இனி கல்யாணம் ஆனவன்கூட மட்டும் தான் பிரண்ட்ஷிப் வாசிக்கணும்டா கணேஷா. முடியல்ல..."      

பரபரப்பான இறுதி கட்டம் என்பதால், இனிவரும் வரிகளில் பரபரப்பே இல்லாவிட்டாலும் சற்றே பரபரப்பாய் இருப்பது போல் படியுங்கள், எங்குலச்சாமி பாடிகாட் முனி உங்களுக்கு நல்லாசி வழங்குவாராக.

அவளைச் சந்திக்க வேண்டிய நாளும் வந்தது, கல்லூரி வராண்டாவில் நண்பிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தளிடம் எந்த மாற்றமும் இல்லை. இவளை இப்படி ஒரு சந்தோசமான சூழ்நிலையில் பார்த்ததும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை, அறச்சீற்றம் என்னுள் கொஞ்சம் அதிகமாகவே பிரவாகம் எடுத்தது. இருக்காதா பின்னே..? இத்தனை நாள் இவளால் தினேஷ் தந்த தொல்லைகளை அனுபவித்தது எதுவுமே அறியாத இந்த பால(கன்) கணேஷ் அல்லவா! மணியும் தினேஷும் என்னைப் பின் தொடர, நான் அவள் அருகில் செல்ல எங்களை மற்றுமொரு புதிய மற்றும் சற்றும் அறிமுகமில்லாத மனித ஜந்து நெருங்கியது. எங்களைப் பார்த்ததும் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இயல்பாக பேசத் தொடங்கினாள் "ஹாய் கணேஷ்! சாரிப்‌பா, ரியலி சாரி! உங்க யாரையும் என்னோட மாரேஜ்க்கு கூப்பிட முடியல, இதோ பக்கத்துல நிக்குறாரே மிஸ்டர் கிறிஸ்டோபர்! இவரு தான் என்னோட ஹஸ்பண்ட். உங்க டிபார்ட்மென்ட்ல தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்காரு"

ப்யூஸ் போன மெர்க்குரி பல்பாக வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அதிர்ச்சியில் நடையைக் கட்ட ஆரம்பித்த பொழுது தான் மீண்டுமொரு பேரதிர்ச்சியைக் கொடுத்தாள் அந்த மாபாவி...  "அப்புறம் கணேஷ், இனி என் பின்னாடி சுத்துறது, என் நம்பர கண்டுபிடிக்க ட்ரை பண்றது, இதெல்லாம் வேணாம், ஒழுங்கா படிக்கிற வழிய மட்டும் பாருங்க" என்று கறாராக சொல்லிவிட்டு 234 தொகுதியிலும் வெற்றிபெற்ற கட்சித் தலைவி மாதிரி சிரித்தாள். நான் டெபாசிட் இழந்த வேட்பாளராகி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள, அருகில் இருந்த அவளது ஹஸ் கிறிஸ் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்....

"அடிப்பாவி! உனக்கு நூல் விட்டது ஒருத்தன், அல்வா கிண்டினது ஒருத்தன், ஆனா கடைசில ஆப்பு மட்டும் எனக்கா? கணேஷா... நீ பேசாம மாடு மேய்க்கவே போயிருடா கணேஷா..!" உள்ளேயிருந்து உரக்கக் குரல் கொடுத்தது மனஸ்! அவ்வ்வ்வ! ஆனானப்பட்ட கணேஷான எனக்கு மட்டும் கொஞ்சம் சீரியசான காமெடி ரோல் என்று நான் முதல்லயே சொன்னது இதுனால தானுங்கோ...!

========================================================

பி.கு.: ‘அடங்கொண்டு போராடிய சீனு’ என்று நான் கலாய்த்த பதிவைப் படித்த ‘திடங்கொண்டு போராடு’ சீனு இந்தக் கதையை எழுதி அனுப்பி, ‘இது என்னோட பதில் கலாய்ப்பு. இது நல்லாயிருக்குன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இதுவும் உங்க தளத்துலதான் வரணும்’னு நிஜமாவே அடம் பிடிச்சார். அதனால சீக்கிரமே கு.மி.சி. ஆகப்போற சீனுவை பின்விக்கும்... ஸாரி ஊக்குவிக்கும் விதமாக தான் எழுதின கதை(?)ய எனக்குத் தாரை வார்த்துத் தந்த அவருக்கு நன்றி சொல்லி, அதை இங்கே உங்கள் பார்வைக்கு வைத்தேன்!

57 comments:

  1. அட... வாத்தியாரின் கல்லூரி அனுபவங்களை கற்பனை கலந்து எழுதியிருக்கிறார்னு பார்த்தால் பதில் கலாய்த்தல்... இருந்தாலும் சீனு... அந்தக் கலாய்த்தலுக்கு இது பத்தாதுன்னு தான் தோணுது... வாத்தியார் மேல பயமோ...

    ReplyDelete
    Replies
    1. வொய் திஸ் ‌‌கொலவெறி ஸ்கூல் பையா? சிஷ்யனை இப்படி இன்னும் தூண்டிவிட்டா பதிலுக்கு பதிலா நாங்க தொடர்ந்து எங்களையே கலாய்ச்சுப்போம்னு நெனச்சா நடக்காதாக்கும்...! உசுப்பேத்தி, உசுப்பேத்தியே....! ஹி... ஹி... மிக்க நன்றிப்பா!

      Delete
  2. விடாக்கண்டன் ...
    கொடாக்கண்டன்
    கதைதான் போல...
    ஆனாலும் செமையா கலாய்த்து இருக்கிறார்..
    நண்பர் சீனுவுக்கு என் சிறப்பு பாராட்டுக்கள்...
    கல்லூரியின் வாசல் மனதுக்குள்
    'வந்துவந்து செல்கிறது...
    ==========
    இன்றைக்கு இந்திய பயணம் நண்பரே..
    நாளை மதியம் என் இல்லத்தில் இருப்பேன்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த மகேனுக்கு மனம் நிறைய நன்றி! :ஊருக்கு வந்தபின் உங்கள் தொலைபேசி விடுக்கும் அழைப்புக்காகக் காத்திருக்கின்றன என் செவிகள்!

      Delete
  3. ஹா.ஹா.ஹா.ஹா............. மனம் விட்டு சிரித்தேன் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. மனம் விட்டுச் சிரித்த ராஜ்க்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  4. ‘இது என்னோட பதில் கலாய்ப்பு. இது நல்லாயிருக்குன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இதுவும் உங்க தளத்துலதான் வரணும்’னு நிஜமாவே அடம் பிடிச்சார்..

    அருமையான கதை .. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  5. இனிமே முதல்ல பின் குறிப்பை படிச்சிடனும்..ஹா.. ஹா.. சம்பவங்களை நிஜமாவே கற்பனை பார்த்து உங்களை நினைத்து ரொம்ப சிரிப்பு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. இதை முன்குறிப்பா போடறதாத்தான் இருந்தேன். சிஷ்‌யன் சீனுதான் பின்குறிப்பா வெளியிடறதுதான் முறைன்னு சொன்னாரு. அதான்... சிரிச்சு ரசிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  6. சூப்பர் ...சூப்பர் ..சூப்பர் ... உங்களை போலவே சீனுவும், சமகால செய்திகளை, நக்கலும் நகைச்சுவையும் கலந்த வார்த்தைகளாக வார்க்கும் திறன் பெற்றிருக்கிறார். சீனு ....சூப்பர் .

    ReplyDelete
    Replies
    1. சீனுவின் எழுத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  7. உங்கள் சிஷ்யர் குருவை (உங்களை) மிஞ்சிடுவார் போலே...

    எதிர்ப்பார்க்கவே இல்லை...(பி.கு. ) பதில் கலாய்ப்பு...!!!

    சற்று முன் தான் மின்சாரம் வந்தது... காலையிலே படித்து விட்டு நம்ம மகேஷ் (சுடர்விழி) கைபேசி மூலம் சொன்னார்... (பி.கு தவிர) அவருக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் நான் விரைவிலேயே குருவை மிஞ்சின சிஷ்யன் ஆகிடுவார் சீனுன்னு எழுதியிருக்கேன். கககபோ! சீனுவின் பதில் கலாய்ப்பை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! (மஹேஷ் போன்ல சொன்னாரா? அப்புறம் அவர் ஏன் கருத்துப் போடலை...? இருக்கட்டும்... அடுத்து அவரை கவனிச்சுர வேண்டியதுதான்)

      Delete
  8. சூப்பரா இருக்கு கணேஷ் சார். வாழ்த்துக்கள் நண்பர் சீனுவுக்கும்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து சீனுவை வாழ்த்திய குடந்தையூராருக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  9. பிகரு எல்லாம் கிடக்கட்டும் ஒரு புறம் .
    [ அப்படி என்ன தான் இருக்கோ ?]
    பயணக் கட்டுரை எங்கே ?

    ReplyDelete
    Replies
    1. சிஷ்யன் சீனுவின் வயசுக்கு ஃபிகருன்னா உற்சாகம் இருக்குங்க தோழி... போகட்டும், விட்றுங்க...! பயணக்கட்டுரை... எழுதணும்னு ஆசை இருந்தாலும், புகைப்படங்களோட சொன்னாதானே நல்லா இருக்கும்னு வெயிட் பண்ணினேன். இப்ப படங்கள் கிடைச்சாச்சு. வர்ற திங்கள்லருந்து சொல்ல ஆரம்பிச்சுடறேன். நினைவு வைத்திருந்து கேட்டு, என்னை மகிழ்வில் துள்ள வைத்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. அருமையான கதை?? காமெடி .. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  11. சூப்பரான கதை.....எப்பவும் காமெடியங்கள்தான் மாட்டிக்கொள்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்துப் படித்து சூப்பர் என்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  12. வயதைப் பற்றிக் குறிப்பு வரும்போது லே......ஸாக சந்தேகப் பட்டேன்! அப்புறம் அதை மறந்து படித்து ரசித்தேன். வெல்டன் சீனு!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து, சீனுவைப் பாராட்டின உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  13. // எனக்கு வயதொன்றும் 55 இல்லை. சொன்னால் நம்ப மாட்டீங்க... இரண்டாமாண்டு கல்லூரி மாணவன் நான். என்ன... //

    ஹா.....ஹா.....! சூப்பர் கற்பனை. குருவை மிஞ்சிய சிஷ்யர்!


    ஒருவரையொருவர் நன்றாக கலாய்த்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இருதரப்பு கலாய்ப்பையும் ரசித்ததோடு, சீனுவை கு,மி.சி. என்று பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. உங்களை சத்தியமாக காலேஜ் பையானாக உருவகப்படுத்த முடியவில்லை .. மன்னிக்கணும் சார் ... நான் நேரில் கண்டதனால் இந்த என் கருத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் ...

    ReplyDelete
  15. என்னால் முடிந்தவரை முயற்சித்து பார்கையில் உங்களை எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு இளம் மாணவராகவே உருவகப்படுத்த முடிகிறது ...

    ReplyDelete
  16. சீனுவோட தந்திர செயலை எண்ணி அவருக்கு இந்த வருட ராக்கிங் பதிவர் வழங்க சிபாரிசு செய்ய விருப்பமாக இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சிபாரிசு என்ன... நம்ம தங்கத் தலைவன் மெ.ப.சிவாவை விட்டு வழங்கச் சொல்லிட்டாப் போச்சு! நன்றி நண்பா!

      Delete
  17. அடடா...அசத்தல் கதை.. கடைசியில, எங்கண்ணாவுக்கு இப்படி பல்பு ஆச்சேன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே பார்த்தா... சீனு சார் தானா... நல்லாவே கலாய்ச்சிருக்கிறீங்க... ஆனாலும்... அண்ணாவை இளமைக் கோலத்தில் மனக்கண்ணில் கொண்டு வந்த பெருமை உங்களுக்கு தான் சார்... Rocks!

    ReplyDelete
    Replies
    1. மிகமிக ரசித்துப் படித்த தங்கை பூங்கோதைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. ஐயோ நீங்க காலேஜ் பையனா?ஓகே ஓக்கே. நம்பிட்டோம். ஆனாலும் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் காலேஜ் பையன்தான் தளிர் -மனசளவுல! ஹா... ஹா... நம்பின வெள்ளந்தியான தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  19. கதை சூப்பர் சீனு.
    கணேஷ்-சரிதா காதல் பிளாஷ் பேக் போட்டு ஒரு கதையை எழுதி கலக்கு சீனு. வேற யாரவது ரெடி பண்ணாலும் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... இப்டியா விபரீத ஐடியா குடுத்து சீனுவை உசுப்பேத்தறது முரளி...! அநியாயம்....! இருந்தாலும் இந்தக் கதையை ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. காதல் கதையா காதல் தோல்வி பற்றிய கதையா, நகைச்சுவை கதையோ என பல உருவகங்களையும் எடுத்து கடைசியில் கலாய்ப்பு கதை என்று தெரிந்த போது சுவையாக இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. காதலைப் பற்றிய நகைச்சுவை தூவிய கலாய்ப்புக் கதையை ரசித்துப் படித்த ஆவிக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  21. Though this post is quite lengthy, I read it at one go because it took me to my college days from the day one sorry from the line one. Very nice post. More than that, he has given you a befitting reply sorry revenge. It reminds of two lyrists of Sanga Illakkiyam who used to drag the other legs through their lyrics. Very good. Can I expect any counter to this counter-attack from Shri Bala(gun) Ganesh?

    ReplyDelete
    Replies
    1. ஏங்க.... மாத்தி மாத்தி அட்டாக் பண்ணிட்டிருக்காங்க. இவங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு எல்லாரும் வெறுத்துடுவாங்க. அதனால விட்டுர்றேன்... சிஷ்யன் சீனு பிழைச்சுப் போகட்டும்!

      Delete
  22. Though the post is lengthy, it made me to read at one stretch because it involved two things - one is cooollege days and the other is revolving around the figure. Have we ever forget about our college days and the figure which made us to move around like an earth revolving around sun? Even today, though my daughter is studying in college, no chance. Half way through the story, I guessed the ending but never thought that she would marry the lecturer. This also you could have guessed if you look at the names, Christopher and Revathy though it is a Hindu name, you could guess the ending because in one of the lines, Revathy's lover promised to exchange rings with her. Anyway, I WILL CALL IT A SWEET REVENGE BY YOUR SEENU.

    ReplyDelete
    Replies
    1. கதையின் இனிய பகுதிகளை ரசித்தும், சீனுவின் இனிய பழிவாங்கலை ஆதரித்தும் எழுதிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. ஆப்புன்னா பேராப்பா இருக்குதே!
    உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் ஏதோ நகைச்சுவையாக எழுதியிருக்கிறார் சீனு ;-)

    ReplyDelete
    Replies
    1. சீனு நகைச்சுவைப் பாதையில இப்பதான் நடைபோட ஆரம்பிச்சிருக்கார் அப்பா ஸார்! சீககிரமே தேறி கு.மி.சி. ஆயிடுவார்... இந்தப் படைப்பை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  24. //காதல் தோல்வியானது காதலித்தவனை விட அவனது நண்பர்களை அதிகம் தாக்க வேண்டும் என்பது எவன் விட்ட சாபமோ தெரியவில்லை.// என்னைப் போல் அனுபவித்தவர்களுக்கு, இந்த வரி மனதை உருக்கும் உண்மை. என் மனதில் புதைந்திருந்த நினைவுகளை தோண்ட உதவிய சீனுவின் வரிகளுக்கு நன்றி.

    பால கணேஷ் சார், உங்களைப்போல் தோளில் தட்டிக் கொடுக்கும் குரு அமைந்தது சீனுவிற்கு என்றுமே பக்கபலம்.

    ReplyDelete
    Replies
    1. சீனுவின் வரிகள் மனதைத் தாலாட்டின என்று பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  25. அங்கே என்னடான்னா பாக்கியம் ராமசாமி பெயரில் கடுகு எழுதுகிறார்; இங்கே என்னடான்னா பால கணேஷ் பெயரில் சீனு எழுதுகிறார் - வித்தியாசமே தெரியாமல். தமிழகத்தில் இவ்வளவு ஒரே மாதிரியான திறமைகளா! - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம்தான் எனக்கும்! வித்தியாசமே தெரியாமல் எழுதுகிறார் என்ற மிகப்பெரும் பாராட்டை வழங்கிய உங்களுக்கு மனம் நிறைய நன்றி ஜெ!

      Delete
  26. மிகவும் அழகான இயல்பான நடையில் ரசிக்கவைத்த கதை. பல இடங்களில் அட போட வைத்தது. பாராட்டுகள் சீனு. சீனுவின் கதையைப் பகிர்ந்து பெருமைப்படுத்திய உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் கணேஷ். அடங்கொண்டு போராடிய சீனு கதையை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் கருத்திடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சீனுவின் எழுத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி தோழி!

      Delete
  27. நல்ல பதிலடி தான்! :)

    இன்று தான் படிக்க முடிந்தது!

    ReplyDelete
  28. அருமை பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  29. எப்படியோ, ரசிக்கவைத்து, சிரிக்க வைத்து, பாராட்டித் தொலைக்கவைத்து விடுகிறீர்கள்!

    ReplyDelete
  30. இந்த விளையாட்டை இதுவரை நான் கவனிக்கவில்லையே!

    ReplyDelete
  31. பின்குறிப்பு தான் சரியான twist

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube