Wednesday, March 6, 2013

அடங்கொண்டு போராடிய சீனு!

Posted by பால கணேஷ் Wednesday, March 06, 2013

தி்ங்கள்ன்று மாலை பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த பார்க்கில் நாம் சந்திக்கலாம் என்று போன வாரமே சீனு சொல்லியிருந்தான். ஸாரி, ‘ர்’. நேற்று மாலை கிளம்பும்முன் அவரின் செல்லுக்கு போ்ன செய்தால் முழு ரிங் போயிற்று. எடுக்கவே இல்லை. சரி, பார்க்கில் பேசிக் கொள்ளலாம் என்று 6.30 மணிக்குச் செல்ல வேண்டியதை என் வழக்கப்படி 6.25க்கு அடைந்து விட்டேன். பார்க் வாசலில் என் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தேன்.

என் கண்களையே நம்ப முடியவில்லையே... நடைபாதைகள் சுத்தமாய் துடைத்து வைக்கப்பட்டு ஒரு அழுக்கை காணோம். செடிகள் அழகாய் கத்தரித்து ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. ‘சார் டீ’ என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டு அலையும் ஒருவரையும் காணோமே... ஏதோ தவறிப் போய் சிங்கப்பூர் பார்க் ஒன்றில் நுழைந்துவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது. இப்படிப் பராமரிக்கும் மாநகராட்சிக்கு ஜே!

-இப்படியெல்லாம் எழுதத்தான் ஆசை எனக்கு. ஆனால் முடியலையேஏஏஏஏ! வழக்கம் போல முன்னால் வரும் வட்ட பீடத்தின் மத்தியில் அதிகம் அழுக்குப் படாத ஒரு இடமாகப் பார்த்து அமர்ந்தேன். தவறாமல் அருகில் வந்து ‘டீ வேணுமா சார்?’ என்றார் வியாபாரி. சீனு வரும் வரை பொழுதுபோகட்டுமே என்று அங்கு வட்டப்பாதையைச் சுற்றி நடந்து கொண்டிருந்த ஜனங்களை நோட்டமிட்டேன். நடையர்கள்தான் எத்தனை விதம்! மிலிட்டரி மார்‌ச் போல கைகளை வீசி சீரான ஒழுங்குடன் நடந்து செல்லும் முதியவர், ‘என்னையாடா சண்டைக்குக் கூப்பிட்டே?’ என்கிற தினுசில் கைகளை வீசி அதிர அதிர நடந்து வரும் ஒரு குண்டு மாமி, அது நடையா இல்லை ஓட்டமா என்று தெரியாதபடி நடையோட்டமாகச் சென்ற ஒரு மத்திய வயது நபர், பின்னாலேயே அவர் நடந்து வருகிறாரா, இல்லை காற்று அவரைத் தள்ளிக் கொண்டு வருகிறதா என்ற குழப்பம் ஏற்படும்படி நம்ம ‘சேட்டையண்ணா’ மாதிரி ஊசி உடம்புடன் ஒருவர், அதற்குப் பின்னால் ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டு.. காதலன் - என்றுதான் நினைக்கிறேன். கணவனாக இருந்தால் அவன் முகத்தில் சிரிப்பிருந்திருக்காது, தோளில் கை போட்டிருக்க மாட்டான் - அப்பப்பா... விதவிதமான மனிதர்களைப் பார்த்ததில் பொழுதுபோனதே தெரியவில்லை.

சீனு வந்து சேர்ந்ததும் கோபமாக, ‘‘ஏண்டா பாவி இவ்வளவு லேட்?’’ என்றேன். அவரின் டிரேட் மார்க்கான ‘ஹீ... ஹீ...’ என்கிற சிரிப்பை உதிர்த்துவிட்டு ‘ஆதிபகவன்’ படத்தை மேட்னி ‌‌ஷோவில் பார்த்துவிட்டு வந்த ‘ஆனந்த அனுபவ’த்தை புலம்பித் தள்ளினார். அவஸ்தைப்பட்டது அவர்தானே, நானல்லவே... ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கையோடு கொண்டு வந்திருந்த நான் கேட்டிருந்த ‘டாலர் நகரம்’ புத்தகத்தை எனக்களித்தார் சீனு. ‘‘ஏன் வாத்தியாரே எப்பவும் பழைய படங்களையும் பாட்டுகளையும் ரசிச்சு எழுதறீங்க...? புதுப் படங்களை எழுதினா என்ன?’’ என்று கேட்டார் சீனு. அதன் பின்விளைவுகளை அறிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டார்.

‘‘அதில பார் சீனு... புதுசா ஒரு படம் வெளியானதும் அதைப் பாத்துட்டு சுடச்சுட விமர்சனம் எழுதறதுக்கு கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பி.பிரபாகரன், மெ.ப. சிவகுமார், இப்ப நீயின்னு ஒரு குரூப்பே இருககு. இவங்களோட போட்டி போட்டு புதுப்படங்களை எழுதற அளவுக்கு எனக்கு ஸ்பீட் பத்தாதுங்கறது ஒரு காரணம். பழைய படங்களைப் ப்த்தி எழுதறதுக்குக் காரணம்... அப்பல்லாம் ஹீரோங்கறவன் நல்லவனா இருந்தான், கெட்ட காரியங்களைச் செய்யறதுக்கு வில்லன் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ டபுள் ஆக்ட் பண்ணினா மட்டும் ஒரு கேரக்டர் வில்லனாவும், ஒண்ணு ஹீரோவாவும் நடிப்பாங்க. 

ஆனா இப்ப... நீ பாத்துட்டு வந்த படத்தையே எடுத்துக்க... ஆதி அயோக்கியன், பகவன் பரம அயோக்கியன். படம் பூரா வர்றதுனால அந்த நடிகர் ஹீரோ! அப்படித்தானே?. விளங்கிரும்! ஹீரோயின் ஓவரா எக்ஸ்போஸ் பண்ண முடியாதுங்கறதால ஐட்டம் சாங் பண்றதுக்குன்னு அப்ப தனி ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க. இப்ப... ஹீரோயினே எல்லாத்தையும் பண்ணிடறாங்க. பழைய படங்கள்ல ஒரு கிறிஸ்தவர் கெட்ட காரியம் பண்றதா காட்டினா, அதே படத்துல இன்னொரு கிறிஸ்தவர் கேரக்டர் நல்லவரா, நல்லதுக்காக உயிரையும் விடறவரா காட்டப்படும். இப்ப... ரியலிஸத்தை காட்டறேன் பேர்வழின்னு தீவிரவாதம், பயங்கரவாதம்லாம் அப்படியே படமாகுது. அந்தக் கண்றாவியத்தான் பேப்பர்லயும், ஊடகங்கள்லயும் பாத்துத் தொலைக்கறோமே... இவிங்கவேற காட்டணுமா?

அன்பை வளர்க்கற மாதிரி படங்கள்தான் இப்பத் தேவை. தன் சித்தப்பா ஹார்ட் அட்டாக்ல ஆஸ்பத்திரில அட்மிட் ஆனாக்கூட சாத்துக்குடியும், ஹார்லிக்ஸும் குடுத்துட்டு, ஒரு தடவை பாத்துட்டு வந்துட்டா ‌போதும்கற அளவுலதான் இப்பல்லாம் பாசம் இருக்குது. இன்னொரு குடும்பத்தை கெடுக்கவும்... சில சமயங்கள்ல சொந்தக் குடும்பத்‌துலயே ஒருத்தரை வாழ விடாம செய்யவும் திட்டம் போடறதை விஸ்தாரமா காட்டி நம்ம டி.வி. சீரியல்கள் கட்டிக்கிட்ட புண்ணியம் அது! ஆகவே அன்பு, நட்பு மாதிரி நல்ல விஷயங்களைச் சொன்ன பழைய படங்களதான் என்னோட சாய்ஸ் சீனு! நீ குறிப்பிடற பழைய படங்கள் வந்த காலத்துல 20 படங்கள் வந்தா அதுல மூணு சொத்தையா இருக்கும். இப்ப... 20 படங்கள் வந்தா அதுல மூணுதான் நல்லதா இருக்குது... என்ன சொல்றே?’’ என்றேன்.

‘இப்பிடி தனியா வந்து மாட்டிக்கிட்டேனே’ங்கற மாதிரி சீனு ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டே தலையாட்டினாரு. பார்வை மட்டும் சுத்திலும் அலைபாய்ஞ்சுட்டிருந்துச்சு. (என்னை மாதிரி) வாலிப வயசு பாருங்க... ஹி... ஹி..! நான் விடாம, ‘‘சரி... அடுத்த மேட்டரை கவனி. நகைச்சுவைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? ‘கண்ணா லட்டு திங்க ஆசையா?’ படம் சமீபத்துல ஹிட்டாச்சு. நான் கவனிச்ச வரைக்கும் சந்தானம் அடிக்கற பஞ்ச் பூராவுமே பவர்ஸ்டாரை கலாய்ச்சுதான். இல்லாட்டி மத்த படங்கள்ல கூட வர்ற (ஹீரோ உட்பட) கேரக்டர்ஸை வார்றார். இதப்பாத்து ஜனங்க சிரிக்கறாங்க. இது எத்தனை நாள் தாங்கும்? ‘அன்னை’ன்னு ஒரு படத்துல சந்திரபாபு வீட்டுக்குள்ள புகுந்த ஒரு பெருச்சாளியை அடிச்சுக் ‌‌கொல்றேன்னு மத்த நகைச்சுவை நடிகர்கள் துணையோட ஒரு கலாட்டா பண்ணுவாரு பாரு... அது காமெடி! சாப்ளின் ஸ்டைல்! வெறும் டயலாக் பேசி சிரிக்க வெக்கறது மட்டுமில்ல காமெடி...’’ என்றேன்.

‘‘கரெக்ட் வாத்யாரே... உலகத் தலைவர்கள் பத்தி நீங்க எழுதறது ரொம்ப நல்லாயிருக்கு’’ என்று வேகமாக டாபிக் மாற்றினார் சீனு. சரி, பயல் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டு, ‘‘அதுசரி... நீ நகைச்சுவை சிறுதை எழுதப் போறதா சொன்னியே... எங்கப்பா இன்னும் காணம்? அடிக்கிற அடியில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கி, நானும் சேட்டைக்காரனும், பேட்டைய விட்டே ஓடியிருக்க வேணாமா?’’ என்று கேட்டேன். இடுப்பில் கை வைத்து (நோ... நோ...அவர் இடுப்புல தாங்க..!) முறைத்தார் சீனு. ‘‘வாத்யாரே... நீங்க பேசறது உங்களுக்கே ஓவராத் தெரியலையா? ‌எழுதறேன்னு மட்டும்தானே நான் சொன்னேன்... கொஞ்சம் முக்குனதுல கழு்த்துவரை வந்துட்டுது. விரல் வழியா இறகக வேண்டியதுதான் பாக்கி’’ன்னார். ‘‘அவலோட... ச்சே, ஆவலோட காத்திருக்கேன். சீக்கிரம் இறக்கிடுய்யா ராசா’’ என்றேன் நான். அதன்பின் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். இருட்டி விட்டதால் காற்று வரவில்லை, அதற்குப் பதில் கொசுக்கள்தான் அதிகம் வரத் துவங்கின என்பதால் எங்கள் ‘கச்சேரி’யை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

====================================================

பி.கு.: அப்பனே சீனு! ‘நான் எப்போ வாத்யாரே பார்க்குக்கு வந்தேன்? இப்பிடி என்னை மாட்டி விட்டுட்டீங்களே’ன்னு அப்பாவித்தனமா கமெண்ட் போட்டுராத! நேத்து போன் அடிச்சும் நீ எடுக்காதததால நான் மட்டும் பார்க் போய் காத்து வாங்கினேன். அப்படியே நீ வந்தா என்ன பேசியிருப்போம்ங்கறதை மனசுல ஓட்டி எழுதிட்டேன்கற விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்! யார்ட்டயும் சொல்லிராத! அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பயும் சொல்லிராத! (இனிம போன் பண்ணினா பயபுள்ள எடுக்காம இருக்கும்கறீங்க... ஹி... ஹி...)

====================================================

100 comments:

  1. சார் கடைசி ட்விஸ்ட் கலக்கல்..

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த ஆனந்துக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  2. அப்போ சிங்கம் சிங்கிளாத்தான் பார்க்கில உக்காந்திருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. இல்லையேப்பா... பார்க்குல உலாவின ஏராளமான ஜனங்களப் பத்திதான் முதல்லயே குறிப்பிட்டிருக்கேனே...!

      Delete
    2. சிங்கம்ன்னு வேற சொல்லி உசுபேத்தி விட்டுடீங்களே, இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ

      Delete
  3. ஒருத்தர் பார்க்குக்கு வரலேங்கிறதுக்காக கலாய்ச்சு பதிவே போடுறதா... நல்லாத்தான் இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. நமக்கு நெருங்கின, உரிமையுள்ளவங்களை கலாய்க்கறது ஒரு தனி குஷி நண்பா!

      Delete
    2. ஹா ஹா ஹா.. சார் கொஞ்ச நாள் பொருங்க... சிறுத்த சிக்காமலா போயிரும் ( நா உங்களச் சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ் )


      //நமக்கு நெருங்கின, உரிமையுள்ளவங்களை கலாய்க்கறது ஒரு தனி குஷி நண்பா!//

      மிக்க நன்றி வாத்தியரே... இந்த வரிகளுக்குக்கு யான் பெற்ற புண்ணியம் என்னவோ நான் அறியேன்...

      Delete
  4. நல்லவேளை... சீனு என்னையும் கூப்பிட்டிருந்தார்... நான் முதல்லயே வரலேன்னு சொல்லிட்டேன்... வர்றேன்னு சொல்லிருந்தா என்னையும் கலாய்ச்சிருப்பீங்க....

    ReplyDelete
    Replies
    1. கலாய்க்கறதுக்கெல்லாம் பயப்படலாமா ஸ்கூல் பையன்? அப்புறம் எப்டி பிரபல பதிவராகுறதாம்? கலாய்ப்புலயும் சர்ச்சைகள்லயும் கல்லெறி வாங்குனாத்தான் பிரபலம் ஆகலாம். ஸோ... அடுத்த முறை கூப்ட்டா தவறாம வந்திடுங்க.

      Delete
  5. ஹா.....ஹா....

    அதுசரி... இனி சினிமா விமர்சனத்துக்கு சீனுதான்! பயணக் கட்டுரைக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த ஸ்ரீராமுக்கு இதயம் நிறை நன்றி! பயணக் கட்டுரை நானும் எழுதணும்னு ஆசைப்படறேன். ஏனோ... சமீப காலமா பயணங்கள் எதும் தோதா அமையல. அதையும் கற்பனையூருக்குப் ‌போய் எழுதிரலாமா ஸ்ரீராம்?

      Delete
    2. //ஹா.....ஹா..// தெரியுமே நல்லா சிரிச்சிருப்பீங்களே...

      // இனி சினிமா விமர்சனத்துக்கு சீனுதான்!// உருப்படியா சினிமா விமர்சனம் எழுதறவங்க யாராவது என் மேல வழக்கு தொடர்ந்தா வக்கீல் செலவு உங்களோடது

      // பயணக் கட்டுரைக்கும்!// மிக்க நன்றி சார்

      //அதையும் கற்பனையூருக்குப் ‌போய் எழுதிரலாமா ஸ்ரீராம்?// நாடு தாங்காது வாத்தியரே

      Delete
  6. கற்பனை என்றாலும் சொல்ல வேண்டியதை சரியாகவே சொல்லிட்டீங்க... சீனு அவர்களே, கவனிக்க...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கேல் வெச்சு அடிச்சாவது அவனை... ஸாரி, அவரை ஹ்யூமர் எழுத வெச்சிருவோம்ல! மிக்க நன்றி தனபாலன்!

      Delete
    2. வாத்தியரே கதை திரைகதை என்னுடையது பின்குறிப்பு மட்டும் உங்களுடையது... கண்ணுக்குக் கண் காத்திருங்கள் திங்கள் கிழமை வரை....

      // நானும் சேட்டைக்காரனும், பேட்டைய விட்டே ஓடியிருக்க வேணாமா?’’// என்ன ஒரு வில்லத்தனம்...

      Delete
  7. ஆஹா.... நடேசன் பார்க் - நாம் சந்தித்த போது அங்கே நடப்பவர்களைப் பற்றி பேசினோமே அது நினைவுக்கு வந்தது! :)))

    நல்லாத்தான் கலாய்ச்சிட்டீங்க சீனுவ! :))

    ReplyDelete
    Replies
    1. அதேதான் வெங்கட்! அன்றைக்கு கவனித்தவர்களை மனசு டைரில எழுதி வெச்சிருந்தேன். இப்ப பயன்படுத்திக்கிட்டேன். ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
    2. ஆடு சிக்கினா குழம்பு வைக்கலாம், அதுக்காக இப்டியா ஹா ஹா ஹா

      Delete
  8. நண்பரே,
    பூங்கவில நடக்கறவங்க பத்தி விமர்சனம் மட்டும் பண்ண தான் நம்மால முடியும் நீங்களும் நானும்போய் நடக்க முடியலையே.
    உங்களின் பழையப் பட விமர்சனங்கள் தொடரட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ.. நீங்களும் நானும்னு என்னை ஏனு்ங்க சேத்துக்கறீங்க? நான் தினம் காலை 5 - 6 மே.மாம்பலத்துலருந்து சைதாப்பேட்டைய நடந்தே சுத்திட்டு வர்றவனாக்கும்! பழையபட விமர்சனங்களை ‌அடுத்து தொடர்கிறேன் நண்பரே! மிக்க நன்றி!

      Delete
  9. ஆஹா! நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? ஆனா பேசின விஷயம் எல்லாம் சுவரசியம்தான்.சீனு வந்திருந்தாலும் நிச்சயமா ரசிச்சிருப்பார்
    சமீபத்தில புத்தக விமர்சனத்திலும் சீனு கலக்கிட்டாரே!

    ReplyDelete
    Replies
    1. பிஸியா இருக்கான் போலருக்கு சீனு. ஆளையே காணம்! சீனு ரசிக்கறதுக்கு முன்னாடியே நீங்க ரசிச்சுப் பாராட்டினது ரொம்ப சந்தோஷம் முரளி.

      Delete
    2. //.சீனு வந்திருந்தாலும் நிச்சயமா ரசிச்சிருப்பார் // நிச்சயமா சார்..

      //சமீபத்தில புத்தக விமர்சனத்திலும் சீனு கலக்கிட்டாரே!// மிக்க நன்றி சார்..

      Delete
  10. Replies
    1. வருகைக்கும் மகிழ்வுதந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி முரளி!

      Delete
    2. //தலைப்பு சூப்பர் கணேஷ் சார்!// அட ஆமா சார்

      Delete
  11. என்னாது சீனு வராமலேயே இவ்வளவு லொள்ளா?

    ReplyDelete
    Replies
    1. வந்திருந்தா இன்னும் டபுளாயிருக்கும் நண்பா! மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி!

      Delete
    2. //என்னாது சீனு வராமலேயே இவ்வளவு லொள்ளா?// கேளுங்க சார் நல்லா கேளுங்க சார்

      Delete
  12. நல்ல கற்பனை. அதனால் என்ன? இனி உங்கள் கருத்துகளையும் அலசல்களையும் நண்பரை வைத்தே தொடரலாம்:)!

    ReplyDelete
    Replies
    1. நிசசயமா. அடிக்கடி சந்திக்க வாய்ப்புண்டு மேடம். இருந்தாலும் வலையில வம்புக்கிழுக்கலாம்னு ஒரு சின்ன ஆசை! அதான்... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. // இனி உங்கள் கருத்துகளையும் அலசல்களையும் நண்பரை வைத்தே தொடரலாம்// சிக்கிய ஆட விட மாட்டீங்க போலையே

      Delete
  13. உங்களது எளிமையான நடையில் படிக்க சுவராஸ்யமாக இருந்தது... சினுவை மட்டுமல்லாது ஆரணி சகோவையும் கலாய்ச்சு ஒரு பதிவு போடுங்க..

    ReplyDelete
    Replies
    1. சீனுவை காப்பாற்ற அமெரிக்காவில் இருந்து வந்த மதுரைத் தமிழனுக்கு நன்றிகள்

      Delete
    2. ஆஹா... வம்புல மாட்டிவிடப் பாக்குறாரே மதுரைத் தமிழன்! நண்பா.. சீனுவாவது பரவால்ல, வாத்தியார் பாவம்னு விட்ருவான். ஆரணி தங்கச்சிக்கு அண்ணனோட ப்ளஸ் மைனஸ் எல்லாம் தெரியும். ஆய்ஞ்சுப்பிடுவாங்க ஆய்ஞ்சு! மீ எஸ்கேப்! மிக்க நன்றி!

      Delete
  14. எப்படி சார் இப்படி எழுதறீங்க கடைசில குறிப்புல சொல்லவில்லை என்றால் இது எல்லாம் உண்மையாகவே நடந்தது என்றுதான் நினைத்திருப்பேன் ..........இல்லாத ஒன்றை இருபது போல காட்டுவது கவிதையில் அதிகமாக பார்த்திருக்கிறேன் உரைநடையில் இப்பொழுது பார்கிறேன் அருமை

    ReplyDelete
    Replies
    1. //..இல்லாத ஒன்றை இருபது போல காட்டுவது கவிதையில் அதிகமாக பார்த்திருக்கிறேன் உரைநடையில் இப்பொழுது பார்கிறேன் அருமை// உண்மையிலேயே அது வாத்தியாருக்கு கை வந்த கலை

      Delete
    2. மனம் திறந்து பாராட்டி உற்சாகம் தந்த தோழி சரளாவுக்கும், என்றும் என்னுடனிருக்கும் சீனுவுக்கும் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. உங்களுக்கு எந்த நிலையிலும் துணை கற்பனை தான் போல .
    முக்கியமானவரின் கமென்ட் இன்னும் காணலையே ... அடடா ...

    ReplyDelete
    Replies
    1. //முக்கியமானவரின் கமென்ட் இன்னும் காணலையே ... // ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டு இருந்தீங்க போல.. :-)

      Delete
    2. கற்பனைக் குதிரை மேயற திசைகளுக்கு எல்லையே இல்லையே ஸ்ரவாணி... மு்க்கியமானவர் இப்ப எல்லாத்துலயும் கருத்திட்டுட்டார், கவனிச்சீங்களா? உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. ஹா..ஹா..

    நல்ல கற்பனை.நீங்க சொல்லலேன்னா தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது அப்படி ஒரு உரையாடல்.

    ReplyDelete
    Replies
    1. //தெரிந்திருக்காது அப்படி ஒரு உரையாடல்.// பின்குறிப்பு ஆதிபகவன் போன்ற விஷயங்கள் இல்லாட்டா நான் கூட நம்பியிருப்பேன், காரணம் ஏற்கனவே ஒருமுறை நடேசன் பார்க்கில் சந்தித்து இருக்கிறோம்....

      Delete
    2. உங்களிருவரின் பாராட்டும் மனதுக்குள் உற்சாகத்தை டன் கணக்கில் நிரப்பி விட்டது. என் உளம்கனிந்த நன்றி ராம்வி மேடம்!

      Delete
  17. . கணவனாக இருந்தால் அவன் முகத்தில் சிரிப்பிருந்திருக்காது, //

    ஹஸ்பண்டாலஜி பேராசிரியையாக இந்த வாக்கியத்தை வன்மையா கண்டிக்கறேன்.

    ஓஹோ நீங்களும் அந்த கூட்டத்துல மெம்பரா........

    பாயிண்ட் நோட்டட்.

    ReplyDelete
    Replies
    1. //பாயிண்ட் நோட்டட்.// எப்ப பதிவு போட போறீங்க ஆவலுடன் ...

      Delete
    2. இந்தப் பயலுக்கு என்ன மாட்டி வுடறதுல எம்பூட்டு ஆசை பாருங்க...! தென்றல் மேடம்! நான் பெண்களை மதிக்கறவன். நிச்சயம் அந்தக் கூட்டத்து மெம்பர் இல்ல... பொதுவான சைக்காலஜிய வெச்சுத்தான் எழுதினேன் அப்படி. கோவிச்சுக்காதீங்க. உற்சாகம் தந்த உங்கள் வருகைக்கும், நல்ல கருத்துக்கும் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. நடுநிசி ஏழு மணிக்கு போன் ஒலித்தது அழைத்தது ஸ்கூல் பையன் எடுத்தது இந்த சின்ன பையன். அவர் குரலில் ஒரு அதீத உற்சாகம், "சீனு நம்ம பால கணேஷ் சார நீங்க ஏன் பார்க்க போகல", அவ்வ்வ்வ் "ஆமா நான் போகல"ன்னு வழிஞ்சேன். அவரு செம குஷி ஆகிட்டாரு, "தலைவரு உங்கள ஓட்டி தான் இன்னிக்கு பதிவே போட்ருகாறு, நல்ல வேள உங்கள மாதிரி வாய குடுத்து நா மாட்டிக்கல " (இத சொல்லும் போது அவருக்கு என்னா சந்தோசம்ன்னு நினைகிறீங்க).....


    இன்னிக்கு ஆடு நாந்தானா சரி தான்னு எந்திச்சா கரண்ட் இல்ல, வந்ததும் மொத வேலையா பதிவ பார்த்தா, ஆட வச்சி வூடு கட்டினது மட்டும் இல்லமா விருந்தே போட்ருகீங்க....

    ஹா ஹா ஹா ஒரு போன அட்டென் பண்ணாதது அம்புட்டு பெரிய குத்தம்னு புரிய வச்சு என் அறிவு கண்ண தொரந்துடீங்க வாத்தியாரே.....

    ReplyDelete
    Replies
    1. நடுநிசி ஏழு மணிக்கா? ஹா... ஹா... சபாஷ் சீனு! நைட் டூட்டி வருஷக்கணக்கா பாத்தவன் நானுங்கறதால இந்த வார்த்தைய ரொம்பவே ரசிச்சேன். அறிவுக் கண்ணு தொறந்துருச்சா? நல்லது... நல்லது... என்ட்டல்லாம் அப்டி ஒண்ணு இருக்கான்னே சந்தேகமால்ல இருக்குது. ஹி.. ஹி...

      Delete
  19. எனக்கு நேத்து தான் நைட் ஷிப்ட் முடிஞ்சது, நாம சந்திக்கலாமான்னு சொன்னது செவ்வாய் கிழமை மாலை...

    // 6.30 மணிக்குச் செல்ல வேண்டியதை என் வழக்கப்படி 6.25க்கு அடைந்து விட்டேன்.// ஒரு சிறு திருத்தம் ஒருநாள் முன்னதாகவே சம்பவ இடத்தை அடைந்துள்ளீர்கள், நானோ ஒரு நாள் கழித்து சம்பவ இடத்தை அடையப் போகிறேன்....


    இன்னிக்கு சாயங்கலாம் நிச்சயம் நடேசன் பார்க் வருகிறேன் சார்...

    பதிவர்கள் மற்றும் வாத்தியாரின் வாசகர்கள் வாத்தியாரிடம் ஆட்டோ கிராப் மற்றும் ஆட்டோ காசு என்று வாக வருபவர்கள் கம்போடு வரலாம்.....

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு... கம்போடு வரச் சொல்லி இப்பவே அச்சாரம் போட்டாச்சா? முதுகுல தலையணை கட்டிக்கிட்டு ‌அலார்ட்டா வந்துடறேன் சீனு!

      Delete
  20. நேத்து மதிய ஆட்டம் போயிட்டு வந்து கொஞ்சம் நேரம் படுத்தவன் அப்டியே அசந்து தூங்கிட்டேன், அதன் நேத்து உங்களுக்கு போன் பண்ண முடியல.... இன்னிக்கு சாயங்காலம் மின்னல் என மின்னிய பதிவர்ன்னு என்ன பதிவு போட வச்சிராதீங்க... கண்டிப்பா வந்த்ருங்க ....

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இவன் குறி வெக்க மாட்டான். வெச்சா குறி தப்பாது சீனு. கரெக்டா வந்திருவான்ல!

      Delete
  21. இடையில கொஞ்ச நாளா பதிவுலகத்துல கலாய்க்கப்படும் பதிவுகள் குறைஞ்சு இருந்தது, மறுபடியும் ஆரம்பித்து வச்சிருக்கீங்க, எங்க போய் முடியப் போகுதோ, அட ஆண்டவா இது உனக்கே அடுக்குமா...

    இந்தப் பக்கம் நம்ம சங்கத்து ஆளுங்க வராத வரைக்கும் நாந் தப்பிச்சேன்....

    ReplyDelete
    Replies
    1. கவலப்படாத சீனு. நம்ம சங்கத்து ஆளுங்கல்லாம் என்னை மாதிரி மைல்டா கலாய்க்க மாட்டாங்க. அங்க சிக்கற ஆளு(டு)ங்கதான் பரிதாபம்! மிக்க நன்றி!

      Delete
  22. நல்ல குரு..நல்ல சிஷ்யன்.

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ மெட்ராஸ் பேச்சுல கொஞ்சம் நக்கல் தெரியுதே... அதுசரி நாம் எப்ப சந்திக்கப் போறோம்...

      Delete
    2. ஆமாம் சிவா... நல்லதொரு குரு-சிஷ்யன்தான் நாங்கள் என்பதில் எனக்கு மகிழ்வே! மிக்க நன்றி! என்ன சீனு... அடுத்த ஆடா சிவாவை எடுத்துக்கலாமா?

      Delete
  23. கலாய்க்கும் நகைச்சுவைப் பதிவானாலும் பழைய படங்கள் குறித்த கருத்தை அழகாகப் புகுத்தியிருக்கிறீர்கள். அருமை சார்.

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் சிலர் கேட்பதுண்டு எழில்... ஏன் எப்பவும் பழைய படங்களைப் பற்றியே பெருமை பேசுகிறாய் என்று. இப்போது இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக்ப் பயன்படுத்திக் கொண்டு பதிலளித்தேன். உற்சாகம் தந்த உங்கள் வருகைக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  24. Really a good post. I enjoyed your style of writing from the first paragraph to last paragraph. The N.B. note still enjoyable and the reply of Mr.Seenu of your reaching the programme one day in advance is quite hilarious. Even while waiting in the park your way of observing the people around you and describing their way of life sorry of walk of life is quite interesting. KEEP IT UP MR.BALAGANESH. Now onwards, I am sure Mr.Seenu will pick up the phone before it rings.
    In your imaginary discussion, you have mocked (kalaikairuthu) at Santhanan who mocks at others in films. Hats off!

    ReplyDelete
    Replies
    1. சந்தானத்தின் மீது இந்தக் குறை எனக்கு முன்பிருந்தே உண்டு மோகன். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சொல்ல முடிந்தது. நடை பழகியவர்களை கவனித்த என் அப்ஸர்வேஷனையும், எழுத்து நடையையும் பாராட்டியதோடு, சிஷ்யன் சீனுவின் கவுண்ட்டர் பதில்களையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி!

      Delete
  25. அத்தனையும் கற்பனையா ?

    ReplyDelete
    Replies
    1. சீனு ஆதிபகவன் பற்றிப் புலம்பியதும், ‘டாலர் நகரம்’ புத்தகம் தந்ததும் நிஜம். அந்த சந்திப்பில்தான் திங்களன்று பேசலாம் என்று சீனு சொல்லியிருந்தார். மற்றவையெல்லாம் நம்ம பில்டப்புதான் பிரபா! மிக்க நன்றி!

      Delete
  26. காத்து வாங்கிட்டே பார்க்கில் தூங்கியதில் கனவில் நடந்த சந்திப்புன்னு டிஸ்கியில் போட்டிருப்பீங்களோன்னு பார்த்தேன்.. நல்ல கலாய்த்தல் :-))))

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட டிஸ்கிய யூகிச்சிருககீங்க நீங்க! கில்லாடிங்க சாரல் மேடம்! கலாய்த்தலை ரசி்தத உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  27. எப்படி சார் இதெல்லாம்!!! நான் கூட இவ்ளோ விஷயம் டிஸ்கஸ் பண்ணி இருக்கீங்களேன்னு நினைச்சிட்டே படிச்சேன்..
    பாவம் சீனு.. பார்க்-கு வந்து இருக்கலாமேனு இப்ப பீல் பண்ணுவாங்க..

    அந்த காலத்து படம் பற்றி இப்படிகூட சுவையா பதிவிடலாம் னு தெரியுது சார்...சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. அது இது என்று இல்லாமல் மொத்தத்தையும் ரசித்து, எனக்கு தெம்பூட்டிய சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  28. கணேஷ் சார் படிச்சிட்டு எனக்கு ஒரே சிரிப்பு நான் கூட நெசமா சீனு வந்திருந்தார் போலிருக்கு நம்மளையெல்லாம் கூப்பிடலையே னு நினைச்சுகிட்டேன் கடைசியிலே தான் தெரிஞ்சுது

    (இனிம போன் பண்ணினா பயபுள்ள எடுக்காம இருக்கும்கறீங்க... ஹி... ஹி...)

    இனிமே சார் போன் பண்ணா உடனே எடுத்துடணும்

    கணேஷ் சார் : அங்க என்ன சத்தம்

    மனசாட்சியோட சும்மா பேசிகிட்டிருந்தேன் சார்

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நீங்கள் மனசாட்சியுடன் பேசியதை மிக ரசித்தேன் குடந்தையூராரே! ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  29. டைட்டில் கார்ட்ல போட வேண்டிய "இக்கதையில் வரும் யாவும் கற்பனையேன்னு' என்பதை என்ட் கார்ட்ல போட்டுட்டீங்கள்ளே...

    பதிவில் "பவர்ஸ்டார்" என்று குறிப்பிடாததற்கு சங்கம் சார்பாக கண்டிக்கிறோம். இதற்கு பரிகாரமாக சீனுவை கலாய்த்து மேலும் சில பதிவுகள் (இப்பதிவில் உள்ள சீனுவின் ட்ரேட்மார்க் புகைப்படத்துடன்) எழுதுமாறு.....


    நான் சொல்லலை.... ஹாரி சொல்லுவார்.... :) :) :)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹாரி சொல்லாட்டி என்ன... பாஷித் சொன்னாலே போறுமே... செஞ்சிடலாம்...! டைட்டில் கார்டுல போட்ருந்தா இந்த சுவாரஸ்யம் நிக்காமப் போய்டுமே நண்பா... அதான்!

      Delete
  30. //அன்பை வளர்க்கற மாதிரி படங்கள்தான் இப்பத் தேவை. தன் சித்தப்பா ஹார்ட் அட்டாக்ல ஆஸ்பத்திரில அட்மிட் ஆனாக்கூட சாத்துக்குடியும், ஹார்லிக்ஸும் குடுத்துட்டு, ஒரு தடவை பாத்துட்டு வந்துட்டா ‌போதும்கற அளவுலதான் இப்பல்லாம் பாசம் இருக்குது. இன்னொரு குடும்பத்தை கெடுக்கவும்... சில சமயங்கள்ல சொந்தக் குடும்பத்‌துலயே ஒருத்தரை வாழ விடாம செய்யவும் திட்டம் போடறதை விஸ்தாரமா காட்டி நம்ம டி.வி. சீரியல்கள் கட்டிக்கிட்ட புண்ணியம் அது! //

    வருத்தப்படக் கூடிய உண்மை.... :(

    ReplyDelete
    Replies
    1. கலாய்த்தலின் ஊடாக என் மனதில் ஓடிய கருத்தை கச்சிதமாகக் கவ்விக் கொண்டு ஆமோதித்த நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  31. மிலிட்டரி மார்‌ச் போல கைகளை வீசி சீரான ஒழுங்குடன் நடந்து செல்லும் முதியவர், ‘என்னையாடா சண்டைக்குக் கூப்பிட்டே?’ என்கிற தினுசில் கைகளை வீசி அதிர அதிர நடந்து வரும் ஒரு குண்டு மாமி, அது நடையா இல்லை ஓட்டமா என்று தெரியாதபடி நடையோட்டமாகச் சென்ற ஒரு மத்திய வயது நபர், பின்னாலேயே அவர் நடந்து வருகிறாரா, இல்லை காற்று அவரைத் தள்ளிக் கொண்டு வருகிறதா என்ற குழப்பம் ஏற்படும்படி நம்ம ‘சேட்டையண்ணா’ மாதிரி ஊசி உடம்புடன் ஒருவர், அதற்குப் பின்னால் ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டு.. காதலன் - என்றுதான் நினைக்கிறேன். கணவனாக இருந்தால் அவன் முகத்தில் சிரிப்பிருந்திருக்காது, தோளில் கை போட்டிருக்க மாட்டான் - அப்பப்பா.//சரிதா மணாளருக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி..ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமென்ன கொஞ்சம்... நிறையவே ஜாஸ்திங்கறதுதான் உங்களுக்குத் தெரியுமே சிஸ்!

      Delete
  32. அப்பனே சீனு! ‘நான் எப்போ வாத்யாரே பார்க்குக்கு வந்தேன்? இப்பிடி என்னை மாட்டி விட்டுட்டீங்களே’ன்னு அப்பாவித்தனமா கமெண்ட் போட்டுராத! நேத்து போன் அடிச்சும் நீ எடுக்காதததால நான் மட்டும் பார்க் போய் காத்து வாங்கினேன். அப்படியே நீ வந்தா என்ன பேசியிருப்போம்ங்கறதை மனசுல ஓட்டி எழுதிட்டேன்கற விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்! யார்ட்டயும் சொல்லிராத! அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பயும் சொல்லிராத! (இனிம போன் பண்ணினா பயபுள்ள எடுக்காம இருக்கும்கறீங்க... ஹி... ஹி...)
    ///அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இப்படி கவுத்திட்டீங்களே அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... கடைசில இப்படி ஒரு வார்த்தை வரணும்னுதான் ஆசைப்பட்டேன். அந்த வகையில வெற்றிதான்! ரசிச்சுப் படிச்சுக் கருத்திட்ட தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  33. ஆரம்பத்துல ரெட் கலர் எழுத்துகள படிச்சவுடனே சுதாரிச்சுருக்கணும் . கட்சி வரைக்கும் படிச்சு சிரிச்சு ...கடசில ஹி ஹி இன்னு வழிய வச்சுட்டீங்க .... ஜாலிக்கோ ஜிம்கானா ....

    ReplyDelete
    Replies
    1. ஜாலிலோ ஜிம்கானா தான் சுப்பு! சுதாரிக்கறதுக்கு முன்னாலயே பூந்து அடிச்சிடறதுதான் நம்ம ஸ்பெஷாலிட்டியே! ஹி ஹின்னு வழிஞ்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  34. அபார கற்பனை .
    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க .
    சிரித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் பிடித்த கவிஞருக்கு என் படைப்பு ரசிச்சுச் சிரிக்கும் படி அமைஞ்சிருந்ததுன்னு நெனைக்கறப்ப மனசு பூரா மகிழ்ச்சியா இருக்கு. மனம் நிறைய நன்றி கவிஞரே!

      Delete
  35. ஏமாந்தே போனேன்;கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு உண்மையான சந்திப்பு போலவே ....
    சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. கடைசில இப்படி எதிர்பாராம பஞ்ச் வெக்கற விஷயத்துல எனக்கு குருவே நீங்கதானே செ.பி. ஸார். ஆனாலும் நீங்க இதை ரசிச்சு சூப்பர்னு ‌சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும் தெம்பாவும் இருக்கு. மிக்க நன்றி!

      Delete
  36. திடங்கொண்டு போராடியவரை
    அடங்கொண்டு போராடிய சீனு!வாக மாற்றிவிட்டீர்களே ...!!

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்கள்ல உரிமையா என்கிட்ட அடம் பிடிப்பார். அப்பவே இந்தத் தலைப்பை யோசிச்சு வெச்சிருந்தேன். இப்ப சூழ்நிலைக்குத் தக்கபடி செருகிட்டேன். படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  37. நான் அப்பவே நெனச்சேன்.

    ஏன் பாலகணேஷன் சார்...
    பார்க் பெஞ்சில உட்கார்ந்து கொண்டு...
    தனக்குத் தானே கையை ஆட்டி ஆட்டி
    தனியா சிரிச்சி சிரிச்சி பேசுறாரே....
    இவருக்கு “என்னாச்சி?“ என்று.

    இப்பத்தான் புரியுது.....

    பாலகணேஷ் ஐயா... உடம்பை நல்லா பாத்துக்கங்க.
    சீனு மாதிரி ஆவிங்க கிட்ட பேசினா....
    அவர்கிட்ட இருக்கிற “திடம்“ போய் “அடம்“ வந்திடுமாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா.... ஏற்கனவே அவர்கூட பழகிட்டுதானே இருக்கேன். புதுசா எனக்கு எதுவும் ஆயிடாது அருணா. பழைய படங்கள் எனக்கு ஏன் பிடிக்கும்னு கேட்ட உஙகளுக்கு பதில் ‌சொல்லத்தான் பதிவை எழுத ஆரம்பிச்சேன். சீனு மேட்டரும் மனசுல வந்ததும் டபுள் ட்ரீட்டாக்கிட்டேன் இதை. படிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  38. சிரிப்பின் ஊடே சிந்திக்கும் பகிர்வு உண்மையில் புதுப்படத்திற்கு பல பதிவு வருகின்றது தங்களைப்போன்றோர் மூலம் தான் பழைய விடயங்களை ஞாபகப்படுத்த முடிகின்றது அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அதையே இனியும் தொடர உத்தேசம் நேசன்! அடுத்ததா ஊ.வ.உ. படத்துக்கு விமர்சனம் எழுதறதா எண்ணியிருக்கேன்.

      Delete
  39. கடைசி வரை நானும் நம்பி இருந்தேன் சீனு வந்து சந்திச்சார் என்று கடைசில் பூ காதில்:))))

    ReplyDelete
    Replies
    1. ஏமாத்தினதுக்கு ஸாரி நேசன். ஆனாலும் சந்தோஷமாத்தான் ஏமாந்திருப்பீங்கன்னு நம்பறேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  40. தொடக்கத்தில் இருந்தே சிரிச்சுட்டே வாசிச்சேன் அண்ணா.. நெருக்கமானவர்களைக் கலாய்க்கிறதில என்னா சந்தோசம்... கடைசியில வந்து தான் அது கலாய்த்தல் என்று புரிஞ்சுது... உங்கள் எழுத்துநடை சூப்பர்..:))

    ReplyDelete
  41. அடங்கொண்டு போராடிய சீனுன்னு தலைப்பை பார்த்ததுமே யோசிச்சேன்! ஏதாவது ட்விஸ்ட் இருக்குமுன்னு! கடைசியில நல்ல ட்விஸ்ட்! அருமை!

    ReplyDelete
  42. ஆஹா! கற்பனை சந்திப்பு பிரமாதமா இருந்தது...

    ReplyDelete
  43. ஆனாலும் சீனு சார் ரொம்ப பாவம்!

    ReplyDelete
  44. // ‘அன்னை’ன்னு ஒரு படத்துல சந்திரபாபு வீட்டுக்குள்ள புகுந்த ஒரு பெருச்சாளியை அடிச்சுக் ‌‌கொல்றேன்னு மத்த நகைச்சுவை நடிகர்கள் துணையோட ஒரு கலாட்டா பண்ணுவாரு பாரு...//நான் மிக ரசித்த காட்சி. சந்திரபாபு எனக்கு மிக பிடித்த கலைனர்.

    பழைய படங்களில் தான் உயிர் உள்ளது என்பதில் நான் உங்கள் கட்சி.

    ReplyDelete
  45. தலைப்பும், கடைசி திருப்பமும் அருமை. உங்களின் எழுத்து நடை நன்றாக உள்ளது. நன்றி.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube