Friday, March 1, 2013

தெரியுமா இவரை? - 4

Posted by பால கணேஷ் Friday, March 01, 2013
========================================================
‌எச்சரிக்கை : சற்றே நீண்ட பயணம்! கவனமாகச் செல்க!
========================================================

                         ஹோசிமின் (Ho Chí Minh)

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில் சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, ‌அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...

இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வெச்ச பேரு சிங்சுங். அப்ப... ‘ஹோசிமின்’ அப்படிங்கற பேர் எப்படி வந்‌துச்சுன்னு யோசிக்கறீங்களா? ‘‌ஹோசிமின்’ என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர்ங்கறதால மக்கள் வெச்ச பேரு அது. அதுவே நிலைச்சுடுச்சுன்னா எந்த அளவுக்கு மக்கள் தலைவரா இருந்திருப்பாருன்னு பாத்துக்கங்க.

பிரான்ஸ் தனக்கு தோதானவங்களை வியட்நாம் அரசுல அமர்த்திட்டு அவங்களை வெச்சு பொம்மலாட்ட அரசியல் நடத்திட்டிருந்துச்சு. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேக்கற வேலையத்தான் சிறுவனா இருந்தப்ப ஹோசிமின் செஞ்சாரு. உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யறப்பவே நாட்டு விடுதலைககாக ஏதாச்சும் செய்யணும்ங்‌கற அழுத்தமான விதை இவர் மனசுல விழுந்துருச்சுங்க. இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினாரு. பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னால ஒண்ணும் வேலைக்காவலை. சரின்னு பிரான்ஸுக்கே போய், பாரீஸ்ல ஒரு தபால் நிலையத்துல வேலை பாத்துக்கிட்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதிச்சாங்கன்றதுல இருந்து பல தகவல்களை சேகரிசசுக்கிட்டாரு.

வியட்நாமுக்கு அவர்  திரும்ப வந்தப்ப... 1940ம் ஆண்டு. அப்ப பிரான்ஸ் கிட்ட இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றிச்சு. பிரான்ஸோட கொடுமைல இருந்து விடுபட்டாச் சரின்னுட்டு வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு த்நதாங்க. ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைங்க அடிமைங்க தானே... அதனால இவங்களை விரட்டியடிச்சு நாம சுதந்திர நாடாகணும்’’ அப்படின்னு மக்கள்கிட்ட முழங்கி, எழுச்சியை உண்டுபண்ண முயன்றாருங்க ஹோசிமின். இதை வேடிக்கை பாத்துட்டிருக்க ஜப்பான் அரசு என்ன இனா வானாக்களா? இவரை நசுககிடலாம்னு முனைஞ்சது. வியட்நாமில் இருந்த அடர்ந்த காடுகள் ஹோசிமினுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவர் ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினாரு. (நோ... நோ... காட்ல இருந்த கொரில்லாக் குரங்குகளை வெச்சு இல்ல... மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குதல் நடத்துறவங்களுக்கு கொரில்லாப் படைன்னு பேரு.) அந்த  கொரில்லாப் படைக்குப் பயிற்சி கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்துக்காக கொக்கு மாதிரி காத்திருந்தார்.

1945ம் வருஷத்துல ஜப்பான் மீது குண்டுகள் வீசப்பட்டு, அது கலகலத்துப் போயிருந்த சமயம்... பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றுவதற்கு முன்னால தன் கொரில்லாப் படையோட ஹோசிமின் ஜப்பானியர்களை விரட்டியடிச்சு, நாட்டைக் கைப்பத்திட்டாரு. சின்ன வயசுலருந்து அவர் வெச்சிருந்த ஆசை நிறைவேறிட்ட சந்தோஷத்தோட வியட்நாம் சுதந்திர நாடாயிட்டதா உலகத்துக்கு பறை சாற்றினாரு. கையோட தேர்தலையும் நடத்த... அவர் கட்சி ஜெயிச்சு நாட்டுக்கு அவர் தலைவரானாரு. பிரான்ஸ் கொஞ்சம் லேட்டா சுதாரிச்சுக்கிட்டு யுத்தத்துக்கு படைதிரட்டி வந்துச்சு. வியட்நாமில யுத்தம் ஆரம்பிச்சது.

போர்க் கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள்னு இப்படி சகல ஆயுத வசதிகளோடயும் இருந்த பிரான்ஸை போதிய ஆயுத வசதிகள் இல்லாத ஹோசிமின், ‘‘எங்கள்ட்ட வாலாட்டினா கடைசில தோக்கறது நீங்களாதான் இருப்பீங்க’’ன்னு எச்சரிச்சாரு. ‘ஹா... ஹா... நல்லாவே ஜோககடிக்கிறாரு இவரு’ன்னு சிரிச்சுக்கிட்டே வந்த பிரான்ஸ், ஐம்பத்தைந்து நாட்கள் நடந்த போரில, காட்டில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்த ஹோசிமின் படைகளை எதிர்கொள்ள முடியாம மண்ணைக் கவ்வுச்சு. பிரான்ஸ் இப்படி தோல்வியைச் சந்திச்சாலும் தெற்கு வியட்நாம் அதோட கட்டுப்பாட்டிலதான் இருந்து்ச்சு. வடக்கு்ப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். ‘என் நாட்டை முழுமையா மீட்டே தீருவேன்’ன்னாரு ஹோசிமின்.

அசைவின்றி, சத்தமின்றி எரியும் புத்தபிட்சு!
பிரான்ஸ், ஹோசிமினை ஒரு கம்யூனிஸ்ட்னு சொல்லி அமெரிக்கா கிட்ட உதவி கேட்டுச்சு. கட்டப் பஞ்சாயத்துன்னா குஷியாகற, கம்யூனிஸ்ட்ன்னாலே பிடிககாத அமெரிக்கா  பிரான்ஸுக்கு ஆயுத உதவி பண்ணிச்சு. வியட்நாம் பூரா குண்டு மழை, துப்பாககி சத்தம்தான். பல ஆண்டுகள் ஹோசிமின் படை பிரான்ஸுக்கு தண்ணி காட்ட, அந்த கேப்ல அமெரிக்கால மூணு ஜனாதிபதிகளே பதவி மாறிட்டாங்கன்னா பாத்துக்குங்களேன். ‘சரி, இதெல்லாம் வேலைக்காவாது’ன்னு முடிவுகட்டி அமெரிக்காவே 1965ம் ஆண்டு நேரடியா போர்ல இறங்கிச்சு. அங்க புடிச்சது அமெரிக்காவுக்கு சனி. அதுவரைக்கும் தோல்வியே காணாத அமெரிக்காவோட மூக்கை உடைச்சாரு ஹோசிமின்.

எப்படிங்கறீங்களா...? அமெரிக்கப் படைங்க இரக்கமே இல்லாம வடக்கு வியட்நாம் மேல மானாவாரியா குண்டு வீசித் தாக்க ஆரம்பிச்சது. நிறைய கொரில்லா வீரர்களை வீழ்த்தியதா கொக்கரிச்சது. உண்மையில கொரிலாக்களால நிறைய அமெரிக்க வீரர்கள் இறந்ததையும், பலர் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடினதையும் அமெரிக்கா மறைச்சுட்டது. ‘சமாதானமாப் போயிடலாமே. வடக்கு வியட்நாமை மட்டும் நீ வெச்சுக்கோ’ன்னு ஹோசிமினுக்கு தூது விட்டுச்சு. ‘சுதந்திர நாடே என் லட்சியம்’னு உறுதியா முழங்கினாரு ஹோசிமின்.

1968ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமி்ட்டிருந்த அமெரிக்கப் படைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்துல இருந்த சமயம், சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினோட படைகள் திடீர்னு வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டாங்க. அமெரிக்க தூதரக அலுவலகம் உட்பட கொரில்லாப் படையினர் கைப்பற்றிட்டாங்க. இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிச்சுக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுச்சு. கம்யூனிஸ்ட்னு சந்தேகப்படற அப்பாவி பொதுஜனங்களைக் கூட கேள்விமுறையில்லாம சுட்டுத் தள்ளினாங்க. வயசானவங்க, குழந்தைங்கன்னு எந்த இரக்கமும் பார்க்கல. அவ்வளவுதான்... அது‌வரைக்கும் ‌ஹோசிமினோட கொரில்லாப் படைகள்தான் போராடிக்கிட்டிருந்துச்சு. இப்ப பொதுமக்கள்லருந்து புத்தபிட்சுக்கள் கூட போராட ஆரம்பிச்சாங்க. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இல்லாம புத்தபிட்சுக்கள் நடுரோட்ல தங்களைத் தாங்களே எரிச்சுககிட்டாங்க. இதையெல்லாம் டி.வி.யில பாத்த அமெரிக்க ஜனங்களே, தங்கள் அரசை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்ப எலக்ஷன் டயம்ங்கறதால ‘வியட்நாம்லருந்து படைகளை விலக்கிக் கொள்வேன்’னு உறுதிமொழி தந்து ஜனாதிபதியானாரு நிக்ஸன். (பி்னனால வாட்டர்கேட் ஊழல்ல பேர் நாறின அதே ஆசாமிதாங்க). படைகளை விலக்கிக்கற மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே, வியட்நாம் மேல தாக்குதலை தீவிரமாக்கி டபுள் கேம் ஆடினாரு அந்த பாவி மனுஷன்! ஏதோ உலகப் போர் ரேஞ்க்கு விமானங்கள் குண்டு மழை பொழிய... இடைவிடாத யுத்த பூமியாகவே தொடர்ந்தது வியட்நாம். இந்த நிலையிலதான் ஒரு பெரிய திருப்பம் வந்துச்சுங்க. 1972 மார்ச் மாசத்துல ‘நேப்பாம்’ங்கற கொடூரமான குண்டை அமெரிக்கா வீச, ஒரு வியட்நாமிய கிராமமே பத்தி எரிஞ்சுச்சு. அதுல தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றிட்டு நிர்வாணமா கதறிக்கிட்டு ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). அமெரிக்காவுலயே ஜனங்கள்ட்டருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த அதேசமயம் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டிச்சுக் குரல் கொடுத்து பாய ஆரம்பிச்சுச்சு.

கடைசியில வேற வழியே இல்லாம எல்லாத் துருப்புகளையும் வாபஸ் வாங்கிக்கிட்டாரு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன். வட வியட்நாம், தென் வியட்நாமோட இணைச்சு ஒரே சுதந்திர நாடாக மாறிச்சு. ஆனா விதியோட ‌கொடுமையான விளையாட்டு என்னன்னா... இதைப் பாக்கறதுக்கு ஹோசிமின் உயிரோட இல்ல. அதற்கு முன்னாலேயே இறந்து விட்டிருந்தார். அவர் இறந்தாலும் அவரோட புகழ் இறக்கலை. வெற்றிக்கு அருகாமை வரை தங்களை வழிநடத்தின அந்தத் தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள் ஒரு்ங்கிணைந்த வியட்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பேர் வெச்சு கெளரவப்படு்த்தினாங்க. ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!

46 comments:

  1. ஹோசிமின் அவர்கள் பற்றிய நிறைய தகவல்கள்
    தெரிந்துகொண்டேன் நண்பரே...
    திடமான நம்பிக்கை இருந்தால்
    திரைகடலும் முழங்கால் அளவுதான்
    என்று உச்சரிக்கும் இவரின்
    வரலாறு நமக்கு ஒரு அருமையான பாடம்...

    ReplyDelete
    Replies
    1. நன்று சொன்னீர் நண்பரே! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. அற்புதமான ஒரு மனிதர் பற்றிய சிறப்பான தகவல்கள்.....

    நல்ல பகிர்வு கணேஷ் அண்ணே!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்களும் அண்ணனாக்கிட்டீங்களா என்னை? சரிதான்... ரசித்துப் படித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி!

      Delete
  3. அற்புதமான பகிர்வு கணேஷ்ஜி..

    ReplyDelete
    Replies
    1. ரசித்து, பாராட்டி தெம்பூட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  4. முக்கிய மூன்றும் அவரிடம் உள்ளதால், அவரின் புகழ் என்றும் இருக்கும்...

    ஹோசிமின் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிய வைத்தமைக்கு நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  5. ஒரு Period Action படம் பாக்குற பீலிங் இருந்தது.. உங்க எழுத்து நடை அருமை. அந்த மூணு விஷயங்களும் இருக்கிறவங்க ஹோசிமின் ஆகுறாங்க, இல்லாதவங்க சிங்சுங் ஆவே இருந்திடறாங்க..

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ஆனந்த்! குணங்கள்தான் மனிதனை உயர்த்துது. என் எழுத்து நடையைப் பாராட்டின உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  6. //அசைவின்றி, சத்தமின்றி எரியும் புத்தபிட்சு!//

    போட்டோல எப்படி சார் அசைவும் சத்தமும் கேட்கும்.. ;-)

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆனந்து...! நிர்வாணமாய் ஓடி வரும் சிறுமின்னு எழுதியிருக்கேன். அவ ஓடி வரலையே, உறைஞ்சு போய்தான நிக்கிறான்னு கூடக் கேப்பீரு போலருக்கே...!

      Delete
  7. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் பார்த்த மாதிரி
    இருந்தது. அப்படியே நம்ம நாட்டு சுதந்திரத்துக்கான
    அஹிம்சா போராட்டமும் நினைவில் நிழலாடியது.
    தங்களின் சுயலாபத்திற்காக சிறிதும் மனிதாபமின்றி
    எல்லை மீறி மற்ற நாடுகளை அடிமைப்படுத்தும்
    சர்வாதிகார போக்கு உலகெங்குமே உள்ளது என்பதைப்
    பார்த்து அதிர்ச்சியாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது.
    அதிலும் அந்த சிறுமியின் வலி நெஞ்சை உலுக்கியது
    உண்மை. என்ன மன உறுதி வாய்ந்தவர்கள் அந்த பிட்சுக்கள் .
    இதைப் போன்றதொரு வீரமிக்க தலைவரைப் பெற அந்த நாடு
    தவம் செய்து இருக்க வேண்டும்.
    இந்த அற்புத வரலாற்றை வெளிக் கொண்டு வர உங்களின்
    கடின உழைப்பு தெரிகிறது.
    hats off to both of you !

    ReplyDelete
    Replies
    1. உள்ளம் நிறைய உற்சாகத்தை நிரப்பியது உங்களின் கருத்து தோழி. அதைத் தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. Yes this is how a leader should be like to fight for his country till he breathes last. No doubt the people of vietnam are really great and gratitude enough to call their capital city after his name. America even today does the same thing interfering in other country's politics unnecessarily and they back out only after their own citizens criticise their leader. With Iraq also it did the same thing and they lost two towers because of this. Will they ever learn any lessons from their past wrong doings?

    ReplyDelete
    Replies
    1. இந்த ‘நாட்டாமை’ மனப்பான்மை இன்னமும் அமெரிக்காட்ட இருக்குன்னாலும், இந்தியா, சீனா மாதிரி நாடுகள் வல்லரசா வளர்ந்த பிறகு கொஞ்சமே கொஞ்ச்ச்சம் வாலைச் சுருட்டியிருக்குன்னு தோணுது மோகன். இனி நிறையப் பாடங்கள் கிடைக்கவிருக்குன்னும் எனக்குத் தோணுது. மிக்க நன்றி!

      Delete
  9. சிறப்பான மனிதரை பற்றிய அறிமுகம் அருமை.ஹோசிமின் அவர்களிடமிருந்த அந்த மூன்றும் நம்ம கிட்ட இருந்தா நிச்சயம் வெல்லலாம்.....

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் தோழி. அரிய குணங்களை நாமும் கைப்பற்ற முயல்வோம். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  10. சிறந்த போராளி ஹோசிமின் பற்றி அனைவரும் அறிந்திட சிறப்பான பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. படித்து, அறிந்து ரசித்திட்ட நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. ஹோசிமின் பற்றி நான் ஆர்வமா படிச்சிருக்கேன்.புத்தகத்தில எழுதியும் இருக்கிறேன். வரலாற்றையே உலுக்கி போட்ட அந்த சம்பவங்களை விறு விறுப்பா சொல்லியதற்கு நன்றி! தோற்றத்தை வைத்து ஒருவர் பலத்தை எடை போட முடியாது என்பதற்கு ஹோசிமினே நல்ல உதாரணம். தெரியுமா இவரை தொடர்- கட்டுரை உங்கள் சிறப்பான பணி.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தொடர் கட்டுரையைப் பாராட்டி தெம்பூட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! நீங்கள் புத்தகத்தில் எழுதியதை உங்கள் தளத்தில் பகிருங்களேன் உஷா... நானும் படித்து ரசிக்கிறேன். உங்கள் தளத்துக்கு வரும் அன்பர்களுக்கும் சென்று சேருமே!

      Delete
  12. சிறப்பான மனிதரை பகிர்ந்துள்ளீர்கள். அறிந்துகொண்டோம்.

    ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பெயர்வைத்து நினைவுகொள்வது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊர்ல தலைவர்கள் வாழும்போதே அவு்ங்கவங்க பேரை நகரங்களுக்கும் இடத்துக்கும் வெச்சு பெரு(சிறு)மைப்பட்டுக்கறாங்க. இவர் பேரை மக்கள் விரும்பி சூட்டினதுதான் சிறப்பே. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  13. //அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). //

    நீங்கள் கடைசியாக பகிர்ந்துள்ள உலக வரலாற்றி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் பற்றி பத்திரிக்கையிலும் படித்துள்ளேன்

    மிக அருமையான தகவல்... இவரையும் தெரிந்து கொண்டேன் - 4

    ReplyDelete
    Replies
    1. படித்தும், இங்கு கண்டு அறிந்தும் கொண்ட சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  14. அருமையான பகிர்வு.
    (மீண்டும் வந்து பொறுமையாக படிக்க வேண்டும்)
    திரும்பவம் வருகிறேன் பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. என் நண்பர்கள் எப்ப வந்தாலும், எத்‌தனை முறை வ்நதாலும் மகிழ்ச்சியே அருணா. ஆனா அவசியம் வந்து படிங்க அருணா. அருமையான மனிதரை நீங்களும் அறிமுகப்படுத்திக்கங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. அருமையான மனிதரைப்பற்றி சிறப்பான தகவல்களை பகிர்ந்திருக்கீங்க.மிக்க நன்றி கணேஷ்.

    மனதை கலங்க வைக்கும் படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து, ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. அருமையான கட்டுரை...
    ஹோசிமின் பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...

    பகிர்வுக்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... குமாரும் அண்ணான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரே...! மகிழ்ச்சி! ரசித்துப் படித்து கருத்துக்களை அறிந்து கொண்டமைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. ஹோசிமின் திடமான நாட்டுப்பற்றாளர் என்று சொல்ல முடியும் நல்ல பகிர்வை பகிர்ந்ததுக்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்து வாழ்த்திய நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. சிறப்பான பதிவு..தெரியாத தலைவரைத் தெரிந்துக் கொண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து கொண்டதுடன் பதிவையும் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  19. ஒரு உணர்வு பூர்வமான வரலாறை அற்புதமா சொல்லி இருக்கீங்க. நிறைய தகவல்கள்.ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் நடத்தற பாடம் மாதிரி சுவாரசியம்.

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றுப் பாடத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. அசத்தல் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நறுக்கென்று ஒற்றை வரியில் பாராட்டி மனதிற்கு உற்சாகம் தந்த தங்கைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  21. ஹோசிமின் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவியிருக்கிறீர்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  22. வணக்கம் அண்ணா, முதல் தடவையா உங்க வலைப்பூவுக்குள் கால் வைத்திருக்கிறேன்.. வரவேற்பே புரட்சிகரமாக இருக்கு... நீண்ட பயணமாக இருந்தாலும், உணர்வுபூர்வமான பயணம்... வியட்நாம் போரைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் உங்கள் எழுத்து நடையில் இலகுவாகப் புரிந்துகொண்டேன்...
    சுதந்திரம் கிடைக்கும் போது அதற்காக பாடுபட்ட தலைவனை இழந்த மக்களின் நிலை தான் எமக்கும்... எனவே எமக்கு கோசிமின் மிகவும் உயர்ந்த ஒரு வீரரே.. அவரைப் பொருத்தமான காலத்தில் நீங்கள் இங்கே ஞாபகப்படுத்தியிருப்பதே ஹைலைட்..
    ////ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!//// நிச்சயமாக நான் அனைவரும் சிந்திக்க, மனதில் பதிந்துகொள்ள வேண்டிய விடயமே...அருமையான பகிர்வுக்காக நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையிலேயே அண்ணா என்று பாசமுடன அழைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி பூங்கோதை. எனக்கும் இவரின் சரித்திரத்தை எழுத தகவல் திரட்டியபோது நமது தமிழ் மக்களின் நிலைதான் மனதில் வந்து‌போனது. சமகால சரித்திரத்தி‌னை நினைவுபடுத்தும் வாழ்க்கைதான் அவருடையது. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்கைக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  23. ஹோசிமின் பதிவு சிறந்தது. மிக்க நன்றி. ரசித்து வாசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  24. ஒரு புது தலைவரைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன்! பகிர்வுக்கு நன்றி! நல்ல வேளை நீங்க அந்த கொரில்லா படையில இல்ல! இல்லாட்டி சீனு சார் மாதிரி இந்த தலைவரும் .... பாவம்..... அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube