அனைவருக்கும் வணக்கம்!
நண்பர் சிரிப்பானந்தா என்னுடைய ஜோக்குகளால உங்களைச் சிரிக்க வெப்பேன்னு சொன்னார். நான் என் ஜோக்கு(!)களைச் சொல்லி இங்க கூடியிருக்கற கூட்டத்தைக் கலைக்க விரும்பாததால நான் படிச்ச ‘மேதைகளின் நகைச்சுவை’களை உங்க எல்லாரோடயும் ஷேர் பண்ணிக்கப் போறேன். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை உங்க எல்லாருக்கும் தெரியும். அவர் ஒருநாள் ஓய்வில் தன் வீட்டில் உட்கார்ந்து வயலின் வாசிச்சுக்கிட்டிருந்தார். அவரோட வயலின் இசையைப் பொறுக்கமுடியாம பக்கத்து வீட்டில் குடியிருந்த நகைச்சுவை நடிகர் ஒருவர் ஓடிவந்தார். ‘‘ஐன்ஸ்டீன்! வாசிப்பதை நிறுத்துங்கள் என்னால் சகிக்க முடியவில்லை!’’ என்று கத்தினார். ஐன்ஸ்டீன் வாசிப்பதை நிறுத்திவிட்டு, ‘‘நீங்கள்கூடத்தான் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறீர்கள். நான் என்றைக்காவது சிரித்திருக்கிறேனா?’’ என்று கேட்டார். பக்கத்து வீட்டுக்காரர் தலையைப் பிய்த்துக் கொண்டார். அவ்வளவு இம்சை செய்தது ஐன்ஸ்டீனின் வயலின்.
வயலின் இசையால் துன்பப்பட்ட இன்னொரு அறிஞர் பெர்னார்ட்ஷா. உலகப்புகழ் பெற்ற நாடக ஆசிரியரான அவர் ஒரு நல்ல இசை ரசிகரும், விமர்சகரும் கூட. அவர் ஒரு வயலின் இசைக் கச்சேரிக்குப் போயிருந்தப்ப, வாசிச்சவர் படு திராபையா வாசிச்சிருக்காரு. பெர்னார்ட் ஷாவுக்குப் பொறுக்கலை. ரெண்டு பாட்டு வாசிச்சவர், மூணாவது பாட்டு வாசிக்கறதுக்கு முன்னால முன் வரிசையில இருந்த ஷாவைப் பாத்து, ‘‘வாட் கேன் ஐ ப்ளே நெக்ஸ்ட் ஸார்?’’ன்னு கேட்டார். எரிச்சலின் உச்சியிலிருந்த ஷா, ‘‘பெட்டர் யூ ப்ளே கோலிகுண்டு!’’ என்றார். அப்படிக் குசும்பு பிடிச்ச பெர்னார்ட் ஷாவையே மூக்குடைபட வெச்சவர் சர்ச்சில்.

நானே தானுங்கோ...! |
சர்ச்சில் பிரிட்டின் பிரதமரா இருந்த சமயம், தன்னோட நாடகத்துக்கு ரெண்டு டிக்கெட்டை ஒரு கவர்ல வெச்சு கூடவே ஒரு லெட்டரையும் வெச்சாரு. ‘‘இத்துடன் என் நாடகத்துக்கு இரண்டு டிக்கெட் அனுப்பியுள்ளேன். உங்கள் நம்பரையும் அழைத்து வரவும். பின்குறிப்பு: அப்படி ஒருவர் இருந்தால்’’ என்று எழுதி அனுப்பினார். சர்ச்சில் பார்த்தாரு.. அதே டிக்கெட்டுகளை வேற கவர்ல போட்டு கூடவே அவர் ஒரு லெட்டர் வெச்சாரு: ‘‘நீங்கள் அனுப்பியுள்ள தேதியில் பிஸியாக இருப்பதால் என்னால் நாடகத்துக்கு வர இயலாது. இரண்டாவது முறை நாடகம் நடக்கும்போது டிக்கெட் அனுப்பவும். பின்குறிப்பு: அப்படி இரண்டாம்முறை நடந்தால்’’ன்னு எழுதி அனுப்பினார். ஷாவுக்கு சரியான மூக்குடைப்பு! சர்ச்சில் பேச்சுலகூட வல்லவருங்க. பாராளுமன்றத்துல ஒருமுறை அவர் பேசிக்கிட்டிருந்தப்ப, அவர் பேச்சுக்கு ஈடுகொடுத்து வாதாட முடியாத எதிர்க்கட்சி பெண் எம்.பி. ஒருவர் கோபமாயி, ‘‘நீங்க மட்டும் என் கணவரா வாய்ச்சிருந்தா, காப்பியில விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்’’ அப்படின்னாங்க. சர்ச்சில் ரொம்பக் கூலா... ‘‘உங்களை மாதிரி எனக்கு மனைவி வாய்ச்சிருந்தா, அதை சந்தோஷமா வாங்கிக் குடிச்சிருப்பேன்’’ன்னு சொன்னாரு பேச்சில் வல்ல அந்த மேல்நாட்டு அறிஞர்.
மேல்நாட்டு அறிஞர் மட்டுமில்லீங்க.. நம்நாட்டு அறிஞர்களும் பேச்சில் வல்லவங்கதான். அறிஞர் அண்ணா முதல்வரா இருந்தப்ப, பார்லிமென்ட்ல ஒரு எதிர்க்கட்சி நபர், ‘‘எங்க ஆட்சியிலதான் புளிய மரங்கள் நிறைய நட்டு. புளி விளைச்சல் அதிகமாகி புளியின் விலை குறைஞ்சது. இது யாருடைய சாதனை?’’ன்னு மேஜையில குத்திக் கேட்டாரு. அறிஞர் அண்ணா அலட்டிக்காம, ‘‘அது புளிய மரத்தின் சாதனை’’ என்று சொல்லி அவையை கலகலக்க வைத்தார். அரசியலுக்கு அடுத்தபடியா அண்ணாவுக்குப் பிடிச்ச விஷயம் சினிமா.
சினிமான்னதும் கண்ணதாசன் நினைவு வருது. ஒரு படக் கம்பெனியில அவரை பாட்டெழுதக் கேட்டாங்க. அவர் பிஸியா இருந்ததால அப்புறம் பாக்கலாம்னாரு. ‘‘மேயில சிங்கப்பூர்ல ஷூட்டிங் நடத்தணும் கவிஞரே...’’ன்னு அடுத்த வாரம் வந்து கேட்டாங்க. அப்பவும் பிஸி. ஏப்ரல் மாசம் முடிய ஒரு வாரம் இருந்தப்ப, எம்.எஸ்.வி.யோட வந்தாங்க. அவர் ‘‘கவிஞரே... மேயில ஷூட்டிங் போகணும்கறாங்க. பாட்டு...’’ன்னு கேக்கவும், கவிஞர் கோபமா, ‘‘என்னடா விசு மே... மேன்னுக்கிட்டு... இந்தா பாட்டு! அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே, கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே, கன்னித் தமிழ் வண்ணமே’ன்னு மே மேயாப் போட்டு அஞ்சே நிமிஷத்துல பாட்டு எழுதிக் குடுத்து அசர வெச்சாராம் அந்த மகத்தான கவிஞர்.

நான், திரு.அசோகமித்திரன், சீனு. |
கவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் ஒரு பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப, வாலி ஏதோ சொன்னதுல வாத்யாருக்கு கோபம் வந்துடுச்சு. ‘‘இந்த மாதிரி பேசினேன்னா, உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு. ‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே, ஆனா உங்க படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது’’ அப்படின்னாரு. எம்.ஜி.ஆர். வியப்பா, ‘‘ஏன் அப்படிச் சொல்றே?’’ன்னு கேக்கவும், ‘‘என் பேர் டைட்டில்ல வராம உங்க படம் வந்தா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு அசிங்கமா இருக்கும் அண்ணே!’’ன்னு வாலி சொல்லவும் கோபத்தை மறந்த குபீர்னு சிரிச்சுட்டாரு எம்.ஜி.ஆர்.
அதாங்க சிரிப்போட சக்தி! மனம் விட்டுச் சிரிச்சா எப்படிப்பட்ட கோபமும் போய்டும். கோபப்படறதுக்கு உடம்பில 247 நரம்புகள் செயல்படணுமாம். ஆனா சிரிக்கறதுக்கு 27 நரம்புகள் மட்டும செயல்பட்டா போதும், மனசும் லேசாயிடும். அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற சிரிப்பை எல்லாருக்கும் அள்ளி வழங்கி மகிழ்விக்கிற இந்த சிரிப்பரங்கத்துல, பெரிய எழுத்தாளர்களுக்கு மத்தியில இந்த சிறியவனும் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்த நண்பர் சிரிப்பானந்தாவுக்கும், பொறுமையாக் கேட்ட உங்க எல்லாருக்கும் என்னோட மனம் நிறைந்த நன்றி!
....என்ன பாக்கறீங்க...! நேத்துக்கு அம்பத்தூர்ல நடந்த ‘சிரிப்பரங்கம்’ நிகழ்ச்சியில நான் பேசின உரை (சந்தடிசாக்குல சுயதம்பட்டம் அடிச்சுக்கலைன்னா நாமல்லாம் பதிவரே இல்லியே... ஹி... ஹி...) இது. எழுத்தாளர் அசோகமித்திரனும், லதா சரவணனும் சிற(ரி)ப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். ‘பிரபல பதிவர்’ நம்ம சீனுவும் வந்திருந்தார். மனதுக்கு மகிழ்ச்சி தந்த அந்த மாலைப் பொழுதில் நான் பேசிய இந்தப் பேச்சை ரசித்துக் கேட்ட பலரும் பாராட்டியதில் மன நிறைவோடு வீடு திரும்பினேன்.
=============================================================
மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-2

|
|
Tweet | ||
சார்... சூப்பர்...
ReplyDeleteவாங்க நண்பா! முதல் நபராய் வ்ந்து சூப்பர்னு சுருக்கமாய் பாராட்டி என்னை மகிழ்ச்சியில துள்ள வெச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteகலக்கிட்டீங்க போங்க..!
ReplyDeleteரசித்துப் பாராட்டிய நண்பன் ஆனந்துக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteகாலைப் பொழுதை சிரிப்புடன் ஆரம்பித்து வைத்து விட்டீர்கள்..
ReplyDeleteஅதிகாலையில் படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே!
Deleteநான் போட்ட கம்மெண்டை காணோமே!
ReplyDeletespam உள்ளேயும் கூட உங்கள் கருத்து இல்லையே முரளி... என்ன பிரச்னையோ தெரியல. உங்கள் எண்ணத்தை சிரமம் பாராது மறுமுறை தீட்டி எனக்கு உற்சாகம் தரும்படி வேண்டுகிறேன். மிக்க நன்றி!
Deleteபுத்தம் புது காலை! மகிழ்வுடன் துவங்கியது. நன்றி நண்பரே.....
ReplyDeleteமகிழ்வுடன் துவங்கியது எனில் அதுதானே எனக்கும் மகிழ்வு! நன்றி நவின்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஒவ்வொரு நகைச்சுவையும் சூப்பர். பாடல்கள்ல அந்தாதி பாத்திருக்கேன். நகைச்சுவை அந்தாதி இப்பதான் பாக்கறேன்.அசத்திட்டீங்க..
ReplyDeleteஅந்தாதி ஸ்டைலை எழுத்தில முன்பே ஒருமுறை கையாண்டதுண்டு முரளி. லிங்க் இதோ:
Deletehttp://www.minnalvarigal.blogspot.com/2012/01/blog-post_22.html
பேச்சிலும் அதைச் செய்து பார்த்தாலென்ன என்றுதான் நேற்று முயன்றேன். அங்கும் பாராட்டு கிடைத்தது, இங்கும் நகைச்சுவை அந்தாதியை நீங்கள் ரசித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
பாடல்களில் அந்தாதி பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். நகைச்சுவை பேச்சில் அந்தாதியை பார்ப்பது இதுவே முதல் தடவை வாழ்த்துக்கள்!
ReplyDeleteநான் கோர்த்த இந்த அந்தாதியை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteவியந்து நோக்குகிறேன் நண்பரே...
ReplyDeleteநகைச்சுவை தொகுப்பிலும்
அந்தாதியைக் கையாண்டமை அழகோ அழகு...
முடிவில் ஒரு தொடக்கம் என்பது எனக்கு மிகப் பிடித்த வடிவம் மகேன்! கவிதைகளுக்கு மட்டும்தான் அந்த அந்தாதி ஸ்டைல் சொந்தமா என்று முடியும் போதெல்லாம் உரைநடையில் முயல்வதுண்டு நான். அதை நீங்கள் ரசித்து வியந்தமை கண்டு மகிழ்வில் பொங்குகிறது மனம். உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteசிரிக்கவும் வைத்து திகைக்கவும் வைத்து விட்டீர்கள்.பேச்சில் அந்தாதி..ஓ..பிரமாதம்.வாழ்த்துகக்ள்.
ReplyDeleteசிரித்து, திகைத்து பிரமாதம் என்று பாராட்டிய தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteசிரிப்பின் மகிமை கூறும் நண்பருக்கு என் வாழ்த்துக்கள் அருமையான பல தகவல்களையும் சிரிப்பின் ஊடே சிந்தக்கவும் வைத்தமைக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteநகைச்சுவையை மனம் விட்டு ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅருமையாய்ப் பேசி பதிவர்களின் பெருமையை
ReplyDeleteஒரு உயர்த்து உயர்த்தி இருக்கிறீர்கள் கணேஷ் சார்.
காபி , மே , வாலி அனைத்துமே டைமிங் ஆன ஜோக்குகள் .
மிகவும் ரசிக்க வைத்தன. எங்களால் சிரிப்பரங்கத்திற்கு
வர இயலாவிடினும் நீங்கள் தொகுத்து வெளியிட்டது
மனதிற்கு நிறைவைத் தந்தது . விரைவில் எங்க
ஏரியா பக்கமும் வருவீர்கள் தானே ?
படித்ததன் மூலமே கேட்டது போல ரசித்த உங்களுக்கு மிக்க நன்றி தோழி! உங்கள் ஏரியா பக்கம் வரும் வாரம் என் வரவு!
Deleteஇப்போது இங்கே இரவு 12.40 பதிவை படித்து சிரித்தேன் .இரவில் சிரிக்கும் என்னை யாரவது லூசுன்னு நினைக்க வைச்சிடுவீங்க போல ( உங்க மைண்ட்ல ஆமா இவரு சரியான லூசுதானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது நண்பரே )நகைச்சுவைகள் சுவராஸ்யமாக இருந்தன.
ReplyDeleteசேச்சே... என் நண்பர்களை அப்படில்லாம் என் மைண்ட் நினைக்காதுப்பா. சுவாரஸ்யம்னு ரசி்சச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteமிகவும் இரசித்தேன் நல்ல நகைச்சுவை!
ReplyDeleteVery nice. Enjoyed each and every matter. From my side, I want to contribute one : Two writers, let them be named as X and Y, (famous book writers) met in one of the parties hoisted by X on success of his book. Y took X to a corner of the party hall and asked him : "See, nobody is around us - tell me WHO WROTE THIS BOOK FOR YOU; for which X replied : leave that matter - now you tell me WHO READ IT FOR YOU"
ReplyDeleteரசிக்க வைத்த நகைச்சுவைத் துணுக்கு. நன்றிப்பா!
DeleteThere is one more song written by Kannadasan in the same manner : When one of the producers demanded him that his film was incomplete due to lack of only one song - Kannadasan wrote the song as PARTU ORE PATTU
ReplyDeleteம்... இது நான் கேட்ட தகவல்தான். இருப்பினும் இப்பவும் சுவையா இருக்குது!
DeleteMr. Bala Ganesh (I want to know ONE TRUTH FROM YOU (Courtesy : Mudal Mariyadai). I think some sort of tug of war is going on between you and Settaikaran - When you wrote about MGR, immediately,he posted in his blog about an article on Sivaji that too in a threadbare manner he has analysed the entire film of Vasantha Maligai (which was an utter flop in Hindi purely due to lack of similar acting from Rajesh Khanna). Any way I am enjoying both of your blogs since they are acting as TIME MACHINE for me as they took me immediately to my school days where two groups (one supporting MGR and other one Sivaji) used to fight with each other about the qualities of movies which were released then. Without seeing the movie, I came to know about every bit of the movie from their arguments and counter arguments. Similar feeling I am undergoing when I read your post on MGR and Settaikaran post on Sivaji. BOTH OF YOU - PLEASE KEEP IT UP.
ReplyDeleteநிச்சயம் தொடர்கிறோம் நண்பரே. அதைவிட வேறென்ன மகிழ்வான விஷயம் எமக்கு? உங்களுக்கு என் மனம் நிறைய ந்னறி!
Deleteஅந்தாதி சிரிப்பு அருமையிலும் அருமை.
ReplyDeleteஆரம்ப வார்த்தையான 'அனைவருக்கும்' என்ற வார்த்தையில் முடித்திருக்கலாமே? அதுவும் சுவையாயிருக்குமே?
அட... அந்தச் சமயத்துல இது தோணாமப் போயிருச்சே! ஐடியா சூப்பர்! சொன்ன, படி்த்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசுவையான பேச்சு...பதிவு. ஜாம்பவான் அசோகமித்திரன் அருகில் நிற்க நீங்களிருவரும் என்ன தவம் செய்தீர்கள்...
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம். அவர் புத்தகத்துல ஆட்டோகிராஃப் வாங்கிட்டு ரெண்டு வார்த்தை பேசிட்டு, அவர்கூட நின்னு போட்டோ எடுத்துக்கறப்ப அவ்ளவ் பெருமையா இருந்துச்சு. அனுபவச் சுரங்கமய்யா அவர்!
Deleteசார்... அசத்தல்.... கலக்கல்....
ReplyDeleteமனம் விட்டுப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteகலகலப்புதான் போங்க.. அசோகமித்திரன் அருகில் நீங்கள். அற்புத புகைப்படம். பத்திரப்படுத்துங்கள். தி கிரேட் ரைட்டர்.
ReplyDeleteஆம்! மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லாத கிரேட் ரைட்டர்! கலகலப்பை ரசித்த உங்களுக்கு என் .உளம் கனிந்த நன்றி!
Deleteஎல்லாமே நல்லாயிருக்கு மிக்க நன்றி சார்.................
ReplyDeleteநல்லாயிருக்குன்னு சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே!
Deleteநல்லதொரு உரை.... சிரிப்பையும், சிந்திக்கவும் வைத்தது.
ReplyDeleteவாழ்த்துகள் சார்.
சிரிப்பதுடன் சிந்திக்கவும் முடிந்தது என்று என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteசிரிப்பரங்கதுக்கு தொடர்ந்து சிற(ரி)ப்பு விருந்தினர் ஆகிடீங்களா!! எல்லாமே புது விஷயம் இன்னைக்கு!
ReplyDeleteவாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாமே!!
விட்ட வார்த்தையிலிருந்தே தொடங்கி அழகா பதிவு போட்டுடீங்க...
தொடர்ந்து இல்லம்மா... முடியறப்பல்லாம்! சிரித்து ரசித்த உனக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅட்டகாசம் போங்க .. எழுத்தாளர் இப்போ நல்ல பேச்சாளர் ...அப்ப அடுத்து ...?
ReplyDeleteஹச்சச்சோ... பேச்சாளர் ஆவறதுக்கெல்லாம் ரொம்ப வளரணுங்க. நானில்லை... ஏதோ நண்பர்கள் கூட்டமாச்சேன்னு பேசினேன். அவ்ளவ்தான். மிக்க நன்றி!
Deleteநல்ல பேச்சு! பகிர்விற்கு நன்றிகள்
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteநீங்க பேசியவை அனைத்துமே அருமை. அதிலும் வாலியின் பேச்சை நான் மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteபேச்சை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Delete// ‘பிரபல பதிவர்’ நம்ம சீனுவும் வந்திருந்தார்.// வாத்தியாரே இப்ப தான் என்ன ஓட்டி முடிசிருகீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்...
ReplyDeleteநேற்று உங்களது நகைச்சுவைகளை ரசிக்கும் பாக்கியம் யான் பெற்றேன்... இயல்பான பேச்சு அருமையாக இருந்தது... பதிவிலும் அது தொடர்வது தான் உங்கள் சாமர்த்தியம்
இல்லப்பா... இப்ப ஓட்டலை. மனப்பூர்வமாதான் பிரபல பதிவர்னு சொன்னேன். You Deserve It! என் சாமர்த்தியத்தை ரசித்த உனக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநகைச்சுவைகளில் எதார்மத்தமானவைகளைப்
ReplyDeleteபேசி இருக்கிறீர்கள்.
இரசித்துப் படித்தேன் பாலகணேஷ் ஐயா.
ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஅந்தாக்ஷரி பதிவு!
ReplyDeleteசி(ற)ரிப்பு பேச்சாளராக எல்லோரையும் சிரிக்க வைத்து, இங்கே எங்களையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.
அசத்தல் நகைச்சுவை!
அசத்தல் நகைச்சுவை என்று பாராட்டி தெம்பளித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஅரிய தகவல்கள், அருமையான பேச்சு!
ReplyDeleteஅசத்தீட்டீங்க!
அசத்தி்டீங்க என்ற சொல்லால் மகிழ்வு தந்த மதுரனுக்கு உளங்கனிந்த நன்றி!
Deleteநல்லா பேசியிருக்கீங்க...
ReplyDeleteகவிஞர் கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும்... அருமை...
ஆமாம். பல சூழல்களில் அவர் பாடல் இயுற்றிய விதம் மறக்க இயலாதது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஅசோகமித்திரன் இத்தனை மெலிந்திருக்கிறாரே? அவருக்கு எத்தனை வயதிருக்கும்?
ReplyDeleteஅண்ணாதுரை சொன்னது இன்னொருதுரை சொன்னது.
மே மேல என்ன காமெடி புரியலியே? இப்ப நீங்க பெரும்பேச்சாளரா? ஜமாய்ங்க சார். well deserved.
அசோகமித்திரன் தற்போது 85ம் வயதில் இருக்கிறார். அவர் எப்பவுமே மெலிந்த, ஊசி உடம்பு படைத்தவராகத்தானே இருந்திருக்கிறார்...! மே-ல என்ன காமெடியா..? ஒரு புளோவுல போறப்ப நடுவுல வந்துடறது இப்படி. கதை சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது. ஹி... ஹி... அப்புறம்... பெரும் பேச்சாளர்லாம் இல்ல அப்பாஸார்... இப்பதான் மைக்க எப்படி புடிச்சு பேசணும்னே கத்துக்கிட்டிருக்கேன். தெம்புதரும் உங்கள் வாழ்த்துகளின் துணையில் ஜமாய்ச்சிட முடியும் நிறைய! மிக்க நன்றி!
Delete.//பேசணும்னே கத்துக்கிட்டிருக்கேன்.// ..
ReplyDeleteகத்துகிட்டா, கணேஷண்ணா பொய்யெல்லாம் சொல்லபுடாது அண்ணிகிட்ட கேக்கட்டா, [அதுவும் சாந்தி அண்ணிகிட்ட],
ஜமாய்ச்சிட முடியும் நிறைய!//
அதெல்லாம் தாராளமா ஜமாய்ச்சிட முடியும் நிறைய! நிறைய கலக்குங்கண்ணா..
ஜமாய்ச்சிட முடியும் கலக்குங்கண்ணா-ங்கற வார்த்தையே மனசுக்கு யானை பலம் தருதும்மா. மிக்க நன்றி. என்னாது...? சாந்ந்ந்தி அண்ணியா? அவ்வ்வ்வ்வ்வ்! மீ எஸ்கேப்!
Deleteயாரிந்த மைக் மோகன்னு பார்த்தாஆஆ...நம்ம கணேஷ்! ஆஹா இந்த நிகழ்ச்சிக்கு நீங்களும் போனீங்களா தமிழ்த்தேனி என்பவரும் குழுமத்தில் எழுதி இருந்தார்..மேதைகளின் நகைச்சுவை கல்யாண விருந்துதான்!
ReplyDeleteஆமாக்கா... தமிழத்தேனி அவர்களையும் சென்ற கூட்டத்திலும் இப்போதும் அங்கே சந்தித்தேன். நல்ல அறிமுகம் எனக்கு. இந்த நகைச்சுவையை கல்யாண விருந்தென ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteமேதைகளின் நகைச்சுவைகள் அனைத்தும் அருமை! ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்த நண்பருக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஎங்கங்க என் கமெண்ட்..?
ReplyDeleteஇந்தப் பதிவுக்கு யாரோ வினை வெச்சுட்டாங்க போலருக்கு உஷா! முரளிதரன் போட்ட கமெண்ட் மாதிரி உங்களோடதையும் எனக்குக் காட்டாம முழுங்கிடுச்சு. ஸ்பாம்ல கூட இல்லை. எல்லாம் அந்த கூகிளாண்டவருக்கே வெளிச்சம்! உங்கள் எண்ணத்தை அறிந்து கொள்ள இயலாமல் பண்ணிய கூகிளாண்டவரின் மேல் கோபத்துடன் நான்!
DeleteMy comment too is missing. - R. Jagannathan
ReplyDeleteஅடக்கடவுளே... நான் மிக மதிக்கும் உங்களின் கருத்தையும் தெரிஞ்சுக்க முடியாமப் போயிருச்சே! மீ வெரிவெரி ஸாரி!
Delete