உங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்?
வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்!
படத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியாகவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?
உங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள் நம்பக் கூடாது? அர்ஜுனன் போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.
உங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பத்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.
சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.
அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.
சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
============================================
சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
============================================
பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு வருடங்களில், பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் திலகம் அளித்த பேட்டிகளைத் தொகுத்து, ‘‘‘எம்.ஜி.ஆர். பேட்டிகள்’ என்று ஒரு தொகுப்பு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் எஸ்.கிருபாகரன் என்பவர். 208 பக்கங்களில் 130 ரூபாய் விலையில் மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. (Manonmani Pathipagam, 35/14, East Rajaveethi, Opp: Babu Suriya Hote near bus stand, Kanchipuram-631 501. Email: kirubakar08@yahoo.com) அந்த நூலிலிருந்து சண்டைக் காட்சிகள் பற்றி வாத்யார் கூறியவற்றை மட்டும் தொகுத்து இங்கு அளித்திருக்கிறேன். புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால்: நடிகர், அரசியல்வாதி, இசை ரசிகர், போன்ற அவரின் பல்முகங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மனிதரை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்!
============================================
============================================
|
|
Tweet | ||
பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமிகப் பெருந்தன்மையான பதில்.
ஆமாம் ஸார்! அவரது மனிதாபிமானமும், புத்திசாலித்தனமும், கருணை மனதும் என பல பரிமாணங்களை புத்தகத்தில் கண்டேன். ரசித்துப் படித்து அழகிய கருத்து தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபுரட்சிக் கவிஞர் பற்றிய கேள்வி பதிலில் பத்திரிகைகாரரின் கோள் மூட்டும் சாமர்த்தியமும் அதற்கான வாத்தியாரின் பதிலில் சமயோசிதமாக பிரச்சனையைக் கையாளும் திறமையும் தெளிவாகத் தெரிகிறது...
ReplyDeleteகரெக்ட்! அந்நாளிலேயே பல வில்லங்கமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் நிருபர்கள். எதற்கும் நழுவாமல், பிறர் மனமும் நோகாமல் பதிலளித்து தான் ‘மக்கள் திலகம்’ என்பதை அவர் நிரூபித்துள்ளார் ஸ்கூல் பையன்! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபளிச் பதில்கள்.. அவரை குறை கூறிய மனிதரயும் குறைவாக நினைக்காத உள்ளம்.. Great!!
ReplyDeleteபுத்தகம் முழுவதுமே அந்த விசால மனதைத் தரிசித்து நான் வியந்தேன் ஆனந்த்! ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஎன் ஜி ஆரைப்பற்றி மேலும் அரிய தகவல்கள்.அதெல்லாம் சரிதான்.எல்லோரும் உங்களை வாத்தியார் வாத்தியார் என்று கூப்பிடுகிறார்களே.அதன் காரணம் என்ன?
ReplyDeleteஎல்லாரும் இல்லம்மா.. சீனு ஒருத்தன்தான் அப்படிக் கூப்பிடுவார். இந்த அரிய தகவல்களை ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபிறர் மனம் நோகாமல் பதில் அளிப்பதிலும் தலைவர் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ...?
ReplyDeleteசரியாச் சொன்னீங்க தனபாலன். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteபுத்தகமா! அவசியம் வாங்க வேண்டும்.
ReplyDeleteஎம்ஜிஆரின் பதில் இன்றையக் காட்டான்களின் 'என்னை யாருக்கும் பிடிக்கவில்லை ஊரை விட்டுப் போவேன்' பாணிக் குழந்தைத்தன குமுறல்களைத் தனித்தட்டில் பார்க்க வைக்கிறது.
ஆமாம். அந்தப் புத்தகம் முழுவதிலுமே அவரின் சமயோசிதமான, மற்றவரைப் புண்படுத்தாத பண்பாடுடன் கூடிய பதில்கள் ரசித்துக் கை தட்ட வைக்கின்றன அப்பா ஸார்! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteதன்னைக் கிண்டல் செய்த கவிஞருக்கு பெருந்தன்மையுடன் பதில் சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்ததும் இளையராஜா-பாரதிராஜா பதிலுக்கு பதில் பேசியதை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது..
ReplyDeleteபாரதிராஜா - இளையராஜா மட்டுமா? பாலா - அமீர்கூடத்தான் நினைவில் வருவார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்த நயத்தகு நாகரீகம் இப்போது மைனஸ். அந்நாளில் தாங்கள் ஓய்வு நேரத்தில் குடிப்பது வெளியில் தெரிவது அவமானம் என்று கருதினார்கள். இன்று பேட்டிகளில் சொல்லி புகழ்(?) தேடிக் கொள்கிறார்கள் முரளி! என்னத்தச் சொல்ல? படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteசாகசமான கேள்விகளும்
ReplyDeleteசாதுர்யமான பதில்களும்...
அழகான பகிர்வு நண்பரே...
ரசித்துப் படித்த நண்பர் மகேனுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteயோவ். நண்பரே நீரும் சண்டைக்கு வாத்யார் தானே?
ReplyDeleteநல்ல பதிவு பழையன யோசித்தேன்
மிக்க நன்றி நண்பரே!
Deleteகுறை, நிறைகளை சமமாக பார்க்கும் மனமுடையவர்கள் பெருந்தன்மையாக இருக்கிறார்கள். இப்படி பட்டவர்கள் எல்லா காலங்களிலும் போற்றப்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். மிக்க நன்றி!
ReplyDeleteஆமாங்க. அதனால்தான் இன்றும் மனங்களில் வாழ்கிறார் வாத்யார். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
DeleteVADHYAR VADHYARDHAN EVEN WHILE ANSWERING THE QUESTIONS, HE HAS HURT THE FEELINGS OF ANYBODY. THAT IS HIS SPECIALITY.
ReplyDeleteவாத்யார் வாத்யார்தான்னு மகிழ்ந்த மோகனுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteசாமர்த்தியமான பதில்கள் !
ReplyDeleteஅது இருந்ததால்தானே வாத்யாரால் நாடாளும் நிலைக்கே உயர முடிந்தது பிரபா. மிக்க நன்றி!
Deleteநானும் கேள்விப்பட்டு இருகிறேன் இந்த அட்டைக்கத்தி பற்றி.. அருமையான விளக்கம் கொடுத்துவிட்டார் வாத்தியார்!!. பகிர்விற்கு நன்றி சார்..
ReplyDeleteரசித்துப் படித்த சமீராவுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteபாரதிதாசன் சொன்னால் மறுத்துக் கூறமுடியுமா..!
ReplyDeleteஉங்களின் கருத்துக்கு விரிவான விளக்கம்தர விரும்பினேன். நான் சொல்வதை விட அழகாக நண்பர் யோகன் பாரீஸ் கீழே சொல்லி விட்டார். ஆகவே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்!
Deleteநான் எம் ஜி ஆர் ரசிகனல்ல- அந்த நாட்களில்..
ReplyDeleteஇன்று அவர்படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் சற்று புன்னகையுடன் சண்டை செய்வதை
ரசிப்பேன்.
அட்டைக் கத்தி பற்றிய பொறுப்பான பதில், அவர் மேல் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது.
இன்றைய சகல துறை சார்ந்தோரும் படிக்க வேண்டிய பேட்டி!
தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி!
எங்கப்பாவுக்கு வாத்யாரைப் பிடிக்கும் என்பதால் தவறாமல் அவர் படங்களைப் பார்ப்பார். கூடவே சென்ற எனக்குப் பிஞ்சு வயசிலேயே அவரின் சுறுசுறுப்பும் சண்டைகளும் பிடித்துப் போய் விட்டது. இந்தப் பதிவை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!
Delete//பாரதிதாசன் சொன்னால் மறுத்துக் கூறமுடியுமா..!//
ReplyDeleteசகோதரி விஜிக்கு!
பாரதிதாசன் அறியாமையை, நாசூக்காகவும், மரியாதையுடனும், பண்புடனும்; ஆணித்தரமாகவும், அறிவு பூர்வமாகவும் தன் குறைந்த படிப்பறிவையும், நிறைந்த பட்டறிவையும் கொண்டு பொறுப்புடனும், அமைதியுடனும், மமதை சிறுதுமின்றி மறுத்து...கவிஞரிலும்...எத்தனையோ மடங்கு , உயர்ந்து விட்டார்.
குறைந்த படிப்பறிவு - நிறைய பட்டறிவு, நிறைய பண்பு! எம்.ஜி.ஆரை அழகாகச் சொல்லிட்டிங்க. என் சார்பி்ல் என் தோழிக்கு நல் விளக்கமளித்த உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்!
Deleteஎம்.ஜி.ஆரின் அருமையான பேட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி! பேட்டி அவரது பக்குவத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது! பெரியவர்கள் பெரியவர்கள்தான்! நன்றி
ReplyDeleteஆமாம் சுரேஷ்! குணங்கள்தாமே அவர்களை பெரியவர்களாக்குகின்றன. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Delete//நடிகர், அரசியல்வாதி, இசை ரசிகர், போன்ற அவரின் பல்முகங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மனிதரை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்!//
ReplyDeleteஅருமை.
நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி.
ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Delete“அட்டைக்கத்தி“ என்பது யாரையும் குத்தாது.
ReplyDeleteஆனால் அனைவரையும் பயமுறுத்தும்.
பாவேந்தர் அருமை நயத்துடன் கூறியுள்ளார்.
பதிவு அருமை பாலகணேஷ் ஐயா.
ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteபளிச் பதில்கள்....
ReplyDeleteபுத்தகமாக வந்திருக்கிறது என்பதால் படித்து விட வேண்டியது தான்....
அவசியம் படியுங்கள் வெங்கட். உங்களையும் ரசிக்க வைக்கும் அது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteபுத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல் களஞ்சியம் போலிருக்கிறதே!
ReplyDeleteஆமாம் செ.பி. ஸார். அவரின் ஒவ்வொரு பேட்டியின் வாயிலாகவும் அவர் மனதைப் படிப்பது போன்ற ஓர் உணர்வு எழுகிறது. படித்து ரசிக்க நல்ல புத்தகம்தான். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசுவாரஸ்யமான புத்தகமாகத்தான் தெரிகிறது.
ReplyDeleteநிஜந்தான்! படித்தால் முடித்துவிட்டுத்தான் வைக்கத் தோன்றும் என்கிற டைப் ஸ்ரீராம். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteசாதுர்யமான பதில்கள்...
ReplyDelete