Saturday, March 9, 2013

மொறுமொறு மிக்ஸர்-16

Posted by பால கணேஷ் Saturday, March 09, 2013
 ‘‘டாக்டர்... எனக்கு மூச்சு விடறதுல ப்ராப்ளம் டாக்டர். ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்றபடி டாக்டரிடம் வந்தான் ஒருவன். ‘‘நோ ப்ராப்ளம்... நான் கம்ப்ளீட்டா நிறுத்திடறேன் -மூச்சு விடறதை!’’ என்றாராம் டாக்டர். CCTP என்கிற சென்‌னை போக்குவரத்துக் காவல் துறையும் அந்த டாக்டர் மாதிரிதான் நடந்து கொள்கிறது. அசோக் நகரிலிருந்து வடபழனி கங்கையம்மன் தெருவுக்கு போக வேண்டுமென்றால் நான் அம்பேத்கர் சிலையருகில் வந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். இப்படி திரும்புபவர்களால் டிராஃபிக் ஜாம் ஆகிறது, அதை கவனிக்க கஷ்டமாக இருக்கிறது என்று எந்த கான்ஸ்டபிள் புண்ணியவானோ புலம்பியிருக்க வேண்டும்...! ‘நோ ரைட் டர்ன்’ என்று ‌போட்டு, போகிற வழியெல்லாம் இடைவெளிகளில் டூ வீலர் திரும்ப முடியாதபடி கற்களைப் போட்டு (நல்லா இருப்பீங்கடா!) என்னை லக்ஷ்மன் ஸ்ருதி வரைக்கும் கொண்டு போயிட்டாங்க படுபாவிங்க. வேற வழியில்லாம மெயின்ரோடுல வடபழனி போய், சுத்தி வந்தேன். மூணு கிலோமீட்டர் வெட்டி பெட்ரோல் செலவு.

இதுக்கு ஒரு வயித்தெரிச்சலான பின்கதை என்னன்னா... கங்கையம்மன் ‌கோயில் தெருவுல என் வேலைய முடிச்சுக்கிட்டு வர்றப்ப, எந்த இடத்துல வலதுபக்கம் திரும்பக்கூடாதுன்னு என்னை கான்ஸ்டபிள் விரட்டினாரோ அதே இடத்துல நாலஞ்சு மோட்டார் பைக் காரங்க, ஒரே நேரத்துல ‘போடாங்க...’ என்கிற மாதிரி அவர் கண்ணெதிரி‌‌லேயே வேகமாக திரும்பிக் கடந்து சென்றார்கள். தனி ஆளா செஞ்சா தப்பு, கும்பலா செஞ்சா தப்பில்லங்கற சென்னைவாசிகளோட மனோபாவம் சரிதான் போலருக்கு!

===============================================

ப்ப ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடலாம். தமிழில் சில புகழ்பெற்ற நாவல்களி்ன் பெயர்களை இங்கே குறிப்புகளாகக் கொடுத்திருக்கேன். தலைப்புகள் என்னங்கறதை நீங்க கண்டுபிடியுங்க (இந்த முறை நிச்சயமா விடை நான் சொல்ல மாட்டேன்பா)

1. ஒரு ஆள் அடை அணியாம இருந்தா நிர்வாணம் என்போம். ஒரு சிட்டியே ஆடை அணியாம இருந்தா என்ன சொல்வீங்க? சுஜாதா எழுதிய த்ரில்லர் இது.

2. பெரிய பெண் உருவ விளக்கு அல்லது  Explain The Poetry -இந்த வாக்கியத்தை தமிழ்ப்படுத்துங்கள். அகிலன் எழுதிய புகழ்பெற்ற நாவல் இது!

3. மன்னர்கள் அனுப்பும் ஓலைகளில் விஷயங்களை எழுதினதுக்கப்புறம் பதிக்கப்படறது இது. சாண்டில்யன் எழுதிய நாவல்!

4. விமானம் பறக்கறதைப் பாக்கறதே தனி அழகு! இவங்க குறிப்பிடற விமானங்களைப் பாக்கறது இன்னும் ரசனையானது! இந்துமதியின் பெயரை இன்றும் அழுத்தமாய் பதிவு செய்து கொண்டிருக்கும் படைப்பு இது.

5. ‌கொலை பண்றது பாவம்ங்க. ஆனா மருத்துவர்கள் இந்தக் கொலையப் பண்ண அனுமதிக்கணும்னு ஒரு கோரிக்கையும் அதுக்கு மறுப்புகளும் இன்னிக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. சிவசங்கரி எழுதிய மனதைத் தொடும் நூல் இது!

மீபத்தில் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. தமிழ் உணர்வுள்ளவர், போராட்ட குணமுள்ளவர் என்றெல்லாம் அறியப்படும் ஒருவர் எழுதியிருந்த நூல் அது. புத்தகத்தில் அவர் சொல்லவந்த கருத்துகள் தமிழர்களுக்கு எழுச்சியூட்டறதா அமைஞ்சிருந்தது. ஆனா நாலைஞ்சு பக்கங்கள் படிச்சதுமே நான் புக்கைத் தூர எறிஞ்சிட்டேன். காரணம்...? அவர் எழுதியிருந்த் வாக்கியங்கள் - தமிழ்க் கற்றவன் நான் - செய்துக் கொண்டிருந்தேன் - இப்படி எங்க எங்க ஒற்று வரக்கூடாதுன்னு கூடத் தெரியாம ஏராளமா ‘ப்’ ’க்’ ‌போட்டு எழுதியிருந்தார். அடப்பாவிகளா...! இப்படில்லாம் நீங்க ‘வாழ’ வெக்காம இருந்தா தமிழ் தானா வாழ்ந்துரும்டா... இலக்கணத்தைப் படிச்சு, பிழையில்லாம எழுதத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் தமிழ் உணர்வைப் பத்திப் பேசுங்கய்யா...! (எழுத்துப் பிழைகள் யாருக்கும் வரும். அவை மன்னிக்கப்படலாம் என்ப‌தை நான் நன்கறிவேன். இங்க நான் சொல்லியிருக்கறது தமிழை வாழ வைக்கிறேன்னு புலம்பற, கர்ஜிச்சுக்கிட்டிருக்கற சிங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்) முண்டாசுக் கவிஞர் இதையெல்லாம் மனசுல தீர்க்கதரிசனமாப் பாத்துட்டுதான் ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’னு எழுதினாரோ!

===============================================

ப்பாதுரை ஸார் கிட்ட அப்ரெண்டிஸாச் சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். தமி்ழ்ப் பாடல்களை ஆங்கிலத்துல என்னமா முழிபெயர்த்து... ஸாரி, மொழிபெயர்த்து சப்-டைட்டில் எழுதறாரு! இங்கே க்ளிக்கி படியுங்க! நானும் ஒன்றிரண்டு ட்ரை பண்ணினேன்...

Why? Why? Why?                         Went to buy air
Lifting a Bowl - why?                      bought a poetry
Swimming in many thoughts       she asked and bought
Why? Why? Why?                          what happend to that virgin?


என்ன அப்பா ஸார்... என்னை அசிஸ்டெண்ட்டாச் சேத்துக்குவீங்கதானே? ஹி... ஹி... ஹி...

===============================================

முன்னணி தமிழ் நாளிதழ்களைப் பாத்தா சிப்பு சிப்பா வருது. முந்தாநேத்து ஒரு முன்னணி நாளிதழ்ல போஸ்டர் நியூஸ் இப்படி - ‘பெண்கள் மூளை எப்படி வேலை செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்! அடப்பாவிகளா... மூளை வேலை செய்யாமலா மேரிக்யூரி ரெண்டு நோபல் பரிசு வாங்கினாங்க? விண்வெளில பறந்த கல்பனா சாவ்லாவுல இருந்து கல்வியறிவு இல்லாத மதுரை சின்னப்பொண்ணு வரை எத்தனையெத்தனை பெண்கள் சாதிச்சிருக்காங்க!  ‘பெண்களின் மூளை வேலை செய்யும் விதம்- அதிர்ச்சி தகவல்கள்’னு தலைப்பு குடுத்திருந்தா நியாயம்! அதவிட்டுட்டு மணிமேகலை பிரசுர புத்தகத் தலைப்பு மாதிரி இப்படியா வெப்பீங்க?

இன்னொரு முன்னணி நாளிதழ்ல இப்படி நியூஸுக்குத் தலைப்பு தந்திருந்தாங்க. ‘மெரீனாவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!’ என்னது...? பாலச்சந்திரன் மெரீனாவுல கொல்லப்பட்டாரா?ன்னு அதிர்ந்து போய் செய்தியப் படிச்சதும்தான் புரிஞ்சது... பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து மெரீனாவில் ஆர்ப்பாட்டம்’னு தலைப்பு வந்திருக்கணும்கறது. என்ன க்வாலிபிகேஷன்ல நிருபரையும், உதவி ஆசிரியரையும் வேலைக்கு வெச்சு இப்டில்லாம் வெளியிடறாங்களோ... என்னமோ போடா மாதவா...!

===============================================

Ohkay! To end with a smile...

* One spelling error or omission of a letter can destroy your life- A husband messaged his wife: "I'm having a wonderful time, Wish you were her"

* The three steps of a man's life : teenage has time and energy, but no money; Working age has money and energy, but no time; Old age has money and time but no energy!

Ha..! Ha..! Ha...!
See you, Bye!

===============================================

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-1

=============================================== 

51 comments:

  1. ஒற்று எங்க வரக்கூடாதுனு ரூல் புக் இருந்தா சொல்லுங்க கணேஷ்.. எனக்கு அது ரொம்ப தகராறு பிடிச்சவ் விஷயம்.

    யுட்யூப்ல ஒரு குரு இருக்காரு நாம் ரெண்டு பேருமே சேந்துருவோம்.. when practice walking the breeze will answer and go.

    /தனி ஆளா செஞ்சா தப்பு - எப்பவுமே கும்பல்னா கோவிந்தா.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குன்னு புக் எதும் இருக்கான்னு தெரியலை அப்பா ஸார். விசாரிச்சுப் பாக்கறேன். யூட்யூப் குருவா... அங்கயும் ‌போய் பாத்து சிரிச்சுட்டு வர்றேன். முதல் வரவாய் வந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  2. நேரம் போகப்போக
    போக்குவரத்து காவல்காரருக்கு
    குரலும் உடலும்
    மூளையும்
    மங்கிவிட்டது போல...
    ...
    என்னத்த சொல்ல..
    ....
    நாங்க அனுபவிக்க வேண்டியத அனுபவிச்சிடீங்க...

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் மகேன். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. //The three steps of a man's life : teenage has time and energy, but no money; Working age has money and energy, but no time; Old age has money and time but no energy!//

    I am in the third stage. How can I go to the first stage?

    ReplyDelete
    Replies
    1. அந்த வித்தை மட்டும் தெரிந்து விட்டால் அனைவரும் முதற் பருவத்தை விட்டு நகரவே மாட்டோமே ஸார்...? என்னைப் பொறுத்த வ‌ரை என் மனதை முதல் பருவத்திலேயே வைத்திருக்கிறேன். உடம்பு கிடக்குது களுதை...! ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  4. நிர்வாண நகரம்....
    பாவை விளக்கு...
    இராஜ முத்திரை...
    தரையில் இறங்கும் விமானங்கள்..
    பாலங்கள்...

    இந்த நாவல்களின்...பெயர்கள் சரியா நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. முதல் நான்கும் சரி மகேன்! அசத்திட்டீங்க. சிவசங்கரியின் நாவல் தலைப்பை மட்டும் மத்தவங்களுகுக்கு விட்டு வெச்சிருக்கீங்க... மிக்க நன்றி!

      Delete
  5. காலையில காபி குடிக்கறதுக்கு முன்னாடி மிக்சர் சாப்டாச்சு.
    பாட்டு மொழ பெயர்ப்பு சூப்பர். அப்பாதுரை சார் எழுதினதை படிக்கலையே இப்போ போய் படிச்சிடறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் லிங்க் குடுத்திருக்கலாம்னு இப்ப தோணுது முரளி. அப்டேட் பண்ணிடறேன்... உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  6. ஆஹா..
    ஐந்தாவது பெயரையும் கண்டுபிடிச்சிட்டேன்...
    சரி காத்திருக்கேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்கிட்ட சொன்ன ஐந்தாவதும் கரெக்ட்தான் மகேன்! வாழ்த்துக்கள்! இங்க வேற யாராச்சும் சொல்றாங்களான்னு பாப்பம்!

      Delete
  7. Replies
    1. மிகச் சரி ரிஷபன் ஸார்! படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. மெட்ரோ ரயில் வேலை நடப்பதால் நாம் அனுபவிக்கும் அவலங்களில் ஒன்று...

    நியூஸ் தலைப்பு... இன்டர்வியூவில் மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிச்சிருவாங்களோ... டவுட்டு...

    மேய்ச்சல் மைதானம் போய்ப்பார்க்கிறேன்...

    மொறுமொறு மிக்ஸர் அருமை...

    ReplyDelete
    Replies
    1. அருமை என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. சிறிது தாமதமாக வந்தால் கூட சரியானவற்றை தெரிந்து கொள்ளலாம் போலே... (அடுத்த பதிவின் தலைப்பைப்பற்றி ஒரு சிந்தனை...)

    மனச்சாட்சி : நல்லாவே சமாளிக்கிறே...!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இந்த மனசாட்சியோட படுத்தல் உங்க கிட்டயும் ஆரம்பிச்சிடுச்சா D.D.? ரைட்டு.... உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  10. நான் நாவல்களின் பெயரை சொல்வதர்குல் மகேந்திரன் சார் முந்திகிட்டார். . .

    ## இப்படிதான் சமாளிக்கவேண்டி இருக்கு. . . .

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாராச்சே... நல்லாவே சமாளிக்கிறீங்க... மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  11. இந்த போக்குவரத்துத் தொல்லை அதிக இடங்களில் கழுத்தறுக்கிறது.

    புத்தகங்களின் பெயர்களை எல்லோரும் சொல்லி விட்டார்கள். நான் ஒரு புதிர் போடுகிறேன், நீங்கள் சொல்லுங்கள். நினைத்தாலே இனிக்கும் படக் கதாநாயகிக்குக் குரல் கொடுத்தவர் வரலாறு என்று சொல்லலாம். ஆனால் சந்திக்காமல் சிந்திக்கணும்! என்ன அது?

    ஸ்பெல்லிங் எரர் செய்தவர் முகத்தில் அப்புறம் E ஆடியிருக்காதே....!

    ReplyDelete
    Replies
    1. சென்னைவாசிகள் சமீபகாலமாய் அனுபவிக்கும் போக்குவரத்துத் துன்பங்கள் கணக்கிலடங்காததாயிற்றே ஸ்ரீராம். என்னத்தச் சொல்ல! இதான வேணாங்கறது..? சரிதாவின் சரித்திரத்தை என்ட்டயே புதிரா? ஹா.. ஹா... ஈயை முழுங்கிவிட்டு மெஸேஜ் அடித்தவர் ஈ ஆடாமல் தானே இருந்திருப்பார்- வீட்டில் வாங்கிய பூசைக்குப் பின்னே! சூப்பர் ஸ்ரீராம். மிக்க நன்றி!

      Delete
  12. அடடா நான் சொல்றதுக்குள்ள சொல்லீட்டாங்களே!!

    மிக்ஸர் சூப்பர்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த ஆனந்துக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  13. ///என்ன க்வாலிபிகேஷன்ல நிருபரையும், உதவி ஆசிரியரையும் வேலைக்கு வெச்சு இப்டில்லாம் வெளியிடறாங்களோ... என்னமோ போடா மாதவா...!////

    ஆனந்த விகடன் & குமுதத்தில் கூட இப்படி கத்துக்குட்டி நிருபர்கள் வேலை செய்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இப்போது பதிவர்களின் பதிவை காப்பி அடித்து வெளியிடுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களின் பதிவைக் காப்பி அடி்த்து..? இந்த விஷயத்தை நான் கவனிக்கலையே...! நல்ல கருத்துச் சொல்லி தகவல் தந்த நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  14. 1 - நிர்வாண நகரம்....
    2 - பாவை விளக்கு...
    3 -இராஜ முத்திரை...
    4 - தரையில் இறங்கும் விமானங்கள்.. -
    (இந்த புத்தகத்தின் பெயரைச்சொல்லி ஒருமுறை கோவை புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் பரிசாகக்கிடைத்த மலரும் நினைவுகள் -இனிமை..)
    5 - கருணைக்கொலை

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... புத்தகம் பேர் ‌சொல்லி பரிசு வாங்கினீங்களா? நினைத்தாலே இனிக்கிறது! ஐந்து விடைகளையும் சரியாகச் சொல்லி, படித்து ரசித்த உங்களு்க்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. I can also give you some interesting matter regarding spelling mistakes or wilfully committed mistakes to irritate the boss:-
    1. One boss removed his secretary and on being asked the reason, boss replied : he has interchanged the address of his wife and mistress.
    Mixture was super and really enjoyed.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நல்ல செக்ரட்டரி!

      Delete
  16. Another spelling mistake sorry now it is a word mistake addressed to H R department of a reputed a concern when they asked an employee to send the particulars of his wife for incorporating the same in their terminal benefits record. Shri X (the employee) replied as follows:-
    Please find enclosed my newly married wife, as has been demanded by you, for doing the needful at your end. Kindly keep me informed about the developments in this regard. The word left is "particulars of"

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நல்ல கலெக்ஷன்ஸ் வெச்சிருப்பீங்க போலயே...! ரொம்ப ரசிச்சேன் நான். ரசிக்க வெச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  17. என்னுடைய தேனீர் நேரம் உங்கள் மொறுமொறு மிக்சருடன் இனிதே நிறைவடைந்தது... நன்றி பால கணேஷ் சார்..

    ReplyDelete
    Replies
    1. தேனீர் நேரத்தில் இதையும் கொறித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  18. மிக்ஸர் வழக்கம் போல வெகு சுவை.
    தமிழ்க்கொலைக்கு தங்கள் கண்டனக்குரல்
    ஓங்கி ஒலித்தது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்து ருசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் .மனம் நிறை நன்றி!

      Delete
  19. ராஜா ஏற்கெனவே சமாளிச்சுட்டார்.. அவ்வ்வ்வ்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இந்த வாத்தியாருக்கு எப்பிடி சமாளிக்கிறதுன்னு தெரியலயா... மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

      Delete
  20. புத்தகங்களின் பெயர் தெரியும் ஆனால் பலர் முந்திக் கொண்டார்கள்!
    நவ்ரங் மிக்சர்!

    ReplyDelete
    Replies
    1. நிறையப் படிக்கும் உங்களுக்குத் தெரியாததா? மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. மொறு மொறுவென்று மிக்சர் சூப்பராக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரி்ன் சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  22. தமிழ இப்படிதான் பயங்கர கொலை பண்றாங்க சார்.. சமீபத்தில ஒரு புத்தகம் படிச்சப்ப நானும் இப்படிதான் செம கடி ஆனேன்.
    கதை புத்தகம்-ல இன்னுமொரு கொடுமை என்னன்னா கதாபாத்திரங்களோட பெயரை மாத்தி மாத்தி போட்டு டென்ஷன் பண்ணிடுவாங்க....
    புதிர்-கதை பெயர் ஒன்னு கூட தெரியலைங்க சார்..

    ReplyDelete
    Replies
    1. சில புத்தகங்களில் இந்த மாதிரி கேரக்டர் பெயர் மாறுகிற கொடுமையை நானும் அனுபவித்ததுண்டு சமீரா. புதிர்க் கதைக்குத்தான் நண்பர்கள் விடை சொல்லிட்டாங்களே... ரசித்துப் படித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. இந்தக் காலத்தில் மட்டுமல்ல தலைப்புகள் குழப்புவது. எங்கள் சின்ன வயதில் நாங்கள் படித்து எங்கள் பெற்றோர்களைக் குழம்ப வைத்த தலைப்புகள்: ராஜா-ஜிக்கி கல்யாணம்! என் அம்மா இந்த வயதில் ராஜாஜிக்(கு)கி திருமணமா என்று பதறிவிட்டார்! நடுவில் இருக்கும் ஹைபன்-ஐ எப்படிப் படிப்பது?
    இன்னொன்று: பிரதமர் இந்திரா - பி.டி.ஜட்டியுடன் (B.D. Jatti) தமிழகம் வருகை!

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா... ராஜா-ஜிக்கி கல்யாண தலைப்பு மேட்டர் எனக்குப் புதுசு. ரொம்ப ரசிக்க முடியுது! இந்திராகாந்தி பி.வி.ஜட்டியுடன் வந்த தலைப்பு என் மாணவப் பருவத்தி்ல் ரொம்பப் பிரபலமானதாயிற்றே...! மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  25. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
    Replies
    1. இதோ புறப்பட்டுவிட்டேன் ஐயா... என்னை ரசித்து, நினைவுகூர்ந்து அங்கு பகிர்ந்த உங்களின் அன்பிற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  26. சுவையான மிக்சர். காலையில் படித்து இன்புற்றேன். :))

    புதிர் பதிவுகளில் லேட்டாக வந்தால் மூளையைக் [இருக்கா என டௌட்-எல்லாம் கேட்கப்படாது!] கசக்காது விடைகள் கிடைத்து விடுகின்றன! :)

    ReplyDelete
  27. மிக்ஸர் சுவையாக இருக்கு.

    எனக்கு கூட இந்த ஒற்று சற்று கஷ்டம்தான். எழுதும் போழுது மிகவும் யோசித்துதான் எழுதுவேன்.வலைதளங்களில் யாராவது தமிழ் சொல்லிக் கொடுத்தால் இலக்கணம் படிக்கலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube