சமீபத்தில் நான் படித்த சில பயனுள்ள தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ‘இதான் எனக்குத் தெரியுமே’ என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல... தொகுத்தது மட்டுமே நான்! அதுசரி... நீங்கள் என்ன வாகனம் வைத்திருக்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் உங்களுக்காக சில...
* எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அது மூச்சு வாங்காமல் ஹாயாய் ஓட வேண்டுமானால் பெட்ரோல் கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். தரமான பெட்ரோல் என்றால் அதன் டென்சிட்டி, அதாவது அடர்த்தி எண் சரியானபடி இருக்க வேண்டும். இதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளவு காட்டும் மீட்டர்களுக்கு மேல் ‘டென்சிட்டி’ என்று எழுதி, பெட்ரோலின் அடர்த்தி இவ்வளவு சதவீதம் உள்ளது என்று குறிக்கப்பட்டு இருக்கும். வாகன ஓட்டிகள் அதைப் பார்த்து பெட்ரோலின் அடர்த்தி எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

* எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோலைப் பாதுகாத்து வைக்க பூமிக்கடியில் சேமிப்புக் கலன்களைப் பதித்திருப்பார்கள். காரணம், பெட்ரோலின் அடர்த்தி ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டுமானால் அந்த இடம் சற்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பூமிக்கு மேல் வைத்தால், பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பெட்ரோல் ஆவியாகி, அதன் அடர்த்தி குறைந்துவிடும் என்பதால் பூமிக்கு அடியில் வைக்கிறார்கள். எனவே.....
* வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்குச் சரியான நேரம் இரவு அல்லது அதிகாலை நேரம்தான். குளிர்ச்சியாக இருக்கும் இரவு நேரத்திலோ, அதிகாலையிலோ பெட்ரோல் போட்டால் அதன் அளவு சரியாய் இருக்கும். சில நேரங்களி்ல சற்று அதிகமாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது. நன்றாக வெயிலடிக்கும் நேரத்தில் பெட்ரோல் போட்டால் நிச்சயம் அளவு குறைவாக இருக்கும். இதை சிந்தித்துச் செயல்பட இந்த அவசர உலகில் எவருக்கும் நேரமில்லை!

* வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது எப்போதும் டேங்க் முழுவதும் நிரப்பக் கூடாது. பலர் இந்தத் தவறை செய்கின்றனர். பெட்ரோலை டேங்க் முழுவதும் நிரப்பும்போது டேங்க்கின் உள்ளே காற்று இருக்காது. காற்று இல்லாத காரணத்தால் வெப்பம் அதிகமாகி பெட்ரோல் ஆவியாக ஆரம்பிக்கும். இதனால் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் வரை ஆவியாகி வீணாகிவிட வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் டாங்க்கின் பாதி அளவுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டால் இந்த ஆவியாதலைத் தவிர்க்கலாம். அதுவே உத்தமம்.
* வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அதிமுக்கிய விஷயம்... நீங்கள் பெட்ரோல் போடச் செல்லும் சமயம் பங்கில் அப்போதுதான் லாரி மூலம் பெட்ரோல் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அங்கே பெட்ரோல் போடாதீர்கள். காரணம்... புதிதாய் பெட்ரோல் நிரப்பப்படும் போது டேங்கின் அடியில் தேங்கி இருக்கும் கசடுகளை மேலே கொண்டு வந்து டேங்கைக் கலங்கலாக்கியிருக்கும். அப்படிப்பட்ட பெட்ரோலைப் போட்டால் அது உங்கள் வாகன இன்ஜினைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்க! அதுமாதிரியான சமயங்களில் ஒரு மணி நேரம் கழித்து அந்த பங்க்குக்குப் போவதே சிறந்தது!
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது இனி இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்வீர்கள் தானே... இனி, நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் செல்/அலை/கை பேசி குறித்த சில குறிப்புகள் உங்களுக்காக...
* ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு எதிர்முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியதும் கை பேசியை முகத்துக்கு சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது.
* வீட்டிலும் அலுவலகத்திலும் செல்பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சிலிருந்து தப்பலாம்.

* இரவு உறங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு. அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நிம்மதியான ஓய்வை உடலுக்கும் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும்.
* இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல்போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும்.
* பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலைபேசி ஒரு இடதாங்கி போலச் செயல்பட்டு, இடி, மின்னல உங்களை நோக்கி ஈர்த்துவிடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.
முடிப்பதற்கு முன்... போனஸாக ஒரு ஆச்சர்யத் தகவல் உங்களுக்கு! ‘‘இனி எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்’’ -இப்படி செல்போன்களின் தினசரிப் பயன்பாட்டை யூகித்து 1930ம் ஆண்டிலேயே சொன்னார் ஒருவர். அவர் யார் என்பதை அறிவீர்களா...? வெளிநாட்டறிஞர் எவரும் இல்லீங்க... தந்தை பெரியார் என்று தமிழர்கள் அழைக்கும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1930ம் ஆண்டில் தொலைநோக்குப் பார்வையுடன் வெளியிட்ட கருத்து இது!

|
|
Tweet | ||
பைக் செல்போன் இந்த இரண்டும் அநாவசியமாய் இருந்து அத்தியாவசியத்தையும் கடந்து உடல் உறுப்புக்கள் போல் ஒட்டிக் கொள்ளத் தொடங்கி விட்டன... அவசியமான பதிவு,
ReplyDeleteபெட்ரோல் போடும் பொழுது என்றாவது ஒருநாள் 'புல் அடிக்க வேண்டும்' என்று நினைப்பேன், வழக்கமும் போல் இனியும் ஆப் தான் :-) நீங்க எப்டி வாத்தியாரே ஆப்பா புல்லா குவாட்டரா கட்டிங்கா.... :-)
கையில துட்டு இருந்தா ஆஃப், இல்லாட்டா குவாட்டர்தான் சீனு. ஆஃபக்கு மேல நமக்குத் தாங்காது. ஹி... ஹி... நான் வண்டியச் சொன்னேன்!
Deleteநம்பிட்டோம் எதுலன்னு.
Deleteஹி... ஹி... ஹி... நம்பினதுக்கு ரொம்ப நன்றி செந்தில்!
Deleteஅருமையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteரசித்துப் படித்து நன்றி சொன்ன முத்தரசுவுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅட... செல்போன் தூக்கத்தையும் கெடுக்குமா.. நான் எப்பவுமே தலமாட்டுல வச்சிட்டு படுக்குறது தான் பழக்கம்... மாத்திக்கறேன்...
ReplyDeleteஅதோட ஒலி அலைகள் நம் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்வதை நம்மால உணர முடியாது பிரதர்! நான்லாம் முன் ரூம்லதான் செல்லை வெச்சுட்டு தூங்கப் போவேன். பிரதமரே கூப்ட்டிருந்தாலும் காலைல பாத்துக்கலாம்னு முடிவோட! மி்க்க நன்றி!
Deleteநம்ம பிரதமர் கூப்பிட்டால் அடுத்தநாள் நீங்க பேசினா போதும். ஒபாமாவுக்கு அவசர ஆலோசனை வேண்டி கூப்பிட்டால் என்ன செய்வீர்கள்? 2 அடி தள்ளி கை எட்டினால் எடுக்கும்படி போனை வைத்துக் கொள்ளவும். - ஜெ
Deleteஇரண்டடி என்ன.. நான்கடி தொலைவிலேயே வைத்துவிட்டுப் படுத்தால் போயிற்று. நல்லதொரு ஆலோசனைக்கு நன்றி ஜெ!
Deleteஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
ReplyDeleteகருத்திட வரும் நண்பர்களுக்கு :
16.03.2013 அன்று ஏற்பட்டது போல் இன்றும் அதே பிரச்சனை... udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது...
தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்...
Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாம்... நன்றி...
இதை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சி... நன்றிகள் பல...
மற்றொரு உருப்படியான விஷயத்தைப் பகிர்ந்து கொண்ட நண்பர் D.Dக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஇந்தக் கைபேசியாலே எவ்வளவு பயனோ அதுக்குமேல ஆபத்துமுள்ளது
ReplyDeleteஉண்மைதான் ஐயா. தங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஇரவு நேரத்தில் பெட்ரோல் போடும் யோசனை புதிது. பெட்ரோல் குறித்த மற்ற தகவல்களும்.
ReplyDeleteஅலைபேசித் தகவல்கள் ஏற்கெனவே அறிந்தது. நாம் பின்பற்றமாட்டோம்! எனவே மறுபடி நினைவு 'படுத்தி'யதற்கு நன்றி!
பெரியாரின் தீர்க்கதரிசனம் ஆச்சர்யம்!
அனைத்தையும் படித்து ரசித்து, கருத்தினால் எனக்கு மகிழ்வு தந்த ஸ்ரீராமுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteபெட்ரோல் பற்றிய தகவல்கள் அருமையானதும் பயனுள்ளதும் கூட. என் கணவரிடமும் மகனிடமும் சொல்கிறேன்.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு என்று கூறி மகிழ்வளித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமுடிந்தவரை உங்கள் பைக் அல்லது காரின் எரிபொருளினை முழுதாக காலி ஆகிய பின்னர் எரிபொருள் நிரப்புவதை தவிருங்கள். 25 சதவீத எரிபொருள் இருக்கும் பொழுதே நிரப்புங்கள். ஏன் என்றால் முறையான அழுத்தம் தேவை என்ஜினில் எரிபொருளினை செலுத்த.. மிக குறைவான எரிபொருள் இருக்கும் பொழுது அழுத்தம் சரியாக கிடைக்காது. இதனால் வாகனத்தின் செயல்திறன் பாதிக்கும்,,,
ReplyDeleteஆட்டோமொபைல் தமிழன்----www.automobiletamilan.com
அருமை நண்பரே! மற்றொரு உபயோகமான தகவல்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஸார்.. நீங்க சொன்ன ஒண்ணு கூட நான் இதுவரை பாலோ பண்ணலை.. எப்பவும் ஃபுல் டாங்க் தான் நிரப்புவேன், மதியம் தான் பெட்ரோல் போடுவேன், தலைக்கு அடியில் செல்போன் வச்சுதான் தூங்குவேன். (ஏதோ நைட்டு ஒபாமா கூப்பிடற மாதிரி). மாதிக்கிறேன் ஸார் எல்லாத்தையும் மாதிக்கிறேன். ( எம்.ஜி.ஆர் பட வில்லனே கடைசிலே திருந்தும் போது நாம திருந்த மாட்டமா??)
ReplyDeleteஎதைத் திருத்தாவிட்டாலும் தலையணைக்குக் கீழ் செல்போன் வைத்து தூங்குவதை தவிர்த்துவிடுங்கள் மூளையில் புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Deleteசரியாச் சொன்னீங்க டினேஷ்! டியர் ஆவி...! சத்தம் கேக்கற அளவுல கொஞ்ச தூரத்துல வேணா படுக்கற அறைல வெச்சுக்கலாம். தலைககு அருகில்... ப்ளீஸ் வேணாம்! மிக்க நன்றிப்பா!
Deleteஎரிபொருள் நிரப்புவது பற்றி தகவல்கள் அருமை
ReplyDeleteமிக்க நன்றி நண்பா!
Deleteசில விடயங்கள் தெரிந்தவை சில புதியவை.அருமையான பதிவு ஐயா
ReplyDeleteமற்றது செல்போன்களை அருகில் வைத்துத் தூங்குவது மூளைப்புற்றுநோய் ஏற்படுவதை அதிகரிக்கச் செய்யும்.கர்ப்பமான எலிகளிற்கருகாமையில் செல்போன்கள் நீண்டகாலத்திற்கு வைக்கப்பட்ட போது பிறந்த எலிக்குஞ்சுகள் மூளைவிருத்தி குறைந்தனவாக இருந்தது கண்டறியப்பட்டது.மனிதரிலும் இவ்வாறான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவே கர்ப்பிணித் தாய்மார் செல்போன்களை விட்டு விலகி இருப்பது நன்று
நான் பகிர்ந்தவற்றை ரசித்து, புதிய தகவலையும் சொல்லி ஊக்கம் தந்த நண்பர் டினேஷ்க்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஎவ்வளவு சொன்னாலும் எங்க கேட்கிறாங்க.. ? செல் போனை நான் அதிகமாவே தவிர்க்கறதுண்டு.. ஆனா தப்பித்தவறி எதிர் முனையில் இருக்கிறவங்க நான்-ஸ்டாப்பா பேசிட்டே போகும் போது மாட்டிப்பேன்..கொடுமை..! தகவலா உபயோகிக்க வேண்டியதை மேடை போடாமலே மைக் குடுத்துட்ட மாதிரி ஒன்றரை மணி நேரம் ஆனா கூட தொடர்ந்து பேசறாங்க பாருங்க... சாமி அதுக்குத்தான் மொபைல் நெம்பரை யாருக்கும் தர்றதில்லை. செல் போன் இல்லாதப்ப என்ன இவ்வளவு வெறியாவா இருந்தோம். எமர்ஜென்ஸி நேரம் தவிர மற்ற நேரங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பினால் போதுமல்லவா?
ReplyDeleteமிகச் சரி உஷா! இதே கருத்தைத்தான் தோழி தமிழச்சி தங்கப்பாண்டியனும் பிரதிபலித்தார் என்னிடம் பேசும்போது! உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஅரை டேங் போடும் யோசனை உசிதமல்ல என்று தோன்றுகிறது. ஒருவேளை சுற்றுப்புற வெப்ப நிலைகளுக்குத் தகுந்த யோசனையோ? நானறிந்தவரை முழு டேங்க் நல்லது.
ReplyDeleteநான் படித்த தகவலின் படி டேங்க்கை ரிசர்வ் வரை காய விடாமலும் முக்கால் டேங்க்குக்கு மேல் இல்லாமலும் பெட்ரோல் இருப்பதே நல்லது என்று சொல்லியிருந்தார்கள். அதுவே சரி எனறு எனக்குப் படுகிறது அப்பா ஸார்!
DeleteReally useful tips for automobile owners and mobile owners. I keep mobile below the pillow as I use it as alarm clock. Now I will avoid it. Expecting similar tips soon.
ReplyDeleteஆட்டோமொபைல் + மொபைல் - சூப்பருங்க! செல்போனை அலாரமா யூஸ் பண்றது சரிதான். ஆனா தலைகிட்ட வெக்காம, கொஞ்சம் தள்ளி வைக்கறது உசிதம். ஏன்னா, கதிர்வீச்சு பாதிப்புலருந்தும் தப்பிக்கலாம்; அதேநேரம் தலைமாட்டுலயே இருந்தா உடனே அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு திரும்ப தூங்க ஆரம்பிச்சிடுவோம். ஹி... ஹி... தூரமா இருந்தா ஆஃப் பண்ண எழுந்து போறதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடும் பாருங்க மோகன்! இனி அதையே பண்ணுங்க. மிக்க நன்றி!
Deleteஅதேபோல் செல் போன் சார்ஜ் ஆகிக் கொண்டு இருக்கும் போதும் எடுத்துப் பேசக் கூடாது.
ReplyDeleteகருவியை மின் இணைப்பிலிருந்து துண்டித்த பின்னே பேச வேண்டும்.
உருப்படிகளுக்கு என் வாழ்த்துக்கள் .
ஆமாம்... செல்போன் சார்ஜ் ஆகிட்டிருக்கும் போது பேசறதும் தவறுதான். உருப்படியான மற்றொரு தகவலையும் பகிர்ந்த தோழிக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஇதான் எனக்குத் தெரியுமே’ என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல... தொகுத்தது மட்டுமே நான்!//என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?மிகவும் பிரயோஜனபடகூடிய இடுகை.பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ReplyDeleteமிகவும் பிரயோஜனமான இடுகை என்று கூறி மகிழ்வு தந்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete//உருப்படியாய் சில உருப்படிகள்//
ReplyDeleteநெசமாலுமே உருப்படியான பதிவுதானுங்கோ .
// வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது எப்போதும் டேங்க் முழுவதும் நிரப்பக் கூடாது. பலர் இந்தத் தவறை செய்கின்றனர் //
ஹையோ..! ஹையோ..! அடபோங்க சார் ... புதூசா வண்டி வாங்குன போது டேங்கிய ஃபுல் பண்ணுனது ,அதுக்கப்புறம் ஆல்வேஸ் ரிசர்வ்தான் .
ஈரத்தலையோட கூட செல்போன் பேசப்புடாதுன்னு படிச்ச நியாபகம் .
ஈரத்தலையோட செல்போன் பேசக்கூடாதுன்னு எதனால சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா, நடைமுறையில டேங்க் ஃபுல் பண்ற சான்ஸ் எனக்கும் அமையறதில்லை நண்பா! ரசித்துப் படித்துப் பாராட்டின உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteபெற்ரோல் தகவல்கள் அறியாதவை நன்றி.
ReplyDeleteஅறிந்து கொண்ட மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபல புதிய தகவல்கள்.பெட்ரோல் டாங்கில் பாதியளவு பெட்ரோல் இருந்தால் ஆவியாகும் பரப்பு அதிகமாக இருக்கும். முழுவதுமாக இருக்கும்போது ஆவியாகும் பரப்பு குறைவு எனவே பெட்ரோல் பாதியளவு உள்ளபோது அதிகம் வீணாகும் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteவெயில் நேரங்களில் பெட்ரோல் விரிவடைவதால் அதன் கொள்ளளவு அதிகமாக இருக்கும். இதை பயன்படுத்தி லாரி ஓட்டுனர்கள் முதலாளியை ஏமாற்றி பெட்ரோல் திருடுவதை பாலகுமாரன் இரும்புக் குதிரைகள் நாவலில் கூறி இருப்பார்.
டேங்க் முழுமையாக இருந்தால் ஆவியாகும் பரப்பு குறைவா? நான் படி்சதுக்கு எதிர்மறையா இருக்கு உங்க கூற்று. இதுபற்றி மேலும் தீர விசாரிச்சுத்தான் பாக்கணும் நான். பாலகுமாரனை நான் அதிகம் படித்ததில்லை. மிக்க நன்றி முரளி!
Deleteசிறப்பான ஆலோசனைகள்! பெரியாரின் தொலைநோக்குப்பார்வை ஆச்சர்யப்படவைத்தது! நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட சுரேஷுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமுதல் பாதி பற்ரி எனக்குக் கவலை இல்லை;ஏன்னா வண்டி ஏதும் இல்லை.கைபேசி பற்ரிய தகவல்கள் எனக்கும் பயனுள்ளவையே!
ReplyDeleteஏதோ ஒரு வகையில் மற்றவருக்குப் பயன்பட்டால் அதைவிட மகிழ்வ வேறென்ன? மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteபெட்ரோல் குறித்துப் பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். செல்போன் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு அவசியம். நல்ல பதிவு.
ReplyDeleteஇரண்டு விஷயங்களுமே இன்று சாமானியர்களும் உபயோகிப்பவையாக மாறிவி்ட்டன அல்லவா?: அதனால்தான் இந்த விழிப்புணர்வுத் தகவல்களைப் பகிர விரும்பினேன். நல்ல பதிவு என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே உங்கள் தளத்தில் உருப்படியான தகவல்களியே காண்கிறேன் அண்ணா. அருமையான தகவல்கள்.
ReplyDeleteபதிவின் ஹைலைட்...கடைசியில் குறிப்பிட்டிருந்த தந்தை பெரியாரின் ஆரூடம்... ஆச்ச்ச்ச்ச்சரியமான தகவலே!!!
பகிர்வுக்காக நன்றி
உருப்படியானது என் தளமும் கூடத்தான் என்று எனக்கு எனர்ஜி தந்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநல்ல பகிர்வு அண்ணா...
ReplyDeleteபகிர்வினை ரசித்த குமாருக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteநல்ல தகவல்கள் அண்ணாச்சி கைபேசியின் பாதிப்பு அதிகம் தான்!ம்ம்ம்
ReplyDeleteநல்ல தகவல்கள் என ரசித்த தம்பி நேசனுககு என் இதயம் நிறை நன்றி!
Deleteநல்ல தகவல்கள்....
ReplyDelete