Monday, March 25, 2013

புதுதில்லியில் நண்பர் வெங்கட் நாகராஜ் பைக்கை விரட்ட, பில்லியனில் அமர்ந்து போய்க் கொண்டிருந்தபோது என் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்...! என் சகதர்மிணி சரிதா! ‘‘சொல்லும்மா’’ என்றேன். ‘‘என்னங்க... நாம சென்னைக்குப் போக ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்டாள்.

‘‘இல்லம்மா... அதான் என் ஃப்ரெண்ட் வெங்கட்டைப் பார்த்து அவர் செல்வாக்கை(!) உபயோகிச்சு ட்ரெயின் டிக்கெட் ஏற்பாடு பண்ணச் சொல்லிக் கேட்டேன். இப்ப அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்’’ என்றேன்.

‘‘வேண்டாங்க... உடனே கரோல்பாக்குக்குத் திரும்பிடுங்க. பெரியப்பா உங்களுக்கு, எனக்கு, மாமா-மாமிக்கு எல்லாருக்கும் இன்னிக்கு நைட் ஃப்ளைட்ல டிக்கெட் வாங்கிட்டாராம்’’ என்றாள். நண்பரின் தோளைத் தட்டி, வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். சாலையோரமாக நிறுத்திவிட்டு, ‘‘என்னாச்சு?’’ என்றார் வெ.நா. அவரிடம் சரிதா சொன்னதைச் சொல்லி, என்னை கரோல்பாகில் ட்ராப் செய்துவிடச் சொன்னேன். பழைய சாண்டில்யன்/கல்கி கதைகளில் வருவது மாதிரி விதி மினியேச்சர் சைஸில் அவர் மோ.பைக்கின் ஹாண்டில்பாரில் உட்கார்ந்து என்னைப் பார்த்து ‘ஹா... ஹா...’வென்று சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு அப்போது தெரியவில்லை.

 அருகாமை ஓட்டலில் ஸ்நாக்ஸ் ப்ளஸ் காபி அருந்தியபடி ஒரு மணி நேரம் அரட்டையடித்தபின் என்னை சரிதாவின் பெரியப்பா வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார் நண்பர். விஷயம் இதுதான்... கரோல்பாகில் வசிக்கும் சரிதாவின் பெரியப்பா பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் பார்க்க வந்திருக்கிறோம். இப்போது திரும்புவதற்கான ஏற்பாடுகள்! எதற்கு அவள் பெரியப்பா, சரிதாவின் மாமா-மாமியை என் தலையில் கட்டினார் என்ற கேள்விக்குறியோடு வீட்டுக்குள் நுழைந்தேன். மேலே தொடர்வதற்கு முன் சரிதாவின் மாமா-மாமியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சரிதாவின் மாமா அருணாசல சாஸ்திரிகள் பரம வைதீகர். மூன்று தலைமுறைகளாக வேதம் படி்த்து சாஸ்திரிகளாக இருந்து வரும் குடும்பம் அவருடையது. ஆள் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக, திறந்த மார்பினராக, கட்டுக்குடுமியுடன் பழைய வெஸ்ட் இண்டீஸ்‌ கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு சாஸ்திரிகள் மேக்கப் போட்ட மாதிரி இருப்பார். மாமியோ நேர்மாறாக டெல்லியிலிருந்து சென்னையை நோக்கி ஒரு புயல் காற்று வீசினால் ரயில், பிளேன் எந்த டிக்கெட்டும் தேவைப்படாமல் சென்னைக்கு வந்து விடுகிற தினுசில் ஒல்லிப்பிச்சானாக இருப்பார். இந்த ஜோடியைப் பார்த்தாலே எனக்கு குபீரென்று சிரிப்புவர, ‘மொழி’ படத்தில் பிரம்மானந்தத்தைப் பார்த்து பிரகாஷ்/பிரிதிவி ராஜ்கள் சிரிப்பை அடக்க முயற்சிக்கிற மாதிரி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி, சரிதாவின் முறைப்பைப் பெற்றுக் கொள்வேன்.

தஞ்சாவூர்ப் பக்க கிராமத்திலிருக்கும் அவள் மாமாவுக்கு, ரயில் பயணமே அபூர்வம். ப்ளைட்டை வானில் பறக்கையில் மட்டும் பார்த்திருந்த அவர், முதல் விமானப் பயணத்தை எதிர்பார்த்து பல்லெல்லாம் வாயாக இருந்தார். ‘‘வாங்கோ மாப்ளே... நாங்கல்லாம் பேக்கிங் பண்ணிட்டு ரெடியாயிட்டோம்...’’ என்று ‘அம்மா’ ஓட்டலில் இருபது இட்லிகளைச் சாப்பிட்டவர் மாதிரி அகலமான சிரிப்புடன் சொன்னார். இவருடன் பயணம் என்றதுமே என் வயிற்றின் மேல் மண்டியிட்டு அமர்ந்து அட் எ டைம் ஐந்து சிவமணிகள் ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி கலக்கியது.

‘‘ஏழு மணிக்கு ஃப்ளைட்! நாம இங்கருந்து அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிரணும். அப்பத்தான் செக்-இன் பண்ணிட்டுப் போக சரியா இருக்கும் மாமா’’ என்றேன். ‘‘செக்கா...? அண்ணா கேஷா பணம் கட்டிட்டதால்ல சொன்னார்....?’’ என்றார் மாமா. ‘‘அதில்ல மாமா... இவர் சொல்றது செக்-இன்’’ என்று சரிதா அதைப் பற்றி அவருககு விளக்கியபடியே அவள் கஸின் சிஸ்டருக்கு வாங்கிய கிச்சன்வேர் செட், மாமா பையனுக்கு வாங்கின ஷேவிங் செட், அவள் அம்மாவுக்கென்று வாங்கிய போதை, ஸாரி... கீதை புத்தகம் என்று அவசியமான(?) பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தாள். பஞ்சக்கச்ச வேஷ்டியுடன்தான் வருவேன் என்று அடம் பிடித்த அவருக்கு ஒரு சட்டையை மட்டும் மாட்டிவிட்டு ஒருவழியாக அவரைக் கிளப்பி விமானநிலையத்துக்கு டாக்‌ஸியில் கடத்திச் சென்றதும், ‘‘இவ்வ்...வளவு பெரிசா?’’ என்று பிரமித்தார்.

அங்கேயிருந்த கஸ்டம்ஸ் ஆபீஸர் ஒரு பெண். சற்றே மேடிட்டிருந்த வயிறுடன் இருந்த அவள், ‘‘ஆர் யூ நான்வெஜ் ஆர் வெஜ்?’’ என்று அமெரிக்கன் ஆக்ஸெண்ட் ஆங்கிலத்தி்ல் கேட்க, ‘‘என்ன கேக்கறா இவ?’’ என்றார் மாமா. சரிதா மு.கொ.தனமாய் ‘‘நீங்க சைவமான்னு கேக்கறா மாமா’’ என்றாள்.

‘‘சைவமாவது...? நான் வைஷ்ணவன்ம்மா! நெத்தில பாரு எவ்ளோ பெரிசா திரிசூர்ணம் இட்டுண்டிருக்கேன்...!’’ என்று கஸ்டம்ஸ் பெண்ணிடம் நெற்றியைக் காட்டி அபிநயத்துடன் அவர் பேச, அவள் ‘ழே’ ‌என்று விழித்தாள்.

‘‘ஹய்யோ மாமா... அவ சாப்பிடற விஷயத்தைக் கேக்கறா. நீங்க செத்த பேசாம இருங்கோ...’’ என்று விட்டு, அவளிடம் ‘‘We all are pure vegetarians madam’’ என்றேன். ‘‘வாட்டீஸ் திஸ்?’’ என்று மாமாவின் பேகிலிருந்து எடுத்த பாட்டிலைக் காட்டிக் கேட்டாள் அவள். ‘‘இதுவா? ஆவக்காய் ஊறுகாய்டிம்மா... ஒரு வாய் சாப்ட்டுப் பாரு... பேஷா இருக்கும்’’ என்று மாமா, ஒரு பீஸை எடுத்து அவள் வாயில் திணித்தே விட்டார். நாக்கைச் சப்புக் கொண்டபடி, ‘‘ம்ம்ம்... வெரி டேஸ்ட்டி! பட், ஐ வி்ல் நாட் அலவ் திஸ்’’ என்று தன் டேபிளில் வைத்துக் கொண்டாள். என்னதான் கஸ்டம்ஸ் ஆபீஸராக இருந்தாலும் மசக்கைக்காரி பாருங்கள்...! ஹி... ஹி...


விமானத்தின் படிக கட்டுகளில் ஏறி உள்ளே நுழைகையில் கையில் ட்ரேயில் சாக்லெட்டுகளை ஏந்தியபடி நின்ற அந்த ஒல்லியான ஏர் ஹோஸ்டஸ், மாமாவைப் பார்த்ததும், ‘‘சாக்லெட் எடுத்துக்கஙக மாமா’’ என்று தமிழ் பேசினாள். ‘‘அப்பாடி...! நீயாவது தமிழ் பேசற பொண்ணா வாய்ச்சியேம்மா...’’ என்று தன் முறம் போன்ற கைகளில் கொஞ்சமே கொஞ்சம் சாக்லெட்டுகளை அள்ளிய மாமா, அவள் காதருகில் ஏதோ கிசுகிசுக்க, கருணாநிதியைச் சந்தித்துவிட்ட ஜெயலலிதா போலானது அவள் முகம்.

அவர் உள்ளே போனதும், மெல்ல அவள் அருகில் சென்ற நான், ‘‘சாஸ்திரிகள் மாமா உங்ககிட்ட என்னங்க சொன்னார்?’’ என்று மெல்லிய குரலில் கேட்க, அதைவிட மெல்லிய குரலில், ‘‘பைலட்டுகிட்ட வண்டியை கன்னாபின்னான்னு ஸ்பீடா ஓட்ட வேணாம், மெதுவா ஓட்டச் சொல்லுடிம்மான்னு சொன்னார்’’ என்றாள். ‘‘முருகல்லாயேசுவே! இந்த மாமாவை சென்னைக்குக் கொண்டு சேர்ககற தெம்பை எனக்குக் குடுங்க’’ என்று பிரார்த்தித்தபடி நானும் உள்ளேறினேன்.

சற்று நேரத்தில் மாமாவிடம் வந்த ஏர்ஹோஸ்டஸ், ‘‘ப்ளீஸ், பெல்ட்டைப் போட்டுக்குங்க’’ என்றாள். ‘‘மாப்ளை பேண்ட் போட்டிருக்கார். பெல்ட் போட்டா நியாயம். வேஷ்டி கட்டிண்டு நான் பெல்ட்லாம் போட்டா சகிக்காதேடிம்மா...’’ என்றார் மாமா. ‘‘நோ அங்கிள்.... ஐ மீன் ஸீட் பெல்ட்’’ என்று அவர் இடுப்பில் அதை மாட்டிவிட்டு, ‘‘ப்ளேன் மேல ஏர்ற வரைக்கும் இதைக கழட்டக் கூடாது. புரிஞ்சுதா?’’ என்றாள். ‘‘இதைக் காதுல அடைச்சுக்கங்க...’’ என்று கொஞ்சம் பஞ்சைக் கொடுத்தாள். இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக வாங்கி என் காதுகளில் அடைத்துக் கொண்டு கண்களை மூடி‌க் கொண்டேன்.

மாநகரப் பேருந்து மாதிரி மெல்ல ஊர்ந்த ப்ளைட், ‌சென்னை ஆட்டோக்களைப் போல கன்னாபின்னாவென்று வேகமெடுத்து ஜிவ்வென்று மேலேறியது. பக்கத்திலிருந்த சரிதா என் தோளில் தட்டி, ஏதோ கேட்பது ‌புரிந்ததும் கண் திறந்து பார்த்தேன். ‘‘என்ன சரி?’’ என்றேன்.

‘‘என்னங்க இது.. இப்படியா ஜிவ்னு செங்குத்தா மேல ஏறுது?’’ என்றாள் கண்களில் பயத்துடன். ‘‘அப்படி குபீர்னு ஏர்றதாலதான் அதுக்கு ‘ஏர்ரோ’ப்ளேன்னு பேரு வெச்சிருக்கான்...’’ என்று தன் கண்டுபிடிப்பை விளககி ‘கடி’த்தார் மாமா. பற்களைக் கடித்தேன் நான்.

எதிரே ஓடிக் கொண்டிருந்த டி.வி.யைப் பார்த்த மாமா, ‘‘என்னது... கன்னாபின்னான்னு என்னத்தையோ போடறான்? நல்லதா ஒரு சிவாஜி படம் போடச் சொல்லுங்க மாப்ளே...’’ என்றார். நான் பதில் சொல்வதற்குள் ஏர்ஹோஸ்டஸ் ட்ரிங்ஸ்ஸை ட்ரேயில் ஏந்தி கடந்து செல்ல, சட்டென்று அதில் சிவப்பான திரவம் இருந்த க்ளாஸை எடுத்து - அது என்னவ்னெறு விளக்குவதற்குள் - கடகடவென்று குடித்து வைத்தார் மாமா. நான் அவசரமாக மாமிக்கும் சரிதாவுக்கும் கூல்டிரிங்ஸை எடுத்துத் தந்தேன்.  ‘‘ஆஹா...! கோகோகோலாவை விட காரமா இருக்கே. ஆனா நன்னா இருக்குடிம்மா... இன்னொண்ணு குடேன்’’ என்று இன்னொரு கிளாஸ் அதே திரவத்தை கு(அ)டித்தார் மாமா.

அதுவும் நல்லதாகப் போயிற்று. சில நிமிடங்களில் மாமா கண்ணயர்ந்து (மட்டையாகி?) விட, நிம்மதியாய்க் கழிந்தது பயணம். சென்னையை நெருங்குகையில் பைலட்டின் அனவுன்ஸ்மென்ட் குரல் கேட்டுத்தான் கண் விழித்தார் மாமா. ‘‘என்ன சொல்றாங்க மாப்ளே?’’ என்றார். ‘‘அதுவா? ‘ஏர்ரோ’ப்ளேன் இப்போ ‘இறங்கோ’ப்ளேன் ஆகப் போறதாம். அதத்தான் சொல்றாங்க’’ என்று எரிச்சலுடன் ‘கடி’த்தேன் நான். ‘‘என்னங்க... இது?’’ என்று முறைத்த சரிதாவிடம், ‘‘கடி விதைத்தவன் கடி அறுப்பான்’’ என்று சிரித்தேன். மாமாவுக்கு சீட்பெல்ட் மாட்டிவிட முயன்றபோதுதான் தெரிந்தது- அவர் டில்லியில் மாட்டிய பெல்ட்டை இதுவரை கழற்றவே இல்லை என்பது.

மீனம்பாக்கத்தில் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து என் வீட்டுக்குச் செல்ல ஆட்டோ பிடித்தோம். ஆட்டோ விரைய... ‘‘ஐயய்யோ... ப்ளேனே பரவாயில்ல போலயே... இந்தக் கட்டேல போறவன் ப்ளேனைவிட வேகமாப் பறககறானே’’ என்று மாமா அலற, ஆ.டிரை. திரும்பி முறைத்தான். ‘‘சும்மா இருங்க மாமா... நீங்க காலை விரிச்சுக்கிட்டு நின்னா, காலுக்கு நடுவுலகூட வேகமாப் புகுந்து போறவன்தான் சென்னைல ஆட்டோ டிரைவர்’’ என்று பற்களைக் கடித்தபடி சொன்னேன் நான். ‘‘பொடிநடையா நடந்தே ஸ்டேஷன் போயி, அன்ரிசர்வ்டா இருந்தாலும் பரவால்ல... நைட் ட்ரெயின்லயே ஊருககுப் புறப்படறேன் மாப்ளே...’’ என்று மாமியுடன் கிளம்பிச் சென்றார் மாமா. ஏனோ தெரியவில்லை... சரிதா வருந்தி வருந்திக கூப்பிட்டால்கூட சென்னை என்றாலே இப்பவும் அலர்றாருங்கோ!

58 comments:

  1. ‘பைலட்டுகிட்ட வண்டியை கன்னாபின்னான்னு ஸ்பீடா ஓட்ட வேணாம், மெதுவா ஓட்டச் சொல்லுடிம்மான்னு சொன்னார்’’


    உங்க நகைச்சுவை வண்டியை நல்லாத்தான் ஓட்டியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. வண்டியின் ஓட்டத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடியல போங்க...!

    ReplyDelete
    Replies
    1. வாய்விட்டுச் சிரித்து ரசித்த மனோவுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  3. ஆஹா சரிதாயணத்துல நமக்கும் ஒரு பாத்திரமா! அது சரி, அன்னிக்கு ஃபோன் பண்ணப்ப, இதெல்லாம் சொல்லலையே! :)

    நல்ல நகைச்சுவை.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. புதுதில்லிககு வந்தா உங்களை மிஸ் பண்ண யாராலயாச்சும் முடியுமா? ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கட்டுமேன்னுதான் அப்ப இதைச் சொல்லலை. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. ஹா... ஹா... உண்மையில் சென்னை ஆட்டோ அப்படித்தான்... புதுதில்லி நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களை இணைத்தது உங்களின் சாதூர்யம்...!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்டோவாலாக்களால தினசரி தொல்லைகளை அனுபவிக்கிறவங்களாச்சே நாங்க! வெஙகட் என்ன... அடுத்த கதையில திண்டுக்கல்லுக்கு சரிதாவைக் கூட்டிட்டு வந்து உங்களையும் வம்புல மாட்டி விட்டுரலாமான்னு ஒரு உத்தேசம் இருக்குங்கோ. கபர்தார்! ஹி... ஹி... உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. //என் வயிற்றின் மேல் மண்டியிட்டு அமர்ந்து அட் எ டைம் ஐந்து சிவமணிகள் ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி கலக்கியது.//

    Vishuvalize பண்ணிப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. அடி எதும் பட்ரலையே ஆவிக்கு? மனத்திரையில படமா ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  6. சில இடங்களில் புன்னகை, சில இடங்களில் கனைப்பு, சில இடங்களில் வெடி.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் இருப்பதால் ரசிக்க வைத்தது உங்களை என்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி அப்பா ஸார்!

      Delete
  7. சிரிக்க வைத்த பதிவு. உங்களின் பதிவுகளில் நீங்கள் இந்த மாதிரி எழுதும் நகைச்சுவை பதிவுகள்தான் என்னை மிகவும் கவர்ந்தவை .பட மிக்ஸிங்க் மிக அருமை..பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து படத்தையும் ரசித்து தெம்பூட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  8. //கடி விதைத்தவன் கடி அறுப்பான்’// ஹா ஹா ஹா

    பல இடங்களில் சிரித்தேன், சரிதாவின் குடும்பத்தை மட்டும் கலாய்க்கும் உங்கள் மேல் அவர்கள் குடும்பத்தார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பாமல் பார்த்துக் கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. பல இடங்களில் சிரித்து மகிழ்ந்த சீனுவுககு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  9. // ‘‘சும்மா இருங்க மாமா... நீங்க காலை விரிச்சுக்கிட்டு நின்னா, காலுக்கு நடுவுலகூட வேகமாப் புகுந்து போறவன்தான் சென்னைல ஆட்டோ டிரைவர்’’ என்று பற்களைக் கடித்தபடி சொன்னேன் நான்.// - தினசரி நிகழ்வுகளில் கவனிக்கிற விஷயத்தை கூட இத்தனை நகைச்சுவையாய் சொல்வதுதான் உங்கள் ஸ்பெஷல்..! பொன் நகையை விட புன்'னகை' அழகு என்பாங்க... எல்லாரும் அழகா இருக்கனும்னா.. உங்க நகைச்சுவை பதிவுகளை படிச்சாலே போதும்.ஹா..ஹா நான் சிரிச்சிட்டேன்...( மிக்சிங் போட்டோ சூப்பர்)
    இப்படியே சரிதாவை வைச்சி கலாய்ச்சிட்டிருந்தா எப்படி? சரிதா மேம்க்கு சொல்லி வைங்க.. அவங்களுக்கு ஸப்போர்ட்டா நானிருக்கேன்னு. எங்க ஊர் பக்கம் வாங்க வாங்க ஸரிதா கிட்ட சொல்லி வேலூர் வெயில்ல நூறு குடம் தண்ணி எடுக்க வைக்க வச்சிடறன்..! ஹா.. ஹா..

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுப் படிச்சு சிரிச்சீங்கன்றதுல மனம் நிறைய மகிழ்ச்சி எனக்கு. உங்களுகு்கு என் இதயம் நிறை நன்றி!

      சரிதாவுக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா..? உங்க ஊரு வெயில் எப்படியிருக்கும்னு எனக்குத் தெரியும்- நாலு வருஷம் இருந்திருக்கேன். அதுல நூறு குடம் தண்ணி எடுக்கற கஷ்டம் நமக்குத் தாங்காது சாமி...! அதனால சரிதாவை மட்டும் வேணா உங்க ஊருக்கு அனுப்பி வெச்சுடறேன். ஹி... ஹி...

      Delete
  10. Enjoyed your first flight with your mama and mami. In order to register my comments, I read with one breath but it is compelling me to read it once again just to enjoy the way of your hilarious writing. This must be your masterpiece. No idea how many times I will read this post henceforth. Being Monday, which is a quite boring day of the week after a week end, my mind refreshed a lot after reading this post. Very nice and keep posting such matters on Mondays. Though I wanted to laugh out loudly while reading, colleagues around may look at me oddly. So with great difficulty, I controlled my laughter.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... திரும்பத் திரும்பப் படித்து, சிரிப்பை அடக்க முயற்சித்தீர்களா? விருதுக்குச் சமமான வார்த்தைகள் மோகன்! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. பிரமாத சுவை - உங்கள் நகை சுவை! சரளமாக வருகிறது. விவியன் ரிச்சர்ட்சின் போட்டோவை போடோ ஷாப்பில் உங்க மாமா மாதிரி மாற்றி வெளியிட்டிருக்கலாம்! ஆத்திற்குப் போனதும் கோக கோலாவைவிட காரமான ஜூஸ் இன்னும் கேட்டாரா! - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. அடடே... விவ் ரிச்சர்ட்ஸ் போட்டோவை மாத்தியிருந்தா இன்னும் சூப்பரா அமைஞ்சிருக்குமே... இது எனக்குத் தோணாமப் போயிருச்சே ஜெ! என் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      அந்த மாமா ஆட்டோ தந்த பீதியில அதை மறந்துட்டு ஊருக்குப் பறந்துட்டாரு... ஹி.... ஹி...!

      Delete
  12. ஒரு அழுவாச்சி படம் பாத்தா நமக்கும் அழுவாச்சி வரணும் , சண்டை படம் பாத்தா நாடி , நரம்பு எல்லாம் முறுக்கேறனும் , காதல் படம் பாத்தா நமக்கு காதலிக்க தோணனும் அது மாதிரிதான் காமெடி பதிவு படிச்சா , சும்மா கண்ணா பின்னான்னு வயிறு வலிக்க சிரிக்கணும் . இத படிக்கும்போது நல்லாவே சிரிச்சேன் . பக்கத்து கேபின்ல இருக்கவங்கல்லாம் ஒரு மாதிரியா பாக்குற அளவுக்கு சிரிச்சேன் .

    செம செம செம .....! அதுலயும் ஒரு சில வரிகள் நகைசுவையின் உச்சம் .

    // கருணாநிதியைச் சந்தித்துவிட்ட ஜெயலலிதா போலானது அவள் முகம்//

    // ஆள் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக, திறந்த மார்பினராக, கட்டுக்குடுமியுடன் பழைய வெஸ்ட் இண்டீஸ்‌ கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு சாஸ்திரிகள் மேக்கப் போட்ட மாதிரி இருப்பார். மாமியோ நேர்மாறாக டெல்லியிலிருந்து சென்னையை நோக்கி ஒரு புயல் காற்று வீசினால் ரயில், பிளேன் எந்த டிக்கெட்டும் தேவைப்படாமல் சென்னைக்கு வந்து விடுகிற தினுசில் ஒல்லிப்பிச்சானாக இருப்பார். //

    பாஸ் இதே ஸ்பீடுல போனிங்கன்னா கூடிய சீக்கிரமே வெள்ளித்திரையில உங்கள பாக்கலாம் ....!

    நோ நோ இது வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்ல . நெசமாத்தான் சொல்றேன் . என்னையும் ஞாபகம் வச்சுக்குங்க பாஸ் .

    ReplyDelete
    Replies
    1. சினிமாவுக்குத் தேவையான ‘தகுதி’கள் என்கிட்ட இல்லாததால அப்படி ஒரு வாய்ப்பு வர வாய்ப்பு கம்மி நண்பரே.... என் தளத்துக்கு வந்து கருத்திடற ஒவ்வொருத்தருக்கும் என் மனசுலயும் நினைவுலயும் எப்பவும் இடம் உண்டு. சரிதானே...! வாய்விட்டுச் சிரித்தீர்கள் நீங்கள் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி கொண்டு உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
    2. உணர்வுகூடி எழுதியிருக்கும் ஜீவன்சுப்புவின் நேர்மை பாராட்டுக்குரியது.

      Delete
    3. தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை ரொம்ப வீக் கணேஷ்... முயற்சி செஞ்சு பாருங்க. வாழ்த்துக்கள்.

      Delete
  13. நகைச்சுவை விமானம் உயரப் பறக்கிறது........சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ரத்னச் சுருககமான வரிகளைக் கொண்டு மிக அதிகமாய்ப் பாராட்டிய நண்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. ஹா....ஹா.... மாமாவுடன் பயணம் சிரிப்பு தாங்கவில்லை...... தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த உங்களுக்க என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. Domestic Flightஇல் போகும்போது கஸ்டம்ஸ் செக்கிங் இருக்காது
    செக் இன் கவுண்டரில் சைவமா அசைவமா என்று கேக்க மாட்டார்கள்
    Domestic விமானங்களில் ஆல்கஹால் கிடையாது

    இது போன்ற லாஜிக் தவறுகள் இருந்தால், செமையா சிரிச்சேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்ரீராம்... இதை நான் நன்கறிந்தே எழுதினேன். ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தின் காமெடி சீனை நாகேஷிடம் ‌சொன்னபோது, ‘‘பருப்புத் தேங்காய்க்குள்ளயா ஒருத்தன் வைரத்தை வைப்பான்? லாஜிக் இல்லையே’’ன்னாராம். அதுக்கு எஸ்.எஸ்.வாசன், ‘‘நாகேஷ்! காமெடில எப்பவும் லாஜிக் பாக்காதே... பாக்கறவங்க சிரிக்கறாங்களாங்கறதுதான் முக்கியம்’’ன்னு சொன்னாராம். (நாகேஷே எழுதிய அவர் வாழ்க்கை வரலாறில் படித்தேன்). அதுபோலத்தான் இங்கும்... காமெடியில் லாஜிக்கை நான் கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை. அது தேவையுமில்லை என்பது என் கருத்து. மனம் விட்டுச் சிரிக்கும் நேரத்தில் அறிவால் இயங்க வேண்டுமா என்ன? எப்படியோ... நான் செய்த தவறுகளை எண்ணியாவது சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
    2. உண்மை. இதையெல்லாம் நான் கவனிக்கக் கூட இல்லை.

      Delete
  16. யாரை கேட்டு வெங்கட் அண்ணாவை பார்க்க போனீங்க. அடுத்த விமனத்துலயே எனக்கும் டிக்கெட் ப்க் பண்ணி என்னையும் கூட்டி போங்கண்ணா. தங்கச்சி கோவம் பொல்லாது

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு... உடனே கூட்டிட்டு் போயிரலாம். இதுக்காக கோவிக்கல்லாம் கூடாது. இப்ப இந்த கேக்கைச் சாப்பிட்டுட்டு சிரிப்பியாம்.. சரிதானே....!

      Delete
  17. நகைச்சுவை வண்டி சென்னை ஆட்டோவை விட சூப்பர் அந்த பிளைட்டே தேவல நானும் பயந்ததுண்டு சென்னையில் ஹீஹீஈஈ!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துச் சிரித்த நேசனுககு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. I am really Sorry, தவறுகள் இருந்தாலும் செமையா சிரிச்சேன் என்று எழுத வந்தேன். ஹியூமர்ல லாஜிக் பாக்கத் தேவையில்லை என்பதே என் கருத்தும்.
    தவறுக்கு மன்னிக்க

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. என்னங்க இது... நீங்க சொன்ன கருத்தோட தொனியை நான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நீங்க எதுக்கு மன்னிப்புல்லாம் கேட்டுக்கிட்டு? நான்ல கேக்கணும். ஸாரி பிரதர்! செமையா சிரிச்சேன்னு நீங்க சொன்னதைவிட மகிழ்வான விஷயம் வேறென்ன? மிக்க நன்றி!

      Delete
  19. பல்லெல்லாம் வாயாக இருந்தார்

    ‘அம்மா’ ஓட்டலில் இருபது இட்லிகளைச் சாப்பிட்டவர் மாதிரி அகலமான சிரிப்புடன்

    புயல் காற்று வீசினால் ரயில், பிளேன் எந்த டிக்கெட்டும் தேவைப்படாமல் சென்னைக்கு வந்து விடுகிற தினுசில்

    வயிற்றின் மேல் மண்டியிட்டு அமர்ந்து அட் எ டைம் ஐந்து சிவமணிகள் ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி கலக்கியது.

    அம்மாவுக்கென்று வாங்கிய போதை, ஸாரி... கீதை புத்தகம்


    கருணாநிதியைச் சந்தித்துவிட்ட ஜெயலலிதா போலானது அவள் முகம்.

    ‘முருகல்லாயேசுவே!

    ஏர்ரோ’ப்ளேன் இப்போ ‘இறங்கோ’ப்ளேன் ஆகப் போறதாம்.

    இப்படி லொள்ளு வசனங்களைஎல்லாம் அள்ளித்தெளித்து படிக்கறவங்களை திகைத்து ரசித்து சிரிக்கவைக்கறதுக்கு உஙக்ளை அடிச்சுக்க முடியாதுண்ணா.

    நீண்ட நாட்களௌக்கு பிறகு சரிதா மன்னியை கண் முன் கொடுவந்து நன்றாக சிரிக்க வைத்து விட்டீர்கள்.

    இனி சரிதா மன்னி மாதம் ஒரு தடவையாவது மின்னல் வரிகளில் மின்ன வேண்டும் .


    சரிதா மு.கொ.தனமாய் //இந்த வரிகளுக்கான விளக்கம் ப்ளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததோடு மட்டுமில்லாம ரசித்த வரிகளையும் சொல்லுறது எனக்கு ரொம்பவே எனர்ஜி டானிக் ஸாதிகாம்மா. என்னால் இயன்றவரை அடிக்கடி சரிதாவை அழைத்து வந்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன். சரிதானே.... மு.கொ. தனம் = முந்திரிக் ‌கொட்டைத் தனம்! ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. Even in one of the movies, Kaundamani creates a rumour by telling the public that a bomb has been planted inside a coconut. Though it is logically practically impossible, but that joke became very famous and even today if we happen to see such comedy clips, we laugh out heartily.

    ReplyDelete
    Replies
    1. ஆம்,, ‘உதயகீதம்’ படத்தில் வரும் அந்தக் காமெடி ரசனைக்குரியதுதான் இன்றும். நினைவுபடுத்திய உங்களுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  21. ரசித்தேன். சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த தோழிக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  22. என் வயிற்றின் மேல் மண்டியிட்டு அமர்ந்து அட் எ டைம் ஐந்து சிவமணிகள் ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி கலக்கியத
    அச்சச்சோ என்னண்ணா எப்படி தாங்கிட்டீங்க.

    ‘‘சைவமாவது...? நான் வைஷ்ணவன்ம்மா! நெத்தில பாரு எவ்ளோ பெரிசா திரிசூர்ணம் இட்டுண்டிருக்கேன்...!’’ என்று கஸ்டம்ஸ் பெண்ணிடம் நெற்றியைக் காட்டி அபிநயத்துடன் அவர் பேச, அவள் ‘ழே’ ‌என்று விழித்தாள்.
    எங்களையும் ”ழே”ன்னு விழிக்க வச்சுட்டீங்களே?

    ‘‘மாப்ளை பேண்ட் போட்டிருக்கார். பெல்ட் போட்டா நியாயம். வேஷ்டி கட்டிண்டு நான் பெல்ட்லாம் போட்டா சகிக்காதேடிம்மா...’’ என்றார் மாமா.
    ‘‘நோ அங்கிள்.... ஐ மீன் ஸீட் பெல்ட்’’

    ஓ முதல் விமானப்பயணத்தில் பலருமே மாமா ரேஞ்சுக்குதான் அசடு வழிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

    ‘‘ஆஹா...! கோகோகோலாவை விட காரமா இருக்கே. ஆனா நன்னா இருக்குடிம்மா... இன்னொண்ணு குடேன்’’ என்று இன்னொரு கிளாஸ் அதே திரவத்தை கு(அ)டித்தார் மாமா.

    என்னண்ணா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன் இப்படி சிரிக்க வச்சு வயித்துவலி உண்டாக்கிட்டீங்களே/ பதிவு சூப்பர். இன்னும் முந்தய பதிவெல்லாம் போயி பாக்கணும் .அங்கயும் எப்படில்லாம் சிரிக்க வக்கபோரீங்களோ எதுக்கும் கையில மாத்திரை எடுத்து வச்சுகிட்டே போறேன்




    ReplyDelete
    Replies
    1. வருக தங்கையே... நீண்ட நாளுக்குப் பின் என் தளத்தில் உன்னைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. வயிற்றுவலி வருமளவுக்கு ரசித்துச் சிரிக்க முடிந்தது என்பதில் போனஸ் இன்னும் மகிழ்ச்சி! இந்த இடை நாட்களில் நான் எழுதிய மற்ற எழுத்துக்களை படிக்கிறேன் என்று தங்கை சொன்னது மூன்றாவது மகிழ்ச்சி! மூன்று மகிழ்வுகளைத் தந்த உனக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!

      Delete
  23. அருமையான நகைச்சுவைப் பதிவு.
    இரசித்துச் சிரித்தேன் பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துச் சிரித்த அருணாவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  24. பிளைட் சார்ஜ் நீங்க கொடுக்கலையா? அதான் அவ்வளவு சந்தோஷமா?
    சரிதா இங்கதான் உங்களுக்கு ஆப்பு வச்சிருப்பாங்கன்னு நினச்சு ஏமாந்து போய்ட்டேன் கணேஷ் சார்!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஏமாந்தாலும் ரசித்த முரளிக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  25. என்னை ஈர்த்த தங்கள் வரிகள்

    //என்னதான் கஸ்டம்ஸ் ஆபீஸராக இருந்தாலும் மசக்கைக்காரி பாருங்கள்...! ஹி... ஹி...//


    //கருணாநிதியைச் சந்தித்துவிட்ட ஜெயலலிதா போலானது அவள் முகம்.// மிக ரசித்தேன்

    //முருகல்லாயேசுவே!//

    //‘அப்படி குபீர்னு ஏர்றதாலதான் அதுக்கு ‘ஏர்ரோ’ப்ளேன்னு பேரு வெச்சிருக்கான்...’’ என்று தன் கண்டுபிடிப்பை விளககி ‘கடி’த்தார் மாமா. பற்களைக் கடித்தேன் நான்//

    ஒரு பயணத்தை நகைச்சுவை நயத்துடன் கூறியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததுடன் நில்லாமல் எவையெல்லாம் ரசிக்க வைத்தன என்றும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது என்னை நான் கூர்தீட்டிக் கொள்ள மிக உதவும் நண்பரே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  26. Nice episode sir, thank u for sharing with us with your usual humorous way.

    ReplyDelete
    Replies
    1. என் நகைச்சுவைப் பாணியை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த ந்னறி!

      Delete
  27. டெல்லி டூ சென்னை உங்கள் கூடவே விமானத்தில் பயணித்த உணர்வு. வரிக்கு வரி ரசித்தேன். பல இடங்களில் குபுக் சிரிப்போடு. எவ்வளவு மனக்கவலை இருந்தாலும் மின்னல் வரிகள் பக்கம் ஒரு பத்து நிமிடம் வந்துபோனால் மனம் லேசாகிவிடும். தங்கள் நகைச்சுவைத் திறனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அன்றாடம் நம்மைச் சூழும் ஆயிரம் கவலைகளுக்கு நடுவில் அவற்றை புறந்தள்ளிவிட்டு சில கணங்களேனும் சிரிக்க, மனம் லேசாக உங்களுக்கு ‘மின்னல்வரிகள்’ வந்தால் முடிகிறதென்றால் அது என் பாக்யம்! இதைவிட மனநிறைவு வேறென்ன கிடைத்துவிடும் எனக்கு. என் நகைச்சுவையை ரசித்து மனம் நிறையப் பாராட்டிய தோழி கீதாவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  28. ரசிச்ச வரிகளைச் சொல்லணும்ன்னா இடுகை முழுசையும் காப்பி செய்யணும். ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன் :-)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube