Sunday, June 3, 2012

‘நண்பேன்டா!’ன்னு சொல்லலாமா..?

Posted by பால கணேஷ் Sunday, June 03, 2012

நாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்படுவார். அப்படிப்பட்ட பெருமனம் அவருக்கு.

ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகி விட்டார்கள் என்பதை வெளிக்காட்ட நமது பெரியவர்கள் எத்தனையோ சிறப்பான வழிகளைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கென்றே ஒரு தனி வழியைக் கடைப்பிடிப்பதைக் காணுகின்றேன்.

அதாவது, நெருங்கிப் பழகியதும் தங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசத்தைக் கூட கவனியாது, ‘‘ஏண்டா... எப்படா வந்தே?’’ ‘‘ஏ கழுதே... என்னெப் பாக்காம எங்க போறே?’’ என்று இப்படி ஏக வசனத்தில் பேசுவதையும், வேறு யாரிடமாவது தனது நெருங்கிய நண்பரைப் பற்றி்ப் பேசும்போது கூட, ‘‘அவன் ஒரு ஃபூல்! (Fool).’’ ‘‘அவன் எப்பவும் இப்படித்தான்’’ என்றெல்லாம் குறிப்பிடுவதையும் தங்களுக்கிடையில் இருக்கும் நட்பை வெளிக்காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

னது நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னைக் காண என் வீட்டுக்கு வந்தான். அப்போது நான் குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். வந்த நண்பன் என் தாயாரிடம், ‘‘ஏம்மா, ராமச்சந்திரன் இருக்கானா?’’ என்ற கேட்டான்.

தாயார்: ‘‘ஏம்ப்பா... உன்னெ வரச் ‌சொன்னானா?’’

நண்பன்: ‘‘சுத்த மடப்பய! என்னெக் காலங்காத்தாலெ வாடான்னு சொல்லிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ போயிட்டானே... சேச்சே..!’’

தாயார்: ‘‘நீங்க ரெண்டு பேரும் சிநேகிதர்களா?’’

நண்பன்: ‘‘ஆமாம்மா. இவனெப் போய் சிநேகிதம் பண்ணிக்கிட்டேனே, என்னெ அடிக்கணும்!’’

என் தாயார் அவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்து, ‘‘ஏம்பா..! நான் சொல்றதைக் கவனி! உன்னுடைய சிநேகிதனைப் பத்தி நீயே தரக்குறைவாப் பேசினா, அவனை யார் மதிப்பா? நீ அவனெ மதிக்காதபோது அவனுடைய சிநேகிதனா உனக்கு எப்படி மத்தவங்க மரியாதை காண்பிப்பாங்க? உன் நண்பனுக்கு நீ பெருமை தேடித் தரணுமே தவி‌ர, அவனுககு இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடக் கூடாது. உங்க சிநேகிதம் எப்படியோ இருக்கட்டும். அது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது வெச்சுக்குங்க... ஆனா, பலர் முன்னிலையிலே இதெல்லாம் வேண்டாம்...’’ என்றார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... அன்று முதல் பிறர் முன்னிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரைப் பற்றியும் ஏக வசனத்தில் பேசுவதே கிடையாது. பிறர் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் இந்தச் சினிமா உலகத்தில் இப்படித் தரக்குறைவாகப் பிறர் முன்னிலையில் நடந்து கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்று தோன்றுகிறது.

துவும் எனக்கு நினைவுககு வருகிறது. இதெல்லாம் தவறான வழியில் தன் மனத்தை வளர்த்துக் கொண்ட, நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, மேலே மேலே செல்லும் துணிவில் ஏற்படுகின்ற விபரீதத்தினால்தான் என்பதை நாம் உணருகிறோம். நெருங்கிய நண்பர்களாகட்டும் அல்லது உரிமையோடு பழகும் தன்மை பெற்றவர்களாகட்டும், அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தனிமையில் பேசிக் கொள்வதைப் ‌போல் பொது இடத்திலும் பேசுவது சரியாயிராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இங்கே இதுபற்றி நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இந்தப் பயணத்தின்‌போது தம்பி நாகேஷ் எல்லோரிடத்திலும் பழகும் போது காட்டும் நல்ல பண்புகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஒரு சிலரிடம் மட்டும் உரிமையோடு பேசுாவதையும் கவனித்தேன். தம்பி அசோகன், ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவ் இந்த இருவரை மட்டும்தான் ‘டே’ போட்டுப் பேசினார்.

அந்தப் பேச்சு கீழ்த்தரமாகவோ, கேவலமாகவோ இல்லை. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் உரிமையுடன் அவர் அப்படிப் பேசும்போது புரியாதவர்களுக்கு அது வேறுவிதமாகத் தோ்ன்றிவிடக் கூடுமோ என்று நான் எண்ணினேன். தன்னால் அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சி ஏற்பட்ட போதுதான் அப்படி அவர் அந்த இருவரிடமும் நடந்து கொண்டாரே தவிர, வேறு எப்போதும் யாரிடமும் எத்தகைய மரியாதைக் குறைவான பேச்சையோ, கருத்தையோ வெளிப்படுத்தியதே கிடையாது என்பதையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல... அவரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ், நாம் இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது கேள்வி. ‘‘கொஞ்சம் இரு. வெளியே எட்டிப் பார்த்தச் சொல்றேன். மைல்கல் வெளியேதானே நட்டிருப்‌பான்! பார்த்துட்டாப் போறது!’’ என்ற பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... சொர்ணமும் மற்றவர்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.

சாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாதிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ்! கீழே கீழே அப்படி இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’

-இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

-எம்.ஜி.ஆர். எழுதிய ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ நூலிலிருந்து.

44 comments:

  1. வரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் வந்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்விலும் தன்னை சுற்றி உள்ளவர்களை சிரிக்க வைப்பவர் நாகேஷ் என்று படித்திருக்கிறேன்.இப்பொழுது உங்கள் பதிவின் மூலம் மேலதிகமாக அறிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை நடிக்கும் போது மட்டுமின்றி எப்போதும் உடனிருப்பது பெரிய பலம் இல்லையாம்மா... ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  3. //இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்??//

    நாகேஷ் என்ற பெயரைக்கேட்டாலே சிரிப்பு வரும். அதுவும் அவர் பேசினால் கேட்கவா வேண்டும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதானே உடல் சேட்டையும், டைமிங் பேச்சுமாக நாகேஷ் ‌என்றாலே வெடிச் சிரிப்புதானே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த ந்னறி!

      Delete
  4. எம்ஜிஆர் புத்தகம் எழுதினாரா?! புத்தகம் இப்போ கிடைக்குதா?

    ReplyDelete
    Replies
    1. ‘பொம்மை’ சினிமா இதழில் 1971ம் ஆண்டு 13 அத்தியாயங்கள் நிறைய விஷயங்களோடு எம்.ஜி.ஆர். உ.சு.வா. உருவான கதையை எழுதினார். அதை சென்னை விஜயா பதிப்பகத்தார் நிறைய அழகான போட்டோக்களோடு பதிப்பித்துள்ளார்கள் அப்பா ஸார். 120 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகம் சென்னையில் கிடைக்குது.

      Delete
    2. நன்றி கணேஷ். ஆகஸ்ட் மாதம் இந்தியா வரும்போது, கண்டிப்பாக வாங்கி விட வேண்டும்.

      Delete
  5. nalla pakirvu!

    anupavangale vaazhkai....

    ReplyDelete
    Replies
    1. சரியான வார்த்தை சீனி! நமது, பிறரது அனுபவங்கள் சேர்ந்தது தானே வாழ்க்கை. ரசித்தப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  6. நாகேஷ் எத்தனை ஒரு நகைச்சுவை உணர்ச்சியுள்ள மனிதர் அவர் பற்றி எம்.ஜி.ஆர். எழுதியதை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி கணேஷ். நான் பிறந்த வருடத்தில் எழுதி இருக்கிறார்... இதற்கு முன் நானும் எம்.ஜி.ஆர். எழுதிய இப்புத்தகத்தினைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பிறந்த ஆண்டில்தான் அவரின் ‘உ.சு.வாலிபன்’ வெளியாகி பெரு வெற்றி பெற்றது. கையோட சுடச்சுட அவர் பொம்மையில் எழுதிய கட்டுரைகள் அவை. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  7. நாகேஷ் என்றால் சாப்ளின் நியாபகம் தான் வருகிறது. பேசாமல் சிரிக்க வைத்தவர் சாப்ளின், பேசியும் பேசாமலும் சிரிக்க வைத்தவர் நாகேஷ். திருவிளையாடலில் மன்னா அரசே வேந்தே என்று அரசவையில் அவர் கடும் முக உடல் பாவங்கள் இன்னொரு நாகேஷ் வந்தாலும் இவருக்கு ஈடு கொடுக்க முடியாது மொத்தத்தில் அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. கரெக்‌ட் சீனு. நாகேஷின் சில நகைச்சுவைகளை அவரே நினைத்தாலும் மீண்டும் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  8. Replies
    1. ரசித்துப் படித்து நல்ல பகிர்வென்று பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. அன்னை சத்யா அவர்கள் கூறிய அறிவுரை மிக மிக முக்கியமான ஒன்று. அனைவரும் அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டிய ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. நட்பைப் பற்றி அன்னையின் அறிவுரையை எம்.ஜி.ஆர். கூறியதைப் பகிரத்தான் இதை எடுத்தாண்டேன். ஆனால் அதை மீறி நாகேஷ் அனைவரையும் கவர்ந்து விட்டார். நீங்கள் கவனித்துச் சொன்னதில் மிகமகிழ்வு எனக்கு. தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  10. நவரசக் கலைஞர் நாகேஷ் சார் பற்றிய நல்ல பதிவு சார்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி நண்பரே!

      Delete
  11. நல்ல விஷயங்களை சம்பந்தப் பட்டவர்கள் இல்லாதபோதும் அல்லாதவற்றை அவர்களிடமேயும் பேச வேண்டும் என்பார்கள் நல்ல அறிவுரை.
    நல்லதொரு பகிர்வு. நாகேஷ்! ஞாபகப் படுத்திட்டீங்களே...
    அப்பாஜி...எம் ஜி ஆர் 'நான் ஏன் பிறந்தேன்' என்ற ஒரு தொடர் கூட எழுதியிருக்கிறாரே.....

    ReplyDelete
    Replies
    1. நான் ஏன் பிறந்தேன் - ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய அவரின் வாழ்க்கைக் கதை அல்லவா? சில பகுதிகள் படித்ததுண்டு நான். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  12. ஒரு நகைச்சுவைச் சக்கரவர்த்தி பற்றிய பதிவு..
    திரையில் அவரின் முகத்தை பார்த்தாலே
    சிரிப்பு வந்துவிடும்...
    இன்னும் அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

    நண்பர்கள் பற்றி நீங்கள் சொன்னபோது
    எனக்கு "சின்னவீடு" படத்தில் கதாநாயகி கல்பனா
    தன் கணவரின் நண்பரிடம் சொல்லும் அறிவுரை தான்
    நினைவுக்கு வருகிறது...

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்????!!"

    அத்தகைய இலக்கணத்திற்கு தகுந்தவர்களுள் ஒருவர்
    திரு.நாகேஷ் அவர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சின்ன வீடு படத்தில் இதே அறிவுரையை மனைவி, கணவனின் நண்பனிடம் ‌சொல்வதாக வைத்து, ‘என் வைஃபைப் பாத்தாலே அவனவன் மிரள்றான்’ என்று காமெடி பன்ச்சுடன் முடித்திருப்பார் பாக்யராஜ். நாகேஷை நினைவுகூர்ந்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  13. நாகேஷ் அவர்களைத் தாண்ட இன்றுவரை யாருமேயில்லை.உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவரின் அட்டகாசமோ அட்டகாசம் !

    என் ஃப்ரெண்ட் உங்களை எப்பிடித் திட்டலாம்ன்னு யோசிச்சிட்டு வரேன் !

    ReplyDelete
    Replies
    1. நாகேஷை உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமென்கிற விஷயம் எனக்குத் தெரியும் ஃப்ரெண்ட். அதுசரி... என்னைத் திட்டப் போறீங்களா? அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்? புரியலையே... சீக்கிரமாத் திட்டுங்க, ப்ளீஸ்!

      Delete
    2. ‘‘ஏ கழுதே(பிடிக்கலன்னா மாத்திக்கலாம் )... என்னைப் பாக்காம எங்க போறே(றீங்க)?’’ என்று இப்படி.....!

      Delete
    3. அதெல்லாம் எம்.ஜி.ஆர். எழுதினதுதானே. நான் இங்க எடுத்து உங்களுக்குத் தந்திருக்கேன் ஃப்ரெண்ட்! அதும் உங்களுக்கு கஷ்டமா ஃபீல் ‌பண்ண வெச்சிருந்தா.. ஸாரி!

      Delete
  14. இனிமையான நகைச்சுவை நாகேஸ் இடம் எனக்கு எப்போதும் பிடிக்கும் அவர் உடல் மொழி! நல்ல ஒரு நகைச்சுவையை பகிர்ந்தீர்கள் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி நேசன்!

      Delete
  15. நல்ல பகிர்வு sir ! ரசித்துப் படித்தேன் ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. எனக்கு நாகேஷ் அவர்களை றொம்ப பிடிக்கும்.. அருமையான நடிகர்..

    எம்.ஜி.ஆர் புத்தகம் எழுதினாரா புது தகவல் அது எங்கே கிடைக்கும்???

    அருமையாக பதிவு அங்கிள்...

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் நாகேஷ். புத்தகம் கிடைக்குமிடம்: விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈககாட்டுத் தாங்கல், சென்னை-32 vijayapublications@gmail.com என்ற ஈமெயில் ஐடியிலயும் கான்டாக்ட் பண்ணலாம். 45540005/23652583 எண்களில பேசியும் தொடர்பு கொள்ளலாம். அருமைன்னு பாராட்டினதுக்கு நன்றி எஸ்தர்.

      Delete
  17. 'வாழ்த்த வயதில்லை' என்று ஏதோ ஒரு நிகழ்ச்சியில் யாரோ சொல்ல, கீழிருந்த நாகேஷ் பக்கத்து இருக்கை நண்பரிடம் சொன்னாராம்.'வீட்டை விட்டு கிளம்பும்போது அது ஞாபகம் வரலியாக்கும்' சரியான timing சென்ஸ் உள்ளவர். நம் அதிர்ஷ்டம் அவர் காலத்தில் நாமும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ஸார்... எதிராளி பேசியதும் ஒரு மாத்திரை அளவுக்கும் குறைவான நேரத்தில் நாகேஷின் பதில் வந்து விழும். சிரிக்க வைக்கும். Such a Legend! ரசித்துப் படித்துக் கருத்தி்ட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. பதிவும் பின்னூட்டங்களும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துவிட்டன கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுடன் பின்னூட்டங்களையும் ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. பதிவு அருமை..படிக்காமல் போயிருந்தால் சரியாக மிஸ் செய்திருப்பேன் சார்..எம்ஜிஆர் அவர்கள் எழுதியதா இப்புத்தகம்..? படிக்க ஆவலை பலமாக தருகிறது.பல அர்த்தங்கள் நிறைந்த பகிர்வு அருமைங்க..நன்றி.

    @@ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’@@
    இது ஒன்று போதுமே..நாகேஷ் என்றும் நாகேஷ்தான்..இந்திய சினிமா பெற்றெடுத்த அற்ப்புதமான நடிகர்..பழைய படங்களை நான் பார்ப்பதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.என் அபிமான நடிகர்.

    ReplyDelete
  20. ஒரு கருத்தினை அருமையாக மிக நேர்த்தியாக
    தலைவரின் எழுத்துடன் சேர்த்துக் கொடுத்தது அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. Nagesh - Great Comedian. We expected him to utter some dialogues that makes us laugh even while acting as a villain in Apoorva Sagodarargal. Good human and humarous comedian. Audiance remember him next to Chandrababu.

    ReplyDelete
  22. நகைச்சுவை மன்னன்தான்.
    பகிர்வும் சுவைக்கின்றது.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube