நீண்ட நாட்களாகவே அந்தச் சந்தேகம் எனக்கு இருந்து வந்தது. சமீபத்தில ரமணி ஸாரின் திரைப்பட அலசலில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு சிகரங்களைப் பற்றி பலரும் கருத்துத் தெரிவித்திருந்ததைப் பார்த்ததும்தான் அதைக் கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றியது. சிவாஜியும் எம்ஜிஆரும் இருவருமே திறமையாளர்கள், அவரவருக்கென்று ஒரு தனித்தன்மை வைத்துக் கொண்டு ஜொலித்த சாதனையாளர்கள்.
பொதுவாவே எம்.ஜி.ஆரின் படங்களில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கும். தன் படப் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர். ஆனால் சிவாஜி அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. இயல்பாகவே அவரின் படப் பாடல்கள் ஹிட்டானது அதிர்ஷ்டம்தான்.
நான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன். எந்த சானல்களில் அவரின் பாடல்கள் ஒளிபரப்பானலும் அதை மாற்றாமல் பார்ப்பவன். எம்.ஜி.ஆரின் பாடல்கள் என்றால் அவ்வளவு இஷ்டம் எனக்கு. ஆனாலும் ஒரு சில எம்.ஜி.ஆர். பாடல்கள் வந்தால் மட்டும் உடனே சானல் மாற்றி விடுவேன். அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அல்ல, அவருக்கு குரல் கொடுத்திருந்த டி.எம்.செளந்தர்ராஜன்தான்!
பொதுவாவே எம்.ஜி.ஆரின் படங்களில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கும். தன் படப் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர். ஆனால் சிவாஜி அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. இயல்பாகவே அவரின் படப் பாடல்கள் ஹிட்டானது அதிர்ஷ்டம்தான்.
நான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன். எந்த சானல்களில் அவரின் பாடல்கள் ஒளிபரப்பானலும் அதை மாற்றாமல் பார்ப்பவன். எம்.ஜி.ஆரின் பாடல்கள் என்றால் அவ்வளவு இஷ்டம் எனக்கு. ஆனாலும் ஒரு சில எம்.ஜி.ஆர். பாடல்கள் வந்தால் மட்டும் உடனே சானல் மாற்றி விடுவேன். அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அல்ல, அவருக்கு குரல் கொடுத்திருந்த டி.எம்.செளந்தர்ராஜன்தான்!
இதுக்கெல்லாம் மூட்அவுட்டா தம்பி? கவலைய விடுப்பா, கணேசா! |
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரண்டு திலகங்களின் படங்களுக்கும் அவரின் இசைதான். போட்டி அதிகம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் இரண்டு திலகங்களுக்குமே குரல் கொடுத்திருக்கிறார் டி.எம்.செளந்தரராஜன். டி.எம்.எஸ்ஸின் குரல் அனாயாசமாக மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்கக் கூடியது. சீர்காழி கோவிந்தராஜனுக்கு இணையாகப் பாடக் கூடிய ஒரே குரல் இவருடையதுதான். இவரின் குரலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. எனக்கும் இவரின் பாட்டுக்கள் பிடிக்கும்.
ஆனால் பாருங்கள்... இவர் சிவாஜி என்ற கண்ணுக்கு வெண்ணையும், எம்.ஜி.ஆர். என்ற கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்து விட்டார் என்பதுதான் என் சந்தேகம். எம்.ஜி.ஆருக்கு இப்படிப் பாடுகிறார்: ‘‘பாலும் வெல்ல்ண்ண்மை கள்ளும் வெல்ல்ண்மை பருகிடும் வேளை, புரிந்திடும் உண்மை’’ என்று. மற்றொரு பாடலில் ‘‘உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும். அதை பூங்க்க்உயில் கூவ்வ்ட்டங்கள் கேட்டு வரும்’’ என்று பாடியிருப்பார். முழுக்க முழுக்க மூக்கினாலேயே கொனஷ்டை செய்து.
இதுதான் அவர் ஸ்டைல் என்றால் சிவாஜிக்குப் பாடும் போது ‘‘கல்ண்ண்ணில் தெரியும் வல்ல்ண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’’ என்றுதானே மூக்கால் பாடியிருக்க வேண்டும்? அங்கே தெளிவாக ‘கண்ணில் தெரியும் வண்ணப் பறவை’ என்று உச்சரித்துப் பாடியிருககிறார். ஏன்...? சிவாஜி ஸார் வீட்டுக்குக் கூப்பிட்டு உதைப்பார் என்று பயமா? தவிர, எல்லாம் தெரிந்த ஜித்தரான எம்.ஜி.ஆர். எப்படி இப்படி மூககால் பாடுவதை அனுமதித்தார் என்பதும் தெரியவில்லை.
சிவாஜியிடமோ வாத்யாரிடமோ இனி இதுபற்றிக் கேட்க முடியாது. எனவேதான் உங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஆனால் பாருங்கள்... இவர் சிவாஜி என்ற கண்ணுக்கு வெண்ணையும், எம்.ஜி.ஆர். என்ற கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்து விட்டார் என்பதுதான் என் சந்தேகம். எம்.ஜி.ஆருக்கு இப்படிப் பாடுகிறார்: ‘‘பாலும் வெல்ல்ண்ண்மை கள்ளும் வெல்ல்ண்மை பருகிடும் வேளை, புரிந்திடும் உண்மை’’ என்று. மற்றொரு பாடலில் ‘‘உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும். அதை பூங்க்க்உயில் கூவ்வ்ட்டங்கள் கேட்டு வரும்’’ என்று பாடியிருப்பார். முழுக்க முழுக்க மூக்கினாலேயே கொனஷ்டை செய்து.
இதுதான் அவர் ஸ்டைல் என்றால் சிவாஜிக்குப் பாடும் போது ‘‘கல்ண்ண்ணில் தெரியும் வல்ல்ண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’’ என்றுதானே மூக்கால் பாடியிருக்க வேண்டும்? அங்கே தெளிவாக ‘கண்ணில் தெரியும் வண்ணப் பறவை’ என்று உச்சரித்துப் பாடியிருககிறார். ஏன்...? சிவாஜி ஸார் வீட்டுக்குக் கூப்பிட்டு உதைப்பார் என்று பயமா? தவிர, எல்லாம் தெரிந்த ஜித்தரான எம்.ஜி.ஆர். எப்படி இப்படி மூககால் பாடுவதை அனுமதித்தார் என்பதும் தெரியவில்லை.
சிவாஜியிடமோ வாத்யாரிடமோ இனி இதுபற்றிக் கேட்க முடியாது. எனவேதான் உங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
|
|
Tweet | ||
திரு TMS அவர்கள் இசை அமைப்பாளர்களின் விருப்பப்ப,டி அவ்வாறு சந்தத்திற்கு ஏற்ப பாடியிருக்கலாம் என்பது என் கருத்து.நீங்களும் மதுரைக்காரர் தானே. உங்கள் ஊர்க்காரரான திரு TMS அவர்களிடமே கேட்டுத்தெரிந்துகொள்ளலாமே?
ReplyDeleteஎங்க ஊர்க்காரரின் பாட்டு எனக்கும் பிடிக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன் நண்பரே. உங்களின் உடன் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteமுழுக்க முழுக்க மூக்கினாலேயே கொனஷ்டை செய்து பேசிய எம்ஜிஆருக்கு ஒத்திசைவாக மூக்கினாலேயே கொனஷ்டை செய்து பாடியதில் தவறொன்றும் இல்லையே!!!!
ReplyDeleteஎம்.ஜி.ஆருக்கு கணீரென்ற குரல் இருந்தது. குண்டடி பட்டதனாலேயே அவர் அப்படிப் பேசினார். அதற்காக பாடல்களில் அப்படிப் பாடியிருக்க வேண்டுமா என்பதே என் ஆதங்கம் நண்பரே. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசார் நானும் எம்ஜிஆர் ரசிகன்தான். எம்ஜிஆர் எப்போதும் கொஞ்சுதல் போலத்தான் பேசுவார். மேலும் எம்ஜிஆர் - சரோஜாதேவி ஜோடி பிரசித்தம். அதனால் டி.எம்.எஸ் அப்படி பாடி இருக்கலாம். மதுரைக்காரரான நீங்கள் மதுரைக்காரரான டி.எம்.எஸ்ஸையே கேட்டால் ஆச்சு. எங்களுக்கும் ஒரு பதிவு கிடைக்கும்.
ReplyDeleteமென்மையாக் பேசுகிற வாத்யாருக்காக மென்மையாகப் பாடலாம். ஆனால் குரல் சேட்டை? அதைத்தான் நான் குறிப்பிட்டது. எங்க ஊர்க் காரரை சந்தித்தால் அவசியம் கேட்டு விடுகிறேன் இளங்கோ. தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteஎன்னமா ஆய்வு செய்துருகீங்க!!
ஆனாலும் எவ்வளவு குறைகள் தெரிந்தாலும்
அன்று வந்த பாடல்களை கேட்கும் சுகம்
இன்று இல்லை நண்பரே..
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால படங்களின் பாடல்களில்
இப்படி மூக்கால் பாடுவது இல்லை என நினைக்கிறேன்..
அவரின் குறள் மாற்றத்திற்கு பின்னரே இப்படி
வந்திருக்கும் என்பது என் எண்ணம் நண்பரே..
உங்கள் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன் நண்பா. எம்.ஜி.ஆருக்கு மதுரை வீரன் காலகட்டத்தில் டி.எம்.எஸ். கணீரென்றுதான் பாடியிருந்தார். நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநான் பின்னூட்டம் போடும்போதே அந்ததந்த பதிவர்கள் நடைக்கேற்ப எழுத வேண்டியுள்ளது.TMS எப்படி ஒரே மாதிரி சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் குரல் கொடுக்க முடியும்?இன்றும் ரேடியோவில் பாடல் கேட்டு இது சிவாஜி படம்,இது எம்.ஜி ஆர் படம்,இது ஜெய்சங்கர் படம் என்று நம்மால் சொல்லமுடிகிறது என்றால் அதற்கு TMS மேதமையே காரணம்.உங்கள் சந்தேகம் தவறானது.
ReplyDeleteexcellent!
Deleteடி.எம்.எஸ்.ஸின் மேதைமையை நான் குறைத்துச் சொல்லவில்லையே... நண்பர் ஸ்ரீராமின் கருத்துதான் என்னுடையதும். சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் பார்த்தும் நினைவில் பதிந்தும் இருப்பதாலேயே சிவாஜி பாடல், எம்.ஜி.ஆர். பாடல் என்று பிரித்துச் சொல்கிறீர்கள். வானொலி காலகட்டத்தில் பாடல் மட்டும் ஒலிபரப்பப்பட்டிருந்தால் டி.எம்.எஸ். என்று மட்டும்தான் சொல்லியிருப்போம் நாம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅருமையான சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறீர்கள்
ReplyDeleteஅவர் அப்படிப் பாடியதால்தானே இருவர் குரலையும்
நாம் வித்தியாசப் படுத்தி அறிய முடிந்தது
நீங்கள் எழுதியுள்ள பாடல் வரிகளை
படிப்பது போல் இல்லை கேட்பது போலவே இருந்தது
ம்ம்ம்... பாடல் வரிகளைப் படித்தபோதே கேட்டதாய் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
DeleteTha.ma 4
ReplyDeleteசிவாஜி MGR ஆகிய இருவருக்குமே TMS பாடியிருந்தாலும் பாடலைக் கேட்கும் பொழுதே அது யாருடைய படம் என்பது புரியும். இது பற்றி TMS-ஏ ஒரு முறைப் பேட்டியில் சிவாஜிக்கு தான் சாதாரணமாக பாடுவதையும், அதுவே MGR-க்கு என்றால் சற்று மூக்கால் பாடுவதையும் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளருக்கும் ஏன் சம்பந்தப் பட்ட நடிகர்களுக்குமே இது தெரிந்திருக்கும். பாடல்களின் மெட்டுக்களிலும் இசையிலும் அதிக அக்கரை எடுக்கும் MGR-க்கு இதைத் தேவையென்றால் சரிசெய்திருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? MGR-ஏ TMS அப்படிப் பாடுவதைத் தான் விரும்பியிருப்பார்.
ReplyDeleteகரெக்ட் நண்பரே... எல்லாம் தெரிந்த எம்.ஜி.ஆர். இதை கவனித்திருக்க மாட்டாரா? எப்படி அனுமதித்தார் என்றுதான் நான் குழம்பிக் கொண்டிருந்தேன். உங்களின் கூற்றுப்படி எம்.ஜி.ஆருக்கே இது பிடித்திருக்கலாம் என்பது சரியாக இருக்கும் போல்த் தோன்றுகிறது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநாங்கள் பாடல்களில் டிஎம் எஸ் குரலை வைத்தே யாருடைய படம் என்று கண்டு பிடிப்போம்.
Deleteஎன்க்குத் தவறேதும் தெரியவில்லை.
ஏன் ரவிச்சந்திரன்,ஜெய்ஷங்கர் இவர்களைக் கூட கண்டு கொள்வோம்.
அதுதான் அவருடைய வெர்சடாலிடி என்று பெருமை கொள்வோம்.பி.சுசீலாம்மாக்கும் இந்த திறமை இருந்தது.
ஆமாங்க உங்க அளவுக்கு யோசிக்க முடியாது பாடலைக் கேட்டால் ரசிப்பேன் அவ்வளவு தான் தெரியும் .அவங்க அவங்க குரலுக்கு ஏற்ற மாறி பாடலாம்னு யோசித்து இருப்பாங்க போல .
ReplyDeleteஇருக்கலாம் தென்றல். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!
Deleteமன்னிக்கவும் இது நல்ல அலசல் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டேன். தலைப்பு ஒன்று தான் எனக்கு சம்மதம் இல்லை.
ReplyDeleteநன்றி நண்பரே. மனதிலேயே எதையும் வைத்துக் கொள்ளாமல் கேட்டு விடுவதல், நாலு பேர் பாராட்டினாலும் நாலு பேர் திட்டினாலும் குழப்பத்துக்கு விடை கிடைத்து விடுகிறது என்பது இந்த அலசல்களின் பலன். இப்போது நான் புரிந்து கொண்டு விட்டேன்.
DeleteI am surprised to note that the fight between MGR fans and Sivaji fans is still continuing because this has started in my school days and I am still having the chance to know the arguments put forth by both the set of fans. Such arguments take me back to my school days instantly. But my opinion is that since TMS was giving voice to both MGR and Sivaji, in order to distinguish between these two stalwarts, he might have adopted this practice. Any way, you have set the ball rolling and I am eagerly awaiting to read the comments of both the fans.
ReplyDeleteஇரண்டு இமயங்களுக்கு வித்தியாசம் காட்டத்தான் இப்படிச் செய்தார் என்கிற உங்கள் கருத்தைப் பகிர்ந்ததற்கும், பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் ஒருமுறை சென்று மகிழ்ந்ததற்கும் என் இதயம் நிறை நன்றி!
Deleteஅவர்களின் குரலுக்கு தகுந்தது போல்
ReplyDeleteபாடி இருக்கலாம்!
ம்! இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நன்றி நண்பா!
Deleteஅடடா! எப்படி யெல்லாம் கவனிக்கிறீர்கள்!
ReplyDeleteவியப்பாக உள்ளது!
நல்ல பாடல் என்றால் இரசிப்பேன்!
சா இராமாநுசம்
நல்ல பாடல்களை ரசிக்கின்ற புலவருக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடி எம் எஸ் குரலை மாற்றி இருவருக்கும் தகுந்தாற்போல குரலை மாற்றிப் பாடுகிறார் என்ற கருத்தையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரே இதைச் சொல்லியிருக்கிறார்தான். ஆனாலும் நீங்கள் கேட்கும்போது அது எம் ஜி ஆர் படப் பாடல், இது சிவாஜி படப் பாடல் என்று தெரிவதனாலேயே அப்படித் தோன்றுகிறதேயோழிய மற்றபடி ஒன்றுமில்லை. அப்போ ஜெய் சங்கருக்கும், எஸ் எஸ் ஆருக்கும், ஜெமினிக்கும் ஏ வி எம் ராஜனுக்கும் என்ன குரல் வைத்திருந்தாராம்? பாட்டு நல்லாயிருக்கா ரசிச்சுட்டுப் போயிடுவேன்... இப்படியெல்லாம் கட்சி கட்டுவதில்லை!
ReplyDeleteடிஎம்எஸ் ஜெய்சங்கருக்கு தனிக்குரல் (modulation) வைத்திருந்தார். ஏவிஎம் ஜெமினிக்கெல்லாம் பாடினதே ஜாஸ்தி, இதுல தனிக்குரல் வேறயா?
Deleteடி.எம்.எஸ்ஸின் பாடல்களில் சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு மாடுலேஷனில் கொஞ்சம் வித்தியாசம் காட்டிப் பாடியிருக்கலாம் என்பதுதான் என் கருத்தும். உங்களின் மற்றொரு கேள்விக்கு அப்பா ஸார் சூப்பரா பதில் சொல்லிட்டார் போங்கோ! மிக்க நன்றி ஸ்ரீராம்!
Deleteபழைய கால சினிமா பற்றி எனக்கு தெரியாத தகவல் அங்கிள்
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அருமை............
ரசித்துக் கருத்திட்ட உனக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநல்ல அலசல் கணேஷ். இது பற்றி ஏதோ ஒரு நேர்காணலில் டி.எம்.எஸ். அவர்கள் சொல்லியிருப்பதை நானும் கேட்டிருக்கிறேன். வெங்கட ஶ்ரீநிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல்தான் அவர் சொன்னார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருக்கானப் பாடலைப் பாடும்போது அவரவர் குரல்களுக்கேற்றபடி தன் குரலை மாற்றிப்பாடுவதாக குறிப்பிட்டிருந்தார். மற்ற நடிகர்களுக்கு அவ்வாறு செய்ததாய் தெரியவில்லை. இவர்கள் இருவரும் திரையுலகில் அப்போது கோலோச்சிக்கொண்டிருந்த இரு பெரும் நடிகர்கள் என்பதால் இருக்கலாம். யாருக்காகவும் தம் குரலை மாற்றிப்பாடாத பல பாடகர்களிடையே இருவேறு குரல்வளம் கொண்ட நடிகர்களுக்காய் தன் குரலை வேறுபடுத்திக் காட்டிய டி.எம்.எஸ். அவர்களின் முயற்சி பாராட்டவேண்டிய ஒன்றுதான்.
ReplyDeleteஉண்மை. டி.எம்.எஸ்ஸின் அருமையான குரலும், அவர் செய்த முயற்சிகளும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது கீதா. விரிவாக, சரியாகக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete"TMS குரலை மாற்றி பாடுகிறார் என்பது எல்லாருக்கும் தெரியாது சார் ! எம்.ஜி.ஆர் / சிவாஜி படுவதாகவே நான் சிறு வயதில் நினைத்ததுண்டு! தங்களின் ஆய்விற்கு நன்றி !"
ReplyDeleteஹா... ஹா... சின்ன வயதில் இப்படிப் பல பிரமைகள் எல்லோருக்கும் இருந்ததுண்டு. தொப்பி வைத்த அரசியல்வாதி எம்.ஜி.ஆர். வேறு, சினிமா நடிகர் எம்.ஜி.ஆர். வேறு என்று நினைத்ததும் உண்டு. பழைய நினைவுகளைக் கிளறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteகணேசண்ணே.. இன்னா தான் சொல்லுங்க, எம்ஜிஆர் கொஞ்சம் மூக்பேச் காரர்தான். அதனால என்ன இப்ப?
ReplyDeleteமதுரை வீரன், மகாதேவி படங்கள்லாம் எம்.ஜி.ஆரின் கணீர் குரலைக் கேட்கலாம் நீங்க. அவர் மூக்பேச் காரரா இருந்தாலும் பாடல்களில் டி.எம்.எஸ். இப்படியான கொனஷ்டையை தவிர்த்திருக்கலாமே என்பதுதான் என் ஆதங்கம். குண்டுபட்டதால் சற்றே குறைப்ட்ட அவரது குரலில் வசனம் பேசிவிட்டு, பாடல்களில் டி.எம்.எஸ். தெளிவாகப் பாடுவதை ஏற்றுக் கொண்டது போல சேட்டையின்றி பாடியிருந்தால் அதுவும் ரஸமாக இருந்திருக்கும் என்பதுதான் என் எண்ணம். வேறென்ன?
Deleteமதுரைவீரன்லயும் தெளிவான மூக்பேச் அவ்ளோதான். சிம்மக்குரல் அவருக்கு இல்லிங்கோ, அதனால கெட்டுப்போயிடலே. பானுமதியோட எம்ஜிஆர் நடிச்ச படங்கள்ள பாருங்க - பானுமதி குரல் எம்ஜிஆரை அதட்டி ஒடுக்கிடும்.
Deleteஎம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரே மாதிரி பாடியிருந்தால் ரசித்திருக்க முடியாது. இதுல முக்கியம் எம்ஜிஆர் சிவாஜியோட சினிமா வெற்றிக்கு டிஎம்எஸ் எவ்வளவு காரணமா இருந்தார்ன்றது தான். டிஎம்எஸ் இல்லின்னா எம்ஜிஆரோட வெற்றியில பாதி இல்லே. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா எம்ஜிஆர்தான் டிஎம்எஸ் கண்ணுல சுண்ணாம்பு தடவினாரோனு தோணுது.
நீங்க கொனஷ்டைன்றீங்க.. நான் கிக்குன்றேன்.. அவ்ளோதான்.
Deleteசரியான கருத்துதான். எம்.ஜி.ஆரின் வெற்றில டி.எம்.எஸ.ங்கற மேதையோ பங்கு நிறையவே உண்டு. இனி நானும் உங்களை மாதிரி கிக்காவே எடுத்துக்கறேன். சரியா...
Deleteஅட சுவையான அலசல் சென்று கொண்டு இருக்கிறதே இங்கே....
ReplyDelete”நான் பாட்டு நல்லா இருக்கா, கேளு” அந்தக் கட்சி..... :))
யாதொரு பிரச்சனையும் இல்லாத கட்சி உங்களுடையது வெங்கட். நல்லது. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteடி எம் எஸ் - குமுதம் பேட்டி ஒன்றில், நடிகருக்கேற்ப தன குரலை மாற்றிப் பாடியது உண்டு என்று கூறியிருந்ததைப் படித்த ஞாபகம் எனக்கும் இருக்கின்றது. அவர் யாருக்காகப் பாடியிருந்தாலும், அது நன்றாகவே இருக்கும். டி எம் எஸ் பாடி, நன்றாக அமையாத எம் ஜி ஆர் படப் பாடல், எனக்குத் தெரிந்து அடிமைப் பெண் படத்தில் வருகின்ற, 'உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது' பாடலும் அதற்குப் பின் வந்த சில படப் பாடல்களும். சிவாஜிக்கு வெண்ணையாகவும், எம் ஜி யாருக்கு சுண்ணாம்பாகவும் டி எம் எஸ் பாடியிருந்தார் என்று நான் நினைக்கவில்லை.
ReplyDeleteநூற்றுக் கணக்கான ஹிட்களுக்கிடையில் ஒன்றிரண்டு சரியாக அமையாவது போவது விந்தையில்லை. நான் அப்படி நினைக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி!
Deleteஅதே அதே சபாபதே:)
Deleteகணேஷ் சார் ,
ReplyDeleteநீங்க அனுபவஸ்தர் ஆனால் சொன்னது ஏற்கும் படி இல்லை.
சிவாஜி பேசுவதே பேஸ் வாய்சில் இருக்கும்(சிம்மக்குரலோன்), எம்ஜிஆர் மென்மையாக பேசுவார்.
எனவே அவர்கள் பேசுவதற்கு ஏற்ப பாடும் போதும் மாடுலேஷன் கொடுப்பதாக டி.எம்.எஸ் பேட்டியில் படித்துள்ளேன், அவர் சொன்னது தோராயமாக இப்படி இருந்தது,
சிவாஜிக்கு பாடும் போது அடிவயிற்றில் இருந்தும், ஓபன் த்ரோட்டில் பாடுவார். எம்ஜிஆருக்கு நெஞ்சில் இருந்தும் ,ஜெய்சங்கருக்கு தான் மூக்கு அல்லது தொண்டை என்று சொன்னதாக நினைவு, அதாவது பாடும் போது காற்றினை எப்படி குரல் நாண் அதிர வைக்க பயன்ப்படுத்துகிறோம் என்ற முறையை சொன்னார்.
ஜெய்சங்கருக்கு பாடிய "மனம் என்னும் மேடை மீது மயில் ஒன்று ஆடுது", நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் எல்லாம் கேட்டுப்பாருங்கள் அழுத்தம் இல்லாமல் நாசியினால் பாடியது போலவே இருக்கும்.
எனவே இதனை சுண்ணாம்பு,வெண்ணை என சொல்ல முடியாது தேவையறிந்து செய்யப்பட்ட சேவைனு சொல்லலாம்.
சீர்காழி போல ,டி,எம்.எஸ் ஆல் பாட முடியாது, டி.எம்.எஸ் மத்திம ஸ்தாயி என ஒரு இசை அறிந்தவர் சொன்னார். மேலும் ஸ்கேலில் டி.எம்.எஸ் குரலை சொன்னால் பெண்குரல் என்று சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை, அவர் இசை கற்றவர் என்பதால் சரியாக இருக்கும் என விட்டாச்சு. ஏழு கட்டை, எட்டுக்கட்டை தெரிந்தவர்கள் தான் சொல்லணும்.
ஆண் பாடகர்களில் சீர்காழி, கிட்டப்பா போன்றோரும், பெண் பாடகிகளில் 7 ,8 கட்டையில் பாடக்கூடியவர் கே.பி.சுந்தராம்பாள் என்றும் சொல்லக்கேட்டு இருக்கேன்.
சீர்காழியின் குரல் ஒப்புவமை சொல்ல இயலாதது. அது உச்ச ஸ்தாயி என்றால் டி.எம்.எஸ். மத்திம ஸ்தாயி என்பதே சரி. ஆனால் டி.எம்.எஸ். குரல் ஸ்கேல் அளவில் பெண் குரல் என்பது நம்பத் தக்கதாக எனக்கும் இல்லை. சுண்ணாம்பு, வெண்ணை என்று பிரிக்காமல் தேவையறிந்து செய்த சேவை என்று நீங்கள் சொன்னதை எடுத்துக் கொள்கிறேன் நண்பரே. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஉங்கள் ஆராய்ச்சி நன்றாக உள்ளது, காலத்தால் வென்றவர்களைப் பற்றி நான் அறிந்த்தது குறைவே, உங்கள் சந்தேகதிலிருந்து பலரின் பலவிதமான கருத்துகளை அறிந்து கொண்டேன். ஒன்றே ஒன்று மட்டும் பிடித்துள்ளது, எத்தனை மாற்றுக் கருத்துகள் வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளீரே அந்த திடம் மிகவும் பிடித்துள்ளது
ReplyDeleteதங்களின் வருகைக்கும கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி சீனு.
Deleteகொஞ்ச நாளா நெட்டுல காணோம். டிஎம்எஸ் பத்தி சொன்னா சண்டிகாளியாயிருவாங்க. தப்பிச்சீங்க. :)
ReplyDeleteஅப்படியா? டி.எம்.எஸ பத்தி குறை சொன்னா அவ்வளவு கோபம் வருமா அவங்களுக்கு...? நான் இப்பவே பதிவை மாத்திடறேன்ப்பா...
Deleteஆஹா, இதுல இவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு இருக்குதா? இத நான் கவனிச்சதேயில்லையே. ஆனாலும், அவர்கள் இருவருக்குமான தொனி வெவ்வேறாய் ஒலிப்பது தெரியும்.
ReplyDeleteகரெக்ட்தான். நிச்சயம் தொனியில மாறுபாடு காட்டித்தான் பாடியிருப்பார் தம்பி. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.
Deleteதங்களதும் பிறரதும் கருத்துகளையும் வாசித்தேன். ஆய்வு தான். தொடருங்கள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நானும் பழைய பாடல்களின் ரசிகந்தான் சார்..அதான் உங்க பிளாக் வந்தோன MGR, Sivaji போஸ்ட் பார்த்தவுடன் படிச்சிட்டேன்..
ReplyDeleteநல்ல கேள்வி..ஆனால் எனக்கு ரொம்பவும் புதுசான கேள்வி..இப்படி யாரும் கேட்டு நான் படிச்சது இல்ல..இப்ப கேட்டாலும் சொல்றதுக்கு அந்த ரெண்டு திரை ஜாம்பவான்களும் இல்லை..
உங்க எழுத்துக்கள் எப்போதுமே நான் சொல்றதுண்டு..ஒரு பெரிய தூண்டுதல்..சில நேரங்களில் படம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணவே அழுவேன்..அப்போதெல்லாம் உங்க பிளாக் வந்து உங்க எழுத்தை படிச்சா ஏதோ ஒரு பூஸ்ட்..தட்டி கொடுக்கும் பதிவுகள் தங்களது..(நான் சொன்ன விதம் மிகையாக இருக்கலாம்..ஆனால் உண்மை)..அந்த வரிசையில் இதுவும் ஒன்று..நன்றி.
குறிப்பு : சில பதிவுகள் மிஸ் பண்ணிட்டேன்..படித்துவிட்டு கருத்துகள் விடுகிறேன்.
eluththu suthanthiram.nanaa ezhuthiriingko!
ReplyDeleteTMS sung all the songs according to the voice of the actors.Even one song ,KAASETHAN KADADULDA by A.V.M.RAJAN in PANTHAYAM movie that song was appeared to be the voice of that actor.This is the one of the reason for long period by that great singer .For your surprise ,the first song in Tamil movie by TMS.was in thukku thukki by Sivaji Ganesan.For the one song Sivaji was entertained and he was favour to sing many songs in that movie by TMS.As many persons said even MGR liked that type of modulation TMS sung like that .That is TMS is the great.by DK
ReplyDeleteNice reading the comments. But I am bit surprised that the issue continues to rage even after a half-century. There is a short of kick in TMS' nasal voice. All the romantic songs for MGR under KV Mahadevan will score his nasal voice. Tamil film industry needed TMS and TMS needed Tamil Film Industry. So he did or whatever he could to satisfy the star, the MD and the audience. There is no he did succeed. To find the depth of TMS voice, please listen his 50s songs under G Ramanathan and SM Subbaiah Naidu. He can sing in top pitches, that too without sacrificing the sweetness in the voice. However he deliberately toned down his voice in the 60s and thereafter just to infuse more life into words and provide clarity to expression. Had TMS been singing like Sirghazli, he would have had a short tenure in the film industry. TMS rightly made most of the God-given ability to modulate his voice and has given the audience number of songs to remember. All his songs will move you, be it devotional or filmi. That is the hall mark of Pattuku oru Thalaivar. Nowadays people slowly realising his greatness in carnatic music as well. His is the voice, the only Manly voice that is set reverberate for ever. As MSV says: There is only one Sun, one Moon and one and only TMS.
ReplyDeleteK P Subramanian