Wednesday, June 20, 2012

பயன்தரும் ‘பேசும்’ புத்தகம்!

Posted by பால கணேஷ் Wednesday, June 20, 2012

னம் அடங்குவது ஒரு வரம் என்றால், அடங்காமல் சிறகு விரிப்பதும் ஒரு வரம்தான். சிந்தனை வயப்படும் போது எண்ண ்லைகள் ஒன்றோடொன்று மோதும் போது- உலகம் புரியம். உலகம் புரியும் போது எண்ணங்கள் கருவாகும்; உருவாகும்; விரியும்; ஆழமாக உட்செல்லும் என்பதும் சரியே.

உலகின் நடப்புகள் நல்லவை, அல்லவை என்னும் பிரிவில் அடங்குகின்றன. சிலபோது அவை நம் சொந்த அனுபவம்; சிலபோது நாம் அறியும் அனுபவம். நம் அனுபவம் நமக்கு ஒரு வகையான சிந்தனையையும் பிரச்னைக்குரிய அணுகுமுறையையும் காட்டும். மற்றவர் அனுபவம் அதே மாதிரியான பிரச்சினை குறித்து சிந்திப்பது மாறலாம். அதேபோல மற்றவர்க்குரிய பிரச்னை குறித்த நமது அணுகுமுறையம் வேறாக இருக்கலாம்.

உண்மை! நம் மனம் ஒரு புள்ளி. நம்மைப் பற்றிய சிந்தனையே அந்தப் புள்ளி. புள்ளியிலே ஆரங்கள் பல கோணத்தில் நீண்டு வட்டமாகும். ஆரத்தின் அளவுக்கு ஏற்ப வட்டம் பெரியதும் சிறியதும் ஆகும். உலகப் பார்வையும் அத்தகையதுதான். மனம் நம்மைச் சார்ந்த புள்ளியாக இருப்பினும் ஆரங்கள் சமுதாயம் சார்ந்த சிந்தனைக் கோடுகளாகி உலகப் பார்வையை விரிக்க வேண்டும். இவ்வகையில்...

தன்னைத்தான் உலகம் கவனிக்கிறது என்னும் நினைப்பு மாறித் தன்னத் தான் அறியும் லாவகம் கைவந்து விட்டால் நலமெலாம் கூடி வருமே! விடா முயற்சியின் வலிமை தன்னையும் உயர்த்தும், தரணியையும் உயர்த்தும். இளைஞர் என்னும் தூண்கள் இந்தியாவை உலக அரங்கி்ல் முன்னிலைப்படுத்த அவர்களுக்குள் தளும்ப வேண்டியவை தன்னைப் பற்றிய உறுதியும் சமுதாய உறவும் அல்லவா?

விடுதலை பெற்று விட்டோம்! உண்மைதான்! ஒற்றுமையின் வெற்றி இது. முழுமையான விடுதலை தானா? இன்னும் முற்றுப்புள்ளியைத் தேடும் கேள்விக்குறிகள் எத்தனை எத்தனை!

சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணக்கூடிய வல்லமை இளைஞர்களுக்குள் உண்டே. புதைந்து கிடக்கும் அந்த ஆற்றலை இந்த மாநிலம் பயனுறச் செய்யுமாறு பயன்படுத்த உருவாக்கும் மந்திரக்கோல் ஆசிரியர்களிம் உள்ளதே. அந்தக் கோலின் சக்தி முழு வீரியத்துடன் இருந்தால் வீசும் மந்தமாருதம் எத்தகைய சுகத்தைத் தரும்!

எதிர்பார்ப்பே வாழ்க்கை! கனவின் உறுதி நனவின் இறுதி! இளைஞர் குறித்த எதிர்பார்ப்பே, சோதனைகளைச் சாதனைகளாக்கிச் சிகரத்தைத் தொட முடியும் அவர்களால் என்னும் நம்பிக்கையே இந்தச் சிந்தனை மலரக் காரணம். சிந்தனைகள் சொல் மாலையாகி இளைஞர் சிந்தனைக் கட்டுரைகள் என்னும் நூலாக உங்கள் முன்1 சூடியும் சூட்டியும் மகிழுங்கள். அணிய விரும்பி ஆவலுடன் கையில் எடுத்திருக்கும் வாசகர்கள் வந்தனைக்கு உரியவர்கள். நட்புறவு தொடரட்டும்!

-‘இளைஞர் சிந்தனைக் கட்டுரைகள்’ என்ற நூலில் அதன் ஆசிரியர் டாக்டர் கமலம் சங்கர் எம்.ஏ.பி.எட்., பி.எச்டி. அவர்களின் முன்னுரைதான் இது. (இவர் எனக்குத் தமிழமுதை ஊட்டிய முதல் ஆசிரியையும், உறவுமுறையில் எனக்கு சித்தியுமாவார்) வருங்காலத் தூண்களாகிய இளைஞர்கள் தங்களின் சக்தியை உணரவும, இனிமையான இளமைக் காலத்தில் விடாமுயற்சியுடன் போராடி தொழில் அல்லது வேலையில் முன்னேறி மனநிறைவு பெறுவதற்கான நற்கருத்துக்களைச் சொல்லும் நூலாக அமைந்திருந்தது அந்த நூல்.

இப்போது அந்த நூ‌ல் ஒரு ஆடியோ புத்தகமாக வடிவெடுத்திருக்கிறது. ‘இளைஞர் சிந்தனைக்கு...’ என்ற தலைப்பில் மதுரை ராஜாமணி அவர்களின் அழுத்தமான, தெளிவான குரலில் தரமான ஒலிப்பதிவில் வெளிவந்திருக்கிறது. பயனுள்ள இந்த ஆடியோ புத்தகத்திற்கு விலை ரூ.100 நிர்ணயித்திருக்கிறார்கள். நான் கீழே கொடுத்துள்ள முகவரியில் அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் 20 சதவீதம் தள்ளுபடியில் பெறலாம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எனில் கூரியர் செலவுக்கு ரூ.15ம, தமிழகத்திற்கு வெளியில் வசிப்பவர்கள் ரூ.35ம் புத்தக விலையுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

தொடர்பு முகவரி: Kamalam Shankar, 2C, Tudors Place, 134, Rajamannar Salai, K.K.Nagar, Chennai - 600 078. Ph : 98404 23569

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : கத்தரித்தவை-4

37 comments:

  1. எனது முன்னாள் கல்லூரியின் தமிழ் ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். நான் படிக்கும் காலத்தில் அவர் அங்கு இல்லையென்றாலும் அவர் எனது கல்லூரியான மதுரைக்கல்லூரியில் பணியாற்றிய அவர் எழுதிய நூல் என்பதால் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

    வாழ்த்துகள்!!!!வாழ்த்துகள்!!!!வாழ்த்துகள்!!!!வாழ்த்துகள்!!!!வாழ்த்துகள்!!!!வாழ்த்துகள்!!!!வாழ்த்துகள்!!!!


    எனது நண்பர் இந்தியா வந்துள்ளார் அவரிடம் சொல்லி முடிந்தால் வாங்கி படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் வாங்கிப் படிக்கிறேன் என்று சொல்லியும் வாழ்த்தியும் மகிழ்வளித்த நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  2. தங்கள் அறிமுகம் என்றால் நிச்ச்யம்
    சிறப்பானதாகத்தான் இருக்கும்
    மதுரையில் கிடைக்குமிடம் குறித்தால்
    வாங்க வசதியாக இருக்கும்
    இல்லையெனில் அடுத்த வாரம் சென்னை
    வருகிறேன்.அப்போது தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்கிறேன்
    நல்ல நூலை அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவில் உள்ள சத்யா புக் சென்டரில் கிடைக்கும ரமணி ஸார். இல்லாவிடில் சென்னை வரும் சமயம் என்னை 73058 36166 என்ற என் எண்ணில் அவசியம் தொடர்பு கொள்ளவும். நான் புத்தகம் தருகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  3. Replies
    1. தமிழ் மணத்தில் ஏதோ பிரச்னை இருப்பதால் அப்படி ஆகிறது தனபாலன் ஸார். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  4. இளைஞர்கள் கையில்தான் உலகின் எதிர்காலமே உள்ளது. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்களுக்கான இந்தப் புத்தகத்தை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. Replies
    1. மீண்டும் வந்தாச்சா நண்பரே... உங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. அறிமுகமே ஆர்வத்தை தூண்டுகிறதே . அசத்தல் அறிமுகம் வாங்கிடுவோம் . ரமணி ஐயா சென்னை வராகலாம் குறிப்பெடுக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ரமணி ஸார் வர்றதை நோட் பண்ணிட்டேன் சசி. இந்தப் புத்தகத்தை நீஙகளும் அவசியம் கேட்டு ரசியுங்கள். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. நல்ல பகிர்வு சார்

    ReplyDelete
    Replies
    1. நல்ல பகிர்வு என்று பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  8. நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும என் மனமார்ந்த நன்றி ராஜ்.

      Delete
  9. எலேய் மெட்ராஸ் பவன், எங்கே இருக்கே..? உடனே அண்ணனுக்கு இந்த புஸ்தகத்தை வாங்கி அனுப்புலேய் மக்கா.....!

    அறிமுகம் அருமை அண்ணே...!!!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகம் அருமை என்று சொல்லி உற்சாகம் தந்த நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. நல்ல நூல் அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்தை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  11. Replies
    1. தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்வு தந்தது. மிக்க ந்ன்றி சீனி.

      Delete
  12. சிறந்த நூல் பற்றிய சிறப்பான அறிமுகம்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. முன்னுரையே பொன்னுரையாக உள்ளது!
    என்நிலை அறிவீர் கிடைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்
    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்களுக்குக் கிடைக்க ஆவன செய்கிறேன் ஐயா. மிக்க நன்றி!

      Delete
  14. நல்ல அறிமுகம் நண்பர் கணேஷ்.. கூரியர் மூலம் பெறுவதில் எனக்கு சில சிக்கல்கள்.... சென்னை வரும்போது வாங்க முயல்கிறேன்....

    இன்று எனது பக்கத்தில் ஜபல்பூர் - பாந்தவ்கர் பயணக் கட்டுரையின் ஒன்பதாம் பகுதி.... டேஷ்போர்டில் அப்டேட் ஆகாததால் இத்தகவல்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க முயல்வதா... சென்னை வரும் சமயம் எனக்கு போன் அடித்துச் சொன்னால் எது வேண்டுமெனினும் நான் வாங்கி வருகிறேன் உங்களுக்காய்! இந்த டாஷ் போர்ட் பிரச்னை தனக்கும் இருப்பதாக மதுமதி சொன்னார் ஏனோ தெரியவில்லை... இப்போ படிச்சுடறேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  15. அருமையான அறிமுகம் சார்! தாங்கள் "ஓடாத ரயில் ஒளிரும் மர்மம்" பதிவில் அறிமுகப்படுத்திய புத்தகத்தை தான் தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன் சார்! பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! நான் சுவாரஸ்யமாயிருக்கும் என்று ‌சொன்ன பு்த்தகத்தை இப்போது யுவராணி படித்துக் கொண்டிருப்பதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. நான்தான்மா உனக்கு நன்றி சொல்லணும். மிக்க நன்றி!

      Delete
  16. கடந்த ஐந்து நாட்களாக நைட் ஷிபிட் இன்று காலையில் வந்து பதிவேற்றியதும் தூங்கிவிட்டேன், மாலை விழித்து உங்கள் கமெண்ட் பார்த்த பின் தான் அறிந்து கொண்டேன் பதிவு சரியாக பதிவாகவில்லை என்பதை.

    நானும் எவளவோ முயன்று பார்த்தேன் சரி செய்ய முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் மீண்டும் முதலில் இருந்து தட்டச்சு செய்து ஒருவழியாக சரி செய்து விட்டேன் . அதனால் தங்கள் பதிவிற்கு வருவதற்கு சற்று தாமதமாகி விட்டது

    //அடங்காமல் சிறகு விரிப்பதும்// உண்மை தான் வாத்தியாரே
    என்ன முன்னுரையில் மட்டுமே இவ்வளவு அருமையான கருதுக்களா, கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் வாடியரே, இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும் வாய்ப்பு குறைந்து போனதால் இது போன்ற ஆடியோ புத்தகங்கள் மூலம் அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கண்டிப்பாக படிக்கறேன் இல்லை இல்லை கேட்கிறேன்

    ரமணி சாரிடம் தாங்கள் பகிர்ந்து கொண்ட என்னை குறித்துக் கொண்டேன். தொடர்பு கொள்கிறேன் வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. வேலைப் பளுவினாலும், வேறு பிரச்னைகளாலும் நேரம் இல்லாதவர்கள் ரயில்/பஸ் பயணத்தில் கேட்பதற்காகத்தானே இந்த ஆடியோ புத்தகங்கள்! கேட்டுப் பாருங்கள் சீனு! சிரத்தை எடுத்து பதிவினைத் திருத்தி வெளியிட்ட உங்களின் பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யூட் + என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. சிறந்த ஒரு நூல் அறிமுகம் சென்னை வரும்போது வாங்கிக்கொள்ள முயல்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. இது மட்டுமில்ல... எந்தப் புத்தகம் வேணும்னாலும் இங்க வரும் ‌போது என்னைத் தொடர்பு கொண்டா நான் வாங்குவதற்கு உதவுகிறேன் நேசன் உங்களுக்கு என் அன்பான் நன்றி!

      Delete
  18. நற்கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற தங்களின் நற்சிந்தனைக்கும் முயற்சிக்கும் நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. தங்களி்ன் வருகைக்கும், நற்கருத்துக்கும் என் உளம் கனிந்த நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube