Thursday, June 21, 2012

சரிதாவின் செல்ல ‘டார்லிங்!’

Posted by பால கணேஷ் Thursday, June 21, 2012

ரு வாரமாக அலுவலகத்தில் நிறைய ஆணி பிடுங்க வேண்டிய நிலை எனக்கு. காலையில் போனால் வருவதற்கு இரவாகியதில் மூட் அவுட்டாகி சோர்ந்து போயிருந்த சரிதாவைக் கவனிக்கவே முடியவில்லை. அன்று இரவு உணவு பரிமாறியபடி சொன்னாள். ‘‘என்னங்க... இது கொஞ்சம்கூட நல்லால்லை...’’

‘‘கேரட் பொறியல்தானே? நிறைய உப்பு சேர்த்துட்டே... அதான்...’’ என்றேன். கோபமாய் முறைத்தாள். ‘‘அதில்லை. நீங்களானா காலையில போனா நைட்தான் வர்றீங்க. வீட்ல போரடிக்குது. புத்தகம் படிச்சா சோம்பலா, தூக்கம்தான் வருது. இருக்கற டிவிடி எல்லாத்தையும் ரெண்டு போட்டுப் பாத்துட்டேன். ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போலாம்னா, அவஅவ ஸம்மர் வெகேஷன்னுட்டு ஊருக்குப் போயிட்டாளுங்க. ப்ளாட் சிஸ்டத்துல மத்தவங்கட்ட அரட்டை அடிக்கவும் முடியலை. வாழ்க்கையே வெறுத்துப் போகுதுங்க...’’

‘‘வாழ்க்கை வெறுத்துடுச்சா? தற்கொலை பண்ணிக்கறதுல்லாம் சட்டப்படி தப்புடி’’

‘‘எனக்கென்ன தலையெழுத்தா? நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வர்றேன்...’’

‘‘ஒரு வாரம் நிம்மதி’’ என்று நான் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்து தொலைத்தது. ‘‘என்னா...து? என்ன சொன்னீங்க?’’ என்று தோள்கள் ஏறி இறங்க, ஜல்லிக்கட்டில் சார்ஜ் செய்த காளை மாதிரி புஸ் புஸ்ஸென்று கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.

‘‘ஐயோ, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட சரி. ஒரு வாரம் வீட்டு வேலை எதுவும் செய்யாம, நிம்மதியா அம்மா வீட்ல நீ என்ஜாய் பண்ணுங்கறதைத்தான் சுருக்கமா நான் சொன்னேன்... ஹி... ஹி...’’ என்றேன்.

ரு வாரம் சந்தடியில்லாமல் சந்தோஷமாகப் போனது. திரும்பி வந்த சரிதா கொண்டு போயிருந்த சூட்கேஸுடன் சேர்த்து ஒரு கூடையையும் கொண்டு வந்திருந்தாள். ‘‘என்னங்க... இந்தக் கூடைல என்ன இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்...’’

‘‘என்ன.. . உங்கம்மா முறுக்கும், லட்டும் பண்ணிக் குடுத்து விட்ருப்பாங்க. சரியா...?’’ என்றபடி கூடைக்குள் கை விட்டவன் சுருக்கென்று கையை வெளியே எடுத்தேன். கையில் ஏதோ ஈரமாகப் பட்டது போலில்லை? கூடைக்குள் எட்டிப் பார்க்க, நாக்கை நீட்டியபடி மினியேச்சர் போல குட்டி நாய் ஒன்று வாலாட்டியது. ‘‘ஐயய்யே... என்னம்மா இது?’’ என்றேன் முகத்தைச் சுளித்தபடி. எனக்கு செல்லப் பிராணிகள் என்றாலே அலர்ஜிதான்.

 ‘‘அதுங்களா.. அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ரோஸி குட்டி போட்டிருந்துச்சு. ரொம்ப அழகா இருந்துச்சா... அதான் ஒண்ணை எடுத்துட்டு வந்துட்டேன்’’ என்றாள். அது வேண்டாம் என்று நான் மறுக்க, அவள் வாதாட, நாய் இடையில் குலைக்க, கடைசியில் (வழக்கம் போல) என் குடும்பத்தை அவள் வம்புக்கிழுத்துவிட பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று நான்.

‘நாய் படாத பாடு’ என்கிறார்களே... சரிதாவின் ‘டார்லிங்’(நாயின் பெயர்)கைப் பார்த்திருந்தால் பழமொழியை மாற்றி ‘மனுஷன் படாத பாடு’ என்று சொல்லி விடுவார்கள. அடுத்த நாள் டார்லிங்குக்காக ஷாப்பிங் போய்விட்டு அவள் வாங்கி வந்திருந்தவைகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். நாய்க்குக் கூட இவ்வளவு வெரைட்டியாக சோப், ஷாம்பு, பிஸ்கட் எல்லாம் இருக்கிறதா என்ன? 

‘‘சரி... உனக்குக் கூட அழகுபடுத்திக்க இவ்வளவு ஐட்டம்லாம் வாங்கின மாதிரி தெரியலையே...’’ என்றேன். ‘‘சும்மா இருங்க... எப்பப் பாரு கண்ணு போட்டுக்கிட்டு’’ என்றாள். அதற்கு குளியல், அலங்காரம், கழுத்துப் பட்டை என அமர்க்களப்பட்டது. அது சொகுசாக மனுஷப்பாடு பட்டு வீட்டில் இருக்க நான் தான் அதற்கான செலவுகளால் விழி பிதுங்கி ‘நாய்படாத பாடு’ பட்டேன். அது இருக்கும் திசைப் பக்கமே போகாமல் வேறுபுறமாக ஓடிச் சென்று கொண்டிருந்தேன்.

‘‘என்னங்க... நைட்ல டார்லிங் சரியாவே தூங்க மாட்டேங்குது’’ என்றாள் ஒரு முறை. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது ஒழுங்கா இருக்கறது பிடிக்கலையாக்கும்? அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க?’’ என்று கோபத்தில் ‌தான் ‘ஸேம் ஸைடு கோல்’ போடுவதை அறியாமல் அவள் பேச, நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அதன்பின் தானே புரிந்து கொண்டு அமைதியாக அப்பால் சென்றாள்.

‘நாய் ஜாக்கிரதை’ என்று ஒரு சின்ன போர்டை வாசலில் பொருத்த வேண்டுமென்றாள் சரிதா. ‘‘அடியே... உன் ‘டார்லிங்’கெல்லாம் ஒரு நாய்ன்னு இந்த போர்டை வெச்சேன்னா வர்றவங்கல்லாம் சிரிப்பாங்க...’’ என்றேன். ‘‘வாயை மூடுங்க... போர்டு வெச்சாத்தான் நம்ம வீட்ல இது இருக்கறது எல்லாருக்கும் தெரியும்’’ என்றாள். ஒன்றிரண்டு முறைகள் சரிதா வீட்டில் இல்லாதபோது அதை வேறிடத்தில் கொண்டு விட்டும்கூட எப்படியோ வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது அது

தெல்லாம் பற்றாதென்று, ஒருநாள் ஏதோ விசாரிக்க ஒரு போலீஸ்காரர் வர, சரிதா அவரை வீட்டில் உட்காரச் சொல்லி காபி எடுத்துவர உள்ளே செல்ல, தெரிந்து செய்ததோ... தெரியாமல் செய்ததோ... டார்லிங் அவர் காலில் கடித்து வைத்திருக்கிறது. அவர் அலறிய அலறலில் அக்கம்பக்கத்தினர் ஓடிவர, அவர்களில் ஒருவராக பக்கத்து வீட்டு சுஷ்மாவின் பாஸ்போர்ட் என்கொயரிக்காக வந்திருந்த போலீஸ்காரர். அந்த போலீஸ், இந்த போலீஸைக் கண்டதும் பாய்ந்து ஓடி கையில் விலங்கை மாட்ட... அப்போதுதான் தெரிந்திருக்கிறது எங்கள் வீட்டுக்கு வந்தது போலீஸ் வேடத்திலிருந்த கேடி என்று!

ன்ன்ததைச் சொல்ல... விலைவாசியின் வேகத்தில் ‘டார்லிங்’கின் மதிப்பு எங்கள் அபார்ட்மெண்ட்டில் ஏறி விட்டது. அதை விரட்டும் என் எண்ணத்தில் மண்! அலுவலகம் செல்ல நான் பைக்கை உதைக்கும் நேரம் என் பேகைத் தந்தபடி, ‘‘என்னங்க... இப்பல்லாம் டார்லிங்கைச் சகிச்சுட்டு வாழப் பழகிட்டீங்க போல...’’ என்றாள் சரிதா. ‘‘உன்னையே சகிச்சுட்டு வாழப் பழகலியா... அதுமாதிரித்தான்...’’ என்றவன் அடுத்த ஸெகண்ட் எஸ்கேப்பாகி விட்டேன்.

ண்மையில் இப்போது (வேறு வழியில்லாமல்) அதைச் சகித்து வாழப் பழகி விட்டேன். இருந்தாலும் அதை டிஸ்போஸ் பண்ணிவிடும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. டியர் சார்/மேடம்...! உங்களுக்கு சமர்‌த்தான குட்டி நாய் வேண்டுமா? திருடனைக்கூட பிடித்துத் தரும் புத்திசாலியாக்கும். முற்றிலும் இலவசம்! உடனே என்னைத் தொடர்பு கொள்ளுங்களேன் - சரிதாவுக்குத் தெரியாமல் - ஹி... ஹி...!

=================================================================

                  வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்.

=================================================================

67 comments:

  1. திருடன் காலைக் கடிக்கும் நாய் ஜாக்கிரதைனு போர்டு மாத்திருங்க.
    பதிவர் சந்திப்பு நல்ல ஐடியா - வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் வந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. இந்தாங்கோ...

      [im]http://madmikesamerica.com/wp-content/uploads/2011/07/hotcoffee_2.jpg[/im]

      Delete
  2. நல்ல வேளை என் பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியாது ... தெரிஞ்சுச்சுன்னா அங்கிளுக்கு இப்போவே ஒரு போனை போடுங்க என்று செல்லி இருப்பாள். படிக்க மிகவும் சுவராஸியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்று மகிழ்வளித்த நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  3. வாவ்.... ரொம்ப நாள் கழித்து சரிதா பகிர்வு....

    திருடன் காலைக் கடிக்கும் நாய்.... சீக்கிரமே நாயைக் கேட்டு நிறைய பேர் வரப்போறாங்க!

    பதிவர் சந்திப்பு நல்ல விஷயம்.... ஆகஸ்ட் 15 சமயத்தில் சென்னையில் இருந்தால் நிச்சயம் வருகிறேன்.... வாழ்த்துகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நேற்று ஒரு சரிதாவி்ன் ரசிகையைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது வெங்கட். அதனால் சரிதா இன்று பதிவில. உங்களைப் போன்ற ரசிகரும் இருப்பதில் ரொம்ப சந்தோஷம் எனக்கு. இயன்றவரை வாருங்கள் சந்திப்புக்கு. மிக மகிழ்வதரும் அது எங்களுக்கு. என் மனம் நிறை நன்றி தங்களுக்கு!

      Delete
  4. ///இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்//

    சில நிமிடங்களில் எனது தளத்தில் இதை அறிவிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மூலமாகவும் நண்பர்கள் தகவலறிந்து வந்தால மிக்க மகிழ்வே. என் வேண்டுகோளை உடனே செயல்படுத்திய உங்களுக்கு என் அன்பும் நன்றியும்!

      Delete
  5. இதுதான் நாய் படாத பாடு என்பதோ...........ஹி.ஹி.ஹி.ஹி...........
    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. நாய்படாத பாட்டை ரசித்ததற்கும் வாழ்த்தியதற்கும் என் இதயம் நிறை நன்றி!

      Delete
  6. என்க்கும் எல்லாரையும் சந்திக்க விருப்பமாக உள்ளது சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் வருவேன்...

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் அமையட்டும் என்றே இறைவனை வேண்டுகிறேன் எஸ்தர். உனக்கு என் இதய நன்றி!

      Delete
  7. இணையத்தில் உங்கள் இதயங்களை திருடியவர்கள் நேரிலும் திருட முயற்சி: பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை
    http://avargal-unmaigal.blogspot.com/2012/06/blog-post_2350.html

    ReplyDelete
    Replies
    1. எத்துணை விரைவில் சொன்னதைச் செய்துவிட்டீர்கள். அதுவும் தனிப்பதிவா‌கவே. என் வார்த்தைக்குக் கொடுத்த மதிப்பு கண்டு மிக அகமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  8. // என் குடும்பத்தை அவள் வம்புக்கிழுத்துவிட பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று நான். //
    //அடியே... உன் ‘டார்லிங்’கெல்லாம் ஒரு நாய்ன்னு இந்த போர்டை வெச்சேன்னா வர்றவங்கல்லாம் சிரிப்பாங்க...//
    //உன்னையே சகிச்சுட்டு வாழப் பழகலியா... அதுமாதிரித்தான்.//

    ஆக அற்புதமான கதை எங்குமே சோர்வளிகாதா நடை, இடை இடையே சொருகிய சிரிப்பூ மத்தாபூ

    ஆகஸ்ட் பதினைந்திற்கு பல காலம் உளதே... இனி என் நாட்கள் அதை எதிர் நோக்கி நகரும் ஒரு எதிர்பார்போடு

    ReplyDelete
    Replies
    1. சீனு... சும்மா கலந்து பேசிப் பிரிவதாக இல்லாமல் பல காலம் நினைவில் நிற்கும் நிகழ்வாக இந்நிகழ்வை அமைக்க வேண்டும் என்கிற விருப்பத்தால் சரியாகத் திட்டமிட்டுச் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே பொறுத்தருள்க. நகைச்சுவைப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. மீண்டும் சரிதா..சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.வழக்கம்போல் ரசித்து சிரித்து படித்தேன்..
    ‘‘என்னங்க... இப்பல்லாம் டார்லிங்கைச் சகிச்சுட்டு வாழப் பழகிட்டீங்க போல...’’ என்றாள் சரிதா. ‘‘உன்னையே சகிச்சுட்டு வாழப் பழகலியா... அதுமாதிரித்தான்...’’-நல்லாவே சிரிச்சேன்..

    ReplyDelete
    Replies
    1. சிரித்தேன் என்று நீங்கள சொன்னதில் கொள்ளை மகிழச்சி கவிஞரே... உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  10. சென்னையில் சந்திக்கலாம்..வாருங்கள் தோழர்களே..

    ReplyDelete
    Replies
    1. ஆம். இந்நிகழ்வை ரசிக்கும்படியான மகிழ்வான நிகழ்வாக்கும் பொறுப்பு நம் அனைவரையும் சேர்ந்தது. எல்லா ஊர்களிலிருந்தும் திரண்டு வாருங்கள் நண்பர்களே...

      Delete
  11. It is really interesting to read this article. For a moment, dog enjoys the life of a human being and you ....... I do not know why that when anyone who teases his wife, my heart gets filled with joy.

    ReplyDelete
    Replies
    1. அது இயல்பான சைககாலஜி மோகன். சரிதா கண்டபடி என்னைத் திட்டினால் திட்டு வாங்குவது நீங்க இல்லை, நான்தானே என்பதால் மகிழ்ச்சி. சரிதாவை நான் கலாய்த்தால் நாம் மனைவியை கலாய்க்காததை இவர் செய்கிறாரே என மகிழ்ச்சி. அது போகட்டும்... இதை நீங்கள் ரசித்ததில் எனக்கு மனமகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  12. உங்க வீட்டம்மா பதிவுகள் படிக்கிரதில்லையா? :))

    ReplyDelete
    Replies
    1. சில பதிவுகளை கண்ல காட்ட மாட்டேன். ஹி... ஹி... என் ப்ரெண்ட்சும் போட்டுக் குடுக்கறதில்லை. அதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  13. கடைசியில் (வழக்கம் போல) என் குடும்பத்தை அவள் வம்புக்கிழுத்துவிட பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று நான்.
    //

    என்னாசார் இது வடிவேல் காமடிமாதிரி சொல்லுரீங்க...

    சூப்பர் பகிர்வு சார்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பகிர்வென்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  14. ம்ம்ம் நல்ல இருக்கு சார்

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கென்ற உங்கள் வார்த்தையில் மகிழ்ந்து என் இதயம் நிறைந்த நன்றி உங்களுக்கு.

      Delete
  15. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது ஒழுங்கா இருக்கறது பிடிக்கலையாக்கும்? அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க?’’ // பாவம் அப்பாவி சரிதா . நல்ல மாட்டிட்டு முழிக்கிறாங்க . நல்ல சிரிக்க வைத்த பதிவு .

    ReplyDelete
    Replies
    1. சரிதாவை விட நான்தான் அப்பாவின்னு உங்களுக்குத் தெரியும்தானே சசி..! ரசிச்சுச் சிரிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!

      Delete
  16. கேரட் பொரியலில் ஆரம்பித்து தங்களை இலவச நாய்க்குட்டிக்கு தொடர்பு கொள்ள சொன்னது வரை ஒவ்வொரு பத்தியையும் இரசித்துப் படித்தேன். பதிவின் ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவை இழையோடியது. குருவுக்கேற்ற சிஷ்யர் என்பதை திரும்பவும் நிரூபித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் பாராட்டிற்கும் ரசித்துப் படித்தமைக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. ஐயையோ..வீட்டில் குட்டி நாயா?அது போலி போலிஸை வேறு கடித்து விட்டதா?யண்ணா..உங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணமே இப்ப எனக்குள் இருந்து ஓடிப்போய் விட்டது:)

    ReplyDelete
    Replies
    1. நாயைச் சீக்கிரமே துரத்திடலாம் தங்கச்சி. அதுக்காக பயந்து வீட்டுக்கு வர்ற எண்ணத்தைத் துரத்திடக் கூடாது. சரியா... மிக்க நன்றி.

      Delete
  18. பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடா?நல்ல நோக்கம்தான்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என்னது...? வாழ்த்துக்கள் மட்டும் தானா? அங்க கவியரங்கத்துல என் சிஸ்டரோட கவிதையும் இருக்கணும்னுல்ல ஆசைப்படறேன். அவசியம் வந்துடணும்மா. வாழ்த்துக்கு என் இதய நன்றி.

      Delete
  19. ஒரு வரிக்கு ஒரு வரி கூட தாவ விடாமல் முழுமையாய் சிரித்துக்கொண்டே வாசிக்க வைத்து விட்டீர்கள் :)

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  20. வரிக்கு வரி ஹாஸ்யம்.சுவாரஸ்யம்
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹாஸ்யத்தை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

      Delete
  21. பதிவர் சந்திப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்.!

    நோக்கம் இனிதே நிறைவேறிட இங்கிருதே இறைவனை வேண்டுகிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்தினால் மனம் மகிழ்கிறது. விழா இனிதே நடந்தேறும் என்றே விரும்பி செயல்பட்டு வருகிறோம். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  22. வரிக்கு வரி நகைச்சுவை ! சிரித்துக் கொண்டே படித்தேன்.

    சென்னையில் நடக்கப் போகும் பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. சிரித்துக் கொண்டே படித்து அட்வான்ஸாக வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. கணேஷ்!

    இரண்டு நாட்களாக கடுமை யான பணி சம்பு மேல்நிலைத்தொட்டிகள சுத்தம் செய்தது, மின மோட்டார் பழுது என, தற்போதுதான சரியானது

    காலையிலேயே தங்கள் பதிவைப் படித்து விட்டேன் மறுமொழி எழுத இயலவில்லை நல்ல நகைச்சுவைப் பதிவு இரசித்தேன் என் வலையில் நாளை(பதிவர் சந்திப்புப் பற்றி) வெளியிடுவேன்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலையில் அறிவிப்பு கண்டு மகிழ்ந்தேன். நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  24. Very enjoyable article! Thank you! A doubt - Didn't Mrs. Savitha call out loud "Darling..Darling.." and a passes-by threw a wicked smile at you?! - R. J.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கூற்று முற்றிலும் உண்மையே... நுணுகி ரசித்து எழுதியமைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. கதை அருமை:)!

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்துப் படித்தும் வாழ்த்தியும் மகிழ்வளித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. நல்லா சிரிக்க முடிந்தது. நான் கூட நாய் நேசன்தான்!

    ReplyDelete
    Replies
    1. ம்... நன்றாகச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  28. கொஞ்சம் அசந்தா நாயை என் தலையில் கட்டினாலௌம் கட்டி விடுவீங்க போல்!
    நகைச்சுவை ததும்பி வழிகிறது!நன்று.

    ReplyDelete
    Replies
    1. ததும்பி வழிந்த நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என்மனமார்ந்த நன்றி.

      Delete
  29. நகைச்சுவை தங்களுக்கு கை வந்த கலை.மீண்டும் சரிதா அவர்களை பதிவின் மூலம் கொண்டு வந்தமைக்கு நன்றி..ரசித்துப் படித்தேன்.சிரித்து முடித்தேன்..வாரமொருமுறை சரிதா தரிசனம் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையாக என் தளத்திற்கு வந்து மனம் விட்டுப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி. உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் முயல்கிறேன்.

      Delete
  30. அருமையான பதிவு Sir! ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன்! பதிவர்கள் சந்திப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் Sir!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்து சிரித்ததில் மிகமிக மகிழ்வு எனக்கு. என் இதயம் நிறை நன்றிகள் யுவராணிக்கு.

      Delete
  31. சரியான முசுப்பாத்தி (யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்- சரியான நகைச்சுவை என்ற கருத்துப்படி). இப்படிப் போட்டு நளினம் பண்ணுகிறீர்களே! வாசிக்க மாட்டாங்களா? பாவம் சகோதரி சரிதா. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சில பதிவுகளை வாசிக்க விடாமல் மறைத்து விடுவேன். அப்படியும் வாசித்து விட்டால் என்ன நடக்கும் என்பது... உஷ்! ரகசியம்! முசுப்பத்தியை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  32. nalla kathai!

    pathivarkal santhippukku vaazhthukkal!

    ReplyDelete
    Replies
    1. நல்ல கதை என்று பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்வளித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சீனி.

      Delete
  33. கதையைப் படிக்கும் போது நிறைய இடங்களில் நாய் பட்ட பாடாய் மனிதனை பட்டதை வாசித்து சிரித்தேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  34. நாய் படாத பாடு தான்’!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube