முதல்ல ஒரு சின்னப் புதிரோட ஆரம்பி்க்கலாம். இங்க தீக்குச்சிகளால ஒரு மீன் உருவம் செஞ்சிருக்கேன். இதுலருந்து மூணே மூணு குச்சிகளை மட்டுமே நகர்த்தி, வலது பக்கம் பார்த்திட்டிருக்கற இந்த மீனை இப்படி இடது பக்கம் பாக்கற மாதிரி பண்ணனும். எப்படி சாத்தியம்னு யோசிங்க. யாரும் விடை சொல்லாட்டி அடுத்த பதிவில் விடை சொல்லப்படும்.
===========================================
கோபம், சந்தோஷம் சோகம் -இந்த மாதிரி பல .உணர்ச்சிகளின் கலவையாதான் மனுஷன் வாழ வேண்டியிருக்கிறது. இந்த எழில்மிகு சென்னையில சின்னச் சின்ன விஷயங்கள்கூட எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
கோபம், சந்தோஷம் சோகம் -இந்த மாதிரி பல .உணர்ச்சிகளின் கலவையாதான் மனுஷன் வாழ வேண்டியிருக்கிறது. இந்த எழில்மிகு சென்னையில சின்னச் சின்ன விஷயங்கள்கூட எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
போன வாரம் என் நண்பன் ஒருவனுக்காக மே.சைதாப் பேட்டையில் வீடு பார்க்கப் போயிருந்தோம். வீட்டுக்காரர் வாடகை, அட்வான்ஸ் போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டு, ‘கரண்ட் சார்ஜ் ஒரு யூனிட்டுக்கு நாலு ரூபாய் கொடுத்துடுங்க’’ என்றார். ‘ஈ.பி. ஆபீசுக்கு அவ்வளவா கட்ட வேண்டியிருக்கு்ம்’ என்ற எண்ணம் மனதில் ஓட, நான் கேள்வியாக அவரைப் பார்க்க, ‘‘மத்தவங்கல்லாம் 5 ரூபா, 6 ரூபான்னு வாங்கறாங்க... நான்தான் நியாயமாக் கேட்டிருக்கேன்’’ என்றார். இது எப்படி இருக்கு? ‘‘அவனவன் கொலையே பண்றான். நான் கையத் தானே வெட்டறேன். எவ்வளவு நல்லவன் நான்?’’ என்கிற மாதிரி இல்லை..? குறைந்தபட்ச அயோக்கியனாய் இருப்பது என்பதே நல்லவனுக்கான அளவுகோலாய் மாறி விட்டதா என்ன?
இன்னொரு எரிச்சல் இந்த ஏ.டி.எம். இயந்திரங்கள் படுத்தும் பாடு. குறிப்பாக நான் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மிஷின்கள். ஏதாவது அவசரத்துக்கு 100 அல்லது 200 எடுக்கலாம் என்று நினைத்தால், 500க்கு குறைந்து பணம் தர மாட்டேன் என்று அடம் பிடிககின்றன. தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களை அதிகப் பணம் எடுத்து நிறைய செலவு பண்ண வைத்துக் காலியாக்குவதில் இந்த மிஷின்களுக்கு என்ன அற்ப சந்தோஷமோ?

‘ஸார்..! உங்க ஸ்பிரிங்
நாற்காலியிலே ஏதோ ரிப்பேர்னு சொன்னீங்களாமே மானேஜர்கிட்டே? அதுக்கு
தச்சனைக் கூப்பிட்டு வந்திருக்கேன். என்னங்க ஸார் ரிப்பேர் அதிலே..?’’
===========================================
ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாதது. மழை பெய்து ஓய்ந்து தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருந்த ஒரு மழை நாளில் நான் காலை ஜாகிங் போய்கொண்டிருந்தேன். ஒரு பெரிய கார் என்னைக் கடந்து வேகமாய் போனது. நான் ஓடிக்கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருக்க அந்தக் கார் போன வேகத்தில் என் மேல் நீரை இறைத்துவிட்டு போனது. நான் ஓடுவதை நிறுத்திவிட்டு அந்தக் காரை வெறித்துப்பார்த்தேன். அந்தக் கார் நிற்பதுபோல வேகம் குறைந்தது ஆனால் அது சிக்னலுக்கு அருகில் இருந்ததால் உடனே விரைந்து சென்றுவிட்டது. நான் கார் காரனை உரக்கத்திட்டிவிட்டு ஓடுவதைத் தொடர்ந்தேன்.
அன்றைக்கே அதைப் பற்றி மறந்தும் போனேன். அந்த வாரம் முழுக்க அவ்வப்போது மழை பெய்ததால் தினமும் காலையில் ஓடும் பழக்கம் நின்றுபோய் ஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மழை நின்ற அன்று மறுபடி ஜாகிங் போனேன். என் மேல் தண்ணீர் இறைத்துவிட்டுப் போன அதே ஸ்தலத்தில் ஒருவர் என்னை வழிமறித்தார். நான் இந்தியன் என்பதை கண்டுபிடித்தவர் போல ரொம்ப பிரயத்தனப்பட்டு ”நமஸ்தே” என்று கைக்கூப்பினார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்ல அவர் உடனே “ என்னை மன்னிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு முன்பு இந்தச் சாலையில் காரில் போகும்போது உங்கள் மேல் தண்ணீர் இறைத்துவிட்டுப் போயிட்டேன். சிக்னலைக் கடப்பதிலேயே கவனமாய் இருந்ததால் உங்களை கவனிக்கவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் சப்தம் வந்தபின் கவனித்தேன் என் பின்னால் கார்கள் வந்து கொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்த முடியவில்லை. மன்னிக்கணும்” என்றார்.
நான் வியந்து போனேன். அவர் என்னைவிட இருபத்து ஐந்து வருடங்கள் மூத்தவர். அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட விதமும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்பதற்காக அந்த சாலையில் கடந்த நான்கு நாட்களாய் அதே நேரத்தில் காத்திருந்து என்னை சந்தித்திருக்கிறார் என்பதும் என்னை மிகவும் நெகிழ்வித்தது. நான் மிகுந்த பெருந்தன்மை உணர்வுள்ளவனாய் “ பரவாயில்லை சார். கார் ஓட்டும் போது இது சகஜம். உங்கள் கனிவுக்கு நன்றி” என்று அவரை சமாதானம் செய்தேன். என்னுடன் இரண்டு நிமிடம் பேசிவிட்டு மறுபடி ஒரு நமஸ்தே சொல்லிவிட்டு அவர் மனநிறைவோடு காரில் ஏறிப் போனார்.
-‘கதவுகள் திறக்கும்’ அனுபவத்தொடரில் ஆனந்த்ராகவ்

பி.கு.: ஆ.ரா. வசிப்பது இந்தியாவில் அல்ல... வெளிநாட்டில்
===========================================
ஒரு மலையின் உசசியில ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சிட்டு ஒரு காதல் ஜோடி நிக்கறாங்க. நோ... நோ... புன்னகை மன்னன்ல மாதிரி குதிக்கப் போறாங்கங்கற உங்க கற்பனையை கட்... கட்! அவங்க அங்க நின்னபடி பேசிக்கறாங்க.
ஆனந்த்: ‘‘ரேணு! இந்த மலையோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரு மலை உச்சியில நின்னு நாம சத்தமா நம்ம பேரைச் சொன்னா எதிரொலியா அதே குரல்தான் திரும்ப வரும். இந்த மாலையில மட்டும் நம்ம பேரை கத்திச் சொன்னா, நம்ம லவ்வரோட பேரைச் சொல்லும்...’’
ரேணு: ‘‘‘ரியல்லி? நான் ட்ரை பண்ணிப் பாக்கறேன்... ரோமியோ...’’ என்று கத்துகிறாள். மலை ‘ஜுலியட்’ என்று குரல் தருகிறது. ரேணு ‘அட’ என்று வியந்து போனவளாய், ‘‘ஆனந்த்!’’ என்று சத்தமாய்க் கத்துகிறாள். மலை ‘‘ரேணு’’ என்கிறது. ரேணு குதூகலமாய் ஆனந்தைக் கட்டிக் கொள்கிறாள். ஒன்றிரண்டு நொடிகள் கழித்து மலை ‘‘ப்ரியா, தீபா, திவ்யா’’ என்று சொல்லிக் கொண்டே போகிறது. ஓ நோ..! அதன்பின் அங்கு என்ன நடந்திருக்குமென்பது உங்கள் கற்பனைக்கே!
===========================================
டி.எம்.எஸ். சிவாஜிக்கு ஒரு மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் பாடுகிறார் என்று சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் பழைய குமுதம் புத்தகம் ஒன்றைப் புரட்டுகையில், குமுதத்தில் அந்நாளிலேயே (1965-70) இதே கேள்வியை எழுப்பியிருந்ததை கவனித்தேன். அந்தப் பகுதியை ஸ்கேன் செய்துவிட்டேன் உடனே. இதோ அது...
புதிரின் விடை :
அடுத்த பதிவுல சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா... மக்களை அதிகம் வெய்ட் பண்ண வைக்க விரும்பாம சொல்லிட்டேன்.
கத்தரித்தவை-5 கண்டு புன்னகைக்க... மே.மை. செல்க!
|
|
Tweet | ||
மொறு மொறு ரசித்தேன், சிரித்தேன், சம்பவம், ரோல் எல்லாம் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
மிக்ஸரை ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. முதல் வருகைக்கு...
Delete[im]http://www.google.co.in/imgres?hl=en&biw=1024&bih=614&gbv=2&tbm=isch&tbnid=ko_ydzq8QgEZRM:&imgrefurl=http://www.ftd.com/blooming-masterpiece-bouquet-prd/7819&docid=f8Fy4DpEa-5diM&imgurl=http://www.ftdimg.com/pics/products/7819_330x370.jpg&w=330&h=370&ei=nlLoT_nyLMPYrQei25XtCA&zoom=1&iact=hc&vpx=95&vpy=150&dur=728&hovh=238&hovw=212&tx=117&ty=121&sig=112444927253734384441&page=4&tbnh=139&tbnw=122&start=66&ndsp=22&ved=1t:429,r:5,s:66,i:367[/im]
மொறு மொறு நன்று...
ReplyDeleteபெரும்பாலான வெளிநாடுகளில் நடந்து செல்பவர்களுக்கு வாகன ஓட்டிகள் மரியாதை கொடுப்பார்கள். நம்ம ஊரா இருந்த ஒரு வார்த்தை ஒன்னு போட்டு சொல்லிட்டு வந்திட்டியான்னு சொல்வாங்க...
உண்மைதான் நீங்கள் சொல்வது. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteமிக்சர் அருமை ரசித்தேன் சார்
ReplyDeleteமிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteகணேஷ் சார்,
ReplyDeleteபடப்புதிர் எல்லாம் போட்டால் எப்படி பதில் எழுதுவது என்று சொல்லுங்க, நான் அதை யோசித்துக்கொண்டே வந்தால் பின்னால் நீங்களே விடையைப்போட்டுட்டிங்க :-))
,சென்னையில் வீட்டு சொந்தக்காரர்கள் நிஜமாகவே "லேண்ட் லார்டுகள்' போலவே நடந்து கொள்வார்கள்.
இப்போ தான் கத்தரித்தது படிச்சேன், மிக்சரும் அதே போல இருக்கு , வித்தியாசப்படுத்த மிக்சரில் நிறைய புதிய தகவல்களை கொடுங்க."சைவ" மிக்சராக இருந்தாலும் நல்லாவே இருக்கு :-))
ஓ... அப்படியா... அடுத்த மிக்ஸரில் பேட்டர்னை மாற்றி விடலாம் வவ்வால் சார். தங்களின் ரசனைக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteமிக மிக சுவையாக இருந்தது.
ReplyDelete//‘‘ப்ரியா, தீபா, திவ்யா’’ என்று சொல்லிக் கொண்டே போகிறது. ///
அந்த மலை எங்கே இருக்கிறது என்று சொல்லவும். இல்லையென்றால் நான் அங்கு காதலியுடன் போய் மாட்டிக் கொள்ளூம் வாய்ப்பு அதிகம். இங்கே ப்ரியா, தீபா, திவ்யா’ ஆனால் நான் போனால் நான் ஸ்டாப்பாக போய் கொண்டிருக்கும்
///மக்களை அதிகம் வெய்ட் பண்ண வைக்க விரும்பாம சொல்லிட்டேன்.///
இந்த டூப்புதானே வேண்டாங்கிறது...உங்களுக்கு பொறுமையில்லாமா பதிலை அடக்கி வைக்காமல் சொல்லிடீங்க தலைவா
ம்... அதுவும் ஒரு வகையில் உண்மைதான். புதிர்களை படிக்கும் போது கொஞ்சம் யோசித்து விட்டு சரிபார்க்க விடையைத் தேடுபவன் நான். என்னைப் போல் பிறரையும் எண்ணித்தான் விடையை வெளியிட்டேன். மிக்க நன்றி நண்பா...
Delete*****கதவுகள் திறக்கும்*****
ReplyDeleteபடித்ததும் ஷாக் ஆகிட்டேன் பின்குறிப்பை படித்ததும் தான் சற்று நிம்மதியடைந்தேன் அப்பாடா அது நிகழ்ந்தது இந்தியாவில் இல்லையென்று :) :)
ஆ... இந்தியர்களின் மேல் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கையா? படித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteசுவாரஸ்யம்தான்... ஆனாலும் இந்த டி எம் எஸ் விஷயம்தான் ஒத்துக்க முடியலை!
ReplyDeleteபலரும் இதைச் சொல்லும்போது ஒத்துக்கத்தான் வேண்டியிருக்கு ஸ்ரீராம். வேற தாரி? தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteமிக்ஸர் நல்ல் மொறுமொறுதான்
ReplyDeleteகுறிப்பாக அந்த மலை உச்சிக் காதலர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்ஸரை ரசித்துப் படித்து கருத்தும் வாக்கும் வழங்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஇங்க மும்பையில் இன்னும் 4- மாசத்துக்கு நல்ல மழைகாலம்தான். இந்தசீசனுக்கு இதுபோல மொறு மொறு மிக்சர் தேவைதான் சுவையாகவே இருக்கு.
ReplyDeleteமொறு மொறு மிக்ஸரை ரசித்துப் படித்து உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deletemoru moru!
ReplyDeletethokuthathu-
su...peru!
ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநேற்று புத்தக வெளியீடுக்கு வந்தீர்களாம். நிகழ்ச்சிக்கு நான் வர முடியலை. இன்னொரு முறை சந்திப்போம்
ReplyDeleteஆம். எனக்கும் உங்களைச் சந்திக்கும் ஆவல் மிக உள்ளது. விரைவில் நானே வந்து சந்திக்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
DeleteSuvaiyaana mixture!
ReplyDeleteசுவையான மிக்ஸர் என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteமிக்சர் மொறுமொறு... ரசித்தேன்.....
ReplyDeleteமிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Delete//பி.கு.: ஆ.ரா. வசிப்பது இந்தியாவில் அல்ல... வெளிநாட்டில்//
ReplyDeleteஇந்த குறிப்பு முக்கியம் அமைச்சரே.
ஹா... ஹா... நிஜம்தான் தம்பி. வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி.
Deleteமிக்சர் இனிதே நன்றாக இருந்தது....
ReplyDeleteஇதன் சுவையை ரசித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா.
Delete//இது எப்படி இருக்கு? ‘‘அவனவன் கொலையே பண்றான். நான் கையத் தானே வெட்டறேன். எவ்வளவு நல்லவன் நான்?’’ என்கிற மாதிரி இல்லை..? குறைந்தபட்ச அயோக்கியனாய் இருப்பது என்பதே நல்லவனுக்கான அளவுகோலாய் மாறி விட்டதா என்ன?///
ReplyDeleteவாடகை வீடுகளில் இருக்கும் நாங்கள் படும் அவஸ்தை. சென்னையில் எங்கு காணினும் பணம் ஒன்றே பிரதானம்....
//
பி.கு.: ஆ.ரா. வசிப்பது இந்தியாவில் அல்ல... வெளிநாட்டில்
// ஹா ஹா அப்படிச் சொல்லுங்க நான் கூட இந்தியவோன்னு நினைச்சேன்
மிக்சர் கொறிக்க நன்றயிருந்த்தது
மிக்ஸரைக் கொறித்து ரசித்த சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநல்ல கலவை.
ReplyDeleteகலவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteநடை பயணத்தில் நடந்த சம்பவம் வியப்பாகவும் சிறப்பாகும் இருந்தது .
ReplyDeleteநமக்கு இது மிக வியப்பாகத் தான் இருக்கும் தென்றல். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteமொறு மொறு மிக்ஸர் வழக்கம்போல் சுவையாக இருந்தது. அந்த ஓவியர் கோபுலுவின் கைவண்ணத்தோடு வந்துள்ள நகைச்சுவைதான் எல்லாவற்றையும் விட ‘டாப்’
ReplyDeleteகோபுலுவின் ஓவியத் துணுக்கை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஓ! நான் முதலிலேயே மீனை மாத்திப் போட்டிட்டேன் சரியாக. சேறு வாரி இறைத்தவர் மிக மிக நல்ல மனிதனாக உள்ளாரே! எத்தனை விசித்திரமான மனிதர்கள் உலகில்!. நல்ல இடுகை. சுவைத்தது. .நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மீனை முதலிலேயே மாத்திப் போட்ட உங்கள் புத்திக் கூர்மைக்கு ஒரு சபாஷ். சுவைத்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteமொரு மொரு மிக்ஸர் நன்றாக இருந்தது... நன்றி சார் !
ReplyDeleteநன்றாக இருந்தது என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே.
DeleteMoru Moru Mixture very nice to read and enjoyed and it is really a mixture of all. I have also heard that in foreign countries, people travelling by car, do not scare you while you wait for crossing the road. If the driver notices anybody waiting to cross the road at a distance, he stops immediately and allows the padestrians to cross over comfortably.
ReplyDeleteகரெக்ட். ஒரு நபர் சாலையைக் கடக்க விரைவது தெரிந்தால் வாகனத்தை இன்னும் விரைவாக ஓட்டி அவரை உரசுவது போல் அருகில் சென்று முந்திச் செல்ல நினைக்கும் ‘நல்ல’ பழக்கமெல்லாம் நம்மூரில்தான். மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteபுதிர் என்று போட்டால், எங்களுக்கும் அதை விடுவிக்க ஒரு சான்ஸ் தர வேண்டும்! பரவாயில்லை, நீங்கள் இந்த புதிர் போடும் போதே தீக்குச்சிகளுக்கு எண்கள் கொடுத்திருக்க வேண்டும், அப்போது தான் விடை எழுதும் போது குழம்பாமல் இருக்கும்!
ReplyDeleteதச்சன் - மர வேலை செய்பவர் இல்லையோ? வெறுமே ‘ரிபேர் செய்பவர்’ என்றே போட்டிருக்கலாம்!
வெளி நாட்டிலும் நாம் நாம் தான்! (ஆ. ராவ் உரக்கத் திட்டியதை சொன்னேன்!) முக்கிய சந்தேகம் - வெளி நாட்டில் இந்த மாதிரி தண்ணீர் தேங்கும் படி இருக்குமா?
-ஜெ.
அந்த ஜோக்கிற்கு ஆ.வியில் அப்படித்தான் கீழே போட்டிருந்தார்கள் ஜெ. வெளிநாட்டிலும் தண்ணீர் தேங்குவது உண்டு என்று ஆனந்த் ராகவ் சொல்லியிருக்கிறார். இனி குழப்பமில்லாமல் புதிர் தருகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteசுவாரஸ்யமான தொகுப்பு.
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteகலக்கல்
ReplyDeleteரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமையான பதிப்பு அதிலும் மன்னிப்பு கேட்க்க
ReplyDeleteவந்திருந்த பெரியவரின் பண்பு அதை அறிந்து
நானும் வியப்பில் ஆழ்ந்தேன்!..இப்படிப்பட்ட
மனிதர்களை இவ்வுலகில் காண்பது அரிது ஐயா.
மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .
ரசித்துப் படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபி.கு.: ஆ.ரா. வசிப்பது இந்தியாவில் அல்ல... வெளிநாட்டில்//அதுதானே பார்த்தேன்.இதனை பார்த்து விடுங்கள் அப்புறம் கேட்டு விடுங்கள்.
ReplyDeletehttp://shadiqah.blogspot.in/2011/06/blog-post_24.html
படித்தேன். கேட்டேன். வியந்து போனேன். இத்தனை பாடல்களைத் தொகுக்க எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? சலியாத அந்த முயற்சிக்கு ஒரு சல்யூட் சிஸ்டர். மிக்க நன்றி.
Delete