(1)
சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். மக்கள் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். தான் வாங்கிய பொருட்களுக்கு கேஷ் கவுண்ட்டரில் பணம் செலுத்திக் கொண்டிருந்த செல்வம், பின்னால் கேட்ட சிரிப்புச் சத்தத்தினால் ஈர்க்கப்பட்டுத் திரும்பினான். அந்தச் சிரிப்பு... ரம்யாவா அவள்? பின்னால் இருந்த காஸ்மெடிக் செக்ஷனில் நின்றிருந்த அவள்... ரம்யாவேதான்! அவன் மனதில் பதிந்ததாயிற்றே அவளின் அந்தச் சிரிப்பு! ஒரு கண்ணாடி மேஜையில் கை நிறைய சில்லறைக் காசுகளை அள்ளி வீசிப் பாருங்கள்.... ‘கலகல’வென்ற வி்த்தியாசமான ஒரு ஒலி கேட்கவில்லை? அதுபோலத்தான் ரம்யாவின் சிரிப்பு! அந்தச் சிரிப்பினால் ஈர்க்கப்பட்டுத்தானே அவளைக் காதலிக்கவே ஆரம்பித்தான்.
கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் காதலித்த அவர்கள் மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். மூன்றாம் ஆண்டின் மத்தியில் செல்வத்தின் அப்பா இறந்துபோனதால் கிராமத்துக்குச் சென்று அப்பாவின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்தான் செல்வம். திரும்பி வந்த போது கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு ரம்யா சென்று விட்ட செய்திதான் கிடைத்தது. அதன்பின் அவள் கல்லூரியில் கொடுத்திருந்த அவள் சொந்த ஊர் அட்ரஸுக்குப் போய்ப் பார்ததான். வீட்டைக் காலி செய்துவிட்டு, ஊரை விட்டே போய் விட்டார்கள் என்ற தகவல்தான் கிடைத்தது.
அதன் பின் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்றுதான் அவளை மீண்டும் பார்க்கிறான். அருகில் நின்றிருந்த ஒரு நபருடன் சிரித்துப் பேசியபடி அவள் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கினான். அருகில் நெருங்கியபோதுதான் அது கண்ணில் பட்டது. ரம்யாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கண்ட செல்வம் அதிர்ந்து போனான்.
(2)
‘ரம்யாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?’ அதிர்ச்சியோடு பார்த்தான் செல்வம். அருகில் நின்றிருந்த அவள் கணவன் உயரமாய், வழுக்கைத் தலையுடன், சற்று குண்டான ஓமக்குச்சி நரசிம்மனைப் போல இருந்தான். ரம்யா முன்பை விட சற்று கொழு கொழுவென்றிருந்தாள். அவன் அடிக்கடி கிள்ளி ரசித்த அவளின் கன்னங்கள் இப்போது இன்னும் சற்று பம்மென்று பணத்தின் செழுமையுடன் உப்பியிருந்தது. அவர்கள் வெளியே வர, செல்வம், பதுங்கியபடி அவர்களைத் தொடர்ந்து சென்று அவள் முகவரியைத் தெரிந்து கொண்டான். அதன்பின் அவள் கணவனைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அதிக நேரமாகவில்லை. அவள் கணவன் சிவராமன் அரசியல் செல்வாக்குப் படைத்த, மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதை அறிந்ததும் செல்வத்தின் மூளை துரிதமாக வேலை செய்தது.
டெலிபோனின் கதறலை ரிஸீவரை எடுத்து அடக்கினாள் ரம்யா. ‘‘ஹலோ... ரம்யா! செளக்கியமா...?’’ என்றது குரல். அந்தக குரல்...? ‘‘செ... செ... செல்வமா?’’ என்றாள். ‘‘பரவாயில்லையே... இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியே...’’ என்றான். ‘‘ப்ளீஸ் செல்வம்! அவர் வீட்ல இருககார். ஈவ்னிங் ஆறு மணிக்கு மத்ஸ்யா ரெஸ்ட்டாரண்ட் வா. அங்க பேசலாம்’’ என்றுவிட்டு போனை வைத்தாள்.
செல்வத்தை நேரடியாகப் பார்த்தாள் ரம்யா. ‘‘செல்வம்! இவ்வளவு தூரம் விளக்கிச் சொல்லியும் உனக்குப் புரியலையா? சூழ்நிலைக் கைதியா வேற வழியில்லாம நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சு. நீ வேற நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. இனி நாம சந்திக்கிறதாலேயோ... பேசறதாலேயே... என்ன பிரயோஜனம்?’’ என்று கண்ணீருடன் கூறிய அவள், அவன் தந்த பதிலைக் கேட்டதும் அதிர்ந்து போனாள்.
(3)
‘‘பிரயோஜனம் இருக்கு ரம்யா. நீ என்னோட சேர்ந்து எடுத்து்க்கிட்ட போட்டோக்களும், எனக்கு காதல் ரசம் சொட்டச் சொட்ட நீ எழுதின கடிதங்களும் இப்பவும் பத்திரமா என்கிட்ட இருக்கு. அது சிவராமன் கைக்குப் போகணும்னு நீ நினைக்கிறியா?’’ என்றான். ‘‘செ...ல்...வ...ம்...’’ என்றாள் அதிர்ச்சியுடன். ‘‘திமிங்கிலத்தோட தோலை கொஞ்சமா சுரண்டினா அதுக்குத் தெரியாது ரம்யா. நீ என்ன பண்றே... அஞ்சு லட்ச ரூபாய் எடுத்துட்டு நாளைக்கு இதே ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்து கொடுக்கறே... இல்ல.... உனக்கே தெரியும்’’ என்றபடி அவன் எழுந்து நடக்க... பிரமிப்பாய் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
அப்போது தொடங்கியது அந்தக் கொடூரமான ப்ளாக்மெயில் படலம். செல்வம் ஒவ்வொரு கடிதமாகக் கொடுத்து, அவளை பொ.மு.வாத்தாகப் பாவிததுப் பணம் கறந்தான். ‘‘செல்வம்! இதுக்கு மேல என்னை சித்திரவதை பண்ணாத. மொத்தமா ஒரு தொகைய வாங்கிட்டு என்னை விட்று’’ என்று கெஞ்சினாள் ரம்யா. ‘‘ஆமாம் ரம்யா. எனக்கும் இப்படி பணத்தை வாங்கி செலவு பண்ணி சலிச்சுப் போச்சு. அதுனால... நான் வேற ஒரு ஐடியா வெச்சிருக்கேன்....’’ என்றவன் சொன்ன யோசனையைக் கேட்டதும் அலறி விட்டாள். ‘‘நோ... செல்வம்!’’
‘‘எஸ்! அதான் சரியான வழி. இன்னிக்கு நைட் பத்து மணிக்கு உன் வீட்டு சுவரேறிக் குதிச்சு பெட்ரூமுக்கு வர்றேன். பால்ல தூக்க மாத்திரையக் கலந்து சிவராமனைத் தூங்க வெச்சிடு. நான் என் துப்பாக்கியில இருந்து தோட்டாவை அவர் உடம்புக்குத் தூது விடறேன். அவர் மண்டையப் போட்டதும் பாடிய டிஸ்போஸ் பண்ணிடறேன். நீ பணக்கார விதவையா சில மாசம் இருந்துட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும். எனக்கு என் காதலியும் கிடைப்பா, கோடீஸ்வரனாயும் ஆய்டுவேன். போடி... போய் நான் சொன்னதைப் பண்ணு கண்ணு!’’ என்றான் கோணலாய்ச் சிரித்தபடி. அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ரம்யா.
இரவு. தேர்ந்த திருடனைப் போல, அவள் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து, ட்ரெய்னேஜ் பைப்பில் ஏறி, பால்கனியில் குதித்து... அவள் பெட்ரூம் ஜன்னலில் முகம் வைத்துக் குரல் கொடுத்தான் செல்வம். ரம்யா முகத்தில் பயத்துடன் அருகில் வர, கதவைத் திறக்கச் சொல்லி சைகை செய்தான். அவள் கதவைத் திறந்ததும், தன் பின்னால் தள்ளிவிட்டபடி, அடுத்த கணமே படுக்கையில் போர்த்திப் படுத்திருந்த சிவராமனைச் சுட்டான். சத்தமும் காணோம்; ரத்தமும் காணோம். சந்தேகமாக அருகில் சென்று போர்வையை விலக்கியவன் அதிர்ந்தன். உள்ளே வெறும் தலையணைகள்.
அதிர்ச்சியுடன் செல்வம், ரம்யாவின் பக்கம் திரும்ப, பளிச்சென்று விளக்குகள் எரிந்தன. ‘‘நான் இங்க இருக்கேன் தம்பி!’’ என்றார் அறைக் கதவின் அருகில் நின்றிருந்த சிவராமன். அதிர்ச்சியிலிருந்து மீண்டு செல்வம் துப்பாக்கியை உயர்த்துவதற்கு முன், அவரின் துப்பாக்கி பேசி, அடுத்தடு்த்து மூன்று தோட்டாக்களை அவன் உடலுக்கு தூது அனுப்பியது. அலறவும் நேரமின்றி சரிந்து விழுந்தான் செல்வம். ‘‘டோன்ட் வொர்ரி, ஹனி. இவன் பாடியை சத்தமில்லாம அப்புறப்படுத்த ஏற்பாடு பண்ணிட்டேன். செல்வம்னு ஒருத்தன் உலகத்துல வாழ்ந்த தடயமே இல்லாம துடைச்சு எடுத்துடுவாங்க என் ஆட்கள்!’’ என்றபடி அருகில் வந்து அவளை அணைதுக் கொண்டார் சிவராமன்.
‘‘முட்டாளே...! எப்படியும் கொலைதான் இறுதி வழின்னு ஆனப்புறம், உன்னோட சேர்ந்து என் புருஷனைக் கொன்னுட்டு டென்ஷனோடயும், பயத்தோடயும் வாழ நான் தயாரில்லை. பதிலா, அவர்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி, உன்னை அப்புறப்படுத்திட்டா, இவரோட நிம்மதியா வாழறது எனக்கு ஈஸி! நினைச்சேன்; செஞ்சுட்டேன்’’ என்றபடி செல்வத்தின் உடலை உதைத்துத் தள்ளிவிட்டு சிவராமனுடன் பெட்ரூமுக்குள் நுழைந்தாள் ரம்யா.
(4)
இரவு. தேர்ந்த திருடனைப் போல, அவள் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து, ட்ரெய்னேஜ் பைப்பில் ஏறி, பால்கனியில் குதித்து... அவள் பெட்ரூம் ஜன்னலில் முகம் வைத்துக் குரல் கொடுத்தான் செல்வம். ரம்யா முகத்தில் பயத்துடன் அருகில் வர, கதவைத் திறக்கச் சொல்லி சைகை செய்தான். அவள் கதவைத் திறந்ததும், தன் பின்னால் தள்ளிவிட்டபடி, அடுத்த கணமே படுக்கையில் போர்த்திப் படுத்திருந்த சிவராமனைச் சுட்டான். சத்தமும் காணோம்; ரத்தமும் காணோம். சந்தேகமாக அருகில் சென்று போர்வையை விலக்கியவன் அதிர்ந்தன். உள்ளே வெறும் தலையணைகள்.
அதிர்ச்சியுடன் செல்வம், ரம்யாவின் பக்கம் திரும்ப, பளிச்சென்று விளக்குகள் எரிந்தன. ‘‘நான் இங்க இருக்கேன் தம்பி!’’ என்றார் அறைக் கதவின் அருகில் நின்றிருந்த சிவராமன். அதிர்ச்சியிலிருந்து மீண்டு செல்வம் துப்பாக்கியை உயர்த்துவதற்கு முன், அவரின் துப்பாக்கி பேசி, அடுத்தடு்த்து மூன்று தோட்டாக்களை அவன் உடலுக்கு தூது அனுப்பியது. அலறவும் நேரமின்றி சரிந்து விழுந்தான் செல்வம். ‘‘டோன்ட் வொர்ரி, ஹனி. இவன் பாடியை சத்தமில்லாம அப்புறப்படுத்த ஏற்பாடு பண்ணிட்டேன். செல்வம்னு ஒருத்தன் உலகத்துல வாழ்ந்த தடயமே இல்லாம துடைச்சு எடுத்துடுவாங்க என் ஆட்கள்!’’ என்றபடி அருகில் வந்து அவளை அணைதுக் கொண்டார் சிவராமன்.
‘‘முட்டாளே...! எப்படியும் கொலைதான் இறுதி வழின்னு ஆனப்புறம், உன்னோட சேர்ந்து என் புருஷனைக் கொன்னுட்டு டென்ஷனோடயும், பயத்தோடயும் வாழ நான் தயாரில்லை. பதிலா, அவர்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி, உன்னை அப்புறப்படுத்திட்டா, இவரோட நிம்மதியா வாழறது எனக்கு ஈஸி! நினைச்சேன்; செஞ்சுட்டேன்’’ என்றபடி செல்வத்தின் உடலை உதைத்துத் தள்ளிவிட்டு சிவராமனுடன் பெட்ரூமுக்குள் நுழைந்தாள் ரம்யா.
*
‘ரங்கநதி’யில் நீராட விரும்பினால் மேய்ச்சல் மைதானம் செல்க!
|
|
Tweet | ||
கதை ந்ல்லா சொல்லி இருக்கீங்க. இப்படி பணம் பறிப்பவன் எப்படி நல்ல லவ்வரா இருக்கமுடியும்? முடிவும் எதிர்பார்த்தமாதிரிதான் இருந்தது.
ReplyDeleteஎதிர்பார்த்த முடிவு என்றாலும் வேறு ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லைம்மா. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஒரு கிரைம் நாவலை ஒரே பக்கத்தில்
ReplyDeleteஇத்தனை சுவாரஸ்யமாக கொடுத்தமை
மிக அழகு..
காதல் என்ற பெயரில்
காமத்துக்கும் பணத்துக்கும்
முதலை வாய் இரையாய்
போனவர்களின் வாழ்வு
முடிவில் சிதிலமடைந்து தான்
போயிருக்கிறது..
மனதில் வக்கிர எண்ணங்கள் கொண்டு
ஏகபோக வாழ்வுக்கு ஏங்குவோருக்கு
துப்பாக்கிவிடு தூது சரியான தண்டனை தான் நண்பரே..
ரசித்துப் படித்து நற்கருத்திட்ட உங்களுக்கு நன்றிகள் பல மகேன்.
Deleteமிக நல்ல முடிவு
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட நண்பனுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteகாதலியிடம் பணம் பறிப்பவர்களை காதலன் என்று கூறமுடியாது
ReplyDeleteகாதலன் என்றில்லை எஸ்தர், மனிதன் என்றே கூற முடியாது, அதனால்தான் மரணம் பரிசாகக் கிடைக்கிறது. நற்கருத்திட்ட உனக்கு மிக்க நன்றிம்மா.
Deleteகதை நல்லா இருக்கு. ஆனாலும், நல்ல முடிவா இருந்தாலும், சட்டத்தை கையில் எடுப்பது போலவே அமைகின்றனவே?!
ReplyDeleteஇயல்பு வாழ்வில் பல நியாயங்களும் அநியாயங்களும் சட்டத்திற்கு வெளியேதான் நிகழ்கின்றன. அதனால் சுவாரஸ்யமே முக்கியம் என்ற கருத்தில் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருப்பினும் இனி வரும் கதைகளில் அதைத் தவிர்த்து விடுகிறேன். என் எழுத்துக்கு உரம் சேர்க்க அன்புடன் கருத்துச் சொன்ன தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஎழுத்துநடை நன்றாக இருந்தாலும் காதலனைக் கயவனாய்க்காட்டி விட்டதால் எதிர்பாராத முடிவு அமையவில்லை.
ReplyDeleteகரெக்ட்தான். இந்த விஷயத்தையும் யோசிச்சு, அடுத்து எழுதற கதையில் ‘திடுக்’ முடிவோட கொடுத்துடறேன். மிக்க நன்றி.
Delete//திமிங்கிலத்தோட தோலை கொஞ்சமா சுரண்டினா அதுக்குத் தெரியாது.//
ReplyDelete//அவளை பொ.மு.வாத்தாகப் பாவிததுப் பணம் கறந்தான்.//
//தோட்டாவை அவர் உடம்புக்குத் தூது விடறேன்.//
இவைகள் நான் இரசித்த வரிகள்.பேராசை பேரு நஷ்டம் என சொல்வதை அழகாக கதையில் வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!
ரசித்த வரிகளைக் கூறி எனக்கு மகிழ்ச்சி தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteகதை ரொம்ப நல்லாருக்கு சார்...அழகா சுவாரஸ்யமா பண்ணிருக்கீங்க..PDF-லயும் டவுன்லோடு பண்ணிட்டேன்..ரொம்ப நன்றி.
ReplyDeleteபடித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி குமரன்.
Deleteமைக்ரோ மினி கிரைம் திரில்லர் மிக அருமை சார்
ReplyDeleteவாவ்! மைக்ரோ மினி த்ரில்லர்ங்கற வார்த்தையே சூப்பரா இருக்கு பாலா. பாராட்டிய உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி!
Deleteமின்னி மறையா மின்னல் கதையே-மழை
ReplyDeleteமேகமே பெய்திட முளைத்திடும் விதையே
என்னுள் எழுந்திடும் இனியநல் பயிரே-உம்
எழுத்தில் காண்பது தமிழின் உயிரே
வாழ்க திறமை! வளர்க திறமை!
சூழ்க இன்பம்! சூழ்ந்திட என்றும்
சா இராமாநுசம்
அழகுத் தமிழால் என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி ஐயா!
Deleteமின்னல் வரிகளில் மின்னிய மின்னல் கதை !
ReplyDeleteமின்னல் கதையை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteதொடர்கதையோன்னு பார்த்தேன். இங்கேயே முடிந்து விட்டது. நன்றாகவே 'முடித்து' விட்டீர்கள்!
ReplyDeleteஆம்... ஒரு வழியாக ‘முடித்து’த்தான் விட்டேன் ஸ்ரீராம். படித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிக்க நன்றி!
Deleteசுவாரஸ்யமா சிம்பிளா முடிச்சிட்டீங்க. முடிவு எதிர்ப்பார்த்த மாதிரியே அமைந்துவிட்டதே. ஆனா நல்லாயிருந்துது.
ReplyDeleteஆஹா... முடிவை நீங்களும் எதிர்பார்த்தீங்களா...! சரி, அடுத்த கதையில நிச்சயம் ‘திடுக்’ முடிவா அமைச்சிட வேண்டியதுதான். கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
Deleteமுடிவில் சுபம் !
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஆஹா மின்னல் வரிகளில் ஒரு திடுக் கிரைம் ஸ்டோரி.... நல்லா இருந்தது கணேஷ். பாராட்டுகள்.
ReplyDeleteக்ரைம் கதையை ரசித்துப் பாராட்டிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteவலைப்பூவின் தலைப்பிற்கேற்ப மின்னலாக க்ரைம் கதை எழுதி முடிவையும் பட்டியே முடித்துள்ளீர்கள்.அருமை.
ReplyDeleteமின்னலாய்ச் சென்ற க்ரைம் கதையை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteகிரைம் திரில்லர் மிக அருமை கணேஷ் சார்...
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் இதய நன்றி உங்களு்க்கு!
Deleteஅறிமுகம் வித்தியாசமாக இருந்தது ஆனாலும் கதை ரொம்ப பிடித்துப் போய் விட்டது...இறுதியில் சொல்லப்பட்ட செய்தி மிக பயனுள்ளது..அதனை நீங்கள் செய்தியாக சொல்லாமலே கதையோடு கொண்டுசென்றிருப்பது அற்புதம்.
ReplyDelete//
‘‘முட்டாளே...! எப்படியும் கொலைதான் இறுதி வழின்னு ஆனப்புறம், உன்னோட சேர்ந்து என் புருஷனைக் கொன்னுட்டு டென்ஷனோடயும், பயத்தோடயும் வாழ நான் தயாரில்லை. பதிலா, அவர்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி, உன்னை அப்புறப்படுத்திட்டா, இவரோட நிம்மதியா வாழறது எனக்கு ஈஸி! நினைச்சேன்; செஞ்சுட்டேன்’’//
ம்... இந்தக் க்ளைமாக்ஸை நீங்கள் ரசித்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. மிக்க நன்றி சிட்டுக்குருவி!
Deleteவித்தியாசமான கதையில் கிரைம் பகிர்வுக்கு நன்றி கணேஸ் அண்ணா!
ReplyDeleteக்ரைம் கதையை ரசித்த நேசனுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteவிறுவிறுப்பாக கதை ஓடிய வேகமும் முடித்த விதமும் அருமை.பிடியுங்கோ சொக்லேட் கை நிறைய.நிரஞ்சனாக்குட்டிக்கும் குடுக்கவேணும்.சரியோ ஃப்ரெண்ட் !
ReplyDeleteகதையை ரசித்துப் படிச்சு அருமைன்னு சொன்னதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஃப்ரெண்ட்! எனக்குப் பிடிச்ச ஸ்விஸஅ சொக்லேட்களை நிரூவோட கண்டிப்பா ஷேர் பண்ணிக்கறேன்!
Deleterasanai!
ReplyDeletethiruppam!
nantru!
முத்தான மூன்று வரிகளால் பாராட்டி எனக்குத் தெம்பூட்டிய சீனிக்கு என் இதய நன்றி!
Deleteமுடிவு சூப்பர் கணேஷண்ணா
ReplyDelete// ‘முட்டாளே...! எப்படியும் கொலைதான் இறுதி வழின்னு ஆனப்புறம், உன்னோட சேர்ந்து என் புருஷனைக் கொன்னுட்டு டென்ஷனோடயும், பயத்தோடயும் வாழ நான் தயாரில்லை. பதிலா, அவர்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி, உன்னை அப்புறப்படுத்திட்டா, இவரோட நிம்மதியா வாழறது எனக்கு ஈஸி! நினைச்சேன்; செஞ்சுட்டேன்’’//
கிரைம்போல் இருக்கே!!!!!!!! பக்கத்துல அண்ணி [சாந்தி] இருந்தாங்களோ பதிவு எழுதும்போது..
அப்பாடா ஏதோ நம்மாள முடிஞ்சது..
குறும்புக்காரத் தங்கச்சி! சாந்தி அண்ணின்னு கூப்பிட்டு மறுபடி என்னை வம்புல மாட்டி விடற பாத்தியா? க்ரைம் கதையின் முடிவை ரசிச்சுப் பாராட்டினதுக்கு நன்றிம்மா!
Deleteஒரு சுவாரசியமான க்ரைம் கதையை இவ்வளவு சுருக்கமாய் அழகாய் நேர்த்தியாய் சுவை குறையாமல் கொடுக்கமுடியுமா என்று அசந்துபோகிறேன். முடிவு நான் எதிர்பாராதது. தலைப்பை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteதலைப்பை யாரும் ரசித்துச் சொல்லவில்லையே என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் ரசித்ததாய்ச் சொன்னதில் எனக்குப் பெருமகிழ்வு. மிக்க நன்றி தோழி!
Deleteகதை முடிவை நான் ஊகிக்கவில்லை. நன்றாகச் சென்ற திகில். சுவைத்தேன் பாராட்டுகள்...சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
திகில் கதையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபுருஷனையும் கொன்னுட்டு மாஜி காதலன் மேலே பழி போடுற புத்திசாலிப் பொண்ணுனு நெனச்சனே..
ReplyDeleteஆஹா... இது சூப்பர் ஐடியாவா இருக்கே அப்பா ஸார். இது எனக்குத் தோணாமப் போய்டுச்சே! இதுக்குத்தான் அனுபவஸ்தர்கள் வேணும்கறது.
Deleteசின்ன வாத்தியாரே அருமையான கதை அடுத்த அடுத்த நகர்வுகள் அருமை, ஏற்கனவே பழக்கமான கதை தான் என்றாலும் உங்கள் வார்த்தைகளில் இன்னும் மெருகேறியிருந்தது
ReplyDeleteஆமாம் சீனு. கதை நகரும் விதத்தில் முடிவு யூகிக்கக் கூடியது என்பதை அறிவேன். இருந்தும் ரசித்து்ப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!
DeleteIdeal climax. Enjoyed each and every word in the story. Very very nice one. Please give us such stories at least once in a week.
ReplyDeleteஇயன்றவரை தர முயல்கிறேன் நண்பரே... தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteவணக்கம் சார்....
ReplyDeleteநான் கூட இந்த முடிவை எதிர்பாக்கவே இல்ல... ஹீரோஇன் ரொம்ப புத்திசாலி! ரொம்ப சாட் & ஸ்வீட்! ஸ்வாரஸ்யமா இருந்துச்சு!
படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete