Wednesday, May 30, 2012

நடை வண்டிகள் - 18

Posted by பால கணேஷ் Wednesday, May 30, 2012

 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 1

ந்திரா செளந்தர்ராஜன்! இந்தப் பெயர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக அடிபட ஆரம்பித்த பிறகு இவரை அறிந்திருப்பீர்கள். ஆனால் எனக்கு ஆரம்பநிலை எழுத்தாளராக (அவர்) இருந்த போதிலிருந்தே இந்திராஜியைத் தெரியும். என் மற்ற எழுத்தாள நண்பர்களின் கதைகளை நான் படிக்க ஆரம்பித்தபோது அவர்கள் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதிப் பெயர் பெற்றிருந்தவர்கள்; என்னைவிட வயதில் மூ்த்தவர்கள். ஆனால் இந்திரா செளந்தர்ராஜனுக்கு அவரின் ஆரம்பப் படைப்பிலிருந்தே வாசகன் என்பதிலும், என்னைவிட சற்றே (தான்) வயதில் மூத்தவர் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு மதுரையில் வேலை தேடித் திரிந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஒரு பழைய புத்தகக் கடையில் ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ‘இந்திரா செளந்தர்ராஜன்’ என்ற ஆசிரியரின் பெயர் எனக்குப் புதியது. அந்த நூலின் முன்னுரையில் ‘கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வாங்கிய கதை அது’ என்றும், ‘அதை எழுதுவதற்கு முன் தான் மருந்துக்கும் கதை எழுதியிராத கற்பனையாளன்’ என்றும் இ.செள.ராஜன் குறிப்பிட்டிருந்தார். இது என் ஆவலைத் தூண்டிவிட உடனே அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடித்ததும் பிரமித்துப் போனேன். முதல் கதை எழுதிய ஒருவரின் எழுத்தாக அது இல்லை. தேர்ந்த ‌ஒரு எழுத்தாளரின் நடை அதில் இருந்தது. அவர் கையாண்டிருந்த விஷயமும் கனமானதாக இருந்தது. அதன்பின் அவர் பெயர் தாங்கிய சிறுகதைகள் வார இதழ்களில் வந்தால் படிக்க ஆரம்பித்தேன். ஆழமான சமூகப் பிரக்‌ஞை கொண்டவைகளாகத்தான் அவர் சிறுகதைகள் இருந்தன; பொழுதுபோக்காக அல்ல. ஆனால் ‘குங்குமச் சிமிழ்’ இதழில் அவர் க்ரைம் கலந்த நாவல்கள் எழுதினார். அந்தக் க்ரைம் நாவல்களில் மற்ற எழுத்தாளர்கள் போல் துப்பறியும் நிபுணர்கள் வந்து துப்புத் துலக்குவதாக இல்லாமல் நாவலி்ன் கதாநாயகி துப்பறிந்து மர்மத்தை விடுவிப்பதாக எழுதியிருந்தார். (கன்னிப் பருந்து) அன்று முதல் இன்று வரை அவரது நாவல்களில் கதாநாயகிகள் பிரதானமாக இருப்பார்கள். இவையெல்லாம் எனக்கு அவர் மீது மரியாதையையும், அன்பையும் அதிகரித்தன. மாதநாவல்கள் அதிகம் விற்ற ஒரு காலகட்டத்தில் ரா.கு., பி.கே.பி., சுபா, பு.த.துரை போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த போது தாமதமாக அந்த ரேஸில் கலந்து கொண்டவர் இந்திராஜி.

‘ரம்யா’ என்ற மாத இதழில் ‘கோடைகாலக் கொலைகள்’ என்ற பெயரில் ஒரு க்ரைம் நாவல் எழுதினார் அவர். படித்ததும் எனக்கு வியப்பும், கோபமும் ஏற்பட்டது. வியப்புக்குக் காரணம் அவர் கையாண்டிருந்த உத்தி. பிற எழுத்தாளர்கள் நாவலின் கடைசி அத்தியாயத்தில் குற்றவாளியை வெளிப்படுத்தி, அவன் ஏன் செய்தான், எப்படியெல்லாம் செயல்பட்டான் என்று விளக்குவார்கள். இந்திராஜியோ நாவலின் கடைசி அத்தியாயத்தில் குற்றவாளி எப்படிச் செயல்பட்டான், ஏன் செயல்பட்டான் என்பதையெல்லாம் (பெயர் குறிப்பிடாமலேயே) விளக்கி, கடைசி வரியில் குற்றவாளியின் பெயரைச் சொல்லி ‘முற்றும்’ போடுவார். இந்த உத்தியை வியந்து ரசித்த நான் கோபப்பட்டதன் காரணம்: அதுவரை பொறுப்புணர்வுடன் எழுதிய அவரது பேனா இந்த நாவல் முழுவதும் செக்ஸ் வர்ணனைகளும், காட்சிகளுமாக வரம்புமீறி விளையாடியிருந்ததுதான்.

உடனே அவருக்கு கோபமாக கடிதம் எழுதலாம் என்றாலோ, நேரில் போய் டோஸ் விடலாம் என்றாலோ முகவரி தெரியவி்ல்லை. அந்தச் சமயம் தினமலரில் வேலை கிடைக்க, மதுரையில் ஆறு மாதங்கள் பணியாற்றிய பின், கோவைக்கு பணி மாறுதல் கிடைத்து போயிருந்தேன். அங்கே ரா.கு.வின் அறிமுகம் கிடைத்துப் பழக ஆரம்பித்த நாட்களி்ன்போது இ.செள.ராஜன் மதுரையைச் சேர்ந்தவர் என்ற தகவலும் தெரிந்தது எனக்கு. ‌எழுத்தாளர் அபிமானத்துடன் ஊர் அபிமானமும் சேர்ந்து கொள்ள, ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியின் முகவரி வேண்டும் என்று கேட்டேன்.

‘‘அட்ரஸ் நினைவில்ல கணேஷ். ஆனா போன வாரம் கூட எனக்கு ஒரு லெட்டர் போட்டிருந்தார். எங்க வெச்சேன்னு நினைவில்ல. ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன். தேடி வெக்கறேன்’’ என்றார் ரா.கு. எங்கள் நட்பின் ஆரம்ப காலகட்டம் அது என்பதால் நம்ம பங்க்‌ச்சுவாலிட்டி பத்தி அவருக்குத் தெரியவில்லை. சரியாக இரண்டு நாட்கள் விட்டு விட்டு மூன்றாவது நாள் அவர் வீட்டுக்குப் போய் (அவர் துணைவியார் தனலக்ஷ்மி தந்த டீயை ருசித்துவிட்டு) அவர் எதிரில் நின்று அதே விஷயத்தைக் கேட்டேன். அவர் ‘ஙே’ என்று விழித்தார். (அடர்த்ததியான) தன் தலையைச் சொறிந்தபடி ‌சொன்னார்: ‘‘நான் தேடிப் பார்த்துட்டேன் கணேஷ். எங்க போச்சுன்னு தெரியலை, கிடைக்கலை. ஏதாவது பத்திரிகை ஆபீஸ்லருந்து தொடர்கதை அத்தியாயம் கேக்க ‌ஃபோன் பண்ணுவாங்க. அப்ப கேட்டுச் சொல்றேன் கண்டிப்பா’’ என்றார்.

அப்படிச் சொன்னாரே தவிர, அவருக்கிருந்த பிஸியில் சொன்னபடி செய்ய அவரால் முடியவில்லை. நான் அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு கிளம்புகையில் இதைக் கேட்பதும் அவர் ‘ஹி... ஹி...’ என்பதும் தொடர்கதையாகிப் போனது. ஒரு கட்டத்தில் நான் சலித்துப் போய், ‘இனி ரா.கு.விடம் இதைக் கேட்டுப் பிரயோஜனமில்லை’ என்ற முடிவுக்கு வந்து அதைப் பற்றிக் கேட்பதை நிறுத்தி விட்டேன். இ.செள.ராஜனை சந்திக்கும் விருப்பத்தையும் சற்றே ஒத்தி வைத்திருந்தேன். அப்படியே பல மாதங்கள் கழிந்த பின்னர், எனக்கு இந்திரா செளந்தர்ராஜனைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிட்டியது. ஆச்சரியகரமான ஒரு விஷயம் என்னவென்றால்... அந்தச் சந்திப்புக்கு மூலகாரணமாக அமைந்தவர் நண்பர் ராஜேஷ்குமார், அவர் மூலமாகவே இந்திராஜியைச் சந்தித்தேன் என்பதுதான்!

அது எப்படி நிகழ்ந்தது என்பதை...

-தொடர்கிறேன்

46 comments:

  1. தொடருங்கள் ஐயா..........

    அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்களின் லிங்கையோ அல்லது நூலகளின் லிங்க்கையோ தந்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர்களின் லிங்க்? நூல்களின் லிங்க்கைத் தேடி வரும் பகுதிகளில் சிட்டுக்குருவிக்காக இணைக்கிறேன். முதல் நபராய்க் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. வணக்கம் நண்பரே,
    என்றுமே "முதல்" என்பது மிகவும்
    எதிர்பார்ப்போடு இருக்கும் அந்தவகையில்
    அது அற்புதமாக அமைந்துவிட்டால்
    அதன் மகிழ்ச்சி எல்லைக்கு அளவே இருக்காது..

    நீங்கள் இங்கே நடைவண்டியில் குறிப்பிட்ட அத்தனை
    எழுத்தாளர்களின் முதல் படைப்பும் நாவல் உலகில்
    காவியம் படைத்தவைகள்.

    இந்திரா சௌந்திரராஜன் பற்றி சொல்லவும் வேண்டுமா..!!
    எழுத்து நடையில் நம்மை கட்டிப்போட வல்லவர்..
    அவருக்கென்ற தனி நடை தமிழ் நாவல் உலகில்
    சிறப்பிடம் பெறச் செய்திருக்கிறது..

    நடைவண்டிப்பயணம் அமிர்தமாக இருக்கிறது..
    குறவன்குறத்தி ஆட்டம் ஆடி நானும் தங்களுடன்
    பயணிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகேன். அவரது ஆரம்ப நாவலே என்னைக் கட்டித்தான் போட்டது. என்னுடன் சேர்ந்து மகிழ்வுடன் பயணிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. எப்படி எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களை சந்தித்தீர்கள் என்பதை அறிய ஆவலோடு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் அடுத்த பகுதியை வெளியிட்டு விடுகிறேன். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே!

      Delete
  4. பாஸ் ஓவ்வொறு எழுத்தாளர்கள் பற்றியும் உங்கள் பதிவுகள் சுவாரஸ்யம் தொடருங்கள் தொடர்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ராஜ்.

      Delete
  5. எழுத்தாளரின் படைப்புகள் தரும் சுவாரசியம் போலவே அவர்களை சந்தித்த நிகழ்வுகளும் தருகின்றன உங்களின் துள்ளல் நடையில்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தந்த கருத்துக்கு என் இதயம் நிறைந்த நன்றி ரிஷபன் ஸார். (கத்தரித்தவை-1 மேய்ச்சல் மைதானத்துல - கவனிக்கலையா நீங்க)

      Delete
  6. எதையும். கனேஸ் என்ற ஒருவர் தனக்கெனத் தனிப் பாதையில்
    தருவது அவரின் திறமைக்கு......!

    இப் பதிவு ஓர் எடுத்துக் காட்டு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தந்த உங்களின் கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி ஐயா.

      Delete
  7. ம்ம்ம்ம் தொடருங்கள்
    படிக்க ஆவலாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. விரைவில் தொடர்கிறேன் எஸ்தர். மிக்க நன்றி.

      Delete
  8. ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்தபதிவு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்திராஜியை உங்களுக்கும் பிடிக்குமாம்மா... சந்தோஷம். என் இதயம் நிறை நன்றி உங்களுக்கு.

      Delete
  9. இந்திரா சாரும்
    உங்கள் முதல் அனுபவமும் அருமை
    தொடரட்டும் உங்கள் நடைவண்டி பயணம்

    ReplyDelete
    Replies
    1. என் பயணத்தில் உடன் வந்து உற்சாகம் தரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. யப்பா ..எத்தனை வி ஐ பிக்களின் அறிமுகங்கள்.இதிலிருந்தே புரிகிறது உங்களின் இலக்கிய தாகம்...!

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியத்துடன் பாராட்டிய தங்கைக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றி!

      Delete
  11. ஒவ்வொரு நடை வண்டி பயண நிறுத்ததிலும் நிறைய அனுபவங்கள் அவர்களோடு நாங்களும் பயணிக்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. என்னோடும் அவர்களோடும் பயணித்து வரும் தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  12. நடை வண்டி ஓடுகிறதே!ஓடட்டும் .நன்று

    ReplyDelete
    Replies
    1. இந்த நடை வண்டியின் ஓட்டத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  13. எழுத்தாளர்களுடனான உங்கள் சந்திப்புகளும் நட்பும் சுவையான எழுத்தாக மலர்கிற நேர்த்தியே நேர்த்தி!

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்து நடையை நீங்கள் பாராட்டியது மனதில் தென்றலாக வீசியது. மிக்க நன்றி நண்பரே!

      Delete
  14. ஒவ்வொரு நடை வண்டி பயணத்தில் வரும் நபர்கள் வேறாக இருந்தாலும் உங்களுடன் பயணத்தவர்களுடான உங்கள் அனுபவங்கள் மிக சுவராசியமாக இருக்கின்றன. லேட்டாக வந்தாலும் உங்களோடு நானும் பயணிக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டிப் பயணத்தில் விடாமல் என்னுடன் பயணித்து வரும் நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. மறுபடியும் நல்லதொரு ஆரம்பம் ! தொடருங்கள் ! ஆரம்பமே அசத்தல் !

    ReplyDelete
    Replies
    1. அசத்தலான துவக்கம் என்று சொல்லி தெம்பூட்டிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. இவர் கதை ஒன்றும் படித்ததில்லை. தொடருங்கள். உங்கள் அறிமுகத்தினால் இனி அவர் பெயர் பார்த்தால் படிக்கத் தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளியன்று ‘மேய்ச்சல் மைதான’த்தில் இந்திரா செளந்தர்ராஜனின் நூல் அறிமுகம் ஒன்று இடம்பெற உள்ளது. படித்துப் பாருங்கள் ஸ்ரீராம்... அவரின் எழுத்தை உங்களால் ரசிக்க முடியும். மிக்க நன்றி!

      Delete
  17. நீங்க மதுரையா?

    இந்திரா சௌந்தரராஜன் அருமையான எழுத்தாளர். அவரது கதைகள் அருமையாக இருக்கும். ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், பிகேபி, சுபா இவர்களின் கதைகள் ஒரு புறம் என்றால் இந்திரா அவர்களின் கதை செல்லும் பாதை வேறு மாதிரி இருக்கும்.

    தொடருங்கள்... தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் குமார். மதுரைதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்திராஜி தனக்கென ஒரு தனிப் பாணியை ஏற்படுத்திக் கொண்டதால்தான் இன்னும் வெற்றிப் பயணம் தொடர்கிறது. தொடரும் உங்களின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி குமார்!

      Delete
  18. இந்தப் பொயர் எனக்கு நினைவில் இல்லை .எழுதுங்கள் தொடருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் கனிந்த நன்றி!

      Delete
  19. இந்திரா சௌந்தரராஜன் மதுரையை சேர்ந்தவரா?

    நான் அவரை அணை உடைச்சான் பட்டி (கேரளா) -என்றே

    நினைத்தேன்...

    தொடர் அருமை.....

    ReplyDelete
    Replies
    1. தொடர் அருமை என்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  20. எப்படிச் சந்திச்சீங்க ஆவலுடன் அடுத்த நடைவண்டிக்கு காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வந்துடறேன் நேசன். தொடரும் உங்கள் ஆதரவிற்கு என் இதய நன்றி.

      Delete
  21. எல்லோரும் எழுத்தாளரைப் பாராட்டத் தேடுவார்கள். நீங்களோ கோபத்தைக் காட்டத் தேடியிருக்கிறீர்கள். சந்திப்பின் விவரம் அறிய ஆவலாக உள்ளேன். படைப்புகள் மீதான உங்களுடைய ஆழ்ந்த ரசனையே பல படைப்பாளிகளை உங்கள் நட்பு வட்டாரத்தில் இணைத்திருக்கும் என்று நம்புகிறேன். பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா. முதலில் திட்டிவிட்டு அப்புறம்தான் பாராட்டினேன். இவர் என்றில்லை என் எல்லா எழுத்தாள நண்பர்களின் கதைகளையும் ஏன் பிடித்திருக்கிறது என்றும், எதனால் பிடிக்கவில்லை என்றும் குறை கூறியதுண்டு. எவரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவுமில்லை, கோபித்ததுமில்லை. பாராட்டு தந்த மகிழ்வுடன் உங்களுக்கு என் நன்றி.

      Delete
  22. வாவ்.... அடுத்த நடைவண்டி பயணம் இந்திரா சௌந்தரராஜன் அவர்களுடனா? தொடர்ந்து வருவேன்...

    எனது தமிழக வருகையின் போது தாங்கள் பகிர்ந்த மற்ற பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படித்து விடுகிறேன்.... :)

    தங்களை சென்னையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு பரஸ்பரம் வெங்கட். மிகமிக மனமகிழ்வு அடைந்தேன் நானும். தொடர்ந்து விட்டவற்றைப் படிப்பேன் என்ற உங்கள் நட்பை எண்ணி பெருமை கொள்கிறேன். நடைவண்டிப் பயணத்தில் தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  23. உங்கள் நடைவண்டியில் நீங்கள் நடை பழகிய விதமும் புதுமையான அதிலும் உங்கள் துறை சார்ந்த பல நண்பர்களின் நட்பு
    வட்டமும் அதை எங்களுடன் சுவையாக பகிர்ந்து கொள்ளும் விதமும் என்னிடம் சொல்கிறது நீ வந்து சேர்ந்து இருப்பது சரியான இடம் தான் என்று.

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் பயணிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சீனு!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube