Wednesday, May 9, 2012

நடை வண்டிகள் - 15

Posted by பால கணேஷ் Wednesday, May 09, 2012

பி.கே.பி.யும் நானும் - 7

ஸ்ரீனிவாஸ் பிரபுவும், தாஸும் இல்லாத அந்த சூழ்நிலையில் இதழின் வடிவமைப்பாளர் பணியுடன் உதவி ஆசிரியராகவும் என்னைப் பணியாற்றும்படி பணித்தார் பி.கே.பி. ஸார். ஊஞ்சல் இதழிற்கு வாசகர்களிடமிருந்து வரும் ஏராளமான படைப்புகளைப் படிப்பதும், அவற்றிலிருந்து பிரசுரத்திற்குத் தகுதி பெற்றதைத் தேர்ந்தெடுப்பதும் ஆகிய அந்தப் பணி எனக்கு மிகமிகப் பிடித்தமான ஒன்றாக அமைந்தது. அவரின் வழிகாட்டுதலுடன் அந்தப் பணியைத் துவங்கியும் வடிவமைப்புப் பணியையும் தொடர்ந்தும் வந்தேன்.

பி.கே.பி. ஸார் என்னிடம் பல முறை, ‘‘உங்களிடம் நல்ல எழுத்துத் திறமை இருக்கிறது. முயன்றால் நீங்கள் நன்றாக வரலாம். நிறைய எழுதுங்கள்’’ என்பார். நான் இயல்பான சோம்பலினாலும், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாததாலும் அவர் பேச்சைக் கேட்டதில்லை. இச்செவியில் வாங்கி அச்செவியில் வி்ட்டு விடுவேன். அது எத்தனை தவறென்பதை இப்போது உணர்கிறேன். எதனால் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அப்படியிருந்த என்னை ஊஞ்சல் இதழில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத வைத்தார் என் நண்பர்.

சில இதழ்களில் சினிமா விமர்சனமும், நான் ரசித்துப் படித்த புத்தகங்களிலிருந்து ‘மின்னல் வரி’களைத் தொகுத்தும், மிகச் சிறந்த தமிழ் நாவல்களை நான்கு பக்கங்களில் சுருக்கித் தந்தும் இப்படிப் பல பகுதிகளில் என் படைப்புகள் ஊஞ்சல் இதழில் வெளியானது. என்னையறியாமல் நான் அங்கு பெற்ற எழுத்துப் பயிற்சிதான் இப்போது உங்கள் முன்னால் என்னை ஓட வைத்திருக்கிறது.

நான் அவருடன் இருந்த சமயங்களில் பி.கே.பி. ஸார் கமிட்டான திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் பணியில் ஈடுபடும் போதும் உடன் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனருடன் அவர் பேசி, கதை முழுமையாகத் தயாரானதும் பெரும்பாலான சமயங்களில் வசனம் எழுதுவதற்கு அவர் புதுச்சேரியைத் தேர்ந்தெடுப்பார். அங்கு ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து ஒரே மூச்சில் வசனங்களை எழுதி முடித்து விட்டுத்தான் ‌சென்னை திரும்புவார். அவர் காட்சி வாரியாக ஒரு காட்சிக்கு வசனம் எழுதி முடித்து விட்டு, அடுத்த காட்சிக்கு வசனம் எழுதிக் கொண்டிருப்பார். அப்போது நான் அவர் எழுதிய காட்சியை கணிப்பொறியில் டைப்பிக் கொண்டிருப்பேன். இப்படி அவர் எழுதவும், நான் டைப்பவுமாக நாங்கள் அங்கிருந்து கிளம்பும் சமயம், கையெழுத்துப் பிரதியுடன் சேர்ந்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்க வேண்டிய ஃபைலும் தயாராக இருக்கும்.

இப்படி நான்கைந்து நாட்கள் அவருடன் சேர்ந்தே பணிபுரியும்படி அமைவதை நான் விரும்பி வரவேற்பேன். பணி நேரம் தவிர மற்ற நேரம் நண்பருடன் மனம் விட்டு உரையாடலாம். புதுச்சேரிக்குப் போகும் போதும், வரும் போதும் கார்ப் பயணங்கள் அரட்டையடிப்பதற்கான சமயம் எங்களுக்கு. கதைகளைப் பற்றி விவாதிக்கவும், ரசித்ததைப் பகிர்ந்து கொள்ளவுமான அந்தப் பணியும், பயணங்களும் இன்று நினைத்தாலும் மனதில் இனிப்பவை.

பட்டுககோட்டை பிரபாகர் அவர்களின் மாமனார் திரு.ஆர்.முத்துநாராயணன் அவர்கள் திருச்சியில் ஒரு வழக்கறிஞர். அவர் தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பாக இருந்தவர். அவரின் திருமணத்திற்கு பெரியார் வந்திருந்து வாழ்த்தியிருக்கிறார். இப்படி பெரியாருடன் அவர் பழகியதையும், அவருடைய அனுபவங்களையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்று பி.கே.பி.க்கு மிகவும் ஆசை. மாமனாரோ அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். நானும் பி.கே.பி. ஸாரும் பேசிய ஒரு சமயம் இதைப் பற்றிப்‌ பேச்சு வர, நான் கேஸட்டில் கேட்டு டைப் அடிப்பது அவருக்கு நன்கு தெரியும் என்பதால், ஒரு யோசனை ‌சொன்னார்.

அவர் சொன்னதோடு மட்டுமல்லாமல், உடனே அதைச் செயல்படுத்தவும் செய்தார். அவரின் மாமனாருடன் பேசிவிட்டு என்னை திருச்சிக்குச் சென்று அவரிடம் பேட்டி எடுத்து அதை கேஸட்டில் பதிவு செய்து கொண்டு வரும்படி பணித்தார். நான் திருச்சி சென்றேன். பழகுவதற்கு இனியவரான பி.கே.பி.யின் மாமனார் திரு.முத்துநாராயணன் அவர்களைச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டு பேட்டியைப் பதிவு செய்தேன். என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்டு பதில்கள் பெற்று வர வேண்டுமென்று நானும் பி.கே.பி. ஸாரும் பேசி, அதை டைப் செய்து ப்ரி்ண்ட் அவுட்டாக எடுத்துப் போயிருந்ததால் எனக்கு அது எளிதாகவே இருந்தது. (திட்டமிடலில் கில்லாடி பி.கே.பி.) அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நிறைய விஷயங்கள் கிடைத்தன. அது தவிர, பெரியாரின் புத்தகங்கள் சிலவற்றையும் அவரின் வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.

சென்னை திரும்பியதும் அவரின் பேட்டியை ‘நடைமனிதனில்’ போட்டுக் கேட்டு, டைப் செய்து, அதை ஃப்ரூப் பார்த்து முடித்தோம். பெரியாரின் பல புத்தகங்களைப் படித்து, அவற்றில் இருந்து நல் முத்துக்களாய் கருத்துக்களைக் கோர்த்துத் தந்தார் பி.கே.பி. அத்துடன் பெரியாரின் முழுமையான வாழ்க்கைச் சரிதத்தையும் சேர்த்ததில் புத்தகம் திருப்திகரமாக, படிப்பதற்கு எளிய எழுத்துக்களில் என் வடிவமைப்பில் தயாரானது. அந்தப் புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்பதை யோசித்து இரண்டு மூன்று தலைப்புகளைச் சொன்னார் பி.கே.பி. அதில் ஒன்று எனக்கு மிகமிகப் பிடித்துப் போனது. ‘‘தைரியமாக இ‌தையே தலைப்பாக வைக்கலாம் ஸார். மிக வித்தியாசமாக இருக்கிறது. கவனத்தை ஈர்க்கும்’’ என்றேன். அவரும் அதையே புத்தகத்தின் தலைப்பாக வைத்துப் பதிப்பித்தார்.

இங்கே இருககும் அட்டைப் படம் அந்தத் தலைப்பு என்னவென்பதை உங்களுக்குப் புரிய வைத்திருக்கும். இந்தத் தலைப்பு புத்தகத்திற்கு எப்படிப் பொருத்தம் என்பதை ‌உணர முடிகிறதா பாருங்கள்.... இல்லையென்றால் அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.

-தொடர்கிறேன்...

54 comments:

  1. ஓரமாக, சுவரில் சாத்தி வைத்திருந்த நடவைண்டியை மறுபடி கையில் பிடித்து நடக்கத் தொடங்கியிருப்பது சந்தோஷம். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டியை நீங்கள் தொடர்வதில் எனக்குத்தான் சந்தோஷ் அதிகம். நன்றி!

      Delete
  2. வழக்கம் போல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என் உளம்கனிந்த நன்றி நண்பா!

      Delete
  3. அருமையாக செல்கிறது, சில நாட்கள் கழிந்து விட்டன என்றாலும் எளிதாக தொடர முடிகிறது.

    இந்தத் தலைப்பு வைத்ததன் பின்பு பிரச்சனைகள் எதுவும் வரவில்லையா, காத்திருக்கிறேன் உங்கள் அடுத்த பதிவிற்கு. தொடருங்கள் சின்ன வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனை எதுவும் வரவில்லை. ஆட்சேபணையை மட்டும் எதிர் கொண்டோம். அதுபற்றிய விவரம் அடுத்த பகுதியில் வரும் சீனு!

      Delete
  4. வழக்கம்போல சுவாரசியம்.

    //நடைமனிதனில்

    ஹா ஹா நடராஜான்னும் சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாக்மேனை தமிழ்ப்படுத்தியதை ரசித்துச் சிரித்துக் கருத்திட்ட நண்பனுக்கு நன்றிகள் பல!

      Delete
  5. நன்றாக இருக்கிறது ! தொடருங்கள் சார் !

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம்நிறைந்த நன்றி!

      Delete
  6. பெரியார் ஒரு தீவிரவாதி.........

    ஆச்சர்யமான தலைப்பா இருக்கே அண்ணே...?!!!

    ReplyDelete
    Replies
    1. நலம்தானா மனோ? சுற்றுப்பயணம்லாம் வெற்றிகரமாய் முடிச்சு வந்தாச்சா? ஆச்சரியமான தலைப்பு மட்டுமில்லை பிரதர்... அர்த்தமுள்ள தலைப்பும் கூட. அடுத்த பகுதியில் விளக்கமாகச் சொல்கிறேன்! உஙகளுக்கு என் இதய நன்றி!

      Delete
  7. அனுபவ பகிர்வு அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  8. பகுத்தறிவாதிய தீவிரவாதியா மாற்றிய நோக்கம் என்னவோ பொறுத்திருந்து பார்ப்போம் .

    ReplyDelete
    Replies
    1. பகுத்தறிவு வாதி மட்டுமில்லை தென்றல்... பெண்ணிய வாதி, சீர்திருத்த வாதி இப்படி நிறையச் ‌சொல்லலாம் அவரை. அதுல ஒன்றுதான் நாங்கள் சொன்ன தீவிரவாதி! உங்கள் பொறுமையை சோதிக்காமல் ஞாயிறன்று அடுத்த பகுதியில் சொல்லி விடுகிறேன்.

      Delete
  9. இந்தத் தலைப்பு புத்தகத்திற்கு எப்படிப் பொருத்தம் என்பதை ‌உணர முடிகிறதா பாருங்கள்.... இல்லையென்றால் அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.

    >>>
    அண்ணன் சொல்லி தங்கை புரிஞ்சுக்கும் சுகம் இருக்கே. அடடா, அதனால நான் அடுத்த பதிவு வரை காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது... ‌ரொம்பக் காக்க வைக்காம அழகா விளக்கமா உடனே சொல்லிடறேம்மா...

      Delete
  10. Very Good, You have come back as committed by you!!! Very nice article creating suspense as usual in the last line. Theeviravadhi means Vadam Seivathil Theeviram - I think so

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட நெருங்கி வந்துட்டீங்க மோகன். நீங்க சொல்றதும் ஒரு பாயிண்ட்தான். முழுமையா சீக்கிரமே விளக்கிடறேன். உஙகளுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  11. என்னையறியாமல் நான் அங்கு பெற்ற எழுத்துப் பயிற்சிதான் இப்போது உங்கள் முன்னால் என்னை ஓட வைத்திருக்கிறது.

    வலுவான அஸ்திவாரம் !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ. அந்த அஸ்திவாரத்தின் பலனாய்த்தான் இன்று இந்த பில்டிங் ஸ்ட்ராங்காய் நிற்கிறது. தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  12. நல்ல பதிவு!! மீண்டும் நடை வண்டியுடன் எங்களை அழைத்து செல்ல ஆரம்பித்து விட்டிர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழா! நடை வண்டிப் பயணத்தில் என்னுடன் வரும் உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  13. // அவரின் பேட்டியை ‘நடைமனிதனில்’ போட்டுக் கேட்டு//
    புதுமாதிரியான மொழிபெயர்ப்பை இரசித்தேன்.

    உங்கள் எழுத்துக்களில் ஒரு புதிய நடை தென்படுவதற்கு காரணம் இப்போது தெரிகிறது. திரு பி.கே.பி அவர்களோடு இருந்த காலத்தில் தாங்கள் பெற்ற பயிற்சிதான் அது என்று.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மையே. ‘நடைமனிதன்’ என்ற வாக்மேனின் மொழிபெயர்ப்பை ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  14. சுவாரசியமான அனுபவங்கள், உங்கள் அருமையான எழுத்தில படிப்பதற்கு சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டில் உளம் மகிழ்ந்து என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்!

      Delete
  15. உண்மையில் வாசிக்கப் நேரம் பொறுமையில்லை ஃப்ரெண்ட்.வேலையால வந்து வாசிச்சுக்கொள்றன் !

    ReplyDelete
    Replies
    1. ஓயெžஸ்! உங்க இடத்துக்கு எப்ப வேணுமானாலும் பொறுமையாய் வாங்கோ... மகிழ்வோட காத்திருக்கேன் ஃப்ரெண்ட்!

      Delete
  16. எப்படிப்பட்ட அனுபவங்கள்!அவற்றை அழகாகப் பதிவு செய்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அழகாகப் பதிவு செய்கிறேன் என்று ‌எனக்கு ஊக்கமளித்த உங்களுக்கு உளம்கனிந்த நன்றி!

      Delete
  17. //உங்களிடம் நல்ல எழுத்துத் திறமை இருக்கிறது. முயன்றால் நீங்கள் நன்றாக வரலாம். நிறைய எழுதுங்கள்//

    ரிபீட்டே!சிலரின் எழுத்துக்கள் எழுத எழுத மெருகேறும்.மெருகேற்றிக் கொண்டே வந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் ராஜ நடராஜன்! என் ஆரம்பப் பதிவுகளைப் பார்க்கையில நான்தான் எழுதினேனா என்று எனக்கே இப்போது சிரிப்பு வருகிறது. எழுத எழுதத்தான் எழுத்து மெருகேறியது. உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. பெரியாரின் தலைப்புக்காக இன்னுமொரு பின்னூட்டம்.

    ReplyDelete
  19. தேன் இனிக்கும் என்று சொல்ல வேண்டுமா!?
    பதிவும் அதுவே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் பாராட்டிற்கு சிரம் தாழ்ந்த என் நன்றி ஐயா!

      Delete
  20. அன்புள்ள கணேஷ்,

    நீங்கள் கூறுவது போல், மிக வித்யாசமான, கவனத்தை ஈர்க்கும் தலைப்புதான்.

    >>திட்டமிடலில் கில்லாடி பி.கே.பி.

    பி.கே.பியின் வெற்றிக்குக் காரணம் இப்போது புரிகிறது. திட்டமிடுதல்தான் வாழ்வின் வெற்றிக்குப் பின்னணியில் உள்ள ரகசியம்.

    எங்களை மிகவும் கவர்ந்த உங்களுடைய கேப்ஸ்யூல் நாவல்களின் அஸ்திவாரம் நீங்கள் அவரிடம் பெற்ற எழுத்துப் பயிற்சி தான் என்று எண்ணுகிறேன்.

    --Srinivasan (Fremont,CA)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கேப்ஸ்யூல் நாவல்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்பதையே இப்போதுதானே அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி நண்பரே... அவரின் ப்ளானிங் மிகவும் கனகச்சிதமாக, சரியாகப் பின்பற்றினா‌லே போதும் என்கிற மாதிரி இருக்கும். தொடரும் பகுதி அதை விளக்குவதுதான். இதயம்நிறை நன்றி தங்களுக்கு!

      Delete
  21. Ganesh sir many many thanks for introduction

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையால் மகிழ்ந்தேன். மிக்க நன்றி நண்பரே!

      Delete
  22. நடை வண்டியில் ஒரு சுகானுபவப் பகிர்வு...
    அருமை... அருமை...

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டிப் பயணத்தை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  23. சுவையான் அனுபவங்கள் தொடரட்டும் கணேஸ் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்தூ்ட்டிய உங்களுக்கு மனம்நிறை நன்றி தம்பி!

      Delete
  24. //இந்தத் தலைப்பு புத்தகத்திற்கு எப்படிப் பொருத்தம் என்பதை ‌உணர முடிகிறதா பாருங்கள்.... இல்லையென்றால் அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.//

    extremist என்பது கொண்ட கொள்கையில் சமரசம் செய்யாமல் தீவிரமாக இருப்பது அதனை அடைய போராடுவது அதனையே தீவிரவாதி என்றோ அல்லது தீவிரமாக வாதம் (பேசுவார்)செய்வார்னோ பொருளில் தலைப்பு போட்டிங்களோ.

    அந்த கால காங்கிரசில் திலகர், லாலா லஜ்ஜபதி ராய் போன்றோரை தீவிரவாத காங்கிரஸ் என்றும் மற்றவர்களை மிதவாத காங்கிரசார் என்றும் சொல்வார்கள்னு பள்ளிப்புத்தகத்திலே படித்தது.

    இப்போ அதுவே காலப்போக்கில் மாறி தற்போதைய சிபிஎஸ்.இ புத்தகத்தில் டெர்ரரிஸ்ட் என்றே போட்டு பிரச்சினையும் ஆகிடுச்சு :-))

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி நண்பரே... நற்கருத்திட்ட உங்களு்க்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  25. நடைவண்டியுடன் நடை சுகமாக உள்ளது. சுவையாக உள்ளது. மிக நன்றி வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நடையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  26. இத்தனை பேர்கள் அழகாக கமெண்ட்ஸ் பண்ணிட்டாங்க..இதுல நான் என்ன சொல்றது சார்..தங்களது பகிர்வுகளை மெற்க்கொண்டு என்னவென்று சொல்வது.."நடை வண்டிகள்" புகழ் கணேஷ் சார், நீங்க என்ன ரொம்பவும் கவந்திழுத்துட்டீங்க.நன்றி

    ReplyDelete
    Replies
    1. எத்தனை பேர் கருத்துக்கள் சொன்னாலென்ன குமரன்... எனக்கு ஒவ்வொருவருமே முக்கியம்தான். உங்களின் கருத்துக்களுக்கும் காத்திருப்பவனாயிற்றே நான். இதனை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த ந்ன்றி!

      Delete
  27. Replies
    1. அவசியம் வாரேனுங்க... மிக்க நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube